பனங்காட்டு நரியும், பணம் காட்டும் நாயும் (Post No.4610)

Pictures are from newspapers

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  19-33

 

 

 

Post No. 4610

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

நரி முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அட! பனங்காட்டு நரி பணம் தருகிறதோ இல்லையோ நாய் பணம் தரும்; அதுவும் லண்டன் நாய் பணம் தரும்!

 

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் ஒன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். அங்கு ஜெஸ்ஸி என்ற பெயருள்ள ஒரு நாயை கள்ளப் பணத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படுத்துகிறார்கள்; அதாவது பணம் அடிக்கப் பயன்படுத்தும் மையை (INK) முகர்ந்து பார்க்கும் சக்தி இதற்கு உண்டு. இதனால் யார் பணம் கடத்தி வந்தாலும் இது கண்டு பிடித்து வாலாட்டும். கடத்தல்காரர்களின் வாலை ஒட்ட நறுக்கிவிடும்.

 

ஹீத்ரோ விமான நிலையத்தில் ஐந்தே மாதங்களுக்குள் இது பத்து லட்சம் ஸ்டெர்லிங் பவுண்டு (Sterling Pounds) மதிப்புள்ள கரன்ஸி நோட்டுகளைக் கண்டு பிடித்துவிட்டது. இந்த நாயின் வயது — குட்டி நாயின்- வயது இரண்டுதான்!

 

ஒருமுறை சரக்குப் பிரிவில் அனுப்பப்பட்ட மூன்றரை லட்சம் பவுன்களைக் கண்டுபிடித்தது. யாரேனும் கைப் பைகளில் அதிகம் பணம் வைத்திருந்தால் கண்டு பிடித்துவிடும். அதற்கு நியாயமான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும்.

இது தவிர வேறு வழிகளிலும் கள்ளக் கடத்தல் பணம் கண்டு பிடிக்கப்படுவதால் கடந்த ஓராண்டில் மட்டும் 80 லட்சம் பவுன்களை பார்டர் ஸெக்யூரிட்டி ஃபோர்ஸ் (Border Security Force) கண்டுபிடித்துள்ளது. ஒருவர் பெருந்தொகையைக் கைப் பையில் கொண்டு சென்றார்; ஜெஸ்ஸி பார்த்து விட்டது; அந்தப் பயணியிடம் விளக்கம் கேட்டபோது லாட்டரிப் பரிசு விழுந்தது என்றார். அது பொய் என்று தெரிந்தவுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ஜெஸ்ஸியின் புகழ் பரவத் துவங்கிவிட்டது; லண்டன் பத்திரிக் கைகளின் முதல் பக்கத்தில் ஜெஸ்ஸிக்கு பிரதான இடம்;

நாய்க்கு அடித்தது யோகம்!

 

–சுபம்–

IS SILAPPADIKARAM A BRAHMANA KAVYA? (Post No.4609)- Part 1

Cheran Senkuttuvan picture from World Tamil Conference Souvenir

 

Research Paper Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  6-57 AM

 

 

 

Post No. 4609

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ROLE OF BRAHMINS IN SILAPPADIKARAM

 

Abstract

Introduction and Background Premise

Issues Addressed in Paper

CONTENT ( the 3 docs can be combined appropriately)

Conclusion

References

 

(This research article was submitted to Swadeshi Conference held in December 2017 in Chennai)

 

Abstract:

A Brahmin by name Matala Maraiyon plays an important role in the Tamil epic Silappadikaram. It is amazing to see that Ilango Adikal, considered to be a Jain by some scholars, has not only introduced Matala Maraiyon, but gives him a commanding role. He commands the mighty Chera King Senkuttuvan to do good things such as Vedic rituals and the king readily obeys him. The Brahmin is amply rewarded by the king. Matala Maraiyon is the one who fills in the gaps in the epic by telling the king what happened to Madhavi and others. He is the main link in the story. Another Brahmin Alamar Selvan (Dakshinamurthy) is introduced by the author Ilango to show the state of Vedic education in those days. Apart from this, Brahmins play the role of ambassador and actor. This shows the respect Brahmins commanded in the second century CE Tamil Nadu. This paper goes into the details with supporting information from the epic.

 

Introduction

it is very interesting to see that Ilango, author of most famous Tamil epic Silappadikaram, has introduced several Brahmin characters from the very first chapter to the last chapter.

 

Matala Maraiyon is the most interesting character in the epic. He commands a great influence over the mighty Chera Emperor Cheran Senkuttuvan. The king gave him gold weighing his body weight. He listened to the advice and performed Vedic Yajnas according to the instructions of the Brahmin.

 

Silappadikaram praised the Brahmins as chaste Tamil speakers (Vandamiz Maraiyor). That proved that Brahmins were sons of the soil.

 

The Parasaran- Dakshinamurthy (Aalamar selvan) episode is another Brahmin episode which  showed that the Vedic education among the Brahmins of second century CE was of very high standard.

 

Tollkappiam says that one of the roles of Brahmins is the job of an ambassador. Ilango introduced a Brahmin (Kosikan= Kausikan) ambassador.

(English translation of prof. V R Ramachandra  Dikshitar in his book The Cilappatikaram , 1978 is used in this article with some spelling changes)

 

Contents:

 

1.Wedding with the help of a Brahmin Priest

Silappadikarm is the first ancient book to show that marriages were conducted by Brahmin priests in the Second century CE Tamil Nadu.

 

“That was the day on which the moon moving in the sky approached the Star Rohini, when Kovalan who walked  around the holy fire in accordance with the scriptural injunctions as directed by the revered Brahmin priest, approached his bride, divinely fair resembling the star Aruntati. How fortunate were those who enjoyed such a splendid sight!

–Mankala valtup patal

Akananuru verses 86,136 and Vedic literature say that the Hindus conducted marriages under the Rohini asterism. But Akananuru verses did not mention the Brahmin priests or the sacred fire.

Picture by Maniam Selvan

 

2.Here comes Matala Maraiyon!

Ilango introduced the Brahmin Matala Maraiyon in the Ataikkala Katai, in the following words:

 

“Kovalan went outside the gates of the Madurai fortress, into the grove wherein dwelt monks engaged in in imparting of Dharma.

And while he was narrating to the sage Kavunti the undiminishing prosperity of Madura and the prowess of the Pantyan king, MATALAN OF TALAICCENKANAM, THE FIRST AMONGST BRAHMANAS, WELL VERSED IN THE FOUR VEDAS, APPEARED AT THEIR RESIDENCE IN THE GROVE SORROUNDED BY A SHALLOW MOAT. He had come there to obtain relief from the fatigue of his journey while returning to his own family, after circumambulating the hill (Potiyil, sacred to the sage Agastya).

To him Kovalan prostrated himself, while the Brahmana skilled in speech, on being addressed, replied as follows.

 

Ilango deliberately puts some incidents into the mouth of Matalan, praising the Brahmins:

 

3.Kovalan Saves a Brahmin

The first incident was about a shipwreck and the person saved by the deity of the sea, Manimekalai, whose name was given to courtesan Matavi’s daughter. So Matalan gives some new information about what happened to Matavi after Kovalan left her.

Matalan continues: “On that day when you sat with that happy lady Matavi, and showered gifts of gold with your beautiful hands, a Brahmana, with bent body, having attained the very limits of knowledge and good conduct, came feebly along with the aid of a stick in order to receive the gifts. Seeing him in the clutches of a fast and furious elephant which had thrown its mahout and was rushing in all directions to the loud noise of the drum, O merciful hero, you stepped forth instantly with a cry, after rescuing the man of high birth, you released yourself from its curved hollow trunk and remaining between the white tusks, stood on its nape like a Vidhyadhara on a dark hill, and curbed the still furious elephant

One should note the high sounding respectful epithets given to the Brahmana.

4.Kovalan Helps a Brahmin Lady

Matalan continues: “on another occasion, a Brahmana left for the north abandoning his wife who had caused the death of a young mongoose. When she followed him, the Brahmana said “it is not proper for me to eat food served by your hands. You give this note containing a Sanskrit verse to people leading a virtuous life”. With this the Brahmana lady went through the bazars where the tall mansions of the wealthy merchants were, and showed the note from house to house proclaiming, “ O will no one relieve me of my sins and enjoy the fruits of s doing? At once you called to her and asked “What is your trouble and what is this note? The lady narrated to you the great distress she was in, and said “take this leaf on which has been written the verse, and by giving me money absolve me from my great sin.” You replied to her, “ Do not fret. Do not be afraid. I shall relieve you of your difficulty” and in order that her sinful deed might be atoned for, you made gifts in accordance with the instituted rules and relieved the lady of her worry. O wealthy man of imperishable riches! Then you made her husband, who had left for the forest come back and live with her in the right path by giving them copious wealth of out of your limitless riches.

 

5.Bhutam Devours a bad man!

The last incident is about a Bhutam (goblin or ghost) devouring a man who gave false evidence and Kovalan supporting the chaste lady and her family for several years.

Then Matalan continues: I know all the good things you have done in this birth, but owing to your deeds in the past birth, O Gopala (Kovalan is the Tamil version of Gopala) of ripe knowledge, you have fallen into incredible suffering along with your gem like young wife who is like Lakshmi herself.”

 

Then Kovalan narrated a nightmare he had in the previous night portending the bad events.

 

Ilango cleverly used Matalan to show that Gopalan’s help to Brahmins and his knowledge in Sanskrit etc.

to be continued……………………………

–Subham–

 

காப்பிகுடித்தால் 100 ஆண்டுகள் வாழலாம்! (Post No.4608)

Einstein image in Coffee!

 

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  6-32 AM

 

 

 

Post No. 4608

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரான்ஸ் நாட்டின் கல்வி நிபுணர், நூல் ஆசிரியர் பாண்டநெல் (Fontenelle) என்பவர் ஆவார். அவருடைய முழுப் பெயர் பெர்னார்ட் லெ பொவியர் தெ பாண்டநெல் என்பதாகும். அவர் 1657 முதல் 1757 வரை வாழ்ந்தார்.

 

பாண்டநெல் மிகவும் காப்பி குடித்ததால் டாக்டர்களுக்கு மிகவும் கவலை. அவருக்கு 80 வயதானபோது டாக்டர்கள் அவரைச் சந்தித்தனர். அவருக்குப் புரியும்  வகையில், மெதுவாக, அழகாக டாக்டர்கள் பேசினர்.

 

“அன்பரே, இந்தக் காப்பி இருக்கிறதே. அது ஒரு விஷம்– உமது உடலை மிகவும் பாதிக்கும்; விஷம் என்று சொன்னால் போதாது. அது ‘மெதுவாக’க் கொல்லும் விஷம்– என்றெல்லாம் விளக்கினர்.

 

அவர் இதைப் புரிந்து கொண்டாரா, இதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அறிய டாக்டர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

அவர் மெதுவாக வாய் திறந்தார்– சரியாகச் சொன்னீர்கள்; மெதுவாகக் கொல்லும் விஷம் என்று; கொஞ்சம் தப்பு விட்டு விட்டீர்கள். அது மெதுவாகக் கொல்லும் விஷம் இல்லை; ‘மிக மிக மிக மெதுவாகக் கொல்லும்’ விஷம்! பாருங்கள்! தினமும் எவ்வளவு காப்பி குடிக்கிறேன்;  80 வயது வரை நன்றாக இருக்கிறேனே! என்றார்.

டாக்டர்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. ஈதென்னடா, செவிடன் காதில் சங்கு ஊதிய கதை ஆகி விட்டதே என்று எண்ணி வெளியேறினர்.

 

டாக்டர்கள் சொன்னது பிழை ஆகிவிட்டது. அதற்குப் பின்னரும் பாண்டநெல் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயதை நெருங்க ஒரு மாதம் இருக்கையில் உயிர் நீத்தார்.

 

காப்பி குடிப்போருக்கு எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!

 

காப்பி  குடியுங்கள்! நன்றாகக் காப்பி குடியுங்கள்! குடித்துக் கொண்டே 100 ஆண்டுக் காலம் வாழுங்கள்! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

xxxx

நீண்ட காலம் வாழ சுருட்டு குடியுங்கள்!

 

பிரிட்டனில் பிரதமராக இருந்தவர் ஜோசப் சாம்பர்லைன் (Joseph Chamberlain): 70 வயதிலும் இளமை ததும்பும் எழில் மிகு தோற்றம்! அவர் மேனி அழகின் ரஹசியத்தை அறிய பலருக்கும் ஆசை. அவரை நெருங்கினர்; தைரியமாகக் கேட்டனர்.

 

“ஐயன் மீர்! உங்கள் மேனி அழகின் ரஹசியம் என்னவோ?”

 

இந்தக் கால நடிகைகளாக இருந்திருந்தால் அவர் என் மேனி அழகிற்கு நான் பாவிப்பது  xyz –  சோப்புதான் என்று சொல்லி இருப்பர்.

 

ஆனால் சாம்பர்லைனோ சற்றும் தயக்கம் இன்றி பதில் கொடுத்தார்.

 

இளமைத் துடிப்புடன் வாழ வேண்டுமா?

 

அதிகம் நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம்  காரில் செல்ல முடியுமோ அங்கெல்லாம் காரிலேயே செல்லுங்கள் நடந்து தொலையாதீர்கள்!!!

சுருட்டு குடிக்கும் வழக்கம் இருந்தால் இரண்டு சுருட்டுகளில் எது சக்தி வாய்ந்ததோ, எது நீளமானதோ அதைக் குடியுங்கள்; அது மட்டுமல்ல அனாவசியமாக நடக்காதீர்கள்; எங்கெங்கெல்லாம் காரில் போக முடியுமோ அங்கெல்லாம் காரில் செல்லுங்கள்– என்றார்.

கேட்க வந்தவர்களுக்கு ஏனடா கேட்க வந்தோம் என்பது போல ஆயிற்று!

 

xxx

மாக்ஸிம் கார்க்கி

சோவியத் ரஷ்யாவின் புகழ் பெற்ற  எழுத்தாளர் (Maxim Gorky) மாக்ஸிம் கார்க்கி. அவர் சோஷலிஸ அறிஞர். அவரை அமெரிக்காவுக்கு அழைத்த நண்பர்கள் அவரை (Coney Island) கோனி தீவிலுள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வீர தீர சாஹசச் செயல்கள் நடந்தன. இவருக்கு எல்லாவற்றையும் நன்கு காட்டிவிட வேண்டும் என்று எண்ணி பாதாள அறை, நிலத்தின் மேலுள்ள மண்டபம் ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.

 

 

அவர் பார்க்காத சர்கஸ் காட்சிகளே இல்லை; அந்தர் பல்டி, குட்டிக்கரணம், வேகப் பாய்ச்சல், மேலிருந்து கீழே குதித்தல் தாவுதல் எல்லா வற்றையும் நண்பர்கள் காட்டினர். கார்க்கியின் நண்பர்களுக்குப் பரம த்ருப்தி.

கார்க்கிக்கு????????

 

எல்லோரும் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியது. மாக்ஸிம் கார்க்கியிடம் அவருடைய நண்பர்கள் வினவினர்.

அன்புடையீர், எங்களுக்கு எல்லாம் இன்று உங்களுடன் இருந்தது மிகவும் பிடித்து இருந்தது; உங்களுக்கும் மகிழ்ச்சிதானே?

 

அவர் உடனே பதில் தராமல் சற்று நேரம் யோசித்தார்; பின்னர் சொன்னார்.

 

அட தோழர்களே; நீங்கள் எல்லோரும் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறீர்கள்!!

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

— சுபம் —–

ஹிந்து விவேகானந்தர்! (Post No.4607)

Picture from Facebook by Anila Gupta

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. ))

 

 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London- 5-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4607

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஹிந்து மதத்தைப் பற்றி, இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஸ்வாமி விவேகானந்தரைப் படிக்க வேண்டும்.

அவரது பிறந்த நாள் : 12-1-1863 சமாதி தினம் : 4-7-1902

ஸ்வாமிஜியின் ஜெயந்தி தினத்தை ஒட்டிய சிறப்புக் கட்டுரை!

 

ஹிந்து விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

1

ஸ்வாமி விவேகானந்தர் ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டு பிரமிக்க வைக்கும் ஒன்று.

ஹிந்து மக்களைச் சொந்த நாட்டிலே எழுச்சியுறச் செய்ததோடு அதன் பெருமையை உலகளாவிய விதத்தில் அறியச் செய்தார்.

உலக அறிஞர்களையே வியக்க வைத்தார்.

‘ஹிந்து சைக்ளோன்’ – ஹிந்து சூறாவளி என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டி அவரைக் கொண்டாடின.

வியப்பு கலந்த திகைப்பில் அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட வந்த வண்ணம் இருந்தன.

அவர் நியூயார்க்கில் இருந்த போது கூறியது இது தான்:

New York, 6 May 1895 :

I did not come to seek name and fame; it was forced upon me. I am the one man who dared defend his country, and I have given them such ideas as they never expected from a Hindu. There are many who are against me, but I will never be a coward..

(Complete Works of Swami Vivekananda Volume 5, pages 81-81)

 

2

ஸ்வாமிஜி நல்லவர்க்கு நல்லவர். வல்லவர்க்கு வல்லவர்.

அவருடன் வாதாட வந்தவர்கள் வாயடைத்துப் போயினர்.

அவருக்குத் தீங்கு செய்ய முனைந்த பாதிரிகள் அதன் மூலம் தமக்குத் தீங்கையே தேடிக் கொண்டனர்.

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் கிறிஸ்தவ பாதிரிகளுடன் அவருக்கு நேரிட்ட ‘நேருக்கு நேர்’ மோதல் பல.

அவரைப் பொறுக்கமாட்டாதவர்களைப் பற்றி அவர் கூறினார் இப்படி:

It struck me more than once that I should have to leave my bones on foreign shores owing to the prevalence of religious intolerance.

(Complete Works of Swami Vivekananda Volume 3, page 187)

 

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டத் தயாராக அங்கு உள்ள பாதிரிகள் தயாராக இல்லை. மாறாக அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டி அவரது எலும்பை அங்கேயே புதைக்க அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்!

ஆனாலும் அவர் சளைக்கவில்லை; மலைக்கவில்லை.

அவர்களை எதிர்கொண்டு நின்று சவால்களை ஏற்று வென்றார்.

பிரபல நாத்திகரான ராபர்ட் கிரீன் இங்கர்ஸாலுடனான அவரது சந்திப்பு குறிப்பிடத் தகுந்த ஒன்று!

(இது பற்றி கலைமகள் மாத இதழில் ஏற்கனவே எனது கட்டுரை வெளியாகியுள்ளது; ஆகவே அந்த விவரங்களை மீண்டும் இங்கு தரவில்லை.)

அந்தச் சந்திப்பின் போது இங்கர்ஸால் கூறினார்:

“50 ஆண்டுகளுக்கு  முன்னர் இப்படி போதனை செய்ய நீங்கள் வந்திருந்தால் உங்களைத் தூக்கிலே தொங்க விட்டிருப்பார்கள். உயிரோடு உங்களை எரித்திருப்பார்கள். அல்லது கிராமங்களிலிருந்து கல்லை விட்டு அடித்து உங்களைத் துரத்தி இருப்பார்கள்”

இதை ஸ்வாமிஜியே கூறியுள்ளார். அவரது சொற்கள் இதோ:-

“Fifty years ago,” said Ingersoll to me, “ you would have been hanged in this country if you had come to preach. You would have been burnt alive or you would have been stoned out of the villages.”

(Complete Works of Swami Vivekananda Volume 2, page 27)

3

“மனத்திலே கறுப்பு வைத்து” உலவிய கெட்ட பாதிரிகளுடனான அவரது மோதல்கள் திகிலூட்டுபவை. அதை அவர் எதிர்கொண்ட விதமும் பிரமிப்பூட்டும்.

அந்தப் பாதிரிகள் பத்திரிகைகள் மூலம் தூஷணைப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பார்த்துத் தோற்றனர்.பின்னர் பல கேள்விகளை கூட்டங்களில் கேட்டு, அதற்கு வந்த உடனடி பதில்களால் வாயடைத்துப் போயினர்.பின்னர் பெருந்தொகை தருவதாகக் கூறி பெண்களை அவரிடம் அனுப்பிப் பார்த்தனர். அந்த வேசிகளோ அருள் அலை மேலே ததும்ப திரும்பி ஓடி வந்தனர். பாதிரிகள் திகைத்துப் பயந்தனர். இறுதி வழியாக அவரைத் தொலைத்துக் கட்டுவதே ஒரே வழி என்று தீர்மானத்திற்கு வந்தனர். அதில்

ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு பார்க்கலாம்.

சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய, “சுவாமி விவேகானந்தர் – விரிவான வாழ்க்கை வரலாறு, முதல் பாகம், 26 ஆம் அத்தியாயம் எதிர்ப்பு அலைகள் – என்ற அத்தியாயத்திலிருந்து தரப்படும் வரிகள் இவை:

“டெட்ராய்ட்டில் சுவாமிஜியை ஒரு விருந்திற்கு அழைத்தனர். சிற்றுண்டி அளித்தனர். அங்கு அளிக்கப்பட்ட காப்பியைக் குடிப்பதற்காக சுவாமிஜி வாயருகே கொண்டு சென்றார். எப்போதும் உடன் நின்று காக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்போது அங்கே தோன்றினார்; “அந்தக் காப்பியைக் குடிக்காதே.அதில் விஷம் கலந்துள்ளது” என்றார். சுவாமிஜி சுதாரித்துக் கொண்டார்.பாதிரிகளின் கடைசி முயற்சியும் தோல்வி கண்டது.”

4

சுவாமிஜி  ஹிந்துக்களை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று வெறுமனே வெற்று வேதாந்தம் பேசி செய்ய வேண்டிய செயலைச் செய்யாது விட்டுவிடச் சொல்லவில்லை.

உனது கடமையைச் செய்; ஆனால் அதில் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கை வலியுறுத்திய அவர், ஹிந்து என்றாலே ஒரு சக்தி மின்னலை உன் உடம்பில் பாய வேண்டும் என்றார்.

உத்வேகம் ஊட்டும் உணர்ச்சி மிக்க அவரது சொற்கள் வலிமை வாய்ந்தவை; ஹிந்துக்களை வாழ வைப்பவை; செயலூக்கம் பெற்றுச் செய்ய வேண்டுவனவற்றை உடனடியாகச் செய்யத் தூண்டுபவை.

அந்த மகோன்னதமான விழிப்புணர்ச்சிக்கான குரலை – தெய்வ வாணியை – அப்படியே கீழே தருகிறோம்.

படிப்போம்; அதன் படி நடப்போம்; ஹிந்து மதத்தின் பெருமை உலகின் உச்சியை அடைந்து அனைத்து உலக மக்களும் நலமுடன் வாழ வழியைக் கற்பிப்போம்.

 

Mark me, then and then alone you are a Hindu when the very name sends through you a galvanic shock of strength.

 

Then and then alone you are a Hindu when every man who bears the name, from any country, speaking our language or any other language, becomes at once the nearest and the dearest to you.

 

Then and then alone you are a Hindu when the distress of anyone bearing that name comes to your heart and makes you feel as if your own son were in distress.

 

Then and then alone you are a Hindu when you will be ready to bear everything for them, like the great example I have quoted at the beginning of this lecture, of your great Guru Govind Singh.

Driven out from this country, fighting against its oppressors, after having shed his own blood for the defence of the Hindu religion, after having seen his children killed on the battlefield — ay, this example of the great Guru, left even by those for whose sake he was shedding his blood and the blood of his own nearest and dearest — he, the wounded lion, retired from the field calmly to die in the South, but not a word of curse escaped his lips against those who had ungratefully forsaken him!

 

Mark me, every one of you will have to be a Govind Singh, if you want to do good to your country.

 

You may see thousands of defects in your countrymen, but mark their Hindu blood. They are the first Gods you will have to worship even if they do everything to hurt you, even if everyone of them send out a curse to you, you send out to them words of love.

 

If they drive you out, retire to die in silence like that mighty lion, Govind Singh. Such a man is worthy of the name of Hindu; such an ideal ought to be before us always. All our hatchets let us bury; send out this grand current of love all round.

5

ஸ்வாமிஜியின் ஜெயந்தி தினத்தில் அவரது நினைவைப் போற்றிக் கொண்டாடி தூய்மையான, உறுதியான ஹிந்துவாக வாழ சூளுரை எடுப்போம்; ஹிந்து  மதத்தின் ஏற்றத்தை அறவழியில் உலகில் அனைவரும் உணரும் வகை செய்வோம்.

***

 

 

GHOST AND MUSIC STORY (Post No.4606)

Written by London Swaminathan 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London  8-31 AM

 

 

 

Post No. 4606

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

India is a paradise for lovers of folk tales; all the Indian languages have hundreds of folk tales. Several people have collected them and published them for the benefit of the future generations. Natesa Sastri of Tamil Nadu has published some folk tales in Tamil and English. I am giving below my own translation of a folk tale about ghosts.

A poor Brahmin lived in a town in Tamil Nadu. He tried all the tricks in his bag to earn his livelihood but failed. So, he thought that it was his bad Karma (evil things he did) of the previous birth and it should be spent by going to Kasi—that is Varanasi, the holiest city for the Hindus. He started on his journey with some pack lunch.

 

In those days, people who go on pilgrimage or long journeys used to take packed lunch that will last at least for a few days. On his way he saw a shady tree and a tank. So he decided to take rest and have his lunch there. First he went to wash his hands and feet in the tank. But he heard a voice, “Don’t wash your hands and feet”. He ignored the warning and went ahead with his plans. When he was about to eat he heard the voice again warning him not to eat. But his hunger did not wait for anything and so he consumed his food. While he was about to leave the place, the third warning came saying not to proceed any further and to stop.

 

The poor Brahmin stopped and asked who the person was issuing such warnings. A Brahma Rakshas appeared before him and told him his story. Brahma Rakshas means a Brahmin Ghost. If a Brahmin does not do his duty and he meets with some untimely death, then that person will become a Brahmin ghost.

This Brahmin was very greedy and possessive and so he did not teach his music to anyone in the Purva janma/ previous birth and so he became a Brahmarakshas/ ghost. He continued his story saying that he was now tormented by the bad music of a Nagaswara Vidwan in a temple just outside the forest. The ghost requested the poor Brahmin to take it to another place where he cant hear music with any bad or discordant notes (Abaswara).

 

Nagaswara= traditional music pipes in Tamil Temples

Vidwan = a musician or a scholar

 

The poor Brahmin readily agreed and asked what he would get in turn. The ghost told him that it would enter the daughter of Mysore Maharaja, King of Mysore, and wait for the Brahmin to return from Kasi/Benares. As soon as he comes into the room of King’s daughter he would run away and the king would give him a big prize. The verbal agreement was done and executed. The ghost put one condition. The Brahmin should do the ghostbusting only once and if at all he tried for the second time he would be finished.

 

After a few months, the Brahmin returned from Kasi via Mysore. He stayed there in an old woman’s house. When he asked the lady the latest news in that part of the country, the lady told the Brahmin that the king’s daughter was possessed by a ghost and not even the biggest magician or sorcerer of the land could drive it away. And the king had announced a big reward for any one driving the ghost out.  Immediately the Brahmin planned his next move.

When he went to the king the next day, the king did not have much faith in him but allowed him to try ghost busting. As soon as the poor Brahmin entered the room of king’s daughter, the Brahmarakshas recognised the Brahmin and ran away reminding him the condition (that he should not try sorcery for the second time). When the king’s daughter became a normal woman, the king was very happy and gave the Brahmin several villages and a bag of gold coins.

 

The Brahmin went home and settled happily in life. As the time went by the Brahmarakshas went to the palace of king of Thiruvananthapuram (Kerala) and now his daughter was possessed with this Brahmarakshas. That king also tried all the sorcerers to drive it away. When all the attempts failed, he came to know that Mysore Maharaja tried one magician and succeeded. Somehow They found out the address of this Brahmin and contacted him through Mysore Maharaja. It gave him jitters.

 

The Brahmin had to go to Thiruvananthapuram under the orders of Mysore Maharaja. He went and dragged the matter for many months without visiting the palace citing bad omens. One day he made up his mind and arranged everything for the future of the family and boldly went into the palace. He thought that it was his last day on earth.

 

He entered the room where the possessed girl was sitting. As soon as he entered the room the Brahmarakshas- Brahmin ghost- recognised him and reminded its condition. It took a big iron rod and came running to attack the Brahmin. His body was shivering but his brain worked. He shouted

“If you come near me I will call the Nagaswara Vidwan’ (of discordant note) to come here. He is waiting just outside”. The minute the ghost heard the name of the Abaswara (discordant note, out of tune) Nagaswara musician it ran away from the palace itself! The daughter of the king became normal. The king was extremely happy and gave the Brahmin a big pot of gold coins and lot of villages.

 

Even ghosts hate music with discordant notes!

Sing well or Don’t sing at all!

 

–Subham–

 

ரொம்பவும் நல்லவனாக இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

ரொம்பவும் நல்லவனாக (இளிச்சவாயனாக, அப்பாவியாக) இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

Written by London Swaminathan 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London  7-39 AM

 

 

 

Post No. 4605

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:

 

மிகவும் நேர்மையாக நிமிர்ந்து நிற்காதே! காட்டுக்குப் போய் மரங்களைப் பார்; நேராக நிமிர்ந்து சென்ற மரங்களை எல்லாம் வெட்டி எடுதுக் கொண்டு போய் விட்டார்கள்; கூனிக் குறுகிய மரங்களை யாரும் தொடவில்லை. அப்படியே நிற்கின்றன.

நாத்யந்தம் ஸரலைர்பாவ்யம் கத்வா பஸ்ய வனஸ்தலீம்

ச்சித்யந்தே ஸரலாஸ்தத்ர குப்ஜாஸ்திஷ்டந்தி பாதபாஹா

–சாணக்கிய நீதி, அத்யாயம் 7, ஸ்லோகம் 12

 

இதைப் படித்தவுடன் சாணக்கியனைத் தப்பாக எடை போட்டுவிடதீர்கள்; அவன் மஹா மேதாவி; மகதப் பேரரசை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன் அவன். இங்கே சொல்ல வந்தது எல்லாம் அரசியலுக்கு மட்டுமே பொருந்தும்; மேலும் அசத்தியத்தை, அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் போல சாம, தான, பேத, தண்டத்தைப் பின்பற்றலாம் என்பதே அவன் சொல்ல வந்த விஷயம்.

 

 

‘தூங்கும் புலியைத் தட்டி எழுப்பாதே’,

‘தூங்கும் புலியை சீண்டாதே’, என்றும் ‘தூங்குகின்ற புலியை இடறிய சிதடன்’ என்றும் தமிழில் சொல்லுவர்.

 

எந்த ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பலாம் , யாரை எழுப்பக்கூடாது என்று பட்டியல் தருகிறான் சாணக்கியன்

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

 

எழுப்பு! எழுப்பு! ஏழு பேரை எழுப்பு!!!

 

 

கீழ்கண்ட ஏழு பேர் தூங்கினால் உடனே எழுப்பிவிடு

வித்யார்த்தி சேவகஹ பாந்தகஹ க்ஷுதார்த்தோ பயகாதரஹ

பண்டாரீ ச ப்ரதிஹாரீ ஸப்த ஸுப்தான் ப்ரபோதயேத்

——சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 6

 

கீழ்கண்ட ஏழு பேரை எழுப்பு:

மாணவன், வழிப்போக்கன், வேலைக்காரன், பசியால் வாடுபவன், பயத்தால் நடுங்குபவன்,  பண்டகசாலை பொறுப்பாளர், வேலைக்காரன்

 

எழுப்பாதே, எழுப்பாதே, ஏழு பேரை எழுப்பாதே!

அஹிர் ந்ருபம் ச சார்தூலம் கிடிம் ச பாலகம் ததா

பரஸ்வானம் ச மூர்க்கம் ச ஸப்த ஸுப்தான் ந போதயேத்

—சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 7

 

கீழ்கண்ட ஏழு பேரைத் தூங்கும் போது எழுப்பாதே:

பாம்பு, அரசன், புலி, காட்டுப்பன்றி, குழந்தை, வேறு ஒருவரின் நாய், முட்டாள்.

 

அருமையான புத்திமதிகள்; நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வியாஸமே எழுதலாம்.

வாழ்க சாணக்கியன்!

 

–சுபம், சுபம்–

 

‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’ -பாரதி நூல்கள் – Part 46 (Post 4604)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London- 6-32 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4604

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 46

ப.மீ.சுந்தரம் எழுதியுள்ள ‘பாரதியார் – வரலாறும் கவிதையும்’

 

ச.நாகராஜன்

1

1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் சிகந்திராபாத்தில் தென்னிந்திய கழகத்தின் சார்பில் பாரதித் திருவிழா, முதல் மந்திரியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் உஸ்மானியா சர்வகலாசாலையின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் ப.மீ.சுந்தரம் கலந்து கொண்டார்.

அவரைச் சந்தித்த பல பாரதி அன்பர்கள் அவரிடம் பாரதியின் பாடல்களைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுதுமாறு வேண்டினர். அதன் விளைவாக எழுந்தது இந்த நூல். முதற்பதிப்பு 1954ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 133 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் பாரதியாரின் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.

அவரது கவிதைகள் பற்றிய ஆய்வு திறம்படச்  செய்யப்பட்டுள்ளது.

நூலின் சில பகுதிகளைப் பார்த்தால் அதன் சிறப்பு விளங்கும்.

சில நல்ல பகுதிகளை இங்கு காணலாம்.

 

2

பாரதியார் நிவேதிதா தேவியைச் சந்தித்த சம்பவத்தை நூலாசிரியர் தருவதில் ஒரு பகுதி:-

1906ஆம் ஆண்டில் காசிமாநகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் சபைக்குச் சென்றிருந்த பாரதியார் புத்துணர்ச்சி பெற்று மீண்டார் என்றே கூறல் வேண்டும்….

கூட்டங் கலைந்து திரும்புங்கால் கல்கத்தாவிற்குச் சென்று அம்மாநகரின் காட்சிகளைக் கண்ட பாரதியார் டம்டம் என்ற ஊரில் வசித்து வந்த ஸ்ரீமத் விவேகானந்தரின் சிஷ்யையான ஸ்ரீமதி நிவேதா தேவியைக் காணச் சென்றார்… தன் மனைவியை வெளியூர்களுக்கு அழைத்து வராத குற்றத்திற்குத் தன் குலவொழுக்கமே காரணம் எனக் கூற, ஸ்ரீமதி நிவேதா தேவி கோபங் கொண்டு பெண்மை பெருமையுடையதென்றும், பெண்களே நாட்டிற்கும் சமூகத்திற்கும் மணி விளக்காகத் திகழக் கூடியவர்களென்றும், பரஞான முத்தி இயல்புகளுக்கும் அப்பெண்களே துணையாவார்கள் என்றும் சொல்லி நிகழ்த்திய சொற்பொழிவானது பாரதியார் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

 

3

பாரதியார் முத்தையா பாகவதர் சந்தித்த ஒரு அரிய சம்பவத்தைப் பற்றி நூலாசிரியர் விளக்குவது:

ஓர் தினம் காயக சிகாமணி முத்தையா பாகவதர் ஸ்ரீ ராம நவமியின் காரணமாக அரி கதை செய்தார். அன்னார் கதையைத் தமிழகத்திலே அனுபவியாதவர் இல்லை என்றே சொல்லலாம். கதை முடிந்த பிறகு பாரதியாரும் அவரைச் சந்தித்துப் பேசினார். தான் பாடிய “ஜெயபேரிகை கொட்டடா! கொட்டடா!” என்ற பாடலைத் தான் பாகவதரிடம் பாடிக் காட்டினாராம். முத்தையா பாகவதர் பாரதியாரின் அருமை பெருமைகளை அறிந்தவராதலின் அப்பாடலை நன்கு சுவைத்ததோடு பாரதியாரையும் பலபடப் புகழ்ந்தார். செத்தாரைப் போல திரிகின்ற ஜீவன் முக்தர் நிலை, உலக மக்களில் பலருக்குத் தெரியாதாகையால் பாரதியாரைப் பைத்தியக்காரன் என்று நினைத்து அங்கு வந்தவர்கள் யாவரும் அன்றைய தினம் பாரதியார் யார் என்பதை உணர்ந்து வெட்கித்தனர்.

4

பாரதியாரின் கவிதா நயத்தை நூலாசிரியர் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து விளக்குகிறார்.

பாரதியார் கடவுட் பண்பு, பாரதியார் பெண்மை, பாரதியார் தேசீயம், பாரதியார் உயிர்நேயம், பாரதியார் பெரியார் வழிபாடு, பாரதியார் நூன்மரபு, பாரதியார் பிரபந்தங்கள், பாரதியார் வாழ்த்தும் சீட்டும், பாரதியார் கவிதாசக்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாரதியாரின் கவிதை அருமையை நூலாசிரியர் சிறப்பாக விளக்குகிறார்.

நூலாசிரியரின் திறனாய்வு தரும் முடிவுகள் இவை:-

 

  • நன்னூலாசிரியர் “பல்வகைத் தாதுவின்” என்பதற்கிணங்க, பாரதியாரின் பல பாடல்கள் யாப்பிலக்கண முறைக்குள் அடக்க முடியாத நிலையிலிருப்பினும் அறவே தள்ளுமாறு இல்லை. புறனடைச் சூத்திரத்தில் உதவியால் அவைகளைக் கொள்ளுதலே மேன்மையுடத்து. கால தேச மாறுதல்களால் இலக்கண அமைப்புகள் மாறுதலடைதலே மொழி முன்னேற்றத்திற்கும் செய்யுளிலக்கிய முன்னேற்றத்திற்கும் துணை புரியுமாறு காண்க.
  • இரண்டாவதாக, பாரதியார் பாடல்களில் முதன்மையாகக் காணப்பெறும் அழகு “சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்” என்பது.
  • மூன்றாவதாக, பாடல்களைப் படிக்கின்ற காலத்துப் படிப்போர் உள்ளக் கிளர்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் தோன்றுவரல்லாது கூம்பும் தன்மை பெறுமாறில்லை.
  • நான்காவதாக, பாரதியார் செய்யுள் நடை தனித்தன்மை வாய்ந்தது.
  • ஐந்தாவதாக கம்பன் கூறிய “அவ்வியத் துறைகள் தாங்கி” என்பதைப் பார்க்குமிடத்து, பாரதியார் பாடல்களாகிய ‘திருத்தசாங்கம்’, ‘விநாயகர் நான்மணி மாலை’, ‘திருப்பள்ளியெழுச்சி’, ‘பெண்கள் விடுதலைக் கும்மி’, ‘நவராத்திரிப் பாட்டு’ முதலானவைகளில் பாக்களும், பாவினங்களும் நன்கு கையாளப்பட்டுள்ளன.
  • ஆறாவதாக, “ஐந்திணை நெறியளாவி” என்று கூறுமிடத்து திணையை ஒழுக்கமாக கொள்ளின், அகப்பொருளும் ஒழுக்கத்திற்கே திணை பொருந்துவதன்னியில் புறவொழுக்கங்களுக்கும் பொருந்துவதாகும். .. பாரதியார் பாடல்களை அகவொழுக்கம் ஐந்திற்கும், புறவொழுக்கம் ஐந்திற்கும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.
  • ஏழாவதாக, “செவியுறத் தெளிந்து” என்னுமிடத்து தெளிவே பாரதியின் பாடல்களில் தெளிந்து நிற்பது என்பதாம்.
  • எட்டாவதாக, எடுத்துச் சொல்லப்படுவது “தண்ணென்றொழுக்கம்” தழுவி என்பது. தண்ணிய ஒழுக்கமும், செப்பமாகச் செல்லும் நடையொழுக்கமும், மரபு ஒழுக்கமும், சொல்லொழுக்கமும், கருத்தொழுக்கமும் மூதுரைகளை எடுத்தாளும் எளிய ஒழுக்கமும், உணர்வும் போற்றத் தக்கன.
  • ஒன்பதாவதாகக் கூறப்படுவது “சான்றோர் கவி கிடந்தவாறு கிடத்தல்: என்பதினால் பாரதியாரின் கவிதைகள் கிடந்த முறையிலேயே உள்ளன.

5

பாரதியாரின் கவிதா சக்தியைப் பற்றி நூலின் இறுதியில் ப.மீ.சுந்தரம் விளக்கும் பான்மை அற்புதமாக அமைந்துள்ளது.

நூலின் கடைசி இரு பாராக்களில் பாரதியாரின் கவிதா சக்தியை அவர் இப்படிக் கூறுகிறார்:-

வரகவி பாரதியாரின் கவிதாசக்தியைத் தொகுத்துக் கூற வேண்டுமாயின் பின்வருமாறு கூறலாம்: ‘ஆன்ம இயல்புகள்’, என்பதைப் ‘பாரத சமுதாயம்’, ‘சுதந்திரப் பெருமை’, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்ற பாடல்களிலும், எழுவகைத் தாதுக்களால் “உயிர்க்குடல் போல்” என்பதைப் பாடல்கள் எல்லாவற்றிலும், “ஆன்ற பொருள் தந்து” என்பதை வேதாந்தப் பாடல்களிலும், “புலத்திற்றாகி” என்பதைப் ‘பாஞ்சாலி சபதத்திலும்’, “துறைகள் தாங்கி” என்பதைக் ‘கண்ணன்’, ‘கண்ணம்மா’, பாடல்களிலும், “தெளிந்த” என்பதைச் சிறப்பாகப் ‘பாரதி – அறுபத்தாறு’, ‘தமிழ் மொழி’, ‘பாரத நாடு’ என்ற பாடல்களிலும், “ஒழுக்கம்” என்பதைப் ‘பரசிவ வெள்ளம்’ என்ற பாடலிலும் காணப்பெருவது தமிழ் அன்னையின் தவப் புதல்வனாம் பாரதநாட்டுக் கவிஞன் பாரதியாரின் கவிதாசக்தியைத் தெற்றென விளக்குமன்றோ!

ஆகவே, நம் பாரதியார், உயரிய ஒழுக்கத்தினாலும், அரிய சேவையினாலும், ஆன்ம ஜெயத்தினாலும், தவமிக்கத் தண்ணளியினாலும், கவிதைப் பெருக்கின் கண்ணியத்தினாலும், இறவாப் புகழ் பெற்றதுமன்றி, இந்திய நாட்டுக் கவிஞர்கள் கொலுவீற்றிருக்கும் மணிமண்டபத்தில் தானும் வீற்றிருந்து நம்மனோர்க்கு இனிய காட்சியளிக்கும் பெற்றியைப் பெற்றார் என்று கூறுவதே இந்நூலின் முடிவுரையாகும்.

 

அருமையான இந்த நூலை பாரதி அன்பர்கள் படித்து இன்புற வேண்டும்; பாரதியாரின் கவிதா சக்தியை அறிந்து கொள்ள இந்த நூல் உற்ற துணை!

***

 

 

DRINK COFFEE, LIVE 100 YEARS! SECRET OF LONG LIFE (Post No.4603)

Compiled by London Swaminathan 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London  11-34 am

 

 

Post No. 4603

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Longevity Anecdotes 

Fontenelle was continually being told by his doctors that what he liked to eat was bad for him. Towards the end of his life, one warned him that he must give up coffee, explaining at great length in most appalling medical terms, that it was a slow poison and would eventually ruin his system. In a tone of deep conviction the nonagenarian-replied

Doctor, I am inclined to agree with you that it’s a slow poison– very slow , for I have been drinking it for the past 80 years.

Coffee lovers may derive some comfort from the fact that Fontanelle came within a month of to be a hundred years old.

 

Xxx

NEVER WALK, DRIVE!

Joseph Chamberlain

Until Joseph Chamberlain, British prime minister was seventy, he seemed to hold the secret of perpetual youth. Someone asked him what the secret of his good health was. He smiled and said,

“Never walk if you can drive; and of two cigars always choose the longest and the strongest”.

 

Xxxx

 

Maxim Gorky: Relaxation Anecdote

   

When Maxim Gorky visited America he was taken to Coney Island by friends who wanted him to behold this huge playground swarming with holiday throngs. They took him through the crowded concessions, where he saw one dizzy contraption after another, swinging people through the air, swirling them in eccentric curves, shooting them down breath-taking inclines.

 

They took him under ground and over ground, into bewildering mazes, museums of freaks, palaces of jugglers , theatres of dancing ladies and living statuary. They were giving Maxim Gorky the time of his life.

 

Finally, at the end of what may have seemed to them a perfect day, they asked him how he liked it. He was silent for a moment. Then he said very simply,

“What a sad people you must be! “

 

Xxxx Subham xxxxx

 

மூன்று பொம்மை கதை, சாணக்கியன் எச்சரிக்கை – (Post No.4602)

Written by London Swaminathan 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London  7-53 AM

 

 

 

Post No. 4602

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

மூன்று பொம்மை கதை

விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவ ராயர் சபைக்கு ஒரு வணிகன் மூன்று பொம்மைகளைக் கொணர்ந்தான். அவற்றின் ரஹசியங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி யாரேனும் அந்தச் சபையில் உண்டா என்று வினவினான். எல்லோரும் பொம்மைகளை வாங்கிப் பார்த்துவிட்டு திரு திரு என முழித்தனர். விடை காண இயலாமல் தவித்தனர். அரசனும் சில நாட்கள் கழித்து அந்த வியாபாரியை திரும்பி வரும்படி சொல்லி அனுப்பினன். தெனாலி ராமன் கையில் அந்த பொம்மையைக் கொடுத்தவுடன் அவனுக்கு அதன் சூக்ஷ்மம் புரிந்தது.

Masks sold in Bangalore; newspaper picture

மறு நாள் எல்லோரும் ராஜ சபையில்  இருக்கையில் ஒரு சிறு கம்பியைக் கொண்டுவருமாறு தெனாலி ராமன்

வேண்டினான்.

 

கம்பி என்ன? தம்பி; உனக்குத் தங்கக் கம்பியே தருகிறேன் என்றான் மன்னவன்

 

தம்பி கையில் கம்பி வந்தது.

 

முதலில் ஒரு பொம்மையை எடுத்து காதின் ஒரு புறத்தில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செலுத்தினான். அது மறு புறமுள்ள செவி வழியே வெளி வந்தது.

 

யாரும் பார்க்காத  துளைகளை அவன் மட்டும் பார்த்தது முதலில் எல்லோருக்கும் வியப்பு அளித்தது.

 

இரண்டாவது பொம்மையை எடுத்தான். இப்போது காது வழியே சென்ற கம்பி வாயின் வெளியே வந்தது. எல்லோரும் அதன் ‘தாத்பர்யம்’ விளங்காமல் விழித்தனர்

 

இதற்குள் தெனாலி ராமன் மூன்றாவது பொம்மையை எடுத்தனன் ; தங்கக் கம்பியை நுழைத்தனன்;  எங்கே கம்பியின் மறு புறம் என்று  வியந்தனர்.

 

தெனாலி ராமன் சொன்னான்; அது அதன் நடுப்பகுதியில் உள்ள மனதுக்குள்—இதயத்துக்குள்– சென்று விட்டது என்று சொன்னான்.

 

இதன் பொருள் என்ன என்றும் செப்பினான்:

 

முதல் பொம்மை ‘அதமர்’களுக்குச் சமம்; கீழ் மட்ட மக்கள்; எதைச் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டார்கள் இந்தப் பக்கம் செவியில் விழுவது அடுத்த பக்க செவி வழியே வந்து விடும் ; மனதில் அடங்காது.

 

இரண்டாவது பொம்மை ‘மத்யமர்’; இடைத் தர மக்கள்; சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி விடுவர்; ரஹஸியம் தங்காது.

 

மூன்றாவது பொம்மை ‘உத்தமர்’களைக் குறிக்கும்; உயர் மட்ட மக்கள்; அவர்கள் காதில் வாங்குவதை மனதில் பதிப்பர்; எந்த ரஹஸியத்தையும் வெளியே விடாது காப்பர் என்றான்.எல்லோரும் அவன் பதிலைக் கேட்டு ஆரவாரம் செய்து பாராட்டினர்.

 

அகம் மகிழ, உளம் குளிர, மாமன்னனும் பரிசு மழை பொழிந்தான்.

 

இது ரஹஸியத்தின் பெருமைதனைக் கூறும் ஒரு நிகழ்வு.

இதையே புலவர்களும் பாடி வைத்தனர்.

XXXX

சாணக்கியன் எச்சரிக்கை – ரஹஸியம், பரம ரஹஸியம்!!

 

மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாசயேத்

மந்த்ரேண ரக்ஷயேத் கூடம் கார்யே சாபி நியோஜயேத்

 

பொருள்

உன் மனதில் உள்ள விஷயங்களை எல்லாம் வார்த்தைகளில் வடிக்காதே; அதை ரஹசியமாக வைத்திருந்து செயல் வடிவில் காட்டுக.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 7

 

 

இது நல்ல புத்திமதி; ஏன்?

1.ஒருவன் சொன்னபடி செய்ய முடியாமல் போனால் உலகம் அவனைப் பார்த்து சிரிக்கும்

2.முன் கூட்டிச் சொன்னால் அதற்கு யாரேனும் தடை போட முடியும்

 

3.படை எடுப்பு, தாக்குதல்போன்ற விஷயங்களைச் சொன்னால், எதிரி நம்மையும் விட ஒரு படி மேலே போய்விடுவான்

  1. ஆராய்ச்சி, கல்வி முதலிய விஷயங்களை முன்கூட்டிச் சொன்னால் வேறு ஒருவர் அதைச் சொல்லி புகழ் பெறுவர்.

 

  1. பேடண்ட் PATENT வாங்கும் முன் யோஜனைகளை வெளியிட்டால் நம்மைவிட வேறு ஒருவர் செயலில் இறங்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளக் கூடும்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலும் எதில் எதில் ரஹஸியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும்:-

 

குருவுபதேச மாதர்கூடிய வின்பத் தன்பால்

மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தருமம்

அரிய மந்திரம் விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்

ஒருவருந்தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே

 

பொருள்

ஆசிரியர் செய்த உபதேசம்,

ஸ்த்ரீயிடத்தில் தான் அனுபவித்த இன்பம்,

தான் எவ்வளவு நியாயவான்,

எவ்வளவு படித்தவன்,

எவ்வளவு தருமம் செய்தனன்,

என்ன வயது ஆகியவற்றையும்

பரமரஹஸியமாக வைத்திருக்க வேண்டும்.

தனக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரம்,

தனது பலம்,

பலவீனமிவைகள் எல்லாம் ஒருவருக்கும் தெரியக் கூடாது;

அப்படித் தெரிந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் கிடைக்காமற் போய்விடும்.

 

திருவள்ளுவனும் திருக்குறளில் ரஹஸியம் பரம ரஹஸியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்:-

அறை பறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் – குறள் 1076

 

பொருள்

சிலர்,  தாம் கேட்ட ரஹசியச் செய்திகளையும் பல இடங்களுக்குச் சென்று வெளியிடுவர். இப்படிச் செய்பவர்கள் கயவர்கள்;  அவர்கள் அறையப்[படும் டமாரம்- அறை- போன்றவர்கள் ஆவர்.

xxx

பழமொழி நானூறு என்னும் நூலிலும் ரஹசியத்தின் பெருமை விதந்து ஓதப்படுகிறது:

 

பெருமலை நாட! பிறரறியலாகா

அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை

நெஞ்சிற் சிறியார்க்குரைத்தல் பனையின் மேல்

பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று

 

பொருள்

பெரிய மலை நாட்டுக்கு உரிமையுடையோனே! சான்றோர்கள், பிறர் அறியக்கூடாத விஷயத்தை ரஹஸியமாகக் காப்பர்; அதை சிறுமனம் படைத்தோருக்கு — சிற்றறிவு படைத்தோருக்குச்— சொன்னால் அது பனை மரத்தின் மீது பஞ்சு வைத்து அதைப் பறக்கவிட்டது போலாகும்; அதாவது மரத்தின் மீது பஞ்சு மூட்டையைக் கொண்டு வைத்தால் அது எப்படி எல்லாத் திசைகளிலும் எளிதில் பரவுமோ அப்படி ரஹஸியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.

 

 

இன்னொரு பாடலில் பழமொழி ஆசிரியர் முன்றுரை அரையனார் பகர்வதாவது:-

 

நயவர நட்டொழுகுவாரும் தாம் கேட்ட

துயவாதொழிவார் ஒருவருமில்லை

புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்

கயவர்க் குரையார் மறை

 

பொருள்

மேகம் போன்ற கரிய கூந்தலையும் தங்க வளையல்களையும் அணிந்த பெண்ணே, கேள்! அன்போடு உள்ள நண்பரிடமும் கூட ஆராயாது எல்லா விஷயங்களையும் சொல்பவர் எவரும் இல்லை. ஆகவே அறிவுடையோர், கீழ் மக்களுக்கு ரஹஸியத்தைச் சொல்ல மாட்டார்கள்

 

Earlier Article……………….

ரகசியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரகசியம்/

 

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர். இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–. போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் … https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…. 2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி …

 

— சுபம், சுபம் —

 

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை! (Post No.4601)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4601

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்த சரிதம்

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை!

 

ச.நாகராஜன்

Buddha in Bangladesh; picture sent by Lalitha Malar Maniam

ராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

 

இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.

 

பிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.

கடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.

“அன்பு நண்பரே!, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்!”

 

கடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.

 

புத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.

 

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

புத்தரை மானசீகமாகச் சரணடைந்தான்!

 

Picture by Puvana Sarma

எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.

இளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன்  மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.

 

நேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.

அவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.

ஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.

 

சில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.

புத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.

அங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.

 

அன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.

ஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.

குயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.

 

அங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்திரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

தக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.

மறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.

 

என்ன செய்வது? கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.

சாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.

 

புக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.

குயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று  கேட்டார்.

குயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.

குடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.

Picture from Deccan Herald; Budhdha Gaya/Bodhgaya

அதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.

அவரும் அமர்ந்தார்.

 

இப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.

சித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.

 

இருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;

இருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.

 

புத்தர்: நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?

புக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.

புத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள்! யாரிடம் துறவறம் பெற்றீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?

 

புக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.

 

புத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா?

புக்குசாதி: இல்லை

புத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா?

புக்குசாதி: முடியாது.

அவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.

 

Picture from Singapore; posted by Puvana Sarma

இருவரும் மௌனமாயினர்.

புலர்காலைப் பொழுது மலர்ந்தது.

புத்தர் புக்குசாதிக்கு உபதேசித்தார்.

அப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று!

எல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய  இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமைக்காக! ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.

 

தனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.

புத்தரும்  கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.

புக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.

 

 

அநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.

 

குப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.

 

அதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.

ஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.

 

அவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.

 

நடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.

அவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.

 

புத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

தன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை!

***