காளை- தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5730)

கட்டத்திலுள்ள 25 க்கும் மேலான தமிழ் சொற்களைக் கண்டு பிடியுங்கள்; விடை கீழே உள்ளது

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 13-59 AM

Post No. 5730


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1              
        2 3      
               
4     5     6 7
              8
          9.    
      10.       15A    
  11.   12       13 14
            15    
          16      

குறுக்கே

1.காளை

2.அவன் எனது……..; அவனின்றி என்னாலொன்றும் செய்ய முடியாது

4.செம்பு

6.பால் தரும் பிராணி

9.மந்திரங்கள் எழுதி பூஜிக்கலாம்

10.ஆச்சர்யம்

11.கார்பன்டைஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஆக்கும் அற்புத ஜீவன்

13.குடித்தால்  ஆடலாம்

14.புதல்வி

15.வணங்கத் தக்கவர்,

16.-குப்பை

கீழே

1.வள்ளுவர் கையில் இருப்பது

2.மணப்பெண்

3.சீரான தாளப் போக்கு

5.மறை; காதோடு காதாக

6.உடகாரலாம், எழுதலாம் இதில்

7. (8)காலடிப் பதிவு; சிறிய

10.நோன்பு

12.கடவுளர் பவனி வரலாம்

13.மென்மை,இனிமை,அன்பு

15 15A- ரோ ஜாவில் உண்டு, வறண்ட நிலத்திலும் மண்டிக் கிடக்கும்


  ரு து        
  ழு     க் கை  
த்          
தா   மி ம்   சு
  ணி     ர்  
      சி   டு
      வி   ப் பு    
    ம்   ள்
          மு னி  
      ம் கூ   வு  

ANSWERS

குறுக்கே

1.எருது-காளை

2.வலக்கை- அவன் எனது……..; அவனின்றி என்னாலொன்றும் செய்ய முடியாது

4.தாமிரம்- செம்பு

6.பசு- பால் தரும் பிராணி

9.தகடு- மந்திரங்கள் எழுதி பூஜிக்கலாம்

10.வியப்பு- ஆச்சர்யம்

11.மரம்- கார்பன்டைஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஆக்கும் அற்புத ஜீவன்

13.கள்- குடித்தால்  ஆடலாம்

14.மகள்- புதல்வி

15.முனி- வணங்கத் தக்கவர்,

16.கூளம்-குப்பை

கீழே

1.எழுத்தாணி- வள்ளுவர் கையில் இருப்பது

2.வது-மணப்பெண்

3.லயம்- சீரான தாளப் போக்கு

5.ரகசியம்- மறை; காதோடு காதாக

6.பலகை- உடகாரலாம், எழுதலாம் இதில்

7.சு (8)வடு- காலடிப் பதிவு; சிறிய

10.விரதம்- நோன்பு

12.ரதம்- கடவுளர் பவனி வரலாம்

13.கனிவு- மென்மை,இனிமை,அன்பு

15முள் 15Aபுதர்- ரோ ஜாவில் உண்டு, வறண்ட நிலத்திலும் மண்டிக் கிடக்கும்

குறுக்கே

1.எருது,2.வலக்கை,4.தாமிரம்,6.பசு,9.தகடு,10.வியப்பு

11.மரம்,13.கள்,14.மகள்,15.முனி,16.கூளம்

கீழே

1.எழுத்தாணி,2.வது,3.லயம்,5.ரகசியம்,6.பலகை,7.சு (8)வடு

10.விரதம்,12.ரதம்,13.கனிவு,15முள் 15Aபுதர்

XXX SUBHAM  XXX

TWO INVENTIONS THAT CHANGED THE WORLD! (Post No.5729)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 13-13 AM

Post No. 5729


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Inventors anecdotes

Inventor of Steam Boat Shed Tears of Joy!


One of the most interesting incidents of a business nature isthat which concerns the first steam boat fare paid to Robert Fulton. Thenarrator of this, who was also one of the actors on the scene says,


“I chanced to be at Albany on business when Fulton arrived there in his unheard-of craft, which everybody felt so much interest in seeing. Being ready to leave and hearing that this craft was going to return to New York, I repaired on board and inquired for Mr Fulton.
I was referred to the cabin, and there found a plain, gentlemanly man, wholly alone, and engaged in writing.


Mr Fulton, I presume

Yes, sir.

Do you return to New York with this boat?
We shall try to get back, sir.
Can I have a passage down?
You can take your chance with us, sir.

I inquired the amount to be paid, and, after a moment’s hesitation a sum
I think six dollars was named, the amount in coins, I laid in his open hand, and, eye fixed upon it, he remained so long motionless, that I suppose d there might be a miscount, and said to him,


Is that right, sir?


This question roused him as a kind of reverie, and as he looked up to me the big tear was brimming in his eye, and his voice faltered as he said,


Excuse me, sir; but memory was busy as I contemplated this, the first pecuniary reward I have ever received for all my exertions in adapting steam to navigation. I should gladly commemorate the occasion over a bottle of wine with you, but I am really too poor, even for that just now.”


Xxx


‘I was not Thomas Alva Edison’


A step which seems obvious after it has been taken is frequently obscure before the way has been pointed out, no matter how close to it we may have been led by the slow and painful processes of subdividing an electric current

Subsequently a patent suit arose over the matter in which famous English physicist Tyndall, was called upon to testify.
He mentioned that he had followed the same course taken by Edison and had hesitated before the final step which now seemed so childishly clear


One of the attorneys demanded of him
When the next step was so obvious, Why did you not take it?
Because, said Tyndall,


‘I was not Thomas Alva Edison’.

Xxx

How Gramophone was invented!


Thomas A Edison told, himself, about the invention of thephonograph
I was working on the telephone, developing the carbon buttontransmitter. My hearing wasn’t too good and I couldn’t get the sounds asclearly as I wanted to, so I fixed a short needle on the diaphragm of thereceiver. When I left my finger rest lightly on this needle the pricks would showme its amplitude and that is what I wanted to find out.

One day when I was testing this way it occurred to me that ifI could indent a yielding substance with these vibrations I could reverse theprocess and reproduce the sounds. I sat down and made a sketch of a machinethat I thought would do the trick.

Then I called in John Krusei, my chief mechanic. I explainedthe mechanism and asked him what he would charge me for making it. He said hewould make it for thirty dollars and I told him to go ahead. Then he asked mewhat it was for, and I told him it was going to talk. He thought i was jokingand went away laughing.

When he finished the machine and brought it back to me I putthe tin foil on, stared her up, and recited
‘Mary had a little lamb’
When I reversed and the words began to come back, Kruseinearly fell over.

Tags- Robert Fulton, phonograph, Tyndall, Edison, steam boat


Xxx SUBHAM xxx

யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 11-38 AM

Post No. 5728


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

உலகை, ஏன் பிரபஞ்சத்தையே உருவாக்கிய மூலகங்கள் 118. அவைகளில் மூன்று தனிச் சிறப்புமிக்கவை. எளிதில் பிளவு பட்டு(fissile)  பிரம்மாண்டமனான சக்தியை வெளியிடும். மின் சக்தியையும் உண்டாக்கல்லாம். அணு குண்டு போட்டு உலகையும் அழிக்கலாம்.அந்த மூன்று

1.தோரியம்- இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது

2.ப்ளூடோனிஉயம்

3.யுரேனியம்.

இந்த மூன்றில்  ‘கில்லாடி’  யுரேனியம்தான். அதிகம் கிடைப்பது- அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது- என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.யுரேனியம் தேய்ந்து ஈயம் ஆகி விடும் ஆனால் இது இயற்காஇயில் நடக்க ’‘நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டகாலலலலம்ம்ம்ம்ம்ம்’’ ஆகும்.

தானாக அணுசக்தியை வெளியிட்டு பிரியவல்ல, மூன்று கதிரியக்க மூலகங்களில் மிகவும் அபகீர்த்தி வாய்ந்தது யுரேனியம்தான். இதைக் கொண்டு உருவாக்கிய இரண்டு அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றை மாற்றின. அதாவது இரண்டாவது உலக மஹா யுத்தத்தை முடிக்க ஜப்பானின் தலையில்  அமெரிக்கா போட்ட யுரேனியம் அணுகுண்டுகள்.

இதில் முதல் குண்டுக்கு வைத்த பெயர் சி’ன்னப் பையன்’ (little boy) .அதை 1945-ம் ஆண்டில் ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. ‘சின்னப்பையன்’ அடுத்த நொடியில் 50,000 கட்டிடங்களை தரை மட்டம் ஆக்கினான். 75,000 பேரைக் கொன்றான். இது நடந்தது ஆகஸ்ட் 6. அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் நாகசாகி நகர் மீது மற்றொரு குண்டு போட்டு அதை நாஸசாஹியாக மாற்றியது அமெரிக்கா. அதன் பிறகு ஜப்பான் சரண் அடைந்தது. உலகின் கதையும் மாறியது.

வரலாற்றை நிறுத்திவிட்டு விஞ்ஞானத்துக்கு வருகிறேன். இந்த யுரேனியத்தில் இருந்து கதிரியக்கம் (radiation) வரும். அது புற்று நோயை(cancer)  உண்டாக்கும். மனிதனின் மரபணுக்களைச் சிதைத்து ஊனமுள்ள குழந்தைகளை உருவாக்கும்.

கிரேக்க புராணத்தில் வானத்தின் தேவதை யுரேனஸ் (Uranus). ஒளிவீசும்இந்த உலோகத்துக்கு, இதைக் கண்டுபிடித்தவர், இதற்கும் அந்த தேவதையின் பெயரைச் சூட்டிநாமகரணம் செய்தார்.

யுரேனியத்துக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயரும் உண்டு. இது  பிரியும்போது ஏற்படும் வெப்ப சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கலாம். இந்தியா உள்பட உலகம் முழுதும் அணு சக்தி மின்சக்தி நிலையங்கள் இருக்கின்றன. இதனால் நிலக்கரி சுரங்கங்கள் செயலிழந்து போயின. ஒரு கிலோ யுரேனியம் உலோகம், 1500 டன் நிலக்கரி எரிக்கும் சக்தியை உருவாக்கும்.

ஆனால் இதிலும் பிரச்சனைகள் உண்டு. நிலக்கரி எரிவதை நிறுத்தினால் புறச்சூழல் மாசு குறையும் என்று சந்தோஷப்பட்டோம். யுரேனிய எரிப்பினால் வரும் கழிவுப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. ஒன்று கதிரியக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் ஆகவே அதைப் பெட்டிப்பாம்பாகக் கட்டிப்போட வேண்டும். அதாவது கதிரியக்கம் வெளியே வராதபடி  கடலுக்கு அடியில்  ஈயப் பெட்டிக்குள் புதைக்க வேண்டும். இரண்டாவது பிரச்சனை இந்த அணு மின்சக்தி ஆலைகளில் பயன்படுதப்பட்ட யுரேனியக் கழிவைக் கொண்டு அணுகுண்டு செய்யலாம். இந்தியா வெடித்த அணுகுண்டுகளும் இப்படி செய்யப்பட்டவைதான். பல நாடுகள் யுரேனியத்தைக் கடத்தி அணுகுண்டுகளைச் செய்கின்றன. என்ன செய்வது?

கத்தியைக் கண்டு பிடித்தோம். சமையல் அறையில் காய்கறி வெட்டவும்பயன்படுத்துகிறோம். எங்கள் லண்டனில் வாரத்துக்கு ஒருவர் வீதம் கத்திக் குத்தில் சாகவும்பயன்படுகிறது. எதுவானாலும் இறுதி முடிவு மனிதன் கையில்தான்.

யுரேனியத்தின் அணு எண் 92

கொதி நிலை 1132 DEGREE C

உருகு நிலை  3754 DEGREE C

அரக்கனாகவும் தேவனாகவும் செயல்படும் இந்த யுரேனியம் காட்சிக்கு இனியன். பார்த்தால் அப்பாவி! வெள்ளி நிற உலோகம், தங்கம் போல தட்டிக் கொட்டலாம்.

யுரேனியம் மூன்று வகையில் அவதாரம் எடுக்கும்; இதை வேதி இயல் விஞ்ஞானிகள் ஐஸ்டோப்புகள் (Isotopes) என்பர்;

யுரேனியம்- 234

யுரேனியம்- 235

யுரேனியம்- 238

யுரேனியம்- 235 இரண்டாகப் பிரியும் காலத்தில், ஏராளமான வகை மூலகங்களாக அது மாறிக்கொண்டே வந்து இறுதியில் ஈயமாக மாறி நின்று விடும். பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையில் கிரிப்டான் முதல் யூரோபியம் வரையுள்ள மூலகங்களாக வாய்ப்பு உண்டு.

அணு மின்சார நிலையங்களில் (Nuclear Reactors)  யுரேனியம்- 235 பயன்படுகிறது. இது வெளியிடும் மூலகஐஸ்டோப்புகளில், மிகவும் ஆபத்தானவை ஸ்ட் ரா ன்ஷியம்-90, அயோடின் -131 ஐஸ்டோப்புகள்ஆகும். ஏனெனில் மனித உடல் இவைகளை எளிதில் கிரஹிக்கும். அவற்றின் கதிரியக்கம் புற்றுநோய் முதலான நோய்களை உண்டாக்கும்.

பிரிட்டனில் செல்லாபீல்ட், ரஷ்யாவில் (உக்ரைன்) செர்னோபிள் ஆகிய இடங்களில் அணு உலை விபத்து நடந்தபோது பெரும் பிரச்சனை ஏற்பட்டது அயோடின்-131 ஐசடோப்பால்தான்.

யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் பெர்லின் (ஜெர்மனி) நகரைச் சேர்ந்த கிளாப்ராத் என்பவர். 1789ம் ஆண்டில் இது நடந்தது. அவர்தான் ‘யுரான்’ என்று நாமகரணம் செய்தார். ஆனால் இதன் மஹிமை/தீமை தெரியாமல் இதை கண்ணாடிகளுக்கு கலர் ஊட்டப் பயன்படுத்தினர்.

1896ல் தான் இதன் கதிரியக்க குணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாரிஸ் நகரில் ஹென்றி பெக்கரல் என்பவர் டேபிள் டிராயரில் வைத்திருந்த போட்டோ பிலிமில் ஒளிக்கசிவு ஏற்பட்ட தடயம் கிடைத்தது. எப்படி இருட்டறையில் இது நடக்க முடியும் என்று  பெக்கரல் வியந்தார். பின்னர்தான் தெரிந்தது அதே இடத்தில் வைத்திருந்த யுரேனிய உப்புதான் இந்த விஷமத்தைச் செய்தது என்று. பின்னர் இதன் விஷமத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு செய்யும் புது வரலாறு உருவானது.

யுரேனியம் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்

மனித உடலில் 0.1 மில்லிகிராம் யுரேனியம் உள்ளது

சில வகைத் தாவரங்கள் நிறைய அளவு யுரேனியத்தைச் சேகரித்து வைக்கின்றன.என்னகாரணம் என்று தெரியவில்லை. ஆனல் அதிசயத்திலும் அதிசயம் அவை அதனால் பாதிக்கப் படுவதில்லை.

பாசியைவிட சற்று உயர்ந்த நிலையில் வைக்கப்படும் லைகன்ஸ் இவ்வாறு சேகரித்து வைக்கின்றன. ட் ர பீலியா இன்வல்யூடா (trapelia involuta) என்ற லைகன்(lichens) இப்படிச் செய்கிறது.

சிட் ரோ பாக்டர் என்ற பக்டீரியாவும் இப்படிச் செய்கிறது.

ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தினர் 2000 ஆண்டுப் பழமையான  ரோமானிய கண்ணாடிகளை ஆராய்ந்ததில்  அவர்களும் அந்தக் காலத்தில் கண்ணாடிக்கு நிறம் ஏற்ற யுரேனியம் ஆக்ஸைடைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் அது கலர் ஊட்டும் ஒரு உப்பு. யுரேனியம் என்று தெரியாது.

இப்படி பல சுவையான செய்தி உடைய யுரேனியத்தின் விலை மிகவும் அதிகம்.அணுகுண்டு செய்யலாமே!!!

Tags- 
யுரேனியம், கதிரியக்கம்,
அணுகுண்டு

–சுபம்–

லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!! (Post No.5727)

Written by SNagarajan

Date: 3 DECEMBER 2018


GMT Time uploaded in London –9- 51 am


Post No. 5727

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஹிந்தி பக்தி இலக்கியம்

லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!

ச.நாகராஜன்

பாரதம் கண்ட பெரும் பக்தர்களுள் ஒருவர் கபீர்தாஸ்!

கபீர்தாஸரின் தோஹாக்கள் மிக அற்புதமானவை! பெருங் கருத்துக்களைக் குறள் போல இரு வரிகளில் அவர் அடக்கிச் சொல்லும் விதம் அற்புதம்! அத்துடன் அவரது சொல் விளையாட்டும் மிக பிரமாதமாக இருக்கும்.

அவரது சிறந்த பாடல்களில் ஒன்று இது.

லாலி மேரே லால் கி, ஜித தேகூ தித லால் |

லாலி தேகன் மை கயி, மை பீ ஹோ கயி லால் ||

Laali meri laal ki, jit dekhu tit laal

Laali dekhan mein gayi, mein bhi ho gayi laal

लाली मेरे लाल की, जित देखू तित लाल |

लाली देखन में गयी, में भी हो गयी लाल ||

எனது அன்பிற்குரிய சிவப்பைப் பார்க்கப் போனேன்!

எங்கு நோக்கினும் செக்கச் சிவப்பு!

செக்கச் சிவந்த சிவப்பைப் பார்க்கப் போனேனா?

நானும் சிவப்பாகவே மாறி விட்டேனே!

The redness (illumination)of my beloved is everywhere

When I went to see the redness I also became illuminated

MEANING

When a devoteerealizes God, he sees illumination of God all over the world. He also mergesinto God’s love in such a way that all the differences between him and Goddisappears. He realizes

இதன் பொருள் ஆழ்ந்த இறை உணர்வு கொண்ட பொருள் ஆகும்.

இறைவனைப் பார்க்கப் போகிறார் கபீர். மிக ஒளி பொருந்திய சிவப்பு வண்ணமாக செஞ்ஜோதியாக பிரகாசிக்கிறது இறைவனின் ஒளி வெள்ளம்! அது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளிர்கிறது.

ஆசையுடன் செஞ்ஜோதியைப் பார்க்கப் போன கபீர்

செக்கச் சிவந்த ஜோதியுடன் ஒன்றாகவே கலந்து விட்டார்.

அடடா! என்ன அற்புதம்!

திருஞான சம்பந்தர் தனக்கு விருப்பமில்லாமல் இறைவனின் ஆணைப்படி தனது திருமணத்தை முடித்தவுடன் இறைவனை வேண்ட ஒளி வெள்ளம் பிரகாசிக்கிறது. அதற்குள் தன்னுடன் இருந்தவர்களுடன் உள்ளே செல்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி, ஒரு தனிப் பெரும் கருணை அல்லவா!

ஜோதி வெள்ளத்தைக் கண்ட வள்ளலார் அதற்குள் செல்கிறார், நம்மையும் வா, வா என்று அழைக்கிறார்!

அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்பது தெளிந்த பின் சிவம் எனும் ஜோதியை தியானிக்க ஆரம்பித்த திருமூலர் சிவமாகவே அமர்ந்திருக்கும் கதை தான்!

நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் மாபெரும் இரகசியம் ஒன்றை விளக்குகிறார். பக்தியில் கரை கண்டவர் அல்லவா அவர்! மக்கள் உய்ய வேண்டி,பெரும் ரகசியத்தைத் தனது சூத்திரத்தில்  சொல்கிறார்.

55வது சூத்ரம் இது:

தத் ப்ராப்ய ததேவாவலோக்யதி, ததேவ ஸ்ருணோதி, ததேவ பாஷ்யதி, ததேவ சிந்தயதி

Thad prapya thadevaavalokayathi, thadeva srunothi, thadeva bhashayathi, thadeva chinthayadhi.

One who possesses this love of “devotion”, is able to only see Him everywhere, is able to only hear of Him always, is able to only talk about Him always and always thinks about iHim .

தத் சிந்தனம்

தத் வாக்யம்

தத் ஆவலோக்யம்

தத் பரம்

பரம்பொருளின் மீது பக்தி கொண்ட ஒருவன் அதைப் பற்றியே சிந்திக்கிறான் (தத் சிந்தனம்) ;அதைப் பற்றியே பேசுகிறான்  (தத் வாக்யம்) ; அதை மட்டுமே எங்கும் பார்க்கிறான்(தத் ஆவலோக்யம்)!

 கடைசியில் அதாகவே ஆகிறான்.(தத் பரம்)

கபீர்தாஸரின் பக்தி அனுபவமும் இது தான் என உணர முடிகிறது.

லாலி தேகன் மை கயி (செஞ்ஜோதியைப் பார்க்கப் போனேன்)

ஜித தேகூ தித லால் (எங்கு பார்க்கினும் செம்மை தான்)

மை பீ ஹோ கயி லால்! (அதில் கலந்து நானும் சிவப்பாகிப் போனேன்)

பக்தரின் வெற்றிகரமான பயணம் இது; இரண்டற இறைவனுடன் ஒன்றாக ஆகிய அற்புத, புனிதப் பயணம்!

கபீர் தாஸரின் தோஹா ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கும்!

TAGS– லாலி தேகன் மை கயி,  
கபீர் 

***

Uranium Wonders (Post No.5726)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 20-49

Post No. 5726


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

       
 

Uranium Wonders


In 1912, R T Gunther of Oxford University a first century CE Roman villa onCape Posilipo on the Bay of Naples, and came across a mosaic in which therewere curiously coloured glass pieces. When these were analysed it wasdiscovered that their tint was due to the presence of uranium oxide. They mighthave deliberately added this mineral to colour the glass.

In 1998, researchers from the Natural History Museum, London, discovered thatthe lichen Trapelia involuta was happily growing on spoil heaps from an abandonedUranium mine in Cornwall, UK. X Ray investigations showed that the lichen wasabsorbing and storing, uranium in the walls of its outer fruit cells, althoughfor what purpose is not known. Yet the lichen appeared to be unaffected by it.

Although uranium is radioactive, it is not particularly rare and is moreabundant than tin. While uranium itself is not particularly dangerous, some ofits decay products do pose a threat, especially radon.

When a uranium-235 atom splits in two , it can produce all kinds of otherelements , but most tend to be in the weight range s of 90-105( krypton toruthenium) and 135-145(technetium to europium). Among the former isstrontium-90 which was particularly worrying. This element is easily absorbedby human beings and dangerously radioactive.
Another radioactive element released by uranium fission is iodine-131, which isequally worrying. During the nuclear reactor break down s in Sellafield, UK andChernobyl, Russia, this dangerously radio active element was absorbed by humanbeings.


Chemical Symbol U


Atomic number 92


Melting point 1132 degree C


Boiling point 3754 degree C

Uranium is a silvery, ductile, malleable, radioactive metal. It is one of the three fissile material s, the others being plutonium and thorium.

Uranium has three radioactive isotopes


Uranium 238 with a half life of 4-5 billion years
Uranium 235 with 700 millions years
Uranium 234 is produced when uranium 235 decays .

Uranium isotopes decay until they become lead. The presence of lead and uraniumhelp us to date the rocks. Even the earths age 4-57 billion year was discoveredin this way.

Atomic bomb
The first atom bomb used in Second World War was a uranium bomb. Code namedLittle Boy it was dropped on the Japanese city Hiroshima on 6 th August byAmerica. It destroyed 50000 buildings and 75000 people. Enriched uranium 235was used to make this bomb. Another bomb was dropped on Nagasaki on 9 thAugust.


The good use of uranium is in the production of electricity in the nuclearpower plants. In theory one kilogram of uranium can produce energy equivalentto 1500 tonnes of coal. So it is a big energy source. Nuclear power red navalvessels are used by several countries. Though there is lot of good things aboutthis element the biggest worry is disposing the wastage. More over the leftover of uranium reactors can be used to make bombs.

Large deposits of uranium are found in Canada, USA, Australia and South Africa..


Uranium compounds are used in industry.



The element was named after the Greek god Uranus, god of sky. The strange thingabout this element is some micro- organisms absorb it and survive without anybad effect. Bacterium Citrobacter readily absorbs uranyl ions. In 1789 M H Klaprothdiscovered uranium compound and named it Uranium. 

TAGS- uranium, atom bomb, radio active
Subham

INDIAN POETS WORD SEARCH (Post No.5725)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 14-17

Post No. 5725


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Over 15 great poets’ names are in the Word Search Square. If you cant find them look at the answer.

Just some clues

initial letters are in Red.

The poets who composed Ramayana in Tamil, Hindi and Sanskrit

Marathi, Guajarati, Bengali poets.

Four women poets are in the square 12

 M I R A V U L L A V
E K A N A T H I S K
    I B A K     V A A
  I   M E H T A E D L
T     A S A Y V D I H
A     K A L I D A S A
R   N A R S I N G A N
  A V V A I     N L A
H   V A L M I K I A U  
  B E R O G A T G T  

answers

VYASA, VALMIKI,,KAMBAR, VALLUVAR, BHARATI, AVVAI,TULSIDAS,EKANATH, NARSING MEHTA, KABIR, TAGORE,KALIDASA GANGA DEVI,KALHANA,MIRA.

tags- Poets, word search

-subham-

எலி அடித்தேன்; வேலை போச்சு- தாமஸ் ஆல்வா எடிஸன் (Post No.5724)



WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 8-29 am

Post No. 5724

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பிரபல விஞ்ஞானியும் கண்டு பிடிப்பாளருமான தாமஸ்  ஆல்வா எடிசன் இரண்டு முறை வேலையை இழந்தார். இதை அவர் சிரித்துக் கொண்டே சுவைபட உரைப்பதைக் கேளுங்கள்:

“ஒரு தந்தி ஆபீஸில் வேலைக்குப் போனேன். நிறைய தந்திகள் வந்து கொண்டே இருந்தன.இந்தப் பாழாய்ப்போன மிஷின் இப்படி மெதுவாக வேலை செய்கிறதே; இதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தந்திகள் குவிந்தன. அவைகளைப் பார்க்கவும் இல்லை; மற்றவர்களுக்கு அனுப்பவும் இல்லை. மானேஜர் அய்யா வந்தார். இன்றுடன் உன் சீட்டு கிழிந்தது; வீட்டுக்குப்போ என்றார். நானும் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் வீட்டுக்குப் போனேன்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா? என்றார் ஆல்வா!”

இன்னொரு ஆபீஸுக்கு வேலைக்குப் போனேன். அந்தப் பாழாய்ப் போன ஆபீஸில் எங்கு பார்த்தாலும் எலிகள்; கரப்பான் பூச்சிகள். நானா சும்மா இருப்பேன்; ஒரு அருமையான கருவியைக் கண்டு பிடித்தேன். அந்தக் கருவி அவைகளைக் கொசு அடிப்பது போலக் கொன்று குவித்தன. எனக்கு இந்தப் படுகொலையில் பேராநந்தம்; அலுவலகத் தரை முழுதும் இரத்த வெள்ளம்! எலிகளும் பூச்சிகளும் கால் பட்ட இடமெல்லாம் கிடந்தன. மானேஜர் அய்யா வந்தார். ஏனய்யா, எடிஸனாரே! அலுவலகத்தை சுடுகாடாக மாற்றி விட்டீரே; இதுக்கா உமக்கு சம்பளம்? வீட்டுக்குப் போம்! என்றார்.

நாயை அடிப்பானேன், XXXXயைச் சுமப்பானேன் – என்ற பழமொழிக்கு இணங்க வீட்டுக்கு வந்தேன்.

சிரித்துக் கொண்டே மிடுக்காகச் சொன்னார் எடிஸன்.

மானேஜர் அய்யா, ஆல்வாவுக்கு அல்வா கொடுத்த கதை இது

xxxx

நான் விஞ்ஞானி அல்ல; பணமே எனக்குக் குறி

ஒரு முறை தாமஸ் ஆல்வா எடிஸனைப் பாராட்டி ஒரு கட்டுரை , ஒரு பத்திரிக்கையில், வெளியானது. அதை நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

“அந்தக் கட்டுரை முழுக்க தப்பு. நான் விஞ்ஞானி அல்ல. நான் ‘பக்கா பிஸினஸ்மேன்’; வியாபாரி; எனக்கு எல்லாம் ‘துட்டு’ பற்றியே சிந்தனை; ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு வெள்ளிப்பணம் கையில் வரும் என்று எண்ணித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பேன். பாரடேயை வேண்டுமானால் விஞ்ஞானி என்று சொல்லலாம். அவர் எனக்குப் பணம் சம்பாதிக்க நேரமே இல்லை என்பவர். எனக்கு காசேதான் கடவுள்– என்றார் ஆல்வா

xxxx

தந்திரக்கார எடிஸன்!!!

தாமஸ் ஆல்வா எடிஸன் ஒரு பங்களா வைத்திருந்தார். அது கோடை காலத்தில் தங்கும் விடுதி; எல்லோருக்கும் பெருமையாகச் சுற்றிக் காண்பிப்பார். அங்கே எல்லா நவீன வசதிகளும் , அதிசயமான கருவிகளும் இருக்கும். ஒரு முறை ஒரு பார்வையாளர் கூட்டம் வந்தது. எல்லோரையும் சுற்றிக் காண்பித்தார். தோட்டத்தின் வழியாக அடுத்த பகுதிக்குச் செல்ல வேண்டியி ருந்தது. அங்கு ஒரு கம்பியால் மறைக்கப்பட்ட தள்ளும் கேட் (வாசல்) இருந்தது. ஒவ்வொருவரும் அதைத் தள்ளினால் அது நகரும்; ஒவ்வொருவராக செல்லலாம். அதைத் தள்ள மகத்தான சக்தி தேவையாக இருந்தது.

ஒருவருக்கு வியப்பு ; ஐயா எடிசனாரே! வீடு முழுக்க அதி நவீன கருவிகளை வைத்திருக்கிறீர்; இங்கு மட்டும் நாங்கள் மூச்சுப் பிடித்துத் தள்ள வேண்டிய  கம்பி கிராதி கேட் வைத்திருக்கிறீரே என்ன காரணமோ? என்று வினவினார்.

தந்திரக்கார எடிஸன் சிரித்துக்கொண்டே செப்பினார்:

நீங்கள் ஒவ்வொருவரும் மூச்சுப் பிடித்து அதைத் தள்ளி உள்ளே போகும்போதும் எட்டு காலன் தண்ணீர் என் (தோட்டத்து) வீட்டில் பாயும் என்றார்.

நல்ல தந்திரமான கண்டுபிடிப்பு!

எடிஸனோ கொக்கோ!

TAGS-விஞ்ஞானி, எடிஸன், காசேதான் கடவுள்,  எலி அடித்தேன்

–சுபம்–


கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்! (Post No.5723)




Written by S Nagarajan

Date: 2 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 10 am


Post No. 5723





Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog





ஆங்கில இலக்கியம்


கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்!


ச.நாகராஜன்




கடற்கரைக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கடற்கரை மணல் பரப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
அதில் என் பெயரையும் தேதியையும் எழுதினேன். மகிழ்ச்சியுடன் நடந்தேன்.
சற்று தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். அடடா! பெரிய அலை ஒன்று வந்தது.




நான் எழுதிய அனைத்தையும் அடித்துக் கொண்டு போனது!
சரி, போனது போகட்டும், அது இப்படி எனது ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க முடியாதல்லவா?
நிலை நின்று இருக்கப் போகும் அடையாளக் குறிகளை நான் விட்டுச் செல்ல மாட்டேனா, என்ன?


அற்புதமான கருத்தை, மனதைத் தொடும் சொற்களால் சொல்கிறார் பெண் கவிஞர்  
ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்.




ஒரு பெண்ணின் மனதும்  
இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது.
அவர் எழுதியதை – ஆற்றிய செயல்களை – வெளி உலகம் அழிக்க முயல்கிறது.
பெண் தொடர்கிறார், செயலாற்றுகிறார், நிறைய அடையாளங்களை உலகில் நிரப்புகிறார். Every Mark-ஐயும்
அது அழித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா! Lasting Record Stands!
கவிதையைப் பார்ப்போம் வாருங்கள்!







A Name in the Sand
By Hannah Flaff Gould (1789-1865)


[Born in Lancaster, Mass., 1789. Died at Newburyport, Mass., 1865.]




ALONE I walked the ocean strand;    

                                                              
A pearly shell was in my hand:

                                                              
I stooped and wrote upon the sand    

                      
                                        
My name—the year—the day.

                                                              
As onward from the spot I passed,  
5
                                                              
One lingering look behind I cast;    

                                                              
A wave came rolling high and fast,    

                                                             
 
And washed my lines away. 

    

                                                              
And so, me thought,’twill shortly be   

                                                              
With every mark on earth from me:  
10
                           
                                   
A wave of dark oblivion’s sea

                                                              
Will sweep across the place   

                                                              
Where I have trod the sandy shore  

  
                                                            
Of time, and been, to be no more,   

                                                              
Of me—my day—the name I bore, 
15
                                                              
To leave nor track nor trace.  

    

                                                              
And yet, with Him who counts the sands   

                                                              
And holds the waters in his hands,

                           
                                   
I know a lasting record stands

                                                              
Inscribed against my name,   
20
                                                              
Of all this mortal part has wrought, 

                                                              
Of all this thinking soul has thought,  

                                                              
And from these fleeting moments caught  

                                                 
             
For glory or for shame.





ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட் (பிறப்பு 3-7-1789 மறைவு 5-9-1865) அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் லங்காஸ்டரில் பிறந்தவர்.
அவரது தந்தை அமெரிக்க புரட்சிப் போரில் போர்வீரராக இருந்தார். சிறு சிறு கவிதைகளை அவர் எழுத ஆரம்பித்தார். பல பத்திரிகைகள் அவரது கவிதைகளை பிரசுரித்தன.






எப்போதும் சிறிய விஷயமாக ஆரம்பிப்பார். அது பின்னால் பிரம்மாண்டமாகி ஒரு பெரிய கருத்தை வலியுறுத்தும். கடற்கரை மணலில் அவர் எழுதியது ஒரு அலையால் அழிந்து போனது. அவ்வளவு தான், ஒரு சின்ன விஷயம்! ஆனால் அதையே உலகியல் அரங்கிற்கு அவர் பின்னால் கொண்டு வருகிறார்.
என்ன அநியாயம், செய்யும் ஒவ்வொரு செயலையும் – ஒரு பெண்ணின் மனம் நோக, உலகம் அழிக்கிறது.




கடற்கரை மணலில் மேலாக எழுதப்பட்ட பெயரை அலை அடித்துக் கொண்டு போனாலும் கீழே இருக்கும் கிளிஞ்சல் உள்ளிட்டவை இருக்கிறது.




வெளி உலகில் அவர் செய்தவற்றை அழிக்க முயன்றாலும் அத்துடன் அழியாத பல குறியீடுகள் நிலையாக இருக்கும்.
இதற்கெல்லாம் கவலைப்படலாமா, என்ன? செய்கின்ற நல்ல காரியங்களை ஆற்றிக் கொண்டே இருப்போம்!


ஹன்னா தனது கவிதைகளை மூன்று தொகுதிகளாக ‘Poems’ என்ற எளிய தலைப்பில் வெளியிட்டார். பின்னால் தனது எழுத்துப் படைப்புகளையும் Gathered Leaves என்ற தலைப்பில் வெளியிட்டார்.
பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை இவரது படைப்புகள் பெரிதும் கவர்ந்தன. ‘எ நேம் இன் தி சேண்ட்’ என்ற இந்தக் கவிதை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்று.




நம்மை பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ள விடாமல் கால வெள்ளத்தில் அனைத்தும் அடிபட்டுப் போகும் என்பதைச் சொன்னாலும் சரி, அல்லது அந்தக் கால வெள்ளத்தில் நிலை நிறுத்தும் செயல்களைச் செய் என உத்வேகம் மூட்டினாலும் சரி, நமது Lasting Record Stands!






 TAGS- ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்., கடற்கரை மணல்


****

Edison was Sacked Twice! (Post No.5722)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 17-29 am

Post No. 5722


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

I am not a scientist! I am business man!

Thomas A Edison never forgot his role as a business man. The profit motive was an essential part of his temperament. Once he said practically to a friend referring to a newspaper article which discussed him as a scientist,
That is wrong. I am not a scientist. I am an inventor. Faraday was a scientist. He didn’t work for money, he said he hadn’t time. But I do. I measure everything I do by the size of a silver dollar. If it doesn’t come up to that standard, then I know it is no good.

Xxx

Cunning Edison



The late Thomas A Edison had a very beautiful summer residence in which he took great pride. One day he was showing his guests about, pointing out all the various labour saving devices on the premises. Turning back toward the house it was necessary to pass through a turn style which led on to the main path. The guests soon found out that it took considerable force to get through this device.
Mr Edison, one of his guests asked, how is it with all these wonderful modern things around, you still maintain such a heavy turnstile?

Said Mr Edison, his eyes lighting up with laughter,
Well, you see, everyone who pushes the turnstile around pumps eight gallons of water into the tank on my roof.


Xxx

Sacked for Killing Rats!

I got fired twice, said Edison.
The first time was when I was a telegraph operator. It was my fault, alright, but I got so interested in the dinged machine and its workings that I began to see how I could improve it. But I forgot all about the messages that were coming over the wire, and I left a lot of messages unsent and undelivered. Of course, they discharged me and I didn’t blame them, he added.

Then he laughed again, I got a job in an office, and there were a fearful lot of rats; terribly old office, you know. I got up a thing that killed them like flies— the same with cockroaches. The floor used to be covered with dead roaches and they fired me for that.


Thomas A Edison, sacked twice, business man
Xxx Subham xxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- (Post No.5721)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 14-19 am

Post No. 5721


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தக் கட்டத்தில் 25-க்கும் மேலான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடிக்க, கீழேயுள்ள குறிப்புகள் உதவும். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1




23
 4



9a





5


6

78






9.
10







11





12


1314



15.



16.17


18

19.

குறுக்கே

1. முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்

2. -இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது

4. 3. வீட்டுக்குத் தேவை; திருட்டைத் தடுக்கும்

5. -கை

5. அழுக்கு

6. 7. (8) – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது

9.யானை தின்னும்

11.புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு

12. கெட்ட– தின் எதிர்ப்பதம்

14.துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்

15. எழுப்பு

16.வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி

19.பேரனுக்குப் பாட்டி சொல்லுவது

கீழே

1. சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி

2. அம்பின் துணைவன்

4. அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்

6. கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்

7. கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்

8. கட்டிடம் கட்ட உதவும்

8. குருகுலத்தில் கிடைப்பது

9. எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்

9. a – மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்

10.வாழ்

11.சிடுமூஞ்சி

11.ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது

12.இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது

13.-பாடல் பிரியன்

14.துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்

15.மக்கள் வசிக்கும் பூமி

16. இது உடையான் படைக்கு அஞ்சான்

17. போய்,,,,, விட்டு,,,,,, கை,,,,,,,

18. கையில் அணிவது

answer:–

Answer:–

ண்ணாடி

விசாடுட் பூ


மு

ல்

சுமா 
ட்
லைச்சிம்
லை
டை
ழை





பி
முப்பு
ல்

ம்சு
புப்சு
த்


விடு

கா

தை

குறுக்கே

1.கண்ணாடி,2.விசா,4.பூட்டு ,3சாவி, 5.மாசு, 6.மலைச் 8.சி (7)கரம்,

9.தழை,11.முகப்பு, 12.நல்ல , 15.உசுப்பு, 16.தவிடு,14.சுகம்,19.கதை

கீழே

1.கவட்டை, 3.பூமாலை, 2.வில்- அம்பின் துணைவன், 9.தலை முடி,

6.மழை, 7.சிவப்பு, 8.கல்வி, 8.கல்,8.கரம் ,10.வசி, 11.முதலை,

18.காப்பு, 17.விடு,11.முசுடு, 12.நத்தை, 13.கவி, 14.சுடு, 15.உலகம்,

16.தம்பி,

குறுக்கே

1.கண்ணாடி- முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்

2.விசா-இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது

4.பூட்டு 3.சாவி- வீட்டுக்குத் தேவை;திருட்டைத் தடுக்கும்

5.கரம் -கை

5.மாசு – அழுக்கு

6.மலைச் 7.சி (8)கரம் – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது

9.தழை- யானை தின்னும்

11.முகப்பு- புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு

12.நல்ல- கெட்ட– தின் எதிர்ப்பதம்

15.உசுப்பு- எழுப்பு

16.தவிடு- வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி

14.சுகம்- துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்

19.கதை- பேரனுக்குப் பாட்டி சொல்லுவது

கீழே

1.கவட்டை- சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி

2.வில்- அம்பின் துணைவன்

4.பூமாலை- அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்

6.மழை- கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்

7.சிவப்பு- கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்

8.கல்- கட்டிடம் கட்ட உதவும்

8.கல்வி- குருகுலத்தில் கிடைப்பது

9.தலை-எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்

9.aமுடி- மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்

10.வசி- வாழ்

11.முசுடு- சிடுமூஞ்சி

11.முதலை- ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது

12.நத்தை- இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது

13.கவி-பாடல் பிரியன்

14.சுடு- துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்

15.உலகம்- மக்கள் வசிக்கும் பூமி

16.தம்பி- இது உடையான் படைக்கு அஞ்சான்

17.விடு

18.காப்பு- கையில் அணிவது

TAGS-குறுக்கெழுத்துப் போட்டி,கண்ணாடி

–subham–