நான் விமானத்தில் பார்த்த மூன்று+1 திரைப்படங்கள்; பட விமர்சனம் அல்ல-Part 2 (Part.16,405)

Written by London Swaminathan

Post No. 16,405

Date uploaded in London – 17 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1.பார்க்கிங்-(Also பிரிட்டனில் நடந்த பார்க்கிங் படுகொலைகள்)

2.தாய்க்கிழவி

3.சர்வம் மாயா

4.பேட் ஆப்பிள் BAD APPLES

Part 2

‘தாய்க்கிழவி’,

படம் பார்த்தவுடன் தண்ணீர்  தண்ணீர் திரைப்படம் நினைவுக்கு வந்தது ; கிராமீய சூழ்நிலை ; வழக்கமான இந்திய திரைப்பட மசாலா இல்லை ; அதாவது காதல், வில்லனுடன் மோதல்; சண்டைக் காட்சிகள் இல்லை.

ஆனால் நான் எழுத வந்தது பட விமர்சனம் அல்ல. மேக் அப் இல்லாமல் கிராம மக்களை அப்படியே காட்டியது ஒரு சிறப்பு அம்சம். கிராம மக்களிடையேயுள்ள தெய்வ நம்பிக்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

உறவினரில் ஒவ்வொருவரும் தனக்கு சொத்து- சுகத்தில் ஒரு பங்கு சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப்பிடிப்பதோடு கிராம தேவதைக்கு வேண்டுகிறார்கள் !

நம்மில் பெரும்பாலோர் இதைத்தான் செய்கிறோம். நமக்கு பணம் வியாதியற்ற உடல்நிலை  வேண்டும் என்றோ பெரிய பதவி வேண்டும் என்றோதான் வேண்டுகிறோம் ; ஆதிசங்கரர் சொன்னது போல, மாணிக்க வாசகர் வேண்டியது போல,

மாயப்பிறப்பறு க்கும் , மோட்சம் வேண்டும் என்று வேண்டுவதில்லை . அதைவிடக் குறிப்பிடத்  தக்க விஷயம் கடவுளுக்கு ஏதேனும் ‘சம்திங்’ கொடுத்து சில கோரிக்கைகளை வைக்கிறோம் . சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மக்களைப் பொருத்த வரையில் அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்கத்தான்  கடவுள் !

பாரதியார் போல

“நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி, சிவசக்தி; – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ, – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி!- நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?” – என்று வேண்டுவோர் பல  கோடிப் பெயர்களில் பத்துப் பேர்தான் என்றால் மிகையில்லை.

“அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியர சாணை,

பொழுதெலாம் நினதுபே ரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை யருளாய்

குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!” – என்று பாரதியார் போல தினமும் பிரார்த்திக்க, பள்ளிக்கூடத்திலேயே கற்பிக்க வேண்டும்.

‘தாய்க்கிழவி’, 2026-ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.

• இயக்கம்: சிவகுமார் முருகேசன் (அறிமுக இயக்குநர்)

• தயாரிப்பு: சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் / பேஷன் ஸ்டூڈیوஸ்

• நடிப்பு: ராதிகா சரத்குமார் (பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில்), அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன், முனீஸ்காந்த் மற்றும் பலர்

• இசை: நிவாஸ் கே. பிரசன்னா

• வெளியீட்டு தேதி: பிப்ரவரி 27, 2026

படத்தின் கதை சுருக்கம்:

மதுரை மாவட்டம் விக்ரமங்கலம் / உசிலம்பட்டி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், வட்டிக்கு பணம் கொடுக்கும் கறாரான மற்றும் சுதந்திரமான குணாதிசயம் கொண்ட 75 வயது மூதாட்டியான ‘பவுனுத்தாயி’யை மையமாக வைத்து கதை நகர்கிறது. அவர் படுக்கையில் விழும் சூழல் ஏற்படும்போது, அவரிடமிருந்து சொத்து அல்லது பணத்திற்காக அவரிடமிருந்து பிரிந்து சென்ற மகன்கள் மீண்டும் கூடும்போது நடக்கும் நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான சம்பவங்களே இப்படத்தின் கதையாகும்.

****

சர்வம் மாயா

நான் விமானத்தில் பார்த்த இன்னொரு படம் மலையாள மொழி திரைப்படம் சர்வம் மாயா. நான் காதுகளில் இயர்போன் வைத்துக் கேட்கும் பழக்கத்தை வெறுப்பதால் எல்லா திரைப்படங்களையும் ஆங்கில மொழி சப் டைட்டில் மூலம்தான் பார்த்தேன் . இந்தத் திரைப்படம் மலையாள மக்களிடையே இன்னும் பேய், பிசாசு, ஆவி பற்றி மூட நமபிக்கை இருப்பதை எடுத்துக் காட்டுகிறது . அந்தக் காலத்திலேயே  சுவாமி விவேகானந்தர் மலையாள மக்களின் மூட நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடி இருக்கிறார் . எல்லா வகை நோய்களைப் போலவே மன நோயும் ஒரு வகை நோய்தான் ; ஆனால் மலையாளிகளோ எல்லா மன நோய்களையும் பில்லி- சூனியம்- பேய்- பிசாசு பெயரில் ஏற்றி வைத்து விடுகிறார்கள் . இந்த சர்வம் மாயா திரைப்படத்தில் மாயா என்பது மாயை என்றும் மாயா மாத்யூ என்ற டீன் ஏஜ் கேர்ள் பெயரிலும் சிலேடையாகப் பயன்படுகிறது. நம்பூதிரிப் பிராமணனுக்கு தேவையில்லாமல் கிறிஸ்தவ கேர்ள் பிரண்டை உண்டாக்குவதும் இன்றைய மலையாள கிறிஸ்தவ ஆதிக்கத்தைக் காட்டுகிறது. படம் மிகவும் சுமார்தான்.

***

BAD APPLES

நம்ப முடியாத விஷயங்கள் அதிகம் ! ஒரு பொல்லாத மாணவனை எப்படி நீண்ட காலத்துக்கு ஆசிரியை தனது வீட்டில் சிறை வைக்க முடியும் ? அதை கிளாஸ்மேட் அறிந்தும் எப்படி போலீசிடமோ உறவினரிடமோ சொல்லாமல் இருந்தாள்? மாணவனுடைய தந்தை என் உதாசீனமாக இருந்து தனது பிள்ளையை மறந்தார்? எல்லாவற்றுக்கும் மேலாக பல மாதங்களுக்கு வீட்டின் பேஸ்மெண்டில் சிறை இருந்த பையன் எலெக்ட்ரிக் டூத்  பிரஷ் மூலம் எப்படி சுரங்கம் தோண்டித் தப்பிக்கிறான் ? எல்லாம் புதிர்கள்தான் ! தமிழ்த் திரைப்படம் போலவே ஆங்கிலத்திலும் காதில் பூ சுற்றுகிறார்கள்!

Plot

A primary school teacher accidentally locks her most disruptive student in her home. Desperate to undo it, she hesitates when her class begins to flourish in the child’s absence, landing her in an impossible predicament.

• The Premise: Maria (played by Saoirse Ronan) is a struggling primary school teacher trying to manage a chaotic class of 10-year-olds.

• The Incident: Pushed to her limit by a relentlessly disruptive and unruly student named Danny, Maria makes a series of poor choices that results in her accidentally locking the boy in her home.

• The Dilemma: Just as she plans to fix the situation, the rest of her classroom begins to flourish in Danny’s absence. With parents and school staff thrilled by the sudden improvement, Maria finds herself trapped in a twisted moral trap. –SUBHAM—

TAGS- நான் விமானத்தில், பார்த்த, மூன்று+1 , திரைப்படங்கள், படவிமர்சனம், அல்ல, சர்வம் மாயா , தாய் கிழவி, BAD APPLES

Leave a comment

Leave a Reply