ரிக் வேதத்தில் புறா ஜோதிடம்; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு – 1 (Post No.10,290)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,290

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் ஏராளமான ஆராய்ச்சி விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகிலேயே பழமையான நூல் என்பதால் அவற்றின் முக்கியம் அதிகரிக்கிறது. ரிக் வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கத் தமிழ் இலக்கியம் வந்தது. சங்கத் தமிழ் 18 நூல்களிலும் புறாக்கள் பற்றி நிறைய வியப்பான செய்திகள் உள்ளன. ஆண் புறா, வெய்யிலில் வாடும் பெண் புறாவுக்கு சிறகால் விசிறி வீசுவதும், புறாக்கள் ஜீரணத்துக்காக கற்களை சாப்பிடுவதும் சங்கத் தமிழ் புலவர்கள் நேரில் கண்ட காட்சி.

ஆனால் ரிக் வேதத்தில் இரண்டு காட்சிகள் 2 மண்டலங்களில் வியப்பான செய்தியைத் தருகின்றன. அவற்றைக் கண்டுவிட்டு தமிழ் நூல்களை ஆராய்வோம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில்  165ஆவது துதியைக் (RV. 10-165) காண்போம். இந்தத் துதியை இயற்றியவர் பெயரும் ‘புறா’ ! அதாவது ‘கபோதன்’ அவர் அம்மா பெயர் மரண தேவதை. புறாவுக்கு சம்ஸ்க்ருதத்தில் கபோத என்று பெயர் ; மரண தேவதைக்கு நிர்ருதி என்று பெயர்.

முதல் ஆராய்ச்சி

தமிழ் இலக்கியத்தில் காக்கை பாடினியார் , தேய் புரிப் பழங்கயிற்றனார் , செம்புலப் பெயல் நீரார் என்ற பல விநோதப் பெயர்களைக் காணலாம் . உலகில் இந்துக்களைத் தவிர வேறு எவரும் இந்த உத்தியை – டெக்னீக்கை- கையாளவில்லை.

ரிக் வேதத்தை, உலக மஹா ஜீனியஸ் – மாமேதை- காக்கா கறுப்பு–என்று அழைக்கப்படும் வேத வியாசர் , நமக்கு தொகுத்துக் கொடுத்தார். அவர் பின்பற்றிய டெக்னீக் இது. அவர் பெயர் ‘தீவுக் கறுப்பன்’ MR BLACK ISLANDER . அவர் பெயரிலேயே இந்த வினோதம் புகுந்துவிட்டது. அவர் யாதவ கிருஷ்ணன், திரவுபதி முதலியோர் அட்டக் கறுப்பு UTTER BLACK ; அதனால் அவர்கள் பெயரே கறுப்பன் (கிருஷ்ணன் MR BLACK), கிருஷ்ணா/ திரவுபதி (MISS BLACK கருப்பாயி) என்று வைத்துக்கொண்டனர். வியாசரும் கறுப்பு . இதனால் அவரை கிருஷ்ண த்வைபாயனர் MR BLACK ISLANDER என்று அழைப்பர். அதாவது கங்கை ஆற்றுத் தீவில் வசிக்கும் கறுப்பன் . கின்னஸ் புஸ்தத்தில் குறிப்பிட இடமில்லாத சாதனை புரிந்தவர் அவர். உலகிலேயே அதிகமாக GREAEST WRITER எழுதியவர் GREATEST COMPILER; தொகுத்தவர்.

ஆகையால் புறா ஜோதிடக் கவிதையில் வரும் ‘புறா’ என்ற பெயரை புலவர் (MR DOVE OR MR PIGEON) பெயராகவும் புறாவினால் மரணம்  வரும் மரணதேவதை (நிர்ருதி) பெயரை புலவரின் அம்மா (MRS DEATH)  பெயராகவும் சொல்லிவிடுகிறார் வியாசர்.

அந்த உலக மஹா மேதை செய்ததை சங்கத் தமிழ் நூலைத் தொகுத்தோரும் ‘கள்ளக் காப்பி’ (CARBON COPY ) அடித்தனர். அதாவது ஒரு புலவர் வினோதமான சொற்றோடரைக் கையாண்டாலோ அல்லது அவர் பெயர் தெரியாவிட்டாலோ அவர் பாட்டில் உள்ள சொல்லை புலவர் பெயராகக் கூறி விடுவார்கள். இப்படிப் பிறந்ததுதான் காக்கைபாடினியார் முதலிய பெயர்கள். இது போல முதல் முதலில் செய்தவர் வியாசர்.

சங்க இலக்கியத்தில் சுமார் 20 புலவர்களும், ரிக் வேதத்தில் சுமார் 20 பெயர்களும் இப்படி அமைந்த விநோதப் பெயர்கள் ஆகும்

xxxx

இப்போது சப்ஜெக்டு SUBJECT க்கு வருகிறேன்

புறா பற்றி RV.10-165 ல் மிஸ்டர் புறா , அதாவது புலவர் திரு. புறவு MR DOVE என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

ஸாரி , ஸாரி SORRY SORRY ! அதற்கு முன்னர் வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துவிட்டது அதையும் சொல்லி விடுகிறேன். சங்க காலத் தமிழர்கள் இப்போது இலங்கைத்  தமிழர்கள் பேசுவது போல குறில் சவுண்டை – ஒலியை– அதிகம் பயன்படுத்துவர் ; புறா என்பதற்குப் பதிலாக புறவு என்பர்; விழா என்பதற்குப் பதில் விழவு என்பர் ; பாண்டில் என்பதற்குப் பதில் பண்டி (வண்டி) என்பர். ஆனால் இதே சொற்களுக்கு நெடில் சவுண்டும் சில இடங்களில் உண்டு. சங்கத் தமிழர்களுக்கு வண்டி  தெரியாது ஆனால் பண்டி, பாண்டில் தெரியும். இவை எல்லாம் என்னைப் போன்ற மொழி ஆராய்ச்சியாளருக்கு (LINGUISTIC RESEARCHER)S   கோதுமை ஹல்வா, பன்னிர் ஜாங்கிரி சாப்பிட்டதுபோல.

நிற்க.

Rig Veda 10-165

1.தேவர்களே ! நிருதியின் தூதனான கபோதன் — புறா –எந்தத் தீமையைக் கருதி இங்கு வந்திருந்தாலும் நாம் அதைப் போற்றுவோமாக ; நாம் பிராய்சசித்தத்தை செய்வோமாக  எங்கள் ஆட்களுக்கும் கால்நடைகளுக்கும் சுகம் தோன்றுக .

2.தேவர்களே !  எங்கள் மனைக்கு அனுப்பப்பட்ட பறவையான புறா சுகத்தைத் தருவதாகுக .விப்பிரனான அக்னீ எங்கள் அவியால் இன்புறுவனாக .சிறகுகளில் ஏந்தப்படும் ஆயுதம் எங்களிடமிருந்து விலகுக.

3.சிறகுப் படை புறா எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.  அது அக்கினியின் ஸ்தானமான அரணிக்கட்டையின் மீது அமருகிறது . எங்கள் பசுக்களுக்கும் ஜனங்களுக்கும் சுகம் தோன்றுக. தேவர்களே, புறா , இந்த மனையில் எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.

4.ஆந்தை வீணாகவே கத்துகிறது ஏனெனில் புறா அக்கினியின் அருகில் அமர்ந்து இருக்கிறான். இந்த வணக்கம் புறாவை தூதுவனாக அனுப்பிய மிருத்யுவான எமனுக்கு அளிக்கப்படுகிறது .

5. தேவர்களே ! நீங்கள் எங்கள் துதியால் துதிக்கப்பட்டு தூத்துவதற்குரிய புறாவைத் துரத்துங்கள் எங்கள் அவியால் மகிழ்ந்து  எங்கள் தீமைகளையெல்லாம் விலக்கி , எங்களுக்கு பசுக்களையும் உணவையும் அளியுங்கள் . துரிதமான புறா எங்கள் உணவை விட்டுவிட்டுப் பறந்து செல்க.

இதற்கான அடிக்குறிப்பில் ‘புறா ஒரு தீய பறவைகயாகக் கருதப்படுகிறது; மரணத்தின் தூதனாக உள்ளது’ என்று எழுதப்பட்டுள்ளது

இது பற்றி ரிக் வேத மொழிபெயர்ப்பை, ஆங்கில மொழியில்  நமக்குத் தந்த ரால்ப்  டி .எச் . கிரிப்பித் என்ன சொல்கிறார்.  ஆந்தை, புறா பற்றி தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது என்பதையும்  எனது ஆராய்ச்சிக் குறிப்புகளை யும் அடுத்த கட்டுரையில் காணுங்கள்

Rig Veda 10-165

1. GODS, whatsoever the Dove came hither seeking, sent to us as the envoy of Destruction,

     For that let us sing hymns and make atonement. Well be it with our quadrupeds and bipeds.

2. Auspicious be the Dove that hath been sent us, a harmless bird, ye Gods, within our dwelling.

     May Agni, Sage, be pleased with our oblation, and may the Missile borne on wings avoid us.

3. Let not the Arrow that hath wings distract us: beside the fire-place, on the hearth it settles.

     May, it bring welfare to our men and cattle: here let the Dove, ye Gods, forbear to harm us.

4. The screeching of the owl is ineffective and when beside the fire the Dove hath settled,

     To him who sent it hither as an envoy, to him be reverence paid, to Death, to Yama.

5. Drive forth the Dove, chase it with holy verses: rejoicing, bring ye hither food and cattle,

     Barring the way against all grief and trouble. Let the swift bird fly forth and leave us vigour.

     देवाः कपोत इषितो यदिछन दूतो निरतया इदमाजगाम |
तस्मा अर्चाम कर्णवाम निष्क्र्तिं शं नो अस्तु दविपदेशं चतुष्पदे ||
शिवः कपोत इषितो नो अस्त्वनागा देवाः शकुनो गर्हेषु |
अग्निर्हि विप्रो जुषतां हविर्नः परि हेतिः पक्षिणी नोव्र्णक्तु ||
हेतिः पक्षिणी न दभात्यस्मानाष्ट्र्यां पदं कर्णुतेग्निधाने |
शं नो गोभ्यश्च पुरुषेभ्यश्चास्तु मा नोहिंसीदिह देवाः कपोतः ||
यदुलूको वदति मोघमेतद यत कपोतः पदमग्नौक्र्णोति |
यस्य दूतः परहित एष एतत तस्मै यमाय नमोस्तु मरित्यवे ||
रचा कपोतं नुदत परणोदमिषं मदन्तः परि गांनयध्वम |
संयोपयन्तो दुरितानि विश्वा हित्वा न ऊर्जं परपतात पतिष्थः ||


devāḥ kapota iṣito yadichan dūto nirtyā idamājaghāma |
tasmā arcāma kṛṇavāma niṣkṛtiṃ śaṃ no astu dvipadeśaṃ catuṣpade ||
śivaḥ kapota iṣito no astvanāghā devāḥ śakuno ghṛheṣu |
aghnirhi vipro juṣatāṃ havirnaḥ pari hetiḥ pakṣiṇī novṛṇaktu ||
hetiḥ pakṣiṇī na dabhātyasmānāṣṭryāṃ padaṃ kṛṇuteaghnidhāne |
śaṃ no ghobhyaśca puruṣebhyaścāstu mā nohiṃsīdiha devāḥ kapotaḥ ||
yadulūko vadati moghametad yat kapotaḥ padamaghnaukṛṇoti |
yasya dūtaḥ prahita eṣa etat tasmai yamāya namoastu mrityave ||
ṛcā kapotaṃ nudata praṇodamiṣaṃ madantaḥ pari ghāṃnayadhvam |
saṃyopayanto duritāni viśvā hitvā na ūrjaṃ prapatāt patiṣthaḥ ||

–தொடரும்

TAGS- புறா ஜோதிடம், ரிக்வேதம், சங்க இலக்கியம், புறவு, கபோத, நிருதி

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1(Post No.10,289)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,289

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை YOU TUBE யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை நான்கு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

பாரத தேசம் கண்ட மகான்களில் சமீப காலத்தில் வாழ்ந்து நடைமுறை வேதாந்தம் பற்றிய சிந்தனைகளை புது விதத்தில் பரப்பியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் முரளிவாலா என்னும் இடத்தில் 1873ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை தீபாவளி தினத்தன்று பண்டிட் ஹீரானந்த கோஸ்வாமி என்ற பண்டிதருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்வாமி ராமதீர்த்தர். அவருக்கு தீர்த்த ராமர் என்று பெயரிடப்பட்டது. அவரது தாயார் அவர் பிறந்த ஒரு வருடத்தில் மறைந்தார். அவரது தமக்கை தீர்த்த தேவியும் அவரது அத்தை தர்மா கௌரும் அவரை வளர்த்தனர். கணிதத்தில் இயல்பாகவே அபார வல்லமையை அவர் பெற்றிருந்தார்.  லாகூரில் கவர்ன்மெண்ட் காலேஜில் கணிதத்தில் மாஸ்டர் டிகிரி வாங்கிப் பின்னர் அதே லாகூரிலேயே ஃபொர்மன் கிறிஸ்டியன் காலேஜில் (Forman Christina College, Lahore) கணிதப் பேராசிரியராகப் பணியாற்றலானார்.

1897ஆம் ஆண்டில் ஸ்வாமி விவேகானந்தர் லாகூருக்கு விஜயம் செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய அரும் பணியால் உலகம் முழுவதும் அவர் பெயர் புகழுடன் விளங்கிய நிலையில் அவரது லாகூர் விஜயம் ஸ்வாமி ராமதீர்த்தரை வெகுவாக அவர் பால் ஈர்த்தது. அவர் சந்யாசியாகத் தீர்மானித்தார். தனது இளம் மனைவியையும் மகனையும் துறந்து அவர் சந்யாச ஆஸ்ரமத்தை  1899ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று மேற்கொண்டார்.

சந்யாசி ஆனதால் அவர் ஒரு பொழுதும் காசைக் கையால் தொட்டதே இல்லை. அது மட்டுமல்ல, சந்யாச தர்மத்திற்கு உரிய வகையில் தனக்கென்று பெட்டி, படுக்கை, பொருள்கள் என எதையும் ஒரு போதும் அவர் கையில் கூட எடுத்துக் கொண்டு சென்றதே இல்லை.

அவரது அபாரமான சொற்பொழிவுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தேஹ்ரியை ஆண்ட மஹராஜா கீர்த்திஷா பஹாதூர் அவரைத் தன் செலவில் 1902ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அனுப்பினார்.  ஜப்பானில் தனது சொற்பொழிவுகளால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்னர் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். இரு வருடங்கள் கழித்த பின்னர் 1904ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அவருக்கு பெருத்த வரவேற்பு காத்திருந்தது. ஏராளமான இடங்களில் அவரைச் சொற்பொழிவாற்ற அனைவரும் அனைத்தனர். சிஷ்யர்களும் பெருகலாயினர்.  1906ஆம் ஆண்டில் நகர்ப்புறத்தில் வாழ்வதைக் குறைத்துக் கொண்ட ஸ்வாமி ராமதீர்த்தர் இமயமலைக் காட்டினுக்குள் சென்றார். அங்கேயே தங்கலானார். நடைமுறை வேதாந்தம் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான புத்தகத்தை எழுத வேண்டுமென முனைந்தார். ஆனால் அது முடியவில்லை.

கங்கையில் 17-10-1906ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தினார்.

அவர் பிறந்ததும் தீபாவளி தினத்தன்று; அவர் சந்யாச தர்மம் ஏற்றதும் தீபாவளி தினத்தன்று; ஜல சமாதி எய்தியதும் ஒரு தீபாவளி தினத்தன்று! இது ஒரு அதிசயம் அல்லவா?! முப்பத்திமூன்று வயது ஆவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர் தன் உடலைத் தானே உகுத்து விட்டார். ஜல சமாதிக்கு முன்னர் அவர் உருது மொழியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் கடைசி பாராவில் அவர் எழுதியிருந்தார் இப்படி:-இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!

ஓ மரணமே! நிச்சயமாக இந்த உடலை வெடித்துச் சிதறச் செய்! என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று! நானே போதை கொண்ட காற்று! இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள். நான் அதோ அந்த அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன். இறந்தவர்களை உயிர்ப்பித்தேன். உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன்……… இதோ இங்கே போகிறேன். அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.”

மரணத்திற்கே இப்படி ஒரு செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்கான தனது இறுதிச் செய்தியாக மாற்றினார் ராமதீர்த்தர்.

அவர் தனது கருத்துக்களைச் சொற்பொழிவுகள் மூலமும் கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் கூறினார்; அவர் உவமைக் கதைகளைக் கூறியுள்ளார்; சுவாரசியமான சம்பவங்களையும், புதிர்களையும் விவரித்துள்ளார். தனது கருத்துக்களை பல நோட்புத்தகங்களில் – குறிப்பேடுகளில் – பதிவிட்டுள்ளார். உருது மொழியிலும் அவர் அபார திறமை கொண்டவர். ஆக உருது, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என பன்மொழி வல்லுநராக அவர் திகழ்ந்ததால் அவரது கருத்துக் களஞ்சியம் ஒரு ஆன்மீகச் சுரங்கம் என்றே கூறலாம்.

அவரது வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. என்றாலும் கூட நேரத்தைக் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

tags– ஸ்வாமி, ராமதீர்த்தர், 

LONDON CALLING GNANAMAYAM 1-11-2021 (Post No.10,288)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,288

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 1 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -3 MTS

PRAYER –  MRS RANJANI DASARATHY—5 MINUTES

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SWAMI RAMATIRTHA

 -18 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

WORLD HINDU MAHASANGAM SILVER JUBILEE CONCERT BY YOGESWARAN, BERLIN, GERMANY IN AYYAPPAN TEMPLE LONDON held on 24-10-2021- PART two- 25 MINUTES

APPR. 65 MINUTES

tags– broadcast1112021

LONDON CALLING THAMIL MUZAKKAM 31-10-2-21(Post No.10287)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,287

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 1 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London (as broadcast)

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  MRS NANDHINI ARULRAJ, MADURAI

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN -DWARAKA TEMPLE- 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR , VIJAYALAKSHMI FROM HYDERABAD  AND LANGLEY, UK GROUP10 mts

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

WORLD HINDU MAHASANGAM SILVER JUBILEE CONCERT BY YOGESWARAN, BERLIN, GERMANY IN AYYAPPAN TEMPLE LONDON- PART ONE- 20 MINUTES

XXXX

APPR. 60 MINUTES

tags- broadcast31102021

IS DOVE A BAD OMEN? RIG VEDA ANSWERS & TAMIL DISCOVERY OF DOVES! (Post.10,286)

Natya shastra Dove Mudra 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,286

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The word for dove or pigeon is Kapotah in Sanskrit; Puravu or Puraa in Tamil. In the 2000 year old Tamil literature we come across this bird in at east 75 places. It is associated with arid land in Tamil literature. Though the description of arid land is horrible we don’t see any bad omen linked  to dove. But in the Rig Veda , the oldest book in the world, we see a strange reference to this bird linking it with death.  In another image in the same Veda, we see its loving nature. Modern symbolism shows it as a bird of peace. Wherever peace is spoken they show White Pigeon. They release pigeons to show that they love peace. Britain issued a coin with pigeon bringing olive leaves to commemorate the 50th anniversary of the end of Second World War.

Wisdom Dictionary, the best source for researchers gives thirty meanings of Dove or Pigeon in different areas such as Natya shastra, Ayur Veda, Architecture and Zoology. But we rarely see its association with death. Kapotah was the name of a clan and name of a seer as well. Even the Rig Vedic verse in the tenth Mandala 10-163 is named after a seer known as Mr Dove or Mr Pigeon.

I will give the two mantras in the Rig Veda where pigeon is referred to and my comments on it:

देवा॑: क॒पोत॑ इषि॒तो यदि॒च्छन्दू॒तो निॠ॑त्या इ॒दमा॑ज॒गाम॑ । तस्मा॑ अर्चाम कृ॒णवा॑म॒ निष्कृ॑तिं॒ शं नो॑ अस्तु द्वि॒पदे॒ शं चतु॑ष्पदे ॥

devāḥ kapota iṣito yad icchan dūto nirṛtyā idam ājagāma | tasmā arcāma kṛṇavāma niṣkṛtiṃ śaṃ no astu dvipade śaṃ catuṣpade ||

“O gods, let us worship for that, desiring which the pigeon sent as Nirṛti‘s messenger, has come to this(ceremony); let us make atonement, may prosperity be given to our bipeds and quadrupeds.” 10-165-1

Commentary by Sāyaṇa: Ṛgveda-bhāṣya

The pigeon: an allusion to misfortune

xxx

ऋ॒चा क॒पोतं॑ नुदत प्र॒णोद॒मिषं॒ मद॑न्त॒: परि॒ गां न॑यध्वम् । सं॒यो॒पय॑न्तो दुरि॒तानि॒ विश्वा॑ हि॒त्वा न॒ ऊर्जं॒ प्र प॑ता॒त्पति॑ष्ठः ॥

ṛcā kapotaṃ nudata praṇodam iṣam madantaḥ pari gāṃ nayadhvam | saṃyopayanto duritāni viśvā hitvā na ūrjam pra patāt patiṣṭhaḥ ||

“(Praised) by our hymn, O gods, drive out the pigeon, who deserves to be driven out, exhilarated (by our oblation), bring us food and cattle, dissipating all our misfortunes; abandoning our food, may the swift(pigeon) fly away.” 10-165-5

In between 10-165-1 and 10-16-5 we have three more mantras referring to pigeon in the same tone.

“May the bird sent to our dwellings, the pigeon, be auspicious, O gods, and void of offence, so that the wise Agni may approve of our oblation, and the winged weapon (of mischief) depart from us.” 10-165-2

“May the winged weapon (of mischief) do us no harm; he takes his plural ce upon the touchwood, the seat of Agni; may prosperity attend our cattle and our people, let not the pigeon, gods, do us harm in this (dwelling).” 10-165-3

All these mantras dub pigeon or dove as a bird of bad omen.

In the footnote for the Rig Vedic mantra Ralph T H Griffith adds an interesting note:

A dove, regarded as an ill-omened bird and the messenger of death, has flown into the house. Similarly in North Lincolnshire,

If a pigeon is seen sitting on a tree, or comes into the house, r from being wild suddenly becomes tame, it is Sign of Death, Notes and Querries, 8-382

Xxx

Kindness of Dove

Contrary to this hymn, Seer/Rishi Sunashepa Angirasa paints a different picture in RV 1-30-4

अ॒यमु॑ ते॒ सम॑तसि क॒पोत॑ इव गर्भ॒धिम् । वच॒स्तच्चि॑न्न ओहसे ॥
अयमु ते समतसि कपोत इव गर्भधिम् । वचस्तच्चिन्न ओहसे ॥
ayam u te sam atasi kapota iva garbhadhim | vacas tac cin na ohase ||

“This libation is (prepared) for you; you approach it as a pigeon his pregnant (mate), for on that account do you accept our prayer.” A Tamil poet also refers to it. Male dove fans a female dove because the weather is hot !

xxx

My Comments

Only when a pigeon appears suddenly in an unusual place, then it is considered a bad omen. Hindus considered anything impure that comes to a sacred place a bad omen. Even if a dog entered the place of Fire Sacrifice then they hated it. 2000 year old Sangam Tamil literature described Brahmin Street as a place where no dog or cock enters. Such a purity was maintained in places where they did fire sacrifice in every house thrice a day!

In short ,they did not consider dove as a bird omen in normal circumstances.

Story of Sibi Chakravarthi

The story of Emperor Sibi is in Mahabharata. When a dove took refuge in him, the eagle that chased it for food demanded back its natural prey. But Sibi said that he had to give shelter to anyone who came as a refugee and came to offer his whole body to the eagle . First, he cut a part of his body and put it n the balance to give the weight of flesh equal to the weight of the dove. But it was never balanced despite repeated attempts. Then he himself climbed the balance to give flesh ‘weight for weight’. Then the whole scene changed. The dove appeared as Agni, Lord of Fire , and the Eagle appeared as Indra , Chief of Heaven. This story is referred to in Sangam literature and later Silappadikaram as well Choza kings boasted that they were the descendants of that great emperor Sibi.

There is another story in the epic where two doves sacrificed their lives in the fire for the sake of a hungry hunter. All such stories in the Hindu epics and Hindu fables of Panchatantra show that doves are lovable birds.

In Sangam Tamil Literature

I give some examples from 2000 year old Tamil Sangam Books:

In Akananuru poem 17, a fine contrast is drawn between three pictures, one of an arid tract, another of a  quiet home in which the heroine lights up the lamps when the doves call to their mates,  and another of a small fertile hill with Kutalam flowers of fragrant smell and a canopy of clouds

In Akananuru poem 2, we see couple of doves fly far away with terror in gusty wind.

In Kuruntokai poem 79, the female doves perching on the Omai tree call their mates with a sorrowful voice

In Kuruntokai poem 174, the ripe seeds of the Kalli trees burst open and scares away the happy pair of pigeons perching on the branches.

In Narrinai poem 305, again we see a dove perching on the Nocci tree calls to its mate in a very clear voice and expresses some grief in it.

In Akananuru poem 287, the waving aerial root of a banyan tree frightens away the doves .

In Palaikkali of Kalittokai (verse 10) we see a male dove is fanning and comforting a female dove in hot weather condition.

One more interesting reference is in Pattinappalai of Sangam Period where the poet Kadiyaloor Uruththiran Kannanar (Mr Rudraksha) says doves eat stones. I saw a recent video in You Tube where a gentleman powders the red stones and feeds the doves. Hundreds of pigeons competing with one another, eat it happily. This helps them in digestion they say. Though this might have been noticed by many others a Tamil poet has documented it in his poem 2000 years ago!

Apart from these , we have passing reference to doves along with other birds. So the picture we get is doves are in pairs or one calling the other which shows mutual love.

Doves and pigeons in other cultures are already described in many websites.  But the Hindu view of doves and pigeons is not dealt with in detail. Wisdom library gives 30 references and Sangam and later Tamil literature give at least 75 references. We have enough materials to write an encyclopaedia on Doves in Hindu Literature.

Kapota- Dove- Asana

–subham—

 Tags- Pigeon, Bad omen, Rig Veda, Eating stones, Tamil literature, Love, Peace

துவாரகா திருத்தலம்; ஆலயம் அறிவோம் (Post No.10,285)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,285

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 31-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

த்வாரகா!

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.  

   ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாக அமைவதும்  108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான த்வாரகா திருத்தலம் ஆகும். “அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரித்வாரகாவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகா” என்பது அனைவரும் அறிந்த ஏழு மோக்ஷபுரிகளைப் பற்றிய ஸ்லோகமாகும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள இத்தலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்ட தலமாகும்.

மூலவர் திரு நாமம் : த்வாரகாதீசன், கல்யாண நாராயணன்.

கருப்பு நிறத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இவர் காட்சி அளிக்கிறார்.

தாயார் திரு நாமம் : கல்யாண நாச்சியார், ருக்மிணி                                        தீர்த்தம் :கோமதி நதி அல்லது சமுத்ர சங்கமம் அல்லது பிரபாச தீர்த்தம்                           விமானம் : ஹேமகூட விமானம்          

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண மற்றும் இலக்கிய வரலாறுகள் உண்டு. ஒரு சமயம் ஜராசந்தன் மக்களைப் பெரிதளவும் கொடுமைப் படுத்த, உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சமுத்திர ராஜனிடம் இந்த இடத்தைக் கேட்டுப் பெற்றார்; விஸ்வகர்மாவை வைத்து இந்த நகரை நிர்மாணித்தார். உலகமே வியக்கும் வண்ணம் ஸ்வர்க்கத்திற்கு நிகராக அகன்ற சாலைகளுடனும் பல தீர்த்தங்களுடனும் இந்த நகர் நிர்மாணிக்கப்பட்டது.  அவரது கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் ஐந்து அடுக்கு நிலைகொண்ட த்வாரகாதீசர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

இப்போதுள்ள த்வாரகா பொதுவாக இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது. த்வாரகா புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி கோமுகி த்வாரகா ஆகும். இன்னொரு பகுதி பேட் த்வாரகா ஆகும்.

ஸ்வர்க்கத்திற்கு செல்லும் வாயிலாக இது அமைவதால் இது த்வாரகா என்ற பெயரைப் பெற்றது. இங்கிருந்து தான் யாதவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்தனர்.

இங்குள்ள கோவிலில் அனைத்து பக்தர்களும்  ஸ்வர்க வாயிலின் வழியே உள்ளே சென்று மோக்ஷ வாயில் வழியே வெளியே வருவது வழக்கம்.

கோவிலிலிருந்து அருகே உள்ள கோமதி நதி கடலில் கலக்கும் சங்கமத்தை அடையலாம். இந்த சங்கமத்தில் நீராடி விட்டுப் பின்னர் கோவில் தரிசனத்தை மேற்கொள்வது ஐதீகம். கோவிலிலிருந்து படகு  மூலம் சென்றால் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணரின் அஷ்ட பட்டமகிஷிகளுக்கான கோவில்கள் உள்ளன. பேட் த்வாரகா என்ற சிறு தீவில் தான் கிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். இங்கு தான் அவரது அரண்மனை, அந்தப்புரம் ஆகியவை அமைந்திருந்தன. பால்ய கால நண்பரான குசேலர் இங்கு தான் வாழ்ந்து வந்தார். இங்கு தான் கிருஷ்ணர் சங்காசுரனை வதம் செய்தார்.

த்வாரகா ஆலயத்தில் லக்ஷ்மிநாராயணர், ருக்மிணி, திரிவிக்ரமன், தேவகி, ஜாம்பவதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள சங்கமத்தில் ரங்கன் காட், நாராயண் காட், காவூகாட், வசுதேவ காட், பாண்டவன் காட், பிரம்ம காட், பார்வதி காட், கங்கா காட், சுரதன் காட், கர்க்காரி காட், அனுமன் காட், நாராயண பலி காட் என பன்னிரெண்டு துறைகள் உள்ளன. இங்குள்ள ரிஷபா குண்டத்திலும் பக்தர்கள் நீராடுவது மரபாகும். இத்தலம் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இங்கு ஏராளமான மகான்களும் அருளாளர்களும் காலம் காலமாக வந்து கிருஷ்ணரை தரிசித்து பல பாடல்களைப் புனைந்துள்ளனர். ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், ஞானேஸ்வரர், பக்த மீரா, கிருஷ்ண சைதன்யர், வல்லபாசாரியர் என்று இங்கு வந்த அருளாளர்களின் பட்டியல் மீக நீண்ட ஒன்றாகும். கிருஷ்ணரைப் பற்றிப் பாரத தேச மொழிகள் அனைத்திலும் அற்புதமான இலக்கியங்கள் ஆயிரக்கணக்கில் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களோ பல்லாயிரம் ஆகும்.

பெரியாழ்வார் ஐந்து பாசுரங்கள், ஆண்டாள் நான்கு பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்கள், நம்மாழ்வார் ஒரு பாசுரம் ஆக மொத்தம் 13 பாசுரங்களை ஆழ்வார்கள் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.

இங்கு 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வருடங்கள் நடந்துள்ள பல அகழ்வாராய்ச்சிகளில் இந்தத் தலம்  பண்டைய காலத்தில் புகழோங்கி இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து உலகையே மகிழ வைத்துள்ளன.          வசுதேவருக்கும் தேவகிக்கும் மதுராபுரியில் மகனாக அவதரித்த கிருஷ்ணர் ஆயர்பாடியில் யசோதா பாலனாக வளர்ந்தார். ஏராளமான அருள் லீலைகளைப் புரிந்தார். த்வாரகாவை நிர்மாணித்து, ஆண்டு, மறத்தை அழித்து அறத்தை நிலைநாட்டிய பின்னர் தனது அவதார காரியம் நிறைவேறியவுடன் அவர் இங்கிருந்து தான் தனது விஷ்ணு லோகத்திற்குச் சென்றார்.   

   காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.                  

       

                             

 பெரியாழ்வாரின் அருள் வாக்கு இது:      

                                                              தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் 
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் ஜோதி நம்பி! 
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் 
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே   

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

நன்றி, வணக்கம்!    

tags– துவாரகா , ஆலயம்,  அறிவோம்

பிறப்பினால் அடைவதல்ல உயர்நிலை! (Post No.10,284)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,284

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

பிறப்பினால் அடைவதல்ல உயர்நிலை! குணங்களினால் அடையப்படுவது அது!

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள் :-

சர்வநாஷே சமுத்பன்னே அர்தே த்யஜதி பண்டித: |

அர்தேன குருதே கார்யே சர்வநாஷோ ந ஜாயதே ||

ஒரு பெரிய நாசம் வரும் போது புத்திசாலியானவன் பாதியை தியாகம் செய்து தான் அடைய விரும்பியதை மீதி இருக்கும் பாதியை வைத்து அடைகிறான். இப்படியாக பெரிய நாசம் ஏற்படுவதில்லை.

When a total disaster is incumbent a wise man abandons half (of what he wants to achieve) and manages with the remaining half. Thus the total disaster does not take place.

*

மனோ தாவதி சர்வத்ர மதோன்மத்தகஜேந்த்ரவத் |

ஞானாங்ககுஷசமா புத்திஸ்தஸ்ய நிச்சலதே மன: ||

மதம் பிடித்த யானை போல மனமானது இங்கும் அங்கும் அலைகிறது. அறிவு என்னும் அங்குசத்தைக் கொண்ட ஒருவனின் மனமானது நிலையாக இருக்கிறது.

The mind runs (helter and shelter) like an intoxicated elephant. The mind of one whose intellect is possessed of a goad in the form of knowledge, remains stable.

*

அஹோ குணானாம் ப்ராப்த்யர்தே யதந்தே பஹுதா நரா: |

முக்தா யதர்தே பங்காஸ்யா: இதரேஷாம் ச கா கதா ||

நல்ல குணங்களைக் கொள்வதற்கு எவ்வளவு முயற்சிகள் மனிதர்களால் எடுக்கப்படுகின்றன? முக்தா (முக்தி அடைபவர்கள் – இன்னொரு பொருள் முத்துக்கள்) கூட அதற்கென தங்கள் வாயை திறந்து கொள்ள/ உடைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் போது மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

How many efforts are put in by people to acquire qualities? Even the muktas (liberated sould/pearls) have to get their mouths broken for that purpose. What to say of other people?

*

ஜ்யேஷ்டத்வம் ஜன்மனா நைவ குணைஜ்யேஷ்டத்வமுச்யதே |

குணாத் குருத்வமாயாதி துக்தம் ததி த்ருதம் க்ரமாத் ||

உயர்ந்த நிலை என்பது பிறப்பால் ஏற்படும் ஒன்றல்ல. நல்ல குணங்களால் அடையப்படுவது அது என்று சொல்லப்படுகிறது. பால், தயிர், நெய் ஆகியன அதனுடைய குணத்தினால் அதிக கனத்தை அடைகிறது.

Superiority is not caused by birth (in a high family). It is said that superiority (greatness) is achieved by means of good qualities. Milk, curds and ghee become more and more heavy by means of their qualities.

*

கௌரவம் ப்ராப்யதே தானான்ன து வித்தஸ்ய சஞ்சயாத் |

ஸ்திதிருச்சை: பயோதானாம் பயோதீநாமத: ஸ்திதி: ||

கௌரவமானது ஒருவன் தனது செல்வத்தைக் கொடுப்பதால் ஏற்படுவது, சேர்ப்பதினால் அல்ல. (மழையைப் பொழிவிக்கும்) மேகங்கள் (வானில்) உயரத்தில் இருக்கின்றன. ஆனால் அந்த நீரைச் சேர்த்து வைக்கும் சமுத்திரங்கள் (பூமியில்) கீழே உள்ளன.

Greatness is gained by giving away wealth, not by storing it. The place of the clouds (who give water) is high up (in the sky), whereas the place of stores of water (seas) is below (on the earth).

***

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

tags – உயர்நிலை, பிறப்பினால்

PLEASE JOIN US TODAY MONDAY 1 NOVEMBER 2021

Mr Yogeswaran Concert, London, 24-10-21

USUAL TIME- LONDON TIME 1 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

1 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -3 MTS

PRAYER –  MRS RANJANI DASARATHY—5 MINUTES

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SWAMI RAMATIRTHA

 -18 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

WORLD HINDU MAHASANGAM SILVER JUBILEE CONCERT BY YOGESWARAN, BERLIN, GERMANY IN AYYAPPAN TEMPLE LONDON- on 24-10-2021, PART TWO- 25 MINUTES

APPR. 65 MINUTES

 tags- Publicity1112021

பகவத்கீதை சொற்கள் Index 16 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -16 (Post.10,283)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,283

Date uploaded in London – 31 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அசித்தெள 4-22 தோல்வியில்

அசுகம் 9-33 சுகமில்லாதது ;மகிழ்ச்சியின்மை

அஸ்ருஷ்டஅன்னம்  17-13 அன்னதானம் இல்லாதது

அசெள  11-26 இந்த

அஸ்தி 2-40 இருக்கிறது

அஸ்து  2-47 அது ஆகட்டும்

அஸ்திரம் 6-26  நிலையற்றது

அஸ்மதீயை: 11-26  நம்மவர்களான

அஸ்மாகம் 1-7 நம்முடைய

அஸ்மாத் 1 -39 இந்த

அஸ்மான் 1-39 இதில்

அஸ்மாபி: 1-39 நம்மால் , எங்களால்

அஸ்மின் 2-17 இதில்

அஸ்ய  2-17 இந்த

அஸ்யாம் 2-72  இதில்

அச்வர்க்யம் 2-2  வானவர் நாட்டின் வழியடைக்கும் கல்

அஹத்வா – 2-5 கொல்வதற்குப் பதிலாக

அஹராகம் 8-18  பகல் வந்ததும்

அஹங்கார விமூடாத்மா 3-27  அஹங்காரத்தால் அறிவிழந்தவன்

அஹங்காரம் 16—18 நான் என்னும் செருக்கு

அஹங்கார: 7-4  நான் என்னும் செருக்கு

அஹங்குருத: 18-17 நான் கர்த்தா என்ற எண்ணம்

22 more words added from this section.

To be continued…………………………..

 tags- gita index 16

உலக இந்து சமய செய்தி மடல் 31-10-2021 (Post No.10,282)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,282

Date uploaded in London – 31 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை  அக்டோபர் 31-ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

போப்பாண்டவர் -மோடி சந்திப்பு – ஆர் எஸ் எஸ் வரவேற்பு

இத்தாலியில் வாத்திகன் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசை நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 20 நிமிடம் சந்திப்பு என்று நேரம் ஒதுக்கப்பட்டபோதும் இருவரும் உலக விஷயங்களை ஒரு மணி நேரம் அலசி ஆராய்ந்தனர். போப்பாண்டவரை  இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோ டி அழைப்பும் விடுத்தார்.

இதற்கு முன்னரும் அப்போதைய போப் இந்தியாவுக்கு விஜயம் செய்தது அடல் பிஹாரி வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

தார்வாட்டில் ஆர் எஸ் எஸ் கூட்டம்  வரவேற்பு

போப் – மோடி  சந்திப்பை உலகத்தின் மிகப்பெரிய தொண்டர் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் வரவேற்றது . ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேஸீய செயற்குழு கூட்டம் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் நகரில் மூன்று நாட்களுக்கு நடந்தது  அதன் இறுதியில் இயக்கத்தின் செயலாளர் தத்தாத்ரேய ஹோஷபாலே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தருகையில் போப் பிரான்ஸிஸ் – பிரதமர் மோடி சந்திப்பை ஆர் எஸ் எஸ் இயக்கம் வரவேற்பதாகச் சொன்னார் . மோடி, உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்; போப் பிரான்சிஸ் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தனிப் பெரும் தலைவர். இருவர் சந்திப்பு இந்தியாவின் நன்மதிப்பை மேலும் உயர்த்தும் – மேலும் ‘வசுதைவ குடும்பகம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்பது இந்துக்களின் பண்பாடு. மேலும் இருவரும் இரு நாட்டு தலைவர்கள் என்பதால் இது நாட்டுத் தலைவர்கள் சந்திப்பாகும் என்றும் சொன்னார். இத்தாலியின் தலைநகரான ரோமாபுரிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டி நாடு வாத்திகன் சிட்டி ஆகும் . இது இந்தியாவின் பெரிய நகர் அளவுக்குக் கூட இல்லை .

தார்வாட் நகரில் நடந்த ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் 350 கார்யகர்த்தாக்கள் கலந்து கொண்டனர். இயக்கத்தின் தலைவரான  சர்சங்க சாலக்  மோகன் பகவத், இயக்கத்தின் செயலாளரான   சற்கார்யவாஹ் தத்தாத்ரேய ஹோஷபாலே முன்னிலையில் விவாதங்கள் நடந்தன

வங்க தேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் இதைத் தடுத்து நிறுத்த வங்க தேச அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டம் எச்சரித்தது .

நாட்டில் நடக்கும் மத மாற்ற முயற்சிகளையும் ஆர் எஸ் எஸ் வன்மையாகக் கண்டித்தது

.xxx

இத்தாலியில் ‛ஓம் நமச்சிவாயா‘ மந்திரத்தை கூறி பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்

G 20  (ஜி 20)  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றிருந்தார். அப்போதுஅந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் ‛ஓம் நமச்சிவாயா’ மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை கூறி வரவேற்றனர்.

இரு நாட்களாக நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள பைசா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், வெளிவந்த பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் வணங்கி வரவேற்றனர். அனைவருக்கும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்

பின் அங்கு கூடியிருந்தவர்களில் பலர் ஓம் நமச்சிவாய மந்திரம் மற்றும் பல சமஸ்கிருத மந்திரங்களை ஒலித்து மோடியை வரவேற்றனர். குஜராத்தி மொழியிலும் பக்தி பாடல்களை பாடினர்.

XXXXXXXXXX

தங்க நகை உருக்கும் தி.மு.க . திட்டத்துக்கு கோர்ட் தடை

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோவில்களில் அறங்காவலர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார். இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி அளிக்கப்படுவதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

இந்து சமய அறநிலையத் துறை  முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இது சம்பந்தமாக செப்டம்பர்  22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து  செய்யக் கோரியும் ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ மற்றும் சிலர் உயர் நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய  அறநிலைய சட்டத்தில்  கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும்  வழங்கவில்லை. கோயில்  நிர்வாகத்தில் மட்டுமே அறநிலையத்துறை தலையிட முடியுமே  தவிர மத வழிபாட்டு  விவகாரங்களில்  தலையிட முடியாது.

வருவாய் ஈட்டுவதற்காக  நகைகளை உருக்கி  டெபாசிட் செய்வதற்கு பதில் ஆக்கிரமிப்பில் உள்ள  ஆயிரக்கணக்கான ஏக்கர்  கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில்  நகைகள் தொடர்பாக முறையாக  எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில்,  நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது.   பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய  நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த  அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத  உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால்  நகைகளை உருக்குவது தொடர்பான  சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை  ரத்து செய்ய வேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நகைகளை பொறுத்தவரை  உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோயில்களுக்கு  பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளை கண்டறியலாம்.  அறநிலையத்துறை சட்டப் பிரிவின்படி  கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக கோயில்களின் அறங்காவலர்  குழுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அறங்காவலர்களை நியமிப்பதற்கு முன்பு  காணிக்கை நகைகளை உருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த முடிவையும் அரசு  செய்ய கூடாது. இந்த வழக்கில் அரசு பொதுவான பதில் மனுவை 4 வாரங்களில்  தாக்கல் செய்ய வேண்டும். வழக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்கு  தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Xxx

கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

‘கோவில்ளுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன்,விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ”நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.”அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ”அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும்,” என்றார்.



இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கிடையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம். மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், சட்டப்படி அறங்காவலர்கள் நியமிக்கும் முறையை நீதிமன்றம் கண்காணிக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, டிச., 15க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

மாவட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்களில், விண்ணப்பிப்போருக்கான தகுதியை குறிப்பிடவில்லை என, டி.ஆர்.ரமேஷ் சுட்டிக் காட்டினார். உடனே, தலைமை நீதிபதி, விளம்பரத்தில் தவறு இருந்தால், சரி செய்து வெளியிடும்படி, அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினார்.

xxxxx

அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி; எம்.பி.,க்கள் உற்சாக பங்கேற்பு

அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க பார்லிமென்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன், அமெரிக்க எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.

‘இன்டியாஸ்போரா’ அமைப்பு, அமெரிக்க இந்தியர் அமைப்புகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ”ஹிந்து அமெரிக்க கலாசாரம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது,” என, பார்லி., உறுப்பினரான ரோ கன்னா குறிப்பிட்டார்.



 

INDIAN DIASPORA அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ”தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.

Xxxx

தீபாவளி வாழ்த்துக்கள்

இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளித் திருநாள் நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குஜராத்திகள்  இதை நான்கு  நாள் விழாவாகக் கொண்டாடுவர் ; புத்தாண்டு தினமாகவும் கொண்டாடுகின்றனர் . இந்துக்கள், சீக்கியர்கள், ஜைன மதத்தினர் ஆகியோரும் இதே நாளைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது ; ராம பிரான் அயோத்தி திரும்பிய நாள் என்பதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்ததாலும், உலகிற்கே பட்டாசு மத்தாப்புகளை ஏற்றுமதி  செய்யும் சிவகாசி மக்களின் நல்வாழ்வுக்கு ஒளி வீசுவதாலும் மத்தா ப்பு பட்டாசுகளுடன் தமிழ் மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். சென்னை முதலிய நகரங்களில் மழை யையும் பொருட்படுத்தால் கடைத் தெருக்களில் கூட்டம் அலை மோதுவதாக இன்று காலை வெளியான தமிழ் நாளேடுகள் செப்புகின்றன. நவம்பர் 3ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமென்ட் தீபாவளியும் நவம்பர் 6ம் தேதி லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி தீபாவளி விழாவும் பிரிட்டனில் நடைபெறுகிறது.

நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஞான மயம் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது .

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்