HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-128; இந்து மத கலைச்சொல் அகராதி-128(Post16,301)

Written by London Swaminathan

Post No. 16,301

Date uploaded in London – 13 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒய் Y என்னும் ஆங்கிலத்தில் துவங்கும் சொற்கள் தொடர்கின்றன………………

யவனர்கள்

தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்களில் குறிப்பிடப்படுவோர் கிரேக்கர்கள் அல்ல; 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் நூல்களில் ஆறு இடங்களில் யவன என்ற சொல் வருகிறது ; அவை அனைத்தும் இத்தாலி நாட்டின் ரோமாபுரியிலிருந்து வந்த ரோமானியர்கள் ஆவர். தங்கத்தையும் மதுபானத்தையும் தமிழர்களுக்கு கொடுத்துவிட்டு மிளகையும் முத்துக்களையும் வாங்கிச் செ ன்றனர் . பிற்காலத்தில் குதிரைகளைக் கப்பலில் கொண்டுவந்த அராபியார்களுக்கும் இதே சொல்லை பயன்படுத்தினர் . யவன என்ற சொல் சங்க காலத்துக்கும் முன்னர் வால்மீகி  ராமாயணத்தில்   முதலில் காணக்கிடக்கிறது ; விச்வாமித்ர முனிவன் அரசனாக இருந்த காலத்தில் பல அடாவடிச்செயல்களில் ஈடுபட்டான் ; படைகளுடன் பிராமண முனிவன் வசிட்டனைச் சந்தித்த போது அவர் எல்லோருக்கும் உணவுபடைத்தார் ; இதை அளிக்கும் சக்தி அவருக்குத் தெய் வீகப்பசு நந்தினியிடம் கிடைத்தது என்பதை அறிந்தவுடன் அதை பலவந்தமாக எடுத்துச் செல்ல  மு யன்றார் ; வசிட்ட முனிவன் கட்டளையிட்டவுடன் நந்தினியின் வால், உடற்பகுதிகளிலிருந்து யவனர் சகரர் மிலேச்சர் காம்போஜர் முதலிய கீழ்ஜாதிப்படைகளை வந்து விச்வாமித்ரனை ஓட ஓட விரட்டியது .

மஹாபாரதத்தைப் பொறுத்தமட்டில் ஏராளமான இடங்களில் யவனர் வருகிறார்கள் அர்ஜுனன் வென்றதாகவும் அவர்களுடைய சகோதரர்கள் வென்றதாகவும், பாஞ்சாலி சுயம்வரத்திற்கு அவர்கள் வந்த்தாகவும் மஹாபாரதயுத்தத்தில் கெளரவப் படைகளுடன் அவர்கள் போரிட்டதாகவும் எண்ணற்ற இடங்களில் காண முடிகிறது; ஆகையால் இவர்கள் கிரேக்கர்கள் அல்ல , இந்தியாவின் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த இனத்தினர் என்பது வெள்ளிடைமலையென விளங்குகிறது. அலெக்ஸ்சாண்டர் படையெடுப்பு முன்னரே இந்திய -கிரேக்க தொடர்பு இருந்ததை ஹெரோடோடஸ் எழுத்துக்கள் காண்பிக்கின்றன. தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் இவர்களை மட்டம்தட்டும் செய்திகளே அதிகம்; சேர மன்னன் இவர்களைப் பிடித்து, பின்புறம் கைகளைக்கட்டி, தலைமயிரை மழித்து எண்ணெயை ஊற்றி தண்டித்தான் என்பது சங்க இலக்கியத்தில் உள்ளது; பின்னர் இவர்கள் தங்கம், ரத்தினக்கற்களைக்  கொடுத்து விடுதலை பெற்றனர். படுத்துக்கொண்டே சாப்பிடுபவன் யவனர் என்று சம்ஸ்க்ருத இலக்கியங்கள் இவர்களை இழிவுபடுத்துகின்றன . 

காலயவன மர்மம்

வெள்ளைக்காரர்கள் இதுபற்றி கதைப்பதே இல்லை ; கிருஷ்ண பரமாத்மாவை ஓட ஓட விர ட்டி உத்தர பிரதேச மதுராவிலிருந்து 800 மைல் தள்ளியுள்ள குஜராத் துவாரகாவுக்கு தலை நகரை மாற்ற வைத்தவன் இந்த கருப்பு யவனன்தான் ; ஆனால் இதுபற்றி எவரும் பேசுவதில்லை ; இவனை நேரிடையாகத் தோற்கடிக்க முடியாதென்பதால் இவனை ஒரு குகைக்குள் நுழையும்படி கிருஷ்ணர் தந்திரம் செய்தார் ; அந்த குகையில் முசுகுந்தன் என்ற மன்னன்  தூங்கிக்கொண்டு இருந்தான்; குகைக்குள் நுழைந்த கால யவனன் , அவர் கிருஷ்ணர் என்று எண்ணி ஒரு உதை விட்டான்; அவர்  முழித்துப்பார்த்தவுடன் கால யவனன் சாம்பலானான் ; ஏனெனில் உறக்கத்திலிருந்து விழிக்கும்போது யாரைப்  பார்க்கிறாரோ அவர் எரிந்து போவார் என்ற வரத்தை முசுகுந்தன் பெற்றிருந்தான் . இந்தக் கதை யவனர் என்பவர் வடக்கே இருந்த கீழ்ஜாதி மன்னன் என்பதைக்  காட்டுகிறது .

***

யோகம்

யோகம் என்றால் இணைத்தல், ஒன்று சேர்த்தல் என்பது பொருள்; ஆங்கிலச் சொல் YOKE யோக் என்பது இதிலிருந்து வந்ததே . மனத்தையும் ஐம்புலன்களின் இயக்கத்தையும் ஒன்று படுத்தி இறைவனை நாட இதை இந்துக்கள் கண்டுபிடித்தனர் ; உடலினை ஒரு நிலையில் நிமிர்த்துவைத்து தியானம் செய்வது இதன் முக்கியப்பகுதி ; வால்மீகி முதலிய முனிவர்கள் உடலில் பாம்புப் புற்று வளரும் அளவுக்குத் தவம் செய்தனர் ; வால்மீகி      என்றால் புற்று என்று பொருள்;  பின்னர் புத்தரின் சிலைகளை அதிகமாக நிறுவியதால் இதைப்   பெளத்தர்களும் கடைப்பிடிக்கத் துவங்கினார்கள் . இதைப் பதஞ்சலி முனிவர் முறைப்படுத்தி யோக நூல்களை யாத்தார் ; இதில் பலவகையான பிரிவுகளையும் பிற்காலத்தவர் தோற்றுவித்தார்கள்; அஷ்டாங்க யோகம் என்பதில் எட்டு அங்கங்கள்/ பிரிவுகள் உள்ளன

உடலினை நேராக வைத்து மூச்சுக்காற்றினைப் பிராணாயாம விகிதாசாரத்தில் கட்டுப்படுத்தினால், மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வது எளிது என்பதை இந்துக்கள் உலகிற்குப் போதித்தார்கள்; இந்தியாவில் நரேந்திரமோடி பதவி ஏற்றபின்னர் இதை உலகம் முழுதும் பரப்பினார் இப்பொழுது ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

***

யோக வாசிஷ்டம்

 இறைவனை நாட முயற்சி செய்கையில் மனிதனுக்கு மனதில் எழும் சந்தேகங்கள் அனைத்துக்கும் யோக வாசிஷ்டம் என்ற நூல் பதிலளிக்கிறது ; ராமனுக்கு வசிஷ்ட முனிவர் இதைப் போதித்ததாக நூல் துவங்குகிறது . இன்றுள்ள நிலையில் மஹாபாரதத்துக்கு அடுத்த நிலையிலுள்ள நீளமான இந்து மத நூல் இதுதான்! மஹாபாரதம் போலவே சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது

இந்த நூலுக்குப் பல பெயர்கள் உண்டு

– Vālmīki Yogavāsiṣṭha (वाल्मीकि योगवासिष्ठ) or Valmiki Yoga-vasishtha

– Mahārāmāyaṇa (महारामायण) or Maharamayana,

– Ārṣarāmāyaṇa (आर्षरामायण) or Arsharamayana,

– Vāsiṣṭharāmāyaṇa (वासिष्ठरामायण) or Vasishtharamayana,

– Yogavāsiṣṭhamahārāmāyaṇa (योगवासिष्ठमहारामायण) or Yoga-vāsiṣṭha-mahārāmāyaṇa,

– Jñānavāsiṣṭha (ज्ञानवासिष्ठ) or ஞான வாசிஷ்டம் ,, மஹாராமாயணம் என்பது அவைகளில் சில .

முதலில் 6000 ஸ்லோகங்களாக இருந்த இந்த நூலில் பல்வேறு தத்துவ போதகர்கள்   இணைப்புகளைச் சேர்த்ததால் இப்போது 29,000

ஸ்லோகங்களாக வளர்ந்து விட்டது; இதில் ஏராளமான கதைகள் உள்ளன ( இதே பிளாக்கில் எஸ். நாகராஜன் அத்தனை கதைகளையும் தந்துள்ளார் ). சுமார் 600 ஆடுகளுக்கு முன்னரே இது பாரசீக மொழியில் ஆக்கப்பட்டு இரான் மூலமாக உலகம் முழுதும் பரவியது . முக்கியமாக அத்வைத தத்துவத்தை அடைப்படையாகக் கொண்ட இந்த நூலில் மனத்தின் உணர்வுகள் , உலகத் தோற்றம் , உடலினை விடுத்து மோட்சம் அடைதல் முதலியன உள்ளன . நூலினைப் படிப்பதால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது . இப்போதுள்ள நூல் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நூலாகும்.

***

யுகம்

உலகத்தில் நான்கு யுகங்கள்  மீண்டும் மீண்டும் ஏற்படும் என்று இந்துக்கள் கூறியுள்ளார்கள் ; கிருஷ்ண பரமாத்மாவும் சம்பவாமி யுகே யுகே என்று பகவத் கீதையில் கூறியிருப்பதால் யுகம் என்பது மிகப்பழமையான கணக்கு என்பது தெரிகிறது முதல் யுகம் சத்ய யுகம் என்னும் கிருத யுகம் ஆகும். இதற்கு அடுத்ததாக த்ரேதா யுகமும் பின்னர் த்வாபர யுகமும் கடைசியாக கலியுகமும் வருகின்றன இப்போது நடப்பது கலியுகம் . மனிதனின் ஆயுள், குண நலன்கள்,  உலகத்தின் நிலைமை ஆகியன ஒவ்வொரு யுகத்திலும் கீழே  சென்று கொண்டிருக்கும். அவ்வகையில் கலியுகத்தில் தர்மங்கள், அற நெறிகள் அழியத் துவங்கும் இதற்கு இந்துமத நூல்கள் ஒரு எடுத்துக் காட்டினையும் தருகிறது; சத்ய யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த பசு, கலியுகத்தில் ஒற்றைக் காலுடன் நிற்பதாக வருணிக்கிறது . மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கி.மு 3102ல் கலியுகம் துவங்கியது . ஒவ்வொரு யுகத்துக்கு உள்ள எண்களைக் கூட்டினால் ஒன்பது என்று ஒற்றைப்படையில் முடியும் . யுகங்களுக்கு கொடுக்கப்பட்ட எண்கள் மிகவும் அதிகம் ; சிலர் அதிலுள்ள பூஜ்யங்களைக் கழித்துவிட்டு வெறும் எண்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள் . இது தவிர வராஹமிஹிரர், கல்ஹணர் போன்ற பழங்கால ஆசிரியர்கள் கலியுகம் கி மு 2600-ல் துவங்கியதாகப் புதுக் கணக்கும் எழுதியுள்ளார்கள் ஆயினும் கி.மு 3102 என்ற நம்பிக்கையுள்ள பழங் காலக்  கல்வெட்டுகள் கிடைப்பதால் அதுவே பெரும்பாலோரின்  நம்பிக்கை ஆகும் கீழே கிருத த்ரேதா த்வாபர கலி யுகக்கணக்கு உள்ளது  அண்மையில் , சென்ற ஆண்டில் (2025) யுகங்களைக் கூறும் கல்வெட்டுகள் என்ற ஆங்கில நூலினை டாக்டர் எம் எல் ராஜா வெளியிட்டார் ; அதற்கு முன்னர் மக்களுக்குத் தெரிந்தது ஐஹோல் கல்வெட்டும், கோ கருணந்தடக்கனின் பார்த்திவசேகரபுர சாசனமும்தான் இது தவிர யோகபத்திரியில் ஒரு சாசனம் உள்ளது; இப்போதைய புதிய நூல் மேலும் பல கல்வெட்டுகளை ஆராய்ச்சியாளருக்கு  வழங்குகிறாது. பார்த்திவசேகர புர சாசனம் கலியுகத்தை நாட்கள் கணக்கில் சொல்லுவது உலகத்திலுள்ள ஒரு வரலாற்று அதிசயம் ஆகும்.

1,728,000- கிருத யுகம்

1,296000 –த்ரேதா யுகம்,

864000- த்வாபர யுகம்;

432000- கலியுகம்;

மனித ஆண்டும் தேவலோக, பிரம்ம லோக ஆண்டுகளும் வேறுபடும் என்ற கணக்கில் இவைகளை வகுத்துள்ளனர். எதிர்கால  வானியல் கண்டுபிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை நிரூபிக்கும்  

மாயா நாகரீகத்தின் துவக்க ஆண்டும் கலியுகத்தின்  துவக்க ஆண்டாக உள்ளது; அவர்கள் மஹாபாரத காலத்தில் தென் அமெரிக்கா சென்றதையும் அவர்கள் இந்துக்கள் என்பதையும் நிரூபிப்பதை நான் முன்னரே எழுதியுள்ளேன் .

கலியுகத்தைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் தாய்லந்திலும் உள்ளது.

***

யூபம்

யாக யக்ஞங்கள் செய்யும் பொழுது நடப்படும் மரத் தூண்கள் யூபம் எனப்படும் ; ரிக்வேதம் முதல் சங்கத் தமிழ் இலக்கியங்கள் வரை இதே ஸம்ஸ்க்ருதச் சொல் வருகிறது; அது மட்டுமால்லாமல் மனிதர்களே இதுவரை நுழைந்திராத காடுகள் என்று நினைத்த போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள்ளும் யூபஸ்தம்பங்கள் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளுடன் கண்டு பிடிக்கப்பட்டன ; இந்தோனேஷியாவிலுள்ள அவை,  மூல வர்மன், பூர்ண வர்மன் என்ற இரண்டு மன்னர்கள் செய்த யாகங்களையும் தானங்களையும் செப்புகின்றன.  யாகத்தில் பலியிடப்படும் மிருகத்தைக் கட்டிவைப்பதற்காக இதை நடப்பட்டதாக நூல்கள் கூறுகின்றன. ஆனால்  இவை சாதாரண மரத்தூண்களோ கல் தூண்களோ இல்லை. புனிதமான சடங்குகளை செய்து மந்திரங்களை ஓதி குறிப்பிட்ட மரங்களை மட்டும் இதற்குப் பயன்படுத்திய விரிவான செய்திகளும் கிடைக்கின்றன. ராமாயணத்தில் அஸ்வமேத யாகச் செய்திகளில் இவை பற்றி மேல் இவரங்கள் கிடைக்கின்றன.

***

யுவான் சுவாங்

சீன யாத்ரீகர்கள் பலர் புத்த மதம் பற்றிக் கற்கவும் அவை சம்பந்தமான நூல்களை சேகரிக்கவும் இந்தியாவுக்கு வந்தனர் ; முதலில் குப்தர் காலத்தில் பாஹியான் வந்தார் ; அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹர்ஷர் ஆட்சிக்கு காலத்தில் யுவாங் சுவாங் வந்தார் ; அவருக்குப்பின்னர் இட்சிங் என்பவர் வந்தார் ; யுவான் சுவாங் எழுதி அளித்த விஷயங்கள் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அரசாட்சி, கல்வி முறை பண்பாடு பாரிய அறிய செய்திகள் கிடைக்கின்றன ; இவர் வெறும் புத்த மதச் செய்தியாக்களி மட்டும் எழுதாமல் தான் நேரில் கண்ட எல்லா விஷயங்களையும் எழுதி இருப்பதால் நாளந்தா தட்ச சீலம் முதலிய பல்கலைக் கழகங்கள் , சிவன் வழிபாடு, நாகர் வழிபாடு , பாணினியின் சிலை லாகூருக்கு அருகில் இருந்தது முதலிய தகவல்களும் நமக்குத் தெரியவந்தன . இவர் எழுதியவை தமிழ் மொழியிலும் கிடைக்கின்றன .

–SUBHAM—

TAGS- யுவான் சுவாங் , யூபம், யுகம் ,யோகா, யோக வாசிஷ்டம், யவனர், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-128; இந்து மத கலைச்சொல் அகராதி-128

Leave a comment

Leave a Reply