த்ரிபுரோபநிஷத் விளக்கும் ஶ்ரீ த்ரிபுரா தேவி மஹிமை! (Post.16,418)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,418

Date uploaded in London –23 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

த்ரிபுரோபநிஷத் விளக்கும் ஶ்ரீ த்ரிபுரா தேவி மஹிமை!

ச. நாகராஜன்

108 முக்கிய உபநிடதங்களில் ஒன்றான த்ரிபுரோபநிஷத் ஶ்ரீ த்ரிபுரா தேவி பற்றிய பல ரகசியங்களை விளக்குகிறது.

இதை நல்ல சத்குரு வாயிலாகவே முற்றிலும் உணர்தல் வேண்டும்.

என்றாலும் இதில் கூறியுள்ள விஷயங்களை மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.

தமிழில் விரிவாக அர்த்தத்தைப் படிக்க விரும்புபவர்கள். ஶ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை, 600004 வெளியிட்டுள்ள 108 உபநிஷத் சாரம் என்ற நூலை வாங்கிப் படிக்கலாம். (இது மூன்று பாகங்கள் கொண்டது. மூன்றாம் பாகத்தில் த்ரிபுரோபநிஷத்தின் விளக்கத்தைக் காணலாம்.)

இதன் உரையாசிரியர் ஶ்ரீ அண்ணா ஆவார்.

த்ரிபுரா தேவியின் மஹோபநிஷத்தாகிய இது ஓங்காரப் பொருளை விளக்கும் மகா வாக்கியங்களால் சுட்டிக் காட்டப்படும் நிலையையே போற்றுகிறது.

இதுவே உயர்ந்த ரிக்வேத ஸாரம், யஜூர்வேத ஸாரம், ஸாமவேத ஸாரம், அதர்வ வேத ஸாரம், மற்ற எல்லா வித்தைகளின் ஸாரமும் ஆகும்.

இந்த தேவியானவள் மூப்பற்றவள்.. மகிமை வடிவினள். அதற்கும் மேம்பட்ட மகிமை உடையவள்.

இவள் ஒன்பது சக்திகளை உடையவள். ஒன்பது யோகங்களை உடையவள். ஒன்பது யோகினிகளை உடையவள். இவற்றை ஒன்பது சக்ரங்கள் பிரகாசப் படுத்துகின்றன.

சக்ரத்தின் ஒன்பது ஆதார பூமிகளுக்குச் சக்ரநாதர்களும் துவாரபாலினிகளும் ஒன்பது பேர். பத்ரைகளும் ஒன்பது பேர். முத்திரைகளும் ஒன்பது.

ஒன்றாக இருந்த அவள் நாற்பது சக்திகளாக மாறுவதை உபநிடதம் அடுத்து விளக்குகிறது.

அடுத்து பராசக்தியின் ஆவரண தேவதைகள் பதினைந்து பேரை உபநிடதம் குறிப்பிடுகிறது.

இந்த சக்தி சிவனுடன் விளங்குகிறாள். சிவகாம சுந்தரியை அறிந்தவர்கள் பரமானந்தப் பதவியை அடைவர்.

அடுத்து பஞ்சதசாக்ஷரீ மந்திரம் விளக்கப்படுகிறது.

அடுத்து தேவி விரிவாக விளக்கப்படுகிறாள்.

ஆறு குண ஐஸ்வர்ய சம்பன்னனான பகவான் காமேஸ்வரனும், சக்தியும் ஆகிய இருவரும் ஸமப்ரதானமானவர்கள்.

ஸமஸத்துவமும் ஸம வீரியமும் உடையவர்கள்.

இருவருமே அடியார்க்கு ஞான ஸௌபாக்கியதை அளிப்பவர்கள்.

ஓம் என்பதே ஹ்ரீம். என்று இங்ஙனம் இந்த உபநிஷத் முடிவடைகிறது.

இந்த உபநிடதத்தைத் தவிர தேவீ உபநிஷத், ஸௌபாக்ய லக்ஷ்மி உபநிஷத் உள்ளிட்டவற்றிலும் தேவியின் மஹிமையைக் காணலாம்.

இன்னும் ஏராளமான நூல்களிலும் தேவியின் மஹிமை விளக்கமாகக் கூறப்படுகிறது.

அடுத்து அந்த நூல்கள் எவை எவை என்பதைப் பார்ப்பொம்.

**

Leave a comment

Leave a Reply