
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,281
Date uploaded in London – 8 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எழுபது வயது (Septolescent) கோடீஸ்வரர்கள்!
ச. நாகராஜன்
யார் நிஜமான Septolescent?
அவருக்கு 70 வயது முடிந்திருக்க வேண்டும்.
1) எப்போதும் அவர் துடிப்புடன் இருப்பார். வேலை செய்வார். படிப்பார். புதிய திட்டங்களைத் தீட்டுவார்.
2) குறைந்த பட்சம் மூன்று நல்ல நண்பர்கள் அவருக்கு உண்டு. அடிக்கடி சந்தித்து காபி/ டீ குடித்து அவர்கள் அளவளாவுவார்கள்.
3) புதிய இடங்களுக்குப் பயணப்படுவார்கள். அங்குள்ள பழக்க வழக்கம், பாரம்பரிய பண்பாடுகளைப் பார்த்து மகிழ்வார்கள்.
4) தனது மனைவி, மகன்/மகள்/ பேரப்பிள்ளைகள் ஆகியோரோடு அவர்களுக்கு எப்போதுமே நல்ல உறவு இருக்கும், அவர்களால் நன்கு மதிக்கப்படுவார்.
5) அவர்கள் தைரியசாலிகள். உற்சாகமுள்ளவர்கள். ஒரு புதிய திட்டத்தைத் தீட்டி அதைச் செயலில் செய்து காட்ட தீவிரமாக இருப்பார்கள்.
6) அவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துபவர்கள். வியாதி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் என்று நினைப்பவர்கள் அவர்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 நிமிடமாவது அவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்வார்கள். சமச்சீர் சத்துணவை அவர்கள் சாப்பிடுவார்கள்.
7) சின்ன விஷயத்திலும் கூட அவர்கள் சந்தோஷப்படுவார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம், பண்டிகை தினம், பிடித்தமான ஒரு சீரியல் – எதாகட்டும் அவர்களுக்கு சந்தோஷம் தான்!
8) ஒரு நாள் முழுவதும் தங்களுக்குக் கிடைப்பது அனைத்தையும் அவர்கள் நன்றியுடன் பெற்றுக் கொள்வார்கள். கடவுளை அவர்கள் மறப்பதே கிடையாது. தினமும் வழிபாடு செய்வார்கள்.
9) மற்றவர்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் எப்போதும் புன்னகை தவழும். மற்றவர்கள் கவனிக்காத நல்ல விஷயங்களை, அது சிறியதாக இருந்தாலும் கூட, கவனித்துப் பாராட்டுவார்கள். ரசித்து மகிழ்வார்கள்.
10) கிடைத்ததில் திருப்தி கொண்டு அவர்கள் வாழ்வார்கள். எது தம்மிடம் இல்லையோ அதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவதே இல்லை.
இப்படி முழு திருப்தியுடன் அவர்கள் வாழ்வதால் தான் அவர்கள் கோடீஸ்வரர்களுக்கும் மேலானவர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள்.
நல்ல சத்சங்கத்துடன் இருப்பதால் அவர்களை சமுதாயம் மதிக்கும்.
நீங்கள் ஒரு Septolescent தானா?
உங்களுக்கு எங்களது நமஸ்காரம்!
**