மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112)

Written by London Swaminathan

Post No. 16,112

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மஹாபாரதப் போர் நடந்த தேதி பற்றி அறிஞர்கள் கூற்று என்ன ?

2

மஹாபாரதத்துக்கும் மர்ம எண் 18-க்கும் உள்ள தொடர்பு என்ன ?

3

சங்க இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இந்த இதிகாசம் குறித்து என்ன சொன்னார்கள் ?

4

உலக இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் மஹா பாரதத்தின் சிறப்பு என்ன ?

5

மஹாபாரதத்தை எழுதியர் யார் ? மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் யார் ?

6

மஹாபாரத யுத்தத்தில் எத்தனை டிவிஷன் படைகள் இருந்தன   ? அவைகளின் கமாண்டார்கள்/ தளபதிகள் யார் ?

7

பழங்காலத்தில் தமிழ்மொழியில் இதை மொழிபெயர்த்தர்களா ? அது பற்றிய செய்தி எந்தக் கல்வெட்டில் உள்ளது ?

8

பீஷ்மர் அக்குபங்க்சர் முறையை பயன்படுத்தி எத்தனை நாட்களுக்கு அம்புப் படுக்கையில் இருந்தார்; ஏன் ?

9

அர்ஜுனன் தன்னுடைய சொந்த மகனையே இழந்தான் ! அது எப்படி?

10

மறைந்து வாழவேண்டிய 13 ஆவது ஆண்டில் யார் யார் என்னென்ன வேஷம் போட்டார்கள் ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

Sculpture of Chakra Vyuha- army formation– that caused the death of Arjuna’s son.

1.மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

**

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

**

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

**

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

***

2.மஹாபாரத்திலுள்ள 18 பருவங்கள்

சித்தர்கள் 18, தர்ம நூல்கள் 18, யாகங்கள் 18, பாஷைகள் 18, புராணங்கள் 18, உப புராணங்கள் 18, தேவாசுரப் போர் 18 ஆண்டுகள், ராம- ராவணன் யுத்தம் 18 மாதங்கள், மஹா பாரதப் போர் 18 நாட்கள், சேரன் செங்குட்டுவன் – க னக  விஜயன் போர் 18 நாழிகை,மஹா பாரத பர்வங்கள் 18, கீதையில் அத்தியாயங்கள் 18, தமிழ் நாட்டுக்கு அகஸ்தியர் அழைத்து வந்தா குடிகள் 18,  சங்க இலக்கிய நூல்கள் 18, அதற்குப்பின் வந்த கீழ்க்கணக்கு நூல்களை 18, கணங்கள் 18, சைவத் திரு மடங்கள் 18…….இவ்வாறு 18–ன் பெருமை மஹத்தானது. மகாபாரதப் போரில் மொத்தம் 18 அட்சௌகிணி (11+7 Divisions) சேனை பங்கேற்றது. இதில் கௌரவர்களின் தரப்பில் 11 அட்சௌகிணி சேனைகளும், பாண்டவர்களின் தரப்பில் 7 அட்சௌகிணி சேனைகளும் சண்டையிட்டன.

 மஹாபாரதம் 18 பர்வங்களின் பெயர்

1.   ஆதிபர்வம்      

2.   சபாபர்வம்   

3.   வனபர்வம்    

4.   விராடபர்வம்                 

5.   உத்யோகபர்வம்                

6.   பீஷ்மபர்வம்                           

7.   துரோணபர்வம்                      

8.   கர்ணபர்வம்               

9.   சல்யபர்வம்                        

10. சௌப்திகபர்வம்                 

11. ஸ்த்ரீபர்வம்                       

12. சாந்திபர்வம்                       

13. அநுசாஸனபர்வம்                    

14. அஸ்வமேதிகபர்வம்             

15. ஆஸ்ரமவாசிகபர்வம்                    

16. மௌஸலபர்வம்                 

17. மஹாப்ரஸ்தானிக பர்வம்       

18 ஸ்வர்காரோஹண பர்வம்      

****

பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள்

பகவத் கீதை 18 அத்தியாயங்களின் பெயர்கள்

  • அத்தியாயம் 1: அர்ஜுன விஷாத யோகம் (அருச்சுனின் கவலை மற்றும் ஏக்கம்)
  • அத்தியாயம் 2: சாங்கிய யோகம் (கீதையின் சாரம் மற்றும் ஆத்மாவின் தன்மை)
  • அத்தியாயம் 3: கர்ம யோகம் (செயல் மற்றும் கடமையின் வழி)
  • அத்தியாயம் 4: ஞான கர்ம சந்நியாச யோகம் (மெய்யறிவு மற்றும் தியாகம்)
  • அத்தியாயம் 5: கர்ம சந்நியாச யோகம் (செயல்களும் துறவும்)
  • அத்தியாயம் 6: த்யான யோகம் / ஆத்ம சம்யம யோகம் (தியானப் பயிற்சி)
  • அத்தியாயம் 7: ஞான விஞான யோகம் (இறைவனின் முழுமையான அறிவு)
  • அத்தியாயம் 8: அட்சர பிரம்ம யோகம் (எல்லையற்ற பிரம்மத்தை அடைதல்)
  • அத்தியாயம் 9: ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் (மிக இரகசியமான தூய அறிவு)
  • அத்தியாயம் 10: விபூதி யோகம் (இறைவனின் எல்லையற்ற பெருமைகள்)
  • அத்தியாயம் 11: விஸ்வரூப தர்சன யோகம் (இறைவனின் பேரருள் வடிவம்)
  • அத்தியாயம் 12: பக்தி யோகம் (இறைப்பற்றின் வழி)
  • அத்தியாயம் 13: சேத்ர சேத்ரக்ஞ விபாக யோகம் (உடலும் ஆன்மாவும்)
  • அத்தியாயம் 14: குணத்ரய விபாக யோகம் (இயற்கையின் மூன்று குணங்கள்)
  • அத்தியாயம் 15: புருஷோத்தம யோகம் (உயரிய பரம்பொருளின் நிலை)
  • அத்தியாயம் 16: தெய்வாசுர சம்பத் விபாக யோகம் (தெய்வ மற்றும் அசுர குணங்கள்)
  • அத்தியாயம் 17: ச்ரத்தாத்ரய விபாக யோகம் (நம்பிக்கையின் வகைகள்)
  • அத்தியாயம் 18: மோட்ச சந்நியாச யோகம் (முழுமையான துறவும் சரணடைதலும்

****

3.போரில் இறந்த பாண்டவர், கௌரவர், நினைவாக தமிழ் மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு படைத்தான் . பெருஞ்சோறு என்பது போர் வீரர்களின் நினைவாக  திதி போல ஆண்டில் ஒரு தினத்தில் எல்லோருக்கும் விருந்து வைப்பதாகும் பெருஞ்சசோறு என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரும் வேறு இடங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு – 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = செத்த பின்னர் ;  வரையாது = அளவில்லாது)பெருஞ்சசோறு  படைத்த

xxx

பகவத் கீதை உபதேசத்தைக்  கூறியது

தொல் ஆணை நல் ஆசிரியர்

புணர்கூட்டு உண்ட  புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் போல — என்ற மதுரைக்கு காஞ்சி வரிகளில் உள்ளதை நச்சினார்க்கினியர் உரையில் காணலாம்.

xxxx

சிறுபாணாற்றுப்படை

காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்

(சிறுபாணாற்றுப்படை அடிகள்,  238-239)

(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)

என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.

காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

xxx

பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று,  அக்குரன் என்றபெயரைக் கூறுகிறது  ; தலை ஏழு வள்ளல்களில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது கர்ணன் ஆக இருக்கலாம்; ஆதாரம் கிடைக்கவில்லை என்று தமிழ் தாத்தா உ வே சா எழுதியுள்ளார்

போர்தலை மிகுத்த  ஈர் ஐம்பதின் மரோடு

துப்புத்துறை போக்கிய , துணிவுடை ஆண்மை

அக்குரல் அனைய கைவண்மையையே – 14-5/7  பதிற்றுப்பத்து.

xxx

கலித்தொகையில் நிறைய செய்திக ள் உள்ளன

திருதராட்டினை வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற முகத்தவன் – கலி25-1

என்று ஒரு புலவர்  குறிப்பிடுகிறார் 

கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது.

பாடல் 25 வரிகள் 1-5

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,

பொருள்
வடமொழிப் பெயர்பெற்ற வயக்கறு மண்டிலம்போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே ஐவரென்று உலகத்தார் புகழும் தன்மபுத்திரர் முதலியோர் உள்ளேயாகக் கையாலே புனையப்பட்ட அரக்கு மாளிகையை விரைந்து நெருப்பு சூழ்ந்தாற் போலக் களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிகள் உள்ளேயாக.

பாடல் 52 வரிகள் 1 3
நூற்றுவர் தலைவனை துரியோதனனை பீமன் வெல்வதை குறிக்கிறது

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்

பொருள்
முறம் போலுஞ் செவியாகிய மறைப்பிமாக வந்து பாய்ந்து மாறுபாடு செய்த புலியைக் கோபித்து மறத்தைத் தம்மிடத்தே கொண்ட நூற்றுவர்குத் தலைவனாகிய துரியோதனனைக் குறங்கில் உயிரை போக்குகின்ற பீமசேனனை போல் ……..

பாடல் 101 வரிகள் 15 – 20
பீமன் துரியோதனனின் மார்பை பிளந்து ரத்தம் குடித்தல்

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்-
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!
பொருள்
உயர்ந்த கொம்பிடத்தே வைத்த உலண்டினது நிறத்தையொக்கும் புல்லிய நிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய் அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக்குலைக்கின்றதனுடைய தோற்றரவைக் காணாய்; அழகிய தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்துபோகட்டுப் பகைவர்நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனைப்போலும்

அசுவத்தாமா சிகண்டியை கொன்றது
பாடல் 101 வரிகள் 30 – 32

ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்!

பொருள்
வருதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானாய் வந்து துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலேவென்று கொன்று தன் தோளால் தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப்போலும்

பாடல் 104 வரிகள் 56 – 59

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ.

பொருள்
போரைவிரும்பி மேலே சென்று துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன்முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும்

xxx

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்

பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்

ஆராச் செருவின் ஐவர் போல

 (பெரும்பாணாற்றுப்படை அடிகள்,  415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.

சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பாடியவரை  பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைத்தனர் . இவர் பாடிய பாரத நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இதை பிற்கால பாண்டியர் சாசனமும் உறுதிப்படுத்துகிறது

****

4. இரண்டு சிறப்புகள் மகாபாரதத்துக்கு உண்டு ; உலகிலேயே மிக நீண்ட புஸ்தகம்;இதுதான்  ஒரு லட்சம் ஸ்லோகங்களை , அதாவது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வரிகளை, அதாவது குறைந்தபட்சம்  பத்து லட்சம் சொற்களை உடைய புஸ்தகம் !

இரண்டாவது சிறப்பு :–

அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

****

5.மஹாபாரதத்தை எழுதியர் பிள்ளையார்; மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் வியாசர். இதை அருணகிரிநாதர் சில திருப்புகளாகில் 500 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவைத்துள்ளார்.

***

6.மஹாபாரத யுத்தத்தில் கெளரவர் தரப்பில் 11 டிவிஷன் படைகளும் பாண்டவர் தரப்பில் 7 11 டிவிஷன் படைகளும் இருந்தன.  

மாபாரதப் போரில்  கமாண்டார்கள்/ தளபதிகள் :–

பாண்டவர் படையின் தலைமை தளபதிதிருஷ்டத்துயுணன் (Dhrishtadyumna): பாண்டவர்களின் முழு 18 நாள் போருக்கும் இவரே தலைமைத் தளபதியாக (Supreme Commander-in-Chief) செயல்பட்டார். பாண்டவர் படையின் முக்கிய தளபதிகள் மற்றும் மாவீரர்கள்:அர்ச்சுனன் மற்றும் பீமன்: போர்க்களத்தின் முக்கிய வியூகங்களை தாங்கிப் போராடிய முதன்மைக் கமாண்டர்கள்.  சாத்யகி (Satyaki): யாதவப் படைப்பிரிவின் முக்கிய வீராதிவீரன்.  அபிமன்யு: அருச்சுனனின் மகன்,.கடோற்கஜன்: பீமனின் அரக்க மகன்.விராடன் மற்றும் துருபதன்: பாண்டவர்களை ஆதரித்த நாட்டின் மன்னர்கள்.

கௌரவர் படையின் தலைமை தளபதிகள் (சேனாதிபதிகள்)கௌரவர் தரப்பில் 18 நாள் போரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஐந்து முக்கிய தளபதிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றனர்: பீஷ்மர் (Bhishma) – 1 முதல் 10 நாட்கள் வரை): போரின் முதல் பத்து நாட்கள் கௌரவப் படையின் தலைமைத் தளபதியாக இருந்து கடுமையாகப் போராடினார். துரோணாச்சாரியார் (Drona )- 11 முதல் 15 நாட்கள் வரை): பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு குருவான துரோணர் தளபதியாகப் பொறுப்பேற்றார்.கர்ணன் (Karna – )16 மற்றும் 17-வது நாள்): துரோணரின் மறைவுக்குக் பின் கர்ணன் தளபதியாக நியமிக்கப்பட்டார்.சல்லியன் (Shalya – 18-வது நாள்): கர்ணனின் மறைவுக்குப் பின் இறுதி நாள் போரில் மத்வதேச மன்னரான சல்லியன் தளபதியானார். அஸ்வத்தாமன் (Ashwatthama): துரியோதனன் வீழ்ந்தபின் இறுதி இரவில் கௌரவப் படையின் கடைசித் தளபதியாகப் பொறுப்பு வகித்தான்.

கௌரவர் படையின் மற்ற முக்கிய கமாண்டர்கள்:துரியோதனன் மற்றும் துச்சாதனன்: கிருபாச்சாரியார் (Kripacharya): போரில் உயிர் பிழைத்த முக்கிய குரு மற்றும் தளபதி.கிருதவர்மன் (Kritavarma).

***

7.பாரதம் பாடிய மிஸ்டர் மஹாதேவன் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) பாரதத்தை மொழிபெயர்த்ததை சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் மூலம் அறிகிறோம்; மேலும் மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி  சங்கம் வைத்தும் என்று சின்னமனூர் பெரிய சாசனமும் முன்னாள் பாண்டியர்களைப் பற்றி கூறுகிறது

***

8.பீஷ்மர் போரில் வீழ்ததப்பட்டவுடன் அக்குபங்க்சர் முறையைப் பயன்படுத்தி 58 நாட்கள் அம்ம்புப்படுக்கையில் இருந்தார் ; அவர் தன்னுடைய வாழ்நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்ட்டி ப்பதாக அற்புத சபதம் செய்த போது அவர் நினைத்த தருணத்தில் உயிர்விடலாம் என்ற வரம்   அவருக்குக் கி டைத்தது . உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விட்டால் நல்லது என்ற நம்பிக்கை காரணமாக சுமார் இரண்டு மாதங்களுக்கு உயிரோடு உருந்து பின்னர் மேலுலகம் சென்றார் . இன்று ம் கூட ஆண்டுதோறும் பீஷ்ம அஷ்டமி என்று எல்லோரும், குறிப்பாக பிராமணர்கள், அவருக்குத் தர்ப்பணம் செய் கின்றனர் தந்தையின் காதலி — மீனவப் பெண்மணி – தனக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசனாக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தாள்; அப்போது பீஷ்மர் உலகம் வியக்கும் பிரம்மச்சர்ய விரதம் பற்றி அறிவித்தார்  வானஉலகம் முழுதும் Terrific! Terrific! Wonderful! Amazing!   பீஷ்ம பீஷ்ம என்று ஆரவாரம் செய்தது. அவரது உண்மைப்ப பெயர் தேவவிரதன் . சந்தனு மஹாராஜாவுக்கும் கங்கா என்ற பெண்ணுக்கும் மகனாக அவதரித்தார்  .

***

9 அர்ஜுனன் மகன் அபிமன்யு , கெளரவர்களின் சக்ர வியூயூகத்தில் நுழைந்து சண்டையிட்டான் ; அதிலிருந்து வெளிவருவதை அவன் கற்றுக்கொள்ளவில்லை ; இதனால் மரணம் சம்பவித்தது.

அருச்சுனனை திசைதிருப்ப  கௌரவப் படைகள் சக்கரவியூகம் அமைத்தன. வியூகத்திற்குள் நுழையும் வழி அபிமன்யுவிற்குத் தெரியும். ஆனால் வெளியேறும் வழி அவனுக்குத் தெரியாது.அபிமன்யுவுடன் உள்ளே செல்ல முயன்ற மற்ற பாண்டவர்களை ஜெயத்திரதன் தடுத்து நிறுத்தினான். இதனால் அபிமன்யு மட்டும் தனியாக மாட்டிக்கொண்டான். துரியோதனனின் மகன் லட்சுமணன் உள்ளிட்ட பலரைக் கொன்றான்.போரின் நெறிமுறைகளுக்கு மாறாக, துரோணர், கர்ணன், கிருபர், துரியோதனன் உள்ளிட்ட பல முன்னணி கௌரவ வீரர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் அவனைத் தாக்கிக் கொன்றனர்.

***

10.பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் 12 ஆண்டுகள் முடிந்த பிறகு, 13-வது ஆண்டை அஞ்ஞாதவாசம் (யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் மறைந்து வாழும் காலம்) விராட மன்னனின் [விராட தேசம்] அரசவையில் பின்வரும் வேடங்களில் கழித்தனர்:

தருமபுத்திரர்: ‘கங்க பட்டர்’ (Kanka) என்ற பெயரில் விராட மன்னனின் அரசவை ஆலோசகராகவும், தாயம் விளையாடுபவராகவும் இருந்தார்.

பீமசேனன்: ‘வல்லவன்   (Vallava) என்ற பெயரில் அரச சமையலறைச் சமையற்காரராக (Cook) பணியாற்றினார்.

அருச்சுனன்: பிருஹன்னளை ‘ அல்லது ‘பேடி’ (Brihannala – அலியும் பெண்ணுமாக) என்ற உருவத்தில் விராட மன்னனின் மகளான உத்தரأவிற்குப் நடன மற்றும் இசை ஆசிரியராக இருந்தார்

.நகுலன்: ‘கிரந்திகன்’ (Damagranthi) என்ற பெயரில் குதிரை லாயத்தில் குதிரைகளைப் பராமரிக்கும் வேலை செய்தான்.

சகாதேவன்: ‘தந்தபாலன்’ (Tantipala) என்ற பெயரில் பசுப் பட்டறையில் ஆடு, மாடுகளை மேய்க்கும் பணியை மேற்கொண்டான்.

திரௌபதி: ‘ சைரந்திரி  அல்லது ‘மாலினி’ (Sairandhri) என்ற பெயரில் விராட மன்னனின் மனைவி சுதேஷ்ணா தேவியின் அந்தப்புரத் தலைவியாக/சேவையாடியாகப் பணிபுரிந்தார்

–subham—

Tags- மஹாபாரதம் ,10 கேள்விகள்

ஆயிரம் பொன்மொழிகள்! (141-160) Post No.16,111

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,111

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (141-160)

ச. நாகராஜன்

சில பொன்மொழிகளின் தொடர்ச்சி…! (From my collection!)

141. Ching Chow – Hours – Time

NOTICE

Lost yesterday somewhere

Between Sunrise and Sunset

Two Golden Hours,

Each set with sixty diamond minutes

No Reward is offered for

They are gone Forever.

Biography – Lives of Greatmen

Biography is the most universally pleasant and profitable of all reading – Carlyle

உயர்ந்தார் சரிதம் உலகிலுயர் இன்பம்

உயர்ந்த கலையின் பலன்         – உலக உள்ளங்கள் (497)

                                  ஜெகவீரபாண்டியனார்

Literature – Speech

Literature is the immortality of speech.          – Schlegel

என்றும் அழியா இனிய மொழி கலையே

நின்று விளங்கும் நிலைத்து          – உலக உள்ளங்கள் (105)

                                     ஜெகவீரபாண்டியனார்

Literature

Literature is a great stall, but a sorry crutch.    – W. Scott

உல்லாச மாயின் உயர்கலை இன்பமாம்

அல்லலே வாழ்வேல் அது           – உலக உள்ளங்கள் (104)                                                                

                                     ஜெகவீரபாண்டியனார்

God

To will what God wills is the only science that gives us rest. – Longfellow

இறைவன் திருவுளத்தை எண்ணி ஒழுகல்

நிறைவான ஞானம் நினை                   உலக உள்ளங்கள் (21)

                                               ஜெகவீரபாண்டியனார்

God – Obedience

That thou art happy, owe to God

That thou continuest such, owe to thyself,

That is, to thy obedience.                                 – Milton

God

Above all things I wish God’s glory and next her Majesty’s safety.  – Francis Walsingham

God

A pure, single, stable spirit is not distracted though it may be employed in many works; for that it doeth all to the honor of God, and being at rest within, seeketh not itself in anything that of doth.

                                                                                                                             – Thomas a Kempis

God

God is truth and light his shadow.  – Plato

உண்மை கடவுள்; ஒளி அவன் நீழலே;

உண்மை உறுதி உணர்                   – உலக உள்ளங்கள் (1)

                                         ஜெகவீரபாண்டியனார்

Life – Inaction

It is not necessary for a man to be actively bad in order to make a failure of life; simple inaction will accomplish it.   

151. Life – Power – Selfish

Every year I live I am more convinced that the waste of life lies in the love we have not given, the powers we have not used, and the selfish prudence which will risk nothing.   – Mary Cholmondeley

Life

We are too apt to let the mean things of life overgrow the finer nature within us, therefore it is expedient that at least once a day we read a little poetry, or sing a song, or look at a picture.  – Gothe

Life

My life as essentially belongs to the present as that of a willow tree in the Spring. Now, now, its catkins expand, its yellow bark shines, its sap flows, now or never must you make whistles of it.  – Thoreau

Liberty

Liberty –

‘Tis sweeter to bleed for an age at thy shrine

Than to sleep but a moment in chains.    – Thomas Moore

Lives of Greatmen

Lives of greatmen all remind us, we can make our lives sublime.   – Longfellow

மேலோரை எண்ணிவர மேன்மையுடன் நம்வாழ்வு

மேலாய் விளங்கி வரும்                       – உலக உள்ளங்கள் (529)

                                               ஜெகவீரபாண்டியனார்

Lives of Greatmen

The best teachers of humanity are the lives of greatmen.       – O.S. Fowler

பெரியோர் சரிதங்கள் பேருலகில் மாந்தர்க்கு

அரியவுயர் ஆசிரியர் ஆம்                      – உலக உள்ளங்கள்  (231)

                                               ஜெகவீரபாண்டியனார்

Contentment

Contentment is natural wealth , luxury is artificial poverty. –   Socrates

இதயநிறைவே இயற்கையுயர் செல்வம்

விதவிரிவு வெய்ய மிடி                        – உலக உள்ளங்கள் (326)

                                               ஜெகவீரபாண்டியனார்

Cheerfulness – Melancholy

Cheerfulness is health; its opposite melancholy is disease.  – Haliburton

உள்ளமகிழ்ச்சி உயர்சுகம்; வன்கவலை

தள்ளரிய வெய்ய நோய்தான்                   – உலக உள்ளங்கள் (303)

                                              ஜெகவீரபாண்டியனார்

Busy – Idle

As peace is the end of war, so to be idle is the ultimate purpose of the busy. – Dr. Johnson

160. Gleam of Light

A gleam of light on a cottage pane may cross whole leagues of distance.

**

Tamil Non- Vegetarian Food! Sanskrit Idiots and English Idiots Exposed! Purananuru wonders-56 (Post.16,110)

Written by London Swaminathan

Post No. 16,110

Date uploaded in London – 20 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

The author of this 2000 year old Sangam Tamil work was a Brahmin belonging to Kausika Gotra; yet he has honestly presented us a correct picture of ancient Tamil society.

Purananuru wonders-56, Tamil Encyclopaedia 96, One Thousand Interesting Facts, Part 96,

At the end of this write up I have shown how Sanskrit and English writers proved themselves fools.

Malaipatukataam continued………… I am using Vaidehi Herbert’s translation; thanks.

Item 789

One other interesting point is Perum Kausikanar’s reference to food items.

Apart from Brahmins and saints, Tamils were predominantly Non – Vegetarians (in fact Anti Valluvar! Anti Ramalinga Swamikal)

When the Tamil poets describe Brahmin houses, they list the vegetarian dishes; they also add dogs and cocks an hens cannot enter their streets.

Here are the references to Food from this Malaipadukadaam:

Lines 112 to 119

Millets, paddy, sugarcane, yam, beans, sesame seeds, white mustard cultivation;

125- ginger cultivation;

131- plantain trees/ banana cultivation;

135- Jhambu fruits which gave name Jhambudwipa to India;

138/9- jack fruit trees;

Mango tree , bamboo trees are also mentioned; all these were used in the Tamil food. Even today Tamils use these items.

***

Item 790

Lines 168/9

You will receive from

them dishes with big pieces of meat roasted in ghee along with

coloured millet rice.

***

Item 791

Lines 170-185

Along with food that they bring climbing on the

bright mountains,

they will give you sweet liquor aged in bamboo pipes

which you can drink without limits, and for your

hangover to go, in the morning, they will serve you

a dish made with dropped seeds of jackfruits brought

down by waterfalls, big pieces of meat of rapidly running

forest deer that are killed, chopped up pieces of fatty

meat of porcupines killed by female dogs, sweet

tamarind fruits with light covered shells and stems,

fine buttermilk, and seeds growing on bamboo added to

the boiling liquid along with white rice, cooked by

a mountain woman with flowers on her huge hair knot,

***

Item 792 Forest mystery and Poet’s warning

If you touch

the protected kuvalai flowers desired by the gods, or see

the places where the mountain deities reside, you will

tremble in distress as though you are losing your life.

Do not stay there for many days.

Here we are remined of  Poet Tennyson

In Alfred Lord Tennyson’s poem The Lotos-Eaters, the sailors lose their memories and desire to return home after consuming the lotos flower and fruit.

  • The food: The inhabitants of the island give the mariners the “lotos” (lotus), described as a sweet, flowery food and fruit.
  • The effect: Eating it induces a dreamy, lethargic state of forgetfulness.
  • The amnesia: The sailors forget their homes, wives, children, and past heroic deeds at the Trojan War, viewing their former lives as distant, half-forgotten things or vague memories from a dream

***

Item 793 temples and worship

On your path, if you see the god in the temple with

old walls, who is worshipped according to tradition,

worship before you leave, but protect your musical

instruments

(this shows even tribal people had temples deep inside the forest).

***

Item 794 boar meat

You will see boars killed by forest people.

Roast it in the fire created by dry

bamboo rubbing against each other,

which burns without much smoke, remove the hair on it

and eat it.  Relax and drink the clear water from the

faultless, beautiful, sapphire-coloured, fresh spring with

kuvalai flowers.  Carry the excess big pieces of meat in

heavy bundles

***

Item 795

Warriors will feed you

Lines 421-427

If you see warriors ……………………….

they will forcefully feed you abundant

meat and tubers.  They are ones who will protect you,

and not hurt you.

Listen to their command and proceed on the path.

Such is the nature of the forest.

***

Item 796

Tasty Tamaringd Rice Dish (baath)

Lines 434-448

Hospitality of Villages with Huts

At night, for your sorrow to go away, you will be served

food cooked with seeds of bamboo that are red like

vēngai flowers cooked with rice grown on high grounds,

along with tamarind gruel with avarai beans.

In all the villages with huts built with poles and thatched

with grass, you will receive daily, huge balls of rice made

with tiny, perfect rice, like tiny gold pieces, ghee, and

sprinkled white flour.  If you stay there and rest, every

day you will be given dishes made with fine millet flour

mixed with sifted sugar powder.  You will sleep, leaving

cold far away, in the warmth of the fire lit with brittle

wood.  Leave in the morning when birds start chirping.

***

Item 797 Fish and Rice Dish

Lines 454….. 459

Fishermen with nets enter ponds with kanpu

grass with fragrant flowers, and catch vālai fish ………………..

Their women

wearing pakandrai flowers will serve you pieces of fatty

fish that look like the eyes of drums along with white rice

***

Item 798

Nannan = Lord Murugan/Skanda

Lines 490-495

Thinking about Nannan who is like Murukan, victorious

in battles.  They pity you who are like them, and look at

you calmly and sweetly, each one of them accepting you

as their guest, for your sorrow from walking to go away.

Points to be noted—Asvaghosa  a COPY CAT!

Asvaghosa who wrote Buddhacharita, was a copycat.

Kalidasa the greatest of Indian poets and Sangam poets always compared Hindu Gods with heroic kings.

They compare Muruga/Skanda with Hindu Kings because Muruga/Skanda was the Commander in Chief of Divine Army in Indra Loka.

Here also Poet Kaushika compared Heroic Muruga/ Skanda with King Nanna.

Would you believe that in the very beginning of BUDDHACHARITA, poet Asvaghosa who wrote in Sanskrit compared Buddha with Shanmuka (Muruga, Skanda, Kartikeya) ?

Buddha was a compassionate personality according to other texts. This stupid ASVAGHOSA copied Kalidasa and compared him with Buddha in the very beginning of his book.

Foreign rowdies place Kalidasa after him and blamed Kalidasa stealing Deepa Sikha simile. Actualyy Dipa sikha simil is in Madurai Kanchi, a Sanagam tamil work and Gatha Sapta Sati, a Prakrit work.

I am writing this to expose foreign Sanskrit idiots .

***

Item 799 Great Tamil Weavers

In many Sangam poems Tamil weavers are praised making clots with RAT HAIR that can be rolled into and sent through a finger ring.

Here also poet Kaushik praised the Tamil weavers!

Lines 565…………..

Nannan’s Generosity

He will give you perfect clothing on which

woven threads cannot be seen and tie it well

around your faultless body, and fresh meat with

***

Item 800 Food Again! First Day Treatment on all days!

fat brought by a female dog cooked with long,

white rice and served without limits.  He will give

you gifts with desire even if you stay there for

many days, like what you received on the first day.

If you tell him that you have to leave for your

ancient town, he will give the leader among you

golden lotus flowers, adorn viralis with fine, bright

jewels, give you tall chariots that run perfectly like

flowing water, trained mountain-like elephants

seized or received from enemies as tributes,

large herd of cattle with bulls with ringing bells,

horses with trimmed tufts decorated with golden

saddles, wealth lying on the ground, and all this.

He fills the hands of poets who have nothing,

with his large hands with whirling

bracelets.  He showers unspoiled wealth like the

rain showers on Naviram Mountain where bamboo

grows, the lord of the country surrounded by

mountains from which waterfalls flow down like

raised victory flags, who gives you gifts on the

first day and lets you leave.

***

Item 801 Oxford Cambridge Idiots Exposed!

Yousuf became Joseph;

Yesu became Jesus;

Yaaz became Jazz;

Yaazpaanam became Jaffna;

Yava Dwipa became Java in Indonesia;

Hundreds of Y words became J words.

For this stupid English Lexicographers say at one stage Y was introduced into English language and it was written like J.

That is incorrect; I have proved this change is in the Vedas, Zend Avesta and Sangam Tamil literature thousands of years before English language came into this world. English came after Hindi language of India.

N Tamil aJa for Brahma is written as aYan (in Sangam Literature)

Here in line 500 மட நடை ஆமான் கயமுனிக் குழவி   500 , kaYamuni is gaJamuni (elephant calf);

Here we see clearly Y=J; so English Lexicographers must rewrite their INVENTION!

To continued……………………….

Tags – English lexicographers, idiots, Sanskrit idiots, Asvaghosa, copycat, Tamil Non Vegetarian Food! Purananuru wonders-56, Tamil Encyclopaedia 96, One Thousand Interesting Facts, Part 96, item 801

திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)


Written by London Swaminathan

Post No. 16,109

Date uploaded in London – 20 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ராமலிங்க சுவாமிகளின் பொன்மொழிகள் என்ற தலைப்பில் நூறு பொன் மொழிகளை  இந்த பிளாக்கில் மூன்று மாத காலண்டர்களில் (Year 2021) காணலாம்).

1

திருவருட்பா நூலைப்  பாடியவர் யார்? எப்போது பாடினார்?

2

திருவருட்பா நூலில் என்னென்ன கடவுளின் துதிகள் உள்ளன ?

3

சிவன் மீது அவர் பாடிய 100 பாடல்கள் உள்ள தொகுப்புக்கு என்ன பெயர் ?

4

தெய்வமணிமாலை  என்ற பாடலில் என்ன உள்ளது ? 

5

தாயை மகன் மறந்தாலும் மகனைத் தாய் மறந்தாலும் சிவ பெருமானை நான் மறக்க மாட்டேன் என்ற புகழ்பெற்ற பாடல் எது ?

6

மாமிச உணவு பற்றி வள்ளலார் என்ன சொன்னார் ?

7

வடிவுடை மாணிக்கமாலை (இரண்டாம் திருமுறை) என்ற பாடலை எந்த ஊர் அம்பிகையின் மீது பாடினார் வள்ளலார் ?

.8

நிறைய பாடகர்களால் பாடப்பட்ட  ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும் — என்ற பாடலின் முழு வடிவம் என்ன ? திரைப்படத்தில் இடம்பெற்ற வள்ளலார் பாடல்கள் எவை ?

9

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

என்ற பாடலின் மொத்தக் கருத்து என்ன ?

10

அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் பற்றி வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) என்ன சொல்கிறார் ? 

****

விடைகள்

1.ராமலிங்க சுவாமிகள் பாடினார்; அவர் வாழ்ந்த காலத்தில் பாடினார். ராமலிங்க சுவாமிகள் (வாழ்ந்த காலம் அக்டோபர் 5, 1823 முதல் ஜனவரி 30, 1874 வரை ஆகும்).

***

2.பெரும்பாலும் சிவன், முருகன் பற்றிய துதிகள் உள்ளன. பிள்ளையார் பற்றியும் அவர் பாடியுள்ளார்.  அம்பிகையையும் ராம பிரானையும் பல பாடல்களில் போற்றியுள்ளார். இராமநாமப்பதிகம் என்று பத்து பாடல்களும், வீரராகவர் போற்றிப் பஞ்சகம் என்ற பெயரில் ஐந்து பாடல்களும் பாடினார். திருவொற்றியூயூர் வடிவுடை அம்மனைப் பாடினார்.  ஆங்காங்கே கலைமகளையும் திருமகளையும் துதித்துள்ளார்

****

3.சிவபெருமான் மீது வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடிய மஹாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிவ பெருமானின் போற்றுதலை விட தத்துவ வசனங்களே அதிகம். பஜனைகளில் பாடக்கூடிய தாளத்துடன் வரக்கூடிய சிவ நாமாவளி அம்பலத் தரசே என்று துவங்கும் பாடல் ஆகும்.

****

4.தெய்வமணிமாலை என்பது இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) இயற்றிய திருவருட்பாநூலில் ஐந்தாம் திருமுறையில் இருக்கிறது .சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முருகப்பெருமான் (சண்முகப் பெருமான்) மீது பாடிய பாடல்கள் இதில் உள்ளன;

தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் உள்ளன ; எல்லா பாடல்களும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே….. என்று முடியும். இராமலிங்க வள்ளலார், சென்னை, ஏழுகிணறுப் பகுதியில் உள்ள வீ ராசாமிப் பிள்ளைத் தெருவில் வாழ்ந்திருந்த காலத்தில், சென்னை, கந்தகோட்டம் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானை வழிபட்டுப் பாடியது தெய்வமணி மாலை. . இந்தப் பாடல்களை இராமலிங்க வள்ளலார், தனது ஒன்பதாம் வயதில், பள்ளியில் படிக்கும் காலத்தில் இறையருளால் பாடியதாகக்சொல்லப்படுகிறது.

****

5.இரண்டாம் திருமுறையில் வரும் கீழ்கண்ட பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்; இதையும் எம் எஸ் . உள்பட நிறைய  சங்கீத வித்துவான்கள் பாடியுள்ளனர் . இது திருவருட்பா நூலில் இடம் பெற்றுள்ளது.

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே

****

6 .”கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்

பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே”

இவ்வரிகளால் புலால் தவிர்த்தலே குருவருளைப் பெறுவதற்கான வழி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வடலூரில் பெருமனார் அமைத்த சத்திய ஞானசபையின் நுழைவு வாயிலில் ” புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே நுழையவும் “என்ற அறிவிப்பு உள்ளது. இதன் மூலம் வள்ளல் பெருமனாரின் ஞான மார்க்கத்திற்குப் புலால் தவிர்த்தல் அடிப்படை தகுதி என்பது உறுதியாகின்றது.

*உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்; அவர் புற இனத்தார். அவர்களுக்குப்

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக; பரிந்து மற்றைப் பண்பு உரையேல்….*

என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் 607 -ஆம் பாடலில் பாடியுள்ளார்.

****

7.அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள் திருவொற்றியூரில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அங்கு தியாகராஜருடன் கோவில் கொண்ட வடிவுடை அம்மனைப் போற்றி 101 பாடல்களைப் பாடினார். ஒரு பாடலில்  என் குல தெய்வமே என்று அம்மனைப் பாடிப் பரவுகிறார்

****

8.கொஞ்சும் சலங்கை (1962): இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்ற வள்ளலாரின் பாடல் பிலஹரி ராகத்தில் அமைக்கப்பட்டு சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்களால் பாடப்பட்டது.கோகிலவாணி (1956): இத்திரைப்படத்திலும் வள்ளலாரின் திருவருட்பா பாடல்கள் சில பின்னணியில் இடம்பெற்றுள்ளன/

1988 ஆம் ஆண்டு வெளிவந்த சர்க்கரைப் பந்தல் திரைப்படத்தில் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) எழுதிய வரிகளில் இடம்பெற்ற பாடல் “அன்பென்னும்” என்ற பாடலாகும். இப்பாடலை சுனந்தா பாடியுள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்

பிடியா திருக்கவேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

9.”வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்” என்பது இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) இயற்றிய திருவருட்பா பாடலாகும். ஆன்மீக அனுபவத்தின் உச்ச நிலையில் மாயைக் காட்சிகள் நீங்கி, மெய்யான ஓம்கார நாதம் வெளிப்படுவதை விளக்கும் உயர்ந்த ஆன்மீகப் பாடலாகும். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் இடம்பெற்ற இப்பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பாடி பரப்பியுள்ளனர். வானத்தில் ஆடிய மயில் குயிலாக மாறியது என்பது ஆன்மீகத்தில் மனம் ஒடுங்கி, பேரின்த நாதம் உண்டாவதைக் குறிக்கும் குறியீடாகும்.

1. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

மயில்குயில் ஆச்சுதடி.

2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்

வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி

வள்ளலைக் கண்டேனடி.

3. சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேனடி – அக்கச்சி

சோதியைக் கண்டேனடி.

4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்

ஐயரைக் கண்டேனடி – அக்கச்சி

ஐயரைக் கண்டேனடி.

****

10.வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்

    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே– என்று மாணிக்கவாசகரைப் போற்றுகிறார் .

**

 வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்

    கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்

    வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான

    நாட்டமுறு மென்னிலிங்கு நான்அடதல் வியப்பன்றே.

அப்பர் பெருமானையும் அவரை மீண்டும் சைவ நெறிக்கு அழைத்துவந்த திலகவதியாரையும்

அருள்வழங்கும் திலகவதி அம்மையார் பின்

அவதரித்த மணியே சொல்லரசே — என்று போற்றுகிறார்.

**

மூன்று வயதில் உமாதேவியின் ஞானப்பாலுண்டு கவி மழை பொழிந்த ஞான சம்பந்தரை ,

ஏரார் பருவம் மூன்றில்  உமை இனிய  முலைப்பால் எடுத்து ஊட்டும் இன்பக் குதலை மொழிக் குருந்தே — என்றும்

பேரார் ஞான சம்பந்தப்பெருமானே  நின் திருப்புகழைப் பேசுகின்றார் மேன்மேலும் பெருஞ்செல்வத்தில் பிறங்குவரே– என்றும் பாடி மகிழ்கிறார் .–subham—

Tags– திருவருட்பா நூல்,10 கேள்விகள் ,ராமலிங்க சுவாமிகள் , வள்ளலார், தெய்வமணிமாலை , பெற்றதாய்தனை மக, ஒருமையுடன் நினது, வனத்தின் மீது மயில், வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

ஆயிரம் பொன்மொழிகள்! (111-140) Post No.16,108

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,108

Date uploaded in London – 20 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (111-140) 

ச. நாகராஜன்

சில பொன்மொழிகளின் தொடர்ச்சி…! (From my collection!) 

111. Ching Chow – Determination

He who is determined has half his work done…

Ching Chow – Courtesy

The small courtesies sweeten life – The greater ennoble it …..

Ching Chow – Courtesy

Courtesy is what makes one do more than the law requires…

Ching Chow – Conversion – Silence

‘Tis written… you have not converted a man because you have silenced him ….

Ching Chow – Knowledge – Sense

Knowledge without sense is twofold folly…

Ching Chow – Lazy Man – Nothing

Who can deny – The lazy man aims at nothing and generally hits it…

Ching Chow – Laughter – Anger

Laughter cannot bring back what anger has driven away…

Ching Chow – Lover – Marriage

If you can’t decide which one of two lovers you want to marry don’t marry either…

Ching Chow – Boasting

The greatest liar is he who talks most of himself…

Ching Chow – duty

‘Tis written in jade- in doing what we ought we deserve no praise…

121. Ching Chow – Quarrel – Dogs

‘Tis said – if two men quarrel, even their dogs will have a diference…

Ching Chow – Hatchet – Egg

‘Tis written – send not for a hatchet with which to open an egg.

Courage

A courage mightier than the Sun – You rose and fought and fighting won.  – Angela Morgan

Contentment

Contentment gives a crown, where fortune hath denied it.   – Ford

எந்தவுயர் செல்வமும் ஈயா மகிமையைச்                                    சிந்தை நிறைவு தரும்                            உலக உள்ளங்கள் (327) 

                                                  ஜெகவீரபாண்டியனார்

Circumstances

A consideration of petty circumstances is the tomb of great things.  – Voltaire

Drink

He drinketh strong waters which do bemuse a man, and make him even as the wild beast of the desert.  

                                                                                                                           – W.S.  Gilbert

Do Good

Do all the good you can

By all the means you can

In all the ways you can

In all the places you can

At all the times you can

To all the people you can

As long as ever you can                                            – John Wesley

எல்லார்க்கும் எவ்வழியும் என்றுமெங்கும் நன்மைசெய்

எல்லா வகையும் இனிது                                               

                                                 உலக உள்ளங்கள் (18) 

                                                  ஜெகவீரபாண்டியனார்

Do Good

Doing good to others is not a duty. It is a joy, for it increases your own health and happiness. – Zoraster

மற்றவர்க்கு நன்மை செய்யின் மாட்சிமிகுந்துன்வாழ்வு

பெற்றுவரும் இன்பம் பெரிது                                             

                                                 உலக உள்ளங்கள் (672) 

                                                  ஜெகவீரபாண்டியனார்

Do Good

When you are good to others, you are best to yourself.     – B. Franklin

மன்னுயிர்க்கு நல்லவனாய் மன்னிவரின் உன்னுயிர்க்கே

இன்னமுதம் ஆனாய் இனிது                      – உலக உள்ளங்கள் (6)

                                                 ஜெகவீரபாண்டியனார்

Doing Good

The difficulty of doing good all round is no reason against doing as much as good as we can.

                                                                                                                         – John Stuart Mill

131. Friend

Even if he is far away, a friend will not seem remote to a friend; the moon though far away, yet awakens the lotus of the night                                                                              – Subhashitam

Heart – Sorrow – Trouble

Keep thy heart afar from sorrow, and be not anxious about the trouble whish is not yet.   – Firdausi

Health

I have gout, asthma, and seven other maladies, but am otherwise very well.  – Sydney Smith, in a letter

Heroism – Public

The noblest needs of heroism are done within four walls, not before the public gaze.   – J.R.P. Richter

Tranquility

In manners, tranquility is the supreme power.                       – M.D. Mrintenon

அதிசய ஆற்றல் அமைதியின் பாங்கில்

விதியா யுளது விரிந்து                          உலக உள்ளங்கள் (203)

                                                ஜெகவீரபாண்டியனார்

Temptation

As the Sandwich Islander believes that the strength and valor of the enemy he kills passes into himself, so we gain the strength of the temptation we resist.                – Emerson

Tongue

It is the wise head that makes the still tongue.     – W.J. Lucas

நாவை அடக்குபவன் நல்லவுயர் ஞானியாய்ப்

பூவில் உயர்வன் பொலிந்து                      – உலக உள்ளங்கள் (166)

                                                ஜெகவீரபாண்டியனார்

Words

False words are not only evil in themselves, but they infect the soul with evil. – Socrates

பொய்யுரைகள் பொல்லாப் புலைகள் உயிர்களை

ஐயோ அழிக்கும் அவை                         – உலக உள்ளங்கள் (177)

                                                 ஜெகவீரபாண்டியனார்

Reading

Reading serves for delight, for ornament, for ability    – Bacon

ஆற்றல் எழில்கள் அறிவின்பம் சேருமே

ஏற்ற படிப்பால் இனிது                            உலக உள்ளங்கள் (414)

                                                 ஜெகவீரபாண்டியனார்

140. Reading

To read without reflecting, is like eating without digesting.    – Burke

  சிந்தனை இல்லாத கல்வி செரியாத

  அந்த உணவே அறி                           உலக உள்ளங்கள் (415)

                                             ஜெகவீரபாண்டியனார்

***

ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107)

TRAVANCORE KINGDOM INCLUDED MODERN KANYAKUMARI DISTRICT

Written by London Swaminathan

Post No. 16,107

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கலியுகம் பற்றி இந்த செப்பேடுகள் சொல்லும் அதிசயச் செய்தி என்ன ?

2

பாண்டியர்களின் இரண்டு வரகுணன்களைக் கண்டோம்; இங்குள்ள வரகுணன் யார் ? ஆயர் குல வரகுணனின் மனைவி பெயர் என்ன ? யார் அந்தப் பெண்மணி ?

3

இந்த செப்பேடுகள் சொல்லும் பார்த்திவசேகரபுரம் எங்குள்ளது ?

4

கோ கரு நந்த அடக்கன் நிறுவிய வேத பாட சாலையில் என்னென்ன  பாடத்தைப் படிக்க எவ்வளவு மாணவர்கள் இருந்தார்கள்?

5

ஆய் மன்னர்களைக் குறிப்பிடும் யவன ஆசிரியன் யார் ?

6

வேத பாடசாலையில் அனுமதி பெற என்ன விதிகள் பின்பற்றப்பட்டன ?

7

வகுப்பறை விதிகள் என்ன ?

8

கோவில் குறித்து இந்த செப்பேடு நவில்வது என்ன ?

9

இந்தச் செப்பேட்டில் காணப்படும் மொழிகள் என்ன ? எழுத்துக்கள் என்ன ?

10

இந்த செப்பேடுகள் சொல்லும் நாழி , முக்குறுணி என்றால் என்ன அளவு ?

*****************************

விடைகள்

TRAVANCORE ROYAL FAMILY 

1.கலியுகம் பற்றி நாட்களில் சொல்லும் செப்பேடு

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:

ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும். ஆய் குல மன்னர்கள் தங்களை ஆயர்கள் என்றும் யாதவர்கள் என்றும் கண்ணன் வழிவந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர் .

தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

பார்த்திவசேகரபுரம் முன்சிறைக்கு அருகிலுள்ளது .  கோ கரு நந்த அடக்கன் என்பவன்  அங்கிருந்து நிலத்தை வாங்கி விஷ்ணு கோவிலைக்கட்டி  அந்த  இடத்துக்கு பார்த்திப சேகரபுரம் என்று பெயரிட்டான் போலும் . அவனுக்கு மற்றோரு பெயர்  ஸ்ரீ வல்லபன் . அவன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன் என்று சாசனம் கூறுகிறது.

****

2.விக்ரமாதித்ய வரகுணனின் திரு நந்திக்கரை சாசனம் ஒரே ஏட்டில் முழு மையாயாக உள்ளது . இந்த மன்னன் தெங்காடுகிழவன் மகள் முருகஞ்சேந்தியை மணந்த செய்தி இதில் உள்ளது ;அவளை ஆய்குல மாதேவி என்று செப்பேடு குறிப்பிடுகிறது . ஆகவே கரு நந்த அடக்கனுக்குப் பின்னர் ,  விக்ரமாதித்ய  வரகுணன் ஆண்டான் என்பது தெரிகிறது . இதே காலத்தில் முதலாம் வரகுணன் பாண்டிய நாட்டை ஆண்டதால் இவன் மஹாராஜாவின்  பெயரை சூட்டிக்கொண்டவனாக இருக்கலாம்; ஏனெனில் அக்காலத்தில் அரசனுடைய பெயர்களை அதிகாரிகளும் , கப்பம் காட்டும் குறுநில மன்னர்களும் வைத்துக்கொள்வார்கள்.

திருவனந்தபுரம் பழைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் தலை நகர் ; அங்குள்ள அலமாரியில் பல செப்பேடுகள் துண்டு துண்டாக்க கிடைத்தன. ஒரே ஒரு ஏடு மட்டும் விக்ரமாதித்ய வரகுணன்  என்ற பெயருடன் முழு ஏடாகக் கிடைத்தது .

***

3.பழைய தென் திருவங்ககூர்ப்பகுதிகள் இப்போது கன்யாகுமரி மாவத்தில் உள்ளன. ஆகவே முன்சிறை பார்த்திவ ஸ்சேகரபுரம் முதலியன  தற்கால கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது. பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885), ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன் என்ற பாண்டியர் பெயரைச் சூடிக்கொண்டான். இவன் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், முஞ்சிறைப் பஞ்சாயத்தில் பார்த்திவபுரம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் மார்த்தாண்டம் தேங்காப்பட்டணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

****

4. கருநந்தடக்கன் நிலம் கொடுத்து வேறு நிலங்களை மாற்றி வாங்கிக்கொண்டு அதில் திருமால் கோவில் கட்டினான். அங்கு ஒரு வேத பாடசாலையையும் நிறுவி சம்ஸ்க்ருத நூற்களை படிக்க ஏற்பாடு செய்தான் .

சாத்திரங்களை பயிலும் 95 சட்டர்கள், இவன் நிறுவிய வேதப்பள்ளிக்கூடத்தில் பயின்றார்கள்; அவர்களில் பவிஷ்ய சரணம் /ருக் வேதம் படித்தோர் 45 சட்டர்கள்; தைத்ரீய சரணம்  /யஜுர் வேதம் படித்தோர் 36 சட்டர்கள்; தலவகார சரணம் சாமவேதம் படித்தோர் 14 சட்டர்கள்.

சட்டர் என்று செப்பேடு சொல்லும் சொல் சாதாரண மாணவரைக்  குறிக்காது ; மேலும் சில துறைகளில் புலமை பெற்றவர் என்றும் வாழ்நாள் முழுதும் பிரம்மசரி ம் அனுஷ்டிப்போர் என்றும்  கருதப்படுகிறது.பார்த்திவ சேகரபுர  சாசனம் சொல்லும் செய்திகள் –

சட்டங்கள் சேர, சோழ, பாண்டிய ஆகிய த்ரைராஜ்ய விவகாரத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் ; சில கட்டுப்பாடுகளுடன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் .

***

5.ஆய் மன்னர்களைக் குறிப்பிடும் யவன ஆசிரியன் கிரேக்க எழுத்தாளன் வரலாற்று பூகோள அறிஞன் டாலமி.

Ptolemy usually refers to Claudius Ptolemy (c. 100 – c. 170 CE), a famous ancient Greek-Egyptian scientist who lived in Alexandria, Egypt. He wrote major books on astronomy, geography, and math. It can also refer to the Ptolemaic dynasty of Egyptian pharaohs, starting with Alexander the Great’s general, Ptolemy I Soter.

***

6.அட்மிஷன் ரூல்ஸ் / பிரவேச விதிகள்

படிக்க வருவோர் இலக்கணம் , மீமாம்சம், புரோகிதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் . இதற்கு எதுவும் சர்ட்டிபிகேட் தேவை இல்லை ; இன்டெர்வியுவும் கிடையாது ; அங்கு பயிலும் ஐந்து மாணவர்களிடம் இவை எனக்குத் தெரியும் என்று சத்தியம் செய்துகொடுத்தால் போதும் ; சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு ; இதனால்தான் இந்திய அரசும் சத்யமேவ ஜெயதே என்னும் முண்டகோபநிஷத் வாக்கியத்தை தேசீய சின்னத்தில் பொறித்தது போலும்! அதைத் தமிழ் நாடு அரசும் தனது கோபுர சின்னத்தில் வாய்மையே வெல்லும் என்று மொழிபெயர்த்து போட்டுக்கொண்டுள்ளது!

***

7.வகுப்பறை விதிகள்

மாணவர்கள்/ சட்டர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடக்கூடாது; குட்டிக் கொள்ளக் கூடாது; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது; பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது . கோயில் நிலத்தையும் வேதபாட சாலை நிலத்தையும் உழுவோரிடம் சம்திங் வாங்கக்கூடாது . அப்படி வாங்கினால் அது போல பத்து மடங்கு அபராதம்; மேலும் ஊர்ச் சபை சொல்லும்போதெல்லாம் கட்டாய சேவை செய்ய வேண்டும்; பிழைகள் செய்தால் அபராதமும் உண்டு .

***

8.இரண்டாவது ஏடு கோயிற் பணியாளர் கடமைகளையும் பூத்தொண்டு செய்பவனின் கடமையையும் தெரிவிக்கிறது ; கோயிலில் நுந்தா விளக்கு எரிப்பதற்காக நில தானம் செய்யப்பட்டதையும் சொல்கிறது . பங்குனி விசாக நாளில் முடியும்படி ஏழுநாள் திருவிழா நடத்தவேண்டிய வகையும் ஏழாவது நாள் ஆற்றில் தீர்த்தவாரி செய்வதும் குறிப்பிடப்படுகின்றன .

ஓவர்டைம் அலவன்ஸ்

இந்த விழாக்காலத்தில் கோயிற் பணியாளர்களுக்கும் சட்டங்களுக்கும் இரு மடங்கு ஊதியம் தர வேண்டும் என்கிறது .

மூன்றாவது ஏடு கோயிற் பணியாளர்களின் சம்பளத்துக்காக நிலங்கள் அளிக்கப்பட்டதைக் ;அவர்கள் சாந்தி செய்வான், அகநாழிகைப்பணி செய்வார், பஞ்ச்ச கவ்யம் தெளிப்பான், பூத் தொண்டு செய்வான், இசைக்காரர் முதலானோர்

நான்காவது ஏட்டிலே சட்டரகள் படிக்கும் பாடங்களும் பயில்வோர் எண்ணிக்கையும் நடத்தை விதிகளும் உள்ளன

கரு நந்த அடக்கநின் இன்னுமொரு பெயர் ஸ்ரீவல்லபன் என்பது ஒரு ஏட்டில் கிடைக்கும் தகவல் ஆகும்

***

9.தமிழ்ப்பகுதி பல்லவர் கால தமிழ் எழுத்துக்களிலும் சம்ஸ்க்ருத பகுதி நாகரி எழுத்திலும் உள்ளன. கரு நந்த அடக்கன் வெளியிட்ட இன்னுமொரு சாசனம் திருப்பரப்பு என்னுமிடத்தில் வெளியிடப்பட்டது ஸம்ஸ்க்ருதப் பகுதி கிரந்த எழுத்தில் உள்ளது.

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

***

10. பார்த்திவசேகரபுரம் சாசனத்தில் ஒவ்வொரு மாணாக்கருக்கும் நாள்தோறும் பத்து நாழி வீதம் நெல் அளிக்கப்பட்டது இவர்கள் அங்கேயே தங்கிப் படித்தவர்கள்.

  5 செவிடு = 1 ஆழாக்கு

  2 ஆழாக்கு = 1 உழக்கு

  2 உழக்கு = 1 உரி

  2 உரி = நாழி (படி)

  8 நாழி (அல்லது 4 நாழி வட்டார வழக்கில்) = 1 குறுணி (மரக்கால்)

  3 குறுணி = 1 முக்குறுணி (சுமார் 16.1 லிட்டர்) 21 லிட்டர் என்பது மதுரை வட்டாரக் கணக்கு

.

முக்குறுணி

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள எட்டு அடி உயர பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியன்று 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக்கட்டையை நைவேத்தியம் செய்வார்கள் . இதை பழைய அளவுகோலில் சொல்லவேண்டுமானால் முக்குறுணி என்று சொல்ல வேண்டும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம். பிள்ளையார் சதுர்த்தி நாளன்று இவ்வளவு பெரிய கொழுக்கட்டையை நைவேத்தியம்  செய்வார்கள். அதை ஒட்டியே இவருக்கு முக்குறுணி விநாயகர்/ பிள்ளையார் என்ற பெயர் வந்தது.

–subham—

ஆய்குல, யாதவ குல, செப்பேடுகள், 10 கேள்விகள், கோ கருநந்தடக்கன், பார்த்திவ சேகரபுர செப்பேடு,  நாட் கணக்கில் கலியுகம், பாண்டியர் செப்பேடுகள் பத்து

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 101; இந்து மத கலைச்சொல் அகராதி-101 (Post 16,106)

Written by London Swaminathan

Post No. 16,106

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

Part 101

ஸ்வயம்பு

சுயமாக , அதாவது தாமாக  உருவாகும் சிலைகள் ; பல பாறை வடிவங்களும் கற்களின் வடிவங்களும் இயற்கையாகவே கடவுள் உருவங்கள் போல இருத்தல்; பாணலிங்கம், சாளக்கிராமம் முதலி யன இயற்கை யில் நதிகளில் கிடைக்கின்றன ; இவைகளை சிவன், விஷ்ணு வடைவங்களாக வணங்குவர் ; கயிலாயம் , அமர்நாத்திலுள்ள ஐஸ் லிங்கம் முதலியன இயற்கையில் காணப்படும் சிவ லிங்க வடிவங்களாகும் . இவை தவிர பூமிக்கடியில் நிகழும் அதிர்வலைகளால் பூமிக்கு மேலே வடிவங்கள் தோன்றுவதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது . பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்று பெயர்

ஸ்வயம்பூ லிங்கம் தோன்றுவது எப்படி?

ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்..

ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!

Science behind Swayambhu Lingams

A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.

There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.

Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.

It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.

***

சுகன்யா

பொது அர்த்தம் – நல்ல பெண் அல்லது  நல்ல அழகு ;இளவரசி சுகன்யா ஒரு சமயம் தந்தையுடன் காட்டுக்குச் சென்ற போது ஸ்யவன முனிவர் ஆஸ்ரமத்துக்குச் சென்றனர் ; அங்கு புற்று போல வளர்ந்திருந்த ஓரிடத்தில் இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தவுடன் விளையாட்டாக அதைக் குத்தவே புற்று மண்ணில் தவம் செய்துகொண்டிருந்த ஸ்யவன முனிவரின் கண்கள் குருடாயின. இந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தமாக  சுகன்யாவின் தந்தை சர்யாதி அவளை முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். ஸ்யவன முனிவர் கிழவர் ; அஸ்வினி தேவர்கள் ஸ்யவன முனிவருக்கு இளமையைக் கொடுத்தனர் .

***

ஸ்வேதாஸ்வதர உபநிஷத்

 கிருஷ்ண-யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் இது . ஸ்வேதாஸ்வதர முனிவர் போதனை இதில் உள்ளது சிவா பெருமானையும் ருத்ரனையும் புகையும் இந்த உபநிஷத் , பிற்காலத்தில் எழுதப்பட்டது

சிவா பெருமானை உயர்த்தி பிரம்மன் ஆக — உயர்ந்த கடவுளாக – காட்டுகிறது . வேதாந்த ஸாங்க்ய விஷயங்கள் இதில் காணப்படுகிறது . ஆறு அத்தியாயங்களைக் கொண்டது .ஸ்வேதாஸ்வதர என்பதன் இன்னுமொரு பொருள் வெள்ளைக் குதிரை என்பதாகும் .

சில எடுத்துக் காட்டுகள்:-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை

வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி  தஸ்மை 

தம் ஹ தேவம்  ஆத்மபுத்திப்ரகாசம்  முமுக்ஷுர்வை

சரணமஹம் ப்ரபத்யே

–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19

யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை,  அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர்  ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.

யோ யோனிம் யோனிமதி  திஷ்டத்யேகோ 

யஸ்மின்னிதம்  ஸம் ச  வி சைதி ஸர்வம்

தமீசானம் வரதம் தேவமீட்யம்    

நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11

எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின்  பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை,  போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை  அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.

ஆதி சங்கரர் இந்த உபநிஷத்துக்கு உரை எழுதவில்லை.

***

ஸ்வர்கம்

தமிழ் மொழியில் இதைத் துறக்கம் என்பர் ; நாகலோகம் மேலுலகம் தேவ லோகம் என்ற பொருளைகளும் உண்டு. இந்திரன் இதன் தலைவர் புண்ணியம் செய்தொரர் இங்கு இன்பத்தை அனுபவித்துவிட்டு பூமிக்குத் திரும்புவார் கள். ஆனால் இங்கு பார்வதியின் சாபத்தால் செக்ஸ் தடை செய்யப்பட்டுஉள்ளது . மேரு மலை உச்சியில் இருப்பதாகவும் சில கருதுகிறார்கள் ஸ்வர்க்க என்ற எழுத்துக்களுக்கு ஒருவித கணிதத்தில் 21 என்ற பொருளும் உண்டு  . சங்க காலாட் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை இருந்ததால் மேற்கூறிய ட்கமிழ்ச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர்.

 . ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா ஆகியோர் இங்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்விப்பார்கள் என்பது புராணம் சொல்லும் செய்தி .

***

ஸ்வஸ்திகா

 1200 YEAR OLD SWASTIKA WELL NEAR TRICHY

SWASTIKA IN INDUS VALLEY SEALS

இந்துக்களின் புனிதத் சின்னம் ; மணங்களாம் சுபம் என்று பொருள்; சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படுகிறது உலகின் பழைய கிரேக்க, ரோமானிய பாண்டங்களிலும் இந்தச் சின்னம் உள்ளது ; ஆயினும் இன்றுவரை இந்துக்கள் மட்டுமே இதை 4500 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர் . சம்ஸ்க்ருத தமிழக கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றே துவங்குவம் .

மாக்ஸ்முல்லர் , ஜெர்மானியர்களும் ஆரியர்கள் என்று சொன்னதை மனதில் கொண்டு ஹிட்ட லரும் ஜெர்மனியின் கொடி மற்றும் அரசாங்க   சின்னங்களில் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார் . ஆகையால் மேலை உலகம்  முழுதும் இந்த சின்னத்தத் த்தை தடை செய்துவிட்டார்கள்; எங்காவது இந்த சின்னத்தைக் கண்டால்  கூச்சல் போட த்துவங்குவார்கள் . சில கட்டடங்கள் இயற்கையாக இந்த வடிவத்தில் இருந்ததையும் இடித்து வேறு வடிவத்தில் கட்டிய செய்திகளை அ வ்வப்போது பத்திரிகைகளில் படிக்கலாம் . இந்துக்களுக்கு இது சுப சகுனம் என்பதால் கல்யாணப் பத்திரிகைகள் , அழைப்பிதழ்களிலும் போடுவார்கள்; மேலை நாட்டினருக்கோ இது சிம்ம சொப்பனம்!

1200  ஆண்டுகளுக்கு  முன்னால் திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் தந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சியில் சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு தோண்டி அமைக்கப்பட்டது . அதில் ஒரு பாடல் கல்வெட்டும் உள்ளது  . மேலை நாட்டில் இந்த வடிவத்தில் எந்த அமைப்பு,  கட்டிடம்,  குளம், கிணறு இருந்தாலும் மக்களும் அரசாங்கமும்  சேர்ந்து இடித்துத் தள்ளிவிடுவார்கள்! ஹிட்லர் மீது அவ்வளவு கோபம், வெறுப்பு  .

–Subham— .

Tags– ஸ்வஸ்திகா, துறக்கம், ஸ்வயம்பூ, லிங்கம், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL -101; இந்து மத கலைச்சொல் அகராதி-101

Bhagavad Gita Echo Again! Tirukkural Encyclopaedia- Chapter 24 (Kural 231-240) Post. 16,105

Written by London Swaminathan

Post No. 16,105

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted

The most famous command of Lord Krishna in the Bhagavad Gita is UTHTHSTA! YASO LABHA!!= Arise! Attain Fame!

Also we are reminded of Swami Vivekananda’s famous command from the Upanshad: ARISE! AWAKE! STOP NOT TILL THE GOAL IS REACHED!

Probably Valluvar had Bhagavad Gita  in his mind when he gave the title Pukaz= Fame, Glory, Reputation, Renown.

तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व
जित्वा शत्रून्भुङ् क्ष्व राज्यं समृद्धम् 
मयैवैते निहतापूर्वमेव
निमित्तमात्रं भव सव्यसाचिन्  11-33

tasmāt tvam uttiṣhṭha yaśho labhasva
jitvā śhatrūn bhuṅkṣhva rājyaṁ samṛiddham
mayaivaite nihatāḥ pūrvam eva
nimitta-mātraṁ bhava savya-sāchin

BG 11.33: Therefore, arise and attain fame/glory! Conquer your foes and enjoy prosperous rulership. These warriors stand already slain by Me, and you will only be an instrument of My work, O expert archer. (Compare it with Kural 236)

**

Isai (fame, glory) is linked to Yasas (fame) in Sanskrit; once again I emphasize that both languages came from one source (Lord Shiva); we have a word Yaso dhanam ( Fame Wealth) in Sanskrit literature.

The word Isai/Yasas is used in 4 Kurals.  Other Sanskrit words in this chapter are- Lokam (Ulakam) in two couplets ; also Viththakar in 235.

**

Kural 236 is the most popular and most quoted one; but look at the translations from five scholars! Even the title Pukaz in Tamil has four different words here!

Amazing are the different translations!

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

 

Part 42

Chapter 24  Renown 24புகழ் Fame, Glory, Good Reputation

H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 did not do any transaction for this chapter.

***

231.Give unto the poor; live in glory; there is no greater gain on earth— A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

231.In life, nothing is as worthwhile as

The public esteem arising out of charity- S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

231
See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.
Give to the poor and live with praise. There is no greater profit to man than that. Rev.Dr.GU Pope  – GUP, Year 1886

***

231.They gather fame who freely give
The greatest gain for all that live– Suddhananda Bharathiyar – SB

***

231.There is no greater boon to man than the renown gained by giving the poor— EVS Publishers, Singapore- EVS, Year 1986

***


231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

232.The theme of all ages is the one song of praise of the glory of those who help the needy and the poor– ANM+2

***

232.The fame of a man , who gives freely to sufferers

Will live forever in the words of all speakers and writers—– SMD

***

232
The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor. – GUP

***

232.The glory of the alms-giver
Is praised aloud as popular– SB.       

***
232.All the praise that learned sing  centres on the fame of those who gives the needy— EVS

***

232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

XXXXXXXXXXXXXXXXXXXXX

233.All things bloom and fade on earth; but the peerless renown of one stands forever– ANM+2

***

233.The outstandingly unique renown (of a benevolent man alone)

Will live for ever; all the rest will die out—– SMD

***

233
Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness. – GUP

***

233.Nothing else lasts on earth for e’er
Saving high fame of the giver! – SB     
***
233.There is nothing that endures in the world other than matchless high renown– EVS

***

233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

234.In the abode of the Gods, more honoured than the saints are those that has won lasting fame on earth– ANM+2

***

234.If one earns an outstanding reputation on earth,

Knowing people will honour him and not the Gods— SMD

***

234
If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world. – GUP

***

234.From hailing gods heavens will cease
To hail the men of lasting praise – SB      
***
234.The Gods will honour those who have earned rver lasting fame rather than  the sages who have attained the abode of the Gods– EVS

***


234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

XXXXXXXXXXXXXXXXXXXXXX

235.Out of the ruins and death of their selves, it is only the wise that fashion out a name for themselves – ANM+2

***

235.Poverty is wealth, if it arises from causes which give a man fame; such death too

Is life everlasting and welcome to the noble sages – SMD

***

235
Loss that is gain, and death of life’s true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise. – GUP
***

235.Fame in fall and life in death
Are rare but for the soulful worth– SB.     

*** 

235.Poverty, which conduces to fame, and death which brings glory, are the lot of none but the wise– EVS

*** 

235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

236.Better to be born covered with glory on earth than never to be born at all– ANM+2

***

236.If one is born at all, he should be born to glory;

Otherwise, it were better that he were not born– SMD

***

236
If man you walk the stage, appear adorned with glory’s grace;
Save glorious you can shine, ’twere better hide your face.
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born. – GUP
***
236.Be born with fame if birth you want
If not of birth you must not vaunt– SB.        236

***

236.If one takes birth in this world one should come with qualities which bring fame; if not it is better not to appear at all— EVS

*** 
236. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

237.Bemoan your own sloth that stands in your way to glory; why fret about the insults that others hurl at you– ANM+2

***

237.If some men are strangers to fame, they should blame themselves;

Why blame those who scorn them for it? – SMD

***

237
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You’ve yourself to blame.
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability. – GUP

***

237.Why grieve at those who blame the shame
Of those who cannot live in fame? – SB      

***
237.Those who cannot achieve fame should blame themselves and not those who criticise them— EVS

*** 

237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

238.Verily do the wise do cry shame on those that leave no foot-prints on the sands of time, when there is glory to be sought and won in the world of men– ANM+2

***

238.If, in the final analysis, one fails to earn the esteem of the public

One is sure to get the blame of all the world– SMD

***

238
Fame is virtue’s child, they say; if, then,
You childless live, you live the scorn of men.
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world. – GUP

***

238.To men on earth it is a shame
Not to beget the child of fame– SB.       

***
238.If a man cannot acquire fame so that it may live after him, such failure is a source of ignominy to him— EVS

***
238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறா விடின்

XXXXXXXXXXXXXXXXXXX

239.The glory and the freshness of the earth shrivels into nothingness, before the unholy tread of an inglorious band of men– ANM+2

***

239.The earth that bears men of no renown,

Will itself shrink up its fruits– SMD

***

239
The blameless fruits of fields’ increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.
The ground which supports a body without fame will diminish in its rich produce. – GUP

***

239.The land will shrink in yield if men
O’erburden it without renown– SB.     

***
239.The land burdened with bodies of flesh and blood without fame will grow barren of useful products— EVS

***
239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

240.Alive is the soul that is free from reproach; but dead is the heart that lives without a name– ANM+2

***

240.Only those who live shunning blame may be said to live, while the others

 Who live without a good name, do not live at all– SMD

***

240
Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.
Those live who live without disgrace. Those who live without fame live not. – GUP
***

240.They live who live without blemish
The blameful ones do not flourish– SB.       

***

240.Only those who live without creating a bad reputation may be said to live, and those that do not earn fame may be counted among the dead- EVS

 ***

240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

To be continued………………..Tags- Chapter 24 , Renown, 24. புகழ், Fame, Glory, Good Reputation, part 42

ஆயிரம் பொன்மொழிகள்! (81-110) Post.16,104

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,104

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (81-110)

ச. நாகராஜன்

சில பொன்மொழிகளின் தொடர்ச்சி…! (From my collection!)

81. Way – Will

Find a way or make one. The world always listens to a man with a will in him.   – Mandoc

Word – Kind

Start some kind word on its travels; there is no telling where the good it may do will stop.  – Talmage

Wisdom

What is the part of wisdom? To dream with one eye open; to be detached from the world without being hostile to it; to welcome fugitive beauties and pity fugitive sufferings, without forgetting for a moment how fugitive they are.      – G. Santayana

Man – Wisdom – God – Charm

Man could direct his ways to plain wisdom, and support his life by tasteless food; but God has given us wit and flavour, and laughter and perfumes to enliven the days of man’s pilgrimage and to “charm his painted steps over the burning mart.”     – Sydney Smith

Will – Intellect

For though with judgement we on things reflect, our will determines not our intellect. – Edmund Waller

Women

Regard the society of women as a necessary unpleasantness of social life, and avoid it as much as possible. – Leo Tolstoy

Writer

It is the glory and merit of some men to write well, and of others not to write at all.  – La Bruvers

Wife

Begging and death are better than living with a bad wife.  – Sukra Niti

Mind

Cultivate not only the cornfields of your mind, but the pleasure grounds also.  Whateley

90. Mind

Uncultivated minds are not full of wild flowers, like uncultivated fields. Villainous weeds grow in them and they are the haunt of toads.  

Mind – Power – Cheerfulness

It lies in our own power to attune the mind to cheerfulness.

Mind

The truest state of mind, rested in, becomes false.   – Emerson

Habit

The diminutive chain of habit is scarcely felt till it is too strong to be broken.   Dr. Johnson

Happiness

No human being can come into this world without increasing or diminishing the sum total of human happiness, not only of the present, but of every sub-sequent age of humanity.  – Elihu Burritt

Happiness

Happiness is a thing to be practiced like the violin.    – Lord Avebury

Great men

The great saints, the heroes, the pioneers, the artists have rarely been ‘nice people’. – Winifred Holtby

Great men

It is a wonderful thing that here and there in this hard, uncharitable world there should be left a few rare souls who think no evil. This is the great unworldliness.   – H. Drummond

Grief

Don’t grieve more than a shilling’s worth over a lost shilling.

Grief – Joyousness

We have not met grief aright if we come out of it with a loss of joyousness.  –   J.R. Miller

100. Good Man

It is surprising how much good a man may do in the world if he allows others to take the credit for it.

Seeing – Tears

There’s no seeing one’s way through tears.  – W.G. Benham

Fate

Hundred arrows do not hurt the quarry, if not fated to die; but when the how comes, a blade grass is enough to kill.                                                                                                                   – Hitopadesha

Peace of Mind – Present

Don’t destroy your peace of mind by looking back. Live in the present. Enjoy the present.

Thinking

Those who think nobly are noble.    – Berkeley

மேலான சிந்தனைகள் மேவி வருவோரே                                மேலோரா கின்றார் விரைந்து                     – உலக உள்ளங்கள் (90) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Thought

Thought is all light, and publishes itself to the universe.   – Emerson

ஒளிமயமே எண்ணம் உலகிற் கதுவே                               வெளியாகி நிற்கும் விரைந்து                  – உலக உள்ளங்கள் (167) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Thought – Deed

Our thoughts are like to tiny seeds

That soon must blossom into deeds.     – A.E. Anderson

எண்ணம் விதையாகும் இயல்செயல்கள் எல்லாமவ்                      வண்ணம் வளர்ந்து வரும்                      – உலக உள்ளங்கள் (93) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Frugality – Industry

Frugality is a fair fortune; and habits of industry a good estate.     – Franklin

சீரான செட்டு சிறந்த செல்வம்; செய் முயற்சி                               நேரா நிலைத்த நிதி.                              – உலக உள்ளங்கள் (360) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Patience

Patience is bitter, but its fruit is sweet.     – Rousseau

பொறுமை கடுமை பொறையின் பயனோ                           இருமையும் இன்பம் தரும்.                       உலக உள்ளங்கள் (98) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

110. Woman

It is better to be a woman than be subject to a woman.  

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்                 பெண்ணே பெருமை யுடைத்து.                    உலக உள்ளங்கள் (901)

                                                  ஜெகவீரபாண்டியனார்

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)

Written by London Swaminathan

Post No. 16,103

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

சுபத்ரா

வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.

***

சுக்ரன் / சுக்ராச்சார்யா

சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .

சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு;  பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில்  கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).

பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர்  ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .

***

சுக்ர நீதி

சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.

***

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம்  இது;  சுந்தர காண்டத்தைப் படித்தால்ர்      ஆ  அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள்  . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின்  மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முக்கிய அத்தியாயங்கள்

Chapter 1 – அனுமனின் புறப்பாடு;

Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;

Chapter 7 – புஷ்பக விமான வருணனை

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்; 

Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்

Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு

Chapter 32 –  ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்

Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்

Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;

Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்

Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்

Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை

Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;

Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்

Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்

***

சுமேரு

இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.

வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .

***

சுரா  பானம்

இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு  இதைத்  தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது.  அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன

***

சூர்ய வம்சம் 

புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;

ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும்  சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.

ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE  கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !

***

சூர்யன்

சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி

 சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள  முனிவர்கள் — வாலகில்யர்கள்–  செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள்  அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா =

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

***

சுஸ்ருதர் 

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .

சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.

சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள.  பூர்வ-தந்த்ராவில் 120-ம்  , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.

பூர்வ-தந்த்ராவில்

•             சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்

•             நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்

•             சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்

•             சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;

•             கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்

•            

உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )

•             கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள்  (காய சிகித்ஸா)

To be continued…..

Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்