நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள்  பற்றி 10 கேள்விகள் (Post.16,081)

Written by London Swaminathan

Post No. 16,081

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது- என்ற புகழ்பெற்ற பாடலை யாருக்காக எழுதினார் நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்?

 2

தமிழ் இனத்தையும் அவன் குணத்தையும் பாராட்டி கவிஞர் எழுதிய பாடல் என்ன ?

3

சூரியனும் சந்திரனும் சுற்றி வருவது இறைவனால்தான்; அவனுக்கு வெவ்வேறு மத த்தில் வெவ்வேறு பெயர்கள் உண்டு என்று கவிஞர் எழுதியது என்ன?

4

கைத்தொழிலின் பெருமையை கவிஞர் எப்படிப் பாடினார் ?

5

தமிழா தலை நிமிர்ந்து நில் என்று அவர் சொன்னதற்கு என்ன காரணங்களை இயம்பினார் ?

6

குஜராத்திக் கவிஞர் நரசிம்ம மேத்தா பாடிய வைஷ்ணவ ஜனதோ காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல் ; அதை கவிஞர் எப்படி மொழிபெயர்த்தார் ?

7

 பாரதி பற்றி கவிஞர் பகிர்வது என்ன ?

8

நவகாளியில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது கவிஞரை எப்படிப் பாதித்தது?

In October 1946, the Noakhali riots took place in the Noakhali and Tipperah districts of undivided Bengal (now in Bangladesh). Muslim mobs carried out a wave of systematic massacres, rapes, arson, looting, and forced religious conversions targeting the local Hindu minority. The violence resulted in widespread displacement and a massive refugee exodus

 9

கவிதை என்றால் என்ன? என்று கவிஞர் கருதுகிறார் ?

10

திரைப்படங்களில் இடம்பெற்ற கவிஞரின் பாடல்கள் எவை ?

**********************************

விடைகள்

1.கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றுவருகுது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே .

****

2.தமிழன் என்றோர் இனமுண்டு

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்

அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்

மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்

****

3.சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?

காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன ?

பேரிடி மின்னல் எதனாலே ?

பெருமழை பெய்வதும் எவராலே ?

யாரிதற் கெல்லாம் அதிகாரி ?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள் ;

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’

என்றும் சிலபேர் சொல்வார்கள் ;

எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.

எந்தப் படியாய் எவர்அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன ?

நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

***

4.கைத்தொழில்

 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

 இருந்திடல் உனக்கே சரியாமோ    

உழவும் தொழிலும் இல்லாமல்

உலகில் ஒன்றும் செல்லாது

விழவும் கலையும் விருந்துகளும்

வேறுள இன்பமும் இருந்திடுமோ    

****

5. தமிழன் பாட்டு

பல்லவி

தமிழ னென்று சொல்லடா!

தலைநி மிர்ந்து நில்லடா! (தமிழா)

சரணங்கள்

அமுத மூறும் அன்பு கொண்டிங் கரசு செய்த நாட்டிலே

அடிமை யென்று பிறர்ந கைக்க முடிவ ணங்கி நிற்பதோ!

இமயம் தொட்டுக் குமரி மட்டும் இசைப ரந்த மக்கள்நாம்

இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்ற யாவும் செய்குவோம்.       (தமிழா)

குஞ்சைக் காக்கும் கோழி போலக் குடியைக் காத்த மன்னர்கள்

கோல்ந டத்த அச்ச மின்றி மேல்நி னைப்புக் கொண்டுநாம்

பஞ்ச பூத தத்து வங்கள் பக்தி யோடு முக்தியைப்

பார்சி றக்கச் சொன்ன நாமும் சீர்கு றைந்து போவதோ?       (தமிழா)

உலகி லெங்கும் இணையி லாத உண்மை பாடும் புலவர்கள்

உணர்ச்சி தன்னை வானைத் தாண்டி உயரச் செய்யும் நாவலர்

கலக மற்றுக் களிசி றக்கக் கவிதை சொன்ன நாட்டிலே

கைகு வித்துப் பெயர்கள் பாடிக் காலந் தள்ளல் ஆகுமோ?       (தமிழா)

கங்கை யோடு பெருமை கொண்ட காவி ரிப்பொன் னாட்டிலே

கவலை யின்றிச் சோறி ருக்கக் கலைக ளெண்ணி வாழ்ந்தநாம்

மங்கி மங்கி வறுமை மிஞ்ச மதிம யங்கி மாய்வதோ!

மாநி லத்தில் சோற்றுப் பஞ்சம் மறையு மாறு மாற்றுவோம்.       (தமிழா)

சித்தி ரத்தில் மிகஉ யர்ந்த சிற்ப நூலின் அற்புதம்

சின்னச் சின்ன ஊரிற் கூட இன்னு மெங்கும் காணலாம்;

கைத்தி றத்தில் ஈடி லாத கல்வி தந்த தமிழர்நாம்

கைந்நெ றித்து வேலை யின்றிக் கண்க லங்கி நிற்பதேன்?       (தமிழா)

எண்ண மற்றும் விசன மற்றும் எங்கும் செல்வம் பொங்கவே

எந்த நாளும் ஆடல் பாடல் எழில ரங்கம் ஓவியம்

பண்ண மைந்த சூழலும் யாழும் பக்க மேளம் யாவையும்

பாருக் கீந்து மகிழ்ச்சி யின்றி நாமி ருத்தல் பான்மையோ!       (தமிழா)

விண்ம றைக்கும் கோபுரங்கள் வினைம றக்கும் கோயில்கள்

வேறு எந்த நாட்டி லுண்டு வேலை யின்வி சித்திரம்?

கண்ணி றைந்த காவ ணங்கள் கனிகள் மிக்க சோலைகள்

கண்ட போது பண்டை யெங்கள் நாக ரீகம் காட்டுமே.       (தமிழா)

மனித வாழ்வில் இன்ப மென்று சொல்லு கின்ற யாவையும்

மற்ற வாழ்வில் உதவு மென்று நம்பு கின்ற ஞானமும்

தனிமை யான முறையில் யார்க்கும் தந்த திந்தத் தமிழகம்

தட்டி டாது தெய்வ மின்னும் கிட்டி நம்மைக் காக்குமே.       (தமிழா)

————

6. வைஷ்ணவன் என்போன் யார்?

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்

வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

சரணங்கள்

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;

உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்

அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.       (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்

உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோ தும்அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.       (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்யன்

நாயக னாகிய சிறீரா மன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்

ஆகும்அவனே வைஷ்ணவனாம்.       (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்த்

தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமுடை வார்கள் எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்

அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரை சேர்வார்.       (வைஷ்)

***

7.ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி

பல்லவி

சுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம்

சுபசிறீ சுப்பிரமண்ய பாரதி நாமம்.

அநுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்

நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்       (சுதந்)

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து

ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து

கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு

கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!       (சுதந்)

தெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத்

தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து

வையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும்

வாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன்!       (சுதந்)

பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை

பேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை

உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம்

உத்தம தத்துவங்களை ஒலித்திடும் கீதம்!       (சுதந்)

————

8. வடநாட்டில் கொடுமை*

கோபமும் கொதிப்பும் குமிறிடும் படிபல

கொடுமைகள் நடக்குது வடநாட்டில் ;
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்

தமிழா! உன்குணம் தவறிடுமோ?

அன்னிய மதமென அடிக்கடி பழகிய

அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது

எண்ணவுங் கூடத் தகுமோதான்?

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்

வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்

அழகிது தானோ? ஐயையோ!

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்

பிள்ளையை மடிப்பதும் பேய்செயுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்

விட்டிடப் படுமோ? தமிழ்மகனே!

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்

அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை

எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது

தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!

வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல

அன்புள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்ததம் குலத்தவர் காத்தனர்

கொள்கையை நாம்விடக் கூடாது.

வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும்

வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு.
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்

மதமெனக் கொண்டவர் தமிழர்களே.

எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை

ஏந்தி நடப்பது தமிழ்நாடு.
அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்

அசைந்திட லாமோ தமிழறிவு?

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை

மாநிலம் இன்னமும் சகித்திடுமோ?
விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்

வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.

* நவகாளி அட்டூழியம் கேட்டுப் பாடியது

நவகாளியில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது கவிஞரை எப்படிப் பாதித்தது?

In October 1946, the Noakhali riots took place in the Noakhali and Tipperah districts of undivided Bengal (now in Bangladesh). Muslim mobs carried out a wave of systematic massacres, rapes, arson, looting, and forced religious conversions targeting the local Hindu minority. The violence resulted in widespread displacement and a massive refugee exodus.

***

9.கவிதை என்றால் என்ன?

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே ‘கவிதை’ எனப்படும்.
‘கவிதை’ என்பது கற்பனை உள்ளது ;
கூட்டியும் பேசும் ; குறைத்தும் கூறும் ;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும் ; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

****

10.நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் பல பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்று தமிழரிடையே பெரும் புகழ்பெற்றன. அவற்றுள் எம்.ஜி.ஆர் நடித்த ‘மலைக்கள்ளன்’ மற்றும் ‘கடவுளின் குழந்தை’ ஆகிய திரைப்படங்கள் மிக முக்கியமானவை ஆகும்.திரைப்படப் பாடல்கள் விவரம்எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – எம்.ஜி.ஆர் நடிப்பில் 1954-ல் வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் நாமக்கல் கவிஞரின் வரிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா – 1960-ல் வெளிவந்த கடவுளின் குழந்தை திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழினத்தின் சுயமரியாதையைப் போற்றும் வகையில் அமைந்தது.இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது – இம் பாடலும் கடவுளின் குழந்தை (1960) படத்தில் கவிஞரின் படைப்பாக இடம்பெற்றது.கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் – இச்சமூக சீர்திருத்தப் பாடலும் அதே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

–subham—

Tags நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பாடல்கள்  ,10 கேள்விகள், தமிழன் என்றோர் இனமுண்டு, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்

Yama’s Accountant Chitra Gupta ! Tirukkural Encyclopaedia- Chapter 21 (Kural 201-210) – Post16.080)

Written by London Swaminathan

Post No. 16,080

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

POINTS TO BE NOTED:

IN THE PREVIOUS CHAPTER 20, words PAYAN AND NAYAN are used in 8 couplets. Some see them as Sanskrit words (PAYAN=PALA/N). but it is subject to more research

In this chapter 21, we see similar views in Bhagavad Gita and Dhammapada.

“Dharmo Rakshati Rakshitah” is a famous quote in all Sanskrit scriptures. It is echoed by Valluvar in Kural 204.

The shadow (Kural 208) simile is used in Dhammapada (125).

It is interesting to see a few English translators use God of Justice or Dharma.

It is also interesting to note that no Sanskrit word is used in 10 Kurals; but chapter has the word Adhikaram.

Yama’s accountant name is CHITRAGUPTA meaning Hidden Drawing or Hidden Picture. Hindu children are told that everything they do are accounted by Chitra Gupta; this is what translated by Valluvar and Buddha as SHADOW.

Our Words, Thoughts and Deeds (Mano, Vak, Kayam in Sanskrit) create pictures; Yama is a Super Computer; He calculates them through Chitra Gupta and gives awards or punishments.

Shadow= Chitra Gupta (Gupta= hidden; Chitra= picture)

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 39; 21. தீவினையச்சம் – Fear of sin,  Dread of Evil Deeds

Dread of Evil Deeds

201.Hardened into sin, the wicked fear not the dark forces of evil; but the noble flee away from them—.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

201.The very thought of wrong -doing frightens good men;

Bad men do not possess this precious quality— S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

201
With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.– Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***
201.Sinners fear not the pride of sin.
The worthy dread the ill within.       Suddhananda Bharathiyar- SB
***
201.Those who are under the illusion caused by their past evil actions will have no fear for doing evil.  The good will fear– EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு

XXXXXXXXXXXXXXXXXXXXX

202.Evil breeds evil; therefore, it is dreaded more than scorching fires—– ANM+2

***

202.As evil gives rise to a chain of evil, it is wise to shrink from sin,

As from something more terrible than fire—– SMD

***

202
Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.
Because evil produces evil, therefore should evil be feared more than fire. – GUP
***
202.Since evil begets evil dire
Fear ye evil more than fire– SB

***     

202.Since evil deeds produce evil results such evil deeds are feared more than fire— EVS

***

202.Ill deeds give rise to ills alone;

Ill deeds must then be feared far more than fire– H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

202. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

XXXXXXXXXXXXXXXXXXX

203.It is the height of wisdom to do no evil even to enemies—– ANM+2

***

203.The best and most precious knowledge of all,

Is not to return evil for evil—– SMD

***

203
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom’s highest law, ’tis said, fulfil.
To do no evil to enemies will be called the chief of all virtues. – GUP
***
203.The wisest of the wise are those
Who injure not even their foes– SB.       

***

203.Refraining from evil even to those who do harm is said to be the highest of all wisdom– EVS

***


203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

204.Design not the ruin of another even in an unwary moment, lest the God of  justice should compass your own–– ANM+2

***

204.Even by inadvertence, do not plan evil for others,

Lest Dharma should decree the schemer’s own ruin—– SMD

***

204
Though good thy soul forget, plot not thy neighbour’s fall,
Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall.
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates. – GUP

***

204.His ruin virtue plots who plans
The ruin of another man’s– SB.       

***

204.Do not wish for another’s ruin even absentmindedly. If you do, your own ruin is certain to befall– EVS

***

204.Plan not another’s ruin, even in forgetful mood;

Or Virtue will herself the planner’s ruin plan– HAP

***

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

205.Let poverty be no plea for committing evil, for evil deeds make your poorer still—– ANM+2

***

205.Poverty should not incite one to wrong- doing for

It will result in absence of virtue in all births—– SMD

***

205
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still. – GUP
***
205.Who makes poverty plea for ill
Shall reduce himself poorer still– SB.   

***   

205.Do no evil for the sake  of redemption from poverty. If you do so, you will grow more and more poor– EVS

***

205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
206.Commit not evil, lest your own doors should be darkened by you—– ANM+2

***

206.The man who does not want to be consumed by evil, as by a burning disease,

Shall not ever think or do evil to others—– SMD

***

206
What ranks as evil spare to do, if thou would’st shun
Affliction sore through ill to thee by others done.
Let him not do evil to others who desires not that sorrows should pursue him. – GUP

***

206.From wounding others let him refrain
Who would from harm himself remain– SB.     

***
206. one who would be free from their retributive suffering caused by evil action should refrain from doing evil to others — EVS
***

206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

207.There is a way of escape from the wrath of every other foe; but the evil deeds of a wicked man relentlessly pursue him down to utter ruin—– ANM+2

***

207.Other enemies one might hope to escape, but one cannot evade

The inexorable pursuit of the effect of one’s own evil deeds—– SMD

***

207
From every enmity incurred there is to ‘scape, a way;
The wrath of evil deeds will dog men’s steps, and slay.
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill. – GUP

***

207.Men may escape other foes and live
But sin its deadly blow will give– SB.   

***   
207.one may escape great enmity but it is not possible to escape the retribution of evil deeds– EVS
***

207.Men may escape scot free from every foe;

But ill deeds wrath will dog the steps and slay at last—HAP

***

207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

XXXXXXXXXXXXXXXXXXXXXX
 

208.Like a shadow do evils dog the steps of the injurer—– ANM+2

***

208.Just as the shadows follow the feet wherever they go,

The effect of evil follows the evil-doer relentlessly –– SMD

***

208
Man’s shadow dogs his steps where’re he wends;
Destruction thus on sinful deeds attends.
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not. – GUP

***
208.Ruin follows who evil do
As shadow follows as they go– SB.     

***

208.Just as one’s shadow follows one wherever one goes, destruction follows the path of the evil doer– EVS

***

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉரைந் தற்று

XXXXXXXXXXXXXXXXXXXX

209.For the well-being of yourself, which you hold dear, raise not your guilty arm against another—– ANM+2

***

209.If you love yourself, it is wise to eschew

Even the thought of wrong-doing—– SMD

***

209
Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!
If a man love himself, let him not commit any sin however small. – GUP

***
209.Let none who loves himself at all
Think of evil however small– SB.        209

***

209.If a man care for the well being of his own self he should do no harm whatever to others– EVS

***

209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

XXXXXXXXXXXXXXXXXXXX

210.He rests secure from the ills of life who does not stray away from the straight path to stain his hands with wicked deeds–– ANM+2

***

210.Even if a man has got into unrighteous ways, he will be

A rare one indeed, if he does not do evil to others—– SMD

***

210
The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path. – GUP

***

210. He is secure, know ye, from ills
Who slips not right path to do evils– SB.       

***

210.If one will not swerve from the path of righteousness  and do evil to others, know ye that no evil can befall one– EVS

***
210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

to be continued……………

Tags- Part 39; 21. தீவினையச்சம் – Fear of sin,  Dread of Evil Deeds, Tirukkural Encyclopaedia- Chapter 21 (Kural 201-210)

போர், போர், போர்! மனித குல வரலாற்றில் போரும் சமாதானமும்! (Post.16,079)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,079

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

போர், போர், போர்! மனித குல வரலாற்றில் போரும் சமாதானமும்!

ச. நாகராஜன்

போர், போர், போர்!

ரஷியாவுக்கும் உக்ரேனுக்கும் போர்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் போர்.

போரில்லாத காலமே இல்லை.

சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியருக்குப் போர்.

கிரேக்க நாட்டில் ஏராளமான போர்கள்.

இருபதாம் நூற்றாண்டில் மட்டும் இரண்டு கோடியே முப்பத்தோரு லட்சம் பேர்கள் போர்களினால் மாண்டனர். இதில் இரண்டாம் உலகப் போரில் பெர்லினில் நடந்த சண்டையில் மட்டும் 80000 சோவியத் வீரர்கள் இறந்தனர்.

மனித வரலாற்றில் போர் இல்லாத காலம் என்று ஒன்று உண்டா, என்ன?

“மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வன்முறையும் தோன்றி விட்டது என்றே கூறலாம்” என்று கூறுகிறார் ஐயான் மோரிஸ் என்ற விஞ்ஞானி -லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த செய்தியில்.

 Peace in World History என்ற வரலாற்று நூலை எழுதிய ஜார்ஜ் மேஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்டீயர்ன்ஸ் என்ற பேராசிரியர் 

மனித குலத்தின் ஆரம்ப காலத்தில் போர் என்ற வார்த்தையே இல்லை என்கிறார்.

வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு அரசுகள் வர ஆரம்பித்தவுடன் போரும் ஆரம்பமாயிற்று. அமைதியான காலம் என்று ஒன்று உண்டென்றால் அது ஒரு பேரரசன் எல்லா பிராந்தியங்களையும் ஜெயித்து தன் வசப்படுத்திக் கொண்ட போது ஏற்பட்ட காலம் தான்!

இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஃப்ராங்கோபன் என்ற பேராசிரியர், “வலிமை வாய்ந்த இரு பேரரசர்கள் அரசாண்ட போது போர் என்பது அபாயகரமான ஒன்று என்பதை உணர்ந்து அவர்கள் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதையும் பார்க்கலாம்” என்கிறார்.

உதாரணமாக எகிப்தும் பழைய கால துருக்கியும் வலிமை வாய்ந்த நாடுகளாகத் திகழ்ந்ததால் கி. மு. 1400 முதல் 1200 வரை போரே ஏற்ப்டவில்லை என்பதைச் சொல்லலாம்.

அதிக காலம் போர் செய்த நாடுகள் என்று பார்த்தால் ரோம் நகரையும் பெர்ஸியாவையும் கூறலாம். ஆனால் இவை கூட கி.பி. 387 முதல் 501ம் ஆண்டு முடிய போர் செய்யாமல் சமாதானமாக இருந்தன. தங்களின் வலிமையை இவர்கள் சமமாக உணர்ந்து கொண்டதே இதற்குக் காரணம்.

கி.பி. 1000ம் ஆண்டு முதல் 1200 முடிய சீனாவின் சாங் வமிச மன்னர்கள் தங்கள் அண்டைநாட்டவரான லியோ மற்றும் ஜின் ஆகியோருக்கு சிறிய தொகையை கப்பம் கட்டி சமாதானத்தை நிலை நாட்டிக் கொண்டனர்.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த சமாதான காலம் என்று சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய  நாடுகள் கி.பி. 1600 முதல் 1850 முடிய கடைப்பிடித்த சமாதானத்தைக் கூறலாம்.

வட அமெரிக்காவில் உள்ள ஐந்து தேசங்கள் 1450 முதல் 1777 முடிய சமாதானத்தைக் கடைப்பிடித்து வந்ததையும் லைவ் ஸயின்ஸ் பத்திரிகை சுட்டிக் காட்டுகிறது.

போர்களினால் ஏற்படும் பாதிப்புகள் பல!

பல லட்சம் போர் வீரர்கள் மடிகின்றனர்.

தேசங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

பெண்களைக் கற்பழிப்பது போன்ற தகாத செயல்கள் செய்யப்படுகின்றன,

சுற்றுப்புறச் சூழல் கெடுகிறது.

ஆண், பெண் விகிதாசாரம் கெடுகிறது.

குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

கலாசாரம் பாதிக்கப்படுகிறது. மத சம்பந்தமான புனித இடங்கள் அழிக்கப்படுகின்றன.

நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் பெரும்பாடு பட வேண்டியதாக இருக்கிறது.

ஜெனிவா ஒப்பந்தம் 1949ல் ஏற்பட்டு போர்களைத் தவிர்க்க வழி வகுத்தாலும் போர்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.

போர்களே இல்லாத புதியதோர் உலகம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும், இல்லையா?

**

Sexy Joke; Purananuru wonders-52, One Thousand Interesting Facts – Part 92 (Post.16,078)

Written by London Swaminathan

Post No. 16,078

Date uploaded in London – 11 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 752 Theory of Evolution again

Paripatal verses 2 and 13 compare Pancha Bhutas with Lord Vishnu. In Puram verse 2 by Sangam poet Mr Nagarajan (Mudi Nagarayar in Tamil) also we see Pancha Bhutas. Appar in Sixth Tirumurai Tevaram  (Vaitheeswaran Koil Decad) and Manikkavasagar also said the same.

Greeks did not have Five Elements; in China five elements are different. Only Sangam poets and earlier Sanskrit poets listed same Pancha Bhutas= Five Elements.

According to them Earth is given No.5;

Earth has five qualities: sound; touching/feeling, fire; taste; smell.

**

Water is given No.4;

Water has four qualities – sound; touching/feeling, fire; taste;

**

Fire is given No.3

Fire has three qualities- sound, feeling, light;

**

Air is given No.2; Air has sound and feeling;

and

Space is given No.1.

Space has only one quality – sound.

**

Those who study astronomy knows that the space is full of sounds coming from different galaxies.

What is interesting is the order of five elements.

Sound/space, Wind, Fire, Water, Earth.

After Big Bang (sound), wind was blowing big flame cooled and formed Earth; then water came from rain; and the earth appeared when water stayed within sea.

Only because of scientific thinking and only because of scientific knowledge they gave numbers to five elements.

More over we see the continuity in thinking from Sangam Age Paripatal to Appar Tevaram or Manikkavasagar’s  Tiruvasagam.

இதோ புறநானூற்றுப் பாடல் 2 Pura Nanuru Verse 2

மண் திணிந்த நிலனும்-earth

நிலம் ஏந்திய விசும்பும்-sky

விசும்பு தைவரு வளியும்-wind

வளித்தலைஇய தீயும்-fire

தீ முரணிய நீரும், என்றாங்கு- water

ஐம்பெரும் பூதத்து five elements இயற்கை போலப்

***

பரிபாடல் Paripaatal 13

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; 18 space

இரண்டின் உணரும் வளியும் நீயே; wind/star dust

மூன்றின் உணரும் தீயும் நீயே;   fire   

நான்கின் உணரும் நீரும் நீயே; water

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே: land/earth

அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும் 23

***

Appar Tevaram Sixth Tirumurai

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு  1 sky

வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்- 2 fire

தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்  4 water

தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச- 5 earth

மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை

வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்

***

திருவாசகம் Tiruvasagam of Manikkavasagar

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” (தி.8 திருவாசகம். போற்றித் திருவகவல் – 137 – 41) என்பது முதலியனவாக அருளிச்செய்தவற்றையும் அறிக.

இதில் பஞ்சபூதங்களில் ஐந்து தன்மைகளை அழகாக எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்  திருவாசகத்தில் போற்றித்  திரு அகவல்  பாட்டில்

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 5 earth

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி4 water

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 3 fire

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 2 wind

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி- 1 space

என்று சிவபெருமானைப் போற்றுகிறார்

The beauty lies not only in the Pancha Bhuta Numbers but also in the continuity for thousands of years. It is from the Vedic literature they got these facts.

***

Item 753

Another beauty is the same attributes to Lord Vishnu in Paripatal and Purananuru:

Eagle Flag- Garuda Flag’

Many headed snake;

Conch and wheel of Vishnu are compared with moon and sun.

***

Item 754 Kalidasa simile in Paripatal

Paripatal verse 14 is on Lord Muruga with usual details. The interesting thing is the poet’s name is KESAVAN!

But Paripatal 15 on Lord Vishnu gives us a clue on date of Kalidas. I have shown that Sangam poets used at least 200 similes from Kalidasa’s seven books.

Here is one more simile.

The most famous Sloka on Lord Siva is Kalidasa’s first verse in Raghuvamsam (a book with hundreds of similes):

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥ १-१

vāgarthāviva saṁpṛktau vāgarthapratipattaye |

jagataḥ pitarau vande pārvatīparameśvarau || 1-1 (Raghu)

I adore the Parents of Universe, pArvati – parameshvara, who are indissolubly cleaved together like sound and sense (Word and Meaning)

This simile “like sound and sense” or Word and Meaning is used for Lord Vishnu in this Paripatal verse 15!

One more proof to show that Sangam poets were well versed in Kalidasa of Second century BCE.

This poem shows us the beautiful Azakar koil near Madurai, also known as Tirumalirum Cholai.in those days Krishna’s brother Balarama was also worshipped there according to the poem

Lord Vishnu’s five symbols are listed.

***

Item 755 Praying facing towards a particular Direction


Muslims wherever they are , face the direction of Mecca and do the prayer. Even the air planes of Muslim countries show this direction on the screen.

This custom is in ancient Hindu scriptures. Here the poet says go to Vishnu’s shrine ( in Azakarkoil) with your family worshipping that direction.

So even the direction where famous shrines were considered holy.

For instance, North is the holiest direction for Hindus because of Himalayan shrines. Even Sangam poets and kings fast unto death facing only North.

***

Item 756 Sexy Joke about menstruation

Paripatal verse 16 is on River Vaigai

Here is a scene portrayed by the poet on menstruation as a joke.

River Vaigai is compared with Pandyan king’s generosity.

Later the poet says,

 Relatives around a woman squirted red colour water on her. She did not wipe it completely.

Her lover came; her friends warned him not to go near her because she has monthly periods; saying this ,they laughed ;

Her lover knew that it was just red colour water; he smelt the fragrance of the water; she felt very shy; her lover wiped out the red colour stain on her body and laughed.

Though we see women’s menstruation in another poem in Kuruntokai- 157, it is indicated indirectly. This type of poem is rare in Hindu literature.

Vaigai river is compared with Ganges.

Poem about Menses’

குக்கூ என்றது கோழிஅதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS Jasmine)- –குறுந்தொகைப் பாடல் 157

Here the poetess Miss Jasmine (Mullai=Jasmine) sings about the shock she had. She thought of enjoying with her husband in bed ; but in the night she had her monthly periods; she says, Oh My God; it is dawn; I hear “Cock-a-doodle-doo”; it is shocking;  the dawn is like the sword that divides me from my lover.

Hindu women never allow her husband near for three days.  In the Brahmin community she has to stay outdoors in a secluded place. Tamil Scholar U Ve Sa. has added more comments to this poem Kuruntokai 157.

***

Item 757 Long Metaphor

Paripatal verses 17 and 18 are on Lord Skanda/Muruga.

It is about Tirupparamkundram temple near Madurai.

Here there is a long metaphor:

Elephant = cloud;

Cloth decorating face of elephant= lightning

Hall of paintings= Manmathan’s weaponry;

Running streams in the hill= quiver;

Fingers= Kaanthal flowers;

Indra’s bow= Rainbow;

Arrows= flowers;

War drums = thunder;

Yaaz /Lute music= Vedic chanting

And the people pray for their welfare and the welfare of their relatives.

***

Item 758 King’s Visit to Temple Tirupparamkundram

In Purananuru we saw most famous Pandya King Mudukudumi Peruvazuthi going round Madurai Shiva Temple.

Here in Paripatal verse 19, we see Pandya king visiting Tirupparamkundram Skanda/ Muruga temple with his family and ministers.

It is compared with Stars and Moon going round the holy Meru Mountain.

***

Item 759 Famous Hall of Painting

Though we come across paintings in many Sangam poems, here is a detailed report.

The Hall of Painting had Sun and Planets; it shows Hindus interest in Astronomy;

All the painting halls are inside the  temples, not in palaces! (Kutralam Chitra Sabha etc)

An innocent village woman asked why there is a cat in the religious painting. Immediately her husband enlightened her by telling her the story of Indra molesting Ahalya and running away like a cat.

***

Item 760   Knowledge in World Geography

Hindus of ancient India were far advanced in World History and World Geography.

Their knowledge in World History is seen in the reference to the death of thousands of kings in Kural and Purananuru; also we see seven kings taking the throne on the same day in Purananuru.

Here Vedic reference to sea is repeated.  Hindus knew thousands of rivers pouring water into sea every second and yet the sea coast line is same.

They watched the weather for thousands of years and reported the  wonder, the sun is sucking water from the sea every second; the rivers around the world pouring water into the sea, and yet it never became full and crossed the coast line.

This is in Paripatal verse 20,  Pathitrupathu verse 90 and Maduraikanchi – Line 425.

Unless Hindus pass this information from one generation to another, poets could not have said this.

That shows another fact- passing information by mouth, which we see in Vedic Recitation for 6000 years (Herman Jacobi and B G Tilak’s Dating of Rig Veda)

To be continued……………………………..

Tags- Sex joke, menstruation, Paripatal, Paintings in temple, river and sea, word and meaning, Kalidas simile, Indra as cat, Purananuru wonders-52, Tamil Encyclopedia-92, One Thousand Interesting Facts – Part 92. Item 760.

மணிமேகலைக்  காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)

Written by London Swaminathan

Post No. 16,077

Date uploaded in London – 11 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

 மணிமேகலைக் காப்பியத்தை சிலப்பதிகாரத்துடன் சேர்த்து இரட்டைக்காப்பியம் என்று அழைப்பது ஏன்?

2

 மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் யார் ? அது இந்தக் காலத்தைச் சேர்ந்தது?

3

எந்த சமயத்தைப் போதிக்க இதை எழுதினார்கள் ?

4

நாரதர் வீணையை சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாகக் கண்டோம். அதே போல இதில் முதல் முதலாகத் தமிழ் மொழியில் வரும் ரிக்வேத முனிவர் , மஹாபாரத ஆசிரியர் பெயர்கள் என்ன?

5

மணிமேகலை என்றால் என்ன பொருள் ?

6

மணிமேகலை சென்ற தீவின் பெயர் என்ன ? அது எங்குள்ளது ?

7

மஹாபாரத அக்ஷய பாத்திரத்தைக் காப்பியடித்த புலவர், அதற்கு சூட்டிய பெயர் என்ன ? ஆபுத்திரன் யார் ?

8

மஹா குழப்பம் நிறைந்த மணிமேகலைக் கதையின் சுருக்கம் என்ன ?

9

மணிமேகலையின் காலத்தைக் கணிக்க அறிஞர்கள் சொல்லும் வாதங்கள் என்ன ?

10

மணிமேகலை பொன்மொழிகள்  பற்றி லண்டன் சுவாமிநாதன் தொகுப்ப்பில் என்ன உள்ளது ?

*************************

விடைகள்

1.சிலப்பதிகாரத்தில் முக்கிய இடம்பெற்ற கோவலனும் நாட்டியக்காரி மாதவியும் அறத்துக்குப் புறம்பான குடும்பம் நடத்தியபோது பிறந்த பெண் மணிமேகலை ; அவளுடைய மற்றும் அவள் தாய் மாதவி பற்றிக் கூறுவதால் இதையும் சிலம்பையும் இரட்டைக்காப்பியங்கள் என்பார்கள். இது ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று

***

2.மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சீழ்தலைச் சாத்தனார் என்று நம்புகிறார்கள் ; இவர் சங்க காலப் புலவர் இல்லை ; தொல்காப்பிய காலம் பற்றித் தமிழில் எவ்வளவு கூற்றுகள் உண்டோ அவ்வளவு கூற்றுகள் இந்த நூலைப் பற்றியும் உண்டு ; இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வைக்கிறார்கள் ; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை சொல்லுவது போல எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்ரா புறா ஆண்டில்தான் வைக்கமுடியும் ; காதைகள் 27 முதல் 30 வரை படித்தால் இது புரியும். இந்தத் தமிழ் ஆசிரியரிடம் கொடுத்தாலும் பொருள் சொல்ல முடியாமல் திணறுவார்கள் . சங்க இலக்கியத்துக்கும் இதற்கும் ஆயிரம் மைல் இடைவெளி!

***

3.பெளத்த சமயத்தைப் போதிக்க இந்தக் காப்பியத்தை எழுதினார்.

***

4. அகத்தியரையும் பாண்டியர்களையும் முதல் முதலில் தொடர்புபடுத்தி எழுதியவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலகப்புகழ்பெற்ற காளிதாசன் ஆவான் ; தமிழில் முதலில் அகத்தியன் என்ற சொல்லை மணிமேகலையில்தான் முதலில் காண்கிறோம்; வேத வியாசர் பெயரும் முதலில் வரும் நூல் மணிமேகலைதான்! காவிரி கதையை அகத்தியன் உருவாக்கிய கதை இதில் வருகிறது .

அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப்பாவை

அதாவது சோழ மன்னன்   காந்தமன் வேண்டிக்கொண்டபோது , அகத்திய முனிவன் தனது கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரி நதியை உண்டாக்கினார்.

***

5.மணிமேகலை என்பது கடல் தெய்வத்தின்பெயர்; இது ஸம்ஸ்க்ருதச் சொல். இந்தப் பெயர் ஜாதகக் கதைகளில் வருகிறது ; கப்பல் உடைந்தால் அதிலுள்ள நல்லோரைக் காப்பாறும் தேவதை அவள்; மஹாஜனக என்ற இளவரசனை அந்தத் தேவதை காப்பாற்றி கரை சேர்த்தாள்.தாய் லாந்திலும் கம்போடியாவிலும் மணிமேகலை ஸ்படிகப் பந்தினைக் கையில் ஏந்தி மின்னலை உருவாக்குவதாக எழுதியுள்ளனர்; அவ்விரு நாடுகளிலும் மழையை வருவிக்க மணிமேகலா நாட்டியம் ஆடுகின்றனர் . அக்கபோதி என்பவன் மகாவலி கங்கா நதி மீது கட்டிய அணைக்கு மணிமேகலா என்று பெயரிட்டான் . ஒருகாலத்தில் இலங்கையில் ஒரு மாவட்டத்தின் பெயர் என்றும் சூளவம்சம் கூறும்.

***

6.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு மணிபல்லவத் தீவு ஆகும். இத்தீவு இலங்கையின் வடக்கே காங்கேசன்துறைக்கு அருகில் கடலில் உள்ள நயினாதீவு என்று  சொல்லுவார்கள்.

***

7.வாரணாசியில் வாழ்ந்த அந்தணர் அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி,  குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் விட்டுச் சென்றுவிட்டாள். அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்கு தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த அமுத சுரபி என்னும் பாத்திரத்தைக் கொடுத்தது. பின்னர் இது மணிமேகலையை அடைந்தது. அவள் அதைக்கொண்டு திரவுபதி போல எல்லோருக்கும் அமுது படைத்தாள்.

***

8.மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முற்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு,  மணிமேகலாதெய்வம்,   மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை ‘அமுத சுரபி’ என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்திக் காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் காஞ்சனன்  உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுநர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினைப் பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி தவத்தில் ஆழ்ந்தாள்.

***

9.காஞ்சிப் பல்லவர்கள்பற்றிய குறிப்பு மணிமேகலையில் இல்லை .சிலம்பிலும் மேகலையிலும் கூறப்படும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியோர்  சங்க இலக்கியத்திலும்அதற்குப்பிந்தைய தமிழிலக்கியங்களிலும் இடம் பெறவில்லை .‘கின்று’ என்ற நிகழ்கால இடைநிலையும், ‘உண்ணாத’ என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும்; ‘நான்’ என்ற பெயர்வழக்கும்; ‘அந்த’, ‘இந்த’, ‘அது’, ‘இது’ என்ற சுட்டுகளும், தான்–தன்-தம் என்றபல சொல்லாட்சிகளும் சிலம்பிலும், மணிமேகலையிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மணிமேகலையில் வடமொழிச் சொற்களும், வடமொழிப் பெயர்களும் மிகுதியாகக் கலந்துள்ளன. வடநாட்டுக் காசியும், தென்னாட்டுக் குமரியும் இடம்பெற்றுள்ளன. சம்பாபதி, சம்பாதி, சண்பை, சமந்தம், சந்திரதத்தன், சரவணம், சனமித்திரன், சங்க தருமன், சங்கமன், சக்கரவாளக் கோட்டம், சந்திரன், சமயக் கணக்கர், சடை, சம்பு, சரண், சங்கு, சங்கம், சலம், சதுக்கம், சமம், சலாகை, சக்கரக்கை, சந்தி, சமண், சண்பகம், சரணாகதி போன்ற சங்க காலத்தல்லாத சகர முதற்சொற்களைப் பெருவழக்காகச்   சாத்தனார்   பயன்படுத்தி   உள்ளார் .மணிமேகலை, மதுராபதி, வசு, குமரன், மாதவி, சுதமதி, விசாகை, துச்சயன், காயசண்டிகை, அத்திபதி, வயந்தமாலை, காகந்தி, சாலி, சித்திராபதி, தீவதிலகை, நீலபதி, அபஞ்சிகன் எனப்  பல  வடமொழிப்    பெயர்களை பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை சுட்டிக்காட்டுகிறார் . தமிழில் மணிப்பிரவாள நடையைத் தோற்றுவித்தவர் சாத்தனார் என்பதை கடைசி நான்கு காதைகளை படித்தால் புரியும் ; மொத்தமுள்ள காதைகள் முப்பது

***

10.மணிமேகலை பொன்மொழிகள்:

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்  ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை  மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

xxx

காவிரி நதி ஜீவ நதி

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

xxxx

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்  மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (மணி 25-228)

XXX

யவனர்களும் தமிழர்களுடன் வேலை

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்  அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி

XXX

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;

நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

XXX

அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்

மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை.

XXX

ஆறு அறிவு படைத்த மனிதன்

பல்லுயிர் அறுவகைத் தாகும்

மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்

தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

XXX

மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்? 

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்

பற்றின் உறுவது முன்னது பின்னது  அற்றோர் உறுவது அறிக (2-64)

XXX

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

**

“தீவினை என்பது யாது?” என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்….3
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்…..4
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் …3= 10

–subham—

Tags- மணிமேகலை, பொன்மொழிகள், 10 கேள்விகள்

வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?! (Post.16,076)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,076

Date uploaded in London – 11 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?! 

ச. நாகராஜன்

ஹிந்து விரோத சக்திகளின் ஏராளமான நடவடிக்கைகளில் ஒன்றாகத் திகழ்கிறது பி.ஜே.பி. எம்.பி. டாக்டர் மேதா குல்கர்னி புனாவில் உள்ள மஹாத்மா பூலே வாதா வளாகத்தில் உள்ள ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு நடத்தியதை எதிர்த்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய விவகாரம்.

காலம் காலமாக ஏராளமான சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வேண்டி நடத்தி வரும் வழிபாடு இது.

இதில் அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கும் தீய சக்திகளை இனம் கண்டு கண்டிக்க வேண்டிய காலமாக ஆகி விட்டது இந்தக் காலம்.

இது சனாதனமயமாக்குதலின் ஒரு அங்கம் என்று சொல்லும் இந்த தீய சக்திகள் மசூதிக்குள் நுழைபவர்களையும் சர்ச்சுக்குள் நுழைபவர்களையும் அவர்களின் இஷ்டப்படி வழிபாடு நடத்துவதை என்றுமே எதிர்ப்பதில்லையே, ஏன்?

ஹிந்துக்கள் என்றால் இழிவான பிறவிகள் என்ற எண்ணமா?

ஆர்கலாஜிகல் பிரிவு இதற்கு முதலில் அனுமதி வழங்கவில்லை. அனைத்து ஹிந்துப் பெண்மணிகளும் ஒருங்கிணைந்து இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவே ஆர்கலாஜிகல் பிரிவு பணிந்து இந்த வழிபாட்டிற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

வட் எனப்படும் ஆலமரத்தைச் சுற்றி வட் பூர்ணிமா வழிபாடு தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒன்று. இங்கு ஆலமரத்தில் தங்கள் வழிபாட்டு சரடைக் கட்டி விட்டு அதைச் சுற்றி வந்து வேண்டிக் கொள்வது பெண்களின் வழக்கமாகும்.

மஹாபாரதத்தில் வரும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சடங்கு இது,

சத்தியவானை மணந்த சாவித்திரி தன் கணவனுக்கு ஆயுள் அற்பம் என்பதை அறிந்து எமனுடன் புத்திசாலித்தனமாக வாதிட்டு அவனது உயிரை மீட்கிறாள்.

தீவிர தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக எமனையும் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக் காட்டான சாவித்திரியை தங்கள் இலட்சியப் பெண்மணியாகக் கொள்வதில் என்ன தவறு?

ஆலமரம் என்பது பிரம்மா (வேர்) விஷ்ணு (அடிமரம்) சிவா (கிளைகள், இலைகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் குறிக்கிறது.  இந்த மூவரின் அருளையும் பெற வழி வகுக்கும் வழிபாடு இது.

திருமணம் என்னும் புனித நிகழ்வை நினைவூட்டி கணவன் மனைவி நீடித்து வாழுமாறு செய்வதோடு  பெண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி இனிப்பு, ஆடை அணிகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு இருக்கும் வழிபாட்டு நாள் இது.

ஒரு பெண்மணி பாராளுமன்றத்தில் நுழைந்ததாலேயே அவர் தன் மதத்தை துறந்து விட்டார் என்பதில்லை. நமது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மக்கள் அனைவருக்குமான மத சுதந்திரத்தையும் வழிபாட்டு உரிமையையும் தந்துள்ளது.

அப்படி இருக்க டாக்டர் மேதா குல்கர்னியின் பங்கேற்பைக் கொச்சைப் படுத்தி விமரிசிக்கும் ஹிந்து விரோதிகளை அடையாளம் காண இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.

எமனையே வென்ற ஹிந்துப் பெண் சக்திக்கு இந்த தூசு போன்ற கயவர்களைத் தட்டித் துடைக்க எத்தனை விநாடிகள் வேண்டும்!

ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும், இவர்களை இனி தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டும்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்

முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)

Written by London Swaminathan

Post No. 16,074

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

முத்தொள்ளாயிரம் நூலில் என்ன விஷயம் பாடப்பட்டுள்ளது ?

2

முத்தொள்ளாயிரம் என்று ஏன் பெயர் இடப்பட்டது ?

3

இந்த நூலை இயற்றியவர் யார் ? இதன் காலம் என்ன ?

4

இதிலுள்ள பாடல்கள் எந்த வகையைச் சேர்ந்தவை ?

5

நூலாசிரியர் இந்துவா, சமணரா ?

6

இந்த ஆசிரியர் சோதிட வல்லுநர் என்பதை எப்படி அறியலாம் ?

7

அக்காலத் தமிழர்கள் என்னென்ன செய்தனர் என்று நூலாசிரியர் இயம்புகிறார் ?

8

புலவரின் கற்பனைத் திறத்துக்கு சிலந்திப் பூச்சியை எப்படிப் பயன்படுத்தினார் ?

9

பாண்டியன் மேல் காதல் கொண்ட பெண்ணின் செயல் என்ன ?

10

முத்தொள்ளாயிரம் காலம் பற்றி வையாபுரிப்பிள்ளை காட்டும் சான்றுகள் என்ன ?

****************************

விடைகள்

1.இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் உள்ளன.

***

2.மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. முதல் கருத்தே சரியானது . புறத்திரட்டு என்னும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட 108 பாடல்களே கிடைத்தன .

***

3.ஆசிரியர் பெயர் தெரியாது ஏனெனில் முழுப்பாடல்களும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார். அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூலின் காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் எனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

***

4.இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல்

***

5.இவர் இந்துவே ; சமணர் அல்ல; இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.

***

6. நூலாசிரியர் 27 நட்சத்திரப்பெயர்களில் பெரும்பாலானவற்றைப்பாடுகிறார் ; சிவா பிரபஞ்ச சத்துக்கே முதலானாவான்; அவனை ஆதிரையான் என்று சொல்லி ஒரு நட்ஷத்திரத்துக்கு மட்டும் பொருத்துவது முறையா என்கிறார்; சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது ரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள் என்று பிறந்த நாள் நாட் சாத்திரத்தைக் குறிப்பிடுகிறார் .தென்னன் திருஉத்திராட நாள் (7)  என்றும் பாடியுள்ளார் .

***

 7. மன்னர்கள்  பர்த் டே HAPPY BIRTH DAY கொண்டாடி பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள் பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் கிடைக்கின்றன

***

8.சோழன் பிறந்த நாளில் வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன்.  சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் பாடுகிறார் .

***

9.பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவி அரிந்தற்றால் – வழுதியைக்

கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு (60)

(செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

***

10.தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தனது ‘இலக்கிய தீபம்’ நூலில் உள்ள ‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ எனும் கட்டுரையில், காட்டும் முக்கிய சான்றுகள்:

உரையாசிரியர் மேற்கோள்கள்: பிற்கால உரையாசிரியர்களான பேராசியர் மற்றும் இலக்கண விளக்க உரையாசிரியர்கள் முத்தொள்ளாயிரப் பாடல்களை தங்களது உரைக்கு மேற்கோளாகக் கையாண்டுள்ள முறையைக் கொண்டு இதன் கால எல்லையை நிர்ணயித்தார்.சொல்லாட்சியும் நடையும்: சங்க இலக்கியங்களின் இறுதிக் காலத்திற்கும் பக்தி இலக்கியக் காலத்திற்கும் இடைப்பட்ட மொழிநடை, செய்யுட்களின் கட்டமைப்பு மற்றும் வெண்பா யாப்பு வடிவம் ஆகியவை ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலைச் ஒத்திருப்பது.வரலாற்றுப் பின்னணி: சேர, சோழ, பாண்டிய வேந்தர்களை இணைத்துப் போற்றும் பொதுவான அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் அக்காலத்தில் நிலவியிருந்தமை.பண்பாட்டுச் சான்றுகள்: அசுவினி முதலாகத் தொடங்கும் 27 விண்மீன்கள் பற்றிய தமிழர்களின் விரிவான அறிவு நிலைப்பாடு. (ஆழ்வார்கள் நாயன்மார்கள் மாணிக்கவாசகர் முதலியோர் காட்டும் நாயக- நாயகி பாவம் இதில் உள்ளது . பல்லவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.)

–subham–

Tags- முத்தொள்ளாயிரம் நூல், 10 கேள்விகள்

Tirukkural Encyclopaedia- Chapter 20 (Kural 191-200) – Post.16,073

Written by London Swaminathan

Post No. 16,073

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

From now onwards all the ten Kurals are given in one part

பயனில சொல்லாமை – Against vain speaking  Part 38  The Not Speaking Profitless Words Refraining from idle talk

H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 translated only Kural  196.

191.Despised among men is one who indulges in idle talk to the disgust of all – ANM+2 = B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

191.The man who talk purposeless rant in a congregation

Will make himself the laughing stock of all — S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

191
Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.
He who to the disgust of many speaks useless things will be despised by all.– Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

191.With silly words who insults all
Is held in contempt as banal —Suddhananda Bharathiyar- SB
***

191.One who speaks useless words that others dislike is despised by all– EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

191.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

192.More repugnant than unkind acts to friends is the vain boast of a fool— ANM+2

***

192.The practice of indulging in indecent talk in an assembly is worse,

Than that of being graceless to one’s friends — SMD

***

192
Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends. – GUP
***

192.Vain talk before many is worse
Than doing to friends deeds adverse– SB.  

***

192.Uttering profitless wors in the presence of the wise is worse than doing misdeeds to friends–– EVS

***

192.பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

193.Useless words are but the froth of an empty vessel – ANM+2

***

193.The purposeless and profitless meandering talk of a man before a gathering

Will proclaim to the world his own worthlessness— SMD

***

193
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.” – GUP

***

193.The babbler’s hasty lips proclaim
That “good-for-nothing” is his name– SB.      

*** 

193.Indulging in empty words indicates  that one is devoid of principle–– EVS

***

193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

XXXXXXXXXXXXXXXXXXXXXX

194.Neither grace nor pleasure, nor profit is there for a soul that utters vain words in an assembly of the learned— ANM+2

***

194.He who speaks vainless and graceless words in public assembly,

Will expose his want of essential goodness and moral rectitude — SMD

***

194
Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness. – GUP

***

194.Vain words before an assembly
Will make all gains and goodness flee– SB.  

*** 

194.Speaking unsavoury and profitless words at random to all will deprive a person of his good qualities besides being disagreeable to the listeners–– EVS

***

194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

195.Shorn of their honour and respect do even the great become if they yield to futile talk— ANM+2

***

195.If a man of worth indulges in purposeless speech,

Excellence and fame will depart from him— SMD

***

195
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.
If the good speak vain words their eminence and excellence will leave them. – GUP

***

195.Glory and grace will go away
When savants silly nonsense say– SB.  

***     

195.If refined people would utter trivial words, they would lose their fame and reputation–– EVS

***

195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

196.A lover of profitless words is but chaff among men— ANM+2

***

196.One who habitually utters vain and profitless words,

Is no man, but chaff  among men— SMD

***
196
Who makes display of idle words’ inanity,
Call him not man, -chaff of humanity!
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men. – GUP

***
196.Call him a human chaff who prides
Himself in weightless idle words– SB.        

***

196.Do not call him a human being who indulges in profitless words; but call him a chaff among men–– EVS

***

H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

196.Call him not man who makes display of useless words;

Call him but chaff of humankind– HAP

***

196. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

XXXXXXXXXXXXXXXXXX

197.Let the wise burst into harsh words; but let them beware of a bootless speech— ANM+2

***

197.Men of virtue too may sometimes speak unfairly;

It were better, that they do not talk uselessly— SMD

***

197
Let those who list speak things that no delight afford,
‘Tis good for men of worth to speak no idle word.
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things. – GUP

***

197.Let not men of worth vainly quack
Even if they would roughly speak– SB.  

***     

197.The wise would refrain from empty words though they may speak unpleasantly —– EVS

***

197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

198.Do the heavenward thoughts of a great soul ever descend to a light and trivial discourse?— ANM+2

***

198.The learned, who explores worthy thoughts, will not utter

Anything but words of deep import— SMD

***

198
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them. – GUP
***

198.The wise who weigh the worth refrain
From words that have no grain and brain– SB.        

***

198.The learned who are capable of searching investigation will not utter words which are not productive of much good–– EVS

***

198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

***

199.Rarely do the wise who are full of pure light of wisdom fall into a trivial talk even in their thoughtless mood— ANM+2

***

199.Men of clear vision, who have overcome human follies, will not speak

Meaningless and idle words, even by lapse of memory— SMD

***

199
The men of vision pure, from wildering folly free,
Not e’en in thoughtless hour, speak words of vanity.
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not. – GUP

***

199.The wise of spotless self-vision
Slip not to silly words-mention– SB.        

***

199.Those who are free from illusion  and have a clear vision of the truth will not utter profitless words even inadvertently–– EVS,

***

199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

XXXXXXXXXXXXXXXX

200.Let words of wisdom adorn your lips, but refrain from vain and fruitless speech– ANM+2

***

200.If you must speak , speak purposefully;

Eschew all vain and profitless words— SMD

***
200
If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.
Speak what is useful, and speak not useless words. – GUP

***

200.To purpose speak the fruitful word
And never indulge in useless load– SB.  

***     

200.If you speak at all speak profitably. Speak not empty words which produce no good—– EVS

***     

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

To be continued………………………

Tags– Tirukkural Encyclopaedia- Chapter 20 (Kural 191-200), part 38, பயனில சொல்லாமைAgainst vain speaking , The Not Speaking Profitless Words, Refraining from idle talk

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 2 (Post16,072)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,072

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 2 

ச. நாகராஜன்

ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி 2026 ஏப்ரல் 3ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பேராசிரியர்  பி.என்.ஓக் அவர்கள் தாஜ்மஹாலைப் பற்றித் தெரிவித்துள்ள உண்மையைக் குறிப்பிட்டுள்ளது.

அவர் தனது புத்தகமான TAJ MAHAL: THE TRUE STORY என்ற நூலில் பல உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

புருஷோத்தம் நாகேஷ் ஓக் (1917-2007) இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீ ரைட்டிங் ஹிந்து ஹிஸ்டரி என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். தனது ஆராய்ச்சி மூலம் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லறை புதிதாக கட்டப்பட்ட ஒன்று அல்ல என்று கூறுகிறார்.

தனது அன்பு மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் கட்டிய மஹாலே தாஜ் மஹால் என்று பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இது தேஜோ மஹாலயம் என்ற ஹிந்துக் கோவிலை இடித்து, சற்று மாற்றி அமைத்து அமைக்கப்பட்ட கல்லறை தான்.

தாஜ் மஹால் என்ற பெயரே எந்த ஒரு முகலாய ஆவணத்திலும் இல்லை

ஆப்கானிஸ்தானத்திலிருந்து ஆஸ்திரியா வரை உள்ள முகலாய கட்டிடங்களில் மஹால் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. உண்மையில் மும்தாஜ்- உல்- ஜமானி என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.

ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இதை தாஜ்-இ- மஹால் என்றே குறிப்பிடுகின்றனர்.

ஜெய்பூர் ராஜா மான்சிங்கிடமிருந்து ஷாஜஹான் ஆக்ராவில் உள்ள பெரும் மாளிகையை மும்தாஜைப் புதைப்பதற்காகப் பெற்றார் என்பதை பாத்ஷாநாமா என்ற வரலாற்று ஆவணத்தில் ஷாஜஹானே தெரிவிக்கிறார்.

இரு ஆணைகள் இது பற்றி ஜெய்பூர் அரண்மனை சேமிப்பு ஆவணங்களில் உள்ளன.

தங்களால் கைப்பற்றப்பட்ட ஆலயங்களை கல்லறைகளாக மாற்றுவது பல முஸ்லீம் ஆட்சியாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு பழக்கமாகும்.

ஹுமாயூன், அக்பர், இமாத்-உத்-தௌலா ஆகியோரின் கல்லறைகள உதாரணமாகச் சொல்லலாம்.

ஹிந்து ஆலயங்களில் பொதுவாக அமைக்கப்படும் முற்றம், பல அடுக்கு கோபுரம் ஆகியவற்றைக் கொண்டு  தாஜ்மஹால் திகழ்கிறது.

கட்டிடம் தெற்கு நோக்கி இருக்கிறது. கட்டிடத்தின் உச்சி திரிசூல பாணியில் திகழ்கிறது.

பீடர் முண்டி (PETER MUNDY) (ஐரோப்பிய யாத்ரீகர் 1632) என்பவரின் குறிப்பின் படி தாஜ்-இ-மஹால் முன்பே இந்தக் கட்டிடம் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இவர் மும்தாஜ் இறந்த ஒரு வருடத்தில் இங்கு வந்தவர்.

ஜோஹன் ஆல்பர்ட் மாண்டெல் இஸ்லோ (JOHAN ALBERT MANDELSO) என்பவர் 1638ல் ஆக்ரா பற்றி எழுதியுள்ளார். அதில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த யாத்ரீகர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர், (FRENCH JEWELLER JEAN-BAPTISTE TAVERNIER)  தாஜ்மஹால் அமைக்கப்பட்ட 22 ஆண்டுகளில் பல பழைய அமைப்புகள் இடிக்கப்பட்டதையும் அகற்றப்பட்டதையும் குரான் வாசகங்கள் அங்கு சேர்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறார்.

1652ல் ஔரங்கசீப் தாஜ்மஹால் ஏழு அடுக்கு கொண்டிருப்பதையும், பழமையான கட்டிடம் என்பதையும், அது ஒழுகுகிறது என்பதையும் சிதிலடமைந்த கூம்பைக் கொண்டிருக்கிறாது என்பதையும் ஆதாப்-இ-ஆலம்கிரி என்ற ஆவணத்தில் குறிப்பிடுகிறார்.

ஒரு பழைய கதவின் கார்பன் மாதிரிக்கான சோதனை ஷாஜஹானின் காலத்தை விட 300 ஆண்டுகள் பழமையான கதவு இது என்று தெரிவிக்கிறது. இதைச் செய்தவர் மார்வின் மில்லர் என்பவராவார்.

தாஜ் மஹாலில் 22 அறைகள் உள்ளன. இவை சிவப்புக் கல் அடித்தளத்தில் சலவைக்கற்களுக்குக் கீழே உள்ளன. இவற்றை சுவரால் அடைத்து விட்டார் ஷாஜஹான். இதை ஓக் சுட்டிக் காட்டுகிறார்.

1934ல் மூடப்பட்ட ஒரு துவாரத்தின் வழியே பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட சிவபிரானின் சிலையையும் இதர சிதிலமடைந்த தெய்வ உருவங்களையும் கொண்டிருப்பது இது என்பது தெரியவந்தது.

ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஒருபோதும் முறையான ஒரு சர்வேயை இங்கு எடுக்கவே இல்லை.

22 வருட காலம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு 20000 பேர்களை வைத்து அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தாஜ்மஹாலைப் பற்றி அன்றைய அரசு ஆவணங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை. 

மும்தாஜ் மஹால் பர்ஹன்பூரில் மரணமடைந்தார். 

ஆகவே தாஜ் மஹால் என்பது உண்மையில் தேஜோ மஹாலய என்னும் சிவனின் ஆலயமே ஆகும் என்று உறுதிபட ஓக் தெரிவிக்கிறார். 

தாஜ்மஹாலை முறைப்படி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

                **.                         முற்றும்