கிஷ்கிந்தா காண்டம் – ஓர் ஆய்வு – 35 சுக்ரீவனின் சந்தேகம் (Post.16,357)

london swaminathan picture from 100 year old book.

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,357

Date uploaded in London –   30 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு – 35

(ஆர், சேஷாத்ரிநாதன்)     

சுக்ரீவனின் சந்தேகம்

-‘सखा सोच तोरे’ என்று சொல்வதன் மூலம் இராமன் சுக்ரீவனிடம் எனது புஜபலத்தின் மீது நம்பிக்கை வைத்து உனது கவலையை விடு. நான் உனக்கு எல்லா வகைகளிலும் உதவி  செய்வேன் என்று ஆறுதலளித்தான்.  இங்குதான் சுக்ரீவனுக்குச் சந்தேகம் வருகிறது. இவர் வாலியின் பலத்தை அறியாமல் அவனைக் கொல்வேன் என்று வாக்களித்துள்ளாரே? இவரை எப்படி நம்புவது என்று குழப்பத்தில் ஆழ்ந்தான்.

* कह सुग्रीव सुनहु रघुबीरा। बालि महाबल अति रनधीरा॥

दुंदुभि अस्थि ताल देखराए। बिनु प्रयास रघुनाथ ढहाए॥6॥

அதைக் கேட்ட சுக்ரீவன் “இரகுநாதரே! வாலியைச் சாதரணமாக எண்ணி விடாதீர்கள் அவன் மிகவும் வலிமை உடையவன்; களத்தில் நிலைத்து நிற்க்கக் கூடிய போர் வீரன்; “ என்றான். பிறகு அவன்  துந்துபி அரக்கனின் எலும்பு மலையையும், ஏழு மராமரங்களையும் இராமனுக்குக் காண்பித்து “இந்த மலையை ஒரே உதையால் சாய்த்துத் தள்ளக் கூடியவரும், இந்த ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால்  துளைக்க வல்லவரும் தான் வாலியை வெல்ல முடியும்” என்று கூறினான்.

வால்மீகி இராமாயணத்தில் வாலி துந்துபியின் உடலை ஒரு யோசனை தூரம் தூக்கி எறிந்தான். िक्षेप वेगवान्वाली वेगेनेकेन योजनम्‌। என்றும் ஆனால் இப்போது அவனது எலும்புக் கூட்டைக் கூட யாராலும் தூக்க முடியாது என்றும் அதுபோல அங்கிருந்த ஏழு மரங்களை உலுக்கி அவைகளை இலைகள் அற்றவையாக ஆக்கிவிடுவான் என்றும் அந்த எலும்புக் கூட்டை அசைத்தாலோ அந்த மரங்களில் ஏதாவது ஒன்றையாவது பாணத்தினால் துளைத்தால் தங்களால் வாலியைக் கொல்ல முடியும் என்று நான் நம்புவேன் என்றான்,

ஆத்யாத்ம இராமாயணத்தில் सुग्रीवो5प्याह राजेन्द्र वाली बलवतां बली। कथं हनिष्यति भवान्देवैरपि दुरासदम्‌॥’ (अध्यात्म० १। ६०) என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது சுக்ரீவன் கேட்கிறான் “இராகவா! ूरश्च शूरमानी च प्रख्यातबलपौरुष: । बलवान्वानरो वाली संयुगेष्वपराजित: ॥’ दृश्यन्ते चास्य कर्माणि दुष्कराणि सुरैरपि॥’ வாலி எல்லோரையும் விட சிறந்த பலசாலி, தேவர்கள் கூட அவனுடன் மோதுவதற்குத் தயங்குவாரகள். தாங்கள் எப்படி அவனை வெல்வீர்கள்?

சுக்ரீவன் இராமனுக்கு வைத்த தேர்வு

இலக்ஷ்மணன் சுக்ரீவனிடம் கேட்கிறான். “எதைச் செய்தால் உங்களுக்கு இராமனின் மீது நம்பிக்கை வரும்  என்று. சுக்ரீவன் உடனே துந்துபியின் எலும்புக் கூட்டைக் காட்டி இந்த எலும்புக் கூட்டை காலால் இரு நூறு விற் கடை தூரம் ஏறிய வேண்டும் स्मिन्कर्मणि निर्व॑त्ते श्रद्ध्या वालिनो वधम्‌॥ हतस्य महिषस्यास्थि पादेनैकेन लक्ष्मण। उद्यम्य प्रक्षिपेच्चापि तरसा द्वे धनु:शते॥’  என்கிறான். ஆனால் துளசிதாசர் இது பற்றி விவரங்கள் ஏதும் எழுதவில்லை. துளசிதாசர் बिनु प्रयास என்ற பதத்தைப் போடுகிறார். அதாவது இராமன் எந்தவித சிரமமுமில்லாமல் தனது கால் கட்டை விரலால் பத்து யோசனை தூரம் துந்துபியின் எலும்புக்கூட்டை தூக்கி எறிந்தார் என்று சொல்கிறார் துளசிதாசர்.

वम् उक्त्वा तु सुग्रीवम् सान्त्वयन् लक्ष्मणाग्रजः |

राघवो दुन्दुभेः कायम् पाद अंगुष्ठेन लीलया || ४-११-८४

तोलयित्वा महाबाहुः चिक्षेप दश योजनम् |

असुरस्य तनुम् शुष्कम् पादांगुष्टेन वीर्यवान् ||

ஆனால் அப்படியும் சுக்ரீவனுக்கு நம்பிக்கை வரவில்லை .

क्षिप्तम् दृष्ट्वा ततः कायम् सुग्रीवः पुनर् अब्रवीत् |

लक्ष्मणस्य अग्रतो रामम् तपन्तम् इव भास्करम्

हरीणाम् अग्रतो वीरम् इदम् वचनम् अर्थवत् || ४-११-८६

आर्द्रः स मांसः प्रत्यग्रः क्षिप्तः कायः पुरा सखे |

परिश्रान्तेन मत्तेन भ्राता मे वालिना तदा|| ४-११-८७

लघुः संप्रति निर्मांसः तृण भूतः च राघव |

क्षिप्ता एवम् प्रहर्षेण भवता रघुनंदन || ४-११-८८

न अत्र शक्यम् बलम् ज्ञातुम् तव वा तस्य वा अधिकम् |

आर्द्रम् शुष्कम् इति हि एतत् सुमहद् राघव अन्तरम् || ४-११-८९

स एव संशयः तात तव तस्य च यद् बलम् |

सालम् एकम् विनिर् भिद्या भवेत् व्यक्तिः बलाबले || ४-११-९०

அவன் இராமனிடம் “ சண்டையில் வாலி களைத்துப் போயிருந்தான். அப்போது அந்த எலும்புகூட்டில் மாமிசம் இருந்தது. அதனால் எடை அதிகமாக இருந்தது. ஆனால் தாங்கள் தூக்கி எறிந்தது மாமிசமற்ற வெறும் எலும்புக்கூடு. இதைவைத்து வாலியைவிட தாங்கள் பலசாலி என்று எவ்வாறு கருதுவது? ஆதலால் இந்தச் சால மரங்களில் ஒன்றையாவது தங்களது பாணத்தினால் துளைத்தால் தாங்கள் வாலியை விட பலசாலி என்று ஏற்றுக் கொள்வேன்” என்றான்.

இராமன் எந்தவித சிரமுமின்றித்  தனது கால் கட்டை விரலால் அவ்வெலும்பு மலையைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே பாணத்தால் ஏழு மராமரங்களையும் துளைத்தெடுத்தான். அந்த பாணம் மரங்களைத் துளைத்து எல்லா உலகங்களுக்கும் சென்று மீண்டும் இராமனின் அம்புறாத் துணிக்கு வந்து சேர்ந்தது. இங்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

வாலி ஒரு முறை வனத்திற்குச் சென்றபோது அங்கு சால மரத்தில் பழுத்திருந்த ஏழு பழங்களைப் பறித்துக்  குளத்தின் கரையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். குளித்து விட்டு வெளி வந்தபோது அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிடச் செய்தது. ஒரு கொடிய பாம்பு அந்த பழங்களின் மீது அமர்ந்து அவற்றைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வாலி கோபம் கொண்டு நீ மரங்களாகக் கடவாய். பின்னொரு நாள் ஒருவன் ஒரே பணத்தால் உன்னைச் சிதைப்பான் என்று சபித்தான். பாம்பின் தந்தையான தக்ஷன் சீற்றம் கொண்டு எவன் ஒரே பாணத்தால் அந்த மரத்தைச்  சிதைக்கிரானோ அந்த பணத்தாலாயே நீ மரிப்பாய் என்று சபித்தது.

மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.. அதாவது சால மரங்களுக்குப் பதில் ஏழு தென்னை மரங்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது வாலி சந்தோஷப்படும் சமயம் தென்னை மரங்களை உலுக்குவது வழக்கமாம். அப்போது அந்த மரத்து  காய்கள் கீழே இறந்து  கிடக்கும் துந்துபியின் உடல் மீது வேகமாக வந்து விழுமாம். அப்படி விழுவதால் துந்துபியின் ஆன்மாவுக்கு கோபம் வந்தது, இதைக் கண்ட வனதேவதை எவனொருவன் தனது ஒரே பாணத்தால் இந்த ஏழு மரங்களைத் துளைக்கிரானோ அவனது ஒரே பாணத்தால் வாலி கொல்லப்படுவான் என்று சபித்தது.

இராமனைப் புகழும் சுக்ரீவன்

देखि अमित बल बाढ़ी प्रीती। बालि बधब इन्ह भइ परतीती॥

இராமனின் வலிமையைக் கண்டதும் சுக்ரீவனின் மனதில்  இராமனிடம் மேலும் அன்பு அதிகரித்தது. அவர் வாலியை நிச்சயம் வதம் செய்து விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குத் தோன்றியது.

இங்கு देखि अमित बल” என்கிற பதப் பிரயோகம் செய்கிறார் துளசிதாசர்.. இலக்ஷ்மணன் தாடகை, கர தூஷண, மாரீசன், விராதன் கபந்தன் ஆகியோர் இராமனின் மூலமாக கொல்லப்பட்ட வீர வரலாற்றை சொல்லக் கேட்டிருக்கிறான்  लछिगमन रामचारित सब भ्राषा। பிறகு இராமன் தனது வாயால் தனது பலத்தைப் பற்றிச் சொல்வதையும் கேட்டுள்ளான் சுக்ரீவன். सुनु सुग्रीव मारिहों बालिहि एकाहि बान। ब्रह्म रुद्र सरनागत गए न उबारिहि प्रान. ஆனாலும் அவன் மனதில் ஒரு திருப்தி ஏற்படவில்லை. ஆனால் எப்பொழுது இராமன் துந்துபியின் சடலத்தை பத்து யோசனை தூரம், கால் கட்டை விரலால்  எந்தவித சிரமும் இல்லாமல் வீசினானோ, எப்பொழுது ஏழு சால மரங்களையும் தனது ஒரே பாணத்தால் துளைத்தானோ, அப்பொழுது சுக்ரீவன் இராமனின் பலத்தை நோக்கினான்.   அவன் இராமனைப் புகழ்ந்து பேசுவதை வால்மீகி இவ்வாறு தெரிவிக்கிறார்.

स इन्द्रान् अपि सुरान् सर्वाम् त्वम् बाणैः पुरुषर्षभ |

समर्थः समरे हन्तुम् किम् पुनर् वालिनम् प्रभो || ४-१२-८

येन सप्त महा साला गिरिर् भूमिः च दारिताः |

बाणेन एकेन काकुत्स्थ स्थाता ते को रण अग्रतः || ४-१२-९

अद्य मे विगतः शोकः प्रीतिर् अद्य परा मम |

सुहृदम् त्वाम् समासाद्य महेन्द्र वरुणोपमम् || ४-१२-१०

இதற்கு முன் வாலியை மகா பலசாலி बालि महाबल अति रनधीरा। என்று சொன்னவன் இப்பொழுது இராமனை அதிபலசாலி अमित बल என்று அழைக்கிறான். இப்பொழுது இராமன் மீது இன்னும் மரியாதையும் அன்பும் ஏற்படுகிறது.

बार-बार नावइ पद सीसा। प्रभुहि जानि मन हरष कपीसा॥7॥

उपजा ग्यान बचन तब बोला। नाथ कृपाँ मन भयउ अलोला॥

அவன் மீண்டும் மீண்டும் இராமனது திருவடிகளை வணங்கினான். பகவானை அடையாளம் கண்டு கொண்ட சுக்ரீவனின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது. “ஐயனே! எனக்கு அறிவு பிறந்தது. தங்களின் கிருபையால் என் மனம் ஒரு நிலைக்கு வந்தது.” என்றான்.  இறைவனை அடையாளம் கண்டுகொண்ட பிறகு அவனை மீண்டும் மீண்டும் வணங்குவது சிறப்பானது. பரவசத்தின் உச்ச நிலையைக் காட்டுகிறது.

**

Leave a comment

Leave a Reply