நம் இருவருக்கும் ஒரே விதமான உணர்ச்சிகள் உள்ளன; நாம் ஒரே சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆகவே சேர்ந்து வளமாக இருப்பதற்கு நாம் ஒரே மாதிரியாக எண்ணுவோம்.
எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலையில் புத்திசாலியான ஒருவன் பாதியை இழக்கவே முன்னுரிமை அளிப்பான். அவன் மீதி பாதியை வைத்து தனது இலக்குகளை அடைவான், ஏனெனில் முழுவதும் நஷ்டமாவதானது பொறுக்கவே முடியாது.
ஒரு எஜமானனானவன் முட்டுக்கட்டைகள் அவனை குழப்பமடையச் செய்யும் போது ஒரு நண்பனின் உதவியைக் கொண்டு அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வான். கண்கள் இருந்தாலும் கூட ஒரு விளக்கின் உதவியுடன் தான் அனைத்தையும் பார்க்க முடியும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
அஷ்டாவக்ரகீதை என்னும் நூல் நமக்கு எங்கிருந்து கிடைத்தது?
2
இந்த நூலை எழுதியது யார் ?
3
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், 700 சம்ஸ்க்ருத மொழி ஸ்லோகங்கள்; இந்த நூலில் எத்தனை அத்தியாயங்கள்? எத்தனை சம்ஸ்க்ருத மொழி ஸ்லோகங்கள்?
4
பகவத் கீதையில் கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோக விஷயங்கள் உள்ளன; இந்த நூலில் என்ன இருக்கிறது ?
5
இந்த நூல் தோன்றியதன் பின்னாலுள்ள கதை என்ன ?
6
ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இந்த நூல் எப்படி உரைசலை ஏற்படுத்தியது ?
7
தமிழிலும் ஆங்கிலத்திலும் இதைப் படிக்க முடியுமா ?
8
திருவண்ணாமலையில் இருந்த புகழ்பெற்ற முனிவருக்கும் இந்த நூலுக்கும் என்ன தொடர்பு ?
9
அத்வைதம் என்றவுடன் ஆதி சங்கரர் தான் நமக்கு நினைவுக்கு வரும். இந்த நூலின் காலம் என்ன ?
10
இந்த நூலில் காணப்படும் உவமைகள் என்ன ?
**********************************
விடைகள்
1.அஷ்டாவக்ரகீதை என்னும் நூல் நமக்கு மஹாபாரத்திலுள்ள வன பருவத்திலிருந்து கிடைத்தது.
***
2.இந்த நூலை எழுதியது ஒருவரல்ல; ஜனகர் என்ற மன்னருக்கும் அஷ்டாவக்ரர் (எட்டு கோணல்) என்ற முனிவருக்கும் நடந்த உரையாடலை வனபர்வத்தில் லோசம முனிவர் சொல்ல, அதை நமக்கு வியாச பகவான் தொகுத்தளித்தார்.
***
3. அஷ்டாவக்ரகீதை நூலில் இருபது அத்தியாயங்கள் 298 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன.
***
4.இந்த நூலில் முழுக்க முழுக்க அத்வைத தத்துவத்தின் சிறப்பே பேசப்படுகிறது. இறைவனும் நாமும் ஒண்டு ; அந்த நிலையை அடைய மாயத் தோற்றங்களை அகற்ற வேண்டும்; அதற்கு தூய வாழ்வும் நல்ல தவமும் தேவை.
***
5.அஷ்டாவக்ரகீதை நூல் தோன்றியதன் பின்னாலுள்ள கதை மிக நீண்டது; சுவையானது ; சுருக்கமாகத் தருகிறேன்; கருவிலுள்ள குழந்தை கூட விஷயங்களைக் கிரகிக்கும் என்ற விஞ்ஞான உண்மையயையும், சவுண்ட் என்னும் ஒலி SOUND EFECT அலை பற்றிய விஞ்ஞான உண்மையயையும் இந்தக்கதை விளக்குகிறது. அஷ்டாவக்ரரின் தந்தை கஹோலர் வேதம் கற்பிக்கும்போது தவறான உச்சரிப்பில் சொல்லவே , அவர் மனைவியின் கருப்பையில் இருந்த குழந்தை எட்டு கோணலுடன் பிறந்தது ; இதற்க்கு காரணம் அவர் என்று குழந்தை சொன்னதில் கஹோலருக்குக் கோபம்; வருத்தம் ; காலம் உருண்டோடியது ; ஜனக மன்னர் சபையில் இருந்த வந்தின் என்ற அறிஞரை வாதத்தில் வென்றால் பொருள்கிடைக்கும் எண்டு எண்ணி மிதிலைக்குச் சென்றார்; தோல்வியே கண்டார் ; வாதத்தின் விதிப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பிற்காலத்தில் அதே சபைக்கு வந்து வந்தினைத் தோற்கடித்து தந்தையின் விடுதலையைப் பெற்றார் ; அந்த சமயத்தில் இருவரும் உரையாடவே இந்த நூல் பிறந்தது.
***
6.ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கு இந்த நூல் மிகவும் பிடிக்கும்; அனல் சுவாமி விவேகானந்தருக்குஇந்த நூல் பிடிக்காது; ஒவ்வொரு முறை பட்டிக்கச் சொன்னபோதும் இரண்டு ஸ்லோகங்களைப் படித்துவிட்டு விவேகானந்தர் நிறுத்தி விடுவார். ஆயினும் ராமகிருஷ்ணர், விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவார் ; பின்னர் விவேகானந்தருக்கும் அதன் சிறப்பு விளங்கியது.
***
7.தமிழிலும் ஆங்கிலத்திலும் இதைப் படிக்க முடியும். தமிழில் 1937-ஆம் ஆண்டில் பாரத்வாஜ விஸ்வநாதன் (PLEASE GO TO Tamil Digital Library Website) மொழிபெயர்த்து வெளியிட்ட நூல் நன்றாக இருக்கிறது ; அவர் சம்ஸ்க்ருத மூலத்திலிருந்து மொழிபெயர்த்ததாகத் தோன்றுகிறது; ஏனையோர் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து மொழிபெயர்த்தால் சுமார் தான் ; ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்; 13- ஆவது அத்தியாய ஸ்லோகங்கள் அதனால் நான் மகிழ்சசியாக இருக்கிறேன் (யதா சுகம் அஹம் ) என்று முடியும். இதை மொழியாக்கத்தில் காண முடியாது. ஆங்கிலத்தில் சுவாமி நித்ய ஸ்வரூபானந்தா சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தந்துள்ளார்; கல்கத்தா அத்வைத ஆஸ்ரம வெளியீடு இது ; 1994 ஆம் ஆண்டில் எட்டாவது பதிப்பு வெளியாகியது.
***
8.திருவண்ணாமலையில் இருந்த புகழ்பெற்ற ரமண மகரிஷ க்கும் பிடித்தமானது இது; அவரே இதை மேற்கோள் காட்டிப் பேசி இருக்கிறார்.
***
9.அத்வைதம் என்றவுடன் ஆதி சங்கரர் தான் நமக்கு நினைவுக்கு வரும். உண்மைதான் ; அவருக்கும் முன்னதாகவே உபநிஷத்துக்களில் அத்வைதக் கருத்துக்கள் உள்ளன.அதையடுத்து வந்த மஹாபாரதத்தில் இது உள்ளதால் அவருக்கு மிகவும் முந்திய காலத்தில் இந்த நூல் தோன்றியது.
***
10. ஆதி சங்கரரின் விவேக சூடாமணியில் உள்ளத்தைப் போலவே கயிறு- பாம்பு, குடம்-ஆகாசம், கண்ணாடி -உலகப் பிரதிபலிப்பு, முத்து- சிப்பி முதலிய உவமைகள் உள்ளன.
–Subham—
Tags- அஷ்டாவக்ர கீதை, 10 கேள்விகள் , ஜனகர், வந்தின், கஹோலர் , எட்டு கோணல் உடல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festival days Adipperukku 3, Monday ;Adi amavasai 12,Wednesday ;Adip puram 14, Friday ; Independence Day, 15,Saturday ;Naga Panchami: 17 (Monday); Onam: 26, (Wednesday) – And Rik Upakarma; Yajur Upakarma 27 Thursday ; Raksha Bandhan: 28, (Friday) – Celebration of the bond between brothers and sisters; Gayatri japa ; Varalakshmi Vrat: 28, (Friday) – Fasting and prayer dedicated to Goddess Lakshmi.
Amavasya / new moon day 12; Purnima/ full moon day 28.
Ekadasi Fasting Days- 9; 23; Auspicious days – 30, 31.
Ashtavakra Gita (or ‘Ashtavakra Samhita’) is a dialogue between Ashtavakra and Janaka (king of Mithila) on the nature of soul, reality and bondage. It is in Mahabharata. It teaches Advaita Vedanta. Chapters one, five and thirteen are used. Following is taken from wisdomlib.org
***********
August 1 Saturday
Janaka: (CHAPTER 1)
1 How is knowledge to be acquired? How is liberation to be attained? And how is dispassion to be reached? Tell me this, sir.
***
August 2 Sunday
Ashtavakra:
2 If you are seeking liberation, my son, shun the objects of the senses like poison. Practise tolerance, sincerity, compassion, contentment and truthfulness like nectar.
***
August 3 Monday
3 You are neither earth, water, fire, air or even ether. For liberation know yourself as consisting of consciousness, the witness of these.
***
August 4 Tuesday
4 If only you will remain resting in consciousness, seeing yourself as distinct from the body, then even now you will become happy, peaceful and free from bonds.
***
August 5 Wednesday .
5 You do not belong to the brahmin or any other caste, you are not at any stage, nor are you anything that the eye can see. You are unattached and formless, the witness of everything – so be happy.
***
August 6 Thursday
6 Righteousness and unrighteousness, pleasure and pain are purely of the mind and are no concern of yours. You are neither the doer nor the reaper of the consequences, so you are always free.
***
August 7 Friday
7 You are the one witness of everything, and are always totally free. The cause of your bondage is that you see the witness as something other than this.
***
August 8 Saturday
8 Since you have been bitten by the black snake of the self-opinion that ‘I am the doer’, drink the nectar of faith in the fact that ‘I am not the doer’, and be happy.
***
August 9 Sunday
9 Burn down the forest of ignorance with the fire of the understanding that ‘I am the one pure awareness’, and be happy and free from distress.
***
August 10 Monday
10 That in which all this appears – imagined like the snake in a rope, that joy, supreme joy and awareness is what you are, so be happy.
***
August 11 Tuesday
11 If one thinks of oneself as free, one is free, and if one thinks of oneself as bound, one is bound. Here this saying is true, “Thinking makes it so”.
***
August 12 Wednesday
12 Your real nature is as the one perfect, free, and actionless consciousness, the all-pervading witness – unattached to anything, desireless and at peace. It is from illusion that you seem to be involved in samsara.
***
August 13 Thursday
13 Meditate on yourself as motionless awareness, free from any dualism, giving up the mistaken idea that you are just a derivative consciousness, or anything external or internal.
***
August 14 Friday
14 You have long been trapped in the snare of identification with the body. Sever it with the knife of knowledge that ‘I am awareness’, and be happy, my son.
***
August 15 Saturday .
15 You are really unbound and actionless, self-illuminating and spotless already. The cause of your bondage is that you are still resorting to stilling the mind.
***
August 16 Sunday
16 All of this is really filled by you and strung out in you, for what you consist of is pure awareness – so don’t be small minded.
***
August 17 Monday
17 You are unconditioned and changeless, formless and immovable, unfathomable awareness and unperturbable, so hold to nothing but consciousness.
***
August 18 Tuesday
18 Recognise that the apparent is unreal, while the unmanifest is abiding. Through this initiation into truth you will escape falling into unreality again.
***
August 19 Wednesday
19 Just as a mirror exists everywhere both within and apart from its reflected images, so the Supreme Lord exists everywhere within and apart from this body.
***
August 20 Thursday
20 Just as one and the same all-pervading space exists within and without a jar, so the eternal, everlasting God exists in the totality of things.
***
August 21 Friday
Janaka: (CHAPTER 13)
1 The inner freedom of having nothing is hard to achieve, even with just a loin-cloth, but I live as I please abandoning both renunciation and acquisition. (This way I live happily)
***
August 22 Saturday
2 Sometimes one experiences distress because of one’s body, sometimes because of one’s tongue, and sometimes because of one’s mind. Abandoning all of these, I live as I please in the goal of human existence. (This way I live happily)
***
August 23 Sunday
3 Recognising that in reality no action is ever committed, I live as I please, just doing what presents itself to be done. (This way I live happily)
***
August 24 Monday
4 Yogis who identify themselves with their bodies are insistent on fulfilling and avoiding certain actions, but I live as I please abandoning attachment and rejection. (This way I live happily)
***
August 25 Tuesday
5 No benefit or loss comes to me by standing, walking or lying down, so consequently I live as I please whether standing, walking or sleeping. (This way I live happily)
***
August 26 Wednesday
6 I lose nothing by sleeping and gain nothing by effort, so consequently I live as I please, abandoning loss and success. (This way I live happily).
***
August 27 Thursday
7 Frequently observing the drawbacks of such things as pleasant objects, I live as I please, abandoning the pleasant and unpleasant. (This way I live happily).
***
August 28 Friday
Ashtavakra: (CHAPTER 5)
1 You are not bound by anything. What does a pure person like you need to renounce? Putting the complex organism to rest, you can go to your rest.
***
August 29 Saturday
2 All this arises out of you, like a bubble out of the sea. Knowing yourself like this to be but one, you can go to your rest.
***
August 30 Sunday
3 In spite of being in front of your eyes, all this, being insubstantial, does not exist in you, spotless as you are. It is an appearance like the snake in a rope, so you can go to your rest.
***
August 31 Monday
4 Equal in pain and in pleasure, equal in hope and in disappointment, equal in life and in death, and complete as you are, you can go to your rest.
–subham—
Tags- Ashtavakra Gita, Quotes, August 2026 Calendar, Advaita, Mahabharata
ஆகஸ்ட் 2026 காலண்டரில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (நாலாயிர திவ்யப்பிரபந்தம்) பாடலிலிருந்து பொன்மொழிகள்;
தமிழ் வைஷ்ணவர்கள் திருமணங்களில் இந்தப் பாடலின் சில பகுதிகளை பாடுவதைக் கேட்டிருக்கிறேன் ; 143 பாடல்களில் சில முக்கியப்பாடல்களைக் காண்போம்.
ஆகஸ்ட் 1 சனிக்கிழமை
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா-504
***
ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா-505
***
ஆகஸ்ட் 3 திங்கட்கிழமை
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும் கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா-507
***
ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே-514
***
ஆகஸ்ட் 5 புதன்கிழமை
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம்—518
***
ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய்—524
***
ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை
மாட மாளிகை சூழ் மதுரை பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மா மத யானை உதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே—538
***
ஆகஸ்ட் 8 சனிக்கிழமை
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே-545
***
ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்—551
***
ஆகஸ்ட் 10 திங்கட்கிழமை வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும் தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான்–556
*** ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுத கனா கண்டேன் தோழீ நான்–557 **** ஆகஸ்ட் 12 புதன்கிழமை இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து மந்திர கோடி உடுத்தி மண மாலை அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழீ நான்—558
*** ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழீ நான்–559 *** ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை கதிர் ஒளி தீபம் கலசம் உடன் ஏந்தி சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான்–560 *** ஆகஸ்ட் 15 சனிக்கிழமை
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான்–561 *** ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான்–562 *** ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான்–563 *** ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்ட கனா கண்டேன் தோழீ நான்—564
**** ஆகஸ்ட் 19 புதன்கிழமை
குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட கனா கண்டேன் தோழீ நான்–565 **** ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே—566
***
ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே—567
*** ஆகஸ்ட் 22 சனிக்கிழமை
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன் உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தல திடரில் குடியேறி தீய அசுரர் நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே—568
***
ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை
தட வரையின் மீதே சரற்கால சந்திரன் இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே—569
***
ஆகஸ்ட் 24 திங்கட்கிழமை
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே—570
***
ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே—571
***
ஆகஸ்ட் 26 புதன்கிழமை
போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம் சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே—572
***
ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செம் கண் கரு மேனி வாசுதேவனுடைய அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே—573
***
ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே—574
**** ஆகஸ்ட் 29 சனிக்கிழமை பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால் சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே–575 *** ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும் வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—576
***
ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே–646
—Suhamm–
Tags- ஆகஸ்ட் 2026 காலண்டர், ஆண்டாள், நாச்சியார் திருமொழி, பொன்மொழிகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜூலை 2026 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
தலையணையில் இருக்குது ரகசியம்!
ச. நாகராஜன்
நம் அனைவருக்குமே நன்கு தெரியும் தூக்கம் நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது என்று!
உயிரணுக்களை அது மீட்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. நம் உடல் எடையைக் குறைத்து மெலிய வைக்கிறது. இதனால் டயபடீஸை நீக்க உதவுகிறது. எதிர்காலத்தில் டெமின்ஷியா வராமல் தடுக்கிறது.
இவையெல்லாம் போக இப்போது சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உண்மையைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.
தூக்கத்தில் நாம் எப்படி தலையணையை உபயோகிக்கிறோம் என்பதும் ஒரு முக்கியமான விஷயமாக அமைகிறது என்பதை சீன ஆய்வு தெரிவிக்கிறது.
கண்களின் பாதுகாப்பிற்கும் பார்வைத் திறனுக்கும் உதவுவது நாம் எப்படி உறங்குகிறோம் என்பது தான்!
க்ளாகோமா பற்றி ஆய்வு நடத்தும் க்ளீவ்லாந்து க்ளினிக், “கண்களில் உள்ள விழிக்கோளத்தில் (Eyeball) ஏற்படும் அழுத்தமானது கண்ணைப் பாதிக்கும் என்று தெரிவிக்கிறது. இதனால் க்ளாகோமாவின் பாதிப்பு அதிகமாகி, சிலருக்குப் பார்வையே போய்விடும் நிலையையும் ஏற்படுத்துகிறது.
இதைப் பற்றி ஆராயப் புகுந்த கண் இயல் (Opthalmology)
மருத்துவக் குழு ஒன்று இது பற்றி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மொலோஜியில், 2026ம் ஆண்டு, வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் தூக்கத்தின் போது உடலின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த கண் அழுத்தமாகிறது என்று தெரிவிக்கிறது
.
இரண்டு தலையணைகளைத் தலைக்குப் பின்னால் வைத்து 20 முதல் 35 டிகிரி வரை சாய்ந்த கோணத்தில் இருக்க வைத்துப் பார்த்ததில் கண்களின் அழுத்தம் அதிகமாகிறது என்றும் தலையணை இல்லாத போது இந்த அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு 144 பேர்களிடத்தில் நடத்தப்பட்டது.
ஆக தலைக்குப் பின்னால் உயரமாக இரண்டு தலையணைகளைப் பயன்படுத்தக் கூடாது.
தூங்கச் செல்லும் போது நமக்குப் பிடித்த பாடலைக் கேட்பது நமக்கு நல்ல ஒரு ஓய்வை மூளைக்குத் தருகிறது.
முதலில் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது முக்கியமானது. அடுத்து எப்படித் தூங்குகிறோம் என்பது முக்கியமானது.
ஒரு நாளைக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். ஆல்கஹால் (மது அருந்துவது) அருந்துவது, தூக்க மருந்தை உட்கொள்வது, கண்ட நேரத்தில் உறங்குவது ஆகிய இவையெல்லாம் தூக்கத்தின் தரத்தை வெகுவாகத் தாழ்த்தும்.
அடுத்து எப்படி உறங்குவது என்று பார்த்தால் இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது மிகவும் மேலான நிலை என்பது தெரியவருகிறது.
ஒரு தலையணையை முழங்காலுக்குக் கிழே வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்க ஆரம்;பித்தால் உடல்நலம் மேம்படும் என்பது ஆய்வின் முடிவு.
ஆகவே ஒரு தலையணையத் தலைக்கும் ஒரு தலையணையை இடது புறமாகப் படுக்க முழங்காலுகுக் கீழேயும் வைத்து சீராக ஒரே நேரத்தில் அன்றாடம் உறங்கும் பழக்கத்தை மேற்கொண்டு இசையைக் கேட்டவாறே தூங்க ஆரம்பிக்கலாம். ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை உறங்கலாம்.
Ruled for 16 years; donated a lot to poet Perumkundrur Kizar.
He established Chatukka Bhutam; we hear many stories about Chatukka Bhutam in Tamil epic Silappadikaram.
Chatukkam is City Square.
***
Item 683 Committed Suicide
Kanaikkal Irumporai; Chozan Ko Chenganan (Red Eyed Choza) defeated this king and put him in Jail; when he asked for water the prison warders deliberately delayed it to insult him; he starved himself to death.
A great king who upheld self -respect.
All Tamil poems encourage death instead of losing one’s self-respect.
***
Item 684
Anthuvan Cheral Irumporai; father of Selvak Kadunko Vazi Adan – selvak kadunko vaazi aadan.
He ruled from Karur (also called Vanji);
His enemy was Choza king Mudithalai Kopperu Narkilli.
***
Item 685
Palai Padiya Perunkadunko—paalai paadiya –
Composed many poems under Palai genre.
Poetess Miss Peymakal Ilaveyini praised him.
He donated Golden Lotus to poets.
***
Item 686
Marutham Padiya Ilam kadunko—marutham paadiya –
He composed many poems under Marutham genre
***
Item 687 Chera Kings in Inscriptions!
Though we have lots of names of kings in the Sangam literature we need archaeological proof to confirm the details.
For the first time, we have three kings mentioned in Pukalur Inscriptions.
Following kings were mentioned in it:
Ko Adan Sellirumporai;
Perum Kadungko;
Ilam Kadungko.
From the Pathitruppattau book, scholars concluded that we have two sets of Chera Kings ruling simultaneously; they were Cheras and Irumporais.
***
Item 688
The above information from Sangam book Pathitruppathu is valuable historical information. From no other Sangam book we have such orderly information. The ruling years of each king shows that someone had collected and documented such information. The only problem is two kings ruling at the same time in two different places in Chera kingdom. If scholars sit together the problem can be solved. Already Sesha Iyer and others have written books on Chera history. But a co ordinated attempt using coins, inscriptions and Sanskrit Books is needed.
***
Item 689
Among the Pandyas we have reliable information from Velvikkudi copper plates and Purananuru. We have precise information of Kaddungkon (590-620 CE) who drove out the Kalbhras, a mysterious gang. So far we can only guess who they were.
Later we have
Maravarman Avani sulamani- 620-645 CE
Senthan- 645-670
Arikesari Maravarman 670-700
Kochadaiyan Ranadheeran 700-70
Maravarman Rajasimhan – 730-765
Parantaka Nedunchadaiyan 756-815
Srimara Srivallabhan- 815-862
Varagunan II- 862-885
Parantaka Veeranarayanan- 862-905
Maravarman Rajasimhan- 905-920 CE
Chera Kings and Pandya Kings had an average 30 years ruling period which is above the average of other areas.
We did not have this much information from Sangam books about the Early Pandyas.
***
Item 690
Sangam Age Pandyas
My research shows Kalidasa knew Mudukudumi Peruvazuthi who performed innumerable Yagas and erected Yupa pillars according o Purananuru. Kalidasa in his Raghuvamsam linked the Agastya and Pandyas for the first time in literature; this Mudukudumi Peruvazuthi must have lived in the first century BCE or a little earlier. Kalidasa helps us to identify him.
Tiruvilayadal Puranam gives a complete list of Pandyas up to Tiru Gnana Sambandar 630 CE and no attempt has been made to correlate that information with other literature.
It is strange that neither Kalidasa nor Kharavela (130 BCE) mentioned Chozas or Cheras. My guess is that just after or just before Karikal Choza, Pandyas had an upper hand. Sri Lanka’s Mahavamsam also said that Vijaya got princesses from Pandya country for himself and other ministers.
–Subham–
Tags- Zoological Facts from Sangam Book, Purananuru wonders-45, Tamil Encyclopedia-85, One Thousand Interesting Facts -Part 85, Mountain goats, Nilgris Tahr, item 690
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 89; இந்து மத கலைச்சொல் அகராதி-89(Post.16,031)
Written by London Swaminathan
Post No. 16,031
Date uploaded in London – 29 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து எஸ் –ஸில் துவங்கும் எழுத்துக்கள்
சபா – சபை
ரிக் வேத காலம் முழுதும் அதே பொருளில் சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்காலத்து திருக்குறளிலும் பயிலப்படும் சொல். தொல்காப்பியர் ச எழுத்துக்களுக்குத் தடை விதித்ததால் தமிழில் அவை என்று வரும்.
லோக்சபை , ராஜ்ய சபை, சட்ட சபை என்பன எல்லோரும் அறிந்த சொற்கள் .
***
சசி- இந்திரனின் மனைவி ; இன்னொரு பெயர் இந்திராணி ; தமிழில் அயிராணி; ரிக் வேதம் முதல் தொடர்ந்து வரும் பெண்மணி; இன்றுவரை பெண்கள் சூட்டிக்கொள்ளும் பெருமைமிகு பெயர் .
***
சாத்யர்கள்
ஒருவகை தெய்வீக புருஷர்கள் . பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட உலகத்தில் வசிப்பவர்கள்; வேதத்தின் சடங்குகளும் பிரார்த்தனைகளும் இவர்களின் உருவங்களாக விளங்குகின்றன. அவர்களின் எண்ணிக்கை 12 அல்லது 17 என்று நூல்கள் விளம்பும்; தட்சனின் மகளான சாத்யாவுக்கும் தர்மனுக்கும் பிறந்தவர்கள் என்று புராணங்கள் பகரும்.
***
சகரர் – சாகரம்
சாகரம் என்றால் கடல் ; இந்தப்பெயர் சகரர்கள் மூலம் ஏற்பட்டது .
சூர்ய வம்ச அரசனான பாஹு என்பவன் அயோத்தியில் ஆளுகையில் அவனை ஹேஹய வம்சத்தினர் தோற்கடித்துக் காட்டுக்கு அனுப்பினார்கள்; பாஹு, காட்டில் இரண்டு மனைவியருடன் வசித்த காலையில், ஒரு மனைவி கருவுற்றாள்; இன்னொரு மனைவி பொறாமை கொண்டு அவளுக்கு மருந்து கொடுத்து பிள்ளை வெளியே வராமல் தடுத்தாள். இதற்கிடையில் பாஹு இறக்கவே கர்ப்பவதியும் சிதைத் தீயில் ஏறி உயிர்விட விரும்பினாள்; ஆனால் ஒளர்வ முனிவர் அவளைத் தடுத்து, பிறக்கப்போகும் குழந்தை உலகையே ஆளும் என்றார் அவ்வாறே சகரன் என்னும் குழந்தை பிறந்தது; அவன் வளர்ந்து அரசன் ஆகியவுடன் ஹேஹய வமசத்தை அழித்தான்; அவனுக்கும் இரண்டு மனைவிகள் ; சகர மன்னன் யவனர்களையும் சகர்களையும் வென்று அவர்களை இனம் காட்ட ஒவ்வொரு வெளிநாட்டு எதிரிகளும் தலையில், முகத்தில், வெவ்வேறு இடங்களில் மயிர்களை மழிக்கும் முறையை அமலுக்கு கொண்டுவந்தான் சகரனுக்கு சுமதி, கேசினி இரண்டு மனைவியர். கேசினிக்கு அசமஞ்சன் என்ற ஒரே புதல்வன் ; சுமதிக்கு 60,000 புதல்வர்கள் . இந்த எண் சம்ஸ்க்ருத மொழியில் பயன்படுத்தப்படும் மரபுச் சொல்; இதன் பொருள் எண்ணற்ற புதல்வர்கள் என்பதே.
சகர மன்னன், அஸ்வமேத யாகம் செய்தபோது அந்த அஸ்வம்/ குதிரை காணாமற்போனது ; சகரனின் புதல்வர்கள் 60,000 பேரும் பூமியைத் தோண்டி பாதாள உலகம் சென்றபோது தவம் செய்யும் கோலத்தில் இருந்த கபிலர் அருகில் குதிரை நின்று கொண்டிருந்தது சகர புத்திரர்கள் அவரை ஏசினார்கள்; கபிலர் கண்ணைத் திறந்தவுடன் தவ வலிமையில் 60,000 பேரும் சாம்பலாயினர்.
அயோத்தியில் சகரனுக்கு அடுத்து ஆட்சி புரிந்த அசமஞ்சனுக்கு அனுமத் என்ற ஒரே புதல்வன் ; அவன் ஆட்சிக்காலத்தில் கபிலரை அணுகி இறந்த புத்திரர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும்படி வேண்டினான்; அவரும் அருள்கூர்ந்து அப்படி நடக்கும்; ஆனால் அது அனுமத்தின் பேரன் பகீரதன் கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு கொண்டுவரும்போது நடக்கும் என்றார் ; அவர் சொன்னபடியே அனுமத்துக்குத் திலீ பன் பிறந்தான் அவனுக்கு மகனாக பகீரதன் அவதரித்தான் . அந்த பகீரதன், கடும் தவம் இயற்றி கங்கை நதியை கைலாசத்தில் உறையும் சிவபெருமான் முடியிலிருந்து இறக்கவே அது வங்கக்கடலிலும் ஏனைய கடல்களிலும் பாய்ந்து சகர புதல்வர்களின் அஸ்தியைக் கரைக்கவே அவர்கள் சுவர்க்கம் ஏகினர்; அன்று முதல் கங்கைக்கு பாகீரதி என்ற பெயரும் கடலுக்கு சாகரம் என்ற பெயரும் ஏற்பட்டது .
***
ஸஹதேவன்
பஞ்ச்ச பன்னாட்டவர்கள் என்னும் ஐவரில் கடைக்குட்டி ; பாண்டு மன்னனின் இரண்டாவது மனைவியாகிய மாத்ரி என்ற ராணி மூல ம் பிறந்தவர்; இவருடன் இரட்டையர்களாக நகுலனும் பிறந்தான் ; இவர்கள் இருவரும் ரிக் வேத இரட்டையர்களாக அஸ்வினி தேவர்களின் புதல்வர்கள் அல்லது அம்சம் உடையோர் என்பது கருத்து ; வான சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவன்
***
சைரிந்திரி-
வனவாச காலத்தில் கடைசி ஆண்டான 13 ஆவது ஆண்டில் பாண்டவர்கள் மறைந்திருந்து வாழ வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விதி; இதனால் பாண்டவர்களைப் போலவே அவர்களுடைய மனைவி திரவுபதியும் சைரந்தரி என்ற புனைப்பெயர் கொண்டு விராட தேசத்தில் பணிப்பெண்ணாகப் பணி புரிந்தாள்; அப்போது மன்னனின் மைத்துனன் கீசகன் இவளிடம் வாலாட்டவே, பீமன் மூலம் அவளைத் தீர்த்துக் கட்டினாள் சைரந்தரி.
***
சக த்வீபம்
புராண பூகோளப்படி , இந்த பூமி ஏழு த்வீபங்களாகப் பிரிக்கப்பட்டது அதில் ஒன்று சக த்வீபம். இது எந்த இடம் என்பதில் குழப்பம் நிலவுகிறது வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு இடங்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர் . சகர்களுடன் தொடர்புடையது ஆகையால் மத்திய ஆசியாவின் ஒரு பகுதி அல்லது தேக்கு மரம் நிறைந்த பக்தி என்றெல்லாம் எழுதியுள்ளனர் . ஈரான் என்னும் பாரசீக நாட்டிலிருந்து வந்த மாக பிராமணர்கள் , இந்த இடம் ஈரான் என்று காட்டுகிறது . த்வீபம் என்றால் கடல்களுக்கு இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு என்பது பொருள்
***
சக சகாப்தம்
இது இந்தியாவின் தேசீய ஆண்டு ; வானொலி அறிவிப்பில் தினமும் கேட்கலாம் ; இது பொது ஆண்டு 78- ல் (78 CE) துவங்கியது தென் கிழக்கு ஆசிய கல்வெட்டுகளிலும் காணலாம் சாலிவாகன மன்னர்கள் துவக்கிய ஆண்டு இது
***
சாகல்ய, சாகடாயன
பாணினிக்கும் யாஸ்கருக்கும் முன்னர் வாழ்ந்த புகழ்பெற்ற இலக்கண வித்தகர்கள் ; இவர்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர்சம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதினார்கள் ; பாணினியின் குறிப்புகளிலிருந்து இவர்களுடைய இலக்கணத்தை சிறிது அறிய முடிகிறது
***
சகரர்கள்
வெளிநாட்டு இனத்தினர் ; இந்தியாவுக்குள் புகுந்து இந்து மாயமா ஆனவர்கள் ; அதற்கு முன்னால், விக்ரமாதித்தன் போன்றோர் இவர்களை விரட்டி வெற்றி கண்டனர்; சகர மன்னனும் இவர்களை வென்றதாக புராணங்கள் புகலும் .
***
சாகா –
மரத்தின் கிளை அல்லது ஒரு பிரிவு என்பது பொருள்; வேதத்தை ஒவ்வொரு முனிவரும் சொல்லிக்கொடுத்த போது சில வேறுபாடுகள் பாணி, உத்தி, காணப்படுகிறது ; அதை அந்த முனிவரின் பெயரில் சாகை என்பார்கள் ; ஆர் எஸ் எஸ் இயக்கம் அதன் கிளைகளை ஷாகா என்று அழைக்கிறது .
***
சக்ர – இந்திரனின் இன்னும் ஒரு பெயர்.
***
சக்தி- சிவனின் மனைவி பெயர் ; பொதுவாக தேவி அல்லது விசை , ஆக்கம் என்ற பொருளும் உண்டு ; கிண்ண சக்தி கிரியா சக்தி இச்சா சக்தி பராசக்தி என்ற பொருளில் தேவீ மஹாத்ம்யயங்களில் காணலாம்; வசிஷ்ட முனிவரின் மகன் பெயரும் சக்தி .
***
சகுனி
காந்தாரியின் சகோதரன் ; சூதாட்டத்திலும் மோசடியிலும் வல்லவன் ; கெளரவர்கள் இவனைக்கொண்டு பாண்டவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்; அதன் விளைவாக அவர்கள் சூதாட்டத்தில் நாட்டை இழந்து 13 ஆண்டுகள் கனகத்துக்குச் செல்ல நேரிட்டது.
To be continued………….
Tags- சகுனி, சபா, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 89; இந்து மத கலைச்சொல் அகராதி-89
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
குற்றாலக் குறவஞ்சி நூலைஎழுதியவர் யார் ? எப்போது எழுதினார் ?
2
இந்த நூலில் குற்ரால அருவி பற்றிய புகழ் பெற்ற பாடல் உள்ளது; அது என்ன?
3
குறவஞ்சி என்றால் என்ன ?
4
மலைவளம் பற்றி குறத்தி என்ன சொல்கிறாள் ?
5
குறத்தியை மக்கள் நாடுவது ஏன் ?
6
எந்தக் கடவுளை போற்றும் பாடல் இது ?
7
இந்த நூலில் வரும் கதாநாயகி யார்?
8
இந்த நூலில் சொல்லப்படும் கதை என்ன?
9
குறத்தி கூறும் மலைகளின் பட்டியல் என்ன ?
10
இந்த நூல் எங்கே அரங்கேறியது?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்
1.இதனை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர் ஆவார். இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்.
வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய கவிராயர் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்)
**
2.திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
இது போன்ற பாடல் குறுந்தொகை 278 லும் உண்டு. தந்தைக் குரங்கு சிந்தும் கனிகளைக் குட்டிக் குரங்குகள் உண்டு உண்டு மகிழ்ந்தனவாம்.
**
3. குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. இதில் ஒரு பெண் கொள்ளும் காதல் , அந்த காதல் நோயைத் தீர்க்க குற்றத்தில் சூழும் ஆரூடம் , அப்போது அந்த நாட்டின் மலை வளம் , இயற்கை வனப்பு முதலியானவற்றைக் குறத்தி வருணிப்பாள்.
6.குற்றாலநாதர் என்னும் சிவபெருமானைப்போற்றும் நூல் இது.
**
7.இந்த நூலில் வரும் கதாநாயகி யின் பெயர் வசந்தவல்லி; அவள் குற்றாலத்தில் உறையும் சிவபெருமான் மீது காதல்/பக்தி கொள்கிறாள் .
**
8.குற்றாலநாதரின் திருவுலா தொடங்குகிறது குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். இறைவனின் பவானியைக் காண காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். அப்போது குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள்; குறத்தியின் பெயர் சிங்கி. அந்த நேரத்தில் அவள் கணவன் சிங்கன் avalaith தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.
9.குறத்தி கூறும் மலைகளின் பட்டியல்:
கயிலைஎனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே
சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே
சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே
வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை அம்மே
வான்இரவி முழைகள்தொறும் நுழையுமலை அம்மே
துயிலுமவர் விழிப்பாகி அகிலமெங்கும் தேடும்
துங்கர் திரி கூடமலை எங்கள்மலை அம்மே;
கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே;
சயில மலை என்பது சஹ்யாத்ரி என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையாக இருக்கலாம். இது வடக்கில் மகாராஷ்டிரா மாநிலம் வரை ஆயிரம் மைல்கள் நீண்டது.
விந்தை மலையென்பது இந்தியாவின் நடுவில் செல்லும் விந்திய மலையாக இருக்கலாம். (பழையவுரைகாரர்களின் விளக்கம் சரியில்லை)
வேள்விமலை (தற்காலத்தில் வேளிமலை அல்லது குமாரகோவில் என அழைக்கப்படுகிறது) என்பது முருகப் பெருமான் வள்ளிக்குத் திருமணம் நடந்தபோது வேள்வி செய்த இடமாகும். இது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தக்கலை அருகில் உள்ளது
**
10. தென்காசிக்கு அருகிலுள்ள திருக்குற்றாலநாதரின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.
–subham—
Tags- குற்றாலக் குறவஞ்சி , 10 கேள்விகள் , மலைகள் பட்டியல் , திருக்குற்றாலநாதர் , திரிகூட ராசப்ப கவிராயர்,வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு, தேனருவி.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
26-7-26 தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!
சிறுவர் மணி
ச. நாகராஜன்
கடலைச் சுத்தமாக்கும் பாயன் ஸ்லாட்
நெதர்லாந்தைச் சேர்ந்த பதினெட்டே வயதான இளைஞனான பாயன் ஸ்லாட் கடல் நீரில் சேர்ந்துள்ள அசுத்தங்களை அகற்றி நீரைச் சுத்தமாக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளான். கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தனது நவீன அமைப்பினால் அகற்றுவதே பாயன் ஸ்லாட்டின் நோக்கம். 2040ம் ஆண்டு உலகில் உள்ள கடல் கழிவுகளில் 90 சதவிகிதம் அகற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடும் இந்த இளைஞன் 28000 கிலோ கிராம் கழிவை பசிபிக் கடலிலிருந்து இதுவரை அகற்றியுள்ளான்.
இளைஞர்களுக்கு முன் மாதிரியாக உள்ள ஸ்லாட்டை உலகமே பாராட்டுகிறது.
ஏழைகளுக்கு உதவும் ஜகில் ஜாக்ஸன்
சிகாகோவின் தென்பகுதியில் வாழும் பதினேழே வயதான ஜகில் ஜாக்ஸன் தன் அத்தையுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறான். ஆசீர்வாதப் பைகள் எனப்படும் ‘ப்ளெஸ்ஸிங் பேக்’ கைத் தயார் செய்து உலகில் எட்டு வயதே ஆன அனாதைக் குழந்தைகளுக்கு விநியோகித்து வருகிறான். இந்தப் பையில் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், சாக்ஸ் உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான் பாரக் ஒபாமா ஜாக்ஸனைப் பாராட்டியுள்ளார். ஆங்காங்கே உணர்ச்சியூட்டும் உரைகளை ஆற்றி பலரையும் தனது சேவையில் இணைத்து வருகிறான் ஜாக்ஸன்.
கணிதத்தில் சூரன்
இந்தியாவைச் சேர்ந்த பதினான்கே வயதான ஆர்யன் சுக்லா நான்கு இலக்க எண்கள் நூறை 30.9 விநாடிகளில் கூட்டி சாதனை படைத்துள்ளான். ஒரே நாளில் இதுவரை இருந்த ஆறு கணித சம்பந்தமான சாதனைகளை இவன் முறியடித்திருப்பது உலகினரை வியக்க வைத்திருக்கிறது.
நீளமான நாக்கு!
அமெரிக்காவைச் சேர்ந்த சனல் டாப்பர் என்ற பெண் தான் உலகில் உள்ளவர்களில் நீளமான நாக்கு கொண்டவராக சாதனை படைத்துள்ளார். இவரது நாக்கின் நீளம் 9.75 செண்டிமீட்டர். இதுவரை இவரைத் தோற்கடிக்க யாரும் முன்வரவில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Words beginning with letter “S”
Sabha – assembly ; used in Rig Veda and Sangam Tamil literature.In Tamil it becomes Avai, because Tamil Grammar said no word should begin with SA. But nowadays used verywhere. Indian parliament has two chambers
Lok Sabha
Rajya Sabha
***
Sachi- Wife of Indra; another name Indrani; she is in the oldest book Rig Veda.
***
Sadhyas – saadhyaas
A class or gana of inferior deities. They are the personified rites and prayers of he Vedas who dwell with the gods or in the intermediate region between heaven and earth.Their number is 12 according one authority and 17 according to another. Puranas make them sons of Dharma and Sadhya (saadhyaas) , daughter of Daksha.
***
Sagara
Sea is called Saagara in Sanskrit because they were dug by the Sagaras.
Sagara was a king of Ayodhya and son of King Bahu, who was driven out of the country by the Haihayas. Bahu took refuge in the forest with his two wives. One of them was pregnant. Rival wife gave her a drug to prevent her delivery and hence the birth of the baby was delayed. In the meantime, Bahu died and she wanted to die with him in the pyre. But sage Aurva prevented her and told her that she would get a baby soon who will be a great king. And the baby was named Sagara. When he grew up, he vowed to eliminate the Haihayas and regain the lost kingdom. He defeated Yavanas and other foreign tribes and made them to shave off their hair fully or partly. Sagara married two wives Sumati and Kesini. Asamanja was born to Kesini and Sumati gave birth to 60,000 sons (In Sanskrit 60,000 is a phrase which mean s a lot). When Sagara did Ashvamedha Yaga, the horse disappeared; Sagara’s sons dug earth and found the horse in the Patala Loka (under earth) and meditating sage Kapila was near the horse. Thinking that he stole the horse the sons of Sagara threatened him. When Kapila opened his eyes, the sons were burnt to ashes. Asamanja’s son Anumat came to Kapila and begged him to send the dead ones to heaven. Then Kapila said that it will be done when The Ganges River flowed over the ashes. Anumat’s son was Dilipa and his son was Bhagiratha who brought Ganges from heaven to earth. The Holy River washed away the ashes of Sagaras. The water filled the Bay of Bengal and other seas. Then sea was called Saagara and the Ganga River was called Bhagirathi to honour Bhagiratha.
***
Sahadeva
One of the Five Pandava brothers; born to Madri with his twin Nakula. Both are considered sons of Vedic Twins Aswin brothers. Sahadeva, the youngest of the five was an expert in Astronomy.
***
Sairindhri- Sairindhri is Draupadi, the wife of the Pandavas, for whose sake the Kicakas have been slain, and she is disguised in Virata’s court.
During the thirteenth year of forest life, that is incognito period, Draupadi assumed this name and worked in Vrata’s court.
***
Saka dwipa
One of the seven islands of Puranic cosmology
The Maga Brahmins who came from Iran are associated with Saka Dwipa.
The identification is confusing ; some link them to Saka Tree area and others associate them to Saka Tribe.( Scythian) tribes of Central Asia.
***
Saka era
The Saka era is a historical calendar year-counting system starting in 78 CE, widely used across India and Southeast Asia and adopted as the Indian National Calendar in 1957
***
Sakalya and Saktayana
Ancient Grammarians ; Both lived before Panini and Yaska, the etymologist.
***
Sakas
Foreign tribes identified with Yavanas or Scythians. King Sagara conquered them.
***
Sakha-saakhaa- branch. Vedic recensions are called Sakhas . RSS gatherings are also called Sakhas/ branches.
***
Sakra – another name of Indra.
***
Sakti- Goddess; general meaning Power. Called by many names such as Gnana Sakti, Para Sakti, Kriya Sakti etc; also name of Vaishtha’s son.
***
Sakuni
Brother of Quuen Gandhari; he was an expert in gambling; he knew the cheating techniques in the game and defeated the Pandavas. They were driven out of the country and they spent 13 years in the forest.
To be continued………….
Tags- Sakuni, Sabha, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 88; இந்து மத கலைச்சொல் அகராதி-88