Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் மே 2026 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஏரோபிக் ஃபிட்னெஸ் என்றால் என்ன? ஏரோபிக் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஒரு அலசல் ஆய்வு!
ச. நாகராஜன்
வயதாக வயதாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் பல; நமது மூளையும் வயது ஏற ஏற மாறுகிறது. உயிரணுக்களின் அழிவினால் மூளை சற்று சிறிதாகிறது.
ஆனால் எல்லோருக்கும் இந்த மாறுதல் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வாழ்க்கைமுறை மாற்றத்தால் நமது மூளையில் ஏற்படும் உயிரணுக்களின் அழிவைக் கட்டுப்படுத்தலாம். உடல் பயிற்சி, உணவுத்திட்டம், சமூகத் தொடர்புகள் ஆகியவை மூலம் மூளையின் செயல் திறனை அழியாமல், குறையாமல் வைத்துக் கொள்ள முடியும்.
ஏரோபிக் ஃபிட்னெஸ் (Aerobic Fitness) என்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரோபிக் ஃபிட்னெஸ் என்றால் என்ன, அதை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியமான உடல் தகுதியே ஏரோபிக் ஃபிட்னெஸ் ஆகும்.
ஓட்டப் பயிற்சி, நீச்சல், சைக்கிள் சவாரி, நடனமாடுதல், நடைப் பயிற்சி உள்ளிட்டவை ஏரோபிக் ஃபிட்னெஸிற்கான வழிமுறைகளாகும். இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 55 வயதை அடைந்தவர்களும் அதற்கு மேற்பட்ட வயதை அடைந்தவர்களும் ஏரோபிக் ஃபிட்னெஸ் உடையவர்கள் என்றால் அவர்களது மூளையின் வெளி உறை கூடுதல் கனம் உள்ளதாக இருக்கும். (greater cortical thickness or greater thickness of the brains’s outer layer). இந்த வெளி உறை கனத்திற்கும் நினைவாற்றல் உள்ளிட்ட மூளைத் திறனுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பதை பல சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
18 வயதிலிருந்தே இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அமெரிக்க ஆய்வு ஒன்றில் 159 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் பல உண்மைகள் தெரியவந்தது. ஏரோபிக் ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு அல்ஜெமிர், டெமின்ஷியா போன்ற மறதி நோய்கள் வருவது குறைவாகிறது.
ஏரோபிக் ஃபிட்னெஸ் என்பது ஒரு லயத்துடன் திருப்பித் திருப்பி உடலில் உள்ள பெரிய தசைப் பகுதிகளை இயக்கும் உடல் இயக்கமாகும். இந்த இயக்கமானது heart rate எனப்படும் இதய நடையை அதிகரிக்கச் செய்வதோடு உங்கள் உடல் எவ்வளவு ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது என்பதையும் தெரிவிக்கும். இதய நோய்கள், டயபடீஸ், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் குறைக்கும்.
ஏரோபிக் என்ற சொல்லுக்கே “ஆக்ஸிஜனுடன்” என்று அர்த்தமாகும். ஏரோபிக் பயிற்சிகளைச் செய்யும் போது சுவாசமானது தசைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தி உங்களின் இயக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது.
ஏரோபிக் பயிற்சியில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, கார்டியோ சாதனங்களை உபயோகிப்பது, நீச்சலடிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
நடைப்பயிற்சி : மிகவும் சுலபமான எளிய பயிற்சி இதுவே தான்.
சைக்கிள் ஓட்டுவது: ஏற்றச் சரிவுகள் உள்ள இடங்களில் சைக்கிள் ஓட்டுவது சிறப்பாகும். ஆர்த்ரிடிஸ் அல்லது மூட்டுகளைப் பாதிக்கும் நோய்களுக்கு சைக்கிள் ஓட்டுவதே சாலச் சிறந்தது நடைப்பயிற்சியில் ஏற்படுவது போல முதுகு, இடுப்பு, மூட்டுக்கால், உள்ளிட்ட பகுதிகளில் . சைக்கிள் ஓட்டுவது அழுத்தத்தைத் தராது.
கார்டியோ எக்விப்மெண்ட் : உங்கள் ஹார்ட் ரேட்டை அதிகரிக்கச் செய்யும் எந்த இயந்திர சாதனமும் இந்த வகையில் அடங்கும். படிகளில் ஏறுவதற்கான இயந்திர சாதனம், ட்ரேட்மில் உள்ளிட்ட சாதனங்கள் உடல்பயிற்சிக் கூடத்தில் (GYM) நிச்சயமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தலாம்.
நீச்சல் பயிற்சி : கை, கால்களை அசைத்து நீரில் முன்னேறிச் செல்லும் நீச்சல் பயிற்சி மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல பயிற்சி. தக்க பயிற்சியாளருடன் முறையாக நீச்சலைக் கற்று அபாயமில்லாதபடி நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஏரோபிக் பயிற்சிகளின் பலன்கள்
வலுவான எலும்புகளை உருவாக்கும்
தசை வலுவை அதிகரிக்கும். நெகிழ்வுத் தன்மையும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் உண்டாகும்
உடலை எப்போதும் பாலன்ஸுடன் வைத்திருக்க உதவும்
மனோசக்தியை அதிகரிக்கும்.
உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
பக்கவாதம், டயபடீஸ் வராது.
நுரையீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
நல்ல கொலஸ்ட்ராலான ஹெச் டி எல் அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவை சரியானபடி நிர்வகிக்க உதவும்.
இந்தப் பயிற்சிகளைச் செய்யும் போது ஜாக்கிரதையாகவே செய்தல் வேண்டும். சுளுக்கு, எலும்பு முறிவு, மூட்டு வலி, தசைப்பிடிப்பு, உடல் வலி ஆகியவை ஏற்படாமல் உரிய அளவில் முறையாக பயிற்சிகளைச் செய்தல் வேண்டும்.
சரியானபடி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறோமா என்று பார்க்க ஒரு சின்ன எளிய சோதனை உண்டு. இவற்றைச் செய்யும் போது ஒருவருடன் பேச வேண்டும். பேசுவதில் கஷ்டமான உணர்வு ஏற்பட்டால் நீங்கள் அதிக அளவில் உடலை வருத்துகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாம். அதற்கேற்றபடி உங்கள் பயிற்சி அளவை மாற்றி குறைத்துக் கொள்ளலாம்.
இது பற்றி சைகாலஜி டு டே உள்ளிட்ட பத்திரிகைகள் பல கட்டுரைகளைப் பிரசுரிக்கின்றன. அவற்றையும் படித்தல் அவசியமாகும்.
Ancient Jewellery worn by Buddhists and Hindus in Pakistan 2000 years ago
Rare Hindu and Buddhist Treasures from Pakistan, Bangladesh Museums-2 (Post.15,804)
Written by London Swaminathan
Post No. 15,804
Date uploaded in London –29 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
BRAHMA IN BRASS, KARACHI MUSEUM, PAKISTAN.
IT IS FOUND IN BRAHMIN KINGDOM (INDUS VALLEY) STILL CALLED BRAHMANABAD- BRAHMANA JANAPADA
Bangladesh capital Dacca is named after Dhakeswari temple there according to Pakistani archaeologist.
There are rare statues of Brahma and Yama ad an unknown Hindu Goddes with a spear in her hand.
Bangladesh Museums in Mainamati, Rajsahi, Phaharpur, Dacca and Mahesangarh have Hindu and Buddhist treasures.
BEAUTIFUL DANCING GIRLS, SIVA, VISHNU, MOTHER AND CHILD SCULPTURES ARE VERY RARE.
****
More treasures from Five Pakistani Museums in Karachi, Taxila (Thatchaseelam), Peshawar (Purushapuram), Swat, and Lahore are featured in the book written by a Pakistani archaeologist.
They are taken from the following book:
KRISHNA KILLING KESIN/HORSE OR DHENUKA/DONKEY
RARE YAMA IN BANGALADESH MUSEUM
kALYANA sUNDARA (SIVA) IN BANGLADEH MUSEUM
VISHNU IN BANGLADESH MUSEUM
HARA-GAURI= SIVA-PARVATI
BIRTH OF BUDDHA
BEAUTIFUL DANCING GIRLS
WONDERFUL MOTHER AND CHILD
VISHNU
Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN
Author – DR F A KHAN
Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI
-Subham—
Tags- part 2, ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN, five Pakistani museums, Hindu treasures, Bangladesh, Brahma, Yama
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை
மந்திரங்களுக்கு பாம்புகள் கட்டுப்படும் என்றும் மந்திரத்தால் பாம்பு விஷத்தை இறக்கலாம் என்றும் காளிதாசன், கம்பன், திருமூலர் , வேதாந்த தேசிகன், நாலடியார் , நீதிவெண்பா மூலம் அறிகிறோம் ; ஆயினும் விஞ்ஞான ரீதியில் யாரெனும் இதை நிரூபித்துக் காட்டினால் அவருக்கு கட்டாயம் ஒரு நோபல் பரிசுகொடுக்கலாம் . இந்தத் தொகுப்புரையில் ஆறு புலவர்கள் பாம்பு மந்திரம் பற்றிப் பாடியதைக் காண்போம்
1
நாலடியார்
நாலடியார் நூலின் ஏழாவது அதிகாரமான ‘சினமின்மை’யில் வரும் ஒரு புகழ்பெற்ற பாடல் :
கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையால் தங்களை அடக்கு வார்
பாடலின் பொருள்:
கல்லால் அடிப்பது போன்ற கொடுமையான சொற்களைப் பேசும் கீழோர்களின் (கயவர்களின்) வாயிலிருந்து வரும் கடுமையான வார்த்தைகளை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோர்கள், பலரும் அறியும் வண்ணம் பொறுத்துக் கொள்வார்கள். மந்திரிக்கப்பட்ட திருநீற்றைத் தூவியவுடன் தன் சீற்றமும் படமும் அடங்கிப் போகும் பாம்பைப் போல நல்ல குடிப்பிறப்பு மற்றும் பண்புடையவர்கள் தங்கள் குலப் பெருமையைக் கருதி தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்.
1200 ஆண்டுகளுக்கு முன்னர் நாலடியார் நானூறு பாடிய பல புலவர்களில் யாரோ ஒரு புலவர் பாடியது இது . இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேத்திலுள்ள மந்திரம் ஆகும் (கட்டுரையின் பின்னால் வருகிறது).
சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த, உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன், காளிதாசன் சொன்னதையும் பார்ப்போம் :
rAjA svatejobhiradahyatAntarbhogIva mantrauShadhiruddhavIryaH || 2-32
திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)
3
நீதி வெண்பா
துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:
துர்ச்சனரும் பாம்புந்துலையொக்கினும் பாம்பு
துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்
எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தாலே வசம்
பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.
4
கம்பன் பாட்டு
ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்
நல் மதியார் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் கடுகிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்
பொருள்:-
அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.
(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)
5
வேதாந்த தேசிகன்அருளிய கருட மந்திரம்
வேதாந்த தேசிகர் அருளிய மிகச் சக்திவாய்ந்த கருட மந்திரங்கள் கருட தண்டகம் மற்றும் கருட பஞ்சாஷத் ஆகும். பாம்பாட்டியின் சவாலை முறியடிக்கவும், விஷ ஜந்துக்களின் பயம் நீங்கவும் தேசிகர் இந்த மந்திரங்களைப் பாடினார்.இவற்றின் சிறப்புகள் மற்றும் துதி வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:1. ஸ்ரீ கருட தண்டகம்பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்கவும், சகல நன்மைகள் உண்டாகவும் தினமும் இதைப் பாராயணம் செய்வது வழக்கம்.
துவக்க ஸ்லோகம்:
நம: பந்நகநத்தாய வைகுண்டவஶவர்திநே |ஶ்ருதிஸிந்து ஸுதோத்பாதமந்தராய கருத்மதே ||இதன் முழுமையான தமிழ் அர்த்தம் மற்றும் சமஸ்கிருத மூல வரிகளை Stotra Nidhi பக்கத்தில் படித்துப் பயன்பெறலாம்.
கருட பஞ்சாஷத்
சுவாமி தேசிகன் கருடனைப் போற்றிப் பாடிய 52 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்தோத்திரம் இதுவாகும். இதனை முறையாக ஓதினால் கருட பகவானின் தரிசனமும், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பயன்கள்:கொடிய விஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.எதிரிகளின் தொல்லைகள் அகலும்.மன அமைதியும், ஆரோக்கியமும் பெருகும்
ஸ்ரீ கருட தண்டக:
4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.
விஷ்ணுவின் வாகனம் கருடன். நித்யசூரிகளில் ஒருவரான கருடர் வேதத்தில் புகழப்படுபவர். அவருக்கு ருத்ரா மற்றும் சுகிர்தி என இரு மனைவிகள் உண்டு. விஷ்ணுவின் வியூக தோற்றங்களில் அவர் சங்கர்ஷண அம்சமாக கருதப்படுகிறார்.
ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும் பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.
உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது. உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும் அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும் வேண்ட தேசிகர் இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக் கீழே போட்டது.
இதில் உள்ள சந்தச் சிறப்பை சம்ஸ்கிருத ஆர்வலர்கள் வெகுவாகப் போற்றுவர்.
ஸ்ரீ கருட பஞ்சாஷத்
52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.
கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.
வர்ணகா என்று கூறப்படும் ஐந்து பகுதிகள் கொண்ட இது, கருட மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களைச் சுட்டிக் காட்டுகிறது.
முதல் பகுதி பர வ்யூஹ வர்ணகம். இரண்டாவது பகுதி அம்ருதாஹரண வர்ணகம். மூன்றாவது பகுதி நாகதமன வர்ணகம். நான்காவது பகுதி பரிஷ்கார வர்ணகம். ஐந்தாவது பகுதி அத்புத வர்ணகம்.
கருடர் விஷ்ணுவுக்கு பல அம்சங்களில் சமமானவர் எனக் கூறும் தேசிகர் தனது இறுதி ஸ்லோகத்தில் பாம்பினால் ஏற்படும் உடல் மற்றும் மனோ பாதிப்புகள், வியாதிகள்,விதியின் தீய விளைவுகள் அனைத்தும் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதால் போய் விடும் என்று கூறி அருள்கிறார்.
6
அதர்வண வேத ரகசியங்கள்
அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-
“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போலநான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்
முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.
இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன். . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்..
(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)
***
7
திருமூலர் கருடன் பாம்பு உவமை
கருட மந்திரம் செய்யும் அதிசயம்
கருடன் உருவங் கருதும் அளவிற்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவாங் குறித்தஅப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே–.2611
பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப் பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள் கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும். அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.
At the Thought of Guru’s Form Impurities Vanish
At the thought of Garuda’s form
The serpent’s poison leaves
Its terrors lose;
Unto it,
At the thought of Guru’s form
The triple Malas leave instant;
The Jiva then Siva becomes.
கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)
***
8
பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).
குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.
9
கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:
10
“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”
கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.
11
தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி, அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.
அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்
12
பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.
13
விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்
மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)
14
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-
க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்
****
ALSO READ MY OLD ARTICLE
பிராணிகள் கண்டுபிடித்த மூலிகைகள் ; வேதம் சொல்லும் அதிசயச் செய்தி (Post No.10,456)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,456
Date uploaded in London – – 17 DECEMBER 2021
–SUBHAM—
TAGS- பாம்பு மந்திரம் , ஆறு புலவர்கள் , அதிசயச் செய்திகள், திருமூலர், வேதாந்த தேசிகன் , அதர்வண வேதம், தேவாரம், , காளிதாசன், நாலடியார், நீதி வெண்பா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருக்குறுங்குடி
இறைவன் அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி
இறைவி அருள்தரும் குறுங்குடிவல்லி
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம் பஞ்சகேதக விமானம்
வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.
‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,
நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.
இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..
திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).
ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்
ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..
“வெள்ளிறா” என்னும் சாதி மீனை தாய் கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற திவ்விய தேசம்.
மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.
முக்கியத்திருவிழா
பங்குனி பிரம்மோற்சவம்
கார்த்திகை கைசிகஏகாதசி
***
சாலை வழியாக திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில், நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
அழகிய நம்பிராயர் (நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார்).
திருக்குறுங்குடி சிற்பங்கள்
திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில், நுணுக்கமான மற்றும் பிரம்மாண்டமான சிற்பக் கலைகளுக்குப் பெயர் பெற்றது.
:யாளி மற்றும் விலங்கு சிற்பங்கள்: கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம், யானை மற்றும் பிரம்மாண்டமான யாளி சிற்பங்கள்
மகாபாரதக் கதைகள் மற்றும் பிரம்மனின் படைப்புத் தொழிலை விளக்கும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள்
கிளியின் மீது அமர்ந்த ரதியின் நுணுக்கமான சிற்பம்,
கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம் கருடன் ஆமை, யானை ஆகியவற்றை இரு கைகளிலும் முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம்; கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும் அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் அற்புதமானது.
வீரர்கள் போருக்குச் செல்வது போன்ற தத்ரூபமான சிற்பங்களும், பிரம்மாண்டமான தேர் போன்ற அமைப்பில் உள்ள மண்டபங்களும் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.
பாறைகளில் உயிரோட்டமான வடிவில் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்கள் மற்றும் புராண காலக் காட்சிகள் இக்கோயிலின் தனிச்சிறப்பு.
***
பாசுரங்கள்
813.
கரண்ட மாடு பொய்கையுள்* கரும்பனைப் பெரும்பழம்,*
புரண்டு வீழ வாளைபாய்* குறுங்குடி நெடுந்தகாய்,*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*
இரண்டுகூறு செய்துகந்த* சிங்கம் என்பது உன்னையே (2)
1005.
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
1470.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
जौं जगदीस इन्हहि बनु दीन्हा। कस न सुमनमय मारगु कीन्हा॥
(இவர்களுடைய மென்மையான பாதங்கள் பூமியில் பட்டவுடனே சிவந்து போவதைப் பார்த்து, பூமியே கூச்சமடைகிறது..அந்த இறைவன் இவர்களுக்கு வனவாசம் விதித்திருந்தால் , கூடவே பாதையையும் மலர்களால் ஏன் பரப்பி வைத்திருக்ககூடாது?)
(துளசிதாசர் இங்கு “स्वामी” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார். காரணம் ஹனுமான் இராமனைப் பார்த்து உங்களைப் பார்த்தால் தேவர்களைப் பார்ப்பது போல உள்ளது. உங்கள் உடலில் அரச இலக்ஷ்ணங்கள் தெரிகின்றன. அதனால் சுவாமி என்று அழைப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாபிஜி என்ற உயையாசிரியர் ஒரு கருத்து சொல்கிறார். அதாவது ‘இந்தக் கோரமான வனத்தில் தாங்கள் சுற்றுவதைப் பார்க்கும்போது ஏதோ வனதேவதை போல தோன்றுகிறது என்று.
(துளசிதாசர் இங்கு மூன்று முறை छत्री रूप फिरहु बन बीरा: “कवन हेतु बिचरहु बन स्वामी ‘ और ‘सहत दुसह बन आतप बाता।’ வனம் என்ற வார்த்தையைப் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.. இப்படி வனத்தில் அலைவதைப் பார்த்த ஹனுமன் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், அவர்களை மேலும் நடக்கவிடாமல் அவர்கள் இருவரையும் தனது தோளில் சுமந்து கொண்டு சுக்ரீவன் இருக்குமிடத்தை அடைந்தான் என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்)
* मृदुल मनोहर सुंदर गाता। सहत दुसह बन आतप बाता ॥
की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥5॥
जग कारन तारन भव भंजन धरनी भार।
की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥
ஹனுமன் இராமனிடம் “சுவாமி! தங்களுடைய சரீர அதிமிருதுவாகவும் இருக்கிறது. நீங்கள் சஞ்சல புத்தியுள்ள என் மனத்தை அபஹரிக்கும் ரூபசவுந்தர்யம் பெற்றிருக்கிறீர்கள். என்ன அழகு, என்ன லாவண்யம் சுவாமி! என் மனம் என்னிடம் நிலைபெறவில்லையே. நான் என்ன செய்வேன்.தங்களின் திருமேனி கண்டேன். பொன்மேனி கண்டேன். இன்றே கழல் கண்டேன்.எழுபிறப்பும் நானறுத்தேன். அடிவண்ணம் தாமரையன்றுலகம் தாயோன் என்கிறபடி உங்களுடிய மிருதுவான திருமேனி, எவ்விதம் சகிக்க முடியாத வானத்தின் மாருதங்களையும், வெப்பமாயிருக்கும் சுடுகாற்றுக்களையும் சுமக்கின்றனவோ? சுவாமி! தாங்கள் தேவ புருஷர்கர்களா? அஸ்வினி குமாரர்களா? பிரும்மாவா, விஷ்ணுவா, சிவனா அல்லது இந்த மூன்று தெய்வங்களாகிய மும்மூர்த்திகளுக்கு மேற்பட்டவனுமாகிய பரப்ரம்மமா?(நிர்குணப் பொருளா?) அல்லது அகில உலகிற்கும் உரிமையாளரான பகவானா?(ஸகுணஸ்வரூபமா?) உலகங்களை சம்சாரக் கடலிலிருந்து மீட்டு பூமியின் சுமையைக் குறைக்க மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளீர்களா? என்று கேட்டான்
(ஹனுமன் அவர்களிடம் தாங்கள் பிரம்ம, விஷ்ணு, சிவன் இவர்களில் தாங்கள் யார்? இருப்பதோ இருவர். ஆனால் அவர்களோ மூவர். ஆனாலும் ஹனுமனுக்கு இராமனின் கரிய நிறத்தையும் இலக்ஷ்மணனின் பொன் நிறத்தையும் பார்த்ததும் ஒரு சந்தேகம். பிரம்மா மஞ்சள்/பழுப்பு நிறம், விஷ்ணு கரிய நிறம், சிவன் வெள்ளை/சிவப்பு நிறம். இருவரில் ஒருவர் விஷ்ணுவாக இருக்கலாம். அப்படியானால் மற்றொருவர்? ஆக இவர்கள் அந்த மூவராக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் இணை பிரியாது இருக்கும் இவர்கள் நர நாராயணர்களோ?
அடுத்து जग कारन तारन भव என்ற இரு பதங்களைப் போடுகிறார் துளசிதாசர். அதாவது உலகினுள் வருவதும் உலகிலிருந்து விடுதலை பெறுவதற்கும் காரணமானவரே என்கிறார்.
बंध मोच्छ प्रद सर्बपर माया प्रेरक सीव॥
அதாவது கர்மவினையின்படி பந்தத்தையும் முக்தியையும் தருபவன், அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் மாயையின் தூண்டுதலுமான கடவுள் என்கிறான் ஹனுமன்.
என்று தைத்ரிய உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி ‘எவரால் இந்த உலகம் சிருஷ்டிக்கபடுகிறதோ, எவரால் இந்த உலகம் பாதுகாக்கப்படுகிறதோ, எல்லாம் முடிந்தபின் எவருக்குள் எல்லோரும் சென்று ஐக்கியமாகிறார்களோ அந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்”
“எவருடைய உத்திரவால் படைக்கப்பட்டு நாங்கள் வானரம், கரடி போன்ற ஜீவ ராசிகளானோமோ தாங்கள் அவரில்லையா (அந்த பிரம்மா இல்லையா?)”
துளசிதாசர் “अखिल थुवन पति” என்ற பதப் பிரயோகம் தருகிறார். இதைச் சொல்லவேண்டிய காரணம் இந்த உலகமே இராவணனால் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவிப்பதற்காக ..உடனே மனித அவதாரம் எடுத்துள்ளீர்\களோ என்பதைக் குறிப்பிட “मनुज अवतार” என்று குறிப்பிடுகிறார். அதன் காரணம் இராவணனின் மரணம் மனிதனின் கையில் ‘राबन मरन मनुज कर जाँचा।’ என்று பால காண்டத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இராவணனின் கொடுமைகளைப் பற்றிச் சொல்லும்போது
बरनि न जाइ अनीति घोर निसाचर जो करहिं।
हिंसा पर अति प्रीति तिन्ह के पापहि कवनि मिति॥183॥
அரக்கர்களின் கொடுமைகளை வார்த்தையால் வர்ணிக்க முடியாது என்று எவனொருவன் அஹிமசையின் பால் நாட்டம் கொள்கிறானோ அவனுடையை பாவங்களுக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார். ஆத்யாத்ம இராமாயணத்தில்
சிவன் பார்வதிக்கு இராமனின் வரலாற்றை சொல்லும்போது, முதலில் இராம அவதாரம் எடுத்த கதையைச் சொல்லுகிறார். அதில் இராவணன் மற்றும் அரக்கர்களின் கொடுமையையும் அவர்களின் பாரத்தையும் தாங்க முடியாமல் பூமா தேவி ஒரு பசுவின் உருவில் தேவர்களையும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு பிரம லோகம் சென்று பிரம்மாவிடம் அழுது கொண்டே இராவணனைப் பற்றி முறையிட்டு தங்களைக் காக்குமாறு வேண்டுகிறாள். அதைக் கேட்ட ஒரு நொடியில் பிரம்மா என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். உடனே அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்.
भगवन् रावणो नाम पौलस्त्यतनयो महान् ।
राक्षसानामधिपतिर्मद्दत्तवरदर्पितः ॥ २३॥
त्रिलोकीं लोकपालान्श्च बाधते विश्वबाधकः ।
मानुषेण मृतिस्तस्य मया कल्याण कल्पिता ॥ २४॥
अतस्त्वं मानुषो भूत्वा जहि देवरिपुं प्रभो ॥ २५
“முனிவர் புலஸ்தியரின் பேரன் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் ஒன்று என்னிடம் வாங்கி அதன் காரணமாக மூன்று உலகங்களிலும் உள்ள தேவர்கள் முனிவர்கள் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவனுக்கு ஒரு மனிதன் மூலம் மரணம் கிடைக்கவேண்டும் என்று நான் தீர்மானித்துள்ளேன்.தாங்கள் மனித அவதாரம் எடுத்து அவனை வதைத்து எல்லா உலகங்களையும் காத்தருள வேண்டுகிறேன்” என்று மகாவிஷ்ணுவிடம். வேண்டிக்கொண்டார். “அந்த மனித அவதாரம் தாங்கள்தானா? என்று ஹனுமன் வினவினான்.
ஆத்யாத்ம இராமாயணத்திலும் ஹனுமன் இராமனிடம் இதே கேள்வியைக் கேட்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।
भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १
“இந்தப் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகவும் பக்தர்களைக் காக்கவும் தாங்கள் மாயையினால் மனித அவதாரம் எடுத்துள்ளீர்களா?” என்று ஹனுமன் கேட்கிறான்.
மேலும் ஹனுமன் இராமனிடம் தாங்கள் ஒரே உருவில் இரு அவதாரங்களா? என கேள்வி கேட்கிறார். அதவாது தாங்கள் சிவா விஷ்ணுவா? பிரம்மா விஷ்ணுவா அல்லது நர நாராயணர்களா? அல்லது அகில உலகைக் காக்க வந்த இரட்சகன் இரு உருவில் வந்துள்ளீர்களா? என்று கேட்கிறார். ஆக முதலில் மூன்று தேவர்களா? என்று கேட்டுவிட்டு பிறகு நர நாராயணர்களா என்ற இருவரா? என்று கேட்டுவிட்டு இறுதியில் அகில உலகைக் காக்க வந்த இரட்சகனா என்று ஒருமையில் கேட்கிறார். முதலில் ஸ்தூலம் என்று அனுமானித்துவிட்டு பிறகு சூக்ஷமம் என்று அனுமானிக்கிறார். இறை வடிவத்தை அறிந்து/புரிந்து கொள்ள இதுவே சரியான முறை.. பாகவதத்தில் கூறி உள்ளபடி
முக்தியில் ஆர்வமுள்ளவன், முக்தியின் பாதையை ஏற்பவன், நிபந்தனைக்குட்பட்ட வாழ்வின் பாதையில் ஈர்க்கப்படாதவன், யதி அல்லது பக்தன் என்று அழைக்கப்படுகிறான். அத்தகு மனிதன், பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபமான விராட் ரூபத்தைப் பற்றி சிந்திப்பதன் மூலம் முதலில் தனது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், பின்னர் இவ்விரு வடிவங்களையும் கேட்ட பிறகு படிப்படியாக மகாவிஷ்ணுவின் ஆன்மீக ரூபமான கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒருவனின் மனம் ஸமாதியில் நிலைத்திருக்கிறது. பக்தித் தொண்டின் மூலம், பக்தர்களின் இலக்கான பகவானின் ஆன்மீக வடிவத்தை ஒருவன் உணர முடியும். இதனால் அவரது வாழ்க்கை வெற்றிகரமானதாக மாறுகிறது.
அதாவது महत्-सेवां द्वारम् आहुर् विमुक्ते: என்று கூறப்படுகிறது: முக்தியின் பாதையில் முன்னேற ஒருவன் விரும்பினால், அவன் மகாத்மாக்களுடன், அல்லது முக்தியடைந்த பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும், மோக்ஷத்தை நாடுபவர்களுக்கு, பெரியவர்களின் சேவை என்பது ஒரு வாயிலாகும்” என்று கூறுகிறார்கள்.
பேரருள் பெற்ற பெருமக்கள் சேவை
பேரொளி வீதி விடுதலைக் கோவில்!
தீர்வினை தீரும் திருநெறி யாதும்
தெய்வம் எனக் காண் — சத்புருஷன் பாதம்
ஏனென்றால் அத்தகைய சங்கத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பரம புருஷ பகவானின் பெயர், உருவம், குணங்கள் மற்றும் சாதனங்களைப் பற்றி கேட்பதற்கும், விவரிப்பதற்கும், நாமஜபம் செய்வதற்கும் முழு வாய்ப்பு உள்ளது. பந்தத்தின் பாதையில், ஒருவர் நித்தியமாக பிறப்பு மற்றும் இறப்பின் மறுபடியும் அனுபவிக்கிறார். இத்தகு பந்தத்திலிருந்து விடுதலை பெற விரும்புபவர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்து, பக்தர்களிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்காக அதை விளக்க வேண்டும்.
ஆனால் ஹனுமன் கேட்ட எந்த கேள்விகளுக்கும் இராமன் விடை சொல்லவில்லை. காரணம் ஹனுமான் சொன்ன பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் யாரையும் விட தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சிவபெருமான் இராமாயணக் கதையைப் பார்வதியிடம் சொல்லுகின்றார். இராமனின் பிறப்பைப் பற்றி சொல்லும் சமயம்
हृदयँ बिचारत जात हर केहि बिधि दरसनु होइ।
गुप्त रूप अवतरेउ प्रभु गएँ जान सबु कोइ॥
“மனதிற்குள் எனக்கு குழந்தை இராமனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது. இராமனே யாருக்கும் தெரியாமல் மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்றால் எல்லோருக்கும் அவதார ரகசியம் தெரிந்து போகுமே. அதனால் நான் செல்லவில்ல” .இதனால் தான் இராமன் தனது அவதார ரகசியத்தை வெளியே ஹனுமனிடம் சொல்ல விரும்பாமல் தன்னை ஒரு மனிதனாகவே காட்டிக் கொண்டான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மரணத்தை வெல்ல ஒரு மாநாடு!
ச. நாகராஜன்
DAVE ASPREY
மரணத்தை வெல்ல முடியுமா என்ன? இதற்கு ஒரு மாநாடு வேறு நடக்கிறதா என்ன என்று கேள்வி கேட்போருக்கு பதில் : ஆம், மரணத்தை வெல்ல மாநாடு நடக்கிறது. ஒரு மாநாடு அல்ல, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் மாநாடு நடக்கிறது என்பது தான் பதில்.
மரணத்தை எப்படி வெல்வது என்பதை ஆராயும் பல்வேறு ஆகப் பெரிய உலகப் பணக்காரர்களும், விஞ்ஞானிகளும், ஆரோக்கிய மேம்பாட்டு நிபுணர்களும் இதில் பங்கேற்று உரையாற்றுவதால் இதை மரணத்தை வெல்வது பற்றி அறியத் துடிக்கும் மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
GLOBAL WELLNESS SUMMIT -GWS – என்று அழைக்கப்படும் இந்த உலக ஆரோக்கிய மேம்பாட்டு மாநாடு 2018ல் இத்தாலியில் நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது.
2025ம் ஆண்டில் துபாயில் நடைபெற்றது.
2026ல் தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடுகளுக்கு உற்சாகமூட்டி ஆர்வத்துடன் தங்களின் செயல்பாடுகளை விவரிக்கும் அறிஞர்கள் உலகப் பத்திரிகைகள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் இடம் பெறுகின்றனர்.
டேவ் ஆஸ்ப்ரே :
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான டேவ் ஆஸ்ப்ரே புல்லட் ஃப்ரூப் காபி நிறுவனத்தின் உரிமையாளர். மரணத்தை வெல்வதற்காக அவர் தனது உடலையே ஒரு சோதனைச்சாலை ஆக்கிக் கொண்டிருக்கிறார். இதற்காகத் திகைக்க வைக்கும் பல வழிமுறைகளை அவர் கையாள்கிறார்.
ஸ்டெம் செல்களை இவர் தனது உடலில் ஊசி மூலம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவரது இடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை முதுகெலும்பு மற்றும் இதர முக்கிய பகுதிகளில் செலுத்திக் கொள்கிறார். ஒவ்வொரு ஆறு மாதமும் இந்த ஸ்டெம் செல் ஊசி போடுதல் நடக்கிறது. நூறு சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் துணை உணவுப் பொருள்களை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்கிறார். இன்ஃப்ரா ரெட் ஒளியில் தான் அவர் குளிக்கிறார்.
உயர்தர ஆக்ஸிஜன் அறையில் தான் அவர் இருக்கிறார். விமானப் பயணத்தின் போது விசேஷமான மஞ்சள் கண்ணாடியைத் தான் அவர் அணிவது வழக்கம். 1973ம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது வயது 53. 180 வயது வரை நிச்சயமாக வாழ்வேன் என்கிறார் இவர்.
“அல்லது முயற்சியாவது செய்வேன்” என்பது இவர் குறிக்கோள்.
இவரது வீட்டில் உள்ள சோதனைச்சாலையின் பெயர் ஆல்பா லேப்ஸ்.
இங்கிருக்கும் சாதனங்களைக் கேட்டால் பிரமித்து விடுவோம். 21 நிமிடங்களில் 150 நிமிட உடல்பயிற்சி செய்ததன் பலனைத் தரும் ஒரு சாதனம் உட்பட ஏராளமான சாதனங்கள் உள்ளன.
இவரது புல்லட்ஃப்ரூப் உணவுத் திட்டம் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இவரது மனைவியான லனா ஆஸ்ப்ரே மூப்பைத் தடுக்கும் நவீன சிகிச்சைமுறையில் ஒரு நிபுணர். இவரது புத்தகங்களை சுமார் இருபது கோடி பேர் படித்துள்ளனர்.
இவர் மரணத்தை வெல்லும் மாநாட்டில் ஒரு பேச்சாளர்.
டான் பூட்னர்
அடுத்து ப்ளூ ஜோன்ஸ் என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமான டான் பூட்னர் இன்னொரு பேச்சாளர்.
டான் பூட்னர் (DAN BUETTNER)
பட்டனே போடாமல் திறந்துவிட்ட சட்டையோடு நல்ல சிரித்த முகத்தோடு அடிக்கடி ஜோக்குகளை உதிர்க்கும் டான் பூட்னர் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தோரை நேரில் சந்தித்து அவர்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து மரணத்தை வெல்லும் அல்லது நீண்ட காலம் தள்ளிப் போடும் உத்திகளைச் சேகரித்திருக்கிறார்.
இவருக்கென்று தனி சிஷ்யர் கூட்டம் உண்டு.
ஜூன் யுன் (JOON YUN)
தென்கொரியாவில் 1967ம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பெரிய டாக்டர். அமெரிக்காவில் ஹெக்டே ஃபண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்களின் உரிமையாளர். நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி மரணத்தை வெல்லும் வழியைக் காண்போரை உற்சாகப்படுத்தி வருபவர் இவர்.
இதற்காக 2014ம் ஆண்டிலிருந்து வருடம் ஒரு முறை இதில் சிறந்து விளங்குபவருக்கு பத்து லட்சம் டாலர் பலோ ஆல்டோ லாங்க்விடி பரிசை இவர் அளித்து வருகிறார்.
இப்படி இன்னும் பலர் மரணத்தை வெல்லும் மாநாட்டில் பேசி உலகினரை உற்சாகமூட்டி வருகின்றனர்.
ஆரோக்கிய மேம்பாடு பற்றிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்வதோடு நீடித்த ஆயுளுக்கான உத்திகளையும் இவர்கள் சொல்வதால் மக்கள் இவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
in this part Valluvar used two Sanskrit words Payan and Mukham. He referred to a mythical flower called ANICHAM. It is not a Tamil word. It sounds like a Sanskrit word. No such flower is found in India; may be extinct.
No real flower physically withers simply from being smelled. However, this concept is famous in classical literature, most notably in the Tirukkural, an ancient Tamil literary classic.
In this text, the author uses the delicate Anicham flower to describe the fragility of hospitality: “The delicate anicham flower withers when merely smelled, but an unwelcome look is enough to wither a guest’s heart.”
Botanical Reality: In the real world, the most famously sensitive plant is Mimosa pudica (the “touch-me-not” or “sensitive plant”), which flinches and folds its leaves when physically touched or shaken—but it does not wither
***
Hospitality is a Hindu concept. All Smritis praise this quality and insists it should be part of one’s life. In India only we see Choultries/ Anna Chaththiraam / providing free food. Temples and Gurudwaras also provide free food; Gurudwaras came into existence only in the past 500 years. Tiru Valluvar talks about guests visiting houses, not places oof worship. Hindu folktales and scriptures give lot of examples for hospitality; we can’t see such a virtue outside India.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Part 18
Chapter 9 Hospitality விருந்தோம்பல்
86.Thrice welcome is he unto the godson high who tending his assembled guests, wistfully waits for more— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
86.If one has fed his guests and still awaits the arrival of more,
He will himself be treated as a guest by the Gods – S M Diaz, I G of Police- SMD Year 2000
***
86 The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he. He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.– Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***
86.Who tends a guest and looks for next Is a welcome guest in heaven’s feast.- Suddhananda Bharathiyar- SB
***
86.Having entertained his guests, the man who awaits new guests will be cordially welcomes by the Devas in Heaven — EVS Publishers, Singapore- EVS. Year 1986
***
86.He will be a welcome guest to gods on high,
Who speeds the parting guest, and coming guest arrives– HAP (not full book) Year 1931
87.Vainly does man measure the fruits of kindly acts done. Behold it is worth of the guest that is the touchstone of our sacrifice;( for who knows we may be entertaining angels unawares?)— ANM+2
***
87.The worth of one’s hospitality , is measured only by the quality
Of the guests, who have been entertained— SMD
***
87. To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain. The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.- GUP
***
87.Worth of the guest of quality Is worth of hospitality. SB
***
87.The benefit of entertaining guests cannot be measured except by the worth f the guests entertained-EVS
***
87.There is no measure for the fruit of kindliness:
The guests own worth- this is its measure true– HAP
*** 87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
***
88.“Oh! I am undone and forsaken; would to God I had spent my all on acts of kindness and of love to strangers that crossed my doors” is the remorseful cry of an unloving heart— ANM+2
***
88.Those who have not practiced hospitality , as one of the prime sacrifices of life,
Will lament that they have wasted their lives in purposeless toil and care— SMD
***
88. With pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry, Who cherish not their guests, nor kindly help supply. Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.” –GUP
***
88.Who loathe guest-service one day cry: “We toil and store; but life is dry”. SB
***
88.Those who do not realise the value of hospitality will repent that they have preserved their wealth in vain—EPS
***
88.‘We have cherished wealth, but now are helpless left’- so say
Those who have not yet begun to cherish guests HAP
89.Verily there is indigence in the midst of the opulence of a fool who is not alive to the charities of home— ANM+2
***
89.Wealthy men, who fail in extending hospitality,
Are fools; they live in poverty amidst plenty— SMD
*** 89. To turn from guests is penury, though worldly goods abound; ‘Tis senseless folly, only with the senseless found. That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.—GUP
*** 89.The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed. SB
***
89.One who does not entertain his guests in poverty though in the midst of wealth. This is characteristic of stupidity –EPS
***
89.The crass stupidity that will not cherish guests
Is poverty in wealth; it is only found in fools- HAP
*** 89. உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
90.The anicha flower fades and faints before the breadth of a man; even so does a heart sink within itself that meets the cold unwelcome look of the host– ANM+2
***
90.The delicate blossom of anicham withers away even on being smelt;
A sensible guest shrinks at an unwelcome look of the host—SMD
***
90. The flower of ‘Anicha’ withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey, The guest’s heart within him will fail. As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away. –GUP
***
90.Anicham smelt withers: like that A wry-faced look withers the guest. SB
***
90.Even as the Anicham flower fades when smelt, so also are guests hurt when the host puts on a wry face—EPS
***
90.As in the very smelling fades the Anicham flowe,
So at a changing glance, the guest’s heart sinks- HAP
*** 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து to be continued…………………
திருமோகூர், 108 வைணவ திவ்ய தேசங்களில் 103-வது ஸ்தலம் ஆகும்; புகழ்பெற்ற காளமேகப் பெருமாள் கோவில் இங்கே இருக்கிறது.
மூலவர்: காளமேகப் பெருமாள் (மேகத்தைப் போன்ற நிறத்தில் காட்சியளிப்பதால் இப்பெயர்).
தாயார்: மோகனவல்லி.
திருமால், பாற்கடலைக் கடைந்தபோது அசுரர்களுக்கு மோகினி அவதாரம் காட்டி அமிர்தத்தை வழங்கிய “மோகன க்ஷேத்ரம்” இதுவே.
இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்திவாய்ந்தவர். இவரது பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் கட்டியவை யாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது உள்ளது
இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது..
மதுரை மாநகருக்கு வடக்கே ஏழு, எட்டுமைல் தொலைவிலுள்ளது. மதுரை- மேலுர் நெடுஞ்சாலை வழியே ஒத்தக்கடை வரை சென்று, அதன் பிறகு கிழக்கே திரும்பி ஒரு மைல் செல்ல வேண்டும். மதுரையிலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன்ப ற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அது வேறு மோகூர் ஆக இருக்கலாம்
***
திருக்கோயிலைச் சுற்றி நீண்டு உயர்ந்த மதிலும் மதிலுக்கு வெளியே புஷ்கரிணியும் உள்ளது. கிழக்கு நோக்கிய திருவாயிலைத் தாண்டியதும் கம்பத்தடிமண்டபம். வரும் இந்த மண்டபத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்த மருது பாண்டியர்கள் சின்னமருது, பெரிய மருது சிலைகள் உள்ளன அதைத் தாண்டியுள்ள கருட மண்டபத்தில் ஒரு தூணில் சீதாதேவியை அனைத்தவண்ணம் கோதண்டராமன் சிலையும், இன்னொரு துணில் இலக்குவன் சிலையும் காணப்பெறுகின்றன. இச்சிலைகளைத் தவிர காமவேளின் சிலையும் இரதிதேவியின் சிலையும் உள்ளன. கோயிலின் பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்த கள்ளர் குலமக்கள், ஆங்கிலேயனை விரட்டியடித்து அவர்கள் கைப்பற்றிய பொன், பொருள், இறைவன் திருமேனி முதலியவற்றை மீட்டு வந்து சேர்த்தனர். இதற்காக திருமோகூர் கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர்களின் ஆறு பிரிவுக் கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் கஜேந்திரமோட்சம் திருவிழாவிற்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு திருமோகூர் காளமேகப்பெருமாள் சாமி வரும்போது கொள்ளையடிக்கப்பட்ட விக்கிரகங்களை கள்ளர்கள் மீட்ட செயலுக்கான மரியாதையாக இன்றுவரை இறைவன் கள்ளர் வேடம் புனைந்து வருகின்றார்.
கள்ளர்களுக்கு திருமோகூர் கோவிலில் இன்றும் பரிவட்ட மரியாதை வழங்கப்படுகிறது.
***
பாசுரங்கள்
3783.
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
3784.
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
3785.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
3786.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
3787.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஹெல்த்கேர் ஏப்ரல் 26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புதிய ஆய்வு தரும் உண்மைகள்! ஐந்து நாட்களே உட்கொள்ளும் ஜங்க் ஃபுட் மூளையை பாதிக்கும்!
ச. நாகராஜன்
ஜங்க் ஃபுட் என்று அழைக்கப்படும் வெற்றுணவு அல்லது சத்தில்லா உணவு மெதுவாகத் தான் உடலைப் பாதிக்கும் என்று பல ஆண்டுகளாக நிபுணர்கள் கூறி வந்தனர். இவற்றைச் சாப்பிடுவதால் மெதுவாக எடை கூடும் என்பது இவர்கள் கருத்தாக இருந்து வருகிறது. நிறைய சாப்பிட்டவுடன் பல வருடங்கள் கழித்தே பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி வரப்பட்ட நிலையில் இப்போது புதிய ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறது.
நேச்சர் மெடபாலிசம் (Nature Metabolism) என்ற பத்திரிகை இந்த நிபுணர்களின் கூற்றுக்கு சவால் விடுகிறது.
ஒரு புதிய ஆய்வை மேற்கொண்ட குழு ஒன்று ஆரோக்கியமான இளைஞர்களைத் தங்கள் ஆய்வுக்கு அழைத்தது. தொடர்ந்து அவர்களுக்கு ஐந்து நாட்கள் ஜங்க் ஃபுட் நிறைய அளவில் தரப்பட்டது. மாடர்ன் ஜங்க் ஃபுட் நிறைய கலோரிகளைக் கொண்டது. அதை இவர்கள் ஐந்து நாட்கள் உண்ட பின் தங்கள் வழக்கமான உணவுக்குத் திரும்பினர்.
இவர்களை ஆய்வு செய்த நிபுணர்கள் திடுக்கிட்டனர். ஐந்து தின ஜங்க் ஃபுட் அளவே இன்சுலினுக்கு மூளை எப்படி மாறியது என்பதைச் சுட்டிக் காட்டியது.
அதிகமான சர்க்கரை, கொழுப்புச் சத்து, உப்பு ஆகியவை மூளையை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை FDA கமிஷனராக இருந்த டேவிட் கெஸ்லர் (David Kessler) தனது புத்தகமான An End to Overeating என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
இன்சுலின் என்பது ரத்த சர்க்கரை அளவு மற்றும் டயபடீஸ் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது என்று மட்டுமே இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அது மூளையையும் பாதிக்கும் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை நிச்சயமாக உறுதி செய்வதற்காக மூக்கில் மட்டும் ஸ்பிரே அடித்து இன்சுலினை நேரடியாக மூளைக்குச் செலுத்தினர் ஆய்வாளர்கள். இதன் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாமல் செய்யப்பட்டது. பின்னர் Functional Magnetic Resonance Imaging மூலமாக துல்லியமான அளவுகள் எடுக்கப்பட்டன. ஐந்தே நாட்கள் ஜங்க் ஃபுட் -ஐ சாப்பிட்ட இளைஞர்களின் மூளையில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. நினைவாற்றல் மற்றும் பார்க்கும் பகுதிகளில் மூளை பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் நடத்தையில் நுட்பமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பரிசைப் பெறும் போது அதிகம் மகிழாமல் தண்டனை தரும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர்.
கல்லீரல் கொழுப்பு பெருமளவில் அதிகமாக ஆகியிருந்தது. ஆரோக்கியமாக உடல் காணப்பட்ட போதிலும் உடலின் வளர்சிதைமாற்றம் வெகுவாக மாறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் மூளை பழைய மூளையாக இல்லை!
கலோரிகள் அதிகமாக உள்ள வெற்றுணவை சாப்பிடும் போது மூளை வலிமையான சிக்னலைப் பெறுகிறது.
இந்த ஆய்வு ஆரோக்கியமான இளைஞர்களிடமே இப்படி ஒரு மாற்றத்தைக் காண்பித்தால் மற்றவர்களிடம் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம்.
ஆகவே ஜங்க் ஃபுட் பெரும் அபாயத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்க வேண்டியது நமது கடமை.
ஜங்க் ஃபுட் என்ற வகையில் அன்றாடம் நாம் வாங்கும் நொறுக்குத் தீனிகளான உருளைகிழங்கு வறுவல், இனிப்பான பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் பர்கர், பிஸ்ஸா, சமோஸா, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவை அடங்கும்.