தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? (Post No 4790)

RESEARCH ARTICLE Written by London Swaminathan 

 

Date: 27 FEBRUARY 2018

 

Time uploaded in London – 14-15

 

Post No. 4790

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

This follows my earlier articles that shows t English and other languages came from the root words of Sanskrit and Tamil

 

 

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும்  தோன்றினவா? (Post No 4790)

நான் 50 ஆண்டுகளாக மொழி ஆராய்ச்சி செய்கிறேன். சின்னப் பையனாக இருந்த போது காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) ஸம்ஸ்க்ருதம்- ஆங்கிலம் தொடர்பு பற்றிப் பேசிய உபந்யாஸத்தில் மாதா=மதர், ப்ராதா= ப்ரதர், ஹோரா= ஹவர் (MAATHAA-MOTHER, BRAATHAA- BROTHER, HORA- HOUR) இப்படிப் பல சொற்களை மேற்கோள் காட்டி மொழிந்த சொற்பொழிவு அது.

 

(அந்தக் காலத்தில் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நுல் கிடையாது; காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பேருரைகளை மடத்தினரே சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டனர்; பின்னர் கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அவைகளில் அவர் சொன்ன ஸம்ஸ்க்ருத ஸ்லோககங்கள் அப்படியே ஸம்ஸ்ருதத்தில் இருக்கும்; இப்போதும் அந்தப் புஸ்தகங்கள் சில என்னிடம் உள்ளன)

உலகம் முழுதும் மொழியியலாளர்கள் (LINGUISTS) இன்று வரை ஒப்புக்கொண்ட ஒரு “உண்மை” — இந்திய ஐரோப்பிய மொழி (INDO- EUROPEAN )ஒன்றின் கிளையே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகள் என்பதாகும். பின்னர் மதுரைப் பல்கலைக் கழக லைப்ரரி உறுப்பினராக இருந்தபோது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் சுமார் 1380 ஆங்கிலச் சொற்களுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பை ஒருவர் மொழியியல்  ரீதியில் சமர்ப்பித்து காசி இந்து பல்கலைக் கழகத்தில் (BENARES HINDU UNIVERSITY) டாக்டர் பட்டம் வாங்கிய நூல் அது. அந்த நூலை அப்படியே

கைப்பட ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்தில் எழுதி லண்டனுக்கு கொண்டு வைத்து இருக்கிறேன்.

 

பின்னர் லண்டனுக்கு வந்து வசிக்கத் தொடங்கியபோது,  25 ஆண்டுகளுக்கு முன்னர்,  பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரன் (30-09-1991)என்ற மொழி ஆர்வலரைப் பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள்

தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.

 

அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.

 

அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.

 

எமனோ, பர்ரோ போன்ற அறிஞர்கள் திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி,  நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS)  முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.

 

ஆக நான் கண்ட உண்மை இதுதான்:

உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தம்ழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் கா, கீ, கு, கொ,கெ, கோ, கே என்ற சொற்களில் துவங்கும்; மனிதன் அவைகளின் ஒலியில் இருந்து உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.

 

 

உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.

 

சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்

எம் வி பி (M=V=P/B) என்பன இடம் மாறும்

ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்

T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)

மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்; கண்ணாடி விளைவு.

 

அதாவது யாளி  (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)

 

தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.

ஆக எனது கொள்கை இதுதான்.

 

ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.

 

ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்

 

 

ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே. கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; ஆதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!

இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

COGNATE WORDS

 

சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்

Tamil/ Sanskrit                                          English

 

Deivam/ Deva                                     Deo தெய்வம்;

Kadavul                                               God கடவுள்

Periya/ Bruhath                                               Big பெரிய

Ondru                                                  One ஒன்று

Ettu /Ashta                                                      Eight எட்டு

 

Paraththai/ Para Stree                                    Prostitute பரத்தை

Veera                                                              Hero வீரன்

Manathu/ Manas                                            Mind மனது காம

Kama/ Kama                                       amorous காம

Patha=Adi                                                        Path, Pedestal, Foot பத, பாத, அடி

Dharma=aram                                    Moral அறம்

Neer                                                                Nereids= water nymphs நீர்

Puttil                                                                Bottle புட்டில்

Arukan/ Bargo                                    Argos (light, sun) அருகன்

Andira/ Aindra/Indra                          Andrew (English name) அண்டிரன் /ஐந்திர,  இந்திர

Pillai                                                                Fille (French) பிள்ளை

Tarai                                                                Terrain தரை

Tele (phone, scope, vision)                 Tolai தொலை

Pazaiya                                                            Paleo (ntology) பழைய

Piththu                                                 Fad பித்து

Kuuli                                                                Ghoul/Ghost கூலி

Vathuvai /Bride                                               Wed வதுவை

Paiyul (Purananuru)                            Paiyon (Greek)= song பையுள்

Aiyavi (smallest seed)                         Iota ஐயவி

Maaya                                                 Magic (g=y) மாய

Staanu/ Thun                                      Stand தாணு

AAndu                                                  Annum, annual ஆண்டு

 

Duusi                                                               Dust தூசி

 

LIST 2 OF COGNATE WORDS

TAMIL WORDS                        ENGLISH WORDS

ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்;  AUGURY- ARIKURI அறிகுறி

ARABLE- ER UZAKKUUTIYA ஏர் உழுதல்;

APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்

 

ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்

MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து;  AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடை

ADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகு

BETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்

BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்பு

BARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்

 

BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;

BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;

BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்கு

 

C

CONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடு

COIR- KAYIRU  கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திரு

 

CHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்பு

CRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறை

CASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;

CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI  கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு  குறுகிய

COLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டு

CUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்

CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓர

CYST- KATTI  கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்

 

Words about genital organs are same In most of the languages with slight changes)

This is not a comprehensive list; only some examples are given.

 

–subham–

ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – (கடைசிப் பகுதி) POST.4789

Date: 27 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-42 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4789

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (கடைசிப் பகுதி)

 

ச.நாகராஜன்

 

 

கவர்னர் அறையில் உள்ளே நுழைந்த உயர் அதிகாரி பதறிப் போய் ஹூ ஆர் யூ என்றார் என்னப் பார்த்து.

அறிமுகம் செய்து கொண்டேன். அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை வந்து விட்டேன். ஒரு சின்ன சப்மிஷன் தான். இரண்டு நிமிட வேலை தான்.

அந்த நேரம் கவர்னர் உள்ளே வந்தார்.

 

யார் – மெல்லிய குரலில் கேட்டார்.

சொன்னேன்.

என்ன விஷயம்?

மிகச் சுருக்கமாக விளக்கினேன்.

 

ஆர்டர் வந்தது.எக்ஸ்கியூட் செய்தோம். இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தவர் முறையாக பாஸ் செய்தார். இதோ டாகுமென்ட்ஸ்.

அந்தமான் சென்றவுடன் அனைத்தையும் ரிஜக்ட் செய்தார்.

அங்கே எதையும் செய்ய வசதி இல்லை. பெருத்த பொருட்செலவில் மீண்டும் பேக்டரி கொண்டு வந்தோம். இந்த முறை அனைத்து ரா மெடீரியல் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளின் முன் அதிகாரி சொன்னவற்றைச் செய்தோம். இதோ இன்ஸ்பெக்‌ஷன் ரிபோர்ட். கண்டெய்னர்கள் மீண்டும் அனுப்பப்பட்டன. இப்போது மீண்டும் பல டெஸ்டுகள் என்கிறார்கள். நீங்கள் தான் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் அழகுற தரப்பட்டன.

கூர்ந்து கேட்ட கவர்னர் மார்பின் மீது கை வைத்தார். நான் பார்த்துக் கொள்கிறேன். அவரது கனிவான செய்கைக்கு நன்றி கூறி கவர்னர் மாளிகை சீலை டாகுமெண்டில் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.

 

பத்து நிமிடத்தில் வேலை – மகத்தான வேலை – முடிந்தது.

பின்னர் மாலை அரவிந்த ஆசிரம தரிசனம்

மறுநாள் ஊர்.

 

நிர்வாகத்திடம் விளக்கினேன்.

எல்லோருக்கும் புரிந்தது – செய்யக்கூடியது அனைத்தையும் நான் செய்து விட்டேன் என்று.

அடுத்து என்ன?

டைரக்டருக்கு போன் செய்தேன். வரலாமா?

வாருங்கள்.

மறுநாள் அந்தமானில் ஆஜர்.

கவர்னரைப் பார்த்தாயிற்று போலும்!

 

ஆம், சார் இவ்வளவு பெரிய் பதவியில் துடிப்பாக இருக்கும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா? ஆச்சரியமாக இருக்கிறது.

வாருங்கள், சாப்பிடப் போகலாம். என் காரிலேயே வாருங்கள். உங்களை லாட்ஜில் டிராப் செய்கிறேன்.

 

போகும் வழியில் இந்தத் தீவில் மாட்டிக் கொண்ட துயரத்தை ஒரு பாட்டம் அழுதார். அவர் நட்சத்திரம், ராசி, லக்னம், இப்போது நடக்கும் தசை, புக்தி அது முடியும் தேதி என்று விலாவாரியாகச் சொல்லிப் புலம்பினார்.

 

லாட்ஜ் வந்தது. நாளை பார்க்கிறேன். தேங்க்ஸ்!

மறுநாள் காலை பத்தரை மணி.

அவர் ரூமில் நுழைந்தேன்.

சார்! உங்களுக்கு ஒரு நற்செய்தி!

எனக்கா? குட் நியூஸா?

ஆமாம் சார், உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாக சென்னை தான்!

அவர் துள்ளிக் குதித்தார்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரு பேப்பரை அவர் முன்னால் போட்டேன்.

 

அதில் அவரது ஜாதகக் குறிப்பும், கோசார ரீதியாகவும், தசா புக்தி ரீதியாகவும் நடப்பதைச் சுட்டிக் காட்டினேன். அன்றிலிருந்து 45 நாட்களில் எல்லாம் முடிந்து விடும். டிரான்ஸ்பர் உறுதி.

 

அவர் உடனடியாக போனில் மனைவியை அழைத்தார். சார் சாப்பிட வருகிறார். உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல வருகிறார். அவரே சொல்வார்.

 

வீட்டில் அவரது மனைவி காத்துக் கொண்டிருந்தார்.

அறிமுகத்திற்குப் பின்னர் அவரிடம் சொன்னேன்.

சாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாகச் சென்னை தான். வீட்டில் இருக்கும் குப்பை கூளத்தை எல்லாம் டிஸ்போஸ் செய்யுங்கள். குப்பை போகப் போக இன்கிரிமெண்ட் நிச்சயம். உடனே ஆரம்பியுங்கள். பாதியை கிஃப்டாகத் தந்து விடுங்கள். கிளம்புகிற வழியைப் பாருங்கள்.அவரால் நம்ப முடியவில்லை. பல வருடமாக டிரை செய்கிறார்.

 

சார், நீங்கள் கிளம்பும் முன் எனக்கு ஒரு வழியைச் செய்யுங்கள். இன்னொருவர் உங்கள் இடத்தில் வந்தால் அடியைப் பிடிடா என்று அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் என்னை ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

 

சாப்பிட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

அலுவலகம் வந்தவுடன் நீங்கள் கிளம்புங்கள் என்றார்.

நாளை உங்கள் ஃபிரண்ட் பத்தரைக்கு என் ரூமுக்கு வருவார். அவர் வந்த மூன்று நிமிடத்திற்குப் பின் உள்ளே வாருங்கள். ஒரு எச்சரிக்கை. உங்களைத் திட்டுவேன். உங்கள் நிறுவனத்தைத் திட்டுவேன். கோபப் படாதீர்கள்!

இப்படி க்ளூ கொடுத்து விட்டீர்களே. நன்றாகத் திட்டிக் கொள்ளுங்கள்.

 

ஏதோ ஒரு பெரிய டிராமா அரங்கேறப்போகிறது.

நான் தயார் தான்!

 

மறுநாள் பத்து மணிக்கு ஒரு மரத்தின் பின்னால் நின்றிருந்தேன்.பங்காளி நண்பர் உள்ளே சென்றார். சரியாக மூன்று நிமிடம் கழித்து உள்ளே நுழைந்தேன்.

கொதித்தெழுந்தார் டைரக்டர்.

 

மேஜையை ஒரு குத்து குத்த பேப்பர் வெயிட்டுகள் உயரப் பறந்தன.

 

வந்துட்டான்யா மூஞ்சியைக் காண்பிச்சுகிட்டு. தினமும் இதே எழவாப் போச்சு. பேரு பெத்த பேரு.ஆனா ஃபிராடு நிறுவனம்

இந்த கவர்ன்மெண்டை ஏமாத்த விட மாட்டேன். என்ன ஆனாலும் சரி. மீண்டும் மேஜையில் ஒரு குத்து. பேப்பர்கள் பறக்க பேப்பர் வெயிட்டுகள் அறையின் நாலா புறமும் சிதறின.

பியூன் உள்ளே வர நடுங்கினார்.

 

அனைவரும் ஜன்னல் வழியே, கதவு வழியே எட்டிப் பார்த்தனர்.இப்படி ஒரு கோர தாண்டவத்தை அவர்கள் இது வரை பார்த்ததில்லை.

 

அரை மணி நேரம் எனக்கும் நிறுவனத்திற்கும் திட்டு. பின்னர் காட்சி மாறியது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மதுரை சென்றீர்கள். அரசாங்கப் பணத்தில். அனைத்தையும் அப்ரூவ் பண்ணினீர்கள். இங்கு வந்த பிறகு ஒரே பல்டி. வெட்கமாயில்லை. உங்கள் கையெழுத்தை நீங்களே மதிக்கவில்லை. சரி, இவர் என்ன செய்தார்? பணம் போனாலும் பரவாயில்லை என்று அனைத்து கண்டெய்னர்களையும் திரும்ப எடுத்துச் சென்றார். திரும்ப அங்கு சென்றீர்கள். மைண்ட் இட். அரசாங்கப் பணத்தில்! உயர் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்தார். பக்கம் பக்கமாகக் கையெழுத்துப் போட்டீர்கள். அவமானமாயில்லை. உங்கள் கையெழுத்துத் தானே! இங்கு வந்தவுடன் புதிய டெஸ்ட் தேவை என்கிறீர்கள். இந்த ப்ராஜெக்டுக்கு அரசு ஒதுக்கிய கால அவகாசம் முடியப் போகிறது. ஒன்று இதை முடியுங்கள் அல்லது டிபார்ட்மெண்டையே முடித்து விடுவேன்.

மேஜையில் மீண்டும் ஒரு குத்து. இன்னும் பத்து நிமிடம் டைம் தருகிறேன். பத்தே நிமிடங்கள். அனைத்து பேப்பர்களும் கையெழுத்திட்டு என மேஜைக்கு வர வேண்டும். இந்த கண்டெய்னர்கள் சரி இல்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே. உங்களிடம் இத்தனை லட்சத்தையும் ரிகவர் செய்வேன். கவர்னர் ஆர்டர் வேறு வந்து விட்டது.

 

ஒரு வழியாக ஓய்ந்தார்.

பலர் அங்கும் இங்கும் ஓடினர்.

 

அடேயப்பா! இன்னும் இவ்வளவு பேப்பர்களில் கையெழுத்து தேவையா. அதிசயித்தேன்.

 

பத்தாம் நிமிடம் பல கத்தை பேப்பர்கள்.  கிரீன் இங்கில் மளமளவென்று கையெழுத்தை விளாசித்

தள்ளினார்.நடுநடுங்கிய பங்காளி பாபு ஓரம் கட்டப்பட்டார்.

அடுத்து அக்கவுண்ட்ஸ் மேனேஜரை சம்மன் செய்தார்.

“இதோ, எல்லாம் ரெடி. இவரது பேமெண்ட் செக் எங்கே?

“பதினைந்து நாளில் அனுப்பிடலாம் சார்!

மீண்டும் மேஜையில் ஒரு குத்து!

 

என்ன விளையாடுகிறீர்களா? இந்த ப்ராஜெக்டின் பணத்தின்  மீது கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. அது வந்து பல மாதமாக ஆகிறது. எங்கே அது? பத்து நிமிடத்தில் செக் வேண்டும். கையெழுத்துப் போட நான் ரெடி. எவ்ரிதிங் இஸ் இன் ஆர்டர் நௌ!

 

அவர் ஆடிப் போனார். சார், நாளை மத்தியானம் தருகிறேன் சார்.

 

நோ, நோ! காலை பத்து மணிக்கு என் டேபிளில் இருக்க வேண்டும். அவ்வளவு தான், எல்லாரும் போகலாம்!

என்னைப் புன்முறுவலுடன் பார்த்தார்.

திருப்தி தானே – கண்ணால் கேட்டார். கோடி தேங்க்ஸ் – கண்களினால் பதில்!

 

எப்போது கிளம்ப வேண்டும்?

ஒப்பன் டிக்கட் தான் சார்!

 

நாளை மறுநாள் எர்லி மார்னிங் கிளம்புங்கள்.

மறுநாள் காலை பத்து மணி. கத்தை கத்தையான பேப்பர்களில் அப்ரூவல்கள். ஒரு செக்!

 

அடேயப்பா! பிரம்மாண்ட தொகை!

 

கோடி நன்றி சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன். மறக்க முடியாத மாபெரும் தமிழர்!

 

ஊர் வந்து சேர்ந்தவுடனேயே தாக்கீது.

உடனடியாக ஹெட் ஆபீஸில் போர்டு மீட்டிங் அறைக்கு வர வேண்டும்.

 

அலறி அடித்துக் கொண்டு வண்டியில் விரைந்தேன்.

அங்கு சார், உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்ற அலுவலர் என்னை இழுத்துக் கொண்டு போர்டு மீட்டிங் நடக்கும் பிரம்மாண்ட அறைக்குச் சென்றார்.

அங்கு யாரும் போகக் கூடாதே!

 

கதவைத் திறந்து இதோ வந்து விட்டார் என்றார்.

மெதுவாக உள்ளே நுழைந்தேன். பேசவே இல்லை. செக்கை எடுத்து மேடத்திடம் நீட்டினேன்.

 

அதை வாங்கிப் பார்த்தார். திகைப்பு. பிறகு மலர்ச்சி. அடுத்தவரிடம் செக்கை நீட்டினார். அவர் வாங்கிப் பார்த்தார். அடுத்தவர், அடுத்தவர்.

 

ஹௌ இட் ஹாப்பண்ட்?

 

நிறுவனத்தின் கமிட்மெண்ட் .. பள பளா. அரை நிமிடத்தில் நிறுத்திக் கொண்டேன். செக்கை கேட்டேன். ஆபீஸில் தர வேண்டுமே!

 

இல்லை, என்னிடமே இருக்கட்டும். தன் ஹாண்ட் பாக்கில் வைத்துக் கொண்டார்.

 

மெதுவாகப் படி இறங்கினேன். உயர் அதிகாரிகள் வந்து என்னஎன்ன என்றனர். நடந்ததைச் சொன்னேன். ஒரே பாராட்டு.

 

ஆபீஸுக்கு செல்வதற்குள் விஷயம் பரவ அனைவருக்கும் ஆனந்தம்.

அந்த போர்டு மீட்டிங் முக்கிய டெஸிஷன்களை எடுக்கும் க்ரூசியல் மீட்டிங்காம். கட் கட் கட். ஒரே வதந்தியில் மூழ்கி இருந்தது ஆபீஸ்.

ஆனால் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டதாம். காபி மீட்டிங்காக.

 

ஒரே நிம்மதிப் பெருமுச்சு – எங்கும்!

பின்னர் அருமை நிறுவனத்தை விட்டு விருப்பத்துடன் விலகினேன்.

 

சென்னை வந்து இன்னொரு கம்பெனியில் மானேஜர் ஆனேன்.

ஒரு நாள் கீழ்க்கட்டளை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது.

 

அட, என்ன அழகாக இருக்கிறது,பாருங்கள், ஃபிஷரி டிபார்ட்மெண்ட் – டிரைவரிடம் சொன்னேன்.

ஆமாம் சார், நல்ல ஒரு டைரக்டர் வி.கி…. பெயரைச் சொன்ன அவர் சிரத்தையுடன் எல்லாம் செய்கிறார் சார்.

என்ன என்று ஒரு உற்சாக அலறல் அலறினேன்.

என்ன சார், டைரக்டரை உங்களுக்குத் தெரியுமா?

புன்முறுவல் பூத்தேன்.

 

கார் சர் என்று தார் சாலையில் வழுக்கி ஓடியது!

 

சொந்த சர்வைவலுக்காக, பெரும் பணத்தொகையைப் பெறுவதற்காக ஜோதிடத்தைத் தவறாக மூன்றாம் முறையாக என் கேரியரில் கையாண்டிருக்கிறேன்.

தப்பு தப்பு தான்!

 

 

இறைவனின் வழிகள் விசித்திரமானவை. அவன் வழிமுறைகள் என்னவென்று எனக்கே தெரியாது என்று வேத வியாஸரே சொல்லி விட்ட பின்னர் அற்பன் நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்!

மஹாகணபதியே துணை!

 

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

****

ஜோதிட கட்டுரைகள் மூன்றும் (3+1) முடிந்தன.

ஒரு தாஸியின் எட்டு அடுக்கு மாளிகை (Post No.4788)

Date: 26 FEBRUARY 2018

Time uploaded in London- 17-53

Compiled by London swaminathan

Post No. 4788

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்ரகன் என்ற மன்னன், ஸம்ஸ்க்ருதத்தில் ம்ருச்ச கடிகம் என்ற நாடகத்தை எழுதினான். இது மிகவும் அருமையான நாடகம். இதை நடேச சாஸ்திரியார் என்னும் பேரறிஞர் தமிழில் வசன ரூபத்தில் எழுதினார். பிற்காலத்தில் பண்டிதமணி கதிரேச செட்டியார் நாடகமாகவே தமிழில் மொழி பெயர்த்தார்.

இதில் வரும் சகாரன் என்னும் கதபாத்திரம் பெரும் துஷ்டன். எல்லாம் தெரிந்தது போல எல்லாவற்றையும் திரித்துப் பேசுவான். ‘’ராமாயணத்தில் திரவுபதி இப்படிச் சொன்னாளே’’ என்பான். திருடர்களின் தெய்வம் சுப்ரமண்ய சுவாமி என்ற செய்தியும், திருடர்களுக்கான ஸம்ஸ்க்ருத நூல் பற்றிய செய்தியும், கன்னம் வைக்கும் முறைகளும் இதில் வரும்  சுவையான விஷயங்கள். இங்கே வசந்த சேனை என்னும் தாசியின் எட்டு அடுக்கு மாளிகை பற்றிய செய்தியை மட்டும் தருகிறேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எவ்வளவு செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது என்பது இந்த நாடகம் மூலம் தெரிகிறது.

 

 

 

 

 

 

–subham–

Divorce Anecdotes (Post No.4787)

Date: 26 FEBRUARY 2018

Time uploaded in London- 11-07 am

Compiled by London swaminathan

Post No. 4787

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

AMERICA- HOME OF THE BRAVE

 

A large number of divorces indicate that America is still the” land of the free”, someone observed.

‘Yes’,said his friend, “but the steady level of the marriage rate shows that it is still the home of the brave”.

 

Xxx

ENOUGH IS ENOUGH

When Mrs Pierre Riendeau,  79 years old, asked for a legal separation from her 86 year old husband, the judge asked how long they had been married,

“Sixty years”, she replied.

Why are you seeking a separation after all this time ?, the court asked.

Enough is enough, she said

 

Xxx

DIVORCE WITHOUT QUARREL!

 

After the manner of Hollywood’s “civilised” social practices, Lewis Brown, the writer, and his exwife appeared together at a party and listened to the announcement of their divorce by a radio commentator.

Leopold Stokowski was among the guests, and said to Browne

“It is very indecent of you to be having such a good time.

At least when my wife and I were divorced, we quarrelled”.

 

Xxx

SWEET REVENGE!

Ilka chase likes to tell the story of the aftermath of divorce from Louise Calhern. His next wife was Julia Hoyt. Miss Chase, going through a trunk, found a box of handsome, engraved cards , bearing simply the name, Mrs Louise Calhern . Feeling it is a shame that they should go to waste, she wrapped them up and sent them to her successor , with the little Note,

“Dear Julia, I hope these reach you in time”.

 

Xxxx

 

ONE HEAD ONLY!

After the death of Jane Seymour, Henry VIII had some difficulty in getting another wife. His first offer was to the Duchesses Dowager of Milan, but her answer was, she had but one head, if she had two, one should have been at his service.

 

–SUBHAM–

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)

Venganur Temple Paintings; from Ponnambalam Chidambaram post

Date: 26 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-48 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4786

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

ச.நாகராஜன்

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)

 

 

சுமார் 28 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்.

அலுவலக மேலிட நிர்வாகத்திடமிருந்து மிக சீரியஸான தாக்கீது வந்து விட்டது.

 

அவரவர் தங்கள் worth  prove பண்ணுங்கள்! சுருக்கமான மெஸேஜ் தான். லவுட் அண்ட் க்ளியர்!

அந்தமானிலிருந்து டெண்டர் வந்தது.ரெஃப்ரிஜரேடட் கண்டெய்னர் கட்ட.

கோட் quote அனுப்பினோம்.

ஆர்டர் வந்து விட்டது. அதிசயம். மளமளவென்று வேலைகளை ஆரம்பித்தேன். சகாக்கள் அதிர்ஷ்டக்காரர் என்று  சொன்னார்கள்.

 

வேலை முடிந்தது. அந்தமானிலிருந்து உயரிய ஆபீஸரை அனுப்புமாறு ஃபேக்ஸ் கொடுத்தேன்.உடனடியாக வந்து விட்டார். எந்த வித சான்ஸும் எடுத்துக்  கொள்ள விருப்பமில்லை. ஆகவே ரா மெடீரியல் பர்சேஸ், அதன் தர் நிர்ணய சான்றிதழ், வேலை நேர்த்தி என ஒவ்வொரு பார்ட்டையும் வந்தவருக்கு விளக்கினேன். அவர் ஒரு பங்காளி பாபு.

 

 

ஒவ்வொன்றையும் செக் செய்தார். நுணுக்கமாக ஆராய்ந்தார். பின்னர் கையெழுத்திட்டார் – பேப்பர் பேப்பராக.

அனைத்தையும் கவனித்த நிர்வாகத்திற்கு சந்தோஷம்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

இவற்றை நல்லபடியாக அந்தமானில் இறக்கி ஒப்படைக்க வேண்டுமே!

ஏற்பாடுகள் மளமளவென்று நிறைவேறின. எனது அஸிஸ்டண்ட்  ஒருவர் அங்கு சென்று மேற்பார்வை பார்த்து கப்பலிலிருந்து கிரேன் தூக்குவது வரை பத்திரமாகப் பார்த்து அனைத்து கண்டெய்னர்களையும் உரிய முறையில் ஒப்படைத்து நல்ல முறையில் பெற்றுக் கொண்டோம் என்ற ரசீதையும் வாங்கி வந்தார்.

 

 

அனைவருக்கும் ஒரே சந்தோஷம்.

பத்து நாட்கள் கழித்து ஒரு பேக்ஸ் அனுப்பினோம் – பேமெண்ட் வாங்க வரலாமா என்று.

வந்தது பதில் அல்ல – இடி!

 

 

பேமெண்டா எதற்கு? எதுவுமே சரியாகக் கட்டப்படவில்லை. உடனடியாக ஒரு பெரிய டீமை அனுப்பி இங்கேயே சரி செய்யுங்கள். மற்றதைப் பற்றிப் பின்னர் யோசிக்கலாம்!

அனைவருக்கும் பகீர் என்றது.

 

மேலிடம் அவசர சம்மனை அனுப்ப அனைத்து பேப்பர்களையும் காண்பித்து ரப்பர் ஸ்டாம்புடன் உரிய கையெழுத்தை அனைத்து ஆவணங்களிலும் வாங்கியதைக் காண்பித்தேன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நேரில் போய்ப் பார்க்கிறேன்.

 

அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.

 

காலை 10 மணி. டைரக்டரைப் பார்த்தேன். ஒரு தமிழர். இளைஞர். சிரித்த முகம். பண்பாட்டின் உரு. லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. சென்ட்ரல் கவர்ன்மெண்டின் உயர்தர அதிகாரி.

அவருடன் அழாக் குறையாக அவரது ஆள் தந்த சர்டிபிகேட்டுகள், அப்ரூவல் ஆகியவற்றைக் காண்பித்து, வந்த ஃபேக்ஸையும் காண்பித்து, “இது நியாயமா ஸார்! என்று குமுறினேன்.

 

 

அவர், யார்டுக்குப் போய் அவரைப் பாருங்கள் என்றார்.

சென்றேன். மதுரை அப்ரூவல் ஒரு பேஸிக் அப்ரூவல் தான். இங்கு டெஸ்டுகள் உண்டு. அதில் பாஸாக வேண்டும். ஆனால் இவை pass ஆகாது. ஆகவே ஒரு பெரிய டீமை அனுப்புங்கள். பார்க்கலாம்.

 

ஆர்க்யுமெண்ட் எதுவும் செல்லுபடியாகவில்லை.

ஐந்து நாட்கள் ஓடின. நிர்வாகத்திடம் தெரிவித்தேன். என்ன செய்யலாம்?

 

இங்கு ஒன்றும் செய்ய முடியாது. கடற்கரை பரந்த வெளி. கண்டெய்னர்களை மதுரை கொண்டு வர வேண்டியது தான்.

ஓகே. கொண்டு வாருங்கள்.

 

டைரக்டரிடம் சென்று சொன்னேன். “ ஆனால் இது அநியாயம் சார்

“இவன் இப்படித்தான். இரண்டு கம்பெனிகளைத் தவிர தீவுக்குள் வேறு யாரையும் வர விட மாட்டேன் என்கிறான். ஆல் தி பெஸ்ட்

 

பெருத்த செலவில் கண்டெய்னர்கள் திருப்பிக் கொண்டுவரப்பட்டன.

 

அனைவரும் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஆனால் தீவிர ஒத்துழைப்பை நல்க ஆரம்பித்தனர். இது அசாதாரணமான ஒன்று தான்.

மீண்டும் அந்தமான் அதிகாரியை வரவழைத்தோம்.

அந்தந்த ரா மெடிரியலின் கம்பெனியின் உயர்தர அதிகாரி வந்து முகாமிட்டார். பிரஸ்டிஸ் இஷ்யூ ஆகி விட்டது.

சீலண்ட் கம்பெனியோ ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து தனது ஆட்களை அனுப்பியது.பெரிய டீம்.

வந்தவரிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டோம்.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதன்படி செய்கிறோம். எதானாலும் இங்கேயே ஃபைனல்.

 

 

சுமார் 30 அடிக்கு 60 அடி குடோனை வைத்து ஆட்டம் போடும் அவர் நூற்றுக்கணக்கான பிரமாண்டமான மெஷினரிகள், பல நூறு தொழில்நுட்ப தொழிலாளிகள், ஏழே கால் ஏக்கர் (பல்லாயிரம் சதுர அடி) பரப்பிலான ஃபேக்டரி ஆகியவற்றை பார்க்கத் தான் செய்தார்.

 

 

என் விதி, விடவில்லை – அவ்வளவு தான்!

எல்லாம் முடிந்தன. ஒவ்வொரு பேப்பராக கையெழுத்து வாங்கப்பட்டது. அவர் வந்தால் தான் வேலை துவங்கும். 10 மணி நேரம் பார்க்கச் சொன்னாலும் அனைத்துத் தொழிலாளர்களும் அபாரமான ஒத்துழைப்பை நல்கினர்.

எல்லாம் pass!

 

 

கண்டெய்னர்களை அந்தமான் அனுப்பலாம் என எழுத்துபூர்வமாக வாங்கிக் கொண்டோம்.

அவர் கிளம்பினார். அடுத்த நாள் கண்டெய்னர்களும் கிளம்பின.

 

ஃபேக்டரியில் பிரம்மாண்டமான இடம் காலி. அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு.

கண்டெய்னர்கள் சேர்ந்தவுன் ஃபேக்ஸ் அனுப்பினோம். பேமெண்டி ரெடியா, வரலாமா?

வாருங்கள் பார்க்கலாம்.

 

அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.

ஆனால் இளங்கோ அடிகள் சொன்னார் இல்லையா – “ஊழ்வினை உருத்து வந்தூட்டும்” –என்று!

வினை வந்தது.

 

இன்னும் அது சரியில்லை, இது சரியில்லை. எங்கள் டெஸ்ட் முடிய பல வாரங்கள் ஆகும். டெஸ்டில் பாஸ் ஆனால் பேமெண்ட் பற்றி யோசிக்கலாம்.

டைரக்டரிடம் குமுறினேன். சார், இது பழி வாங்கும் நடவடிக்கை போல இருக்கிறது. நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா? இல்லையேல் நான் அந்தமான் கவர்னரைப் பார்க்க நேரிடும்.

 

பாருங்கள்.

 

கவர்னர் ஆபீஸ் அருகில் தான் இருந்தது. அங்கு ஒரே கும்பல். உடனடியாக ஒரு பெடிஷனை ரெடி செய்தேன்.

 

நடந்ததை நிர்வாகத்திடம் சொல்லி பெர்மிஷன் வாங்கினேன்.

கவர்னரைப் பார்ப்பது சாத்தியமா? பாருங்கள்.

 

மறுநாள் காலை கவர்னர் ஆபீஸில் ஆஜர். கூட்டத்தையே காணோம். வெறிச்சோடி இருந்தது. என்ன ஆயிற்று?

விசாரித்தேன். முதல்நாள் வரை கவர்னராக இருந்த புருஷோத்தமதாஸ் தாண்டன் ராஜிநாமா செய்து விட்டாராம். கேரளத்தில் சொந்த ஊரில் எலெக் ஷனில் நின்று தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறாராம்.

 

அப்போது அந்தமான் நிர்வாகம்?

 

புதுவை கவர்னராக இருக்கும் ராஜேந்திரகுமாரி பாஜ்பாயி அடுத்த ஆள் நியமிக்கும் வரை அந்தமானின் கூடுதல் பொறுப்பை நிர்வகிப்பாராம்.

 

நிர்வாகத்திடன் சொன்னேன். என்ன செய்யப் போகிறீர்கள்.கிளம்பி வருகிறேன். அங்கு புதுச்சேரி கிட்ட இருக்கிறது. அங்கு அவரைப் பார்க்கிறேன்.

 

மறுநாள் மதுரை. உடனே அடுத்த நாள் புதுவை. கவர்னரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன்.

அங்கு அலுவலகம் சென்ற போது அவர் அலுவலகம் வரவில்லை.

 

கீழே அவர் இருப்பிடம். மேலே ஆபீஸ்.

அவர் வயது 87. உடல்நிலை சரியில்லை என்றால் வரமாட்டார்.

 

Picture from Lalgudi Veda’s post

ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

சரி அரவிந்த ஆசிரமம் கர்மயோகியையாவது பார்க்கலாம்.

அவர் இல்லம் சென்றேன். அவர் தனிப்பட்ட யோக சித்தியை மேற்கொண்டிருப்பதால் யாரையும் பார்க்க மாட்டாராம்.

வந்ததைச் சொல்லி அனுப்பினேன்.

 

சில புஷ்பங்களை ஆசீர்வதித்து அனுப்பினார். ஏமாற்றம் தான். புஷ்பங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

 

ஒரு நப்பாசை. எம்.பி.பண்டிட் பார்க்க அனுமதிப்பாரா என்று.

புன்முறுவலுடன் வரவேற்றார். வங்கத்தினரே அணியும் முறையில் வேஷ்டியை யோக வேஷ்டியாக்ப் போட்டிருந்த அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார்.

நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலம் கேட்டு மகிழ்ந்தார்.

 

நிறுவனமே அரவிந்த பக்த குடும்பம்.

ஆசிரமத்தில் சமாதி அருகே தியானம்!

பின்னர் ஊர் வந்து சேர்ந்தேன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நாளையே புதுவை மீண்டும் செல்லப் போகிறேன்.

போய் வாருங்கள்.

மறுநாள் புதுவையில் ஆஜர்.

 

காலை 10 மணிக்கு செக்யூரிட்டியின் அனுமது பெற்று முதல் ஆளாக கவர்னர் அலுவலகத்தில் ஆஜர்.

 

 

நான் கவர்னர் அறையில். விளக்கு கூடப் போடவில்லை. நான் அங்கு ரெடி!

****    

அடுத்த பகுதியுடன் முடியும்

 

 

31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

 

31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

Written by London Swaminathan 

 

Date: 25 FEBRUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4785

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் 2018  ‘நற்சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- மாசி/ பங்குனி மாதம்)

இந்த மாத காலண்டரில் நாலடியார் நானூறு என்னும் நீதி நூலில் இருந்து 31 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழாக்கள் – மார்ச் 1 ஹோலி, மாசி மகம் ;  14-காரடையான் நோன்பு; 18- யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, வஸந்த பஞ்சமி ஆரம்பம்; 22- வஸந்த பஞ்சமி; 25- வஸந்த பஞ்சமி முடிவு, ஸ்ரீ இராமநவமி, ஷீர்டி சாய் பாபா பிறந்த தினம்; 29- மஹாவீர் ஜயந்தி’;  30- புனிதவெள்ளி, பங்குனி உத்திரம்.

பௌர்ணமி– 1, 31; அமாவாசை– 17  ; ஏகாதஸி விரதம்-13, 27;

சுப முகூர்த்த தினங்கள்:- 4, 5, 26, 30

 

 

 

மார்ச் 1 வியாழக்கிழமை

 

பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,அகடுற யார் மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் (காளை உழுது பெற்ற உண்வை பகுத்து உண்க; செல்வமானது, நடு நிலையுடன், வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்)

மார்ச் 2 வெள்ளிக்கிழமை

 

நின்றன நின்றன நில்லாவென உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க (நிலையாக இருக்கும் என்று எண்ணப்பட்டவை நிற்காது; ஆகையால் உங்களுக்குப் பொருந்திய அறப்பணிகளை உடனே செய்க)

 

மார்ச் 3 சனிக்கிழமை

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின், யாரும் பிறந்தும் பிறவாதாரில் (தர்மம் செய்து கருணை உடையவராக இருங்கள்; அப்படி செய்யாவிடில் பிறந்தும் பிறவாதவரே)

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த

பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் (ஒரு நன்மை செய்தாலும் கூட அதற்காக சான்றோர் 100 பிழைகளையும் பொறுப்பர்)

 

மார்ச் 5 திங்கள் கிழமை

வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது (குற்றமில்லாத நூல்களைக் கற்றும், அதன் உட்கருத்தை அறியமாட்டார் புத்தி இல்லாதவர்)

மார்ச் 6 செவ்வாய்க் கிழமை

மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்திச்

செய்ததெனினுஞ் செருப்பும்தன் காற்கேயா

மெய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் (தங்க, ரத்ன செருப்பானாலும் காலில்தான் பயன்படும். கீழ்களுக்குச் செல்வம் இருந்தாலும் அவர்களின் செயல்களே அவர்களைக் காட்டிவிடும்)

 

மார்ச் 7  புதன் கிழமை

 

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டால்

பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் (கொஞ்சம் உதவி செய்தாலும் உயர்ந்தோர் அதைப் பெரிதாகப் பாராட்டுவர்)

 

மார்ச் 8 வியாழக்கிழமை

 

முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை

யிந்திரனா வெண்ணி விடும் ( முந்திரி என்னும் சிறு தொகைக்கும் சற்று மாகாணி செல்வம் அதிகரித்தவுடன் கீழ்மட்ட மக்கள் தங்களை இந்திரன் என்று எண்ணுவர்)

 

மார்ச் 9 வெள்ளிக்கிழமை

நுண்ணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் ( நுட்பமான அறிவு உடையோருடன் அமர்ந்து புசிப்பது தேவ லோகம் போல இன்பம் தரும்)

 

மார்ச் 10 சனிக்கிழமை

காம நெறி படரும் கண்ணினாற்கு இல்லையே

ஏம நெறி படருமாறு (வயதான காலத்திலும் காமம் உடையோருக்கு

நிலையான இன்பம்/ பாதுகாப்பு இல்லை)

 

மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை

 

பாய்திரைசூழ் வையம் பயப்பினு மின்னாதே

ஆய்நல மில்லாதார் பாட்டு (உலகமே கிடைப்பதானாலும் நல்ல குணம் இல்லாதார் நட்பினை விரும்பமாட்டார்கள் சான்றோர்)

 

மார்ச் 12 திங்கள் கிழமை

கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி

விடாஅ ருலகத் தவர் ( செல்வம் உடையோர் ஒரு காசு தராதபோதிலும், மக்கள் அவரைச் சுற்றி வட்டம் இடுவர்)

 

மார்ச் 13  செவ்வாய்க் கிழமை

 

அருளினற முரைக்கு மன்புடையார் வாய்ச்சொற்

பொருளாகக் கொள்வர் புலவர் (பெரியோர் சொல்லும் புத்திமதியை நல்லோர் பெரும்பேறாக கொள்வர்)

மார்ச் 14  புதன் கிழமை

நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்த்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் (வாய்க்கு வந்தபடி பாடம் சொல்லும் நேர்மையற்ற புலவருடன் அடக்கமுடைய நற்புலவர் சேர மாட்டார்கள்.)

 

மார்ச் 15 வியாழக்கிழமை

 

தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்

தெருண்ட வறிவினவர் (தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்)

 

மார்ச் 16 வெள்ளிக்கிழமை

 

வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மான மழுங்க வரின் (சுவர்க்கமே கிடைப்பதாயினும் , மானம் கெட்டுப்போக நேரிட்டால் , மானமுள்ள பெரியோர் அதை நாட மாட்டார்கள்)

 

மார்ச் 17 சனிக்கிழமை

கடையெலாங் காய்பசி யஞ்சுமற்றேனை

இடயெலா மின்னாமை யஞ்சும்….தலையெல்லாம் சொற்பழி யஞ்சிவிடும் (பயத்தின் வகை: கடைத்தரத்தில் உள்ளோர் பசிக்கு பயப்படுவர்; இடைத் தரத்தில் உள்ளோர் துன்பத்துக்கு பயப்படுவர் ; முதல் தரத்தில் உள்ளோர் சொல்லால் வரும் பழிக்கு பயப்படுவர் )

 

மார்ச் 18 ஞாயிற்றுக்கிழமை

 

புறங்கடை வைத்தீவர் சோறு மதனால்

மறந்திடுக செல்வர் தொடர்பு (செல்வந்தர் நம் வீட்டுக்கு வந்தால் மனைவியை அறிமுகம் செய்து, சோறு படைப்போம்; நாம் அவர்கள் வீட்டுக்குப் போனால் மனைவியின் கற்பழிந்துவிடுவது போல நம்மை வாசலில் வைத்தே சோறு போடுவர்; அவர்களை மறப்பதே நலம்)

 

மார்ச் 19 திங்கள் கிழமை

 

உள்ளூர்

இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்

விருந்தினனா நாதலே நன்று (ஒருவர்க்கு சோறு போட முடியாவிட்டால், உள்ளூரில் இருந்து காலத்தைக் கழிக்காமல் நாமே பிச்சை எடுத்தல் நன்று)

 

மார்ச் 20  செவ்வாய்க் கிழமை

வாழாதார்க்கில்லை தமர் ( பொருள் இல்லாமல் வாழ்வோருக்கு சுற்றத்தார் இல்லை)

 

மார்ச் 21 புதன் கிழமை

கலா அற் கிளிகடியுங் கானக நாட

இலாஅ அர்க் கில்லைத் தமர் ( கல் கொண்டு கிளி ஓட்டும் காடுகளைக் கொண்ட மன்னவா! செல்வம் இல்லாதவர்களுக்கு உறவினர் இல்லை)

மார்ச் 22 வியாழக்கிழமை

 

இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து (பிச்சை எடுக்கும் துன்பம் உள்ளவன், புகை போக முடியாத இடத்திலும் புகுந்துவிடுவான்)

மார்ச் 23 வெள்ளிக்கிழமை

 

இரவலர் கன்றாக வீவார வாக

விரகிற் சுரப்பதாம் வண்மை (பிச்சை எடுப்போர் கன்று; பிச்சை இடுவோர் பசு; இப்படி, தானே அன்புடன் சுரப்பதே கொடுக்கும் குணம்)

 

 

மார்ச் 24 சனிக்கிழமை

அட்டதடைத்  திருந்துண்டொழுகு  மாவதின் மாக்கட்

கடைக்குமா மாண்டைக் கதவு (சமைத்ததைத் தாமே சாப்பிடும் குணமில்லாத மனிதருக்கு மேலுலகத்தின் கதவானது மூடப்படும்)

 

 

மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை

ஓதியுமோதா ருணர்விலா ரோதாதும்

ஓதியனையா ருணர்வுடையார் (பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தும் படியாதவர்களே; பகுத்தறிவு உடையோர், ஓதாமலும் படித்தவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்;பகுத்தறிவு = விவேகம்)

 

மார்ச் 26 திங்கள் கிழமை

வலவைகளல்லாதார் காலாறு சென்று

கலவைகளுண்டு கழிப்பர் (பேய்த்தனம் இல்லாத நல்லோர் தூர இடங்களுக்குச் சென்று பல விதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வர்; வலவை= இடாகினி, காளி ஆகியோருக்கு ஊழியம் செய்யும் பேய்கள்)

 

மார்ச் 27 செவ்வாய்க் கிழமை

செல்வம் பெரிதுடையாராயினுங் கீழ்களை

நள்ளா ரறிவுடையார் ( மிகுந்த செல்வம் படைத்திருந்தாலும் கீழ் மக்களாக இருந்தால், அவர்களை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்; கீழ்கள்= குணத்தினால் கீழானவர்கள்)

மார்ச் 28 புதன் கிழமை

 

கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா வுடம்பிற் கறிவு ( கோல் கொண்டு அடித்துச் சொன்னாலும்  புண்ணியம் செய்யாத உடம்புக்கு ஞானம் புக மாட்டாது/ வராது)

மார்ச் 29 வியாழக்கிழமை

 

கடாஅயினுஞ் சான்றவர் சொல்லார் பொருண்மேற்

படாஅ விடுபாகறிந்து (கேட்டால் கூட, எங்கு தன் சொல் எடுபடாதோ, அங்கே அறிஞர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்; மூடர்கள் சபையில் பேசார்)

 

மார்ச் 30 வெள்ளிக்கிழமை

 

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே

பூவின் கிழத்தி புலந்து (சரஸ்வதி தேவி உறைவதால், அவ்விடத்தில் பிணங்கி, லெட்சுமி தேவி சேர மாட்டாள்; பணமுள்ள இடத்தில் அறிவு இராது)

மார்ச் 31 சனிக்கிழமை

 

உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம்

(நம்மை நன்கு அறிந்த, நம் குணத்தைப் பாராட்டும் விவேகம் உள்ளவர்களை சந்தித்து அளாவும்போது இன்பம் ஏற்படும்)

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

–SUBHAM–

 

ஜோதிடர் மோசடியும் 114 மோசடி முறைகளும் (Post No.4784)

Date: 25 FEBRUARY 2018

Time uploaded in London- 8-16 am

Written by London swaminathan

Post No. 4784

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரிட்டிஷ் லைப்ரரி (இலண்டன்) யில் ஒரு பழைய நூலைக் கண்டேன். 1907-ஆம் ஆண்டில் தூசி. இராஜகோபால பூபதி என்பவர், 115 விதமான மோசடிகளைப் பற்றி எழுதியுள்ளார். எல்லாமே சுவையான விஷயங்களே. இது சென்னையிலிருந்து வெளியான நூல். இதில் முதல் மோசடி ஜோதிட மோசடி ஆகும்; ஜோதிடர்கள் எப்படி, வாடிக்கையாளரிடம் இருந்தே விஷயத்தைக் கறந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை இதில் காணலாம்.

 

புஸ்தகத்தின் பெயர் மதிமோச விளக்கம்

இந்த நூல் தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவும்;  ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒவ்வொரு தொழில் செய்வோரும் பயன்படுத்திய சொற்களும், அவர்கள் பேசும் முறையும் அப்படியே உள்ளது. இப்பொழுது தமிழ் கற்போருக்கு அது எவ்வளவு புரியும் என்பது கேள்விக்குறியே. இதோ ஜோதிடர்கள் ஏமாற்றும் முறை:

 

 

 

 

 

 

 

 

 

 

–SUBHAM–

வேலைக்காரர் படும் பாடு! (Post No.4783)

Date: 25 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-19 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4783

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வேலைக்காரர் படும் பாடு!

 

ச.நாகராஜன்

 

உலகியல் வாழ்க்கையில் அனைவரது நிலையையும் மிகச் சரியாகக் கணித்து அனுதாபப்படுபவர் கவிஞர் பர்த்ருஹரியைப் போல இன்னொருவரைப் பார்ப்பது துர்லபம்.

வேலைக்காரர்களின் மனோபாவத்தையும் அவர்கள் படும் பாட்டையும் நீதி சதகத்தில் விளக்குகிறார். (பாடல் 47)

 

பாடலைப் பார்ப்போம்:

 

மௌநாத் முக:ப்ரவசந

படு வாசகோ ஜல்பகோவா

த்ருஷ்ட: பார்ச்வே பவதி ச

வஸந் தூரதோப்ய ப்ர கல்ப: |

க்ஷாந்த்யா பீருர்யதி

ந ஸஹ்தே ப்ராயசோ

நாபி ஜாத: ஸேவாதர்ம:

பரம கஹந; யோகிநாமப்ய கம்ய: ||

 

வேலக்காரன் (மௌநாத்) சற்றுத் தள்ளி ப்வ்யமாக இருந்தால் ஊமை எனப்படுகிறான்,

நன்றாகப் பேசினாலோ (ப்ரவசன ப்டு) அதிக ப்ரசங்கி எனப்படுகிறான்.

யஜமானன் பக்கத்தில் நின்றாலோ (பார்ச்வே பவதி) துணிச்சல்காரன் எனப்படுகிறான்.

தூரத்தில் (தூரத:) இருந்தாலோ தைரியமற்றவனாக நினைக்கப்படுகிறான்.

வசவு, திட்டுகளைப் பொறுத்தால் (க்ஷாந்த்யா) பயந்தாங்கொள்ளி எனப்படுகிறான்.

வார்த்தைகளைப் பொறுக்காவிட்டாலோ (யதி ந ஸஹதே) நல்ல குலத்தில் பிறந்தவன் இல்லை என்கிறார்கள்.

பிறரிடம்  ஊழியம் செய்யும் காரியமானது (ஸேவா தர்மம்) பெரும்பாலும் மிகவும் கடினமானது. (பரம கஹன)

மூன்று காலமறிந்த யோகிகளுக்கும் கூட புலப்படாதது. ( யோகிநாமபி அகம்ய)

 

ஒரு நல்ல வேலைக்காரன் எப்படி ஊழியம் செய்தாலும் விமரிசிக்கப்படுகிறான்.

 

அவனால் என்ன தான் செய்ய முடியும்?

 

ஆகவே தான் வாழ்நாள் முழுவதும் ஊழி யம் செய்வதில் மாட்டிக் கொண்ட ஒருவன் இருந்தும் இறந்தவனே என்று பெரியோர் சொல்கின்றனர்.

 

(இருந்தும் இறந்தவர் யார் யார் கட்டுரையைப் பார்க்கவும்)

 

நன்றி: எஸ்.கல்யாணசுந்தரம் 11-2-1949, கும்பகோணம்

பிரசுரகர்த்தா & மானேஜர்

ஸ்ரீ ஜனார்த்தனா பிரிண்டிங் பிரஸ்

***

POETS’ CLOSE OBSERVATION ON BEES! (Post No.4782)

Time uploaded in London- 19-48

Written by London swaminathan

Post No. 4782

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Tamil and Sanskrit poets are keen observers of nature. We have already seen how Dattatreya and others observed the nature and learnt from them. Crows and snakes are used by the poets and saints to teach us lot of things. Two poets warn us not to accumulate money so that we would not lose like the bees. William Wordsworth said, ‘Let Nature be your Teacher’; Hindu poets have been following it for over two thousand years. Here are two verses about the bees:

Chanakya says,

The pious people should always give food and money in charity, never should they accumulate them. The glory of the illustrious Karna, Bali and Vikramditya persists unabated even now. Look, the honey bees rub their hands and feet because of the despondency of losing honey that they had gathered for long.

–Chanakya Niti 11-18

 

deyam bhojyadhanam sadaa sukruthirbinaa sanchitavyam sadaa

sriikarnasya nhaleerasca vikramateradhyaapi kiirtihi sthithaa

 

asmaakammadhu daanabogarahitam nashtam chiraat sanchitam

wirvaanaaditi paanipaathayugale garshantyaho makshikaahaa

xxx

A Tamil poet in Naladiyar says………………

Naladiyaar is a Tamil didactic book composed by Jain saints in Tamil. The poet Padumanaar, who compiled 400 verses, says,

“Those who vexing their own bodies by stinting in food and clothing, perform not acts of charity that ever remain undestroyed, but avariciously hoard up a great wealth, will lose it all. O Lord of the mountains, which touch the sky, the bees that are driven away from the honey they have collected bear testimony to this.

 

—-Subham–

 

 

 

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —