பசு மாட்டுக்கு கொம்பு முளைத்தது எப்படி? (Post No.4060)

Written by London Swaminathan
Date: 7 July 2017
Time uploaded in London- 20-29
Post No. 4060

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பசு மாட்டுக்கு கொம்பு முளைத்தது எப்படி/ குளம்புகள் வந்தது எப்படி?

 

வேத கால இலக்கியத்தில் ஒரு அருமையான கதை உள்ளது. இது ஐதரேய பிராமணத்தில் வரும் கதை.

 

பசுக்கள் எல்லாம் நமக்கு குளம்புகளும் கொம்புகளும் ஏற்பட நாம் ஒரு வேள்வி செய்வோம் என்று தீர்மானித்தன. என்ன அதிசயம்? பத்தே மாதங்களில் கொம்பும் குளம்பும் தோன்றின. நாம் எதற்காக இந்த வேள்வியில் ஈடுபட்டோமோ அந்த லட்சியம் நிறைவேறிவிட்டது. ஆகையால் எழுந்திருங்கள் என்று சொல்லி எழுந்துவிட்டன.

 

அப்போது கொம்புகள் இருந்தன.வேள்வி முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் ஒரு வருடத்தை முடிப்போம் என்று மீண்டும் வேள்வியைத் துவக்கின. இதிலிருந்த அவ நம்பிக்கை, அசிரத்தை (Lack of confidence and lack of interest) காரணமாக கொம்புகளும் குளம்புகளும் மறைந்துவிட்டன.

பிறகு மிக உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் 12 மாதங்கள் உட்கார்ந்து வேள்வியை முடித்தன. எல்லாப் பணிகளையும் பூர்த்தி செய்தன. இந்த உற்சாகம் உத்வேகம் மூலம் மீண்டும் அவைகளுக்கு கொம்புகளும் குளம்புகளும் தோன்றிவிட்டன. இவ்வாறு உலகத்தார் எல்லோர் மதிப்பையும் பெற்று பசுக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இடம்பெற்றன. அவைகளை எல்லோரும் அலங்கரித்துப் போற்றினர். எவன் ஒருவனுக்கு இது விளங்குகிறதோ அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் .

ஐதரேய பிராமணம் 4-3-17

 

மிகவும் எளிய கதை! வேதங்களளைக் கேட்டுச் சொல்லியவர்கள் அதை மறைபொருளிலேயே கூறுவது வழக்கம். அதனால்தான் தமிழில் வேதங்களுக்கு அழகாக மறை என்று பெயரிட்டனர்.

பசுமாடுகளை அலங்கரிக்கும் வழக்கம் தமிழ் நாட்டிலும் வட நட்டிலும் இன்றும் உளது. கிருஷ்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி நாளிலும் மாட்டுப் பொங்கல் நாளிலும் மாடுகளை அலங்கரித்துப் பொங்கல் படைத்துப் போற்றுகிறோம். இது ஐதரேய பிராமண காலத்திலேயே இருந்ததை மேற்கூறிய மந்திரம் காட்டுகிறது.

 

ஒரு காரியத்தைச் செய்பவர்கள் வெற்றி கிடைப்பது போலத் தோன்றியவுடன் நிறுத்திவிடக் கூடாது; அது சரியாகப் பூர்த்தியாகும் வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். பசுக்கள் அப்படிச் செய்யாததால் கொம்புகள் மறை ந்தன . பிறகு 12 மாதங்களும் திட்டமிட்டபடி வேள்வியைப் பூர்த்தி செய்தவுடன் கொம்புகள் தோன்றின. கொம்பு என்பது பெயரையும் புகழையும் குறிக்கும் சொல்.

அவன் என்ன பெரிய கொம்பனோ?என்று கேட்கும் வழக்கம் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் உண்டு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொம்பு பற்றி வருகிறது வேதத்தில் கொம்பு பற்றி வருகிறது (நைக ஸ்ருங்க, சத்வாரி ச்ருங்காகாஹா) சிந்து சமவெளி முத்திரையில் பசுபதியின் தலையில் கொம்பு இருப்பதைக் காணலாம்.

 

 

ஆகவே வேதத்தின் உட்பொருளை அறிய நாம் இந்திய — இந்து — அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்

 

ஆட்ண்டி பயாடிக(Anti Biotic ) மாத்திரை சாப்பிடுவோர் நோயின் அறிகுறிகள் நின்றாலும் அந்த (dosage) டோஸை முடிக்க வேண்டும் அல்லது பாக்டீரியா க்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டு அந்த மருந்துகளுக்கும் ‘டேக்கா’ கொடுத்து விடும். வள்ளுவனும் ஒரு குறளில் பகைமையையும், நெருப்பையும் அடியோடு அழிக்க வேண்டும் என்பான். எனவே ஒரு குறிப்பிட்ட செயலை, பணியை, வேலையை வெற்றி கிடைப்பது போலத் தோன்றினாலும் இறுதிவரை சென்றுமுடித்தாக வேண்டும் என்பதே கதையின் கருத்து.

வெளிநாட்டினரின் அறியாமை!

ஆங்கிலத்தில் யாராவது, எதையாவது எழுதினால் அது பெரிய ஆராய்ச்சி என்று அந்தக் காலத்தில் கருதினர்; அவர்களோ நம்முடைய பண்பாடு தெரியாமல் உளறு உளறு என்று உளறிவிட்டனர். ஆப்பிரிக்க காடுகளில் பல நாட்டுப் புற கதைகள் உண்டு. சிறுத்தைக்குப் புள்ளிகள் விழுந்தது எப்படி? புலியின் மீது வரிகள் தோன்றியது எப்படி? ஒட்டைச் சிவிங்கிக்கு நீண்ட கழுத்து எப்படி வந்தது? யானைக்கு ஏன் நீண்ட கை? என்றெல்லாம் கதைகள் சொல்லுவர். இதெல்லாம் காட்டுவாசிகளின் பொழுதுபோக்குக் கதைகள். இந்திய கலாசாரம் புரியாத வெளி நாட்டினர் ஐத்ரேய பிராமணக் கதையையும் அந்தக் கணக்கில் சேர்த்துவிட்டனர். அவர்களுடைய அறியாமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர்!

 

ஆனால் அவைகளுக்கும் வேத கால இலக்கியத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டு. நம்முடைய கதைகள் உயர்ந்த தத்துவங்கள், யாக குண்ட கணக்குகளுக்கு இடையே உள்ளன. ஆகையால் இவை நாட்டுப்புற கதைகள் அல்ல. மேலும் நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவைகளை வாய்மொழியாகக் காத்து வருகிறோம். மேலும் இவைகளுடைய மறை பொருள், சங்கேத மொழி — வேதம் முழுதும் விரவிக் கிடப்பதை நாம் அறிவோம்.

–Subham—

 

How did Cow get Hoofs and Horns? A Vedic Story (Post No.4059)

Written by London Swaminathan
Date: 7 July 2017
Time uploaded in London- 6-47 am    
Post No. 4059

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The Aitareya Brahmana (4-3-17) explains how the cows got their hoofs and horns.

 

“The cows being desirous of obtaining hoofs and horns, held a sacrificial session.

in the tenth month of their sacrifice, they obtained hoofs and horns.

We have obtained fulfilment of that wish for which we underwent the initiation into the sacrificial rites.

Let us rise, the sacrifice being finished. When they arose they had horns. They however, thought, let us finish the year. and recommenced the session.

On account of their distrust their horns went off; and they consequently became hornless.

 

They continuing their sacrificial session, produced vigour. Thence after sacrificing for twelve months, and having secured all the sessions,  they arose again at the end. For they had produced the vigour to reproduce hoofs and horns. Thus the cows made themselves beloved by all the whole world and are beautified (decorated) by all. He who has such a knowledge, makes himself beloved by everyone, and is decorated by everyone”.

 

The symbolic meaning is very clear in this story. If some one leaves a job in the middle without reaching the goal, he loses his name and fame. Name and Fame are described as horns in Vishnu Sahasranama and Tamil literature (Komban= horned; Srnga = horn, Chatvari srnga:; Na Eka Srnga etc). Vishnu Sahasranama and Vedas describe the Indus Valley God (so called Pasupati seal) as Komban. We can see the horns on the figure.

Till this day, cows are decorated and worshipped, particularly on Krishna’s birth day (Janma Ashtami). Tamils decorate the cows and bulls on Maattu Pongal Day (Cattle Pongal is celebrated one day after Makarasankaranti/Pongal Day)

 

Foreigners’ Ignorance!

In primitive parts of Africa there are some folk tales such as how did the cheetah get its spots? How did the tiger get lines on its body? Why did the elephant’s hand is long like a snake? Why did the giraffe has a long neck? In India we have some stories in Ramayana that squirrel got three lines because of Rama’s touch, crow’s one eye was blind because Rama’s arrow pierced it etc.

 

In Vedic literature, we have some stories such as cow getting the hoof, horn and skin. But there is a big difference between these stories and primitive folk tales. Our Vedic stories are religious stories where as others are folk tales. They are not used in rituals. Our stories have been kept alive for thousands of years by word of mouth (now in writing). Our stories have symbolic meaning and that is the reason they are embedded in between other religious rituals. Folk tales are just folk tales, no other significance is attached to it.

 

Foreigners who did not understand the symbolic meaning compared them with the folk tales of primitive tribes. They couldn’t say why they are absent in Europe and other parts of the world. If Hindus have come to India from other parts of the world these cow stories must exist there; cows must be venerated as we do in India for thousands of years. The fact of the matter is, we went to various parts of the world and taught the value of cows and bulls. Those ignoramuses forgot all those good things and started eating cows and blunted their brains. They fought two world wars and killed millions of people. They called themselves ‘civilised’ but in heart they are ‘uncivilised!’

 

-The placard says Tamil land is our land; cattle is our God.

 

-Subham–

பெரியவாளின் “ஆரோக்கியம்”! (Post No.4058)

Written by S NAGARAJAN

 

Date: 7 July 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.4058

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

காஞ்சி மஹா பெரியவாள்

பெரியவாளின் “ஆரோக்கியம்!

 

ச.நாகராஜன்

 

டாக்டர் ஒருவர் பெரியவாள் தரிசனத்திற்கு வந்திருந்தார்.

ஷோலாப்பூரில் பெரியவாள் முகாமிட்டிருந்தார்.

சாப்பாட்டிற்குப் பின்னர் மதிய நேரத்தில் டாக்டரை பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே பெரியவாளுக்குக் க்ழுத்து வலி. அத்துடன் அதிகமான ஜுரம் வேறு சேர்ந்து கொண்டது. டாக்டரிடம் இதைச் சொன்னார்கள்.

முதலில் டாக்டர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பெரியவாள் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டார்.

 

டாக்டர் சொன்னார்: “என்னிடம் களினிக்கில் சிகிச்சை பெற வரும் ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னரும் பெரியவாளுக்கு மனதால் நமஸ்காரம் செய்து அவர்கள் பூரண் குணமாக வேண்டிக்  கொள்வேன். இப்போது பெரியவாளே ‘பேஷண்டாக’ இருக்கும் போது பெரியவாள் நன்கு குணமாக, பெரியவாளைத் தவிர வேறு யாரை நான் வணங்க முடியும்?”

பெரியவாளைச் சோதித்த டாக்டர் திடுக்கிட்டார். அவரது டெம்ப்ரச்சர் 105 டிகிரியாக இருந்தது.

தயக்கத்துடன் டாக்டர் பெரியவாளைப் பார்த்துச் சொன்னார்,” ஜுரம் மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு நாட்கள் பச்சைத் தண்ணீரில் குளிக்காமல் இருக்க முடியுமா?”

பெரியவாள், “ அது எப்படி முடியும்?நேற்று சந்திர கிரகணம். ஆகவே நேற்று இரவு கிரகண ஸ்நானம் செய்தேன் – இதே ஜுரத்துடன் தான்” என்றார்.

டாக்டர்: “ஈஸ்வரா!பெரியவாளின் உடம்பு அதைத் தாங்கித்தா?”

மஹா பெரியவாள்: “உனக்கு கிரகண ஸ்நானம் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியுமா?”

டாக்டர் : எனக்குத் தெரியாது.

பெரியவாள் : மூக்கைப் பிடித்துக் கொண்டு நதியில் தலை முழுவதையும் அமுக்கிக் குளிக்க வேண்டும்.”

இதைக் கேட்டு டாக்டர் அயர்ந்து போனார்.

பெரியவாள் தொடர்ந்தார்: “ ஒரு முறை அல்ல; இப்படி நூற்றி எட்டு தரம் செய்ய வேண்டும்.”

டாக்டர் பிரமித்தார். “உங்களுக்கு நான் என்ன ட் ரீட்மெண்ட் தர முடியும்? சிவ பெருமானின் அவதாரமாகவே இருக்கும் உங்களை   105 டிகிரி ஜுரம் இருக்கும் போது நூற்றி எட்டு தரம் இப்படி நதியில் ஸ்நானம் செய்த போதும் உங்களை சிவனே தான் காப்பாற்றுகிறான்.என்னைப் போன்ற சாதாரணமானவன் உங்களுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் தர முடியும்.  உங்களை எங்களுக்காக வேண்டி பல்லாண்டுகள் வாழ சிவன் தான் அருள் புரிய வேண்டும்”.

டாக்டர் நெகிழ்ந்த மனதுடன் பெரியவாளை நமஸ்கரித்தார்.

 

***

உண்மை நிகழ்ச்சி : ஆதாரம் திலிப் அக்டோபர்/டிசம்ர் 2016 இத்ழ்

மொழியாக்கம் ; ச்.நாகரா

 

Sacred Cow in Tamil Veda ‘Tirukkural” (Post No.4057)

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 19-59     
Post No. 4057

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Hindu culture has been practised by the people of India from the Northern most Himalayas to the southernmost Kanyakumari for thousands of years. Sacred cow is mentioned in the Sangam Tamil literature in several places. One of the post Sangam books is Tirukkural written by Tiruvalluvar. Like the Vedas always pair the Brahmins and Cow, Tiruvalluvar also does.

 

“Go brahmanebya subamastu nityam lokas samasto sukino bhavantu” is the daily prayer of the Hindus. From the Brahmins and cows all living beings must live happily is the meaning. The reason for placing Brahmins and cow in the beginning is that they are pure and selfless. This pairing continued from the Vedic days and we see that in the oldest part of Tamil Literature – Purananuru verse 9. Poet Nettimaiyar sang this poem in praise of the ancient Pandya king Mudukudumi Peruvazuthi. His epithet is that one who did innumerable Yagas (Fire sacrifices). The poet says before waging any war, he will first request that Brahmins, Women, Cows, invalids, sick people and those who has not given birth to child must keep away. Kannaki, the Tamil heroine of Silappadikaram also did the same. Before burning the city of Madurai she commanded the God of Fire (Agni Deva) not to burn the Brahmins, women and cows. Tamil Miracle boy and one of the four Tamil Saints Jnana Sambandar also sang Long Live the Brahmins, Long Live the Cows.

Tamil Purananuru verse lists the worst sins and one of them is killing the cow (verse 34 by Alathur Kizar)

 

Now let me quote two couplets from Tirukkural, considred Tamil Veda by the Tamils (actually it was one of the poets who sang the praise of Tiruvalluvar, used these words Tamil Veda).

“If the guardian of the country neglects to guard it, the produce of the cows will fail and the men of six duties (shad karmana: = brahmins) will forget The Book (Vedas)” (Kural 560).

Here we see the Go+Brahmna pairing.

 

in another couplet (1066) “It is most heinous to beg for a bucketful of water even to quench the feverish thirst of a sinking cow”.

 

Being cow the most sacred animal, Tiruvalluvar used the cow here. feeding the cows, worshipping the cows are part of Hinduism. In Tamil Nadu, Go Puja (worship of cow) and Gaja Puja (worship of elephant) are done in all the temples and mutts in the early morning.

 

In front of the temples, cows are tied to the poles and the devotees used to feed them with the Agathi leaves (Agathi grandiflora) to earn good merits (Punya).

Of late the picture of wish fulfilling cow Kamadhenu’s picture is displayed in many houses and shops as a symbol of good luck.

–Subham–

 

 

உ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை! (Post No.4056)

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4056

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்கீத மேதை மஹா வைத்யநாதையர் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாமிநதையர் எழுதிய புத்தகத்தில் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் இது பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் ஒரே ‘பாரா’வில் விஷயத்தை முடித்துவிட்டு ஓடி விடுகிறார்.

பாண்டவ பாஷை!

 

இப்படி உண்மையிலேயே ஒரு பாஷை இருந்ததா? அல்லது மதுரை வணிகர்கள், அல்லது நாம் சிறு பிள்ளைகளுக்குப் புரியக் கூடாதென்பதற்காக உபயோகப் படுத்தும் ஒரு மொழி (உத்தி) யா என்று விளங்கவில்லை.

முதலில் உ.வே.சா. சொல்லுவதைப் படியுங்கள்:-

 

“சகோதரர்களோடு பேசுங்காலத்தில் ஏதோ ஒரு பாஷையில் அவர் (மகா வைத்யநாதையர்) பேசுவார்; அஃது இன்ன பாஷையென்று யாருக்கும் விளங்காது. ஒரு முறை நான் என்ன பாஷையென்று கேட்டேன்; அவர் இதனைப் பாண்டவ பாஷையென்று சொல்வதுண்டு. விராட நகரத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தமக்குள் வழங்கி வந்ததைப் போன்றதென்று கேள்வி” என்றார்.

 

மதுரையில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகையில், தமக்குள் சில சங்கேத சொற்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ‘இந்த ஆளுக்கு விலையை  இவ்வளவு குறைக்கலாம் அல்லது கூட்டு என்றோ, வந்த வாடிக்கையாளர் ஒரு சாவுக் கிராக்கி; நேரத்தை வீணடிக்காதே; ஆளை புறக்கனி என்றோ சங்கேத மொழியில் பேசிக் கொள்வார்கள்.

 

இதே போல நாம் வீட்டில் சிறு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக “ நான் சாக்லெட்டை அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் ‘அசா அல் அலெ அட் அங்கே இருக்கிறது’ என்று சொல்லுவோம். சிலர் ‘அ’ என்பதற்குப் பதிலாக ‘க’  என்பதைப் பயன்படுத்துவர் ‘கசா கக் கலெ கட்’ என்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி சில உத்திகள் இருக்கும்.

 

இது பற்றி உவே.சா. வேறு எங்கும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி உண்மையிலேயே வேறு ஒரு பாஷையைப் பாண்டவர்கள் விராட தேசத்தில் பேசினார்களா என்றும் தெரியவில்லை.

 

என்னுடைய சம்சயம் (ஐயப்பாடு)!

இப்படி பாண்டவ பாஷை என்று ஒன்று இருந்ததா? அல்லது மஹா வைத்திய நாத அய்யர் கிண்டலாக இப்படிக் பகன்றாரா? என்பதே.

 

வாசகர்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எழுதுங்கள்.

-சுபம்-

 

ஓளி மாசைத் தடுக்க சட்டம் (Post No.4055)

Written by S NAGARAJAN

 

Date: 6 July 2017

 

Time uploaded in London:-  5-20 am

 

 

Post No.4055

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

பாக்யா 30-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!

ச.நாகராஜன்

“நான் நியூயார்க்கிற்கு வந்து  35வது மாடியில் இருந்த எனது அபார்ட்மெண்டின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது பனி மூட்டமும் ஒளி மாசும் சேர்ந்திருந்தது. வானத்தில் எனது நட்சத்திரத்தை என்னால் காண முடியவில்லை. ஆகவே அதை பேனாவால் என் மணிக்கட்டில் வரைந்து கொண்டேன். ஆனால் அது அழிந்து கொண்டே இருந்தது.பின்னர் பச்சை குத்தும் பார்லருக்குச் சென்று அதை பச்சை குத்திக் கொண்டேன்” – உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் பிரேஜிலைச் சேர்ந்த பேரழகி சூப்பர் மாடல் ஜிஸ்லி பண்ட்சென்

*

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!

இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

 

கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.

அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப் படுகின்றனர்.

செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன். தூக்கமின்மையுட்ன சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.

இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.

நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு  எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.

உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.

ஆனால் 2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான  மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!

சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுட்ன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.

இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.

உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!

ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!

உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில்  ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும்  இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!

 தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான் இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம்  கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால்மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும்.

முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி லூயி அகாஸிஸ் (Louis Agassiz)  ஐஸ் காலம்  (Ice Age) பற்றிய தனது ஆராய்ச்சியால் மிகவும் பிரபலமானவர்.அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நெடுங்காலம் பணியாற்றினார். அவருக்கு அரிய வகை மீன்கள் கிடைத்தால் போதும், மிகவும் சந்தோஷப்படுவார். மீனவர்கள் அனைவருக்கும் தெரியும்,புதிய அரிதான வகை மீன் கிடைத்தால் உடனடியாக் அதை அகாஸிஸிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று.

   ஒரு நாள் அவரது இருப்பிடம் வந்த பிரதம விருந்தினர் ஒருவர்,இது என்ன அகாஸிஸ் மீன் கடை நடத்துகிறாரா அல்லது இது ஒரு ரெஸ்டாரண்டா? என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். போஸ்டனில் அடிமை ஒழிப்பை ஆதரித்துப் போராட்டம் நடத்திய அமெரிக்க செனேடர் சார்லஸ் சம்னர் (Charles Sumner) க்வின்ஸி மார்கெட் என்ற சந்தையில் புதிய ரக மீன் ஒன்றைப் பார்த்தார்.அவ்வளவு தான், அதை வாங்கிக் கொண்டு ஓடோடி வந்து அகாஸிஸிடம் அதைக் காட்டி மகிழ்ந்தார்.

பாரிஸில் அகாஸிஸ்  இருந்த போது நடந்த சம்பவ்ம் இது : ஒரு செல்வச் செழிப்பான சீமாட்டி அகாஸிஸிடம் வந்து,எப்படி இப்ப்டிப்பட்ட ஒரு மேதை மீன்களை வெட்டி ஆராய்ச்சி செய்ய முடியும் என்று தான் ஆச்சரியப்படுவதாகக் கூறினார். அதற்கு அகாஸிஸ், “மேடம், குட்டி மீன்கள் நீந்தி ஓடும் ஒரு நீரோடை அருகில் என்னை வாழ விட்டால், அதை விட வேறு எதுவும் வேண்டாம் என்று அங்கேயே என் வாழ்நாள் முழுவதையும் கழிப்பேன் என்று கூறினார்.

அகாஸிஸ் ஒரு மீன் மேன்MAN!

***

 

திருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.  இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

 

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

 

ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.

 

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,

குறைந்தது  மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.

 

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)

பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.

 

கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

 

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி  வருகி றது

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

 

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல  நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.

 

பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

 

 

தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.

 

இதைத் திருமூலரும் செப்புவார்:

 

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

பொருள்:-

 

எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

 

திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும்.  நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.

ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!

 

–Subahm–

 

 

 

Importance of Cow in Sanskrit Literature! (Post No.4053)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 9-28 am
Post No. 4053

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The cow occupies a unique position in Hinduism. Kalidasa’s Raghuvamsa gives a graphic account of care and respect shown to a cow by the emperor Dilipa.

Hindus’ greatest contribution to the world civilization is cow and its products. When the world was drinking goat’s milk and camel’s milk and even donkey’s milk they discovered that the cow’s milk is the best in the world and it is as good as mother’s milk. No ancient literature praises or values cow’s milk as Hindu literature. From Rig Veda to Sangam Tamil literature we find innumerable references in praise of the cow.

 

There are very interesting words in Sanskrit from the cow:-

Vaatslayam

Love and affection shown towards calf by its mother cow. Oft quoted in the Vedas

Go loka

The heaven of Krishna is Go loka (cow’s world)

Duhitri

A daughter is called milk maid (duhitri)

Gotra

clan; group

Gopis

Women with divine love towards Krishna

Madhuparka

All the saints are honoured with Milk and Honey. Hospitality is a unique Hindu concept. Rig Veda and Tamil Sangam book Purananuru have a lot of Danastutis, in praise of donation and hospitality. (English word donation comes from Sanskrit Dhaana).

Hosipitality is the rule of life among the Hindus. Tamil Veda Tirukkural has a chapter on it. Rig Veda praises it. Mahabharata has several stories in praise of hospitality. Panchatantra is full of quotations on hospitality. Guests were received with great ceremonies in ancient India. They must be given water to wash their feet and a seat to take rest. If they are unknown people, pial of the house was given to them to take rest and provided with full meals.

 

Hindus not only domesticated the cows and oxen, they worshipped them as gods and goddesses. Kamadhenu is the wish fulfilling cow. The picture and statues of Kamadhenu are in Hindu houses and temples.

Go puja and Gaja Puja (cow and elephant worship) are done in all the temples and religious Mutts. This has been going on for several thousand years without stopping. No animal in the world is worshipped continuously like this.

A word ‘Gohna’ is used for the guests. Foreigners translated it literally as Cow killer. They thought a cow was killed by the seer to feed another seer. The real meaning is that a cow’s products such as milk, butter, ghee, curd/yogurt, cow dung Go mutra (cow’s urine)– all are used in the service of the guests. Cow dung will be sprinkled with water in front of the house. Cow dung will be smeared in the oven to clean it. Cow’s urine is used to purify a place and a person.

Story of Cow’s creation

Satapata Brahmana (2-2-4-1) gives the story of Cow’s creation.

“Prajapati alone existed. He generated Agni (fire) from his mouth.

When they had sung praises, they went towards east saying, ‘We will go back thither! The gods came upon a cow which had sprung into existence. Looking up at them, she uttered the sound ‘hin’. The gods perceived that this was the ‘hin’ of the Saman (melodious sacrificial chant of Sama Veda); for heretofore their song was without ‘hin’, but after that it was the real Saman. (musical chant of Rig Vedic mantras; Hindus discovered the musical notes sa, ri, ga , ma pa, da ni – seven notes)

 

And as this same sound, ‘hin’ of the Saman, was in the cow, therefore the latter affords the means of subsistence; and so does he afford the means of subsistence whosoever thus knows the ‘hin’ of the Saman in the cow”.

 

“They said, ‘Auspicious indeed, is what we have produced here, who have produced the cow; for truly she is the sacrifice, and without her no sacrifice is performed; she is also the food. This word ‘go’ (Sanskrit word for cow; English word cow came from Sanskrit Go) then, is a name of those cows, and so it is of the sacrifice; let him therefore repeat it, saying , good, excellent! and verily, whosoever, , knowing this, repeats it, as it were saying good, excellent! with him those cows multiply, and the sacrifice will incline to him”.

Foreigners couldn’t understand this mantra. They took the word sacrifice and wrote that cow was sacrificed in the fire. But Hindus knew the correct  meaning: without cow’s products they cant run their life or do religious performance; Hindus use milk in birth and funeral ceremonies. Without Go mutra (cow’s urine), Ghee and milk no ceremony is done. They were great scientists to find that that Cow’s urine and Cow’s poo (cow dung) have got great curative and anti- bacterial properties.

Another story about cow is as follows:

Cow came from Prajapati’s Breath

Satapata Brahmana says ((7-5-2-6)

“Prajapati was alone at first. He desired, May I create food, may I be reproduced!. He fashioned animals from his vital airs, a man from his soul (mind), a horse from his eye, a cow from his breath, a sheep from his ear and a goat from his voice”.

 

Foreigners couldn’t understand the meaning of such mantras. Whenever and wherever they wanted they interpreted some words according to their whims and fancies; and the fact is no two foreigners agreed on the meaning, because they don’t know the real meaning. We can see this tend throughout the Vedic translations done by 20 to 25 authors. For them it was jigsaw puzzle game.

 

In the above mantras if they see a direction ‘North’, they will write “Look, they have come from North pole”. Here in the mantra the direction mentioned is east. Poor foreigners couldn’t say that Aryans came from the east. So they will keep quiet!

 

–Subham–

 

 

டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள் (Post No.4052)

Written by S NAGARAJAN

 

Date: 5 July 2017

 

Time uploaded in London:-  4-37 am

 

 

Post No.4052

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெயவ தேசம்

 

க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

 

ச.நாகராஜன்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் விமானம், ரெயில், கார் ஆகியவற்றின் மூலம் நீண்ட ஒரு நெடும் பயணம் மேற்கொண்டோம்.

 

நியூயார்க், நியூஜெர்ஸி, அரிஜோனா, வாஷிங்டன் என்று கலக்கலான ஒரு பயணம்

 

அதில் க்ராண்ட் கான்யானும் ஒன்று. எது எப்படியோ போகட்டும், ஐஸ்வர்யா ராய் க்ராண்ட் கான்யான் பாறையில் ஆடியதை நினைவு கூர்ந்து அந்தப் பாறையைப் பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றனர் குடும்பத்தினர்.

 

வியூ பாயிண்ட் என்று ஆங்காங்கே காட்சிகளைப் பார்ப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து போர்டு மாட்டி வைப்பது அமெரிக்காவில் ஒரு நல்ல பழக்கம்.

 

ஒரு வியூ பாயிண்டில் க்ராண்ட் கான்யான் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். ஏராளமான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மகன், மருமகள், மனைவி என்று ஆளுக்கொரு கேமரா. ஒரு மொபைல் போன். அமெரிக்காவில் வாங்கிய விலை மதிப்புள்ள ஒரு அதி நவீன வீடியோ கேமரா.

இவை அனைத்திலும் போட்டோக்கள்- போட்டோக்கள்- போட்டோக்கள்.

 

வியூ பாயிண்டில் ஏராளமான கூட்டம். ஆளாளுக்கு போட்டோ எடுத்துக் கொண்டே இருந்ததால் சமயம் பார்த்துத் தான் போட்டோக்களை எடுக்க முடிந்தது. இங்கும் அங்குமாக ஓடி ஓடி ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது.

 

நேரத்தில் குறியாக இருந்த நான் போதும் போகலாம் என்ற எச்சரிக்கை குரலை Nth  டைமாகக் கொடுத்து அனைவரையும் நகர்த்தி காரில் அமர்த்தினேன்.

 

கார் புறப்பட்டது. ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும். எல்லோருடைய கேமராக்கள்,மொபைல் போன்கள், வீடியோ கேமரா எல்லாம் பத்திரமாக காருக்கு வந்ததா என்று கேட்டேன்.

ஷாக்!

 

வீடியோ கேமராவைத் தவிர அனைத்தும் வந்து இருந்தன.

வீடியோவைக் காணோம். காரை நிறுத்தினோம். சரி பார்த்தோம். ஹூம், வீடியோ கேமராவைக் காணோம்.

 

என் மருமகள் அனைவரது மொபைல் போன்கள், கேமராக்களை வாங்கி டிஜிடல் மயமாக இருந்த போட்டோக்களைப் பார்த்து திடீரென்று கூவினாள்.

 

“இதோ இருக்கிறது. இந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு வந்து விட்டோம்”

 

கேமரா ‘ஙே’ என்று அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இப்போது என்ன செய்வது. இன்னும் அங்கு போக ஒரு அரை மணி நேரம் ஆகும்.

 

ஆக ஒன்றரை மணி நேரத்தில் அதை யார் எடுத்துக் கொண்டு போனார்களோ?

 

சரி, ஒரு முயற்சி தான்!

 

வண்டியைத் திருப்பினோம்.

 

வியூ பாயிண்ட் வந்தது.

 

மனம் பக் பக் என்று இருந்தது.அனைவரும் பெஞ்சை நோக்கி ஓடினோம்.

 

அங்கு அந்த கேமரா அப்படியே இருந்தது. ‘ஙே’ என்று அசையாமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கூட்டம்.

எங்கள் காமராவை சரி பார்த்து எடுத்துக் கொண்டோம்.

அனைவரும் சொன்ன வார்த்தை: அமெரிக்கா அமெரிக்கா தான்!

ஆம், யாரும் ஆசைப்பட்டு அதை எடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பெற்ற பல நல்ல அனுபவங்களில் இது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அவரவர் தம் தம் வேலையைப் பார்ப்பது அமெரிக்கர்களின் பழக்கம்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது அவர்களின் பரம்பரைக் குணம். வாழ்க அமெரிக்கா; வளர்க அமெரிக்கர்களின் நற்பண்பு.

 

சரி, தெய்வ தேசத்திற்கு வருவோம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் சுரண்டல்.லஞ்சம். பேராசை. வேலை பார்க்காமல் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் குணம்.

போக வேண்டிய பாரதம் இது.

 

வருகின்ற பாரதம் பாரதி பாடியது போல அமைய வேண்டும்.

தெய்வ தேசத்தில் பழைய நாட்களில் இருந்த நற்பண்புகளைக் காணோம்.

அறவே காணோமா?

 

அப்படிச் சொல்ல முடியாது.

 

ஆங்காங்கே அற்புதமான நல்லவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம்.

 

3-7-2014 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானது இது.

 

59 வயதான காமேஷ்வர் கிரி ஒரு டாக்ஸி டிரைவர். கொல்கொத்தாவில் சுமார் 40 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டி வருபவர்.

 

ஒரு புதன் கிழமை அவரது வண்டியில் ஒரு குடும்பம் ஏறியது. அவர்களை வீட்டில் இறக்கி விட்ட காமேஷவர் கிரி திரும்பினார்.

சற்று நேரம் கழித்து டிக்கியைப் பார்க்கையில் அங்கு ஒரு பெரிய பெட்டி இருநதது.

 

அந்தக் குடும்பத்தினர் அதை மட்டும் விட்டு விட்டனர் – எடுக்க் மறந்து போய்!

 

பெட்டியை அவர் திறந்தார். உள்ளே ஜொலிக்கும் வைர நகைகள்.ஏராளம் இருந்தன. ஒரு கல்யாணத்திற்குத் தேவையான தங்க நகைகள்!

 

இங்கு நிமாய் சந்திர தாஸ்  நியூ அலிபூர் ரோடில் ராஜஸ்தான் பவனில் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறியவர் தனது மகளின் திருமணத்திற்கு உரிய நகைகளை வாங்கிய சந்தோஷத்துடன் வீட்டில் குடும்பத்தினருடன் இறங்கினார். நடக்கவிருக்கும் விழாவைப் பற்றிய யோசனையில் இருந்தவர் டாக்ஸியை விட்டு அவசரம் அவசரமாக இறங்கி விட்டார்.

 

நகைப் பெட்டியை டிக்கியில் அப்படியே விட்டு விட்டார்.

வீட்டினுள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது – பெட்டி இல்லை என்பது!

 

உடனடியாக டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி ஓடினார். ராஜஸ்தான் ஸ்வீட் கடையின் அருகில் இருந்த டாக்ஸி டிரைவர்களிடம் தான் வந்த வண்டியைப் பற்றி விசாரித்தார்.

அங்குள்ள டிரைவர்கள் கிரி ஏற்கனவே அவர் வீட்டிற்குத் தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டார். அவர் வீட்டில் வாசலில் தான் நின்று கொண்டிருப்பதாக கிரி கூறினார்.

 

வீட்டிற்குச் சென்ற நிமாய் தனது பெட்டியை கிரியிடம் பெற்றுக் கொண்ட போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

கிரிக்கு அவர் பரிசாக அளித்த தொகையை அவர் பெற மறுத்து விட்டார்.

 

ஏன்? அவர் தந்தை சொன்ன சொற்கள் அவர் நினைவுக்கு வந்ததாம்.

 

There is enough to meet a man’s needs, but never his greed.

 

இது தான் அவரது தந்தையின் மந்திர வாசகம்!

 

வற்புறுத்திய பின்னர் அவர் 44 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டார். நகைகளைத் திருப்பிக் கொண்டுவந்ததின் வண்டிச் சத்தம் அது.

 

அனைவரும் அவரைப் பாராட்டி வற்புறுத்திய பின்னர் நூறு ரூபாயை அவர் ஏற்றுக் கொண்டார்.

என் தந்தை கூறிய வாசகத்தை மறவேன்.

 

ஒவ்வொருவருக்கும் தேவையானது போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரது பேராசைக்கு ஈடுகட்ட தான் போதுமான அளவு இல்லை என்பது தந்தையின் வாக்கு!

 

அவருக்கு இரு ஆசைகள்.

இன்னும் ஐந்து வருடம் ஓட்டினால் அவரது டாக்ஸி கடனாக நிலுவையில் இருக்கும் எண்பதினாயிரம் ரூபாயை அடைத்து விடலாம்.

 

இன்னொன்று, இப்போது பி.காம் படிக்கும் தன் பையன் ஒரு சார்டர்ட் அக்கவுண்ட் ஆக விரும்புகிறான். அவன் அப்படி ஆகி விட வேண்டும்!

 

அவரை அனைவரும் வாழ்த்தினர். ஒரு நல்லவரின் ஆசைகள் நிறைவேறட்டும்.

தெய்வ தேசத்தின் பிரதிநிதி காமேஷ்வர் கிரி.

 

 

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்யேஷு லோஷ்டத்ரவத்!

பர தாரம் – பர திரவியம் – அடுத்தவர் தாரம், அடுத்தவர் செல்வம் மீது கண் கூட வைக்காதே என்பது தெயவ தேச அறநூல்களின் அறிவுரை.

 

இதன்படி ஒரு காலத்தில் அனைவரும் பாரதத்தில் வாழ்ந்தனர்.

இன்று புரையோடிப் போன வாழ்க்கை முறையில் லஞ்ச லாவண்யத்தைத் தான் காண முடிகிறது.

 

ஆனால் சிலரேனும் தர்ம காவலர்களாக இருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

 

காமேஷவர் கிரி போன்றவர்களின் எண்ணிக்கை பெருகும் போது நமது தேசம் மீண்டும் தெய்வ தேசப் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும்!

***

மொட்டைச் சுவர், கட்டைச் சுவர், தட்டைச் சுவர், குட்டைச் சுவர் – (Post No.4051)

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 21-41
Post No. 4051

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹா வைத்யநாதய்யர் வாழ்க்கைச் சரிதத்தில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்.

 

“ஒரு வருஷம் ஐப்பசி மாதத்தில் வழக்கம் போல துலா ஸ்நானத்திற்காக சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் இருந்து மாயூரம் சென்று கட்டளை மடத்தில் இருந்து வந்தார். மஹா வைத்ய நாதய்யர் மற்றும் பல வித்துவான்கள் வந்திருந்தனர்.

 

மாயூரத்தில் அக்காலத்தில் கோயிற் பாடகரான ஒரு முதிய அந்தணர் இருந்தார். அவர் யாருடன் பேசினாலும் “அபயாம்பிகா கடாட்சம் உங்களுக்குக் உண்டாகட்டும்” என்பார். இதனால் அவர் பெயரே அபயாம்பிகா கடாக்ஷம் என்றாகிவிட்டது (அபயாம்பிகை என்பது மாயூரம் அம்மனின் பெயர்)

அவர் அடிக்கடி மடத்துக்கு வந்து போவார். சுப்பிரமணிய தேசிகர், அவருக்கு வருஷத்துக்கு முக்கால் பணம் சன்மானம் கொடுப்பார். அப்படி செய்யும்போதெல்லாம் மஹா வைத்திய நாதய்யருக்கு மட்டும் பத்து இருபது என்று சன்மானம் கொடுக்கிறீர்களே. நான் மட்டும் தாழ்ந்தவனா? அந்தப் பையன் வரும்போது அவனை என்னுடன் பாடச் சொன்னால் என் யோக்யதை உங்களுக்குத் தெரியவரும்” என்று சொல்வார். சுப்பிரமணிய தேசிகரும் நகைத்துக் கொண்டே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அனுப்புவார்.

 

மாயூரத்தில் எல்லோரும் கூடியிருந்த சமயத்தில் அபயாம்பிகா கடக்ஷமும் வந்து சேர்ந்தார். வழக்கம்போல ஸன்மானம் பெற்றுக்கொண்டர்.; பிறகு மஹா வைத்யநாதய்யருடன் சேர்ந்து பாடச் செய்தால் தம்முடைய மதிப்பு விளங்கும் என்றார். அங்கு அய்யர் இருந்தது அவருக்குத் தெரியாது. சுப்பிரமணிய தேசிகரும் புன்சிரிப்போடு இவர்களே மஹா வைத்யநதையர் அவர்கள் என்றார்.

 

அந்தப் பிராமணர் உடனே திடுக்கிட்டு எழுந்து போய்விடுவார்  என்று

நாங்கள் யாவரும் எண்ணினோம். ஆனால் அவரோ எழுந்து போகாமல், சிறிதும் அஞ்சாமல் “அப்படியா? நல்ல வேளை! இப்பொழுது அகப்பட்டுக் கொண்டாயா? பாடு பார்க்கலாம் என்றார். நானும் பாடுகிறேன். நான் பாடிக்காட்டும்படி பாடுவாயா என்று கேட்டுவிட்டு,

“மொட்டைச் சுவர், கட்டைச் சுவர்,  தட்டைச் சுவர், குட்டைச் சுவர்”  என்று தாம் வாய்க்கு வந்தவற்றைப் பல்லவியாக எடுத்துப் பாட ஆரம்பித்தார்

 

மஹா வைத்யநாதையர் சிரித்தார். உடனே அந்த முதியவர் என்ன சிரிக்கிறாய்? சிரித்துவிட்டால் ஏமாந்து போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? பாடு பார்க்கலாம். பேசாமல் ரூபாயை வாங்கி முடித்துக்கொண்டு போக மாத்திரம் தெரியுமா? நான் இல்லாத காலத்தில் வந்து பண்டார சந்நிதியை ஏமாற்றிப் பணம் வாங்குகிறாயா? எங்கே, இதைப் பல்லவியாக வைத்துப் பாடு பார்க்கலாம் என்றார். இவ்வாறு உத்ஸாகத்தோடு சொல்லிவிட்டு எல்லோர் முகத்தையும் பார்த்தார். உடன் இருந்த யாவரும் சிரித்தனர்.

உடனே அங்கிருந்த தியாகராஜ சாஸ்திரிகள், அந்தப் பிராமணரைப் பார்த்து ” ஓய், இங்கே வாரும். ஏன் அவரிடம் சென்று குழறுகிறீர்?  நீர் இங்கே வந்து பாடும்; நான் பாடிக் காட்டுகிறேன் என்று சொன்னார். அந்த முதியவரும் அப்படியே வந்து அசராமல் பாடினார். தியாகராஜ சாஸ்திரிகளும், அவர் பாடிய படியெல்லாம் பாடிக்காட்டினார். அவர் அபஸ்வரமாகப் பாடும்போதெல்லாம் சாஸ்திரிகளும் அபஸ்வரமாகப் பாடினார். இந்த விநோத நிகழ்ச்சியால் சபையில் இருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். ஒன்றும் தெரியாத ஸாதுவாகிய அபயாம்பிகா கடாக்ஷம், தமது  பாடல் இங்கே எடுபடாது என்று எண்ணி பேசாமல் எழுந்து போய்விட்டார்.

 

–சுபம்—