லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 2 (Post No.16,333)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,333

Date uploaded in London – 23 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non-commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 2

ச. நாகராஜன்

ஸ்லோகம் 16

இதனுடைய ஒரு நாமத்திற்கு இருக்கக்கூடிய பாவத்தைப் போக்கும் சக்திக்குப் போதுமான பாவம் செய்ய பதினான்கு லோகங்களாலும் முடியாது.

ஸ்லோகம் 17

எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தைத் தவிர்த்து (வேறு உபாயத்தினால்) பாவத்தைப் போக்கடிக்க விரும்புகிறானோ, அவன் குளிர் நீக்குவதற்காக பனிக்கட்டி மலையை அடைவது போல் இருக்கிறான்.

ஸ்லோகம் 18

எந்த பக்தனானவன் இந்த நாம சஹஸ்ரத்தை தினந்தோறும் கீர்த்தனம் பண்ணுகிறானோ அவனிடம் ஶ்ரீ லலிதாதேவியானவள் சந்தோஷமடைந்து அவன் விரும்பியவற்றையெல்லாம் கொடூக்கிறாள்.

ஸ்லோகம் 19

இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லாமல் ஒருவன் எப்படி பக்தனாக ஆகக் கூடும்!

ஸ்லோகம் 20, 21

தினமும் கீர்த்தனம் செய்ய முடியாதவன் புண்ய தினங்களிலும், சங்க்ராந்தியிலும், விஷுவிலும், ஜன்மத்ரிதமாகிற மூன்று தினங்களிலும், அயனங்களிலும், சுக்ல பக்ஷத்திய நவமி, சதுர்தசி திதிகளிலும், சுக்ரவாரத்திலும், இவைகளிலாவது கீர்த்தனம் செய்ய வேண்டும்.

(விஷூ என்பது மேஷ ராசி, துலா ராசிகளில் சூர்யன் பிரவேசிக்கும் தினங்களாகும்.

ஜன்ம த்ரிதம் என்பது தன்னுடையதும், தனது மனைவியுடையதும், தனது புத்திரனுடையதுமான ஜன்ம நட்சத்திரங்கள் உள்ள தினங்களைக் குறிக்கும்.

அயனம் என்பது சூரியன் கடகராசி, மகரராசி ஆகியவற்றில் பிரவேசிக்கும் தினங்களாகும்.)

ஸ்லோகம் 22

பௌர்ணமாஸ்யையில் சந்திர பிம்பத்தில் ஶ்ரீ லலிதாம்பிகையை தியானம் செய்து, பஞ்சோபசாரங்களால் பூஜித்து, இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்ய வேண்டும்.

(பௌர்ணமாஸ்யா என்பது சுக்லபக்ஷத்திய கடைசி ராத்திரியைக் குறிக்கும்.

சந்திர பிம்பம் என்பது சந்திரனுடைய பூர்ணமான மண்டலம். அப்போது அதில் வளர்வு, குறைவு இருக்காது)

பஞ்ச உபசாரம் என்பது கந்த, புஷ்ப, தூப, தீப, நைவேத்தியங்களான ஐந்து உபசாரங்களாகும்.)

ஸ்லோகம் 23

அதனால் சகல ரோகங்களும் நசித்துப் போகின்றன. தீர்க்கமான ஆயுளும் பெறுவான். ”ஆயுஷ்கரம்” என்ற பெயருடைய இந்த ப்ரயோகமானது கல்பசூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்லோகம் 24

ஜுரத்தினால் பீடிக்கப்பட்டவனுடைய தலையில் கையை வைத்துக் கொண்டு இந்த சஹஸ்ரநாமத்தைச் சொன்னால், அந்த க்ஷணத்திலேயே ஜுரமும் (அதனாலுண்டான) தலைவலியும் போய்விடும்.

ஸ்லோகம் 25

சகல வியாதிகளையும் போக்குவதற்காக விபூதியைத் தொட்டுக் கொண்டு இதை (இந்த நாம சஹஸ்ரத்தை) கீர்த்தனம் செய்ய வேண்டும். அந்த பஸ்மத்தைத் தரிப்பதினாலேயே வியாதிகளெல்லாம் ஒரு க்ஷணத்தில் போய்விடும்.

ஸ்லோகம் 26

குடத்திலிருக்கும் ஜலத்தை இந்த நாம சஹஸ்ரத்தினால் மந்த்ரிதமாகச் செய்து, ‘ஹே, முனே! கிரகங்களில் வசப்பட்டவர்களின் மிது (அதை அபிஷேகம் செய்ய வேண்டும். அந்த க்ஷணத்திலேயே கிரகங்கள் நாசமடைந்து விடும்.

(மந்த்ரிதம் என்பது கும்பத்தின் வாயின் மேல் கையை வைத்துக் கொண்டு நாமங்களடங்கிய பாகத்தைச் செய்ய வேண்டும் என்பதாகும்.)

ஸ்லோகம் 27

ஶ்ரீ லலிதாம்பிகையை சுதா சமுத்ரத்தின் நடுவிலிருப்பவளாகத் தியானித்து எவனொருவன் இந்த நாம சஹஸ்ரத்தை கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய (அவனைப் பீடிக்கும்) விஷமானது நாசமடைகிறது.

ஸ்லோகம் 28

மலடாயிருப்பவர்களுக்கு (குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு) குழந்தை பிறப்பதற்காக இந்த நாம சஹஸ்ரத்தால் மந்த்ரிதமான வெண்ணெயைக் கொடுத்தால் கட்டாயம் புத்ர லாபம் ஏற்படும்.

ஸ்லோகம் 29

இரவில் (சாதகன் ஒருவன்) தனக்கு இஷ்டப்பட்ட பெண்ணை தேவியினுடைய பாசத்தினால் நன்கு கட்டப்பட்டவளாகவும், (தேவியினுடைய) அங்குசத்தினால் இழுக்கப்பட்டவளாகவும், தியானித்து இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்ய வேண்டும்.

ஸ்லோகம் 30

அப்போது, அந்தப் பெண்ணானவள் அந்தப்புரத்திலிருந்தாலும் தன்னுடைய உபாசகனுடைய அருகில் வருவாள்.

ஸ்லோகம் 31

ராஜாவை ஆகர்ஷணம் (தன்னிடம் இழுத்து வசப்படுத்துவது) செய்ய விரும்பினால் அந்த ராஜா இருக்குமிடத்தின் திக்கை நோக்கி ஶ்ரீ தேவியின் தியானத்தில் ஈடுபட்டு, மூன்று ராத்திரி இதை எவனாவது கீர்த்தனம் செய்வானேயாகில்,

ஸ்லோகம் 32

அந்த ராஜா இவனுக்கு வசப்பட்டு குதிரை மீதோ, யானை மீதோ ஏறிக்கொண்டு அருகில் வந்து தாசன் போல வணங்கி தன்னுடைய ராஜ்யத்தையும், பொக்கிஷத்தையும் கொடுத்தே தீருவான். இதில் சந்தேகமில்லை.

***                     தொடரும்

Leave a comment

Leave a Reply