
WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 16,378
Date uploaded in London – 6 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு – 36
(ஆர், சேஷாத்ரிநாதன்)
वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते।।11.39।।
இந்த பகவத்கீதையின் 11ஆம் அதிகாரம், “விஸ்வரூப தரிசன யோகம்” எனப்படும். இதில் அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணரின் ப்ரபஞ்ச வடிவத்தை (விஸ்வரூபம்) காணும் தருணத்தில், அவருடைய எல்லையற்ற தெய்வீகத் தன்மையை உணர்ந்து, ஆழ்ந்த பக்தியுடன் வணங்குகிறார்.
அர்ஜுனன் கூறுகிறான்: “நீயே வாயுவாகவும், யமனாகவும், அக்கினியாகவும், வருணனாகவும், சந்திரனாகவும், பிரஜாபதியாகவும், பிரம்மாவாகவும் இருக்கிறாய். உன்னை ஆயிரமடங்காக வணங்குகிறேன். மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.”
வாயுவாய் வீசுகிறாய்,
யமனாய் நீக்குகிறாய்,
அக்கினியாய் அழிக்கிறாய்,
வருணனாய் அருள்கிறாய்!
சந்திரனாய் சாந்தமாய்,
பிரஜாபதியாகப் படைக்கிறாய்,
பிதாமகராய் பூர்வம் நீ,
பரம்பொருளாய் பூரணமாய்!
ஓ! பரமா, நீயே அனைத்தும்,
அருவுருவாய், எல்லையில்லா ஆனந்தம்!
ஆயிரமடங்காக வணக்கம் உமக்கு,
மீண்டும் மீண்டும் வணக்கம் உமக்கு!
சுக்ரீவன் இப்போது மனம், வாக்கு, செயல் மூலமாகச் சரணடைந்து விட்டான். காரணம் அவன் இராமனைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டான். ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவர் மீது நமக்கு எந்தவித உணர்வுகளும் உண்டாவதில்லை.
जानें बिनु न होइ परतीती । बिनु परतीति होइ नहि प्रीती ।।
प्रीति बिना नहि भगति दृढ़ाई । जिमि खगपति जल कै चिकनाई।।
ஆனால் இராமனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்தவுடன் முதலில் நம்பிக்கை பிறந்தது; அது அன்பாயிற்று; பீறகு அது பக்தியாயிற்று
சுக்ரீவன் இராமனின் திருவடிகளில் விழுந்து மீண்டும் வாங்குவதன் காரணம் என்ன? இதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் காரணம் அவன் இராமனின் பலத்தை அறிய அவரை இரு தேர்வுகள் எழுதச் சொன்னதுதான். இராமனின் பலம் புரிந்த பிறகு தனது தவறை உணர்த்ததால் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான் என உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தனது நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அவன் விழுந்து வணங்கினான் என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பிரபுவை அறிந்த பின் சுக்ரீவனுக்கு ஞானம் வந்தது அஞ்ஞானம் மறைந்தது. . பிரபுவைப் பற்றித் தெரிந்து கொள்வதுதானே ஞானம். பிரபுவின் மீது அன்பு ஏற்பட்டபோது பேச்சு வரவில்லை. ஞானம் வந்த பிறகு சுக்ரீவனுக்குத் தைரியம் வந்தது. அதனால் சொல்கிறான் नाथ कृपा मन भयउ अलोला।’அவன் இராமனிடம் சொல்கிறான் अब प्रभु कृपा करहु एहि भाँति। सब तजि भजनु करौं दिन राती॥ “நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எப்போதும் உனது நினைவிலேயே இருக்கவேண்டும். உங்கள் புகழே பாடவேண்டும் அதற்கு தாங்கள் அருள்புரிய வேண்டும்” என்று சொல்கிறான்.
सुख संपति परिवार बड़ाई। सब परिहरि करिहउँ सेवकाई॥8॥
* ए सब राम भगति के बाधक। कहहिं संत तव पद अवराधक॥
सत्रु मित्र सुख, दुख जग माहीं। मायाकृत परमारथ नाहीं॥9॥
“சுகம், செல்வம், குடும்பம், புகழ், பெருமை இவையனைத்தையும் விட்டுவிட்டுத் தங்களுக்குத் தொண்டு செய்யவே விரும்புகிறேன். ஏனெனில் இந்தச் சொத்து சுகங்களெல்லாம் இராம பக்திக்கு இடையூறானவை என்று தங்களின் திருவடிகளை ஆராதிக்கும் சாதுக்கள் கூறுகின்றனர். உலகில் உள்ள நண்பர்கள் – எதிரிகள் – இன்பங்கள் – துன்பங்கள் ஆகிய இவை அனைத்துமே மாயையினால் உருவாக்கப்பட்டவை . உண்மையில் இவைகள் பரலோக இன்பத்தை அளிக்கக் கூடியவை அல்ல”. இது பகவத் கீதையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது
ईश्वर: सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥ ६१ ॥
The Supreme Lord is situated in everyone’s heart, O Arjuna, and is directing the wanderings of all living entities, who are seated as on a machine, made of the material energy.
Arjuna was not the supreme knower, and his decision to fight or not to fight was confined to his limited discretion. Lord Kṛṣṇa instructed that the individual is not all in all. The Supreme Personality of Godhead, or He Himself, Kṛṣṇa, as the localized Supersoul, sits in the heart directing the living being. After changing bodies, the living entity forgets his past deeds, but the Supersoul, as the knower of the past, present and future, remains the witness of all his activities. Therefore all the activities of living entities are directed by this Supersoul. The living entity gets what he deserves and is carried by the material body, which is created in the material energy under the direction of the Supersoul. As soon as a living entity is placed in a particular type of body, he has to work under the spell of that bodily situation. A person seated in a high-speed motorcar goes faster than one seated in a slower car, though the living entities, the drivers, may be the same. Similarly, by the order of the Supreme Soul, material nature fashions a particular type of body to a particular type of living entity so that he may work according to his past desires. The living entity is not independent. One should not think himself independent of the Supreme Personality of Godhead. The individual is always under the Lord’s control. Therefore one’s duty is to surrender
ஈஸ்வரன் உள்ளத்தில் உறைபவன்,
எல்லா உயிர்களும் அவனது விளையாட்டுப் பொம்மைகள்!
மாயையின் யந்திரம் சுழல்கின்றது,
கர்மத்தின் கயிறுகள் கட்டுகின்றது!
வாயுவாய் ஓடுகிறான், நம்முள் நுழைகிறான்,
வாசனையாய் நினைவாய் நம்மை நெகிழ்கிறான்,
உயிரின் உள்ளே நம் ஊசலாட்டம்,
அவன் இசைதான் நம் நடனமாடும்!
மாயையின் மேடை, கர்மத்தின் நாடகம்,
உடல் எனும் யந்திரம் — ஆன்மா ஓர் பயணம்,
நாம் நினைப்பது நாமல்ல, நம்முள் ஓர் இயக்கம்,
அவன் அருள்தான் நம் உணர்வின் ஒளிக்கதிர்!
அர்ஜுனா கேள்! நீ செய்பவை எல்லாம்,
அவனது ஆணையின் ஓர் அலைபாய்ச்சி!
நீயும் நானும் நம்மில் இல்லையடி,
அவன் தான் நம்மில் விளையாடுகிறான்!
ஈஸ்வரன் உள்ளத்தில் உறைபவன்,
எல்லா உயிர்களும் அவன் விளையாட்டுப் பொம்மைகள்!
மாயையின் யந்திரம் சுழல்கின்றது,
கர்மத்தின் கயிறுகள் கட்டுகின்றது!
***