சூரியனார் கோவில்! ஆலயம் அறிவோம்! (Post No.9154)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9154

Date uploaded in London – –17 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 17-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“ஓம் ஜபா குஸும சங்காஸம் காஸ்யபேயம் மஹாத்யுதிம் |

தமோரிம் ஸர்வபாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் ||

செம்பருத்தி பூவின் நிறம் உடையவன். காஸ்யபரின் புதல்வன். மிகவும் ப்ரகாசம் உடையவன். இருட்டின் பகைவன். எல்லா பாவங்களையும் அழிப்பவன். அந்த சூரியனை நமஸ்கரிக்கிறேன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  சூரிய தேவன், உஷாதேவி, பிரத்யுஷாதேவியுடன் வீற்றிருக்கும் புகழ் பெற்ற தலமான சூரியனார் கோவில்.  சென்னையிலிலிருந்து இது 312 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் ஆடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்னும் முனிவர் தனக்கு குஷ்ட நோய் வரப்போவதை உணர்ந்து நன்மை தீமைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது நவ கிரஹங்களே என்பதால் நவ கிரஹங்களைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். தவத்திற்கு இரங்கி நவ கிரஹங்களும் முனிவர் முன் தோன்ற, முனிவர் தனது குறையைக் கூறி தொழு நோய் வராமல் தன்னைக் காக்க வேண்டினார்.  நவகிரஹங்களும் அவருக்கு தொழுநோய் அணுகாத வண்ணம் வரம் அளித்தனர். இதை அறிந்த பிரம்மதேவன், காலதேவனின் துணை கொண்டு அனைத்து உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களைக் கொடுக்காமல், இப்படி வரம் அளித்தது தவறு என்றும் கூறி, முனிவரது தொழுநோய், நவகிரஹங்களுக்குப் பிடிக்குமாறு சாபம் அளித்தார்.

நவகிரஹங்களும் அவரது அருள் வேண்ட, அவர் கூறிய படியே காவிரியின் வடகரையில் அமைந்துள்ள அர்க்கவனம் என்னும் வெள்ளெருக்கு வனத்தை அடைந்து மும்மூர்த்திகளை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். மனம் மகிழ்ந்த மஹேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி தொழுநோய்  நீங்குமாறு அருள் புரிந்தார். ‘இன்று முதல் இந்தத் தலம் உங்களது தலமாக விளங்கட்டும்’, என்றும் அருள் பாலித்தார்.

அன்று முதல் சிவபிரானது சூலத்தால் தோற்றுவிக்கப்பட்ட சூரிய புஷ்கரணி உள்ளிட்ட நவ தீர்த்தங்களில் நீராடி வழிபடுவோருக்கு நவகிரஹங்களின் அனுக்ரஹம் உண்டாகிறது என்கிறது சூரியனார் கோவிலின் தல புராணம்.

சூரியனின் எதிரே அவரது உக்கிரத்தைத் தணிக்கும் வண்ணம் குரு பகவான் இருக்க அவரையும் வணங்கும் பாக்யத்தைப் பக்தர்கள் பெறுகின்றனர். குருபகவானுக்கு முன்னே வலப்புறமுள்ள படிகளின் வழியே வந்து சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகியோரையும் வணங்கி அவர்களின் அருளையும் பக்தர்கள் பெறுகின்றனர்.

இங்குள்ள நவகிரஹங்கள் ஆயுதமும் வாகனமும் இல்லாமல் இரண்டு கரங்களுடன் சாந்தமான, புன்னகை தவழும் முகத்துடன் அனுக்ரஹ மூர்த்திகளாகக் காட்சி அளிப்பதைப் பார்க்கலாம்.

இங்கு சூரியனை வலம் வருபவர்கள் அப்ரதக்ஷிணமாகவே வலம் வருகின்றனர். அதே முறையில் தான் நவ கிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்கு சூரியனை வழிபட்டு அவன் அருள் பெற்றோரில், நள மஹாராஜன், பரீட்சித் மஹாராஜன், சித்திராங்கத பாண்டியன், புரூரவசு, சோமசன்மன், இந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் அடங்குவர்.

சிவபிரானின் அருளால் இங்குள்ள நவகிரஹங்களும், பரிவார தேவதைகளாக இல்லாமல், முதன்மை தேவதைகளாக இருப்பது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இங்குள்ள மூலவரான சூரிய பகவான் அமைக்கப்பட்டுள்ள விதம் அறிவியல் வியக்கும் ஒன்றாகும். வானவியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, சூரியன் கிழக்கே தோன்றி வடக்கு நோக்கிச் செல்லும் உத்தராயண காலத்திலும், தெற்கு நோக்கிச் செல்லும் தட்சிணாயன காலத்திலும் ஆண்டுக்கு இரு முறை மூன்று மூன்று நாட்கள் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் இக்கோயிலின் மூலவரின் பாதங்களில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

தென்னகத்தில் சூரியனுக்காக உள்ள தனிக்கோயில் இது ஒன்று தான். ஒரே கோயிலுக்குள் நவகிரஹங்களுக்கு தனித் தனிக் கோயில்கள் கொண்டுள்ள  தலமும் இது தான். சூரியனை வழிபடும் போதே குருபகவானையும் வழிபட வைக்கும் தலமும் இது தான். இரு அசுப கிரஹங்களுக்கு இடையே ஒரு சுப கிரஹம் என்ற முறைப்படி அமைக்கப்பட்டுள்ள அதிசய தலமும் இது தான்.

நவகிரஹங்களும் ஒன்று சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து தங்கள் தோஷங்களை நீக்கிக் கொண்ட தலமும் இது தான். பக்தர்களுக்கு களத்திர தோஷம், பிரதிபந்த தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களையும் நீக்கும் அற்புத தலம் இது. தோல் வியாதிகள், குஷ்டம் உள்ளிட்ட கொடூரமான வியாதிகள் அனைத்தும் போக பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு அவை நீங்கப் பெறுவது அனுபவபூர்வமான உண்மையாகும்.

கோள்வினை தீர்த்த விநாயகருக்கு முன்னே நர்த்தன மண்டபமும், இதற்கு கிழக்கே உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சபாநாயகர் மண்டபமும், இதற்குக் கிழக்கே காசி விஸ்வநாதர் – விசாலாட்சி எழுந்தருளியுள்ள ஸ்தபன மண்டபமும், இதற்குக் கிழக்கே குரு பகவான் எழுந்தருளியுள்ள மஹா மண்டபமும் உள்ளன. தல விருக்ஷம் வெள்ளெருக்குச் செடியாகும்.

காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வணங்கி வழிபட்டும் வரும் சூரிய தேவன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். வேதத்தில் சூரிய பிரார்த்தனையாக உள்ள மந்திரங்கள் இவை:   பஸ்யேம சரதஸ் ஸதம். சூரிய மண்டலத்தை நூறாண்டுகள் கண்டு வணங்குவோம்.ஜீவேம சரதஸ் ஸதம். அவ்வண்ணமே நூறாண்டு வாழ்வோம். நந்தாம சரதஸ் ஸதம். நூறாண்டு உற்றார் உறவினர்களுடன் கூடிக் குலாவி வாழ்வோம். மோதாம சரதஸ் ஸதம். நூறாண்டு மகிழ்வோம். பவாம சரதஸ் ஸதம்.  நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம். ஸ்ருணவாம சரதஸ் ஸதம். நூறாண்டு இனியதைக் கேட்போம். ப்ரப்ரவாம சரதஸ் ஸதம். நூறாண்டு இனியதையே பேசுவோம். அஜீதாஸ்யாம சரதஸ் ஸதம். நூறாண்டுகளும் தீமைகளால் ஜெயிக்கப்படாதவர்களாகவே வாழ்வோம். ஜ்யோக்ஸ ஸூர்யம் த்ருசே. இவ்வாறாக, நீண்ட காலம் சூரிய தேவனைப் பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகிறோம். நன்றி வணக்கம்.

tags– சூரியனார் கோவில்!

நகைச் சுவைத் துணுக்குகள் வாழ்க (Post No.9153)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9153

Date uploaded in London – – 17 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சென்னை கற்றுக்குட்டி 50 , 60 ஆண்டுகளாக சேர்த்து வைத்த நகைச் சுவைத்துணுக்குகளை தொடர்ந்து ரசிப்போம்.

tags – நகைச் சுவை, துணுக்கு

என்னே விதியின் கொடுமை! (Post No.9152)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9152

Date uploaded in London – –17 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்னே விதியின் கொடுமை!

ச.நாகராஜன்

இதோ சில சுபாஷிதங்கள்; அப்படியே நடைமுறை உண்மைகளை விளக்கும் அற்புதங்களாக அமைகின்றன!

என்னே விதியின் கொடுமை!

ய: சுந்தரஸ்தத்வினிதா குரூபா யா சுந்தரி ஸா பதிரூபஹீனா |

யத்ரோபயம் யத்ர தரித்ரதா ச விதேர்விசித்ரானி விசேஷ்டிதானி ||

எவன் ஒருவன் அழகாக இருக்கிறானோ அவனுக்கு அவலக்ஷணமான மனைவி வாய்க்கிறாள்; எவள் ஒருத்தி அழகியாக இருக்கிறாளோ அவளுக்கு அவலக்ஷணமான புருஷன் வாய்க்கிறான். இருவருமே சரிசமமாக இருந்தால் அவர்கள் ஏழைகளாகக் காணப்படுகிறார்கள்! விதியின் விளையாட்டு எப்படி இருக்கிறது, பாருங்கள்!

He who is beautiful has a wife with an ugly form; She who has a beautiful form has an ugly husband; where both qualities are equal they are seen to be poor; see how different are the designs of fate.

                                                                                  (Translation by Dr N.P.Unni)

*

ஏழை சொல் அம்பலம் ஏறாது!

ஹேதுப்ரமாணயுக்தம் வாக்யம் ந ச்ரூயதே தரித்ரஸ்ய |

அப்யதிபருஷமஸத்யம் பூஜ்யம் வாக்யம் சம்ருத்தஸ்ய ||

அதிகாரபூர்வமானதாகவும் முறையானதாகவும் இருந்தாலும் கூட ஒரு ஏழையின் சொல்லை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் முறையற்ற, உண்மையல்லாத வாக்கியங்களை ஒரு பணக்காரன் கூறினால் அது மிகுந்த மதிப்புடன் வரவேற்கப்படுகிறது!

One does not lend one’s ear to the words of a poor man though they are properly authoritative, whereas coarse, untruthful words of the rich are considered with great merit.

                                                                        (Translation by Dr N.P.Unni)

*

கொடுத்தவனே கோமான்!

விதரதி யாவத்தாதா தாவத்ஸகலோபி கலபாஷீ |

விரதே பயஸி தனேப்ய: ஷாம்யந்தி சிகண்டினாம் த்வன்ய: ||

சலுகைகளை ஒருவன் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில் தான் அவன் மதிப்புமிக்க மொழிகளால் புகழப்படுகிறான். மேகங்களிலிருந்து மழை பொழிவது நின்று விட்டால் மயிலின் ஓசை நின்று விடுகிறது!

As long as one distributes favours one is praised in laudable terms. Once the rains from the clouds are stopped the sounds of peacock come to an end.

                                                                              (Translation by Dr N.P.Unni)

*

பத்தாயிரத்தில் ஒருவனடா நீ!

சதேஷு ஜாயதே சூர: சஹஸ்ரேஷு ச பண்டித: |

வக்தா தச சஹஸ்ரேஷு தாதா பவதி வா ந வா ||

நூற்றில் ஒருவனே சூரனாக இருக்கிறான்; ஆயிரத்தில் ஒருவனே பண்டிதனாக இருக்கிறான்; பத்தாயிரத்தில் ஒருவனே தானங்களைக் கொடுப்பவனாக இருப்பானோ, மாட்டானோ!

One among hundred becomes a brave man: one among a thousand become a scholar and a spokesman in ten thousand may be there or not as also a giver of gift.

                                                                                 (Translation by Dr N.P.Unni)

***

tags-  விதி,  கொடுமை

PLEASE JOIN US TODAY SUNDAY 17-1-2021

THAMIZ MUZAKKAM / TAMIL THUNDER

17TH  JANUARY 2021 SUNDAY

Vaalka thamil mozi – signature tune

Prayer+ ANNOUCEMENT –

WORLD HINDU NEWS ROUNDUP in English and Tamil –

BY MRS SUJATHA RENGANATHAN &

MRS VAISHNAVI ANAND

Mrs Brhannayaki Sathyanarayanan  – Talk on Temples –

TIRUPPUGAZ  by Mrs Jayanthi Sundar and Group–

B Kannan from Delhi on Tiruvalluvar Temple, Mylapore –

INTRODUCED BY BENGALOR NAGARAJAN

TIRUPPAVAI- Netru swargam- BY LAKSHMI RAMASWAMY-

Pongal song by MRS DAYA NARAYANAN OF LONDON-

Vaazka Thamil Mozi  SONG

Appr. 60 mts

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS– PUBLICITY 17121

குழந்தை பெறுவதைவிட 3 முறை போர்க்களம் செல்வேன் – கிரேக்க பெண் புலம்பல் (Post.9151)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9151

Date uploaded in London – –16 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரேக்க மொழி நாடகங்களில் பல சுவையான விஷயங்கள் வருகின்றன யூரிபிடிஸ் – கி.மு.431- என்பவர் சர்ச்சைக்குரிய பல செய்திகளை சொல்லுவார். அவர் எழுதிய ஒரு நாடகத்தின் பெயர் ‘மெடியா’ .

கொல்சிஸ் என்னும் இடத்திலிருந்து வந்த மெடியா (MEDEA) என்னும் சூன்யக்காரி கிரேக்க வீரன் ஜேசன் (JASON) மீது காதல் கொள்கிறாள். . பறக்கும் செம்மறி ஆட்டின் தங்கத் தோலை (GOLDEN FLEECE) கொண்டுவர அவனுக்கு உதவுகிறாள். கொரிந்த் (CORINTH) நகருக்கு வந்து குடும்ப வாழ்வு நடத்தி இரண்டு குழந்தைகளையும் பெறுகிறார்கள். இந்த கால கட்டத்தில் இருவரிடையே பிணக்கு ஏற்பட்டு விவாக ரத்தில் முடிகிறது.காரணம்

ஜேசன் கொரிந்தியன் மன்னன் க்ரினோனின்(CRENON)  மகள் கிளாஸைக் (GLAUCE) காதலித்து திருமணம் புரிகிறான்.

மெடியா விடுவாளா?

ஒரு திருமண ஆடை (WEDDING DRESS)  தைத்து அதை கிளாசுக்கு அனுப்புகிறாள். அது மணப்பெண்ணையும், காப்பாற்ற வந்த தந்தையையும் எரித்துக் கொன்று விடுகிறது ; ஜேசன் மூலம் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு பறக்கும் ரதத்தில் (FLYING CHARIOT) சிட்டாகப் பறந்து போய்விடுகிறாள்.

கிரேக்க (GREECE)  நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் நாடகப் போட்டியில் ‘மெடியா’ நாடகத்துக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது. நாடகத்துக்குப் பொருத்தமில்லாத, ஆனால் அக்காலத்தில் நிலவி வந்த சர்ச்சசைக்குரிய விஷயங்களை, அவர் கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார் . இதோ மெடியாவின் திருமணம் பற்றிய சூளுரை

“உயிர்வாழும்,சிந்திக்கும் படைத்த பிராணிகளில் பெண்களாகிய நாங்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். முதலாவது, நாங்கள் பெருந்தொகை கொடுத்து கணவனை வாங்க வேண்டியிருக்கிறது”.

(அந்தக் கால இந்தியா போல பெண்கள்தான் வரதட்சிணை கொடுக்க வேண்டும். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நாடகங்களிலும் இதைக் காண்கிறோம்.)

“எங்கள் உடல் மூலம்தான், கொடுங்கோல் மன்னன் போல, ஆண்களை ஆட்டிப் படைக்கமுடியும். மேலும் கிடைக்கும் ஆள்  நல்லவனா, கெட்டவனா என்றும் கண்டுபிடிக்க முடியாது.

விவாக ரத்தானது ஒரு பெண்ணுக்கு அவப் பெயரை ஈட்டித்தருகிறது. இதற்கிடையில் கணவனைப் புறக்கணிக்கவும் முடியாது. முன்பின் தெரியாத, அறியாத பழக்க வழக்கங்களுக்கு இடையே சிக்கும்போது, அவள் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவன் என்று அறிய முடியும் . வீட்டில் கிடைத்த அனுபவம் இங்கே பயன்தராது. . இதில் வெற்றி கிடைத்தால் , மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு எங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் .

வெற்றி பெறவில்லையானால், சாவதே மேல். மண வாழ்க்கையில் திருப்தி கிடைக்காத கணவமார்கள், வெளியே பொழுதைக் கழிப்பதன் மூலம் தங்கள் ஏமாற்ற உணர்வைக் காட்டுகிறார்கள். ஆனால் நாங்களோ ஒருத்திக்கு ஒருவனே என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதால் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

நாங்கள் வீட்டுக்குள் இருப்பதால், ஈட்டி வீசிப் போரிடும் ஆண்களைப் போல அவதிப்படுவதில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆண்கள் செப்புவர். அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் ! என்னைப் பொருத்த மட்டில், நான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதைவிட மூன்று முறை போர்க்களம் சென்று பகைவரைச் சந்திப்பேன்”.

இது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டு நாடகத்தில் ஒரு பெண்மணி பேசிய பேச்சு !

நல்ல வேளையாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் இந்தியாவில் உருவான நாடகங்களில் இப்படிப்பட்ட அவல  நிலை இல்லை. எல்லாம் சுப விஷயங்களே .

—subham —

tags — குழந்தை , போர்க்களம் , செல்வேன்,  கிரேக்க பெண்,  புலம்பல்

WOMAN IS “A” PROBLEM; PLEASE , DON’T MAKE IT ‘A’ AND ‘B’!(Post No.9150)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9150

Date uploaded in London – – 16 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SOME OF THE JOKES COLLECTED BY CHENNAI KATTUKUTY BEFORE 50 YEARS ARE POSTED HERE.

TAGS- COMEDY CARTOONS

நல்ல நல்ல ‘காமெடி’யை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி!(Post.9149)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9149

Date uploaded in London – – 16 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்த்து வைத்த , தமாஷ் கள் – ‘ஜோக்’ jokes குகளை எடுத்தபோது தூள்  தூளாக உதிர்ந்தது.  குப்பை டப்பாவுக்குள் போடுவதற்கு முன்னர் , கொஞ்சம் ‘பிளாக்’கிலும்  போட்டு விடுகிறேன்.

“அட , நீங்க ஒன்னு, குப்பைக் கூடையும் , ‘பிளாக்’குகளும் ஒண்ணுதான் சார்”– என்று சொல்லி விடாதீர்கள்.

நகைச் சுவைத் துணுக்குகளை பார்த்து ரசித்த பின்னர் உங்கள் எண்ணம் — தவறான எண்ணம்- பறந்தோடிப் போகும் .

நல்ல ‘காமெடி

நல்ல ஒரு ஆன்மீக ஆங்கில இதழ் இனி வராதா?(Post.9148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9148

Date uploaded in London – –16 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நல்ல ஒரு ஆன்மீக ஆங்கில இதழ் இனி வராதா?

ச.நாகராஜன்

இன்று (12-1-2021) மணி ஆர்டர் மூலமாக ரூ 140/ ரூ வந்தது. பெற்றேன் – வருத்தத்துடன்!

நான் ஆங்கில மாத ஆன்மீக இதழான கல்யாண கல்பதருவுக்கு (Kalyana-Kalpataru) வருடாந்திர சந்தாவாக அனுப்பி இருந்த தொகை திரும்பி வந்தது.ஏன்?

அந்த அருமையான பத்திரிகை இனி வராது.

அதன் செப்டம்பர் 2020 இதழில் கீழ்க்கண்ட அறிவிப்பு கடைசிப் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

For Kind Information to Respected Readers

With respect we are informing that ‘Kalyana-Kalpataru’ Annual Visesanka ‘Upasana Number’ for October 2020 is not going to be printed due to unavoidable circumstances and this ‘Anka’ will be available on-line free of charge on our website www.gitapress.org.

We will return amount receive from our respected customers agains Annual subscription and we request all our customers to note:

Plesae ‘DO NOT SEND SUBSCRIPTION’ towards ‘Kalyana-Kalpataru’/

We are pleased to inform that we are planning for ‘KALYAN’ monthly magazine in English.

We shall inform about new publication in future.

(The Management)

Date of Publication 1.9.2020

ஆக அருமையான ஒரு ஆன்மீக இதழ் நின்று விட்டது; ஆனால் ஆறுதலூட்டும் செய்தி மிக்க தரம் வாய்ந்த ஹிந்தி இதழான கல்யாண் இனி ஆங்கிலத்தில் வரப் போகிறது.

வரவேற்கிறோம் – ஆங்கில கல்யாணை!

65 வருடங்கள் பயணத்தைக் கடந்து வந்த எனது அருமை இதழான கல்யாண-கல்பதரு இதழை இனி பார்க்க முடியாது. இதயம் கனக்கிறது. என்றாலும் கல்யாண் என்ற மறு உருவில் வருவது இனிக்கிறது!

தமிழ் இதழ்கள் பல பக்கங்களில் சுருங்கி விட்டன – கொரானாவால்.

பாக்யா மாதம் இரு முறை இதழ் ஏப்ரல் 2020  முதல் வரவில்லை.

இன்னொரு வருந்தத் தக்க செய்தியையும் பார்க்க நேர்ந்தது. இனி கல்கி வார இதழை அச்சுப் பதிப்பாகப் பார்க்க முடியாது என்று. ஆனால் கல்கி இதழை டிஜிடலாகப் பார்க்கலாம்; படிக்கலாம்.

பழைய காலத்தில் சிவகாமியின் சபதம் (திரு கல்கி அவர்கள் எழுதிய தொடர் சரித்திர நாவல்) தொடர் வரும் போது கல்கியை வீட்டில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலில் படிக்க விரும்புவர்.

தில்லானா மோகனாம்பாள் (திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தொடர் நாவல்) ஆனந்த விகடன் வார இதழில் வந்த போது அதைப் படிக்க வீட்டில் கியூவரிசையில் நின்றதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இன்றோ யுகம் மாறி விட்டது; கணினிகள்; டிஜிடல் பதிப்புகள்; கிண்டில்.. இத்யாதி!

யூ டியூபில் YOU TUBE யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்கின்ற காலம் இது!

உண்மை எது; தரமானது எது என்பதை நிர்ணயிக்கக் கஷ்டப்படும் காலம் இது!

கலி காலம் என்று சொல்லலாமா? கணினி காலம் என்று சொல்லலாமா?

TAGS- கல்யாண-கல்பதரு

***

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 25 (Post 9147)

Elephant Vahana

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9147

Date uploaded in London – –15 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -25

Sutra 3-2-62

Baj – take part பஜ்

Baj becomes Bhag in towns பாக் ; கரோல் பாக் , லால் பாக்

Baj becomes Part Page in English

Baj becomes Paku /divide in Tamil

Pakuthi, pakkam/page are cognates

பகு , பகிர் , பகுதி, பக்கம்

Xxx

3-2-64

Vaah – lifting, carrying

Vaah becomes Vehicle ,Vaahanam 

Vahanam is used in all south Indian Hindu temples even today.

Vahanam used for vandi in Tamil

ALSO WAGON

வாஹ் – சுமந்து செல்

வாஹனம் /கோவில்களில்; வண்டி வாகனங்கள் செல்லக்கூடாது

Xxx

3-2-66

Havyavahana is fire god agni  in vedas

Havis is cooked rice

Sangam tamils used it as Avi

ஹவ்ய வாஹனன் – அக்கினி தேவன் = ஹவிஸ் சுமந்து செல்பவன்

ஹவிஸ் = சாதம் = அவி /தமிழ் இலக்கியத்தில்

Xxx

3-2-67

This Sutra is interesting because it sounds like the first line of Indian

National Anthem Jana Gana Mana…………….

ஜன கண மன போன்ற சூத்திரம்

The Sutra is Jana sana gana krama gama……………….

Jana is be born which gives several English words—general, generate,genealogy etc

Janani, Janiththal, janana , jataka are used in modern Tamil

ஜன, ஜன ங்கள் , ஜனனி, ஜெனரேட்டர் , ஜாதக ,ஜனன- மரண

Xxx

3-2-68

Anna is food in Indian languages

Anna is used Manna in the bible

அன்ன = உணவு; அன்ன  தானம்

பைபிளில் மன்னா ; வானத்தில் இருந்து வந்த அன்னம்

Xxx

3-2-71

Sweta – S/ white

Swetavahaah – indra in rig veda

ஸ்வேதா = வெள்ளை

ஸ்வேதாம்பரர் – வெள்ளாடை உடுத்தும் சமணர்

Xxx

3-2-69

Kravyada- meat eater, kravyad – meat eating animals

It is gravy – meat juice, fat juice in English

க்ரவ்யத – சமைத்த மாமிசம் உண்பவன்

க்ரவ்யத் – பசசை மாமிசம் உண்ணும் விலங்கு

Xxx

3-2-74

Keelaalabaah- drinking Amrit

Keelaala is used as geer or keer in

Baadaamgeer etc

கீலால – அமிர்தம்

ல= ர; கீல = கீர்

Xxxx

3-2-79

Ushtra/CAMEL/ LIP – ottakam, uthadu  in Tamil

உஷ்ட்ர = உதடு; உதடு தடித்த மிருகம் = ஒட்டகம்

Xxx

3-2-80

Vrata – used in all religious rituals throughout India.

Vrata – following certain restrictions for a period to fulfil a vow

விரதம் – இன்று வரை எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படும் சொல்

Xxx

POLY/GREEK= PALA/TAMIL- BAHULA/SANSKRITLDEST  REFERENCE)

3-2-81

Bahula – pala in Tamil;

Polus, Poloi in Greek

 Poly is the prefix for many words – polytechnic, polygon,

பல /தமிழ் , பாலி /கிரேக்க

Xxxx

3-2-82

Manah – mind, think

Because of thinking power man is called man, manushya, manitha

Mind is used in all Indian languages from ancient period

Sangam Tamil literature, Tirukkural have innumerable references

Man is the only animal to think and decide what is good and what is bad

மனம் – தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் உளது ; மேன் , மனிதன், மனுஷ்யன் என்பதே சிந்தித்து நல்லது, கெட்டதைப் பகுத்தறியும் திறத்தால் உண்டான சொல் தான்.

சங்க காலம் முதல் தமிழர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதத் சொல்; மைண்ட் /ஆங்கிலம்

xxx

3-2-86, 3-2-87

Maan and Vaan are used in sangam tamil literature

Eg. Athiyamaan; actually it is the tamil form of Sathyavaan.

Tolkappiyan bans sa as initial letter in words.

Vaan and maan mean one who possess, one who upholds

Asoka’s inscription says sathyaputrah

மான், வான் என்ற ஒட்டு தமிழிலும் உண்டு. அதியமான் என்பதே சத்தியவான் என்பதன் தமிழ் வடிவம்தான்

Xxx

3-2-89

Panini uses the words Paapa, Mantra, Punya is this  Sutra

All religious literature in all Indian languages retained these words until today and use them in today conversation Papa, Punya, Mantra etc.

For thousands of years Hindu religion has the same foundation.

பாப , புண்ய, மந்திர என்ற சொற்களை இன்றும் நாம் பேச்சிலும் எழுத்திலும் உபயோகப்படுத்துகிறோம். இந்தச் சொற்களை பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்திரத்தில் பயன்படுத்துகிறார்.

இந்து மதம் சநாதன மதம்; ஆ தி அந்தமற்றது

Xxx

3-2-90

Suu – juice ; squeeze to extract juice

ஸு – சூஸ் = சாறு

ஸ்க்விஸ் = பிழி

Soma means juice

சோம = ரசம்

Ja becomes sa in tamil

சூஸ் = ஜூஸ்

தமிழிலும் ஜ=ச மாற்றம் உண்டு.

ராஜேந்திரன்- ராசேந் திரன்

Rajendran = rasendran

Tamils invented Grantha lipi later

தமிழில் ஜ , ஷ முதலிய எழுத்து வரி வடிவங்கள் பிற்காலத்தில் வந்தவை .

Xxx

3-2-91

Agni – fire= vanni in tamil

Ignite, ignition key, igneous rocks

அக்கினி = தீ = வன்னி

Xxx

3-2-92

Kanka – kokku

கங்க = கொக்கு

Crane – kank

Xxxx

3-2- 93

Vikree – sell = virkiraan in tamil

Vil= vir

Soma vikrayee – seller of soma plant

Rasa vikrayee – seller of toddy

விக்ரியதே = விற்கிறான்

–subham—

tags- – Panini Tamil words-25

இது காமெடி டைம்! வாங்க , சிரிக்கலாம்! (Post No.9146)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9146

Date uploaded in London – – 15 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்த்துவைத்த, நோட்டுகளில் ஒட்டிவைத்த  ஜோக்குகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பழுப்பேறி வருகின்றன.  அவை முழுதும்  அழிவதற்கு முன்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை

“யான்பெற்ற இன்பம்/ சிரிப்பு பெறுக இவ்வையகம் “– ஜோக்மூலர்  முனிவர், ஜோக் மந்திர புஸ்தக ஆசிரியர்

DAY DREAMING
EFFECT OF TAT RUPA PAINTING
COME ON BLUE BOY, COME ON BLUE BOY, 
WHALE GOLFING 

TAGS – காமெடி டைம்,  சிரிக்கலாம்