
RAMAYANA FILM REVIEW FROM FACEBOOK -FACTS AND FAKES
Friday 13 November 2026 at 01:17
POSTED BY LONDON SWAMINATHAN IN SYDNEY, AUSTRALIA ON 21 NOVEMBER 2026

இன்று ராமாயணம் படம் பார்த்தேன் மிக மிக மோசமாக எடுத்திருந்தார்கள் .
இன்று பார்த்த ராமாயணம் ராமாயணமே கிடையாது.
நம் பதிவுகளுக்கும் இந்து மதத்திற்குள்ளும் ராமனை கொண்டாடுவதற்கும் வராதவர்கள் எல்லாம் இந்த படத்தைக் கொண்டாடுவதில் இருந்தே இந்த படம் எவ்வளவு தப்பாக எடுத்து இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது நம் மக்கள் தெளிவாக இருந்தால் தேவலாம்.
படத்தை ஒழுங்காக எடுத்திருந்தால் முதலில் பாராட்டுவது நாம் தான். அதனால் பக்தர்கள் என்று நம்மை கட்டுப்படுத்திக்கொண்டு ராமாயணம் என்று சொல்லி எந்த படத்தை எடுத்தாலும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?
இந்த தவறான ராமாயணம் சினிமாவில் :-


தசரதன் தவறாக அரசாண்டதால் ராமர் சிறுவயதில் அவரை கேள்வி கேட்கிறார் :- “நாம் மட்டும் நன்றாக இருக்கிறோம் மக்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்”, என்று. தசரதர் ஆண்டபொழுதும் அவருடைய முன்னோர்கள் காலம் தொடங்கி மக்கள் அனைவரும் நிம்மதியாகத் தான் வாழ்ந்திருந்தனர் ராமராஜ்யத்தில் கேட்கவே வேண்டாம். ஒரு குறையும் இல்லை.
இதே இராவண ராஜ்யத்தில் ராவணன் ராக்ஷஸர்களை அசுரர்கள் என்று பேசுகிறான் மேலும் அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள் தான் அவர்கள் அடிமைத்தளைகளை நீக்கப் போகிறேன் என்கிறான் இது எல்லாமே பொய்.
உண்மையான ராமாயணத்தில் இப்படி எல்லாம் கிடையாது
ராமர் யாரை அடித்தாலும் மன்னிப்பு கேட்கிறார் . வில்லிடம் கூட மன்னிப்பு கேட்கிறார். அந்த வில்லைக் கும்பிடுகிறார்; எல்லாமே தப்பு தப்பாக எடுத்து இருக்கிறார்கள் இல்லாத சம்பவங்கள்.
படத்தில் ராமர் சீதை கிடையவே கிடையாது. ரந்தீர் கபூர் சாய் பல்லவி தான் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் ராவணனை ஹீரோவாக்க கஷ்டப்பட்டு முயற்சி செய்திருக்கிறார்கள்.
“ராவணன் செய்தது எதுவுமே தவறு இல்லை . எல்லாமே அவனுடைய சூழ்நிலை அசுரர்கள் அடிமையாக இருந்தார்கள் அவர்கள் அடிமைத்தளையை நீக்கினான் அவர்கள் வீட்டிலும் பொன்னும் பொருளும் கொட்டிக் கிடக்கும் என்று சொன்னான்”, என்று மொத்தம் பொய்யாகவே எடுத்திருந்தார்கள் சினிமாவில்
ராம ராஜ்யத்தில் கஷ்டப்பட்டவர் எவருமே கிடையாது என்பது தான் உண்மை
ராவண ராஜ்யத்தில் சுகப்பட்டவர் யாரும் கிடையாது என்பதும் உண்மை.
அப்படியே உல்டாவாக ராவண ராஜ்யத்தில் அசுரர்கள் எல்லோரும் அடிமைத்தளை நீங்கி நிம்மதி அடைந்தது போல காட்டுவது பைத்தியக்காரத்தனம்.
ராட்சதர்கள் சண்டை போட்டால் ராமன் சீதை லட்சுமணன் எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ராமர் உண்மையில் அப்படி ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை யாருடைய முதுகுக்குப் பின்னாலும் கத்தியால் குத்தவும் இல்லை அம்பு போடவும் இல்லை எந்த அம்பு போட்டாலும் முகத்துக்கு நேரே நேரடியாகத் தான் போட்டார். சீதைக்கு காவலாக லட்சுமணனை குகையில் நிறுத்தி தான் ஒருவனாகவே ராமர் கரன் த்ரிசிரஸ் தூஷணன் மற்றும் பல்லாயிரக்கணக்கான ராட்சதர்களை வதம் செய்தார் அம்பும் வில்லும் கொண்டு தான் வதம் செய்தார் தவிர கத்தியைக் கொண்டு செல்லவே இல்லை அந்த யுத்தத்தில் எங்கு காணினும் ராமர் காணப்பட்டார். அந்த யுத்தம் ஆன பிறகு சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்து ராமனை அணைத்தாள். அந்த முக்யமான ஸ்லோகத்தை இன்றும் பெருமாள் கோவில்களில் மந்த்ர புஷ்பத்தில் சொல்லி வருகிறார்கள் அர்ச்சகர்கள்
அந்த சுலோகம்:-
தம் த்ருஷ்ட்வா ஶத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே
“தம் த்ருஷ்ட்வா சத்ரு” என்பது ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் (ஆரண்ய காண்டம் 3.30.39–40) இடம்பெற்றுள்ள மிகவும் புகழ்பெற்ற ஸ்லோகத்தின் தொடக்கமாகும்.
முழுமையான ஸ்லோகம்
பொருள் மற்றும் பின்னணி
• நேரடிப் பொருள். “எதிரிகளை அழித்தவரும், மகரிஷிகளுக்கு பேரின்பத்தை அளிப்பவருமான தன் கணவரைக் கண்ட வைதேகி (சீதா தேவி), மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் தழுவிக்கொண்டாள்” என்பது இதன் பொருளாகும்.
• நிகழ்வுப் பின்னணி. தண்டகாரண்யத்தில் முனிவர்களுக்குத் துன்பம் விளைவித்த கரன், தூஷணன் உள்ளிட்ட 14,000 அரக்கர்களை ஸ்ரீராமர் தனியொருவராக நின்று வதம் செய்தார். போர்க்களத்திலிருந்து வெற்றியுடன் திரும்பிய ராமரைக் கண்ட சீதா தேவி, மிகுந்த பெருமிதத்துடனும் அன்புடனும் அவரை ஆரத்தழுவிய தருணத்தை வால்மீகி முனிவர் இவ்வாறு வர்ணிக்கிறார்.
Padma Rajagopalan :- இராம + அயணம் = இராமாயணம்
அயணம் என்றால் சமிஸ்கிறத மொழியில் பயணம் என்று பொருள்
இராமனின் வாழ்கை பயணம் – ஜனனம் தொடங்கி பால்யம் திருமணம் , அயோத்தியில் இளவரசனாக, தந்தை வாக்கை காப்பாற்ற ஆரண்ய (வனத்தில்) மரவுரி தரித்து வாழ்ந்து, மனைவியை இராவணன் கவர்ந்த பின் கிஷ்கிந்தையில் வானர சேனை சுக்கிரவன் உதவியுடன் சீதையை தேடி,
சுந்தரனான அனுமன் அவள் இராவணனால் இலங்கை அசோக வனத்தில் சிறை இருப்பதை கண்டு வந்தவுடன்
யுத்தத்துக்கு தயாராகி தெற்கு நோக்கி வந்து கடற்க்கரையில் கடல் மேல் இராம சேது அமைத்து போரில் இராவணனை வென்று அவன் ராஜ்யத்தை இராவணன் தம்பிக்கே திரும்ப கொடுத்து,
சீதையை மீட்டு இலக்குவனுடன் புஷ்பக விமானம் ஏறி ஆகாய மார்க்கமாக திரும்ப வந்து பரதன் உயிர் காத்து
மீண்டும் அயோத்தி வந்து முடி சுடிக் கொண்ட காவியம் தான் இராமாயணம்
இதில் இராமன் பயணம் பல இடங்களை நடந்தே கடந்த பாதை
பரிமாண வளர்ச்சிப்படி பார்த்தாலும் ஒரு மனிதன் நீதி தர்மங்களுக்கு கட்டுபட்டு ராஜ்யத்தை துறந்து காடு சென்று தவசி போல் வாழ்ந்து
மனைவியை இழந்து மீண்டும் தேடி மீட்டு திரும்ப நாடு வந்து அரியணையில் அமர்ந்து அயோத்தியை ஆண்ட பயணம்
இதில் ஒரு மணி நேரம் இராவணனை காட்ட வேண்டும் என்றால் இராவண காவியம் என்று பெயர் வைத்து இருக்க வேண்டும்.
முடிவு:- இதற்கெல்லாம் ஒரே தீர்வு உண்மையான வால்மீகி இராமாயணம் அனைவரும் வாசிப்பது தான்


–SUBHAM—
TAGS- இராமாயணம், FILM REVIEW,ராமாயணம் படம், FACTS AND FAKES