
WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 16,286
Date uploaded in London – 9 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non-commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 32
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இராமனின் வாக்குறுதி
இவ்வாறு சுக்ரீவன் தனது உடலுக்கு ஏற்பட்ட துன்பத்தை रिपु सम मोहि मारेसि अति भारी என்பதன் மூலமும் மனதிற்கு ஏற்பட்ட துன்பத்தை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் செல்வத்துக்கு ஏற்பட்ட இழப்பை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் இராமனிடம் முறையிட்டான்.
सुन सेवक दुःख दीनदयाला फरकि उठीं द्वै भुजा बिसाला॥7॥
சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன.. எல்லாவிதமான சேவைகளையும் செய்யத் सब प्रकार कारिहोँ सेवकार्ड தயாராக இருக்கிறேன் என்று சுக்ரீவன் சொன்னதால் அவனுடைய மனக் குமுறலைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன என்று சொல்கிறார் துளசிதாசர்.
இரண்டு புஜங்களும் துடித்தன என்பதற்கு உரையாசிரியர்கள் சில விஷயங்கள் சொல்கின்றனர். அதாவது இரு புஜங்களும் துடிப்பது போருக்கான அறிகுறி.. வெறும் வாளை வீசி சண்டை என்றால் வலது புஜம் மட்டும் துடிக்குமாம். வாலி வதம் பாணத்தால் நிகழ்த்தப் பட வேண்டும். அதனால் இரு புஜங்களும் துடித்தன என்கிறார்கள்.
सुनु सुग्रीव मारिहउँ बालिहि एकहिं बान।
ब्रह्म रुद्र सरनागत गएँ न उबरिहिं प्रान॥6॥
தனது இரு கைகளையும் உயரே தூக்கி இராமன் சுக்ரீவனிடம் “சுக்ரீவா! கேள். நான் ஒரே பாணத்தினால் வாலியைக் கொன்று விடுவேன். பிரம்மா, சிவன் என்று எவரைச் சென்று அவன் சரணடைந்தாலும் அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது.
இதே கூற்றை அங்கதன் இராவணனிடம் கூறுகிறான்.
सुनु रावन परिहरि चतुराई। भजसि न कृपासिंधु रघुराई॥
जौं खल भएसि राम कर द्रोही। ब्रह्म रुद्र सक राखि न तोही॥
அங்கதன் இராவணனிடம் “நீ உனது கபட நடவடிக்கைகளை விட்டுவிட்டு இராமனிடம் சரண் அடைந்துவிடு. இராமனைப் பகைத்துக் கொண்டால் உன்னை பிரம்மா, சிவன் இவர்கள் எவராலும் காப்பாற்ற முடியாது” என்று சொல்கிறான்.
இராமன் வாலியை, சுக்ரீவன் ‘इहाँ साप बस आवत नाहीं। तदपि सभीत रहाँ मन माही அதாவது அவன் சாபத்தினால் இங்கு வர முடியாது. ஆனாலும் எனக்கு அவனிடம் பயம் உள்ளது என்று சொன்னவுடன் வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதினான். கோபத்தின் வேகத்தில் சுக்ரீவனைத் தவறாக நினைத்து அடித்துத் துரத்தி இருக்கலாம். அதற்குப் பிறகு தனது அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து தாரையிடம் முழுவிவரங்கள் கேட்டுத்தெரிந்து கொண்டு சுக்ரீவனை மீண்டும் கிஷ்கிந்தைக்குள் அழைத்து இருக்கலாம். ஆனால் நிறைய காலம் கடந்த பின்னரும் வாலி அதைச் செய்யவில்லை. அதற்குப் பதில் தனது மகளாக நினைக்க வேண்டிய சுக்ரீவனின் மனைவி ரூமையை தன்னுடையவளாக வைத்துக் கொண்டதைக் கேட்டதும் இராமன் கோபமுற்று வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதி அவன் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவு செய்தான்.
மேலும் சுக்ரீவன் வாலிக்குப் பயந்து எல்லா லோகங்களுக்கும் சென்றும் யாரும் அவனுக்கு சரண் அளிக்கவில்லை. அதனால் இராமன் வாலியை ஒரே பாணத்தால் கொல்லுவேன் என்று சொல்லுகிறான். இந்திரனின் மகன் ஜெயந்தன் போல எந்த உலகத்திற்குச் சென்றாலும் பிரம்மா சிவனைச் சரணடைந்தாலும் அவன் தப்பமுடியாது என்று சொல்கிறான். தனது உறுதி மொழிக்கான காரணத்தையும் சொல்லுகிறான் இராமன்.
जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥
எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கண்டு தானும் துக்கமடைவதில்லையோ, அவனைப் பார்ப்பதும் பாவம் என்கிறார் துளசிதாசர்.
நண்பனின் துன்பத்தைக் கண்டு எவன் ஒருவன் தான் துன்புறுவதில்லையோ அவன் மகாபதகம் செய்தவன் ஆகிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது
ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः ।
महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥
(मनुस्मृति ११। ५४)
ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः।
महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥ – मनुः
பிராமணனைக் கொல்வது, , மது உண்பது , குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொளவது, தங்கத்தைத் திருடுவது பெரிய பாவங்களாகும். இத்தகைய பாவங்களைப் செய்தவர்களைப் பார்க்கவே கூடாது. நண்பனின் துயரத்தைக் கண்டு தான் துயருண்டு அவனுக்கு உதவ முன் வராதவன் மேற்கண்டப் பாவங்களை செய்தவனுக்கு இணையான பாவத்தைச் செய்தவனாகிறான்.
குமாரசம்பவத்திலும் இது சொல்லப்பட்டுள்ளது
स्वजनस्यापि दुःखमग्रतो विवृतद्वारमिवोपजायते।
தனது நெருக்கமானவரின் துயரத்தை நேரில் காணும் போது, அது திறந்த கதவாக நம்முள் நுழையும் போலவே, நம்மை ஆழமாக பாதிக்கிறது.
துயரமோ நமக்கில்லை!
துயரமெனும் சுழலோட்டம்
துணைவனுக்கே வந்தாலே
துளியென நம்முள் நுழைகின்றது!
அன்பினால் நம்மைச் சுடும்
அழகான தீயே அது!
நெருப்பாய் நெஞ்சை நனைக்கும்
நெகிழ்வின் நாதமிதுவே!
***