கம்ப ராமாயணத்தில் 190 கேள்விகள் (Post.16,341)

RAVANA MEETING SITA – VALMIKI RAMAYANA PICTURE

Written by London Swaminathan

Post No. 16,341

Date uploaded in London – 25 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணம் முழுக்க படிக்க வேண்டாம்; ரொம்ப போர் அடிக்கும்! சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!

கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:

இதற்கு முன்னர் வெளியிட்ட 180 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

xxxxxxxxxxxxxxxxxxx


SITA AND GOLDEN DEER-
VALMIKI RAMAYANA PICTURE

181. ராமனின் அபயக்குரல் கேட்டும் நீ போகாமல் இருப்பது ஏன் என்று சீதை கேட்டபோது ராமனுக்கு பூவுலகில் யாரும் தீங்கிழைக்கமுடியாது என்று லெட்சுமணன் பதில் சொன்னான் ; நீ போகாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எப்படி மிரட்டினாள் சீதை ?

182

லெட்சுமணன் ராமனைத் தேடிச் சென்ற பின்னர் ராவணன் எந்த உருவத்தில் சீதை இருக்கும் இடத்துக்கு வந்தான் ?

183

ராவணன் கிழவன் போல நடித்ததை கம்பன் எப்படி வருணிக்கிறான்?

184

ராவணனை துறவி என்று எண்ணி சீதை எப்படி உபசரித்தாள்?

185

ராவணன் சீதையிடம் ஒரு முறை கங்கை நதிக்குப் போயிருக்கிறேன் என்று ஏன் சொன்னான்?

186

சீதை நீங்கள் யார் என்று கேட்டதற்கு ராவணன் சொன்ன பதில் என்ன ?

187

சீதை- ராவணனின் உரையாடலில் அரக்கர்களை ராம பிரான் கொன்றுவிடுவான் என்று சொன்னவுடன் ராவணன் ஆத்திரம் அடைந்தது எவ்வாறு ?

188

ராவணன் சீதையை கவர்ந்து சென்றது எங்ஙனம் ? அவளைக் கைப்பிடித்து இழுத்தானா ? அல்லது சாபத்துக்குப் பயந்து அவளைத் தொடாமல் கவர்ந்து செண்றானா?

189

தேரில் ஏற்றப்பட்ட சீதை சும்மா இருந்தாளா ?

190

சீதை ராவணன் செய்த மாயங்களை பட்டியலிட்டு “நீ சரியான ஆண்மகன் என்றால் என் கணவருடன் போர் செய்; தேரை நிறுத்து” என்று சொன்னபோது ராவணன் சிரித்துக்கொண்டே  சொன்ன பதில் என்ன ?

RAMA’S FIGHT WITH DEMONS- VALMIKI RAMAYANA PICTURES.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

181.ஒரு பகல் பழகினார்

உயிரை ஈவரால்;

பெருமகன் உலைவுறு பெற்றி

கேட்டும், நீ

வெருவலை நின்றனை; வேறு என்?

யான், இனி,

எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென்,

ஈண்டு’ எனா,

ஒரு நாள் மட்டும் பழகின வராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; (மாறாக) நீயோ ராமனின் அபயக்குரல் கேட்டும் அஞ்சாமல் நின்றாய்; இனி எனக்கு வேறு வழி யாது? இனிமேல் நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று மிரட்டினாள் சீதை.

**********************************

182. ராவணனின் தோற்றம்

இளையவன் ஏகலும்,

இறவு பார்க்கின்ற

வளை எயிற்று இராவணன்,

வஞ்சம் முற்றுவான்,

முளை வரித் தண்டு ஒரு

மூன்றும், முப் பகைத்

தளை அரி தவத்தவர்

வடிவம், தாங்கினான்.

இலக்குவன் அவ்வாறு சென்றதும் ,வளைந்த பற்களையுடைய இராவணன் தான் கருதிய வஞ்சகச் செயலைச் செய்து

முடிப்பதற்காக வரிந்து கட்டிய மூங்கில் தண்டுகள் ஒரு மூன்றையும் ,  (முக்கோல் அல்லது திரிதண்டம்) காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்று உட்பகையாம் கட்டுகளை அறுத்த தவ வடிவையும் ஏற்றுக் கொண்டான்.

காமம், வெகுளி மயக்கம் ஆகியவற்றை அடக்கியவர் என்பதை

இத் திரிதண்டம் குறிக்கும். ‘துறவிகளை முக்கோற் பகவர்’ என்பர்

முன்னையோர். நூலேகரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை

அந்தணர்க்குரிய (தொல். பொருள் மரபியல். 71) எனத்

தொல்காப்பியம் கூறும். ‘கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

முக்கோலசை நிலை’ என்பது முல்லைப் பாட்டு (37 – 38). ‘உரைசான்ற முக்கோல்‘ எனக் கலித்தொகையில் காணலாம்.

********************************

183.தொண்டுக் கிழவன் போல நடித்தான் ராவணன்

பூப் பொதி அவிழ்ந்தன

நடையன்; பூதலம்

தீப் பொதிந்தாமென

மிதிக்கும் செய்கையன்;

காப்பு அரு நடுக்குறும்

காலன், கையினன்;

மூப்பு எனும் பருவமும்

முனிய முற்றினான்.

பூவின் இதழ்கள் மென்மையாக விரிந்தாற் போலும் நடையுடையவனாகவும், நிலம் நெருப்பால்

நிறைந்துள்ளது போலும் காலால் பட்டும்படாமலும் அடிவைத்து

நடப்பவனாகவும் காக்க இயலாமல் நடுக்கங் கொண்ட கால்களையும் கைகளையும் உடையவனாகவும் முதுமைப் பருவமும் பிறர் கண்டு வெறுக்கும் வகையில் முதியவனாகவும் ஆனான் (இராவணன்).

*************************

184.ஏத்தினள்; எய்தலும் “இருத்திர் ஈண்டு ” என

வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்;

மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும்

பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே.

இராவண சன்னியாசியை  ‘இங்கு அமர்வீராக’ என்று கூறிப் பிரம்பு இருக்கையை அளித்தாள்;  முக்கோலை அருகே வைத்த வஞ்சகனாம் இராவணனும் பூக்கள் படர்ந்து அழகுடன் விளங்கி யபர்ண  சாலையில்  உட்கார்ந்தான்

*****************

185. சீதையை யார் என்று கேட்டவுடன் அவள் தன்னைப்பற்றியும் தசரதன் மற்றும் ராமபிரானின் பெருமையையும் சொல்லவே, ஓஹோ நான் கூட ஒரு முறை கங்கை நதிக்குப் போயிருக்கிறேன் என்றான் ராவண சன்யாசி !

‘கேட்டனென், கண்டிலென்;

கெழுவு கங்கை நீர்

நாட்டிடை ஒருமுறை

நண்ணினேன்; மலர்

வாள் தடங் கண்ணி! நீர்

யாவர் மா மகள்,

காட்டிடை அரும் பகல்

கழிக்கின்றீர்?’ என்றான்.

நீர் கூறிய செய்திகளை நான் முன்னரே கேள்விப்பட்டுள்ளேன்; (ஆனால் அவரை = தசரதன்) நேரில் பார்த்ததில்லை;  கங்கை பாயும் நாட்டுக்கு ஒரு தடவை போயிருந்தேன்;  தாமரை மலர் போன்றும் வாள் போலும் நீண்டகண்ணையுடையவளே!; நீவிர் யாருடையபெருமைக்குரிய மகள்? இக் கொடிய காட்டில் நாட்களைக் கழிக்கின்றீர்  எனக் கேட்டான்.

ஒரு முறை நண்ணினேன் என்பது முன்னர் இராவணன் திக் விசயம் செய்த போது அயோத்தியை ஆண்ட அனரணியன் என்ற மன்னனைப்  போரில் வீழ்த்தி நிந்தித்ததான்; அவன் எங்கள் வம்சத்தில் வரப்போகும்  ஒரு மன்னன் உன்னைக் கொல்வான் என்று  சபித்த வரலாறு இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

*************************

186.ராவணனின் தற்பெருமைப் பேச்சு

‘இந்திரற்கு இந்திரன்;

எழுதல் ஆகலாச்

சுந்தரன்; நான்முகன்

மரபில் தோன்றினான்;

அந்தரத்தோடும் எவ்

உலகும் ஆள்கின்றான்;

மந்திரத்து அரு மறை

வைகும் நாவினான்.

தேவர் தலைவனாம் இந்திரனுக்கே தலைவன்; ஓவியத்தில் தீட்டற்கு அரிய அழகுடையவன் பிரமனின் குல வழியில் பிறந்தவன் ; வானில் உள்ள உலகத்தோடு எல்லா உலகங்களையும் ஆள்கின்றவன் ; மந்திரங்களைத் தம் இடமாகக் கொண்ட அரிய வேதங்கள் தங்கியுள்ள நாவை உடையவன்…..

சீதையின் கேள்விக்கு விடையாக இராவணன் பெருமை இது முதல் கூறப்பெறுகிறது.

‘ஈசன் ஆண்டு இருந்த பேர்

இலங்கு மால் வரை

ஊசி-வேரொடும் பறித்து

எடுக்கும் ஊற்றத்தான்;

ஆசைகள் சுமந்த பேர்

அளவில் யானைகள்

பூசல் செய் மருப்பினைப்

பொடிசெய் தோளினான்.

சிவபிரான் எழுந்தருளியுள்ள மிகப் பெரிய கயிலை மலையை

அக்காலத்தில் ஆணிவேருடன் அடியோடு பறித்து எடுக்கின்ற

வலிமையுடையவன்; திசைகளைத் தாங்கும் பெருமையில் அளவில்லாத யானைகளின் போர் புரியும் கொம்புகளைப் பொடி செய்யும் வலிய தோள்களை உடையவன்.

இதனால் இராவணன் பேராற்றல் விளங்கும்.

*********************

187.தீயாரைச் சேர்ந்தவரும் தீயவர்கள் — சீதை

ராவணன் தன்பெருமையெல்லாம் சொல்லி அரக்கன் என்று சொன்னபோது அய்யய்யோ! கெட்டவருடன் இருக்கும் யாரும் கெட்டவர்கள் என்ற பொன்மொழியை உதிர்த்தாள் சீதை!

சேயிழை-அன்ன சொல்ல,- ‘தீயவர்ச்

சேர்தல் செய்தார்

தூயவர் அல்லர், சொல்லின், தொல் நெறி

தொடர்ந்தோர்’ என்றாள்;

‘மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு

உரு வரிக்க’ என்பது,

ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின்,

அயல் ஒன்று எண்ணாள்.

(இராவணன் அத்தகைய சொற்களைக் கூற;

சீதை, கொடியவரை நட்பாகச் சேர்ந்தவர்கள்

தூயவர் ஆகார் என்றாள்.

‘தீயவர்ச் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர்’ என்ற கருத்து

‘மனந் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா

வரும்’ (குறள். 455) என்ற கருத்துடன் ஒப்புடைத்து. அதற்கேற்பச்

சிற்றினம் சேர்ந்தவர் சிற்றினத்தாரே எனச் சீதை முடிவு செய்கிறாள்.

அரக்கன் மாயையால் துறவி வேடம் பூண்டு வந்தனன் என்பதைத்

தெளியாள். காரணம் அரக்கர்க்குத் தாம் வேண்டிய வடிவெடுக்கும்

ஆற்றல் உள்ளது என்பதை அறியா நிலையாகும். ‘அயல் ஒன்று

எண்ணாள்’ என்பது சீதையின் தூய மன நிலையைக் காட்டும்.

மனிதர்கள் புழுவுக்குச் சமன் என்று கூறி ராவணன் சீறினான்

‘விண்ணவர் ஏவல் செய்ய, வென்ற

என் வீரம் பாராய்;

மண்ணிடைப் புழுவின் வாழும்

மானிடர் வலியர் என்றாய்;

பெண் எனப் பிழைத்தாய் அன்றேல்; உன்னை

யான் பிசைந்து தின்ன

எண்ணுவென் என்னின், பின்னை என்

உயிர் இழப்பென் என்றான்.

தேவர்கள் யான் ஏவிய குற்றேவல் செய்ய அவர்களை வென்ற என் வீரத்தை நீ கருதாமல்,  இவ்வுலகில் இழிந்த புழுப் போல் வாழும் மனிதரை வலிமை உடையவர் எனக் கூறினாய்; ஒரு பெண் என்ற காரணத்தால் நீ உயிர் பிழைத்துள்ளாய்; அல்லாவிடில் உன்னை என் கைகளால் பிசைந்து உண்ண நினைப்பேன்; அவ்வாறு எண்ணிச்

செயல்பட்டேனென்றால் (உன்னை அடைய முடியாததால்) பின்னர் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினான் இராவணன்.

*******************

188.இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்தல்

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்

தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;

தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,

கீண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல்.

அப்பொழுது தீயவனாம் இராவணன் பிரமன் முன்னரிட்ட சாபத்தை மனத்தில் எண்ணி அணிகலன்கள் அணிந்த சீதையின் திருமேனியைத் தொடாமல்  கல்தூண்கள் போன்ற தோள்களின் வலிமையால், சீதை இருந்த பூமியின் கீழேயும் பக்கங்களிலும் ஆக ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.

பிரம்மா கொடுத்த  சாபம் பின்னர்ச் சடாயு உயிர் நீத்த படலத்தில் வருகிறது ; இது தவிர இராவணனுக்கு வேதவதி, அரம்பை, நரி கூபரன், புஞ்சிகத்தலை

ஆகியோராலும் சாபங்கள் உண்டு. நிலத்தொடு பெயர்த்தெடுத்த செய்தி கம்பரின் படைப்பு. இவ்வாறு படைத்தது மட்டுமின்றி நூலில் பல இடங்களில் இதனைக் கூறியுள்ளார்.

குபேரனின் அளகாபுரியில் அரம்பையை இராவணன் கற்பழித்த போது அவள் இட்ட சாபம் ‘வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய் என்பதாம் ; இவ்வாறே நளகூபனும் புஞ்சிகத்தலையும் சாபம் இட்டனர் என்பர். இவ்வாறு இராவணன் பெற்ற சாபம்பற்றிப் பல கதைகள் உள.

****************

189.     சீதைக் கதறிக் கதறி, நதியையும் பறவைகளையும் உதவிக்கு அழைக்கிறாள்

கொண்டான் உயர் தேர்மிசை;

கோல் வளையாள்

கண்டாள்; தனது ஆர்

உயிர் கண்டிலளால்;

மண்தான் உறும்

மின்னின் மயங்கினளால்;

விண்தான் வழியா

எழுவான் விரைவான்.

(அவ்வாறு பெயர்த்த நிலத்தை) உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான்;அச் செயலை அழகிய வளையணிந்த சீதை பார்த்தாள்; தன்னுடைய அரிய உயிரைக் காணவில்லை; தனக்குரிய நிலமாம் மேகத்தை விட்டுத் தரையில் விழுந்த ஒரு மின்னற் கொடி போலக் கலங்கினாள் (அப்போது இராவணன்);  ஆகாய வழியாக விரைவிற்செல்லக் கருதினான்.

*****

190.அரக்கன் மறுமொழியும் சீதையின் எதிர்மொழியும்

என்று, இன்ன பலவும் பன்னி,

இரியலுற்று அரற்றுவாளை,

‘பொன் துன்னும் புணர் மென் கொங்கைப்

பொலன்குழாய்! போரில் என்னைக்

கொன்று, உன்னை மீட்பர்கொல், அம்

மானிடர்? கொள்க’ என்னா,

வன் திண்கை எறிந்து நக்கான்-

வாழ்க்கைநாள் வறிது வீழ்ப்பான்.

இவ்விதம் பல சொற்களைச் சொல்லி வாய் விட்டுப்புலம்பி அழும் சீதையை, (நோக்கி  இராவணன்;  பொற்கலன்கள் அணிந்த நெருங்கிய மார்புகளை உடைய அழகிய குண்டலமணிந்த பெண்ணே!;   அந்த மனிதர்கள் சண்டையில் என்னைக் கொன்று உன்னை மீட்டு விடுவார்களோ?; முடிந்தால் மீட்டுக் கொள்ளட்டும்;  என்று கூறி வலிய திண்ணிய கைகளைப் புடைத்துச் சிரித்தான்.

மொழிதரும் அளவில், ‘நங்கை! கேள் இது;

முரண் இல் யாக்கை

இழிதரு மனிதரோடே யான் செரு

ஏற்பன் என்றால்,

விழி தரு நெற்றியான்தன் வெள்ளி

வெற்பு எடுத்த தோட்குப்

பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும்,

வஞ்சம்’ என்றான்.

பெண்ணே!; இதனைக் கேட்பாயாக;  வலியற்ற உடலை உடைய இழிவான மனிதர்களுடன் நான் போர் செய்ய முனைந்தால் நெற்றியில் கண்ணுடைய சிவபெருமானின் கயிலை மலையை எடுத்த தோள்களுக்கு அவமானம்  உண்டாக்கும்; அதைக் காட்டிலும் இது போன்ற வஞ்சகச் செயல்களுக்கு பலன் அதிகம் !

—SUBHAM—

TAGS- கம்ப ராமாயணம் , 190 கேள்விகள் , ராவணன் சிரிப்பு, துறவி வேடம், பர்ணசாலை , பெயர்த்து எடுத்தல், மானிடர்கள் புழுக்கள் , சீதை கதறல்

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 4 (Post.16,340)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,340

Date uploaded in London – 25 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 4

ச. நாகராஜன்

ஸ்லோகம் 51

சமஸ்தமான தந்த்ரங்களிலும் இதற்கு சமானமான (இதைப் போன்ற) ஸ்தோத்திரம் கிடையாது. ஆகையால் உபாஸகனானவன் இதை சிரத்தையுடன் தினந்தோறும் (உயிருள்ள வரையில்) கீர்த்தனம் செய்ய வேண்டும்.

ஸ்லோகம் 52

இந்த ஆயிரம் நாமங்களால் ( இனி, மேலே சொல்லப்படும்) புஷ்பங்களைக் கொண்டு) ஶ்ரீ சக்ரத்தை எவன் ஒருவன் ஒரு தடவையாவது அர்ச்சிக்கிறானோ,

ஸ்லோகம் 53. 54

தாமரைப் புஷ்பங்கள் அல்லது துளஸியின் புஷ்பங்கள் அல்லது செங்கழுநீர் புஷ்பங்கள் அல்லது நானாவிதமான கதம்ப புஷ்பங்கள் அல்லது சம்பக புஷ்பங்கள் அல்லது ஜாதி புஷ்பங்கள் அல்லது மல்லிகை புஷ்பங்கள் அல்லது அரளிப் புஷ்பங்கள் அல்லது நெய்தல் புஷ்பங்கள் அல்லது பில்வ பத்ரங்கள் அல்லது முல்லைப் புஷ்பங்கள் அல்லது குங்குமப் பூக்கள் அல்லது பாடலீ புஷ்பங்கள் அல்லது தாழம்பூ, வாஸந்தி முதலான நல்ல மணமுள்ள வேறு புஷ்பங்களால் (எவன் ஒருவன் ஶ்ரீ சக்ரத்தை இந்த ஆயிரம் நாமங்களைச் சொல்லி ஒரு தடவையாவது அர்ச்சிக்கிறானோ)

அதனால் ஏற்படும் புண்ய பலனைச் சொல்வதற்கு மஹேஸ்வரனால் கூட முடியாது.

ஸ்லோகம் 55

தன்னுடைய சக்ரத்தை அர்ச்சனம் பண்ணுவதினால் ஏற்படும் பலன் எவ்வளவென்று லலிதாதேவிக்குத்தான் தெரியும். (அப்படி இருக்கும்போது) ஸ்வல்பமான புத்தியையுடைய ப்ரம்ஹாதிகள் அதை எப்படி அறிவார்கள்?!

ஸ்லோகம் 56

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் ராத்திரியில் ஶ்ரீ சக்ரத்திலிருக்கும்படியான பரதேவதையை எவன் ஒருவன் மேலே சொன்ன புஷ்பங்களைக் கொண்டு இந்த ஆயிரம் நாமங்களால் அர்ச்சனை செய்கிறானோ,

ஸ்லோகம் 57

அவனே ஶ்ரீ லலிதாம்பாள் ரூபமாக ஆகிறான். ஶ்ரீ லலிதாம்பாளோ, தானும் அவன் ரூபமாக ஆகிறாள். அவர்களிருவருக்குள் ரூப பேதமே கிடையாது. (அப்படி அவர்களுக்குள்) பேதத்தைக் கற்பிக்கிறவன் பாவம் செய்தவனாக ஆகிறான்.

ஸ்லோகம் 58

எந்த பக்தன் ஒருவன் மஹாநவமி தினத்தில் ஶ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவளான ஶ்ரீ தேவியை (இந்த) ஆயிரம் நாமங்களால் அர்ச்சிக்கிறானோ அவனுக்கு முக்தியானது கையிலிருக்கிறது.

(நவராத்திரியின் கடைசி இரு தினங்கள் மஹாநவமி என்று சொல்லப்படும்)

ஸ்லோகம் 59

எவன் ஒருவன் வெள்ளிக்கிழமையில் மஹாதேவியை ஶ்ரீ சக்ரத்தில் இந்த நாம சஹஸ்ரத்தால் நன்றாக அர்ச்சனம் பண்ணுகிறானோ அவனுடைய புண்யபலனை (சொல்கிறேன்) கேள்.

ஸ்லோகம் 60

இங்கேயே தன்னுடைய விருப்பங்கள் யாவற்றையும் அடைந்து, சகலவிதமான ஸௌபாக்யத்தை உடையவனாய், புத்ர, பௌத்ராதிகளோடு கூடியவனாய், தான் இஷ்டப்பட்ட போகங்களை அனுபவித்து விட்டு,

ஸ்லோகம் 61

கடைசியாக, சாமான்யமாய்க் கிடைக்கக்கூடாததும், சிவன் முதலிய தேவர்களாலும் வேண்டப்படுவதுமான ஶ்ரீ லலிதாம்பாளுடைய சாயுஜ்யத்தை அடைகிறான். அதில் சந்தேகம் இல்லை.

ஸ்லோகம் 62

எவன் ஒருவன் பக்தியோடு ஆயிரம் ப்ராம்ஹணர்களை இந்த சஹஸ்ர நாமங்களால் நன்றாகப் பூஜித்து, பாயசம், அபூபம் முதலிய ஷட்ரஸோபேதமான வஸ்துக்களால் போஜனம் செய்விக்கிறானோ,

ஸ்லோகம் 63

அவனிடம் ஶ்ரீ லலிதாம்பாளானவள் ப்ரீதியடைந்து தன்னுடைய சாம்ராஜ்யத்தை அவனுக்குக் கொடுக்கிறாள். அவனுக்குக் கிடைப்பதற்கரிதான வஸ்து இந்த மூன்று லோகத்திலும் யாதொன்றுமில்லை.

ஸ்லோகம் 64

நிஷ்காமனாக எவன் ஒருவன் இந்த உத்தமமான நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்கிறானோ அவன் பந்தங்களிலிருந்து விடுவிப்பதான ப்ரஹ்மஞானத்தை அடைகிறான்.

ஸ்லோகம் 65

இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்வதினால் தனத்தை விரும்புகின்றவன் தனத்தை அடைகிறான். யசஸ்ஸை விரும்புகிறவன் யசஸ்ஸை அதிகமாக அடைகிறான். வித்யையை விரும்புகிறவன் வித்யையை அடைகிறான்.

ஸ்லோகம் 66

ஹே, முனே! போகம், மொக்ஷம் இவை இரண்டையும் கொடுக்கக்கூடிய ஸ்தோத்ரம் இதற்கு சமானமானது ஒன்றுமில்லை. ஆகையினால் போக மோக்ஷங்களை விரும்பும் நரர்கள் அதை கீர்த்தனம் செய்ய வேண்டும்.

ஸ்லோகம் 67

நான்கு வர்ணத்திலிருப்பவர்களாலும் தங்கள் தர்மத்தை சரிவர அனுஷ்டிப்பதில் ஏற்படக்கூடிய குறைவுகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நாம சஹஸ்ரமானது எப்போதும் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும்.

ஸ்லோகம் 68

பாவமே மேலிட்டிருப்பதும், தர்மானுஷ்டானமில்லாததுமான கலியுகத்தில் நரர்களுக்கு நாமகீர்த்தனத்தை விட்டால் வேறு

ஆச்ரயம் கிடையாது.

**                      தொடரும்

கம்ப ராமாயணத்தில் 180 கேள்விகள் (Post.16,339)

Written by London Swaminathan

Post No. 16,339

Date uploaded in London – 24 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணம் ரொம்ப – போர் அடிக்கும் ! முழுக்க படிக்க வேண்டாம் ; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!

இப்பொழுது மூன்றாவது முறையாக கம்ப ராமாயணத்தைப் படிக்கிறேன் ; முதல் தடவை 25 ஆண்டுகளுக்கு முன்னர்; இரண்டாம் தடவை பிரிட்டனிலுள்ள என் நண்பர்களுக்கு ஞாயிறு காலைதோறும் ஆன் லைன் கிளாஸ் ON LINE CLASS எடுத்த போது; அப்போதும் கூட என் நோட்ஸிலிருந்து சுவையான பகுதிகளை  மட்டுமே  பகிர்ந்து கொண்டேன்; கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:

இதற்கு முன்னர் வெளியிட்ட 170 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

xxxxxxxxxxxxxxxxxxx

171

RAVANA TRAVELLING BY CHARTERED FLIGHT ALL  ALONE

ராவணன் சீதையைப் பிடிக்க எண்ணி மந்திரிமார்களைக் கலந்து ஆலோசித்தான் ; அவர்கள் சொன்ன சொல் அவன் மனதில் பதியவில்லை ; பின்னர்

ராவணன் தனி  விமாமனத்தில் CHARTERED FLIGHT சார்ட்டர்ட் பிளைட்டில் எங்குசென்றான் என்று கம்பர் மொழிகிறார் ?

172

மன்னர் மன்னா ! என்னைக் காண வந்த காரணம் யாதோ என்றும் மாரீசன் வினவ, சீதையைக் கவர்ந்து வர உன் உதவியை நாடி வந்தேன் என்று உரைத்தனன் ராவணன் . உடனே தாய்மாமன் மாரீசன் என்ன சொன்னான் ?

173

நன்மையும் தீமை அன்றே, நாசம்

வந்து உற்ற போது?- விநாச காலே விபரீத புத்தி- என்று மாரீசன் சொன்னது என்ன ?

174

தங்க வர்ண மான் வடிவில் வந்த மாரீசனை மான் என்று கருதி ராமனிடம் சீதை செப்பியது என்ன ?

175

LAKSHMANA! THIS WORLD IS FULL OF MILLION  NATURAL WONDERS- RAMA

உலகில் பல கோடி இயற்கை அதிசயங்கள் இருப்பதாக ராமன் வாயால் கம்பன் பாடியது எப்படி?

176

மாய மான் பற்றி மீண்டும் லெட்சுமணன் என்ன எச்சரிக்கை விடுத்தான்?

177

லெட்சுமணன் மாய மான் மாரீசன் என்று கண்டுபிடித்தது எப்படி ?

178

அடக் கடவுளே ; என் தம்பி சொன்னது சரியாப்போச்சே – என்று ராமன் உணர்ந்தது எப்போது ?

179

மாய மான் என்று தெரிந்து ராம பிரான் அம்பு எய்தியவுடன் மாரீசன் செய்த தந்திரம் என்ன ?

180

மாரீசன் செய்கையால் ராமபிரானுக்கு மனதில் எழுந்த அச்சம் என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

171.வந்த மந்திரிகளோடு மாசு அற

மனத்தின் எண்ணி,

சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்,

தெளிவு இல் நெஞ்சன்,

அந்தரம் செல்வது ஆண்டு ஓர்

விமானத்தில், ஆரும் இன்றி,

இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்

இருக்கை சேர்ந்தான்.

அங்கு வந்து சேர்ந்த அமைச்சர்களுடன்  ஆலோசனை செய்தபின்,   தெளிவு பிறக்காத நெஞ்சம் உடையவனாய், (இறுதியில் தான்) மனத்தில் கருதியதையே செய்யும் எண்ணத்துடன் இராவணன் எவர் துணையும் இல்லாமல்  ,விண்ணில் செல்லும் ஒரு

விமானத்தில் ஏறி, புலன்களை அடக்கித் தவம் செய்கின்ற, மாரீசன் என்பானது இருப்பிடத்தை அடைந்தான்.

மாரீசன்

இராவணனுக்குத் தாய் வழி மாமன் ஆவான். விசுவாமித்திரர் செய்த வேள்வியைக் காக்கச் சென்ற இராமபிரானது கணைக்குத் தப்பி ஓடிப் பிழைத்தவன் இவன். இராமபாண தீட்சையால் பழி நெறி மாறித் தவநெறி மேற்கொண்டவன் இவன். ஆதலால், ‘இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்’ என்றார்.

*******************************

172. ராவணன் பேச்சைக்கேட்டு மாரீசன் சீச் சீ என்று சொல்லிக் காதை மூடிக்கொண்டு நிறைய அறிவுரைகளை வழங்கினான் ; அதில் ஒன்று  :

‘மாண்டார், மாண்டார்; நீ இனி

மாள்வார் தொழில் செய்ய

வேண்டா, வேண்டா; செய்திடின்,

உய்வான் விதி உண்டோ?

ஆண்டார் ஆண்டார் எத்தனை

என்கேன்? அறம் நோனார்,

ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்?

எல்லாம் இலர் அன்றோ?

ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து போயினர்; இனிமேல் நீ    மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய

வேண்டாம்; நீ அவ்வாறு செய்வாயானால்  தப்பிப் பிழைக்க

வழியும் உண்டோ? (இல்லை); உனக்கு முன்னே

இவ்வுலகை ஆண்டு சென்றோர்  எத்தனையென்று

கணக்குரைக்க முடியாது;    தர்மத்தைக் கடைப்பிடிக்காதவன்

வாழ்ந்ததில்லை ;இவ்வுலகில் அழியாது நிலைத்தாரும் யாரும் இல்லை  . எல்லாரும் இல்லாமல் மறைந்தவர்கள் தானே?

ராமன் அம்பினால் இறந்த விராதன், கரன் முதலிய பெயர்களை சொல்லிவிட்டு உனக்கும் அதே கத்தி வரும் என்று மாரீசன் எச்சரித்தான்.

********************

173.ராவணன் கோபப்பட்டு பேசியவுடன் மீண்டும் மாரீசன் அறிவுரை வழங்கியும் கேளாது போகவே விநாச காலே விபரீத புத்தி; நான் என்ன செய்யவேண்டும் சொல்லித் தொலை என்றான்

உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின்

உணர்த்தினேன்; மற்று,

என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால்

இசைத்தேன் அல்லேன்;

நன்மையும் தீமை அன்றே, நாசம்

வந்து உற்ற போது?

புன்மையின் நின்ற நீராய்!

செய்வது புகல்தி’ என்றான்.

(இராவணனாகிய) உன் நலத்தினை நாடி, உண்மையைச் சொன்னேன்

எனக்கு அழிவு நேரும் என்று பயம் காரணமாக சொல்லவில்லை;

அழிவு நெருங்கி வரும் நேரத்தில் நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும் அல்லவா? கெட்ட பயலே ! நான் என்ன செய்ய வேண்டும் ; செப்புடா செப்பு

*********************

174.போர் செய்து சீதையை எடுத்துக்கொள் என்று மாரீசன் சொன்ன யோசனையை ஏற்காது ஏமாற்றித்தான் சீதையைப்பிடிக்க வேண்டும் என்று ராவணன் சொன்னவுடன் விதியை யாரே தடுக்கவல்லார் என்று நொந்து அவன் சொன்னபடி தங்க நிற மான் போல மாரீசன் சென்றான்

ஆணிப் பொனின் ஆகியது;

ஆய் கதிரால்

சேணில் சுடர்கின்றது; திண்

செவி, கால்,

மாணிக்க மயத்து ஒரு

மான் உளதால்;

காணத் தகும்’ என்றனள்,

கை தொழுவாள்.

(இராமனிடம் சென்று சீதை);  மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்,

பளபளக்கின்றதும், வலிய காதுகளும் கால்களும் சிவந்த

மாணிக்கங்களால் ஆகியதுமான ஒரு மான் வந்திருக்கிறது காண்பதற்கு இனிதானது  என்று கூறி   கையால் வணங்கி நின்றாள்;

அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள்.

************************************

175. லெட்சுமணன் இது மாய மான் என்றவுடன் ராமன் சொல்கிறான்:

மாய மானக் கண்டு முதலில் ஏமாந்த ராமன் உலகம் பல கோடி அதிசயங்களை உடையது லெட்சுமணா ! நீ சின்னப் பையன் உனக்குத் தெரியாது  – என்றான்

நில்லா உலகின் நிலை, நேர்மையினால்

வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம்

பல் ஆயிரம்கோடி பரந்துளதால்;

இல்லாதன இல்லை-இளங்குமரா!

தம்பி! பெரிய பெரிய அறிவாளிகளும் நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை; இந்த உலகில் வாழும் உயிரினங்கள் எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து உள்ளன; இவ்வுலகில் இல்லாதவை என்று (நம் அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது’ (என்றான் இராமன்).

உயிரினங்களின் வகைகள் 84 லட்சம் என்று பிற்காலப் பக்திப் பாடல்களில் வருகிறது ; விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்!

*************************

176.மாய மான் பற்றி மீண்டும் லெட்சுமணன் எச்சரிக்கை விடுத்தான்: தங்க மான் என்றாலும் நமக்கு என்ன பயன்? என்று கேட்டான்

‘பின் நின்றார் இனையர் என்றும்

உணர்கிலம்; பிடித்த மாயம்

என் என்றும் தெளிதல்

தேற்றாம்; யாவது ஈது என்றும் ஓராம்;

முன் நின்ற முறையின்

நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்,

பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ்

உடைத்தாம் அன்று’ என்றான்.

பொன் போல் அழகிய வைரம் பாய்ந்த தோள்களை உடையவனே; இம் மாயமானை ஏவிப் பின்னே நிற்பவர் யாவர் என்றும் தெரியவில்லை; அவர்கள் கைக்கொண்டுள்ள மாயை எத்தகையது என்றும் உணர இயலவில்லை;    இம் மான் தான் எத்தகையது என்றும் எண்ணிப் பார்க்க முடியவில்லை (அதனால்);  நமக்கு

முன்னே நீதி நெறியில் நின்ற பெரியோர்கள் வெறுத்து ஒதுக்கிய வேட்டைத் தொழிலில் ஈடுபடுதல்புகழ் தரும் செயல் அன்று

என்று (இலக்குவன்) கூறினான்.

(வேறு காரணங்களுக்கு இசையாத இராமனிடம் முன்னோர்வெறுத்தவேட்டைத் தொழில் வேண்டாம் என்று புதிய உத்தியைஇலக்குவன் கையாளுகின்றான். சாது விலங்குகளை வேட்டையாடுதல் பெரியோர்களால் விலக்கப்பட்டது; ஆதலின் இலக்குவன் இம்மானுக்கு இடர் செய்ய வேண்டா என்று பேசிப் பார்க்கிறான்.)

********************************

177.லெட்சுமணன் நானே மானைப்பிடிக்கிறேன் என்று சொன்னபோது சீதை ராமனைக் கொஞ்சத் தொடங்குகிறாள்; அன்பே ஆருயிரே! நீதான் பிடிச்சுத் தரணும் -என்று ஊடல் கொள்கிறாள்

‘முன்னமும் மக வாய் வந்த மூவரில்

ஒருவன் போனான்;

அன்ன மாரீசன் என்றே

அயிர்த்தனன், இதனை; ஐய!

இன்னமும் காண்டி; வாழி, ஏகு’

என, இரு கை கூப்பி,

பொன் அனாள் புக்க சாலை

காத்தனன், புறத்து நின்றே.

விசுவாமித்திர முனிவனது யாகத்தில் முன்னர் வந்த   மூன்று

அரக்கருள் ஒருவன் ஆகிய மாரீசன் தப்பிப் போனான் ;அந்த மாரீசனாக (இம்மான்) இருத்தல் கூடுமோ என்று  ஐயம் கொண்டேன்; (அதனால்)  என் ஐயா, மேலும் சிந்தித்துப் பாராய்; செல்வாயாக; (தீங்கு நேராது) வாழ்க; என்று இரண்டு கரங்களையும் எடுத்து வணங்கி;

திருமகளான சீதை புகுந்த பர்ண சாலையை   வாசலில் நின்றவாறு காவல் காக்கத் தொடங்கினான்.

************************************

178.மான் போல ஒடாது வளைந்தும், நெளிந்தும் போனதைக் கண்டவுடன் ராமனுக்குப் புரிந்து விட்டது:

‘காயம் வேறு ஆகி, செய்யும் கருமம்

வேறு ஆகிற்று அன்றே?

ஏயுமே; என்னின் முன்னம்

எண்ணமே இளவற்கு உண்டே;

ஆயுமேல் உறுதல் செல்லாம்;

ஆதலால், அரக்கர் செய்த

மாயமே ஆயதே; நான் வருந்தியது’

என்றான் – வள்ளல்.

இந்த மானின் செயல்களோ மானின் இயல்பிலிருந்து மாறுபட்டதாய்த்  தோன்றுகின்றன;  எனக்கு முன்னே;  தம்பி இலக்குவனுக்கு இது குறித்த சிந்தனை தோன்றியதில் நியாயம் உண்டு – (அவன் எண்ணம்) சரிதான் . நானும்நன்றாக ஆராய்ந்திருந்தால்  இங்கு வந்திருக்க மாட்டேன்; எனக்கு இப்போது தெரிகிறது  இது இராக்கதர் மாயம் தான் என்பது ; இவ்வாறு வள்ளலாகிய இராமன் எண்ணினான்.

***********************

179.மாரீசன் குரலை மாற்றி ராமன் கூப்பிடுவது லெட்சுமணா, லெட்சுமணா அலறினான் :

நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்

பட்டது; அப்பொழுதே, பகு வாயினால்,

அட்ட திக்கினும், அப்புறமும் புக

விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன்.

நெடிய இலை வடிவம்  கொண்ட அவ்வம்பு, வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது. அந்தக் கணமே,

பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும், அதற்கு அப்பாலும் செல்லும்படி (சீதா லட்சுமணா) என்று இராமன் குரலில் கூவி

மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.

தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான்.

***************************************

180. மாரீசன் செய்கையால் ராமபிரானுக்கு மனதில் எழுந்த அச்சம்

புழைத்த வாளி உரம்

புக, புல்லியோன்,

இழைத்த மாயையின், என்

குரலால் இசைத்து

அழைத்தது உண்டு; அது கேட்டு

அயர்வு எய்துமால்,

மழைக் கண் ஏழை’ என்று,

உள்ளம் வருந்தினான்.

ஊடுருவிச் செல்லும் அம்பு     தன் மார்பில் பட்டதும்,  புல்லியோன் – இழிந்தவனாகிய மாரீசன்  செய்த மாயத்தினால்  என் குரலால்

என் குரல் போன்ற குரலால் (சீதையையும்

இலக்குவனையும்) கூவி அழைத்துள்ளான் அல்லவா?; அக்குரலைப் பிறழ உணர்ந்து மழை போல் குளிர்ந்த கண்களை உடைய

பேதை ஆகிய சீதை  துன்பம் உறுவாள்’  என்று மனம் நொந்தான் இராமன்.

–SUBHAM—

TAGS-    கம்ப ராமாயணத்தில் 180 கேள்விகள் , மாரீசன் வாதம் , மாய மான், லெட்சுமணன் எச்சரிக்கை

More from Pancha Tantra! Tirukkural Encyclopaedia Chapter 50- Right Place- இடனறிதல் (Post.16,338)

Written by London Swaminathan

Post No. 16,338

Date uploaded in London – 24 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

POINTS TO PONDER

Like the previous chapter, Valluvar used Pancha Tantra stories again in this chapter. The crocodile, elephant in marsh etc are in the Sanskrit book.

Valluvar, when use such stories, use them together; that means he has already taken some notes  (on his palm leaves) and use them at one go.

Elsewhere I have given the list where he used Panchatantra stories in Kurals:

Pancha tantra stories in Tiruk Kural:-

273 (Cow clothed in Tiger’s Skin);

274 (Hunter seeking birds hiding in bush);

277 (Red berry Abrus with Black in tip);

481 (Crow defeating Owl in day time);

490 (waiting Heron striking Fish at right time);

495 (Crocodile in Water more powerful);

500 (Elephant trapped by cunning Fox);

565 (Ghost with Seven Jars of Gold -Story told by Ramakrishna Paramahamsar);

890 (Living with Serpent in a hut).

Valluvar used such stories together; see the number sequence of Kurals;

xxxxxxx

Chapter 50- On the choice of Right Arena; Choosing the Right Place; இடனறிதல்

***

Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!

****

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 68; Chapter 50 in Tirukkural Book.

491.Declare no war, despise not the enemy, until you have got the vantage ground -A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

491.It is unwise to start an operation without deciding a suitable arena for it,

It will further be foolish to under-estimate the enemy- S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

491
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him. -Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

491.No action take, no foe despise
Until you have surveyed the place.  Suddhananda Bharathiyar – SB

***

491.Begin no military action; do not totally despise the enemy until you survey the right field for action- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

492.It is a great advantage even to mighty and brave warriors to give battle from impregnable mountain fortresses – ANM+2

***

492.Even if your force is of diverse nature, motivated and strong,

Defensive fortification does give added strength– SMD, Year 2000

***

492
Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages. GUP, Year 1886

***

492.Many are gains of fortresses
Ev’n to kings of power and prowess. – SB    

***

492.A strong fortress is of strong advantage even to leaders of mighty power and prowess- EVS, Year 1986

***

492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

493.Even the weak can maintain their strength and triumph over the enemy, if they spy out a suitable field of action– ANM+2

***

493.Even with a weaker force you will still prevail against a stronger army,

If you chose the right place and operate with care– SMD, Year 2000

***

493
E’en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies. GUP, Year 1886

***

493.Weaklings too withstand foe’s offence
In proper fields of strong defence. – SB    

***

493.Even the weak can withstand a mighty enemy and conquer in a suitable field strong in defence- EVS, Year 1986

***


493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

494.All the stratagems of the enemy will be baffled, of the king fortifies himself in a well-built stronghold– ANM+2

***

494.Yor enemy will not achieve his planned victory over you,

If you give battle from a well-protected place of vantage– SMD, Year 2000

***
494
The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them. GUP, Year 1886

***

494.If fighters fight in vantage field
The plans of foes shall be baffled. – SB

***

494.The plans of presumptuous enemies shall be baffled if the vantage ground is chosen by the fighter -EVS, Year 1986

***

494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

495.In the depths of a mighty river, the crocodile is all powerful; on the shore it is a plaything in the hands of its foes– ANM+2

***

495.In the deep waters of a river the crocodile will beat all,

But out of those waters, it will be absolutely helpless– SMD, Year 2000

***

495
The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, ’tis slain by anything beside.
In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it. GUP, Year 1886

***

495.In water crocodile prevails
In land before others it fails.  – SB

***

495.In deep water the crocodile overpowers all; out of water , others overpower it -EVS, Year 1986

***

495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

496.The mighty car, that thunders its huge wheels on the stony pavement, sails not on ocean streams, nor does the ship that cleaves the waters sail on dry land– ANM+2

***

496.The strong wheeled chariot cannot be driven on the high seas,

So too, the swift sailing ship cannot be propelled on ground– SMD, Year 2000

***

496
The lofty car, with mighty wheel, sails not o’er watery main,
The boat that skims the sea, runs not on earth’s hard plain.
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth. GUP, Year 1886

***

496.Sea-going ship goes not on shore
Nor on sea the strong-wheeled car. – SB    

***

496.The sea-sailing ship cannot move on land. The strong wheeled high chariot cannot run on water–EVS, Year 1986

***

The strong wheeled lofty chariot rides not upon the sea;

The ocean- going vessel goes not upon the land- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

496. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

497.Behold the prince who makes his stand on a well garrisoned fortress. Does he need any other aid than his own fearless valour to quell the foe? – ANM+2

***

497.If your operations in battle are planned, considering every single enemy design,

With no other aid but fearlessness, you will prevail– SMD, Year 2000

***
497
Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations. GUP, Year 1886

***

497.No aid but daring dash they need
When field is chosen right for deed.  – SB  

***

497.Only daring dash is needed to  aid a hero to victory, when he choses the right field for action–EVS, Year 1986

***

497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

498.A weak army in a safe retreat brings to nought the glory of even  a mighty phalanx– ANM+2

***

498.If a large army is constrained to operate in an area, meant for a small force,

They will have no place for manoeuvre, and so get demoralised– SMD, Year 2000

***
498
If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act. GUP, Year 1886

***

498.Though force is small, if place is right
One quells a foe of well-armed might. – SB       498

***
498.The army may be small; but in the right place, even a strong-armed enemy  can be quelled–EVS, Year 1986

***
498. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

499.It is hazardous to measure your strength with the enemy on his own ground, however feeble he may be without even the vestige of a good fortress– ANM+2

***

499.Although they may lack fortresses and armies it will not be easy,

To attack and dislodge people in their own homesteads– SMD, Year 2000

***

499
Though fort be none, and store of wealth they lack,
‘Tis hard a people’s homesteads to attack!
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress. GUP, Year 1886

***

499.To face a foe at home is vain
Though fort and status are not fine. – SB    

***

499.Though the foe has no advantage of fort or strength, hard it is to attack him on his own ground- EVS, Year 1986

***

499. சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

500.Even a jackal will vanquish an unruly elephant that has born the brunt of many a lance and transfixed the armed men, when he gets stuck up into a treacherous marshy swamp– ANM+2

***

500.On marshy ground, where the foot sinks, even a fox can beat a mighty elephant,

With fearless eyes on his majestic face, and two spears too of ivory– SMD, Year 2000

***
500
The jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men.
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down. GUP, Year 1886

***

500.A fox can kill a war tusker
Fearless with feet in deep quagmire. – SB

***   

500.A  fierce elephant that has faced  lancers, can be foiled by a fox, if it is stuck in a marshy ground –EVS, Year 1986

***

500.The jackal ,when in miry soil, in which the feet sink deep,

Will kill the fearless elephant that goreth armed men- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

****

500. காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேளாள் முகத்த களிறு.

–subham—

Tags- More from Pancha Tantra, Tirukkural Encyclopaedia, Chapter 50- Choosing the Right Place, இடனறிதல்

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 3(Post.16,337)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,337

Date uploaded in London – 24 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 3

ச. நாகராஜன்

ஸ்லோகம் 33

இந்த ரகசிய நாம சாஹஸ்ரத்தை எவன் ஒருவன் தினந்தோறும் கீர்த்தனம் செய்கிறானோ அவனுடைய முகத்தைப் பார்த்தவுடனேயே மூன்று லோகங்களும் மயங்கி விடுகின்றன.

ஸ்லோகம் 34

எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தை பக்தியோடு ஒரு தடவை

கீர்த்தனம் செய்கிறானோ, அவனுக்கு யார் எதிரிகளோ அவர்களை சரபேஸ்வரர் நாசம் செய்கிறார்.

(சரபேஸ்வரர் என்பவர் சிவனுடைய அவதாரங்களில் ஒருவர்.)

ஸ்லோகம் 35

எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்கிறவனைக் குறித்து அபிசார கர்மாவைச் செய்கிறானோ, அந்த கர்மாவை ப்ரத்யங்கிராதேவியானவள் தானாகவே திருப்பிவிட்டு அவனையும் கொன்று விடுகிறாள்.

(அபிசார கர்மா என்பது தெரியாத விதமாக எதிரியினுடைய மரணத்தை விளைவிக்கச் செய்யும் கர்மாவாகும்.)

ஸ்லோகம் 36

எவர்கள் இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் செய்கிறவனை கொடூரமான பார்வையுடன் பார்க்கிறார்களோ, அவர்களை மார்த்தாண்ட பைரவரானவர் தானாகவே வெகு சீக்கிரத்தில் குருடர்களாகச் செய்து விடுகிறார்.

ஸ்லோகம் 37

இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் செய்கின்றவனுடைய செல்வத்தை எவன் ஒருவன் திருடர்கள் மூலமாக அபகரிக்கிறானோ அவன் எங்கேயிருந்தாலும் அவனை க்ஷேத்ரபாலர் கொல்கிறார்.

(சிவனுடைய ஒரு அவதாரமே க்ஷேத்ரபாலர்)

ஸ்லோகம் 38

எந்த வித்வானானவன் இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் செய்கின்றவனோடு வித்யைகளில் வாதம் செய்கின்றானோ, அவனுடைய வாக்கை நகுலீச்வரியானவள் உடனே ஸ்தம்பனம் செய்து விடுகிறாள்.

(வாக்குக்கு அதிபதியான தேவதைகளில் ஒருத்தியே நகுலீச்வரி)

ஸ்லோகம் 39

எந்த ராஜாவானவன் இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் பண்ணுகிறவனிடம் பகை கொள்கிறானோ, அவனுடைய சதுரங்க சைன்யத்தையும் தண்டினியானவள் தானாகவே சம்ஹாரம் செய்கிறாள்.

(தண்டினீ தேவி அம்பாளுடைய சதுரங்க சைன்யத்திற்கு நாயகியாக இருப்பவள்)

ஸ்லோகம் 40

எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தை ஆறு மாதம் பக்தியுடன் கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் இடைவிடாமல் எப்போதும் இருப்பாள்.

ஸ்லோகம் 41

தினம் மூன்று முறையாக ஒரு மாத காலம் இந்த நாம சஹஸ்ரத்தை எவன் ஒருவன் கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய நாக்கின் நுனியாகிற ரங்கஸ்தலத்தில் சரஸ்வதி தேவியானவள் எப்போதும் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறாள்.

(ரங்கம் என்றால் நாட்டிய மேடை)

ஸ்லோகம் 42

எவன் ஒருவன் சோம்பல் இல்லாமல் இந்த நாம சஹஸ்ரத்தை தினம் ஒருமுறையாக ஒரு பக்ஷம் கீர்த்தனம் செய்கிறானோ அவனுடைய பார்வையாலேயே சகல பெண்களும் காமத்தின் வசப்பட்டு மோகம் அடைகிறார்கள்.

ஸ்லோகம் 43

எவன் ஒருவன் தன்னுடைய ஜன்மாவில் இந்த நாம சஹஸ்ரத்தை ஒரு முறை கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய கண்ணுக்குத் தென்படும் சகல பிராணிகளும் தங்களுடைய சமஸ்தமான பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஸ்லோகம் 44

எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தை அறிந்திருக்கிறானோ, அந்த பிராமணனுக்குத் தான் அன்னம், வஸ்த்ரம், தனம், தான்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒருபோதும் கொடுக்கவே கூடாது.

ஸ்லோகம் 45

எவன் ஶ்ரீவித்யையை அறிந்திருக்கிறானோ, எவன் ஶ்ரீசக்ரத்தை நன்றாக அர்ச்சிக்கிறானோ, எவன் இந்த நாம சஹஸ்ரத்தை கீர்த்தனம் செய்கிறானோ, அவனைத் தான் நல்ல பாத்ரமானவன் என்று அறிஞர்கள் தெரிந்து கொள்கிறார்கள் (சொல்வார்கள்).

ஸ்லோகம் 46

ஆகவே, ஶ்ரீ தேவியின் ப்ரியத்தை அடைய விரும்புகிறவன் பாடுபட்டாவது அம்மாதிரியான  சத்பாத்ரனுக்கு தானம் செய்ய வேண்டும்,

ஸ்லோகம் 47

எவன் ஒருவன் இந்த நாமங்களைச் சொல்லாமலும், மந்த்ர ராஜத்தை அறியாமலும் இருக்கிறானோ, அவன் பசுவுக்குச் சமமானவன் என்று அறியத் தகுந்தவன். அவனுக்குக் கொடுத்தது அர்த்தமில்லாதது (பயனற்றது).

ஆகவே, புத்திமானாக இருப்பவன் வித்யை தெரிந்தவர்களை பரீக்ஷித்து (சீர்தூக்கி, தாரதம்யத்தைத் தெரிந்துகொண்டு) அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

(மந்த்ரராஜம் என்பது ஶ்ரீ வித்யை)

ஸ்லோகம் 48, 49

ஶ்ரீ மந்த்ரராஜத்திற்கு சமானமான மந்த்ரம் எப்படி இல்லையோ, லலிதாம்பாளுக்கு சமானமான தேவதை எப்படி இல்லையோ, அதே மாதிரி, ஹே, கடோத்பவ, ரஹஸ்ய நாம சாஹஸ்ரத்திற்கு சமானமான ஸ்தோத்திரமும் கிடையாது.

ஸ்லோகம் 50

எவன் ஒருவன் இந்த உத்தமமான  நாம சஹஸ்ரத்தை புத்தகத்தில் எழுதி, அதை எப்போதும் பக்தியுடன் பூஜிக்கிறானோ அவனிடத்தில் ஶ்ரீ சுந்தரியானவள் சந்தோஷம் அடைகிறாள்.

இதைப் பற்றி அதிகமாகச் சொல்லி என்ன, ஹே, கும்பஸம்பவ, கேள்!

**

தமிழனுக்கு அப்பா இல்லை! தமிழச்சிக்கு தாலி இல்லை!! (Post.16,336)

Written by London Swaminathan

Post No. 16,336

Date uploaded in London – 23 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சில (மூ)தேவிகள் அவ்வப்போது பிஎச்.டி. டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதைப் பார்க்கிறேன்; அவர்கள் தாலி கட்டுவது பற்றி அந்த நூலில் இல்லை, இந்த நூலில் இல்லை ஆகையால் தமிழர்களுக்குத் தாலி வேண்டாம் ; இப்படி எழுதும் அறிவிலிகள் அரசியல் திராவிடிகள் ஆவர் ; இதிலுள்ள பிழைகளைக் காட்டுகிறேன் :

1

முதலில் இப்படிச் சொல்லும் திராவிடிகளின் தாயார்களும் தங்கை, அக்காள்மார்களும் தாலியுடன் திருமணம் செய்திருப்பார்கள்!

2

தாலி பற்றிய குறிப்புகளை மதுரை நகர பாரத்வாஜக் கோத்திர பிராஹ்மணன் நச்சினார்க்கினியர் உரை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை, கம்ப ராமாயணப் பாடல்களில் கண்டாலும் அவைகளை விட, தான் புத்தி சாலிகள் என்று நினைக்கின்றனர்.

3

எந்த ஒரு நெகட்டிவ் எவிடென்சும் – NEGATIVE EVIDENCE உண்மையான ஆதாரம் ஆகாது .

*****

இவர்களைப் பின்பற்றி  நானும் ஒரு ஆராய்ச்சிக்  கட்டுரை எழுதப் போகிறேன் !

தமிழனுக்கு அப்பா இல்லை ; தமிழன் டாய்லெட்டே TOILET  போவது இல்லை – என்று .

ஏனெனில் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் சுமார் 30, 000 வரிகளில், சுமார் ஒரு லட்சம் சொற்களில் அப்பா , அப்பன் என்ற சொல்லே இல்லை ! ஆனால் நாமோ அதோ பார்! ஹீப்ரு (எபிரேய) மொழியில் அப்பா என்ற சொல் இருக்கிறது; இதோ பார் கொரிய மொழியில் அப்பா இருக்கிறது என்று!ஆனால் நமக்கு உண்மை தெரியும் ; பிற்காலத்தில் மாணிக்க வாசகர் முதலிய அடியார்கள் இதை பயன்படுத்தியதால் இது தமிழ்ச் சொல்தான் என்று ; மேலும் தந்தை முதலிய சொற்களும் உண்டு !

இதே போல தமிழன் சிறு நீர் கழித்தது மலம் கழித்ததைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ; அவை சங்க இலக்கியத்தில் பாடப்படவில்லை; ஆனால் சங்க இலக்கியத்துக்கு முன்னால் வந்த ஆயர் வேத நூல்களில் சம்ஸ்க்ருதத்தில் அவை உள்ளன; உலகறிந்த விஷயங்களைச் சொல்லத் தேவை இல்லை.

இது போல பல வழங்கங்களைக் குறிப்பிடாவிட்டாலும் நாம் அது 5000 ஆண்டுக் காலமாக இருந்ததை ஏற்கிறோம். தாலியும் அப்படித்தான் : எல்லோரும் அணிவதால் அதைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை என்று கொள்ளலாம் . புலிப்பல் தாலி பற்றிய குறிப்புகள் உள்ளன. அது இன்று அழிந்துவிட்டன; இப்போது யாரும் குழந்தைகளுக்கு கழுத்திலோ அரைஞாண் கயிரிலோ ஐம்படைத்தாலி, புலிப்பல் தாலி கட்டுவது அரிது; இதை வைத்து ஒரு வெள்ளைக்காரன இந்த வழக்கமே இல்லை என்று சாதிக்கலாம் .

இதைவிட, நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் , அவருக்கு முன்னர் வாழ்ந்த பார்ப்பான் மதுரை நகர பாரத்வாஜக் கோத்திர பிராஹ்மணன் நச்சினார்க்கினியரும் இதைக் குறிப்பிடுகிறார்கள்   சங்க இலக்கியத்தில் தாலி  இருப்பதை நெடுநல் வாடை வரிகள் 136-137 வரிகளில் அறிகிறோம்.

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்

பின் அமை நெடு வீழ் தாழ

— நெடு நல் வாடை   வரிகள் 136,137

(காண்க- பக்கம் 264, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும் , மு சண்முகம் பிள்ளை, 1996).

அவருக்கு  முன்னரே மதுரை டாக்டர் எஸ் ஆர்.கே. யும் (Dr S Ramakrishnan, Author of Kamban and Milton)  எழுதியுள்ளார் . கண்ணகியும் கோவலனும் தீ வலம் வந்து திருமணம் செய்த குறிப்பு   சிலப்பதிகாரத்தில் தெளிவாகவே உள்ளது ; அது பார்ப்பனர்கள் முன்னிலையில் நடந்தது . இது சங்க இலக்கியமான அகநானூற்றிலும் (396) இருப்பதை சண்முகம் பிள்ளை நூலில் காணலாம்.

எல்லா வகுப்பினரும் இப்படிச் செய்ததாக சொல்லத் தேவையும் இல்லை ; கண்ணகியும் கோவலனும் பிராமணர்கள் இல்லை! அதை எழுதிய இளங்கோவும் பிராமணன் இல்லை!

****

ஜூன் 18, 2014 ஆம் ஆண்டில் இதே பிளாக்கில் நான் எழுதிய கட்டுரையின் பகுதி:

பெண்கள் தாலி :–

புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்

பின் அமை நெடு வீழ் தாழ

— நெடு நல் வாடை வரிகள் 136,137

தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.

இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.

“ஈகை அரிய இழை அணி மகளிர்” —

(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)

“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47

(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)

“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “

(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்).

. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.

ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதாடுகின்றனர்

.****

மார்கோபோலோ சீனா பற்றி எழுதிய நீண்ட அத்தியாயங்களில் சீன நெடுஞ் சுவர் பற்றி இல்லை : இதனால் பலர் அவனை மோசடிக்காரன், பொய்யன் என்று இத்தாலிய மொழியில்  புஸ்தகங்களை எழுதியுள்ளபனர்!

மெகஸ்தநீஸ் எழுதிய இண்டிகாவில் மதுரை மீனாட்சி அம்மனைப் பற்றிய வசனம் உள்ளது! ஆனால் புத்தர், மஹா வீரர் என்ற வாசனையே இல்லை!

ரிக்வேதத்தில் சர்க்கரை இருக்கிறது; ஆனால் உப்பு பற்றிய பிரஸ்தாபமே  இல்லை; தமிழனுக்கு சிந்துவெளி நாகரீகத்துக்கும் ஸ்னானப்பிராப்தி கூட இல்லை என்றும் வாதாடலாம்! கங்கை யமுனை நதிகளை 17 முறை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட 450 புலவர்கள் சிந்து நதி பற்றியோ அந்த இடம் பற்றியோ எதுவும் சொல்ல வில்லை!! இமய மலை தெரிந்தவர்களுக்கு சிந்து நதி தெரியாதா ? சரஸ்வதி நதி பற்றி குறிப்பு இல்லை என்றாலும் அது மறைந்து போன நதி என்று விட்டுவிடலாம்; அனால் சிந்து நதியோ இன்றுவரை கடல் போல ஒடிக்கொண்டு இருக்கிறது.

சுருக்கமாக நான் சொல்வது என்ன வென்றால் ஒன்றைக் குறிப்பிடாததால் அது இல்லை என்ற வாதம் தவறு ; அப்படிப்பட்ட  வாததத்தை ஏற்றால்  , தமிழனுக்கு அப்பா கிடையாது, தமிழனுக்கும் சிந்து வெளி நாகரீகத்துக்கும் தொடர்பே இல்லை,  தமிழனுக்கு வண்டி என்றால் என்ன வென்றே தெரியாது என்று ஆகி விடும் !

வண்டி என்ற சொல் மிகவும் பிற்காலச் சொல்; சங்க இலக்கியத்தில் அதற்குப் பாண்டில் ; அதற்குப்பின்னர் கன்னடம் போல உச்சரிக்கும் பாண்டி ; பின்னர் வண்டி ஆனது!

சங்க கால தமிழனுக்கு அப்பா , அப்பன் இல்லை என்பதை ஒப்புக்கொண்டால்  தமிழச்சிக்கு தாலி இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.

****

கம்ப ராமாயணத்தில் தாலி

மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற

எண்ணற்கு அரிய ஏனையரை இகலின்  பறித்த தமக்கு இயைந்த

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த

கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம்  இட்டுக் கட்டினார்

–பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்

****

கம்பனின் வசவுப் பாடலில் கைகேயியை தசரதன் எப்படி வசைபாடுகிறான் என்பதைப் பார்ப்போம். முன்னர் எழுதிய ஒரு கம்பன் கட்டுரையிலும் தாலி பற்றி இருப்பதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கம் இருந்ததை உறுதியாக அறிய முடிகிறது

விழிக்கும் கண் வேறு இல்லா, வெங்கான் , என் கான் முளையைச்

சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;

பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி,என் பல? உன்

கழுத்தின் நாண்,உன் மகற்குக் காப்பின் நாண்ஆம்’ என்றான்.

—அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம், கம்ப ராமாயணம்

—SUBHAM—

TAGS- தாலி, சான்று, சங்க இலக்கியத்தில், கம்ப ராமாயணத்தில், சிலப்பதிகாரத்தில் , தமிழனுக்கு , அப்பா , இல்லை, வண்டி

கம்ப ராமாயணத்தில் 170 கேள்விகள் (Post.16,335)

Written by London Swaminathan

Post No. 16,335

Date uploaded in London – 23 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கம்ப ராமாயணம் ரொம்ப – போர் அடிக்கும் ! முழுக்க படிக்க வேண்டாம் ; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!

இப்பொழுது மூன்றாவது முறையாக கம்ப ராமாயணத்தைப் படிக்கிறேன் ; முதல் தடவை 25 ஆண்டுகளுக்கு முன்னர்; இரண்டாம் தடவை பிரிட்டனிலுள்ள என் நண்பர்களுக்கு ஞாயிறு காலைதோறும் ஆன் லைன் கிளாஸ் ON LINE CLASS எடுத்த போது; அப்போதும் கூட என் நோட்ஸிலிருந்து சுவையான பகுதிகளை  மட்டுமே  பகிர்ந்து கொண்டேன்; கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும்  ; தொடர்ந்து படியுங்கள் :

இதற்கு முன்னர் வெளியிட்ட 160 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

xxxxxxxxxxxxxxxxxxx

161

கரனையும் தூஷணனையும் ராமன் கொன்றதை சுமார் 200 பாடல்களில் கம்பன் பாடுகிறான்; கொஞ்சம் TOO MUCH டூ மச் என்று தோன்றுகிறது ; ராமனின்  வில் ஆற்றலைக் காட்டும் இந்த இரண்டு பாடல்களுக்குப் பொருள் தெரியுமா ?

2990.  தாள் இடை அற்றன;

தலையும் அற்றன;

தோள் இடை அற்றன;

தொடையும் அற்றன;

வாள் இடை அற்றன;

மழுவும் அற்றன;

கோள் இடை அற்றன;

குடையும் அற்றன;

2976.  தலை சிந்தின; விழி சிந்தின,

தழல் சிந்தின; தரைமேல்

மலை சிந்தினபடி சிந்தின, வரி

சிந்துரம்; மழைபோல்

சிலை சிந்தின கணை சிந்தின, திசை

சிந்தின, திசையூடு

உலை சிந்தின, பொறி சிந்தின,

உயிர் சிந்தின, உடலம்.

162

தும்புருவின் வீணையின் பெயர் கலாவதி; நாரதரின் வீணையின் பெயர் மகதி; சரசுவதியின் வீணை பெயர் கச்சபி ; ராவணனுக்கு யார் யார் வீணை வாசித்தனர் என்று கம்பன் மொழிகிறான் ?

163

ராவணனிடம் தனக்கு நேர்ந்த காயங்களைக்காட்டி சூர்ப்பணகை புகார் செய்தவுடன்,  யார் செய்தது என்று இடி முழக்கம் செய்தான்; அவள்  சொன்ன பதிலைக்கேட்ட ராவணன் வெடிச்சிரிப்பு சிரித்தது ஏன்?

164

தனக்கு பத்துத் தலைகளும் இருபது தோள்களும் இருப்பதன் ADVANTAGE அட்வான்டேஜ் – சாதகம் – என்ன என்று எப்படி ராவணன் விளக்கினான் ?

165

ராவணன் FULL REPORT புல் ரிப்போர்ட் கேட்டபோது அவன் பெண்பித்தன் (கிராமத்துக் காரங்க பாஷையிலே பொம்பளைப் பொறுக்கி) WOMANISER என்பதை மனதில் கொண்டு சீதையை வருணித்து அவனுக்கு எப்படி வெறி  ஏற்றினாள் சூர்ப்பணகை ?

166

சீதையை சூர்ப்பணகை வருணித்த கீழ்கண்ட பாட்டின் பொருள் என்ன ?

‘வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல்

ஒக்கும் விழி என்றாலும்,

பல் ஒக்கும் முத்து என்றாலும்,

பவளத்தை இதழ் என்றாலும்,

சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;

சொல்லல் ஆம் உவமை உண்டோ?

“நெல் ஒக்கும் புல்” என்றாலும்,

நேர் உரைத்து ஆகவற்றோ!

167

ராவணா ! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பெண்களை நாவிலும், மார்பிலும், உடலின் ஒரு பகுதியிலும் வச்சாங்க ; நீ எங்கப்பா வைக்கப்போறே? என்னும் அற்புதமான பாடல் எது ?

168

தமிழ் திரைப்பட டைரக்டர்களை எல்லாம் தோற்கடிக்கும் கம்பன் , ராவணனுக்கு காம வெறி ஏற்றியதில் சூர்ப்பணகை வெற்றி கண்டாள் என்பதை காட்டும் பாடல் எது?

169

ராவணனுக்கு வேதவதி இட்ட சாபத்தால் இலங்கைக்கு அழிவு நேரப்போவதைக் கம்பன் எந்தப்படலில் சித்தரிக்கிறான்?

170

ராவணனின் காமநோயால் அவனது படுக்கையில் இருந்த  பூக்களும் கருகின என்று சொன்ன கம்பன், பறவைகளும் ராவணனைக் கண்டு பயந்ததை எப்படிக் காட்டுகிறான் ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

161.இராமன் தொடுத்த அம்புகளால்) அரக்கர்களின் கால்கள் நடுவே அறுபட்டு வீழ்ந்தன; அவ்வரக்கர்களின் தலைகளும்

அறுபட்டன; தோள்களும் துண்டிக்கப்பட்டன;தொடைகளும் துண்டுபட்டன;  வாள்களும் பல முறிந்தன; மழுப்படைகளும் முறிந்து விழுந்தன; (அவர்களின்) வலிமையும் போரிலே சிதைந்தது; குடைகளும் அழிந்தன.

அடுத்த பாடலின் பொருள்

(அரக்கர்களின்) தலைகள் சிதறின;  நெருப்புப் பொறிகளையுமிழ்ந்த (அவர்களின்) கண்கள் சிதறின; (இருக்கை வரிந்து) கட்டப்பட்ட யானைகள்; – பூமியின் மேலே மலைகள் சிதறி

விழுந்தாற் போலச் சிதறின; மழை போல  இராமனது வில் உமிழ்ந்த அம்புகள்;  எல்லாத் திசைகளிலும் சிதறி விழுந்தன;

அந்தத் திக்குகளிலெல்லாம் உலைக் களத்திலிருந்து சிதறிய;

தீப் பொறி போன்ற நெருப்புப் பொறிகளைச்

சிதறிய (அரக்கரின்) உடம்புகள்; உயிர்கள் நீங்கின.

****************************

162.திசை உறு கரிகளைச் செற்று, தேவனும்

வசையுறக் கயிலையை மறித்து, வான் எலாம்

அசைவுறப் புரந்தரன்  அடர்த்த தோள்களின்

இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே.

எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகளை வென்று; சிவபெருமானும்

ஆடும்படி மேரு மலையைப் பெயர்த்து; விண்ணுலகம் நடுங்க; இந்திரனை நெருங்கிப் போரிட்ட;  (இருபது) தோள்களினது; புகழை; தும்புருவென்னும் கந்தருவன், (வீணை) இசையோடு புகழவும்….

(தும்புரு நாரதன் போலும் முனிவன்;.அவன் வீணை கலாவதி).

சேண் உயர் நெறி முறை     திறம்பல் இன்றியே

பாணிகள் பணி செய,     பழுது இல் பண் இடை

வீணையின் நரம்பிடை     விளைத்த தேமறை,

வாணியின், நாரதன்,     செவியின் வார்க்கவே.

தொலைவிலுள்ள விண்ணுலகில் , இசை விதிகளின் தவறு இல்லாமல்,  வீணையின் நரம்புகளில் கைகள் தடவி எழுப்பிய இராகத்தில்  இனிய வேதத்தை  நாரதன்  கலைமகளைப் போல  காதுகளில் பொழிய…

( இராவணன் கேட்டு மகிழ வீணை யில் சாம வேத கீதம்  இசைத்தான்நாரதன். அவன் வீணையின் பெயர் மகதீ. (சரசுவதி வீணை – கச்சபி).

*******************************

163.அற்பப்பயல்கள் , மனுஷங்க செஞ்சாங்களா ! ஹாஹா ஹாஹா ஹாஹா ……………………

‘செய்தனர்கள் மானிடர்’ என, திசை அனைத்தும்

எய்த, நகை வந்தது; எரி சிந்தின, கண் எல்லாம்;

‘நொய்து அவர் வலித் தொழில்;  நுவன்ற மொழி ஒன்றோ?

பொய் தவிர்; பயத்தை ஒழி;  புக்க புகல்’ என்றான்.

(சூர்ப்பணகை) மனிதர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று கூறவும்; (இராவணனுக்குத்) திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படி நகைப்புப்

பிறந்தது; கண்களில் நெருப்புப் பொறி பறந்தது; ‘அம் மனிதர்களின் துணிச்சலான செயல் அற்பமானது; நீ கூறிய செய்தி உண்மையானது தானே? ; பொய்யை விட்டுச் சொல்; – பயப்படாதே; நடந்தவற்றை நடந்தபடி சொல்’ என்று மொழிந்தான்.

******************************

164.ஒரு தலை மட்டும் இருந்தால் கொஞ்சம்தான் சிந்திக்க முடியும்; ஒரு தோள் இருந்தால்  கொஞ்சம்தான் தாங்க முடியும்!

‘பொத்துற உடற்பழி  புகுந்தது” என நாணி,

தத்துறுவது என்னை? மனனே! தளரல் அம்மா!

எத் துயர் உனக்கு உளது?  இனி, பழி சுமக்க,

பத்து உள தலைப் பகுதி;   தோள்கள் பல அன்றே?

என் உள்ளமே! உடலில் ஏற்பட்ட காயங்களை எண்ணி வெட்கமுற்று,  ஏன் தடுமாறுகிறாய்? சோர்வடையாதே. நீ இந்த அவமாத்தையும் துன்பத்தையும் தாங்க வேண்டியதில்லை  (ஏனெனில்);  இனிமேல் அப்பழியைத் தாங்க, எனக்கு பத்து தலைகள் உள்ளன ; தோள்களும் பல உள்ளன; அல்லவா ?

*******************************

165.சீதையை சூர்ப்பணகை வருணித்தாள்

165.மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை  ஒக்கும் வடிந்த கூந்தல்;

பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய  பவளத்தின் விரல்கள்; ஐய!

அம் சொற்கள் அமுதின் அள்ளிக் கொண்டவள் வதனம் மை தீர்

கஞ்சத்தின் அளவிற்றேனும், கடலினும் பெரிய கண்கள்!

சீதையின் பேச்சு அழகிய சொற்களை அமுதத்திலிருந்து தோய்த்து எடுத்துக் கொடுத்தது போல இருக்கும்;  அவளுடைய கூந்தல் மேகத்தை நிகர்க்கும்; தாழ்ந்த கூந்தலோ; கீழே வரும்  மழை மேகம் போன்றிருக்கும்;  பாதங்கள் செம்பஞ்சினைப் போன்றிருக்கும்;  விரல்கள் சிவந்த பவளத் துண்டுகள் போல அழகானவை,

முகம்- களங்கமற்ற தாமரைப்பூதான்! கண்களோ கடலைக் காட்டிலும் பெரியவை..

**********************************

166. ராவணா! நான் சீதையின் அழகை வருணிக்க முயற்சி செய்கிறேன் :அவளுடைய நெற்றி வில்லைப் போல்  அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்;  கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; இதழ்கள் பவளமே  என்று சொன்னாலும் ஒருவேளை  பொருத்தம் ஆகலாம்; ஆயினும் சீதையின் உறுப்பழகை நான் சொன்னதாக அர்த்தம் இல்லை; ஏனெனில் சொல்லத்தக்க உவமை வேறு இல்லை;  புல்லைப் போன்றிருக்கும் நெல்என்று நான் சொன்னால்  பொருத்தமாக இருக்குமா ?

(வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதைபால்

பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம் எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள். )

*********************************

167.     ‘பாகத்தில் ஒருவன் வைத்தான்;

பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான்;

அந்தணன் நாவில் வைத்தான்;

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற

நுண் இடையினாளை-

மாகத் தோள் வீர!-பெற்றால்,

எங்ஙனம் வைத்து வாழ்தி?

சிவபெருமான் (தன் தேவியை)  தன் இடப்பாகத்தில் வைத்துப் பெருமை கொண்டான் (அர்த்த நாரீஸ்வரர்) ;திருமால்  தாமரையில் வசிக்கும் பொன்மகளாகிய லெட்சுமியை  மார்பில் அமர்த்திப் போற்றினான்; பிரம்ம தேவன்,தன் நாவில் (சரஸ் வ தியை) குடியிருத்திச் சிறப்புற்றான்; விண்ணளவு உயர்ந்த தோள்களைப் பெற்ற வீரனே! மழை முகில்களிடையில் உதிக்கும் மின்னலைப்போன்ற ,இடையைப் பெற்ற சீதையை; அடைந்து நீ எங்கே வைத்து வாழ இருக்கின்றாயோ?

( இப்பாடலிலும் இராவணனுக்கு நேரவிருக்கும் அழிவு குறிப்பால் உணர்த்தப் பெறுகின்றது. ‘எங்ஙனம் வைத்து வாழ்தி’? என்னும் வினா, ‘உன்னால் வாழ முடியாது’ என்ற குறிப்புப் பொருளைத் தந்து நிற்கின்றது. )

********************************

168.மயிலுடைச் சாயலாளை வஞ்சியா

முன்னம், நீண்ட

எயிலுடை இலங்கை நாதன், இதயம்

ஆம் சிறையில் வைத்தான்;

அயிலுடை அரக்கன் உள்ளம்,

அவ் வழி, மெல்ல மெல்ல,

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல்,

வெதும்பிற்று அன்றே.

மயிலின் அழகு உடையவளை; வஞ்சனையால் கவர்வதன் முன்னரே; உயர்ந்தோங்கிய கோட்டைமதில்களை உடைய இலங்கையின் தலைவன்; இதயமாம் சிறையில்

வைத்தான் – (தன்) மனமாகிய சிறைச்சாலையின் உள்ளே வைத்தான்; (அதன் விளைவாக); வேற்படை கொண்ட இராவணனாகிய இராக்கதன் மனம் வெயிற் பொழுதில்

வைக்கப்பட்ட வெண்ணெய் போன்று சிறிது சிறிதாக வெப்பத்தால் உருகலாயிற்று.

அசோக வனத்துச் சிறைக்கு முன்பே மனச்சிறையில் வைத்தான் என நயம்பட உரைத்தார்.  இனி சீதைக்கு இந்தப் பெண் பித்தனால், காம வெறியினால், ஆபத்து வரப்போவதை கம்பன், ஒரு சினிமா டைரக்டர் போலப் பாடலில் காட்டிவிட்டான் ! ராமாயணம் தெரியாமல் படிக்க ஆரம்பிப்போருக்கு இது ஒரு சஸ்பென்ஸ் காட்சி !

****************************************

169.

விதியது வலியினாலும், மேல்

உள விளைவினாலும்,

பதி உறு கேடு வந்து

குறுகிய பயத்தினாலும்,

கதி உறு பொறியின் வெய்ய காம

நோய், கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமைபோல்,

வளர்ந்தது அன்றே.

ஊழ்வினையின் ஆற்றலினாலும்,இனிமேல் அதனால் உண்டாகப்போகும் விளைவு களாலும் இலங்கை

மா நகருக்கு அழிவுக்குரிய நிலை காலம் வந்ததாலும்

பொறிகளின் வழியே (இராவணனைப் பற்றிய) கொடிய காம நோயானது, கல்வி அறிவு அற்ற அறிவிலி ஒருவன்,  யாருமறியாமல் மறைவாகச் செய்த கெடுதி போல வளர்ந்தது .

வேதவதி சாபம், வானரங்களால் இலங்கை அழிய வேண்டுமென நந்தி இட்ட சாபம் முதலியனவெல்லாம் நிறைவேறத் தக்க காலம் நெருங்கியது என்பதை விதி என்பது வலியது என்ற சொற்களால் காட்டிவிட்டான்.

*******************************

170.காமநோயால் நொந்து போன ராவணன் ஒரு சோலைக்குள் நுழைந்தான்; உடனே பறவைகளும் மெளனமாகிவிட்டனவாம்!

கனிகளின், மலரின், வந்த கள்

உண்டு களிகொள் அன்னம்,

வனிதையர் மழலை இன்சொல்

கிள்ளையும், குயிலும், வண்டும்,

இனியன மிழற்றுகின்ற யாவையும்,

‘இலங்கை வேந்தன்

முனியும்‘ என்று அவிந்த வாய;

மூங்கையர் போன்ற அன்றே.

பழங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும்  பெருகிய மதுவை அருந்தி, கள் வெறி கொண்ட அன்னப் பறவைகளும், மகளிர் போல் இனிய மழலை மொழி பேசும் கிளிகளும்,  குயில்களும், தேன் வண்டுகளும், இனிய குரல் எழுப்பும் ஏனைய பறவைகளும்  இலங்கையர் அரசனாகிய இராவணன் கோபித்துக் கொள்வான்’ என்று மௌனமாகி ஊமைகளாகக் காட்சி தந்தன!

–subham—

TAGS – கரன், கம்ப ராமாயணம், 170 கேள்விகள், இராவணன், சூர்ப்பணகை, சீதையின் அழகு, கம்பன், திரைப்பட டைரக்டர் , இதயச் சிறை

கிஷ்கிந்தா காண்டம், ஓர் ஆய்வு – Part 34( Post 16,334)


WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,334

Date uploaded in London –   23 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

(ஆர், சேஷாத்ரிநாதன்)

துளசிதாசர் இதுபற்றி மேலும் சொல்கிறார்.

* देत लेत मन संक न धरई। बल अनुमान सदा हित करई॥

बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3॥

“நண்பர்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்யும்பொழுது திரும்பி வருமா வராதா என்ற ஐயம் மனதில் கொள்ளக்கூடாது. தன்னுடையே சக்திக்கு ஏற்ப எப்பொழுதும் நண்பனுக்கு உதவி செய்து கொண்டே இருக்கவேண்டும் குறிப்பாக  நண்பனுக்கு இன்னல்கள் ஏற்படும்பொழுது நூறு மடங்கு அன்பைக் காட்ட வேண்டும். வேதங்களும், நீதி நூல்களும் இவைதான் உண்மையான நண்பனுக்கு இலக்கணங்கள் என்று கூறுகின்றன”

இங்கு துளசிதாசர் देत लेत என்று கொடுப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார். முதலில் கொடு அப்புறம் பெற்றுக் கொள் என்று சொல்கிறார்.  அடுத்து बल अनुमान அதாவது சக்தியின் மதிப்பீடு .அதவாது சக்திக்குத் தகுந்து கொடுத்தல்.அதாவது  இந்த பலம் அல்லது வலிமை என்றால் என்ன?

மகாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது

बलं पञ्चविधं नित्यं पुरुषाणां निबोध मे ।

यत्तु बाहुबलं नाम कनिष्ठं बलमुच्यते ।।48।।

अमात्यलाभो भद्रं ते द्वितीयं बलमुच्यते ।

धनलाभस्तृतीयं तु बलमाहुर्जिगीषवः ।।49।।

यत्त्वस्य सहजं राजन्पितृपैतामहं बलम् ।

अभिजातबलं नाम तच्चतुर्थं बलं स्मृतम् ।।50।।

येन त्वेतानि सर्वाणि सङ्गृहीतानि भारत ।

यद्बलानां बलं श्रेष्ठं तत्प्रज्ञाबलमुच्यते ।।51।।

महाभारत उद्योगपर्व – 37/48

அதாவது விதுரர் தருமரிடம் ஐந்துவிதமான பலம் அல்லது வலிமை பற்றிப் பேசுகிறார். அதில் “பாஹு பலம்” (உடல் வலிமை) மிகக் குறைந்த வலிமையாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது வலிமை — நல்ல அமைச்சர்களைப் பெறுதல்.

மூன்றாவது வலிமை — செல்வம், பொருள், பணம்.

நான்காவது வலிமை — பிறப்பால் கிடைக்கும் வலிமை, அதாவது பித்ரு–பைதாமஹ பலம் (குலம், வம்சம், உயர்ந்த பிறப்பு). இது “அபிஜாத பலம்” எனப்படுகிறது.

ஐந்தாவது இந்த எல்லா வலிமைகளையும் ஒருங்கிணைத்து நடத்த வல்லது,

அனைத்திலும் சிறந்த வலிமை — ப்ரஜ்ஞா பலம் (அறிவு, புத்திசாலித்தனம், யோசனை).

கிஷ்கிந்தா காண்டம் எட்டாவது சர்கத்தில் சுக்ரீவன் இராமனிடம் சொல்கிறான்.

रजतम् वा सुवर्णम् वा शुभानि आभरणानि च |

अविभक्तानि साधूनाम् अवगच्छन्ति साधवः || ४-८-७

आढ्यो वा अपि दरिद्रो वा दुःखितः सुखितोऽपि वा |

निर्दोषः च सदोषः च वयस्यः परमा गतिः

धन त्यागः सुख त्यागो देश त्यागोऽपि वा अनघः |

वयस्यार्थे प्रवर्तन्ते स्नेहम् दृष्ट्वा तथा विधम् || ४-८-९

“வெள்ளியோ}, தங்கமோ, சுபமான ஆபரணங்களோ, அவற்றை நண்பர்கள்   தங்களுக்குள் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். செல்வமுள்ளவனோ, ஏழையோ, துக்கமடைந்தவனோ, சுகித்திருப்பவனோ, தோஷமற்றவனோ {குற்றமற்றவனோ}, தோஷமுள்ளவனோ ஒரு நண்பனே மற்றொரு நண்பனுக்கு உற்ற துணை.  இராகவா! அந்தவித நட்பைக் கண்டால், அவன்  பொருட்டு, செல்வத்தைக் கைவிடுவதும், சுகத்தைக் கைவிடுவதும், தேசத்தை {இடத்தைக்} கைவிடுவதுங்கூட செய்யத்தக்கதே” இந்தக் கடைசி வாக்கியம் துளசிதாசரின் “बल अनुमान सदा हित कर्ई என்பதற்கான பொருளாகும்.  கஷ்ட காலத்தில் தான் நண்பனின் உண்மையான குணம் தெரியும் “बिपति कालकर सत गुन नेहा என்று சொல்கிறார் துளசிதாசர்.

कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा

* देत लेत मन संक न धरई। बल अनुमान सदा हित करई॥

बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3॥

ஆக தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின் இலக்கணமாகும். இதையே பர்த்ருஹரி தன்னுடைய நீதி சதகம் என்னும் நூலில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

पापान्निवारयति योजयते हिताय

गुह्यं च गूहति गुणान्प्रकटीकरोति।

आपद्गतं च न जहाति ददाति काले

सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥७३॥

Saints describe these as the attributes of a true friend:

A true friend prevents his friend from committing sins, and induces him to act in good interest, conceals the secrets of a friend which ought to be hidden, projecting only his good qualities and does not forsake his friend in adversities, but gives timely assistance.

இங்கு சீதை அனுசூயையைப் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். அனுசூயை சீதையிடம் சொல்கிறாள்

धीरज धर्म मित्र अरु नारी। आपद काल परिखिअहिं चारी।।

தைரியம், தர்மம், நண்பன். மனைவி இவர்களின் உண்மையான குணம் ஆபத்து/ மற்றும் கஷ்ட காலத்தில் தான் தெரியும். மிகக் கஷ்ட காலத்தில் நல்ல நிலையில் உள்ள நண்பன் சிரமமான நிலையில் இருக்கும் நண்பனுக்கு கை கொடுக்க வேண்டும். அதுபோல நல்ல மனைவி எப்போதும் கணவனுக்குத் துணை நிற்கவேண்டும்

आगें कह मृदु बचन बनाई। पाछें अनहित मन कुटिलाई॥

जाकर ‍िचत अहि गति सम भाई। अस कुमित्र परिहरेहिं भलाई॥4॥

परोक्षे कार्यहन्तारं प्रत्यक्षे प्रियवादिनम् ।

वर्जयेत् तादृशं मित्रं विषकुम्भं पयोमुखम् ॥

“எவன் நேரில் இனிக்க இனிக்க சிரித்துப் பேசிவிட்டு முதுகுக்குப் பின்னால் தீமை செய்கிறானோ, எவன் மனதில் கபடம் உடையவனாய் இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுடைய மனமானது பாம்பின் நடையைப் போல கோணல் மானலானது ஆகும் . எனவே சகோதரா! அப்படிப்பட்டவருடைய நட்பை விட்டு விலகுவதே நமக்கு நன்மை பயக்கும்.

* सेवक सठ नृप कृपन कुनारी। कपटी मित्र सूल सम चारी॥

முட்டாளான வேலைக்காரன், கருமியான அரசன், நடத்தை கேட்ட பெண்மணி, கபடம் நிறைந்த நண்பன், ஆகிய இந்நால்வரும் சூலத்தைப் போல வேதனை தரக்கூடியவர்கள்.

இதே கருத்து பிரச்தாவ் ரத்னாகர் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது

“अविधेया भृत्यजना: शठानि

मित्राण्यदयायक: स्वामी। अविनयवती च भार्या मस्तकशूलानि चत्वारि॥’ (

சாணக்ய நீதியிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது

दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ।

ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥5ll

தீய மனைவி, தவறான தோழன், கீழ்ப்படியாத வேலைக்காரன் மற்றும் பாம்புடன் தங்கி இருப்பது மரணத்திற்குச் சமம்..இப்படி எல்லா நூல்களிலும் இந்தக் கருத்து வலியுறுத்தப் படுவதால், இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

सखा सोच त्यागहु बल मोरें। सब बिधि घटब काज मैं तोरें॥5॥

“எனவே தோழனே! என் வலிமையின் மீது நம்பிக்கை வைத்து உன் கவலையை விட்டு விடு. நான் எல்லாவிதத்திலும் உனக்கு உதவியாக இருப்பேன்” என்றான் இராமன்.

***

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 2 (Post No.16,333)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,333

Date uploaded in London – 23 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non-commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 2

ச. நாகராஜன்

ஸ்லோகம் 16

இதனுடைய ஒரு நாமத்திற்கு இருக்கக்கூடிய பாவத்தைப் போக்கும் சக்திக்குப் போதுமான பாவம் செய்ய பதினான்கு லோகங்களாலும் முடியாது.

ஸ்லோகம் 17

எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தைத் தவிர்த்து (வேறு உபாயத்தினால்) பாவத்தைப் போக்கடிக்க விரும்புகிறானோ, அவன் குளிர் நீக்குவதற்காக பனிக்கட்டி மலையை அடைவது போல் இருக்கிறான்.

ஸ்லோகம் 18

எந்த பக்தனானவன் இந்த நாம சஹஸ்ரத்தை தினந்தோறும் கீர்த்தனம் பண்ணுகிறானோ அவனிடம் ஶ்ரீ லலிதாதேவியானவள் சந்தோஷமடைந்து அவன் விரும்பியவற்றையெல்லாம் கொடூக்கிறாள்.

ஸ்லோகம் 19

இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லாமல் ஒருவன் எப்படி பக்தனாக ஆகக் கூடும்!

ஸ்லோகம் 20, 21

தினமும் கீர்த்தனம் செய்ய முடியாதவன் புண்ய தினங்களிலும், சங்க்ராந்தியிலும், விஷுவிலும், ஜன்மத்ரிதமாகிற மூன்று தினங்களிலும், அயனங்களிலும், சுக்ல பக்ஷத்திய நவமி, சதுர்தசி திதிகளிலும், சுக்ரவாரத்திலும், இவைகளிலாவது கீர்த்தனம் செய்ய வேண்டும்.

(விஷூ என்பது மேஷ ராசி, துலா ராசிகளில் சூர்யன் பிரவேசிக்கும் தினங்களாகும்.

ஜன்ம த்ரிதம் என்பது தன்னுடையதும், தனது மனைவியுடையதும், தனது புத்திரனுடையதுமான ஜன்ம நட்சத்திரங்கள் உள்ள தினங்களைக் குறிக்கும்.

அயனம் என்பது சூரியன் கடகராசி, மகரராசி ஆகியவற்றில் பிரவேசிக்கும் தினங்களாகும்.)

ஸ்லோகம் 22

பௌர்ணமாஸ்யையில் சந்திர பிம்பத்தில் ஶ்ரீ லலிதாம்பிகையை தியானம் செய்து, பஞ்சோபசாரங்களால் பூஜித்து, இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்ய வேண்டும்.

(பௌர்ணமாஸ்யா என்பது சுக்லபக்ஷத்திய கடைசி ராத்திரியைக் குறிக்கும்.

சந்திர பிம்பம் என்பது சந்திரனுடைய பூர்ணமான மண்டலம். அப்போது அதில் வளர்வு, குறைவு இருக்காது)

பஞ்ச உபசாரம் என்பது கந்த, புஷ்ப, தூப, தீப, நைவேத்தியங்களான ஐந்து உபசாரங்களாகும்.)

ஸ்லோகம் 23

அதனால் சகல ரோகங்களும் நசித்துப் போகின்றன. தீர்க்கமான ஆயுளும் பெறுவான். ”ஆயுஷ்கரம்” என்ற பெயருடைய இந்த ப்ரயோகமானது கல்பசூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்லோகம் 24

ஜுரத்தினால் பீடிக்கப்பட்டவனுடைய தலையில் கையை வைத்துக் கொண்டு இந்த சஹஸ்ரநாமத்தைச் சொன்னால், அந்த க்ஷணத்திலேயே ஜுரமும் (அதனாலுண்டான) தலைவலியும் போய்விடும்.

ஸ்லோகம் 25

சகல வியாதிகளையும் போக்குவதற்காக விபூதியைத் தொட்டுக் கொண்டு இதை (இந்த நாம சஹஸ்ரத்தை) கீர்த்தனம் செய்ய வேண்டும். அந்த பஸ்மத்தைத் தரிப்பதினாலேயே வியாதிகளெல்லாம் ஒரு க்ஷணத்தில் போய்விடும்.

ஸ்லோகம் 26

குடத்திலிருக்கும் ஜலத்தை இந்த நாம சஹஸ்ரத்தினால் மந்த்ரிதமாகச் செய்து, ‘ஹே, முனே! கிரகங்களில் வசப்பட்டவர்களின் மிது (அதை அபிஷேகம் செய்ய வேண்டும். அந்த க்ஷணத்திலேயே கிரகங்கள் நாசமடைந்து விடும்.

(மந்த்ரிதம் என்பது கும்பத்தின் வாயின் மேல் கையை வைத்துக் கொண்டு நாமங்களடங்கிய பாகத்தைச் செய்ய வேண்டும் என்பதாகும்.)

ஸ்லோகம் 27

ஶ்ரீ லலிதாம்பிகையை சுதா சமுத்ரத்தின் நடுவிலிருப்பவளாகத் தியானித்து எவனொருவன் இந்த நாம சஹஸ்ரத்தை கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய (அவனைப் பீடிக்கும்) விஷமானது நாசமடைகிறது.

ஸ்லோகம் 28

மலடாயிருப்பவர்களுக்கு (குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு) குழந்தை பிறப்பதற்காக இந்த நாம சஹஸ்ரத்தால் மந்த்ரிதமான வெண்ணெயைக் கொடுத்தால் கட்டாயம் புத்ர லாபம் ஏற்படும்.

ஸ்லோகம் 29

இரவில் (சாதகன் ஒருவன்) தனக்கு இஷ்டப்பட்ட பெண்ணை தேவியினுடைய பாசத்தினால் நன்கு கட்டப்பட்டவளாகவும், (தேவியினுடைய) அங்குசத்தினால் இழுக்கப்பட்டவளாகவும், தியானித்து இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்ய வேண்டும்.

ஸ்லோகம் 30

அப்போது, அந்தப் பெண்ணானவள் அந்தப்புரத்திலிருந்தாலும் தன்னுடைய உபாசகனுடைய அருகில் வருவாள்.

ஸ்லோகம் 31

ராஜாவை ஆகர்ஷணம் (தன்னிடம் இழுத்து வசப்படுத்துவது) செய்ய விரும்பினால் அந்த ராஜா இருக்குமிடத்தின் திக்கை நோக்கி ஶ்ரீ தேவியின் தியானத்தில் ஈடுபட்டு, மூன்று ராத்திரி இதை எவனாவது கீர்த்தனம் செய்வானேயாகில்,

ஸ்லோகம் 32

அந்த ராஜா இவனுக்கு வசப்பட்டு குதிரை மீதோ, யானை மீதோ ஏறிக்கொண்டு அருகில் வந்து தாசன் போல வணங்கி தன்னுடைய ராஜ்யத்தையும், பொக்கிஷத்தையும் கொடுத்தே தீருவான். இதில் சந்தேகமில்லை.

***                     தொடரும்

கம்ப ராமாயணத்தில் 160 கேள்விகள் (Post No.16,332)

Written by London Swaminathan

Post No. 16,332

Date uploaded in London – 22 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இதற்கு முன்னர் வெளியிட்ட 150 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

சீதையைப் பார்த்த சூர்ப்பணகை, அவளைக் கற்பின் கனலி என்று மனதில் நினைத்து, வெளிப்படையாக ராமனிடம் சீதை ஒரு அரக்கி உன்னிடம் மாயத்தோற்றத்துடன் வந்திருக்கிறாள் என்றாள். ராமன் அதைக்கேட்டு நகைத்தான்

151

சீதையைப் பார்த்து சூர்ப்பணகை என்ன சொன்னாள்?

152

ராமனும் சீதையும் பர்ணசாலைக்குள் சென்ற பின்னர் சீதை தனியே வெளியே வந்தாள்; சூர்ப்பணகை  அவளைப்பிடிக்க வந்த போது லட்சுமணன்  என்ன செய்தான்?

153

பேடிப்பயல்கள் அசுரர்கள் ; அவர்களை ஒழிக்க யாம் வந்துள்ளோம்; ஓடிப்போடி , சூர்ப்பணகை! என்ற பாட்டின் பொருள் என்ன ?

154

மூக்கறுபட்ட பின்னரும் என் மூக்கை வளர்த்துக் கொள்வேன்; என்னை ஏற்றுக்கொள்; நீ பிரம்மா விஷ்ணு சிவன் இந்திரன் ஆகியோரின் ஒட்டுமொத்த வடிவம் என்று சூர்ப்பணகை இராமனைப் புகழந்த அழகு என்ன ?

155

புலிக்குட்டி பற்றிய பழமொழியை சூர்ப்பணகை  சொன்னது ஏன் ?

156

எவ்வளவு சொல்லியும் ராமன்,  சூர்ப்பணகையின் காதல் வலையில் சிக்காதபோது , யமனை அழைத்துக்கொண்டு வந்து உனக்கு முடிவு கட்டுகிறேன் என்று சூளுரைத்தாள்; யார் அந்த யமன்?

157

கரனிடம் மூக்கறுபட்டகதையைச் சொல்லி, சூர்ப்பணகை அழுது புரண்டவுடன் அவன் 14 வீரர்களை அனுப்பவே ராமன் அவர்களுடைய 28 கைகளை துண்டித்த பாடலைக் காண்போமா ?

158

வள்ளுவன் ஒரு குறளில் 70 கோடிப் பேரைக் குறிப்பிடுகிறன் ; அப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகையே லட்சக்கணணக்கில்தான் ! ரிக் வேதத்தில் இந்திரன் கொன்ற அசுரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துதியிலும்  லட்சக் கணக்கில் உள்ளது !  நான் என்ன சளைத்தவனா ? வள்ளுவனுக்கு இளைத்தவனா? என்று கம்பன் சொல்லும் வியப்புறும் படைக் கணக்கு என்ன ?

159

ராமாயணம் முழுதும், அரக்கர்கள் நினைத்த உருவினை எடுக்க வல்லவர்கள் என்ற செய்தி வருகிறது. முன் பகுதியில் சூர்ப்பனகை , பேரழகி ரூபத்தில் வந்தவுடன் ராமனே அவளை ஏ சுந்தரி ( ஹலோ பியூட்டி ) என்று அழைத்ததைக் கண்டோம் ; கரனுடைய படைகள் என்ன என்ன மாஸ்க்/  முகமூடி  அணிந்து வந்தனர் ?

160

கர தூஷணர்களின் படை ராமர் இருக்கும்  இடத்துக்கு வந்தபோது, வெகுண்டு எழுந்த லெட்சுமணனிடம் ராமன் சொன்னது என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

151.     ஆயிடை, அமுதின் வந்த, அருந்ததிக்

கற்பின் அம் சொல்

வேய் இடை தோளினாளும், வீரனைச்

சேரும் வேலை,

‘நீ இடை வந்தது என்னை? நிருதர்தம்

பாவை!’ என்னா,

காய் எரி அனைய கள்ள

உள்ளத்தாள் கதித்த லோடும்.

அந்த நேரத்தில்,  தேவரமுது போல, அருந்ததிபோல வந்த

சீதை இராமனை அணுகும் போது, அரக்கர் பெண்ணே! எங்களுக்கு

இடையில் நீ குறுக்கிட்டது ஏன்? என்று கூறி தீப் போன்ற

வஞ்சக எண்ணத்தாளாம் சூர்ப்பணகை சினந்து வேகமாக வந்ததும் ராமன் கோபமுற்றான்

**********************************

152.நில் அடீஇ’ என, கடுகினன்,

பெண் என நினைத்தான்;

வில் எடாது அவள் வயங்கு எரி

ஆம் என விரிந்த

சில் வல் ஓதியைச் செங் கையில்

திருகுறப் பற்றி,

ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி

கிளர் சுற்று-வாள் உருவி,

     சூர்ப்பணகை சீதையைப் பின் தொடரும் நோக்கத்தை அறிந்த

இலக்குவனின் சினம் பொங்க ‘நில் அடீ இ’ என அவளைத் தடுத்தான். அவள் கூந்தளைப் பி டித்துக்கொண்டு வாளை உருவினான்…………..

ஊக்கித் தாங்கி, விண் படர்வென்

என்று உருத்து எழுவாளை,

நூக்கி, நொய்தினில், ‘வெய்து

இழையேல்’ என நுவலா,

மூக்கும், காதும், வெம் முரண்

முலைக் கண்களும், முறையால

போக்கி, போக்கிய சினத்தொடும்,

புரி குழல் விட்டான்.

சீதையைத் தூக்கிக் கொண்டு செல்வேன் என்று

கோபித்து மேற்கிளம்பிய சூர்ப்பணகையை –

(இலக்குவன்) எளிதில் கீழே தள்ளி –

கொடுந்தொழிலைச் செய்யாதே என்று கூறி

மூக்கையும் காதுகளையும்

கொடிய வலிய முலைக் காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாய்

அறுத்தெறிந்து – சினத்தை

விட்டு முறுக்கிப் பிடித்த அவள் கூந்தலையும் விட்டான்.

மூக்கும் காதும் அறுத்தது அவளுக்கு அவலட்சணம்

உண்டாக்குதற்காம். முலையை அறுத்தது அவள் பெண்மை நலம்

சிதைத்தற்காம்

***************************

153.’பேடிப் போர் வல் அரக்கர்

பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்

தேடிப் போந்தனம்; இன்று,

தீ மாற்றம் சில விளம்பி,

வீடிப் போகாதே; இம்

மெய் வனத்தை விட்டு அகல

ஓடிப் போ’ என்று உரைத்த

உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்:

(சூர்ப்பணகை சொற்களைக் கேட்டு இராமன்)

பேடித் தன்மையுள்ள மாயப் போர்கள் செய்வதில் வல்ல இராக்கதர்களின் பெரிய குலத்தை முற்றிலும் அழிக்க அவர்களைத் தேடி இங்கு வந்தோம்; இப்போது தீய சொற்களில் சிலவற்றைக் கூறி அழிந்து போகாதே;  – இந்தக் காட்டிலிருந்து ஓடிப் போ;  எனக் கூறிய சொற்களைச் சொன்ன இராமனிடம்

சூர்ப்பணகை கூறலானாள்……………………………

******************************

154.     ‘சிவனும், மலர்த் திசைமுகனும்;

திருமாலும், தெறு குலிசத்து-

அவனும், அடுத்து ஒன்றாகி

நின்றன்ன உருவோனே!

புவனம் அனைத்தையும், ஒரு தன்

பூங் கணையால் உயிர் வாங்கும்

அவனும், உனக்கு இளையானோ?

இவனேபோல் அருள் இலனால்.

சிவபெருமானும்,  தாமரை மலர்

மீது இருக்கும் பிரமனும்,  மகாவிட்டுணுவும்; தெறு  பகைவரை அழிக்கும் வச்சிரப் படையுடைய இந்திரனும்; சேர்ந்து ஒன்றாகி நின்றது போன்ற அழகிய உருவம் உடையவனே!உலகங்கள்

எல்லாவற்றையும் ஒப்பற்ற தன் மலர் அம்புகளால் எல்லா உயிர்களையும் வருத்தும் அம் மன்மதனும் உன் தம்பி இலக்குவனைப் போல இரக்கமற்றவனாய்

இருப்பதால் அவனும் உனக்குத் தம்பியோ?

( இராமனைப் பாராட்டிவிட்டு  இலக்குவனின் குறையைக் கூறுகின்றாள்).

****************************

155. தன்னைப் புலிக்குட்டியாகவும் ராவணனைப் புலியாகவும் உருவகித்துக்கொண்டு சூர்ப்பனகை கதறினாள ; புலி பக்கத்தில் குட்டி இருந்தால், அதற்கு எந்த ஆபத்தும் வராது என்று உலகில் ஒரு பமொழி உண்டே ! அது பொய்யாகிப் போய்விட்டதே! கற்ப முடிவிலும் ஆற்றல் தளராத மும் மூர்த்திகளுக்கும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் மேலான  வலிமை கொண்ட இராவணனே! நான் அடைந்த கொடும் துன்பத்தைப் பார்க்க வரமாட்டாயா? என்றாள் .

“புலிதானே புறத்து ஆக, குட்டி

கோட்படாது” என்ன,

ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை

பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,

தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி

காண வாராயோ?

****************************

156.ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும்,

முலை இரண்டும், இழந்தும், வாழ

ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள

பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?

காற்றினிலும் கனலினிலும் கடியானை,

கொடியானை, கரனை, உங்கள்

கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்’

என்று, சலம்கொண்டு போனாள்.

என் அழகுக்குப் பொருத்தமாயிருந்த மூக்கும் இரண்டு செவிகளும் இரு கொங்கைகளும் அறுக்கப் பெற்றும் உயிரோடு வாழ்வதைப் பொறுத்து இருப்பேனோ (மாட்டேன்);கபடமாய் (ஆதலால்) காற்றையும் தீயையும் விட ஆற்றலுடையானை, கொடியவனை,கரன் எனும் பெயருடையவனை, உங்களை அழிக்கும் யமனை இக்கணத்தே கூட்டி வருகிறேன்எனக் கூறித் தணியாத கோபத்துடன்  சென்றாள்.

இப்படலம் முழுதும் ‘கம்ப நாடகம்‘ என்ற பெயர்க்கு ஏற்பப் பொருத்தமான உரையாடல்கள் உடையது .

*********************

157.     மழுவும், வாளும், வயங்கு

ஒளி முச் சிகைக்

கழுவும், கால வெந் தீ

அன்ன காட்சியார்,

எழுவின் நீள் தடக்

கை எழு நான்கையும்,

தழுவும் வாளிகளால், தலம்

சார்த் தினான்.

கொடிய ஊழிக் காலத்துத் தீயைப் போன்ற;

தோற்றத்தையுடையவர்களாகிய அந்த அரக்கர்களின்;

மழுவென்னும் ஆயுதத்தையும்; வாள்களையும்;

முத்தலைகளையுடைய சூலங்களையும்;

(இவ்வாறான படைக்கலங்களை ஏந்திய) – தூண்களைப்

போன்று நீண்ட பெரிய கைகள் இருபத்தெட்டையும்

குறி தவறாமல் தாக்கும் அம்புகளால்; துணித்துத்

தரையில் வீழ்த்தினான்.

****************************

158.ஆறினோடு ஆயிரம்

அமைந்த ஆயிரம்

கூறின ஒரு படை;

குறித்த அப் படை

ஏறின ஏழினது

இரட்டி என்பரால்-

ஊறின சேனையின்

தொகுதி உன்னுவார்.

படையின் தொகையை எண்ணிக் கணக்கிடுபவர் சேனைகளுள் ஒரு சேனை அறுபது இலட்சமாகும்; அவ்வாறு கணக்கிடப்பட்ட அந்தப் படைகளின், ஏழின் இரு மடங்காகப் பெருக்கப்பட்ட பதினான்காகும்; என்று கூறுவர். (அங்குப் போருக்கு வந்த படை ஒன்றுக்கு அறுபது

இலட்சம் கொண்ட பதினான்கு படைகள் இருந்தன) !!.

***********************

159.‘குஞ்சரம், குதிரை, பேய்,

குரங்கு, கோள்அரி,

வெஞ் சினக் கரடி, நாய்,

வேங்கை, யாளி’ என்று,

அஞ்சுற, கனல் புரை

முகத்தர்; ஆர்கலி

நஞ்சு தொக்கெனப்

புரை நயனத்தார்களும்-

யானை, குதிரைகள், பேய்கள்,குரங்குகள்,சிங்கம், கொடிய  கரடி, நாய்கள், புலிகள் ,யாளிகள் என்னும்  முகவடிவங்களாக (காண்பவர்)

அஞ்சும்படி,நெருப்பைப் போன்ற முகத்தையுடையவர்களாகி

பாற்கடலில் தோன்றிய நஞ்சு திரண்டது போல விளங்கும் கண்களையுடையவர்களாக வந்தனர்.

***********************

160.இலக்குவனைத் தடுத்து இராமன் போருக்கு எழுதல்

2934.  மின் நின்ற சிலையன், வீரக்

கவசத்தன், விசித்த வாளன்,

பொன் நின்ற வடிம்பின் வாளிப்

புட்டிலன், புகையும் நெஞ்சன்,

‘நில்; நின்று காண்டி, யான் செய்

நிலை’ என விரும்பி நேரா

முன் நின்ற பின் வந்தோனை

நோக்கினன், மொழியலுற்றான்:

மின்னல் போன்று ஒளி பொருந்திய வில்லைத் தாங்கியவனும், அழியாத வலிமை வாய்ந்த

கவசத்தையுடையவனும்(இடையில்) கட்டிய

உடைவாளையுடையவனும் அழகு பொருந்திய நுனியுள்ள அம்புகளைக் கொண்ட அம்பறாத்

தூணியையுடையவனும் கோபத் தீ மூண்ட

மனமுடையவனுமாய் (இராமனை நோக்கி ‘நில் – (போர் தொடங்காது) நில்;  (அப்படி) நின்று, நான் செய்யக் கூடிய

போரின் திறமையை; காண்பாய் என்று சொல்லி;

(போர் செய்ய) விருப்பங் கொண்டு;  போருக்கு ஆயத்தமாகி; (தனக்கு) முன்னே வந்து நின்ற தம்பியான இலக்குவனை பார்த்து

(இராமன்) சொல்லத் தொடங்கினான்………………………………. தொடரும்

TAGS – சீதை,சூர்ப்பணகை, கற்பின் கனலி,  மூக்கறுபட்ட படலம் , கரன், கம்ப ராமாயணம்,  160 கேள்விகள்