

Words beginning with letter “Y” continued…………………
Written by London Swaminathan
Post No. 16,287
Date uploaded in London – 9 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யக்ஷ்ம
Yakṣma (यक्ष्म) ருக் வேத்தித்திலும் அதர்வண வேதத்திலும் நோய் என்பதைக் குறிக்க பல இடங்களில் யக்ஷ்ம என்ற சொல் வருகிறது ; உடல்நலக்குறைவு என்பது தெளிவாகத் தெரிந்தாலும் என்ன நோய் என்பது தெளிவாக இல்லை; சில இடங்களில் டி பி. TB என்னும் க்ஷய ரோகத்தைக்/காச நோயைக் குறிக்கிறது; யஜுர் வேதத்தின் வாஜசநேயி சம்ஹிதையில் நூற்றுக் கணக்கான யக்ஷ்மங்கள் என்ற வாக்கியம் வருவதால் பொதுவாக நோய் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் மேலும் காடக சம்ஹிதையில் நோயற்ற என்ற அர்த்தத்தில் அயக்ஷ்ம என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். யஜுர் வேத சம்ஹிதைகளில் ராஜ யக்ஷ்ம , பாப யக்ஷ்ம என்றெல்லாம் பேசப்படுகிறது ; ஜாயேன யக்ஷ்ம என்பதை பாலியல் நோய் /காம சம்பந்தமான நோய் என்றும் கருத இடமுள்ளது.
தமிழ் மொழியிலும் பிணி என்ற சொல்லினை பிறவிப்பிணிக்கும் பயன்படுத்துகிறார்கள் ; அது போல வேதத்திலும் பொருள் கொள்ள முடியும்.
***
யம (யோக விஷயங்களில்)
Yama (यम, “forbearance”) யம என்றால் பொறுமை, சகிப்புத்தனமை , மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்தல் என்று சம்ஸ்க்ருத அகராதி கூறும்; அஷ்டாங்க யோகம் என்பதன் ஒரு பகுதி இது ; இதை அத்து வகையாகப் பிரிப்பர். அவையாவன :
அஹிம்சை -அஹிம்சை (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை);
சத்ய- உண்மை;
ஆஸ்ததேய – திருடாமை; ஆங்கிலத்தில் உள்ள ஸ்டீல் STEAL என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது .
ப்ரஹ்மசர்ய – காம விஷயங்களில் ஈடுபடாமை;
த்ருதி – உறுதி (தமிழ் மொழியில் உள்ள உறுதி என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது ).
தயா- தயை;
ஆர்ஜவ- கபடமின்மை;
மிதாகார – மித உணவு;
செளச – தூய்மை .
***

யமன் (यम):—வேதங்களில் கூறப்படும் மரண தேவன் ; ஒவ்வொருவரின் உயிரையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் எடுத்துச் சென்று, அவர்கள செய்த பாவ புண்ணியங்களை சித்திர குப்தன் என்னும் அதிபயங்கர வேக சூப்பர் கம்யூட்டர் மூலம் கணக்குப்போட்டு ஒரே நொடியில் தீர்ப்பு சொல்பவன் ; அவனுடைய வாஹனம் எருமை; கூட வருவது இரண்டு நாய்கள் என்று வேத கால இலக்கியங்கள் செப்பும்; புராணங்களின் படி சூரிய தேவனான வைவஸ்வத (Rig Veda 10.14.5) என்பவருக்குப் பிறந்தவன்; மனு, இவனுடைய சகோதரன் ; யமி என்னும் சகோதரியுடன் இரட்டைக்குழந்தைகளாகப் பிறந்தவன் . யமன் செய்யக்கூடிய வேலைகளைக் குறிப்பாக அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் காணலாம் ; இவனுடைய கணக்குப்பிள்ளையின் பெயர் சித்திர குப்தன்.
சித்திர குப்தன் என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தால் மறைவான / ரகசியமான படம் என்று அர்த்தம். அதாவது நம்முடைய எண்ணம் செயல்கள் அனைத்தையும் படம்பிடித்து நம்முடனே வரச்செய்யும் அதி வேக, உலகம் இது வரை கண்டுபிடிக்காத, சூப்பர் பாஸ்ட் கம்யூட்டர் ! நம்முடைய பாவ புண்ணிய மூட்டையை யமன் காண முடியும்.
சங்க கால நூல்களில் யமன், கூற்றுவன் காலன் என்ற பெயர்களில் வலம் வருகிறான் ; ச ம் ஸ்க்ருத நூல்களில் உள்ளதைப் போலவே இவன் தெற்குத் திசையில் இருப்பதத்தை தமிழ் நூல்களும் புகலும்; தென்புலம் என்றால் யமனுடைய திசை; திருக்குறளிலும் வருகிறது.
உபநிஷத்தில் வரும் நசிகேதன் கதையில் , மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் -சாவித்ரி கதையில், யக்ஷப் ப்ரச்னம் என்னும் பேயின் கேள்வி-பதில் கதையில், புராணங்களில் தேவார திருவாசகப்பாடல்களில் வரும் மார்க்கண்டேயன் கதையில் இவனுடைய அதிகாரத்தை அறியலாம்
உலக மஹா அதிசயம் பிராமணர்கள் இவனைத் தினமும் மூன்று வேளைகளில் வணங்குவதாகவும் ; இவருக்குத்தான் அதிகப்பெயர்கள்! தென் திசையை நோக்கி அவர்கள் இவனைப்புகழ்ந்து சொல்லும் பெயர்கள் :
यमायनमः । यमाय धर्मराजाय मृत्यवे चान्तकाय च । वैवस्वताय कालाय सर्वभूतक्षयाय च । औदुम्बराय दध्नाय नीलाय परमेष्ठिने । वृकोदराय चित्राय चित्रगुप्ताय वै नमो नमः ॥ चित्रगुप्ताय वै नम ॐ नम इति ॥
yamāya namaḥ | yamāya dharma-rājāya mṛtyave cāntakāya ca |
vaivasvatāya kālāya sarva-bhūta-kṣayāya ca ||
audumbarāya dadhnāya nīlāya parameṣṭhine |
vṛkodarāya citrāya citra-guptāya vai namo namaḥ ||
citra-guptāya vai nama oṃ nama iti.
யம (यम): The Restrainer or Controller; he who keeps mankind in check.
தர்மராஜ (धर्मराज): The King of Righteousness or Justice.
ம்ருத்யு (मृत्यु): Death personified.
அந்தக (अन्तक): The Ender; he who brings life to a termination.
வைவஸ்வத (वैवस्वत): The son of Vivasvat (the Sun God).
கால (काल): Time, the ultimate devourer.
ஸர்வபூதக்ஷய (सर्वभूतक्षय): The destroyer or dissolver of all living beings.
ஒளதும்பரா (औदुम्बर): The one possessing immense strength (often symbolized by the glaucous fig tree).
தத்ன (दध्न): The sustainer. English word DEATH is derived from this Sanskrit word.
ஆங்கிலத்தில் உள்ள டெத் DEATH என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது .
நீல (नील): The dark or blue-black complexioned one.
பரமேஸ்டி (परमेष्ठी): The supreme lord or high official of cosmic order.
விருகோதர (वृकोदर): The one with a vast appetite or a powerful physical frame.
சித்ர (चित्र): The wonderful or multifaceted one.
சித்திரகுப்த (चित्रगुप्त): Frequently invoked alongside Yama; his cosmic scribe who records all human deeds.
***


யமுனை (ஜமுனா) சங்க காலத்தில் தமிழர்களுக்குத் தெரிந்த இரண்டு நதிகளில் ஒன்று யமுனை; இதைத் தவிர கங்கை நதியை 17 இடங்களில் குறிப்பிடுகிறார்கள் ; சிந்து நதி பற்றித் தமிழர்களுக்குத் தெரியாது; சிந்துவெளி நாகரீகம் பற்றியும் தெரியாது ; ஆனால் மெளரிய, நந்த வம்சங்களைக் குறிப்பிடுகின்றனர் ; இரண்டு அதிசய விஷயங்கள்:– யமுனைக்குத் தொழுனை என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்; இதனுடைய விளக்கத்தை எவரும் குறிப்பிடவில்லை ; இதைக் குறிப்பிடும் அகநானூற்றுப் பாடலில் கண்ணன் கோபியர்களின் ஆடையை எடுத்துக்கொண்டு மரத்தில் உட்கார்ந்த செய்தி வருகிறது ; இது 2000 ஆண்டுப் பழமையான் பாடல்; புராணங்களுக்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த குப்தர் காலத் தேதி தவறு என்பதையும் இது காட்டும்.
வேதத்தில் யமுனைநதியைக் குறிப்பிடுகிறார்கள்; இந்திரனுக்கு கிழக்கு திசையைக் கொடுத்துள்ளார்கள்; ஆகையால் கங்கை- யமுனை நதி தீரத்திலிருந்து பஞ்சாப் வழியாக இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறி நாகரீகத்தைப் பரப்பியதை அறிய முடிகிறது
யமி, யமுனா என்றால் இரட்டையர் என்றும் பொருள் ;இமயமலையில் யமுனோத்ரி சிகர பகுதியில் 10,849 அடி உயரத்தில் தோன்றி 860 மைல்களுக்குத் தனியாக , கங்கை நதிக்குச் சமமாக ஒடி, பிரயாகை என்னும் புண்ணிய தலத்தில் கங்கையுடன் கலக்கிறது ; வேத காலத்தில் ஒடி வற்றிப்போன சரஸ்வதி நதி இங்கு பாதாளம் வழியாக கலக்கிறது என்பதால் இதற்கு முக்கூடல் / திரிவேணி சங்கம் என்றும் பெயர். உலகத்தின் மிகப்பெரிய பண்டிகையான கும்ப மேளாவினால் பிரயாகை உலகப் புகழ் பெற்றது; துலுக்கர் ஆட்சிக் காலத்தில் இதற்கு அலஹாபாத் என்று பெயர் சூட்டினர்; இப்பொழுது அந்தப்பெயரை அழித்து, வெற்றி கண்டார்கள் இந்துக்கள்!
Yamunā (यमुना, ‘ட்வின்’) யமுனை நதிக்கரையில் நடந்த பெரும் யுத்தத்தை ரிக் வேதம் வருணிக்கிறது ; இதைக் காளிந்தி என்ற பெயரில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .The river Is mentioned also by the name Kālindī in Eran Stone inscription of Budhagupta. T
யமுனையின் நிறம் கருப்பு; கங்கையின் நிறம் வெள்ளை இவை இரண்டினையும் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் ஒப்பிவிட்டு மகிழ்கிறான் காளிதாசன் ; கிருஷ்ணர் விளையாடியதும் யமுனை நதி தீரம்தான்.
****

யாதேயர்கள்
தமிழர்களின் முருக வழிபாட்டுக்கு முக்கியத் தடயத்தைப் பழங்காலத்தில் கொடுத்த வம்சம் யாதேய வம்சம் ஆகும் இவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட காசுகளில் ஆறு தலை அறுமுகனைக் காண முடிகிறது ; ஸ்கந்தன்/ விசாகன்/ ஷண்முகன் என்ற பெயர்களை கெளடில்ய அர்த்த சாத்திரம், பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தில் காண முடிந்தாலும் நக்கீரனின் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க கால நூலில் செப்பியது உண்மை என்பதை இவர்கள் வெளியிட்ட காசுகள் காட்டுகின்றன ; முருக பக்தர்களான இவர்கள் வேலுடன் நிற்கும் வேலாயுதனையும் காசுகளில் பொறித்துள்ளார்கள் .
இவர்கள் யுத்த ஜீவிகள் ; அதாவது எல்லோருக்கும் ஆயுத சப்ளை செய்தவர்கள் என்று 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி கூறியுள்ளான் ; போர் செய்வதும் ஆயுத உற்பத்தி செய்வதும் இவர்கள் தொழில் ; இன்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேலை நாடுகள் ஆயுத உற்பத்தி- விற்பனையில் வாழ்கின்றன ; அதற்கு முன்னுதாரணம் யாதேயர்கள்தான்!
அவர்களை ஏக ராஜ க்ஷத்ரிய என்பற்று பாணினி குறிப்பிடுவதால் ஒரே தலைவனுக்கு கட்டுப்பட்டு அவர்கள் வாழ்ந்ததையும் அறிகிறோம். மகாபாரதத்திலும் இவர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன; யுதிஷ்டிரரின் ராஜ சூய யாகத்தில் யாதேயர்களும் கலந்து கொண்டனராம்.
Yaudheya coins are ancient copper and silver currencies issued between the 2nd century BCE and the 4th century CE by the Yaudheyas.
• Design & Deities: Most coins feature Karttikeya (the Hindu war god also called Brahmanyadeva or Skanda) holding a spear or javelin on the obverse, often accompanied by a peacock. In coins he is shown with his six heads.
• Inscriptions: They commonly bear the Brahmi legend “Yaudheya Ganasya Jaya” (Victory of the Yaudheya tribe), celebrating military success.
• Symbols: Reverses often display a deer, an elephant, a bull, or an architectural temple structure.
• Denominations: Minted primarily in copper and bronze as punch-marked or cast coins, varying in weight from roughly 3 grams to over 11 grams.
தற்காலத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வாழும் ஜாட் வகுப்பினர் தங்களை யதேயர் வழிவந்தவர்கள் என்று கூ றிக்கொள்கிறார்கள்.
****
யயாதி


இரண்டு யயாதி மன்னர்கள் இருந்தனர்; இருவரின் தந்தை பெயரும் நஹுஷன் ! இதனால் பல கதைகளில் குழப்பம் ஏற்பட்டது . ஒருவர் சூரிய வம்சத்தையும் மற்றோருவர் சந்திர வம்சத்தையும் சேர்ந்தவர்கள் . ; கச்ச-தேவயானி கதையில் இவருடைய கதை கொடுக்கப்பட்டது அவர் சந்திர வம்சத்தவர் .
சூரிய வம்ச யயாதியின் கதை காலவ முனிவர் கதையில் வருகிறது .காலவ முனிவர் தனது குருவான விஸ்வாமித்திரருக்குக் குரு தட்சணையாக ஒரு காது மட்டும் கருப்பாக இருக்கும் 800 அசுவமேதக் குதிரைகளைத் தர விரும்பினார். குரு தட்சிணை என்ன வேண்டும் என்று காலவர் திரும்பத் திரும்பக் கேட்டதால் இப்படிப்பட்ட வினோதமான குதிரைகளை விசுவாமித்திரர் கேட்டார்; இதற்காக அவர் மன்னர் யயாதியிடம் உதவி கேட்க, யயாதி தனது மகள் மாதவியை காலவ முனிவரிடம் ஒப்படைத்தார்.
• காலவ முனிவர் மாதவியை ஹர்யஸ்வன், திவோதாசன், உசீனரன் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோருக்கு மணம் முடித்துக் கொடுத்து, அதன் மூலம் அந்த அதிசயக் குதிரைகளைப் பெற்றுத் தன் குரு தட்சணையை நிறைவேற்றினார்.
• மேலும், மகாபாரதத்தின் விசித்திரப் பறவைக் கதைகளில், காலவ முனிவர் தனது நண்பனான கருடனுடன் (பறவை இன மனிதர்) குதிரைகளைத் தேடிச் சென்ற போது சாண்டிலி என்ற கற்புடைய பெண்ணைச் சந்தித்த சம்பவத்தையும் எழுதியுள்ளேன் .
Mādhavī (माधवी).—மாதவியின் கதை மஹாபாரத உத்யோக பர்வத்தில் வருகிறது அவள் எப்போது பார்த்தாலும் மான் தோலை அணிந்துகொண்டு முனிவர் போலத் தவம் இயற்றி வந்தாள்; அவள் எத்தனை பேருடன் உடலுறவு கொண்டாலும் கன்னித் தன்மையை இழக்காத வரமும் அவளுக்கு இருந்தது. அயோத்தி மன்னன் ஹர்யஸ்வாவுடன் படுத்த போது வசுமனாஸ் என்ற பிள்ளையைப் பெற்றாள். காசி மன்னன் திவோதாசன் மூலம் பிரதர்தனன் என்பவனையும், உசிநார மன்னன் மூலம் சிபிச் சக்ரவர்த்தியையும் விசுவாமித்திரர் மூலம் அஷ்டக என்பவனையும் பெற்றாள் .
To be continued…………………..
Tags. யக்ஷ்ம, யாதேயர் , யயாதி , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-126; இந்து மத கலைச்சொல் அகராதி-126, யமுனை