
Written by London Swaminathan
Post No. 16,329
Date uploaded in London – 21 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தன்னேரில்லாத தமிழ் அதன் சுயம் பிரகாசத்திலேயே ஒளிவிடும்
“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று; ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!”
– தண்டி அலங்காரப் பாடல்
எல்லோரும் காயத்ரீ மந்திரம் சொல்லி வணங்கும் சூரியனும் தமிழும் ஒன்று; சூரியன் ஒளி வீசுவது போல தமிழ் மொழியும் ஒளிவீசும்; சூரியன் உள்ளவரை தமிழும் இருக்கும் என்பது பாடலின் பொருள்.
xxxx

முத்தீ
தமிழ்த் துளி WEBSITE சொல்கிறது:–
புறநானூறு 367
சேரமான் மாரிவெண்கோ
பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
மூவேந்தரும் சேர்ந்திருந்த காட்சியைக் கண்டு ஔவையார் வாழ்த்துகிறார்.
பார்ப்பார் முத்தீ வளர்ப்பர். (சமையல் தீ, வேள்வித் தீ, விளக்குத் தீ) இந்த மூன்று தீயும் ஓரிடத்தில் இருப்பது போல மூன்று வேந்தர்களும் ஓரிடத்தில் இருக்கிறீர்கள்.
XXX
இதைப்படித்தால் முட்டாள் ஆவது உறுதி ; பிராமணர் இல்லாத அரைவேக்காடுகள் எழுதினால் இப்படித்தான் வரும் !
முத்தீ என்பது
சங்கப் பாடல்களில் அந்தணர்கள் அல்லது இருபிறப்பாளர்கள் (இருமுறை பிறந்தவர்கள் எனக் கருதப்படுபவர்கள்) தங்களின் அன்றாட வேள்விக் கடமைகளுக்காக இந்த மூன்று தீ வளர்ப்பதை முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று வகை ‘தீ’ க்கள்
1. காருகபத்தியம் (Gārhapatya): குடும்பத் தலைவனால் எப்போதும் அணையாமல் பாதுகாக்கப்படும் இல்லத்துத் தீ.
2. ஆகவனீயம் (Āhavanīya): தேவர்களுக்கு அவிசு (உணவு) வழங்குவதற்காகக் கிழக்கே வளர்க்கப்படும் வேள்வித் தீ.
3. தட்சிணாக்கினி (Dakṣiṇāgni): தெற்குத் திசையில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) வழிபாடுகள் செய்ய வளர்க்கப்படும் தீ.
சங்க இலக்கியச் சான்றுகள்
• புறநானூறு (பாடல் 367): “இருபிறப்பாளர் முத்தீப் புரைய” என்ற வரி, அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல மன்னனும் சிறப்புற்று விளங்க வேண்டும் என்பதை ஒப்பிட்டுக் கூறுகிறது.
• பரிபாடல் (பாடல் 5): நான்மறை அந்தணர்கள் வேள்விச்சாலைகளில் முத்தீ வளர்த்து இறைவனை வழிபட்டதை விரிவாகக் குறிப்பிடுகிறது.
XXX
அந்தக் காலத்தில் தீப்பெட்டிகள் கிடையாது ; கோவில்கள் போன்ற இடங்களிலும் அரண் மனைகளிலும் நந்தா விளக்கு இருந்தது ; அணையாமல் ஆண்டுக் கணக்கில் எரியும் விளக்குகள் இவை ; ஆனால் வீடுகளில் – குடிசை வீடுகளில் – பர்ண சாலைகளில் இப்படி வைத்தால் – தீ விபத்து ஏற்படும் என்பதற்காக உமிக்கரியை தீ மூட்டி வைத்திருப்பார்கள் ; அதிலிருந்து தேங்காய் நாரை வைத்து தீ மூட்டி எடுத்துக்கொண்டு அதை வெவ்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தினார்கள் ; இதில் ஒரு தீ கல்யாண காலத்தில் ஒரு பானையில் எரிந்து கொண்டிருக்கும்.
பிராமணர் வீடுகளில் 3 வெவ்வேறு வடிவங்களில் (GEOMETRICAL SHAPES) உள்ள இடங்களில் இந்தத் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ; அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெவ்வேறு வடிவங்களில் DIFFERENT GEOMETRICAL SHAPES அக்கினி குண்டத்தை அமைத்தார்கள்; ஆனால் இது எப்போது மறைந்து போனது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து ஒளபாசனப் பானையிலிருந்து அக்கினி எடுத்து தினசரி ஹோமம் செய்ததைக் கண்டிருக்கிறேன் .முத்தீ அழிந்த காலம் ஆராய்ச்சிக்குரியது .
இதனுடைய ஸம்ஸ்க்ருதப் பெயர்களைக் கொடுக்கக்கூடாது என்பதாற்காக இப்படி சமையல் தீ அடுப்புத் தீ … என்ற உளறல்கள் !
இதைவிட முக்கியமானது இதை உ வே சா நூல்கள் முதலியவற்றில் காண முடிகிறது; முன் காலத்தில் வந்த சங்க இலக்கியச் சொல்லடைவில் காண முடியவில்லை.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பேஸ் புக் திருடர்களும் பிளாக் திருடர்களும்
FACEBOOK THIEVES AND BLOG THIEVES
பேஸ் புக் – கும், பிளாக்-குகளும் அதிகமான அயோக்கியர்களை உண்டாக்கி வருகின்றன ; ஒரு ஆள் வெளியிட்டதை இன்னொரு ஆள் திருடி தன் பெயரில் வெளியிடுவதால் பொய்யாமொழிப் புலவர் யார் பொய்யே உருவான அயோக்கியபுலவர் யார் என்று கண்டு பிடிக்க முடிவத்தில்லை ; பலர் ஆண்டுக்கணக்கில் ஆராய்ந்து வெளியிட்ட தகவல்களைத் தன் பெயரில் போட்டுக்கொள்கிறார்கள் ; இன்னும் சிலர் மேலும் கீழும் சில வரிகளைச் சேர்த்தோ ஸ்பெல்லிங்க்குகளை மாற்றியோ தன் பெயர்களில் போடுகிறார்கள் ; ஒரு ஆள் இப்படி என் கட்டுரைகளைத் திருடி எழுதியபொழுது , கொஞ்சம கடுமையான சொற்களைப் பயன்படுத்தினேன் ; உன் குலமே அழிந்து விடும் உன்னைப்போல ஆட்களால் தமிழ் மொழியே அழிந்துவிடும் என்று ; உடனே ஒருவர் காமெண்ட் பாக்சில் COMMENT BOXL எழுதினார் : என்ன சார் தப்பு : நல்ல விஷயத்தைத்தானே பரப்பினார் என்று !! காலம் கலியுகம் என்பது புரிகிறது ! இவர்கள் எல்லாம் ஒரு தாய்- ஒரு தகப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை !
கற்பழிக்கலாம்- கொலை செய்யலாம்- திருடலாம் – அதில் ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடித்து நியாயம் கற்பிக்கலாம்!!!
நாள்தோறும் பேஸ்புக்கில் பல்லாயிரக்கணக்கான திருடர்களை பார்க்கிறேன்
நானும் படங்களை பல இடங்களிலிருந்து எடுப்பதால் முதலில் ஒரு டிஸ்க்ளைமர் DISCLAIMER போட்டு இருக்கிறேன் – படங்களை நான் பல இடங்களில் இருந்து எடுத்திருக்கிறேன்; அறிவைப் பரப்புவதற்காக ; ஏனென்றால் என்னுடைய பிளாக் நான்-கமர்ஷியல்- NON-COMMERCIAL வணிக நோக்கு இல்லாதது-என்று பல்லாயிரம் படங்களை நான் 16,500 கட்டுரைகளில் பயன்படுத்தியதற்கு இரண்டே ஆட்சேபணைகள் வந்தன; உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டு படங்களை அகற்றினேன்; அவர்களுக்கும் என்னுடைய டிஸ்க்ளைமரையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தேன்.
இவ்வளவு பீடிகை போட்டது எதற்காக என்றும் சொல்லி விடுகிறேன். .
திருக்குறளை ஒரு வெப்சைட்டிலிருந்து காப்பி அடிப்பவர்கள் , அந்த வெப்சைட்டில் தவறு இருந்தால் அதைத் திருத்தாமல்– பல ஆண்டுகளுக்கு — அப்படியே வைத்திருக்கிறார்கள் ! முதல் முதலில் இதைப் பார்க்கும் ஒரு மாணவன் இதை அப்படியே காப்பி அடித்து தேர்வு எழுதினால் என்ன ஆகும்?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

புறநானூறு சங்க கால நூல் அல்ல !
பரிபாடல் , திருமுருகாற்றுப்படை , சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களிலும் கடவுள் பற்றி நிறைய விஷயங்கள் வருவதாலும் புதிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பயிலப்படுவதாலும் அவை காலத்தால் பிற்பட்டவை என்று சில அறிவிலிகள் எழுதியுள்ளனர் .
பொதுவாக ஒரு விஷயத்தை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் ; எல்லா புலவர்களும் எல்லாப் பாடல்களும் ஒரே காலத்தில் தோன்றியிருக்க முடியாது ; ஆனால் இவர்கள் சில விஷயங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள்.
அது என்ன?
ஆங்கில மொழியை எடுத்துக்கொண்டால் , அது சுமார் ஆயிரம் ஆண்டு பழமை உடையதுதான் ; அதில் சமையல் விஷயங்களைக் குறிப்பிடும்போது பிரெஞ்சு மொழிச் சொற்களும் சங்கீதம் பற்றி எழுதும்போது இத்தாலிய மொழிச் சொற்களும் விஞ்ஞான விஷயங்களை விளக்கும்போது லத்தீன் அல்லது கிரேக்க மொழிச் சொற்களும் அதிகம் வரும் ; இதே போல சமய சம்பந்தமான விஷயங்களைத் தமிழில் எழுதும்போது அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இடம்பெறும் என்பதை அறிதல் வேண்டும் ;
காரணம் என்ன?
தமிழ் மொழியில் நூல்கள் தோன்றுவதற்கு முன்னரே நீண்ட காலத்துக்கு சம்ஸ்க்ருதத்தில் வேதங்கள் உபநிஷத்துக்கள், இதிகாசங்கள் முதலியன உள்ளன .
புதிய கருத்துக்களை வெளியிடுவதில் தவறில்லை. ஆனால் பழைய கருத்துக்களை அவர்கள் மறுப்பது ஏன் என்று விளக்க வேண்டும் ;அவ்வாறு செய்யாமல் ஒரு சார்புக் கருத்துக்களை தமிழ் பீடைகள் — அதாவது பீடியாக்கள் வெளியிடுகின்றன; இதற்குப் பெயர் மூளைச் சலவை ! BRAIN WASH!
பாற்கடலைக் கடைந்து அமிர்தம் வரும் செய்தி பரிபாடலில் வருவதால் அது எல்லாம் ஏழாம் நூற்றாண்டு நூல் என்று ஒரு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் சொல்கிறார் என்று மட்டும் பீடியாக்களில் வெளியிடுகின்றனர் ! சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்கால நூல்களான திருக்குறள் போன்றவற்றிலும் இந்திரர் அமுதம், அமிழ்தம் என்றெல்லாம் பார்க்கிறோம்; ஆகவே அமிழ்தம் கிடைத்த செய்தி சங்க காலத்திலேயே தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதையும் சொல்ல வேண்டும் .
இன்னும் சிலர் தாலி பற்றிச் சொல்லவில்லை , அதைப்பற்றி சொல்லவில்லை இதைப்பற்றி சொல்லவில்லை என்றெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுகிறார்கள் ; அதே வாதத்தை எடுத்துக்கொண்டால் கங்கை நதி பற்றி நிறைய இடங்களில் சொன்ன புலவர்கள் ஏன் சிந்து நதி பற்றிச் சொல்லவில்லை, ஏன் புத்தர் -மகாவீரர் பற்றிச் சொல்லவில்லை என்ற கேள்விகளையும் ஆராய வேண்டும் ; சுருங்கச் சொன்னால் NEGATIVE EVIDENCE நெகட்டிவ் எவிடென்ஸ் ஒரு சாட்சியம் ஆகாது.
XXXXX

இலக்குவனார் மெத்தர்ட் METHORD / சூழ்ச்சி
எதை எல்லாம் விளக்க முடியவில்லையோ அதை எல்லாம் இடைச் செருகல் , ஆரிய பார்ப்பனர் சூழ்ச்சி என்று முத்திரை குத்திவிடு –என்பதாகும் இப்படிக்குத்தினால் பல நூல்களுக்கு காலமே சொல்ல முடியாது!
வையாபுரிப்பிள்ளை மெத்தர்ட் / சூழ்ச்சி
எல்லா மறுப்புகளுக்கும் சமண நூல்களிலிருந்து ஆதாரம் எடுத்துக்கொடு; அந்த நூல்களின் காலத்தைச் சொல்லாதே.
இவர் அவர் இல்லை; அவர் இவர் இல்லை என்று ஒரு அணுகுண்டு போடு !
அந்துவானார் என்ற பரிபாடல் புலவரை , புறநானூற்றுப் புலவரான மருதன் இளநாகன் குறிப்பிடுகிறார் . பரிபாடல் ஏழாம் நூற்றாண்டு என்றால் புறநானூறும் ஏழாம் நூற்றாண்டு ஆகிவிடும் . மருதன் இளநாகன் எழுதிய சுமார் 75 பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன ; அதைச் சுட்டிக்காட்டினால், அவர் இவர் இல்லை; அவர் வேறு இவர் வேறு என்று ஒரு புது குண்டு THROW A NEW BOMB SHELL போடு .
இப்படியெல்லாம் பித்தலாட்டம் வரும் என்று சிந்தித்துதான் சங்க நூல்கள் பதினெட்டுக்குப் பின்னர், சங்கம் மருவிய காலத்தில் ஐம்பெரும் காப்பியங்களையும் திருக்குறள் உள்ளிட்ட பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்களையும் பிரித்துவைத்தார்கள் .
கருத்து வேறுபாட்டுக்கு இடம் உண்டு ஆனால் பழைய விஷயங்களை மறைப்பதற்கு இடம் இல்லை .
100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அத்தனை திருக்குறள் புஸ்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிய கதை உள்ளது ; அதை எழுதி மறுக்கலாம் ; தவறில்லை; அதற்காகத் திருவள்ளுவரின் பூணூலையும் தொல்காப்பியரின் பூணூலையும் அறுத்துப் புதுப்படம் போடத்தேவை இல்லை ( தொல்காப்பியர் பற்றிய ஒரே கதை 700 ஆண்டுக்கு முந்தைய நச்சினார்க்கினியர் உரையில் மட்டுமே உள்ளது ; அவர் தொல்காப்பியர் பிராமணர் என்கிறார் !
ஒரு பொருளைக் குறிப்பிடாததால் அதை இல்லை என்று எண்ணிவிடக்கூடாது என்பதை விளக்க நான் முன்னரே நீண்ட கட்டுரையில் எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துவிட்டேன் .
தொல்காப்பியத்தின் காலத்தை எப்படியாது பாணிணிக்கு முன்னர் காட்ட வேண்டும் என்று தடித்த புத்தகங்களை எழுதிய பரிதாபத் கேசுகளை மனதிற்கொண்டு இதை எழுதுகிறேன் .

வள்ளலாரும் வடலூர் அயோக்கியர்களும் !
வடலூருக்கு சில முறை சென்று வள்ளலார் கோவிலைத் தரிசித்து இருக்கிறேன்; அதைச் சுற்றி பிரம்மாண்டமான வெற்றிடம் உள்ளது அதைக் கமர்ஷியல் பிளாக்குகளாக மாற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அயோக்கியர்கள் அவர் தைப்பூச நாளை விடுமுறை நாளாக அறிவிக்கத்தூண்டினார்கள் திராவிடர்களும் அதைச் செய்தார்கள் ; அவர்களுக்குப் போட்ட லஞ்சம் : கமர்ஷியல் பிளாக் கான்டராக்ட் ETC ; அதைக்கூடப் பொறுத்துக் கொண்டுவிடலாம் போலிருக்கிறது; வள்ளலார் நெற்றியில் இருந்த விபூதியை அழித்து, புதிய வள்ளுவர் படம் போல விபூதி இல்லாமல் இந்த அயோக்கியர்கள் படம் வெளியிட்டுள்ளார்கள் ! புதிய திருவருட்பா புஸ்தகத்தை வடலூர் ஷாப்பிலிருந்து வாங்கி வீட்டுக்கு வந்தபின்னர்தான் உற்று நோக்கினேன்; வள்ளலார் முகத்தில் விபூதி இல்லாமல் ஏசு கிறிஸ்து ஆக்கிவிட்டார்கள்; நல்ல வேளையாக அயோக்கியர்களின் திட்டத்தை எதிர்த்து சிலர் போர்க்கொடி தூங்கியதால் நிறுத்திவைக்கப்பட்டதாகக் கேள்வி .
வள்ளலார் முகத்தில் விபூதி இல்லாத புதிய படங்களை வாங்காதீர்கள்; அவை அயோக்கியர்கள் வெளியிட் டபடங்கள்; எல்லா பழைய படங்களிலும் விபூதி இருக்கும் ; இதையே வள்ளுவர் படத்துக்கும் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டும் !
xxxxxxx
தன்னேரில்லாத தமிழ் அதன் சுயம் பிரகாசத்திலேயே ஒளிவிடும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேவை இல்லை !
“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று; ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!”
– தண்டி அலங்காரப் பாடல்
எல்லோரும் காயத்ரீ மந்திரம் சொல்லி வணங்கும் சூரியனும் தமிழும் ஒன்று; சூரியன் ஒளி வீசுவது போல தமிழ் மொழியும் ஒளிவீசும்; சூரியன் உள்ளவரை தமிழும் இருக்கும் என்பது பாடலின் பொருள்.
—SUBHAM—
TAGS- தமிழ் மொழி பிழைக்குமா?, விஷ ஊசி, Part 3, விபூதி இல்லாத , வள்ளலார், முத்தீ, ஆரிய பார்ப்பனர் சூழ்ச்சி,