Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 30
திருக்கோளூர்
திருக்கோளூர், வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள ‘வைத்தமாநிதி பெருமாள்’ மீது நம்மாழ்வார் 12 பாடல்களையும், மணவாள மாமுனிகள் பாசுரங்களையும் பாடியுள்ளனர்.
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
எனினும், “திருக்கோளூர் பாசுரங்கள்” என்றதும் நினைவுக்கு வருவது ஸ்ரீ ராமானுஜருக்கு அந்த ஊர் பெண் ஒருவர் உரைத்த 81 ரகசிய வினாக்களே ஆகும்.இத்தலத்தின் பெருமைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைக் கீழே காணலாம்.திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (81 வாக்கியங்கள்)வைணவ ஆச்சாரியரான ராமானுஜரை நோக்கி, திருக்கோளூர் ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண்மணி 81 கேள்விகளை முன்வைத்தார். ராமாயணம், மகாபாரதம் மற்றும் ஆழ்வார்களின் வரலாற்றில் நடந்த அடியவர்களின் தியாகங்களை விவரிக்கும் தத்துவார்த்தமான கேள்விகள் இவை.
முக்கியமான சில கேள்விகள்:
அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே
தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
மூன்றெழுத்து சொன்னேனோ சத்ர பந்துவைப் போலே
முதல் அடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
(இறைவனுக்கும் அடியார்களுக்குமான ஆழ்ந்த பக்தியை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன).
வைத்தமாநிதி பெருமாள் கோயில்
மூலவர்: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்)
கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
குபேரனின் சாபம்: பார்வதியால் சபிக்கப்பட்டுத் தனது செல்வத்தை இழந்த குபேரன், இத்தலத்து பெருமாளைத் தவமிருந்து வழிபட்டுத் தனது நவநிதிகளை மீட்டதாகப் புராணம் கூறுகிறது.
மரக்கால் தலையணை: பெருமாள் தனது செல்வத்தைக் காவல் காக்கும் விதமாக, மரக்காலை (தானியங்கள் அளக்கும் கருவி) தலைக்கு வைத்துப் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்கிறார்.
இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மதுரகவி ஆழ்வார்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் அவதரித்த பெருமைக்குரிய தலம் இது.
நவதிருப்பதிகளில் செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம்,
திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
சுவர்த்தனன் என்பவரது பிள்ளையான தர்மகுப்தன், திருமண பந்தத்தின் வாயிலாக எட்டு பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் பெற்று அதன் காரணமாக மிகுந்த வறுமைக்கு ஆட்பட்டான். தனது ஏழ்மை நிலையினை போக்கும் நோக்கத்தில் நர்மதா நதிக் கரையில் வாழ்ந்து வந்த பரத்வாஜ முனிவரை வேண்டி நின்றான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார்.. தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்” என்று கூறினார். தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான்
மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்ற காரணத்தால் இன்றும் அந்த நாளில் குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மதுரகவி ஆழ்வார்.
இங்கு வசித்த விஷ்ணுநேசர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இந்த மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
80 வயதான மதுரகவி, தமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடியவர், பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லை. ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது..
உண்ணும் சோறும் பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மகிக் அவனூர் வினவி
தண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே!!
– நம்மாழ்வார்
To be continued……………………………….
Tags- திருக்கோளூர், ‘வைத்தமாநிதி பெருமாள்’, திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் , Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-30; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாஸ்திகனுக்கு என்ன வேலை சனாதன தர்மத்தில்?
ச. நாகராஜன்
கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு கோவிலில் என்ன வேலை? சனாதன தர்மத்தில் தான் என்ன வேலை?
அடிப்படை உரிமைகள் Vs இறைபக்தியும் நம்பிக்கையும் என்ற விஷயத்தில் சும்ப்ரீம் கோர்ட் நீதிபதி பி.வி. நாகரத்னா 21-4-26 செவ்வாய்கிழமையன்று கடவுள் நம்பிக்கையிலும் மத சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாத ஒரு நபர் அந்த கொள்கைகளின் உண்மையை எப்படி எதிர்க்கலாம் என்ற கேள்வியைக் கேட்டார். இவர் சுப்ரீம் கோர்ட்டின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழுவிற்குத் தலைவர்.
சபரிமலை ஐயப்ப தந்திரியின் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞரான பெண்மணி வி. கிரி. ஒரு நாஸ்திகருக்கு ஒரு கோவிலின் தெய்வம் பற்றியோ அங்குள்ள வழக்கான வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள் பற்றியோ கேள்வி கேட்க எந்த ஒரு உரிமையும் இல்லை என்றார்.
நீதிபதி நாகரத்னா பத்து முதல் 50 வயது வரையுள்ள பெண்மணிகள் சபரிமலைக்குச் செல்லலாமா என்பதைப் பற்றி ஒரு நாஸ்திகர் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டார்.
இதை அப்படியே ஒத்துக் கொண்ட சீனியர் அட்வகேட்டான கோபால் சுப்ரமணியன் ஒரு மதசார்பற்ற அமைப்பின் மதசார்பற்ற நடைமுறைகள் வேண்டுமானால் வழக்குமன்றத்தில் விவாதிக்கப்படலாமே தவிர மதத்தின் வழிபாட்டுமுறைகள் அரசியல் சட்டத்தால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி அஹ்சானுடின் அமானுல்லா ஒரு நடைமுறை சமயசார்பற்றதா அல்லது மதத்தின் அடிப்படையில் அமைந்ததா என்பதை ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் விசாரிக்கலாம் என்றார்.
நீதிபதி ஆர் மஹாதேவன் நம்பிக்கை என்பது நம்பிக்கை தான். நடைமுறை பழக்கம் என்பது வேறு. என்றாலும் அதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள ஒன்றே தான் என்றார்.
விவாதத்தில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
அடிப்படையாகப் பார்த்தால் ஒரு ஹிந்து நாஸ்திகனாக இருக்கவே முடியாது.
நாஸ்திகம் என்பது அறியாமையாலும், மனித கர்வத்தினாலும் சமூகத்தின் அறக் கோட்பாட்டை பாதிக்க முனையும் ஒரு தவறான கொள்கை.
மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்கள் காலம் காலமாக சபரிமலை கோவிலுக்குச் செல்வதில்லை.
இதை அரசியலாக்கி ஆதாயம் தேட முனைவோருக்கு நமது நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Tiru Valluvar has declared himself a Sanatani Hindu in chapter seven. It is about children. Hindus believe that they should have at least one male child who can earn for the family and who can do the cremation of his parents at the end of their journey on earth. It is in Sangam Tamil literature as well. When poet Poththiyar came to join the Fast unto Death ritual called Facing North, he was sent back; the reason was that he was yet to get a male child in the family. Manu Smritis explained the word Putra as one who release his parents from the hell. Tiru Valluvar echoed Manu in couplet 62.
He used the word SEVEN BIRTHS in couplet 62 which is a Hindu belief.
He also used Sanskrit word AMRIT in couplet 64. That shows Tamils were well versed in the Hindu episode of Churning the Milky Ocean.
Amrit is used in Sangam literature with three different spellings!
Brahmins in their Tithi or Tarpanam pay tributes to seven generations (3+3+1). Another interpretation for 7 births is from Plants, Animals to Man and Super Man (deva)
Because the Son delivers his father from the hell called ‘Put,’ therefore has he been called ‘Putra,’ ‘Deliverer from Put,’ by the Self-existent One Himself.—(9-138)
How do in know that Valluvar and others knew Manu Smriti very well?
Puthalva is the Tamilized form of PUTRA (R=L change is very common in Linguistics) Sangam poets used Puthalva in over 70 places in their 18 books!
He purifies his company, and also his kindreds—seven higher (ancestors) and seven lower (descendants). he alone deserves this entire earth.—(1-105)
Andal in Tiruppavai used this Etraikkum Ezel Piravikkum
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
Medhātithi’s commentary (manubhāṣya):
He becomes the sanctifier of his company; ‘company’ stands here for a number of persons arranged in a particular order; this ‘he purifies,’ makes free from taint; i.e., all sinful men, by associating with him, become sinless.
‘Kindreds’—persons born in his own family ;—‘seven higher,’ those above him, the Father &c., and ‘seven lower,’ those that are to come, yet to be born.
He alone is entitled to receive the gift of this earth extending to the oceans; ‘knowledge of Dharma’ establishes a claim to become the recipient; hence it is that a full knowledge of Dharma is sought to be acquired.—(1-105)
***
Valluvar him self used Ezumai (seven births) in other Kurals
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Chapter 7 Children or The Gift of Children
61.Of all the blessings that men yearn for in life, we know not any greater than that of begetting intelligent children- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
61.I know of no greater blessing than one’s children, who grow with well instructed discernment— S M Diaz, I G of Police- SMD Year 2000
***
61. Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain. Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.– GU Pope – GUP. Year 1886
*** 61.The world no higher bliss bestows Than children virtuous and wise. —Suddhananda Bharathiyar- SB
***
61.Among the blessings one should have there is none so great as having sensible children— EVS Publishers, Singapore- EVS. Year 1986
***
61.Among all the prizes that men win, there is none so fine
As children that have knowledge— H A Popley – HAP (not full book) Year 1931
***
61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
62.Evil shadows not a man through all the maze of seven-fold births who is blessed with children of an unsullied name. – ANM+2
***
62.A man’s children who are blemish less and cultured, safeguard his family reputation for generations– SMD
***
62. Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev’n-fold maze of birth. The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice. – GUP
*** 62.No evil comes and no blemish; Noble sons bring all we wish. SB
***
62.No evil will befall a man in all the seven births he may have if he begets children of irreproachable character— EVS
***
62.The evils of the seven births shall never touch those
Who have upright children, living blameless lives— HAP
63.Verily do the wise look upon their children as their wealth, for, through the good deeds they do unto them, flows their fortune. – ANM+2
***
63.A man’s children are his real wealth; and their own worth
Is assessed by their correct conduct and good name— SMD
***
63. ‘Man’s children are his fortune,’ say the wise; From each one’s deeds his varied fortunes rise. Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf. – GUP
***
63.Children are one’s wealth indeed Their wealth is measured by their deed. SB
***
63.Children are said to be one’s possession for, what they acquired becomes the wealth of the parents as well— EVS
***
63.Here is our wealth, the wise say of their bairns
For though their deeds true wealth will surely come— HAP
*** 63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
64.Sweeter to him than the food of the Gods is the frugal soup playfully splashed by the tender hands of one’s own children. – ANM+2
***
64.A parent’s food is made sweeter than nectar, when his child
Has toyed with it, dipping his little fingers— SMD
*** 64. Than God’s ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play’d. The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia. – GUP
***
64.The food is more than nectar sweet In which one’s children hands insert. SB ***
64.The food into which the children’s little hands have been dipped will be far sweeter to the parent than nectar— EVS
***
64.Gruel that little children’s little hands have stirred
Is sweeter far than nectar oif the Gods— HAP
***
64. அமிர்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
65.The touch of children makes thrill with joy; their prattle sounds music in our ears. – ANM+2
***
65.The children’s touch is pleasing thrill to the parent,
And their words are lilting music to their ears—SMD
***
65. To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear. The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.– – GUP
***
65.Children’s touch delights the body Sweet to ears are their words lovely. SB
***
65.The touch of children is delightful to the body and their voice is pleasing to ear—EVS
***
65.To stroke the children’s limbs is sweet to hand;
To hear their words is sweetest music to the ear— HAP
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவேளுக்கை (காஞ்சிபுரம்)
காஞ்சிபுரத்திலுள்ள ஒன்பது திவ்யதேச கோயில்களில் இதுவும் ஒன்று ; ஒருவர் காஞ்சிபுரத்துக்கும் கும்பகோணம் அருகிலுள்ள திரு நாங்கூருக்கும் சென்றால் 20 தலங்களை இரண்டே அல்லது மூன்றே நாட்களில் தரிசித்து விடலாம். அத்தோடு அருகில் மேலும் பல திவ்ய தேசங்களையும் தரிசித்து முடிக்கலாம்.
காஞ்சிபுரத்திலேயே, அஷ்டபுயகரத்திலிருந்து முக்கால் மைல் தென்மேற்கே உள்ளது திருவேளுக்கை.
மூலவர் – அழகியசிங்கர், ந்ருஸிம்ஹர், முகுந்த நாயகன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி.
தீர்த்தம் – கனக ஸரஸ், ஹேமஸரஸ்.
விமானம் – கனக விமானம்.
ப்ரத்யக்ஷம் – ப்ருகுமுனி.
விசேஷங்கள் – ந்ருஸிம்ஹன் ஹஸ்திசைல குகையில் இருந்துபடியே வேறொரு ந்ருஸிம்ஹ வடிவம் கொண்டு மேற்கு திக்கில் அசுரர்களைத் துரத்திக்கொண்டுபோய் அசுரர்கள் மறுபடி வராதபடி செய்ய அங்கேயே யோகநரஸிம்மராக இருக்கிறார். இது காமாஸிகா ந்ருஸிம்ஹன் ஸந்நிதி. பெருமாள், தாயார், கருடன் ஸந்நிதிகள் உள்ளன. ‘வேள்’ என்ற சொல்லுக்கு ‘ஆசை’ என்பது பொருள். நரஸிம்ஹன் ஆசையுடன் வசிக்கும் இடமாதலால் வேளிருக்கை (வேளுக்கை) எனப் பெயர் பெற்றதாக ஐதிஹம். ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இவரைப்பற்றி “காமாஸிகாஷ்டகம்” அருளியுள்ளார்.
.புராண வரலாற்றின்படி பிருகு மஹரிசிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்
****
காஞ்சியில் உள்ள வைணவக் கோயில்கள்
காஞ்சிபுரம் ஒரு முக்கிய ஆன்மீகத் தலமாகும். இங்கு 108 திவ்ய தேசங்களில் இடம்பெற்றுள்ள 15 புகழ்பெற்ற வைணவக் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் தொண்டை நாட்டு திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
காஞ்சியில் உள்ள மிக முக்கியமான வைணவக் கோயில்களின் பட்டியல்:வரதராஜப் பெருமாள் கோயில் (அத்தியூர்): காஞ்சியில் உள்ள முதன்மையான வைணவத் தலம். 108 திவ்ய தேசங்களில் 43-வது. அத்திகிரி எனப்படும் சிறு குன்றின் மீது பேரருளாளன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
உலகளந்த பெருமாள் கோயில் (ஊரகம்): திருவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் உலகளந்த கோலத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் தலம்.
வைகுண்ட பெருமாள் கோயில் (பரமேஸ்வர விண்ணகரம்): பல்லவர்கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலில் பெருமாள் அமர்ந்த, நின்ற மற்றும் சயன கோலங்களில் மூன்று தளங்களில் அருள்பாலிக்கிறார்.
பாண்டவதூதப் பெருமாள் கோயில் (திருப்பாடகம்): மகாபாரத காலத்தில் தூது சென்ற கிருஷ்ணர், 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாய் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
அஷ்டபுஜ பெருமாள் கோயில் (அஷ்டபுயக்கரம்): பெருமாள் சங்கு, சக்கரம், வில், அம்பு உள்ளிட்ட எட்டு கரங்களுடன் (அஷ்டபுஜம்) நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் தலம்.
திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்): பொய்கையாழ்வார் அவதரித்த தலம். பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அருள்பாலிக்கிறார்.
அழகிய சிங்க பெருமாள் கோயில் (திருவெள்ளுக்கை): நரசிம்மர் அவதாரத்திற்குரிய தலம்.
1. பேயாழ்வார் பாசுரங்கள்:”விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை…””இருந்து வேளுக்கை…” எனத் தொடங்கும் பாசுரத்தில், உலகளந்த களைப்பு தீர எம்பெருமான் இத்தலத்தில் வீற்றிருப்பதாக சிறப்பித்துக் கூறுகிறார்.
2. திருமங்கையாழ்வார் பாசுரம்:“மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி” எனத் தொடங்கும் பாசுரத்தில், திருவேளுக்கை நரசிம்மனை (ஆள் அரி) போற்றிப் பாடியுள்ளார்.
அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று ஆழ்வார் சொல்வது போல், மூலவர் அழகியசிங்கர் அழகு; உத்சவர் முகுந்த நாயகன் மிக மிக அழகு.மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ (பெரிய திருமடல் 127) என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம். ஆள் அரி என்பது அழகான தமிழ் திருநாமம்.
பேயாழ்வார், “ சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம்கடவார் தண்டுழா யார் ” (மூன்றாம் திருவந்தாதி, 26) என்று இந்த திவ்யதேசத்தை. எம்பெருமான் என்றும் வாழும் (நித்யவாஸம்) இடங்களை சொல்லும் போது சொல்கிறார்.
“இருந்து வேளுக்கை (34) ” என்ற பாசுரத்தில், திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் எம்பெருமான் வீற்றுஇருந்து சேவை சாதிப்பது, முன்பு உலகளந்த களைப்பு தீருவதற்கோ என்று பேய்ஆழ்வார் வினவுகிறார்.
இன்னொரு பாசுரத்தில் இந்த திருத்தல எம்பெருமானின் சௌலப்ய, ஸௌசீல்ய அனுபவங்களில் ஆழ்வார் திளைக்கிறார். “விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம், மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு” (62) என்பதில் கடைசி வரியில் உள்ள நீர் ஏற்றான் தாழ்வு என்பது வாமன அவதாரத்தின் போது, தாழ்ச்சிதோற்ற இருந்த எளிமையை சொல்வது ஆகும்.
***
மூன்றாம் ஆயிரம் ; இயற்பா ; திருமங்கை ஆழ்வார் ;பெரிய மடல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Talisman with five weapons of Lord Vishnu.
Tiger Claw Pendant and Long balloon vine- Purananuru wonders-27, Tamil Encyclopedia-67; One Thousand Interesting Facts -Part 67
Please note that the same poet is praising the same king in the following poems. No wonder the poet was excited because the king was a little boy,but defeated seven enemies.
Item 528
Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan defeated the Chera and Chozha kings along with five Vēlirs in Thalaiyālankānam in the Chozha country. This one of the battles of Tamil Nadu; like Karikal Choza’s Venni battle this is also sung by many.
Tamils never hesitated to kill another king. This is described as the ‘ nature of this world’
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று, இவ் உலகத்து இயற்கை,
is in Puram verse 76.
In 2025-26 we read in newspapers how many were killed in Israel- Gaza war, Israel- Iran war. Not only enemies but also thousands of children were killed. The world is same that existed 2000 years ago!
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.
***
Item 529 Tamil obsession with plants
All the three great kings of Chera Choza and Pandya wore specific garlands made with a particular plant. Not only that, but they also wore a particular plant or its flower at each stage of the battle. This is not seen in any Sanskrit literature or any part of India outside Tamil Nadu. Pandya kings wore garland made up of Neem tree. And when the soldiers laid siege of enemy fort, they wore உழிஞை. They wore it on their heads. We know that Greeks used Olive branches. But Tamils used ten different plants.
உழிஞை – long balloon vine, Cardiospermum halicacabum.
உழிஞை என்பது ஒரு வகையான கொடி (இன்றைய முடக்கொற்றான் மூலிகை). தமிழ் இலக்கணத்தில், பகைவர் நாட்டின் மதிலை (கோட்டையை) வளைத்து முற்றுகையிடும் போர் நிகழ்வு உழிஞைத் திணை எனப்படுகிறது.
***
Puranānūru 76, Poet Idaikundrūr Kizhār sang for Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,
1
For a man to be defeated or slain by another man is the nature of this world.
2
Not knowing the majesty and greatness of King Chezhiyan who wears a garland braided with the bright tender leaves from the large branches of a thick-trunked neem tree in the courtyard, and
3 long strands of ulignai vine, and another thickly woven garland flowing with honey, who has a sweet sounding kinai drum, wears gold ornaments, owns wealth and a rich country, the seven who came with warrior anklets, united, to fight with him, got defeated, their strengths ruined, as he felled them himself on the battlefield.
We have not heard about this before today.
***
புறநானூறு76, பாடியவர்: இடைக்குன்றூர் கிழார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், திணை: வாகை, துறை: அரச வாகை
1 ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று, இவ் உலகத்து இயற்கை,
2 இன்றின் ஊங்கோ கேளலம், திரள் அரை மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, 5 செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப், பாடு இன் தெண் கிணை கறங்கக் காண்தக, நாடு கெழு திருவிற் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப், 10 பொருதும் என்று தன் தலைவந்த புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, ஒரு தான் ஆகிப் பொருது களத்து அடலே.
***
Item 530 Appearance of Boy King
Poet Idaikundrur Kizhār was so excited to see a little boy defeating seven kings and chieftains. The Boy King tiled his hair on top withulignai vine. He removed the childhood anklets and wore battle front anklets. Apart from that he removed the Thali worn in childhood
***
Item 531 Tiger Claw chain
Hindu children wore two ornaments; when they were boys they had small thick, thread on their waist with Five Symbols of Lord Vishnu; on their chest they wore chain with a pedant made up of Tiger claw. They believed that it would make the boys fearless and bold. We know that tigers are aggressive and murderous.
Original interpretation for Thaali here is the Five weapons of Vishnu which give protection to children. Millions of Hindus recite Vishnu Sahasranama every day where the five weapons are praised as a talisman
Mace, Bow, Conch, Wheel and sward are the five that give protection.
***
Puranānūru 77, Poet Idaikundrur Kizhār sang for Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan
Who is he, standing splendidly, holding on to the ornamental staff of his tall chariot, holding a bow in his hand that has barely lost its tiny bracelets, his legs adorned with bright war anklets having shed the childhood anklets, wearing a strand of bright neem sprouts braided with strands of ulignai vine on his hair, tied as a tuft to prevent it from falling on his forehead? Long live his garland!
Wearing a garland, he has not removed his boyhood chain yet. Only today he is weaned from milk and begun on solid food. As new warriors come at him with rage, he is not awed. He does not put them down either. Holding them tight, he brings them down to the earth and kills them causing uproar in the vast sky. He neither rejoices nor thinks that it is a great thing!
****
புறநானூறு77, பாடியவர்: இடைக்குன்றூர் கிழார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், திணை: வாகை, துறை: அரச வாகை
2 தாலி களைந்தன்றும் இலனே, பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே, வயின் வயின் உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே, அவரை 10 அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழக், கவிழ்ந்து நிலம் சேர அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே.
In the northern parts of India kings are compared with lions. Even the thrones were called Simha +Aasannam= Simhaasanam= Lion Throne.
In the south, kings were compared with tigers. Here in Puram verse 78,the poet compared the boy king to tiger coming ou of a cave looking for food.
The poet adds one more point- the boy king did not stop when the enemies were retreating. He chased and followed them up to their own countries and finished them there.
***
Item 533 Wives Died of Shame
When the kings were killed their wives also died of shame.
When Kannaki challenged the Pandya king who executed her husband Kovalan in the royal court, the king died of heart attack, because she proved the king was wrong. Immediately Pandya queen also died of shame, according to Tamil epic Silappadikaram.
Puranānūru 78, Poet Idaikundrur Kizhār sang for Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan, Thinai: Vākai, Thurai, Arasa Vākai
1
My lord with ferocious might and curved joints, rose up like a powerful tiger living in a cave that stretches and rises as it prepares to hunt. They showed no respect for his chest, which is hard to fight. They rose up roaring, “We are great! We are superior. He wants to fight with us. He’s younger than us. The spoils will be rich!”
They came thus disrespecting him. On seeing them run
away from the battlefield showing their backs, their eyes dull, he did not desire to kill them there. He followed them to their father’s land and killed them there to the clear beat of kinai
2
drums, before their women with fine jewels, who died of shame.
***
புறநானூறு78, பாடியவர்: இடைக்குன்றூர் கிழார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், திணை: வாகை, துறை: அரச வாகை
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், அணங்கு அருங்கடுந்திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து,
1 அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து, “விழுமியம் பெரியம் யாமே! நம்மிற் 5 பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது” என, எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர் புறத்திற் பெயர ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
2
மாண் இழை மகளிர் நாணினர் கழியத் 10 தந்தை தம்மூர் ஆங்கண், தெண் கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே.
To be continued…………….
Tags- Purananuru wonders-27, Tamil Encyclopedia-67; One Thousand Interesting Facts -Part 67, Item 533
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
18-5-26 KALKIONLINE இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஜாக்கிரதை! சபலங்கள் உங்களை ஆபத்தான வாழ்க்கைக்குள் தள்ளிவிடும்!
ச. நாகராஜன்
தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறீர்கள். செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் காத்திருக்கின்றன. இந்த ஒரே ஒரு எபிசோடை மட்டும் பார்த்து விடுவோம் என்று பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். அந்த எபிசோடு முடிந்தவுடன் தொலைக்காட்சியை மூட மனம் வரவில்லை. இன்னும் ஒரே ஒரு எபிசோட் அல்லது நிகழ்ச்சி. அது முடிந்தபின் இன்னொரு நிகழ்ச்சி.
சரி, எந்த நொறுக்குத் தீனியையும் சாப்பிடக் கூடாது, ஏனெனில் டாக்டர் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஆனால் ஒரே ஒரு எபிசோடில் ஒரே ஒரு நொறுக்குத்தீனி பொட்டலத்தை காலி செய்கிறீர்கள். அடுத்து இன்னொரு பொட்டலம்…. இதற்குக் காரணம் மனச் சபலம் தான்!
இந்த மாதிரி பேர்வழிகளில் நீங்களும் ஒருவர் என்றால் ஜாக்கிரதை, இந்தப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே வெட்டி விடுங்கள். இது அபாயகரமான வாழ்க்கைப் போக்கில் கொண்டு விடும்.
சிலர் ஒரே ஒரு சிகரெட் என்று ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து புகைச் சங்கிலியை கைக் கொண்டு நுரையீரல் பாதிப்பை அடைவார்கள். சிலர் ஒரே ஒரு பெக் என்று சிறிதளவு மதுவை அருந்த ஆரம்பிப்பார்கள். அது சுயநினைவை இழந்து மருத்துவமனைக்குச் செல்லும் அளவு கொண்டு விடும்.
இந்த சபலத்தை இம்பல்ஸிவ் பிஹேவியர் (Impulsive Behaviour) என்று உளவியல் மருத்துவர் கூறுகின்றனர்.
இன்ஸ்ட்ருமெண்டல் கண்டிஷனிங் (Instrumental Conditioning) என்னும். இந்த ஒரே ஒரு தடவை தான் இப்படி என்று அப்போதைய நிலையில் ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் க்ளாஸிகல் கண்டிஷனிங் (Classical Conditioning) என்ற நிரந்தரமான கெட்ட பழக்கத்திற்கு ஆளாக்கிவிடும்.
சோகமான ஒரு சம்பவத்திலிருந்து மீள்வதற்காக சிறிது மதுவை அருந்தும் ஒருவர் எப்போதெல்லாம் சோகமாகத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மது அருந்தி குடிகாரராகி விடுவார்.
இந்த க்ளாஸிகல் கண்டிஷனிங் நிலையை அறிவுபூர்வமாக நிரூபித்தவர் பிரபல ரஷிய விஞ்ஞானியான பாவ்லாவ்.
‘பாவ்லாவ் நாய்கள்’ என்ற இவரது பிரபலமான சோதனையை அனைவரும் அறிவர்.
பாவ்லாவ் எப்போதெல்லாம் தனது நாய்களுக்கு உணவைக் கொடுப்பாரோ அப்போதெல்லாம் அதற்கு முன்னர் ஒரு மணியை அடிப்பார். பின்னர் உணவைத் தருவார். நாளடைவில் பாவ்லால் மணியை அடித்தவுடன் நாய்கள் உணவை உண்ண ஆஜராகி விட்டன. மணியோசையுடன் உணவு தருவதற்கான இந்த மனதில் ஏற்படும் தொடர்பு தான் க்ளாஸிகல் கண்டிஷனிங்.
இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு மனிதன் என்றால் இப்படி உந்திவிடும் சபலங்கள் வரத்தான் செய்யும்.
இதைப் போக்க வழிகள் உண்டு.
முதலில் இப்படிப்பட்ட சபலங்கள் நமக்கு உண்டா என்று அறிதல் வேண்டும். அடுத்து உங்கள் வாழ்க்கை லட்சியத்தைப் பற்றி நினைத்து அதைக் கெடுக்க இந்த சபலம் ஏற்படுத்தும் கேட்டை அறிதல் வேண்டும்.
அடுத்து இந்த கெட்ட சபலங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பட்டியலிட வேண்டும்.
இந்தப் பட்டியலை அவ்வப்பொழுது பார்த்தாலேயே போதும் – சபலம் தரும் கேடுகள் உங்கள் மனதில் பதிய ஆரம்பிக்கும்.
அடுத்ததாக மனத்தெளிவு பயிற்சி முறை என்ற எளிய பயிற்சியை அன்றாடம் ஒரு இருபது நிமிடங்கள் மேற்கொள்ளலாம். இதற்கு காசு, பணம் செலவில்லை.
குறிப்பிட்ட ஒரு இடத்தில் அன்றாடம் உட்கார்ந்தோ படுத்தோ கால் முதல் தலை வரையிலான அங்கங்களில் ஏற்படும் புலன் உணர்ச்சிகளைக் கவனித்தல் மனத்தெளிவு பயிற்சியில் ஒரு வகை.
அன்றாடம் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து மனத்தெளிவைப் பெற பல பயிற்சிகளை இணையதளத்தில் காணலாம். உங்கள் பகுதி யோகா மாஸ்டரிடமும் கற்றுக் கொள்ளலாம்.
இந்த சபல பழக்கத்திற்கு ஆளாகி மீள முடியாத நிலைக்குப் போய்விட்டால் மனநல மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். அவர் நிலைமைக்குத் தக்கபடி கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளக்கூடும்.
Dialectical behaviour therapy (DBT) சபலத் தூண்டுதல், உணர்ச்சித் தூண்டுதல் ஆகியவற்றை நீக்குவதற்கான சிகிச்சை முறை இது. சிலரோ தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கடைசி நிலக்கும் சென்று விடுகின்றனர். ஆளுமைக் கோளாறுகளும் இந்த சிகிச்சையில் அடங்கும்.
Cognitive behavioural therapy (CBT)
உதவிகரமான மனோ சிந்தனைகளைத் தந்து தீங்கு பயக்கும் மன நிலைகளை மாற்ற உதவும் சிகிச்சை இது.
Acceptance and Commitment therapy (ACT) மேலே உள்ள CBT சிகிச்சை முறையை உள்ளடக்கி ஏற்றுக்கொள்ளத்தக்கவற்றை ஏற்றுக் கொள்ளவும் மதிப்பு மிக்க செயல்களையும் கற்றுத் தரும் சிகிச்சை முறை இது.
Mindfulness and modification therapy (MMT) மனத்தெளிவு பயிற்சிமுறைகளில் பயிற்சி தந்து லட்சியம் மிக்க நல்ல வாழ்க்கையை அமைக்க உதவுவது இந்த சிகிச்சை முறை.
அப்பப்பா இதெல்லாம் வேண்டாம் என்றால்….
அடுத்தமுறை இன்ன்னொரு எபிசோட் என்ற சபலத்திற்கு ஆளாகும் போதோ இன்னும் ஒரே ஒரு நொறுக்குத்தீனி பொட்டலம் என்று நினைக்கும் போதோ இவை அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.
GREATES NAYAK KING TIRUMALAI NAYAK OF MADURAI WITH HIS WIVES.
THREE BEAUTIFUL WIVES OF TIRUMALAI NAYAKKAR., MADURAI
Written by London Swaminathan
Post No. 15,760
Date uploaded in London –19 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆவுடையார் கோவில், மதுரை , திருநெல்வேலி அருகிலுள்ள கிருஷ்ணாபுரம், ஸ்ரீ வைகுண்டம் முதலிய கோயில்களில் நாயக்கர் கால சிற்பிகள் குறத்தி, வேடுவச்சி ஆகியோரின் சிலைகளை வடித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர் தற்காலத்தில் அவைகளைக் கம்பிக் கிராதிகள் மறைப்பதாலும், இருண்ட பகுதியில் அவை இருப்பதாலும் நம்மால் அவைகளை முழு அளவுக்கு ரசிக்க முடிவதில்லை. அந்தக் குறைகளை போக்கும் வகையில் புகழ்பெற்ற ஓவியர் சில்பி அவர்கள் அவைகளை அருமையான வரைபடங்களாக வரைந்து நமக்குக் காண்பிக்கிறார்; இவைகளின் நேர்முக வருணனையையும் அவர் தென்னாட்டுச் செல்வங்கள் நூலில் கொடுத்துள்ளார் .
மதுரைக் கோவில் சிலையில் ஒரு வேடன் குரங்குடன் காட்சி தருகிறான்.
கிருஷ்ணாபுரம் கோவிலில் ஒரு வேடர் தலைவன் ராஜ குமாரியைத் தூக்கிச் செல்லும் காட்சியும் ஒரு வேடுவச்சி ராஜ குமாரனைத் தூக்கிச் செல்லும் காட்சியும் சிற்பங்களாக உள்ளன இதை ஸ்ரீவைகுண்டக் கோயிலிலும் காண்கிறோம்.
கடத்தப்பட்ட ராஜகுமாரி கூச்சல் போட்டவுடன் அவளை மீட்க குதிரை வீரர்கள் சிட்டாகப் பறந்து வருகிறார்கள் ;அவர்களுடைய ஆக்ரோஷத்தையும் குதிரைகளின் வேகத்தையும் கல்லிலே வடித்த சிற்பி தெய்வீக சிற்பிதான் .
நாயக்கர் காலத்தில் இவைகளையெல்லாம் மீனாட்சி கோவிலில் இடம்பெறச் செய்த மாபெரும் நாயக்க மன்னன் திருமலை நாயக்கர்அவருடைய மூன்று மனைவியருடன் பணிவுடன் தோன்றும் காட்சியும் மீனாட்சி கோவிலில் உள்ளது; திருமலை நாயக்கரின் சிலைகள் வெவ்வேறு கோயில்களில் வெவ்வேறு கோணத்தில் இருப்பதாக புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி கருதுகிறார்.
படங்களைக் கூர்ந்து கவனியுங்கள் ; முடிந்தால் என்லார்ஜ் செய்து பாருங்கள்.
HUNTER FROM MADURAI TEMPLE
HUNTER WITH A PARROT IN HAND, MONKEY IN ROPE, MADURAI TEMPLE
SRIRANGAM TEMPLE
KIDNAPPED PRINCESS IS BEING RESCUED
PRETENDING LIKE A HERO
FALSE HERO, COMEDIANPRETENDING LIKE A HERO
HUNTER KIDNAPPING A PRINCESS, SRI VAIKUNDAM
HUNTRESS KIDNAPPING A PRINCE
குறத்தி FORTUNE TELLER, NOMADIC TAMIL GYPSY WOMAN
ஆவுடையார் கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிற்பம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
–subham—
Tags- கிருஷ்ணாபுரம் மீனாட்சி கோவில், குறத்தி சிற்பம், ஆவுடையார் கோவில், திருமலை நாயக்கர், கோவிலில் குறத்தி, வேடுவச்சி சிற்பம், ஸ்ரீ வைகுண்டம்,ஓவியர் சில்பி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மைத்ரேயி
Maitreyī (मैत्रेयी).—வேதகாலப் பெண் அறிஞரான மைத்ரேயி, பிரம்மவாதினியாகத் திகழ்ந்து சிறந்த தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவர் . கார்க்கி, சுலபா, ஆகியோருடன் இணைந்து, வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை மைத்ரேயி உறுதிப்படுத்துகிறார். மைத்ரேயி–யாக்ஞவல்கியர் தத்துவ உரையாடல் பற்றிய தகவல் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளது.
பிரம்மரிஷியான யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என இரு மனைவியர் இருந்தனர். தத்துவ ஞானத்தை நாடிய மைத்ரேயி மற்றும் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்ட காத்யாயனி, யாக்ஞவல்கியரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினர். எதனால் பிரம்மத்தை அறிந்த்து பேரின்பம் அடையலாம் என்ற விவாதத்தில் மைத்ரேயி தனக்கு சொத்து சுக்கங்கள் வேண்டாம் என்கிறார் ; காத்யாயபி இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்கிறார் ; இது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்களின் வேதாந்த வேட்கையை அறிய உதவும் சம்பாஷணை ஆகும் .
***
மலையத்வஜ பாண்டியன் / மீனாக்ஷி
மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் மலையைக் கொடியாகக்கொண்ட பாண்டிய மன்னன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ; சூர சேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்ட அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்வ மேத யாகம் செய்தார் ; யாகத்தீயில் மூன்று மார்பகங்களுடன் பெண் குழந்தை தோன்றியது ; தடாதகை என்று பெயர் சூட்டினார்கள்; அவளுக்குரிய ஆண்மகனைச் சந்திக்கும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்ற அசரீரி கேட்டது ; அதுபோலவே எட்டுத் திக்குகளில் திக் விஜயம் மேற்கொண்ட அவர் சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானைக்கண்டவுடன் அந்த மார்பகம் மறைந்தது. நாணித் தலை குனிந்து அவருக்கு மாலையிட்டாள். இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியின் திக் விஜயம், கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன; மீனாட்சி பற்றி பண்டேயா அரசி என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் அங்கயற் கண்ணி என்று மீனாட்சியின் பெயரைத் தமிழ் மொழியில் பாடிப் பரவியுள்ளார்
மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, போரிட்ட மலையத்வஜனை அஸ்வத்தாமன் கொன்றான்
****
மாளவிகாக்னிமித்ரம்
காளிதாசனின் மூன்று நாடகப் படைப்புகளில் மாளவிகாக்னிமித்ரம் முதலாவது நாடகம் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகிறார்கள்.
சம்ஸ்கிருத மொழியில் அந்தக் காலத்திலேயே 640 நாடகங்கள் இருப்பதை ஜவஹர்லால் நேரு பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார் அக்கினி மித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்ற பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை இது . இதில் அக்கால ஓவியக் கலை, நாடகக் கலை பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன முதல் மனைவியான தாரிணியின் பணிப்பெண்களின் ஓவியத்தைக் கண்டவுடன் காதல் மலர்கிறது ; இருவர் உதவியுடன் காதல் கைகூடும் தருணத்தில் மாளவிகாவும் ராஜ குமாரி என்ற சர்ப்ரைஸ் செய்தி கிடைக்கிறது; தாரிணியும் மனமுவந்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள்; இந்து ராஜாக்கள் ஒருவருக்கு மேல் இன்னும் பலரைக் கல்யாணம் கட்ட சாஸ்திரம் அனுமதிக்கிறது. ராம பிரான் ஒருவன் மட்டுமே ஏகபத்தினி விரதன் என்பதால் உலகமே அவனைப் பாராட்டுகிறது.
***
மனஸ்/ மனம்
சங்க காலம் முதல் திருக்குறள் காலம் வரை- இன்று வரை –தமிழ் மொழியில் பயன்படுத்தும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லியிருந்தான் மைண்ட் MIND என்னும் ஆங்கிலச் சொல்லும் பிறந்தது; இதன் பொருள் – உள்ளம், எண்ணம், கிடக்கை , புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் உணர்வு, விருப்பம் என்பன ஆகும் ; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது தமிழ்ப் பழ மொழி . மனம் ஒரு குரங்கு என்று பல அடியார்களும் பாரதியாரும் பாடியுள்ளனர்.
***
மண்டிலம்/ மண்டலம்
Maṇḍala (मण्डल).— வட்டமான , அல்லது ஒரு எல்லைக்குட்பட்ட பகுதி ; கண்ணாடி. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள் ) உள்ளன . காலக்கணக்கீட்டில் 41 நாட்கள் ; சபரி மலை ஐயப்ப பக்தர்கள், ஆந்திரத்தில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில் தீட்சை விரதம் இருப்போர் 40, 41, 44 நாட்கள் என்ற பல கால எண்ணிக்கையை மண்டலம் என்பார்கள்.
தமிழ் நாட்டினை ஆண்ட சோழர்கள் தமிழர்கள் அல்ல ; புறநானூறும் சிலப்பதிகாரமும் வடமேற்கு இந்தியாவை அந்த சிபிச் சக்ரவர்த்தியைத் தங்களுடைய முன்னோர்கள் என்று பெருமையுடன் செப்புகின்றன ; அந்த வழியில் வந்த மாந்தாதா , முசுகுந்தன் ஆகியோரையும் கல்வெட்டுகளும் சாசனங்களும் கம்பராமாயணமும் சூரிய குல ராஜாக்களாகப் போற்றுகின்றன ; மாந்தாதா , ஒரு ஆணுக்குப் பிறந்தவன் என்ற சுவையான கதை மகாபாரதத்தில் உள்ளது ; ஆணுக்கு குழந்தை பிறந்த செய்தி அபூர்வமாக மேலை நாடுகளிலும் நடந்துள்ளது.
யுவனாஸ்வன் மகனான மாந்தாதா தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கர்ப்பப்பையில் இருந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். (மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் ;இதனால் அந்த மன்னன் கருவுற்றான்.
தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் உயிர் வாழும்?” என்று வினவினர். அப்போது இந்திரன், “குழந்தை என் விரல்களைச் சப்பட்டும் ” என்றான். இதனால் மாந்த்தாதா என்ற பெயர் ஏற்பட்டது இவன் ராம பிரான், சோழர்கள் ஆகியோர் தோன்றிய சூரியகுல மன்னன் ஆவான் ; முசுகுந்தன் கதை பாகவதத்தில் உள்ளது.
***
மங்கலதேவி/ கண்ணகி
வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி/ கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநில மங்களூரிலும் , கேரளத்திலும் மங்கலதேவி கோவில்கள் உள்ளன . இவற்றில் கேரளத்திலுள்ள கோவில் பத்தினித் தெய்வமான, சிலப்பதிகார கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோவில் என்று மக்கள் நம்புகின்றனர் ; கண்ணகியின் கணவனான கோவலனைப் பாண்டிய மன்னன் தவறுதலாகக் கொல்ல உத்தரவிட்டதால், வெகுண்ட கண்ணகி மதுரையின் ஒரு பகுதியை எரித்துவிட்டு, கேரளத்துக்கு வந்து புஷ்பக வியமானத்தில், கோவல னுடன் சொர்க்க லோகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் (சித்ரா பௌர்ணமி) திறக்கப்படும் .
***
மங்கள சூத்ரம்
இது ஹிந்துப் பெண்கள் திருமணத்தின் போது அணியும் மஞ்ச்சள் குங்கும தடவிய புனிதமான கயிறு ஆகும் ; தாலி என்ற சொல்லும் இதைக் குறிக்கும். சேயிழை , அணியிழை என்ற பெயர்களில் சங்கத் தமிழ் நூல்கள் இதைப் போற்றுகின்றன ; கணவன் உயிருடன் இருக்கும்வரை இதைப் பெண்கள் அணிவார்கள்
***
மாங்கல்யதாரணம்
தாலி என்னும் மங்கல சூத்ரத்தை அணியும் கல்யாண நிகழ்ச்சிக்கு மாங்கல்ய தாரணம் — மாங்கல்யத்தைத் தரித்தல்/ அணிதல் – என்று பெயர் .
***
மணிபல்லவம்
மணிபல்லவம் என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணத் தீவு ஆகும்.இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள நயினாத் தீவுதான் மணிபல்லவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மணிமேகலா தெய்வம், மணிமேகலையை பூம்புகாரிலிருந்து இந்தத் தீவிற்கு அழைத்துச் சென்றது. புத்தரின் பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த தர்மபீடிகை இங்கு உள்ளது. இதன் மீதுள்ள மலர்களைத் தொழுதால் முற்பிறவி நினைவுகள் தோன்றும் ; மக்களின் பசியைப் போக்கும் ‘அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் இந்தத் தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையிலிருந்து தோன்றியது என்று மணிமேகலை குறிப்பிடும்.
மேலும், இது பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலின் பெயரும் ஆகும்.மணிபல்லவம் நாவல் – காவிரிப்பூம்பட்டினம், இலங்கை மற்றும் சோழ நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்று நாவல் ஆகும்.
***
மனிஷா பஞ்சகம்
மனீஷா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற தத்துவ நூலாகும். “மனீஷா” என்றால் உறுதியான ஞானம் அல்லது தெளிந்த அறிவு என்று பொருள். அனைத்து உயிர்களிலும் இறைவன் சமமாக இருக்கிறான் என்ற அத்வைத தத்துவத்தை இது விளக்குகிறது.தோன்றிய வரலாறு:ஆதிசங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, எதிரே நாய்களுடன் ஒரு சண்டாளர் (புலையன்) வந்தார். சங்கரரின் சீடர்கள் அவரை விலகிச் செல்லுமாறு கூறினர். அதற்கு அந்தச் சண்டாளர், “இந்த உடலை விலகிப் போகச் சொல்கிறீர்களா அல்லது உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை விலகிப் போகச் சொல்கிறீர்களா? உடலால் அனைவரும் சமம் தானே?” என்று ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்.அவருடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், சாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்த ஞானி, அவன் எந்த சாதியாக இருந்தாலும், அவனே தனக்கு குரு என்று ஆதிசங்கரர் இந்த நூலில் கூறுகிறார்.பிரம்மமே உண்மை: இந்த உலகம் மாயையானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் சைதன்யம் (உயிர்) ஒன்றே என்பதை இந்த ஸ்லோகங்கள் வலியுறுத்துகின்றன.ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், “இதுவே எனது உறுதியான அறிவு” (மனீஷா மம) என்று ஆதிசங்கரர் பாடியுள்ளார்.இந்த நூலின் மூல ஸ்லோகங்கள் மற்றும் விளக்கங்களைப் படிக்க, Vaidika Vignanam வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
புலையனாக வந்தது வேத வியாசர் என்றும் அவருடன் வந்த நான்கு நாய்கள் நான்கு வேதங்கள் என்றும் உரைகாரர்கள் விளம்புவர்.
***
மன்மதன் / மதன/ மாரன்/காம தேவன்
காதல் தெய்வத்தின் பெயர் ; மனைவி ரதி தேவி; அவருடைய கொடி- மகரக் கொடி; அதாவது முதலை என்றும் சுறாமீன் என்றும் சொல்வர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மன்மதனைப் பற்றிய குறிப்புகள் உள. தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயன் என்னும் முருகன் பிறக்க வேண்டும் என்றும் அதற்கு சிவனும் பார்வதியும் முனைய வேண்டும் என்றும் தேவர்கள் திட்டமிட்டனர் . மன்மதனை அனுப்பி ஐந்து மலர்க்கணைகளை எய்தி காம உணர்வு எழுப்புவதற்கு சிவ பெருமானிடம் அனுப்பினார்கள் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே காம தேவன் சாம்பலானான் ; ரதி அழுது புலம்பவே அவன் அனங்கனாக (உடல் அற்ற / உருவம் இல்லாத) மனித உலகில் சஞ்சரிப்பான் என்று வரம் அளித்தார் ; இன்றும் எல்லோருக்கும் காம உணர்வினை ஏற்படுத்துபவன் அவன்தான்.
****
மந்திரம்
மனதில் தியானித்தால் அவர்களைக் காப்பாற்றும் கருவி என்பது சொல்லின் பொருள்
Manas: Meaning “mind” Trai or Tra: Meaning “tool,” “instrument,” or “protection
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள் 28
பொருள்: நிறைவான சொல் ஆற்றல்கொண்ட சான்றோர்களின் –அதாவது ரிஷி முனிவர்களின்— பெருமையை, இந்த உலகத்தில் அவர்கள் அருளிய மந்திரச் சொற்களே (மறைமொழி) எடுத்துக் காட்டிவிடும். இது தொல்காப்பியத்திலும் இருக்கிறது .
நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரமும் ஓம் என்னும் பிரணவமும் எல்லோருக்கும் பொதுவானது .
அகராதியில் மந்திரம் (Mantra) கடவுளை வழிபடவோ அல்லது தியானிக்கவோ திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் புனிதமான சொல், வாக்கியம் அல்லது ஓசை (எ.கா: ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய .
ஏனைய பொருள்- மந்திராலோசனை : இரகசிய விவாதம் (Counsel): அரசர்கள் அல்லது தலைவர்கள் கூடிப் பேசும் இரகசிய ஆலோசனை அல்லது அமைச்சரவை சபை.
(Slogan): ஒரு நபர் அல்லது குழு தங்களின் அடிப்படை நம்பிக்கையாக அல்லது குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் (எ.கா: “வாடிக்கையாளரே தெய்வம்”).
மறைபொருள் / சூனியம் (Magic/Spell): ஆன்மீக அல்லது மாந்திரீக சக்திகளைக் கொண்டதாக நம்பப்படும் மந்திரச் சொற்கள்
மந்திரம் என்பது சில குறிப்பிட்ட ஒலிகள், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் பெற உதவும் ஒரு ஆன்மீகச் சொல்லாகும். மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான சில மந்திரங்கள்:ஓம் (பிரணவ மந்திரம்): இதுவே பிரபஞ்சத்தின் ஆதி ஒலி. மன அமைதிக்கு இது மிகச் சிறந்ததாகும்.ஓம் நம சிவாய: இது அறியாமையை அகற்றி ஞானத்தையும், முக்தியையும் தரக்கூடிய பஞ்சாட்சர மந்திரமாகும்.ஓம் சரவணபவ: முருகப் பெருமானின் அருள் பெறவும், தடைகள் நீங்கவும் உச்சரிக்கப்படும் ஆற்றல் மிக்க மந்திரம்.
வைணவர்களின் முக்கிய மந்திரம்– ஓம் நமோ நாராயணாய .
****
மனு / மன்வந்தரம்
மனித குலத்தைத் தோற்றுவித்தவர் மனு; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு வருவார் ; இப்போது நாம் வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உள்ளோம்; பிராமணர்களும் ,புரோகிதர்களும் பூஜைக்கு முன்னர் இதைச் சொல்லி பூஜை அல்லது சடங்குங்களைத் துவங்குவர் ; மன்வந்தரம் என்பது குறிப்பிட்ட மனுவின் ஆட்சிக்காலம்.
மன்வந்தரம்
இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, மனிதகுலத்தின் மூதாதையான ஒரு மனுவின் (Manu) ஆட்சிக்காலம் மன்வந்தரம் (Manvantara) எனப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரமும் ஒரு குறிப்பிட்ட மனு, சப்தரிஷிகள், மற்றும் இந்திரன் ஆகியோரின் கீழ் இயங்குகிறது.: ஒரு கல்பத்திற்கு 14 மன்வந்தரங்கள் உள்ளன.தற்போதைய காலம்: நாம் தற்போது 7-வது மன்வந்தரமான ‘வைவஸ்வத மன்வந்தரத்தில்’ வாழ்ந்து வருகிறோம்..
கால அளவு: ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர யுகங்களைக் கொண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு நாள் .
14 மனுக்கள் பெயர்கள்
சுவாயம்புவ மனு,
சுவாரோசிஷ மனு,
உத்தம மனு,
தாமச மனு,
ரைவத மனு,
சாக்ஷுஷ மனு,
வைவஸ்வத மனு (நாம் தற்போது இருக்கும் காலம்),
சாவர்ணி மனு,
தக்ஷ சாவர்ணி மனு,
பிரம்ம சாவர்ணி மனு,
தர்ம சாவர்ணி மனு,
ருத்ர சாவர்ணி மனு,
தேவ சாவர்ணி மனு (அ) ரௌச்ய மனு,
இந்திர சாவர்ணி மனு
***
மனு ஸ்ம்ருதி
முரண்பட்ட பல ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுத்த கல்கத்தா சுவடியின் பதிப்புதான் தமிழிலும் ஆங்கிலயத்திலும் இப்போதுள்ளது; இதில் சூத்திரர்களுக்கு எதிரான 40 ஸ்லோகங்கள் சுங்க வம்ச காலத்தில் சேர்க்கப்பட்டவை; அதை வெள்ளைக்கார்கள் அப்படியே வைத்துக்கொண்டனர் ; ஆகையால் இப்போதைய பதிப்பு ஒருதலைச் சார்பானது ; நமபத்தக்கதல்ல.
மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன்றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதைக் காணலாம்.. காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர்.
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647
மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு; என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்
மனுவின் சிறப்பு
வேதத்தின் சிறப்பு
பிரளயம்
பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு
நாராயண சப்,தத்தின் பொருள்
பிரம்மனின் தோற்றம்
மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி
தேவர் முதலானோரின் தோற்றம்
பிராணிகளின் தொழில்
விராட புருஷனின் தோற்றம்
மநுப் பிரஜாபதியின் தோற்றம்
மரீசி முதலானோரின் தோற்றம்
சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்
தினப் பிரளயம்
மஹாப் பிரளயம்
இந்த நூல் தோன்றிய வரலாறு
காலக் கணக்கு
யுகக் கணக்கு
மன்வந்தரக் கணக்கு
யுக தருமம்
வர்ண தர்மம்
பிராமணன் சிறப்பு
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
To be continued……………………………….
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64, மைத்ரேயி , மனு, மனு ஸ்ம்ரிதி, மங்கலதேவி, கண்ணகி, பெண்கள் பற்றி மனு, தாலி, மன்மதன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பாடகம்
திருப்பாடகம் (காஞ்சீபுரம்)
ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளன. .
மூலவர் – பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ருக்மிணி, ஸத்யபாமா
தீர்த்தம் – மத்ஸ்ய தீர்த்தம்.
விமானம் – பத்ர விமானம், வேத கோடி விமானம்.
ப்ரத்யக்ஷம் – ஜனமேஜயன், ஹாரீத முனி.
ஜனமேஜயஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததை கேள்விப்பட்டு, அதை நேரில் ஸேவிக்க விரும்பி காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து, பூர்ணாஹ§தி ஆனதும் பகவான் பாண்டவதூத வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு.
இங்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார். மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம்.
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே – (815)
– திருச்சந்தவிருத்தம் – 64
பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில்;
இருந்த திருக்கோலம் திருப்பாடகத்தில்;
கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.
“இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே
எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்து அருளிய திருத்தலங்களாகும். எம்பெருமான் அர்ச்சா மூர்த்தியாகி இங்கு எழுந்து அருளிய காலங்களில் நான் பிறந்ததில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு அமைத்துக் கொண்டேன். அதனால் நான் இனி மறந்திலேன்”.
இவ்விதம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.
வரலாறு
எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு
துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான்
பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம். துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த கண்ணன், நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார்.
சிறப்புக்கள்
1) அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி
உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.
என்ற பொய்கையாழ்வாரின் பாசுரத்தில் வெஃகாவைக் குறிப்பிட்டிருப்பது தொன்மைக்காலத்தே 108 திவ்ய தேசங்களில் மூன்று திருக்கோல எம்பெருமான்களை ஒரு சேரக் குறித்தால் அது இந்த தொண்டை மண்டலத்தின் முத்தலமேயென்பதில் ஐயமில்லை.
ஆ) இசைந்த வரவமும் வெற்புங் – கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப – அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்திருந்து நின்றதுவு மங்கு – 2345
என்று பேயாழ்வார் உரைப்பதும்.
இ) குன்றிருந்த மாட நீடும் பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃகனைக் கிடந்ததென்ன நீர்மையே – 814
என்று திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரும் கூறியிருப்பதில் 108இல் உள்ள பிற ஸ்தலங்களை மூன்று திருக்கோலங்கட்கும் சுட்டவில்லை.
திருவெஃகாவிலே கிடந்த படியுமாதல் – என்று ஈடு வ்யாக்யானம்
சுட்டியிருப்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
காஞ்சி மண்ணில் முத்தீபம் போல் இலங்கும் இத்தலங்கள் தொண்டைமண்டலத்திற்கே தனிப்புகழ் ஏற்றுத் தந்தன வென்பதும் மறுக்க முடியாததாகும்.
4) ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை சொரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணுகைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.
***
திரு ஊரகம்
திரு ஊரகம் (உலகளந்த பெருமாள் கோயில்) என்பது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 50-வது திவ்ய தேசமான இத்தலத்தில், திருமால் பிரம்மாண்டமான 35 அடி உயர உலகளந்த பெருமாள் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒரே கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச பெருமாள்கள் உள்ளனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு ஊரகம்
:மூலவர்: ஊரகத்தான் (உலகளந்த பெருமாள்)
தாயார்: அமுதவல்லி
சிறப்பம்சம்: பெருமாள் தனது இடது காலை வானத்திற்கும், வலது காலை மகாபலியின் தலையிலும் வைத்து உலகளந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
****
திரு நீரகம்
இது காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
இந்தக் கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. ஒரே இடத்தில் இந்த நான்கு பெருமாள்களையும் தரிசிப்பது மிகுந்த சிறப்பாகும்.
திரு நீரகம் (காஞ்சீபுரம்) பெரிய காஞ்சீபுரத்தில் திரு ஊரகம், (உலகளந்தப் பெருமாள்) கோவிலிலேயே உள்ளது. .
மூலவர் – இல்லை
உத்ஸவர் – ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – நிலமங்கைவல்லி.
தீர்த்தம் – அக்ரூர தீர்த்தம்.
விமானம் – ஜகதீச்வர விமானம்.
ப்ரத்யக்ஷம் – அக்ரூரர்.
குறிப்பு – மூலவர் எங்கிருக்கிறார்? பழைய கோவில் எங்கிருக்கிறது? தீர்த்தம் எங்குள்ளது? என்றெல்லாம் தெரியவில்லை. உலகளந்தப் பெருமாள் கோவிலின் வடபுறத்துப் ப்ராகாரத்தில் மிகச்சிறிய ஸந்நிதியில் உத்ஸவர் மட்டுமே எழுந்தருளியிருக்கிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
17-5-26 தினமணி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசய உலகம் தான் – நவீன மூளை இயல் தரும் செய்தி!
ச. நாகராஜன்
நாளுக்கு நாள் மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சி அதிகமாக அதிகமாக மூளையின் மர்மம் இன்னும் அதிகமாகிறது.
சுமார் எட்டு லட்சம் வருடங்களாக மனித மூளை பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து வந்திருக்கிறது. அதன் மர்மத்தை ஓரிரு ஆராய்ச்சிகளால் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?
சமீபத்தில் ஆய்வாளர்களின் கவனம் மூளையின் நெட்வொர்க் – அதாவது மூளையின் தகவல் தொடர்பு மையம் பற்றித் திரும்பி இருக்கிறது.
இதை அறிவியலில் DMN – Default Mode Network – என்று அழைக்கின்றனர்.
வளவள என்று இழுக்க வேண்டாம், புரியும்படி ஆராய்ச்சியின் முடிவைச் சொல்லுங்கள் என்றால் சொல்லலாம் இப்படி – ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம் தான்! அவனது பிரக்ஞை, மூளை இயக்கத் தொடர்பு எல்லாமே தனித்வம் கொண்டது தான்!
இன்னும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “நீங்கள்’ என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வு தான் இது.
பயம், தாகம் உள்ளிட்ட உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்கு மனிதன் தனி தான்.
16 இள வயதினரை ஆராய்ச்சிக் குழு அழைத்தது. 2009ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான ‘டேகன்’ (TAKEN) என்பதைத் திரையிட்டுக் காட்டியது. அப்போது அவர்களின் மூளை செயல்படும் விதத்தை ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் என்ற செயல்முறை மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குட்பட்டவர்களின் மூளையில் தகவல் தொடர்பு இயங்கும் விதத்தை ஆராய்ந்த ஆய்வாளர்கள் உணர்வுடன் இருந்து படத்தைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி உலகத்தில் இருந்தார்கள் என்பதையும் ஆனால் பிரக்ஞையற்ற நிலையில் அவர்கள் இருந்தபோது அவர்களின் தனி உலகம் இல்லாமல் போய் அனைவரும் ஒரே மாதிரி உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதையும் கண்டு அதிசயித்தனர்.
ஆகவே டி எம் என் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரிய வந்தது.
இதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது.
படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் சொந்தக் கதையை இணைத்துக் கொள்கிறார்கள். பல பழைய உணர்வுகளை நினைவாற்றல் அடிப்படையில் நினைக்கத் தொடங்குகிறார்கள். சிலர் படக்காட்சிகளை தங்கள் மனப்போக்கில் செட் போட்டு அமைத்து மீண்டும் காண்கிறார்கள்.
ஏன் இப்படி டிஎம்என் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது? விடை மிகவும் எளிது தான். ஏனெனில் ஒவ்வொருவரின் குணாதிசயமும் தனித்தனியானது தான் என்பதால் இந்த வேறுபாடு அமைகிறது.
ஒவ்வொரு மனிதனின் டிஎம்என்னையும் படமாக ஆக்கினால் அவர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இது சாத்தியம் தானா?
ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாற்பதினாயிரம் எண்ணங்களை எண்ணுகிறான். சிக்கலான உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனை ஆயிரம் தோன்றுகின்றனவோ!
நவீன காலத்திய மெஷின் லேர்னிங் மாடல்கள் இப்படிப்பட்ட படங்களைத் தொகுத்து அவற்றை மரபணுக்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு நடத்தினால் மனிதனைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் தனது எதிர்காலம் பற்றிச் சிந்தனை செய்ய உதவுவது இந்த டிஎம்என் தான். எதிர்காலத்தில் இது செம்மைப்படுத்தப்படுமோ?
வளர்ந்து வரும் மூளை அறிவியல் மனித மூளை பற்றிய இன்னும் பல அதிசய உண்மைகளைக் கண்டு பிடிக்கும் போது மனிதன் மாறி விடுவானோ என்னவோ! காலம் தான் இதற்கு பதில் சொல்லும்!