விண்வெளியில் நடக்கும் எலி-பூனைச் சண்டை!l (Post.16,349)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,349

Date uploaded in London – 28 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-10-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

விண்வெளியில் நடக்கும் எலி-பூனைச் சண்டை!l                                  

ச. நாகராஜன்

வானத்தில் நடக்கும் வேடிக்கைகள் எத்தனையோ!

அதில் சமீபத்தில் நடந்த ஒரு எலி- பூனை சண்டை சுவாரசியமானது.

ரஷிய சாடலைட் ஒன்று  அமெரிக்க விண்கலம் ஒன்றை பூமியின் கீழ்ச்சுற்று ஓடுபாதையில் மிக அருகில் சென்று எட்டிப் பார்த்திருக்கிறது!

ரஷிய எலி எட்டிப் பார்க்க, அமெரிக்க பூனை முறைக்க அது ஓடி இருக்கிறது!

KOSMOS 2612   என்ற ரஷிய சாடலைட்    ICEYE – X36   என்ற அமெரிக்க வணிக விண்கலத்தின் அருகெ சென்று SYNTHETIC APERTURE RADAR – SAR எனப்படும் ராடாரை வைத்துப் பார்த்திருக்கிறது.

2026 அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் இது நடந்திருக்கிறது. இதை மார்கோ லாங்ப்ரோக் என்னும் சாடலைட்டுகள் ஓடுவதைக் கண்காணிக்கும் நிறுவனம் கண்டு பிடித்து அறிவித்திருக்கிறது.

இதை அந்த நிறுவனம் கவலை அளிக்கும் எலி-பூனைச் சண்டை விளையாட்டு என்று வர்ணித்திருக்கிறது.

இது உலகளாவிய விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இது வழக்கத்திற்கு மாறான ஒன்று; அத்துடன் இது மிகவும் நெருக்கமான அளவில் இருந்திருக்கிறது. அதாவது ஒரு கட்டத்தில் இரு கலங்களுக்கும் இடையே சில மீட்டர் தூரமே இருந்துள்ளது.

ரஷியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல விண்கலங்கள் விண்ணில் உலவுகின்றன.  ஜியோ ஸ்டேஷனரி ஆர்பிட் என்று சொல்லப்படும் பூமிக்கு மேலே 22236 அடி உயரத்தில் இவை சுற்றுகின்றன. இது உளவு பார்க்கச் சரியாக அமையும் தூரமாகும்.

KOSMOS 2612 பூமிக்குக் கீழ் சுற்றுப்பாதையில் சுற்றும் சாடலைட் என்பதால் தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவோ அமெரிக்காவோ இந்த கீழ் சுற்றுப்பாதையில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் ஒற்றுப் பார்க்கும் இந்த வேலையைச் செய்ததில்லை.

காஸ்மாஸ் 2543 என்ற ரஷியாவின் ராக்கெட்டானது 2020 ஜனவரியில் யு எஸ் ஏ 245 என்ற கலத்தில் அருகில் 30 கிலோமீட்டர் தூரத்தில் பறந்துள்ளது. பிறகு காஸ்மாஸ் 2558 என்ற ரஷிய ராக்கெட்டானது 2022 ஆகஸ்ட் மாதம் யு எஸ் ஏ 326 கலத்தின் அருகே 70 கிலோமீட்டர் தூரத்தில் பறந்துள்ளது. இப்படி பல முறைகள் நடந்து விட்டன.

ஆனால் காஸ்மாஸ் 2612 ராக்கெட்டானது எல்லாவற்றையும் மிஞ்சி மிக அருகில் அமெரிக்க கலத்தின் அருகே வந்திருக்கிறது.

முக்கியமான ஒரு விஷயம் –   ICEYE  சாடலைட்டுகள், ரஷியா 2022 பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுத்த, உக்ரேனைக் கண்காணித்துள்ளன.

உக்ரேனின் ராணுவத் துருப்பு நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை ரஷியா இதனால் பெற முடியும்.

இப்படி ரஷியா தனது ராக்கெட்டை அமெரிக்க விண்கலத்தின் அருகே செலுத்தியதால் அடையும் பலன் என்ன?

ஆறு மாத காலமாக ஒரு முன்னேற்றத்தையும் அடையாததால் ரஷியா பெருத்த ஏமாற்றத்தை அடைந்துள்ளது. உக்ரேனிடம் ராக்கெட் தொழில் நுட்பம் இல்லை. ஆனால் அவர்கள் ட்ரோன் விடுவதில் வல்லவர்கள்.

சீனாவும் அமெரிக்காவும் விண்வெளியில் சற்று முந்திக் கொண்டு சாதனைகளைச் செய்வதை ரஷியா சற்றும் விரும்பவில்லை. ஆகவே உக்ரேனுக்குத் தாங்கள் யார் என்பதைக் காட்ட ரஷியா இப்படி சாகஸம் செய்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த அதி நவீன நாடகம் உலகத்தினர் அனைவரையும் பாதிக்கும் ஒன்றாக அமைகிறது. ஆகவே அனைத்து நாடுகளும் தங்களது சாடலைட் செய்யும் பணிகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். எது எப்படி ஆனாலும் சாடலைட்டுகளை உலகினர் கண்களிலிருந்து மறைக்க முடியாது.

அனைவருக்கும் அது எங்கு எப்போது செல்கிறது என்பது தெரியும்.

ஆகவே இந்த எலி-பூனைச் சண்டை நாடகத்தை உடனடியாக ரஷியா நிறுத்த வேண்டும் என்று சாடலைட் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பூமியில் சண்டை போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; இப்படி விண்வெளியில் பூச்சாண்டி காட்டினால் அது எங்கு போய் முடியுமோ, தெரியாது.

விரைவில் இதற்கு ஒரு முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**

Leave a comment

Leave a Reply