Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் தலைநகரம்! – 6
ச. நாகராஜன்
24. சந்திரப் பிராகாரம்
இது கண்ணுக்கு விருந்தாக அமையும். இதன் மேற்பாகத்தில் பனிமலையைப் போல வெண்மையும் தண்மையும் உடைய நிலவும், நக்ஷத்திரக் கூட்டங்களும் உண்டு. அவற்றின் நடுவே சுதாநிதியாகிய சந்திரன் பேராந்தத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பான்.
25. சிருங்காராவரணம்
(ஆவரணம் என்றால் பிராகாரம் அல்லது சுற்றுப்பாதை என்று பொருள்).
இது சுவர்ண, ரஜத, இரத்தின மயமான சிகரங்களையும், கோபுரங்களையும் துவஜங்களையும் கொண்டது. இதற்கும் இருபத்தினான்காவது கோட்டைக்கும் இடையில் ரமணீயமான மாடங்களும் (மாளிகைகள்) உபவனங்களும் இன்னோரன்ன பல சிறப்புகளும் உள்ளன. இக்கோட்டையைச் சுற்றி சிருங்காரப்பரிகை (அகழ்) ஒன்று உண்டு. இதற்கு அதிபதியாகிய மன்மதன் அந்த அகழியின் கரையில் உள்ள மணிமயமான உப்பரிகையின் மீது சிருங்கார தேவதைகளோடு கூடி வசித்துக் கொண்டிருப்பான்.
இருபத்தைந்தாவது கோட்டைக்குள்ளே ஸர்வ தெய்வப் பெண்களால் போற்றப்படும் சிந்தாமணி மயமான பிராகாரம் ஒன்று உண்டு. இதற்கும் சிருங்காரக் கோட்டைக்கும் இடையில் மஹா பதும வனம் ஒன்று உள்ளது. இந்த மஹா பதும வனத்தினிடையே சிந்தாமணி கிருஹராஜம் உள்ளது. அந்த கிருஹத்தில் பரதேவதையின் பூஜைக்கு உரித்தான ஐந்து பாத்திரங்கள் உண்டு. (அவை சங்க பாத்திரம், ஶ்ரீ பாத்திரம், பலி பாத்திரம், பாத்ய, அர்க்ய, ஆசமனாதி பாத்திரம், தீர்த்த பாத்திரம்). ஒவ்வொரு பாத்திரமும், அக்கினி மண்டல சொரூபமான ஆதாரத்தையும், சூரிய மண்டல ரூபமான பாத்திரத்தையும், ஸோம மண்டலமயமான அமிர்தத்தையும் கொண்டதாய், பிரஹ்ம, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர, ஸதாசிவ கலைகளோடும், பஞ்ச ரத்தினங்களோடும் கூடி, கந்த புஷ்பாக்ஷதைகளால் அலங்கரிக்கப்பட்டு, வேதோக்த ஸூக்தங்களால் தூய்மையாக்கப்பட்டு விளங்கிக் கொண்டிருக்கும்.
இத்தகைய பூஜா பாத்திரங்களுக்குக் கீழ், மஹா திரிபுரசுந்தரீ சரணாரவிந்த ஸேவாபரர்களான பிரஹ்ம, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர, ஸதாசிவர்களின் இல்லங்கள் விளங்கிக் கொண்டிருக்கும்.
அன்றியும் மேற்படி சிந்தாமணி கிருஹத்தின் கிழக்குத் துவாரத்தின், வலது பக்கத்தில் மந்திரிணீயாகிய சியாமளா தேவியின் கிருஹமும், மேற்படி துவாரத்தின் இடது பக்கத்தில் ஸேநாநாயகியாகிய வாராஹியின் கிருஹமும் உள்ளன.
கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு திக்குகளின் துவாரங்களில் சதுராம்நாய தேவதைகள் சதுரங்க சேனைகளோடு கூடி காவல் பூண்டிருப்பார்கள். இத்தகைய மஹா மஹிமையோடு விளங்குவது தான் ஶ்ரீ சக்ர நகரமாகும். இந்நகரமே ராஜராஜேஸ்வரியின் தேஜோமயமான கிருஹமாகும்.
இந்த கிருஹ ராஜத்தின் நடுவில் பிரஹ்மா, விஷ்ணு, உருத்திரன், மகேச்வரன் கால்களாகவும். ஸதாசிவம் பலகையாகவும் விளங்கும் பஞ்சப்பிரஹ்ம மஹா சிங்காதனத்தின் மேல் “ஸர்வாநந்த மய பிந்து பீடம்” ஒன்று உள்ளது.
இந்த பிந்து பீடத்தின் மேலே தான் பரதேவதை வீற்றிருக்கிறாள்.
இந்த பிந்து பீடத்தின் கீழ், எட்டு சக்ரங்கள் உண்டு. இந்த வெட்டுச் சக்ரங்களோடு உள்ள பிந்து பீடமே ஶ்ரீ சக்ரம் எனப்படும்.
ஶ்ரீ நகரத்தின் 25 கோட்டைகள் பற்றிய விளக்கம் முற்றும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5000ஆண்டுகளுக்கு முந்தைய சென்னைப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள்:
வங்கக் கடலினைத் தாண்டி இலங்கைக்குச் செல்லப்போவதாக ஆஞ்சனேயன் அறிவிப்பு.!
மஹேந்திர மலை மீது நின்று அனுமன் விஸ்வரூபம் எடுத்தான்!!
ராம நாமம் சொன்னால் ஏற்படும் அற்புதம் பற்றிக் கம்பன் பாடுகிறான்;அது வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பு திய செய்தி!!!
கம்பன் திரைப்படத்தில் துமிரன் சண்டைக் காட்சி!
கிஷ்கிந்தா காண்டம் நிறைவு! அடுத்தது சுவை மிகு சுந்தர காண்டம்!!
**********
331
கம்பன் தமிழ்த் திரைப்படம் போலவே சண்டைக் காட்சிளை எங்கே நுழைக்கிறான் ?
332
கொல்லப்பட்ட அசுரன் துமிரன் யார் ?
333
திருப்பதி மலை பாலாஜி கோயில் பற்றி முன்னர் கூறாதிருந்த கம்பன் இப்பொழுது வெங்கடாசலபதியின் புகழை எப்படிப் பாடுகிறான் ?
334
சீதையைக் கண்டுபிடிக்க அரசன் சுக்ரீவன் விதித்த ஒரு மாத கெடு முடிந்துவிட்டது ;யார் யார் உயிரை மாய்த்துக்கொள்ள என்ன என்ன தற்கொலை வழிகளைக் கூறினார்கள் ?
335
தற்கொலை செய்யாமல் செயல்படுவோம்;முயற்சி திருவினை ஆக்கும் என்று யார் கூறினார் ?
336
சம்பாதி என்னும் கழுகினைச் சந்தித்தபோது ராமநாமம் பற்றிக் கூறிய முக்கியச் செய்தி என்ன ?
337
இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் உடலில் என்ன அற்புதம் நிகழ்ந்தது ?
338
இலங்கைக்குச் செல்ல சம்பாதி காட்டிய வழி எது ?
339
சாம்பவான் கூற்றில் அனுமனின் வலிமை எப்படிப்பட்டது என்றான் ?
340
அனுமனின் திடீர் அறிவிப்பு என்ன ?மஹேந்திர மலை மீது நின்று அனுமன் எடுத்த விஸ்வரூபம் எப்படிக் காட்சி அளித்தது ?
*********
விடைகள்
331.தமிழ்த் திரைப்படங்களின் – பொதுவாக இந்தியத் திரைப்படங்களின் – மசாலா பார்முலாவில் – சண்டைக் காட்சிகள், நகைச் சுவைக் காட்சிகள் – காதல் காட்சிகள் – திகில் திருப்பங்கள்- இருக்கும் ; சென்ற பகுதியில் குகையில் சிக்கிய வானரங்களை அனுமன் மீட்ட திகில் காட்சியைக் கம்பன் கொடுத்தான்; இப்பொழுது துமிரன் என்ற அசுரனை அறிமுகப்படுத்தி அங்கதனையும் அவனையும் சண்டையில் ஈடுபடுத்தி நமக்குச் சுவையான ஸ்டண்ட் காட்சிகளை அளிக்கிறான்.
மலையே போல்வான்;மால் கடல்
ஒப்பான்;மறம் முற்ற,
கொலையே செய்வான்;கூற்றை
நிகர்ப்பான்;கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான்;நீர்மை
இலாதான்;நிமிர் திங்கட்
கலையே போலும் கால
எயிற்றான்;கனல் கண்ணான்;
அந்த அசுரன் துமிரன் மலையைப் போன்றவன்; (உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்)பெரிய கரிய கடலைப் போன்றவன்; யாவரையும் கொன்று தீர்ப்பவன்; எமதர்மனுக்கு நிகரானவன் கொடுமையென்னும் குணத்திற்கு இருப்பிடமாவான்; நற்பண்பு சிறிதும் இல்லாதவன் (வானில்) எழுந்து விளங்கும் சந்திரனின் பிறை போல் விளங்கும் நச்சுப் பற்களையுடையவன்; கனல் கக்கும் கண்களையுடைவன்.
அவனுக்கும் தாரையின் மகனான அங்கதனுக்கும் குத்துச் சண்டை நடைபெறுகிறது; இறுதியில் அவனை அங்கதன் கொல்கிறான்; யார் இவன் என்று அனுமன் கேட்டபொழுது எனக்குத் தெரியாது; சண்டைக்கு வந்தான் தீர்த்துக் கட்டினேன் என்றான் அங்கதன் .
இது தென் திசை நோக்கிச் சென்ற வானரப்படைகள் சந்தித்த ஆபத்துக்களில் ஒன்று
***
332.சாம்பவான்,துமிரன் வரலாறு கூறுதல்
4603. ‘யான் இவன்தனைத் தெரிய எண்ணினேன்;
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே –
ரான்,இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
தானவன்’என,சாம்பன் சாற்றினான்.
அது கேட்டு கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான், இந்த அசுரன் பற்றிய செய்தி எனக்கு நினைவுக்கு வருகிறது ; பகைவரது புலால் நிறைந்த வேற்படையைத் தாங்கிய இவன் பெயர் துமிரன். ஆழ்ந்தநீரையுடைய இந்தப் பொய்கையை காத்து நிற்கும் ஓர் அசுரனாவான் என்று கூறினான்.
திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில் பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால் அவன் இந்த அசுரனைக் குறித்து அறிந்திருந்தான். இத் துமிரன் என்னும் அசுரனை அங்கதன் கொன்ற செய்தி, வானரர் பிலம் புகுவதற்குமுன் நிகழ்ந்த்தாக வால்மீகி ராமாயணம் கூறும். கம்பன் இடத்தை மாற்றி அமைத்திருக்கிறான்.
****
333.கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் பூகோளம் பற்றி மஹா குழப்பம் உள்ளது; கிஷ்கிந்தை என்பது கர்நாடகத்திலோ ஆந்திரத்திலோ இருந்ததாக இருவேறு கருத்துக்கள் உண்டு. ஆனால் தென் திசை நோக்கிச் சென்ற அனுமன் சேனை பூகோள வரைபடத்தை மாற்றி மாற்றிக் குழப்புகிறது. வடக்கே எங்கிருந்தோ புறப்பட்ட மாதிரி பேசுகிறது ! முன்னர் வேங்கட மலை பற்றிப் பாடிய கம்பன் தொல்காப்பிய பாயிரத்தில் கண்டபடி தமிழ் மொழியின் வட எல்லை என்றான் ; இப்பொழுது அதே வேங்கட மலை பற்றிப் பாடுகையில் திருப்பதி பாலாஜிக்கு ஸலாம் போடுகிறான் !
4629. வலம் கொள் நேமி
மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை
தாங்கிய அம் மலை
விலங்கும் வீடு உறுகின்றன;
மெய்ந் நெறி
புலன் கொள்வார்கட்கு
அனையது பொய்க்குமோ?
சுதரிசனம் என்ற சக்கராயுதத்தைக் கையில் கொண்ட கார் மேகம்
போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது
இரண்டு திருவடிகளையும் தாங்கி நின்ற அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற மிருகங்களும் மோட்சத்தையடைகின்றன! (அவ்வாறானால்) தவங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர்க்கு அந்த மோட்சமானது கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது).
இதனால்தான் எம்பெருமானின் சந்நிதி வாசலில் அடியார்கள் நடமாடும் படியாகவோ, செடியாகவோ, பறவையாகவோ அல்லது திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாகவோ பிறக்க வேண்டும் என்று வேண்டிப் பாடுகிறார் குலசேகர ஆழ்வார் ; காண்க -பெருமாள் திருமொழி .
செய்தற்கரிய தவத்தை செய்வோமோ அவ்வாறு செய்ய இயலா விட்டால் கொடிய நஞ்சைக் குடித்து; இறந்து அழிவோமோ? (இந்த இரண்டில்) தகுதியானது எதுவோ; அதைச் செய்து முடிப்போம்; என்று இருந்தனர் அந்த வானரவீர்கள்.
(மருந்து அரு நெடுங்கடு: முறிவில்லாத கடுமையான விஷம்)
4656. ‘எந்தையும் முனியும்;எம்
இறை இராமனும்
சிந்தனை வருந்தும்;அச்
செய்கை காண்குறேன்;
நுந்துவென் உயிரினை;
நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்விர்
ஆம்’என்றான்.
(செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்; – நம் தலைவனான இராமனும் வருந்துவான்; அந்த நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணும் சக்தி எனக்கில்லை ; ஆகையால் நான் என்னுயிரை மாய்த்துக் கொள்வேன் . நுட்பமான நூற்கேள்வியுடைவர்களே! உங்கள் அறிவில்பட்டதை, ஆராய்ந்து கூறுவீர் என்று (அங்கதன்) சொன்னான்.
நான் திரும்பிச் சென்றால் ஏற்றுக் கொண்ட செயலை முடிக்காமல் வெறுங்கையோடு மீண்டார்களே’ என்று பெரியோர் கூறும் பழிச் சொல்லுக்கு அஞ்சி உயிர்போன்ற நண்பர் யாவரும் உயிர்விடவும் இவன்மட்டும் அச்சம் சிறிதுமின்றி திரும்பி வந்தான் என்று சான்றோர் என்னை ஏசுவர் ;அதற்கு இடமில்லாமல் முதலில் நான் சாவேன் என்று அங்கதன் கூறினான்.
***
335.அனுமனின் கருத்து
நாடுதலே நலம் இன்னும்;நாடி,அத்
தோடு அலர் குழலிதன் துயரின் சென்று,அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம்;அல்லது பழியிற்று ஆம்’என்றான்.
இனிமேலும் சீதையைத் தேடிப் பார்த்தலே நற்செயலாகும் . நாம் தேடியும் சீதையைக் காணா விட்டால் அவளைக் காக்க ஏற்பட்ட போரில் உயிர்மாய்ந்த சடாயுவைப் போல நாமும் சீதையைத் தேடும் செயலில் உயிர் விடுதல் பெருமையாகும்; அப்படிச் செய்யாது நீங்கள் கருதியபடி இப்போதே உயிரை விடுவது பழிக்கு இடமாகும்என்று அனுமன் அவ் வானரர்களிடம் கூறினான்.
சம்பாதி யார்? அருணனின் மகனும், சடாயுவின் அண்ணனும் ஆவார். சிறு வயதில் தம்பியான சடாயுவுடன் சேர்ந்து சூரியனை நோக்கிப் போட்டியிட்டுப் பறந்தனர். அப்போது சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல், தன் தம்பியைப் பாதுகாக்கச் சம்பாதி தன் சிறகுகளால் சடாயுவை மூடிக்கொண்டான். இதனால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து போயின. சீதையைத் தேடிச் சென்ற அனுமன், அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோருக்கு சீதை இருக்கும் இடத்தை (இலங்கை) தனது திவ்ய திருஷ்டியால் கூறி உதவியவர் இந்தச் சம்பாதி ஆவார்.
4695. ‘எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்;சொல்ல,எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; –நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!’
சம்பாதி அந்த வானர வீரர்களை நோக்கி) சத்தியத்தை வளர்க்கும் பெருமை பெற்ற வானர வீரர்களே! நீங்கள் அனைவரும் அந்த ‘இராம’ என்னும் திருநாமத்தையே வாயால் உச்சரிப்பீர்களாக! (அவ்வாறு என்னருகில்) சொல்வதனால் எனக்கு நல்ல பயன் கைகூடும் என்றான்’
****
337வானர வீரர்கள் ராம நாமம் சொல்லவே சம்பாதியின் இறக்கைகள் முளைத்தன! வானர வீரர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள்.
இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு முளைத்தது என்னும் செய்தி வான்மீகத்தில் இல்லை.கம்பர் படைப்பு!
4698. தெருண்டான் மெய்ப் பெயர்
செப்பலோடும்,வந்து
உருண்டான் உற்ற
பயத்தை உன்னினார்;
மருண்டார்;வானவர்
கோனை வாழ்த்தினார்;
வெருண்டார்;சிந்தை
வியந்து விம்முவார்.
அது கண்ட வானரர்கள் ஞானியர்களால் பரம் பொருள் என்று தெளியப்பட்டவனாகிய இராமனது திருநாமத்தை அந்த வானர வீரர்கள் உச்சரித்த அளவிலே, முன்பு இறகு இல்லாமல் உருண்டு வந்த சம்பாதிக்கு சிறகுகள் முளைத்ததை மனத்தில் கருதினர்; வியப்பால் திகைப்புற்றனர்; அச்சமுற்றனர்; தேவர்களின் தலைவனான திருமாலின் அவதாரமாகிய இராமபிரானை வாழ்த்தித் துதித்தார்கள்; ஆச்சரியத்தால் மனம் பூரித்தனர்.
சம்பாதி இறகில்லாமல் உருண்டு வந்ததையும், இராம நாம உச்சரிப்பால் சிறகுகள் தழைத்ததையும் நேரிலே கண்ட வானரர்கள் அச்சமும் வியப்பும் மருட்சியும் ஒருங்கே கொண்டவர்களாய் அப் பெரும்பயனை விளைக்கும் பெருமை வாய்ந்த இராமனை வாழ்த்தினர்.
******
338.இலங்கைக்குச் செல்ல சம்பாதி காட்டிய வழி:_-
4707. ‘ஓசனை ஒரு நூறு உண்டால்,ஒலி
கடல் இலங்கை;அவ் ஊர்,
பாச வெங்கரத்துக் கூற்றும்
கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம்
நெருப்புக்கும் நெருப்பு;நீங்கள்
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப்
பரிசு இயைவது?’என்றான்.
அலை வீசும் கடலால் சூழப்பட்ட அந்த இலங்கை, இங்கிருந்து நூறு யோசனை தூரத்திலுள்ளது; அந்த இலங்கையை கண்ணால் ஏறிட்டுப் பார்க்க கொடிய பாசக்கயிற்றைக் கையில் கொண்டுள்ள யமனும் அஞ்சுவான் . இழி செயல் செய்யும் அந்த இராவணனது கோபமோ நெருப்பையும் அழிக்கவல்ல ஒரு பெருந்தீயைப் போன்றது .நண்பர்களே! நீங்கள் அங்கே செல்லுவது எவ்வாறு முடியுமோ? என்று சம்பாதி கூறினான்.
******
339.வெல்லவும் வல்லீர்;மீளவும் வல்லீர்-சாம்பவான் தந்த தைரியம்
4721. ‘நல்லவும் ஒன்றோ,தீயவும்
நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர்;காரியம்
நீரே துணிவுற்றீர்;
வெல்லவும் வல்லீர்;மீளவும்
வல்லீர்;மிடல் உண்டே;
கொல்லவும் வல்லீர்;தோள்
வலி என்றும் குறையாதீர்;
நீங்கள் நல்லவை மட்டுமோ செய்பவர்கள்? தீயவற்றை ஆராய்ந்து பார்த்து, குற்றம் நீங்குமாறு உண்மையை யெடுத்துக் கூறுவதிலும் வல்லமை உடையீர்; செய்யத்தக்க செயல் எது என்பதை நீரே ஆராய்ந்து துணிந்து செய்யும் திறமுடையவராவீர். அரக்கரை வெல்வதற்கும் வல்லமையுடையீர், இலங்கையிலிருந்து இங்கே திரும்பி வரவும் வல்லவராவீர்; அங்கே பகைவர்கள் வலிமையோடு எதிர்த்துப் போர் புரிந்தால், அப் பகைவர்களைக் கொல்லும் சக்தியும் உள்ள வீரர்கள் நீங்கள்! உங்கள் பலம் எப்போதும் குறையாது என்று சொல்லி சாம்பவான் அனுமனை ஊக்குவித்தான்
எந்தச் செயலைப் பற்றி ஆராயவேண்டுமானாலும் அதிலுள்ள நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து குற்றமில்லாது அச் செயல் முடிவுறத் தக்க வழிகளைச் சொல்ல வல்லவன் அனுமன் என்பதைச் சாம்பவான் கூறினான். அனுமனிடம் ஒரு சிறந்த அமைச்சனுக்கு உரியனவும், சிறந்த போர் வீரனுக்கு உரியனவுமான அரிய திறன்கள் அமைந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது. *****
340.அனுமன் எடுத்த விஸ்வ ரூபம் = ஓங்கி உலகளந்த திருமால்!
சாம்பவானும் ஏனைய தலைவர்களும் விவாதித்து அனுமனே இச்செயலைச் செய்ய வல்லவன் என்று முடிவு செய்தனர் ; தன்னுடைய வலிமையை அனுமன் உணரத் தொடங்கி மகத்தான அறிவிப்பை வெளியிட்டான்; தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்
4735. ‘ஈண்டு இனிது உறைமின்,யானே
எறி கடல் இலங்கை எய்தி,
மீண்டு இவண் வருதல்காறும்;விடை
தம்மின்,விரைவின்’என்னா
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த,
அலர் மழை அமரர் தூவ,
சேண் தொடர் சிமயத் தெய்வ
மயேந்திரத்து உம்பர்ச் சென்றான்.
நான் அலைவீசும் கடலால் சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து இங்கே திரும்பி வருகின்ற வரையிலும் நீங்கள் இந்த கடற்கரையில் தங்கியிருங்கள்; எனக்கு விரைவிலே விடை கொடுங்கள் என்று அனுமன் சொன்னான் ;உடனே அந்த வானர வீரர்கள் மகிழ்ந்து வாழ்த்துக் கூறினார்கள் , தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். வானத்தை யளாவிய சிகரங்களையுடைய , தெய்வத் தன்மையுள்ள மகேந்திர மலையினது உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான். மஹா வீரன் .
அனுமன் விஸ்வரூபம் எடுத்தான்
4843. பொரு அரு வேலை தாவும்
புந்தியான்,புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன்
மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல்,
உரு அறி வடிவின் உம்பர்
ஓங்கினன்,உவமை யாலும்
திருவடி என்னும் தன்மை
யாவர்க்கும் தரெிய நின்றான்.
கடந்து செல்வதற்கு அரிய பெரிய கடலை தாண்டுவதற்குரிய உறுதியான எண்ணமும் சிந்தனையும் உடைய அனுமன், முன்பொரு காலத்தில் வாமன அவதாரம் எடுத்து உலகங்கள் அனைத்தையும் தனது திருவடிகளால் அளந்த , விஸ்வரூபமாக வளர்ந்த திருமாலின் வானம் வரை ஓங்கிச் சென்ற திருவடியைப் போல,அனுமன் தனது விஸ்வரூப உருவத்தை வானளாவ உயர்த்தி நின்றான். ‘திருவடி’ (அனுமனின் மற்றொரு திருநாமம்)
(அனுமன் கடலைத் தாண்டத் தயாராகும் போது தனது உருவைப் பெருக்கி நின்ற காட்சியை ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரம அவதாரத்தோடு கம்பர் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்).
4739. மின் நெடுங் கொண்டல் தாளின்
வீக்கிய கழலின் ஆர்ப்ப,
தன் நெடுந் தோற்றம் வானோர்
கட்புலத்து எல்லை தாவ,
வல் நெடுஞ் சிகர கோடி
மயேந்திரம்,அண்டம் தாங்கும்
பொன் நெடுந் தூணின் பாத
சிலை என,பொலிந்து நின்றான்.
மின்னலோடு கூடிய பெரிய மேகங்கள் அனுமன் காலில் கட்டப்பெற்ற வீரக் கழல்போல ஒலித்தன. நீண்டுயர்ந்த அவனது பெரிய உருவமானது தேவர்களின் கண்பார்வையையும் தாண்டிச் சென்றது (தேவர்கள் கூட முழு உருவத்தைக் காண முடியாத பெரிய உருவம் அது!). இந்த அண்டகோளத்தைத் தாங்கி நிற்கும் பொன்மயமான பெரிய கல்லைப் போல வலிய பெரிய மகேந்திர மலை தோன்றியது.
கிஷ்கிந்தா காண்டம் நிறைவு. அடுத்தது சுவை மிகு சுந்தர காண்டம்!!
–சுபம் –-
TAGS- ராம நாமம் செய்த அற்புதம்! கம்ப ராமாயணத்தில் 340 கேள்விகள்! அனுமனின் விஸ்வரூபம், மஹேந்திர மலை , சாம்பவான் , இறக்கைகள் வளர்ந்தன, துமிரன் சண்டைக் காட்சி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் தலைநகரம்! –5
ச. நாகராஜன்
அடுத்து மஹாபத்மாடவீ பிராகாரங்கள் ஆறு உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.
20. மனோமயக் கோட்டை
இந்தக் கோட்டைக்கும் பத்தொன்பதாவது கோட்டைக்கும் இடையேயுள்ள பிரதேசமானது ஸ்வர்ணமயமாப் பிரகாசித்து அநேக நந்தவனங்களோடு கூடி விளங்கும். அங்கே முத்துமயமான அன்ன பக்ஷிகளும், இந்திர நீலம் போன்ற வண்டுகளும் நிறைந்துள்ள சஞ்சலமாகிய பல தரங்கங்களையுடைய அமிர்தவாபிகை ஒன்று உள்ளது. இந்த வாவியில் முத்து மணிகளால் செய்யப்பட்ட ஓடத்தின் மீது சிந்தூர பாடல நிறமான அங்கங்களையுடையவளும், சந்திர கலையைச் சிரசில் அணிந்தவளும், பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தை உடையவளும், தளிர் போல் சிவந்த கீழுதட்டில் பிரகாசிக்கும் மந்தஹாஸத்தை உடையவளும், யௌவன கர்வத்தை உடையவளுமான தாரா தேவி பல சக்திக் கூட்டங்கள் சூழ வசித்துக் கொண்டிருப்பாள்.
21. புத்திமயக் கோட்டை
இது மிகவும் மனோகரமாய் விளங்கும். இதற்கும் மனோமயக் கோட்டைக்கும் இடையில் ஆனந்தவாபிகை உள்ளது. இந்த வாபிகைக்குக் கெம்புக்களாலாக்கிய படிகளுண்டு. பிரம்மானந்தத்தை அருளச் செய்யும் சிறப்பினை வாய்ந்த இந்த வாபிகையில் மாணிக்கமயமான தோணியின் மேல் வாருணீ தேவி வீற்றிருப்பாள். இந்த வாருணீ தேவி பல ஆபரணங்களைப் பூண்டு, கருணை பெருகும் கடைக்கண் பார்வையை உடையவளாய்ப் பல்லாயிரம் தோழிகள் துடுப்புகளைக் கையில் பூண்டு படகைச் செலுத்திக்கொண்டும் ஆனந்தமாய்ப் பாடிக்கொண்டும் இருக்க இருப்பாள்.
22. அஹங்காரமயக் கோட்டை
இது மிகவும் உன்னதமாக, மற்ற கோட்டைகளை விட அதிகச் சிறப்புகளை கொண்டதாய் விளங்கும். இதற்கும் புத்திமயக் கோட்டைக்கும் இடையில் நறுமணமும், குளிர்ச்சியும் உடைய தென்றல் காற்று மெல்ல வீசிக் கொண்டிருக்கும். அன்றியும் கரைகளின் மேல் மோதிக் கொண்டிருக்கும் அலைகளையும், பக்ஷி ஜாலங்களும், வண்டுகளும் பரமானந்தத்தினால் செய்யும் கோலாலகல சப்தத்தையும் உடைய விமர்ச வாபிகை ஒன்று அங்கு உண்டு. அந்த வாபிகையின் நடுவே ஒரு ரத்தினமயமான ஓடத்தின் மீது புங்கன் தளிரைப் போன்று கருநிறமுள்ள சரீரத்தோடும், மதிவதனத்தோடும், அங்கயற்கண்களோடும், பூர்ண சந்திரிகையைப் போன்ற மந்தஹாஸத்தோடும், செஞ்சந்தனக்குழம்பு பூசப்பட்ட மார்பினோடும் துடி போன்ற இடையோடும் விளங்கும் குருகுள்ளா தேவியானவள் பல்லாயிரம் சுந்தரத் தோழிகள் தன்னைச் சுற்றிப் பணிவிடை செய்ய நாணேற்றிய வில்லைக் கையில் தாங்கி விளங்குவாள்.
23. சூரியப் பிராகாரம்
இது பதினான்கு லோகங்களையும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருக்கும். இதற்கும் இருபத்திரண்டாவது கோட்டைக்கும் இடையில், பேரொளி வீசும் மாணிக்க மண்டபத்தில் இரத்தின சிம்மாசனத்தின் மேல் சுவர்ணமயமான பத்மத்தின் நடுக் கர்ணிகையில் செம்மலர்களால் ஆக்கப்பட்ட மாலையைப் பூண்டு, கிரீட குண்டலங்கள் துலங்கச் செஞ்சந்தனம் மேனியில் பூசிக்கொண்டு சக்ஷூஷ்மதீ, சாயாதேவி என்னும் தேவிகளோடு கூடி, மார்த்தாண்ட பைரவன் (சூர்ய மூர்த்தி) வசிப்பான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to Ponder
Hindus were the only people who devised rules for Spies, Ambassadors, Royal symbols like Flags, Umbrellas, drums, Division of Army into Four sections, Division of seasons into Six etc. All these are in earliest Sanskrit works and Tamils being pukka Hindus, used them as such.
Spying is dealt with in detail by Chanakya (Kautilya) in Arthashastra. Even H A Popley mentioned it in his Tirukkural Book in 1931.
Ascetics as Spies is interesting! I always suspect foreign devotees in Many ashrams! Hindus must be vigilant. Even Kumarila Bhatta spied on Buddhists disguised as a Buddha Bhikshu. When Adi Sankara came to meet him, he was in the middle of slowly burning husk mountain and directed him to Mandana Mishra. It is said that he self -immolated himself to atone for the sin of not observing the Vedic Sathya/Truth!
***
Tirukkural Encyclopaedia -Chapter 59- The Employment of Spies-
****
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar – SB
5.EVS Publishers, Singapore – EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 77; Chapter 59 in Tirukkural Book- Tirukkural Encyclopaedia -Chapter 59- The Employment of Spies- ON INTELLIGENCE SERVICE- Detectives-ஒற்றாடல்–Espionage
xxxxxxxxx
no translation is done by .H A Popley for this chapter. He has only commented on Espionage.
xxxxxxxxx
581.Precious as his eyes to the sovereign are his code of laws and his band of spies-A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
581.The intelligence services and the literature of state-craft and laws,
Are clearly the two eyes of the king- S M Diaz, I G of Police- SMD, Year 2000
***
581 These two: the code renowned and spies, In these let king confide as eyes. Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.-Rev.Dr. GU Pope – GUP, Year 1886
*** 581.A king should treat these two as eyes The code of laws and careful spies- Suddhananda Bharathiyar – SB ***
581.Espionage and the invaluable science of sovereignty – these two are rightly looked upon as the eyes of the sovereign- EVS Publishers, Singapore – EVS, Year 1986
582.Through a regular system of espionage, the king learns betimes all the minute affairs of his realm– ANM+2
***
582.It is the function of the king to get to know immediately everything that happens,
To everybody in his kingdom, at all times- SMD, Year 2000
***
582 Each day, of every subject every deed, ‘Tis duty of the king to learn with speed. It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.– GUP, Year 1886
***
582.All that happens, always, to all The king should know in full detail. – SB ***
582.To be in the quick know of all things that happen to all men at all times is the duty of the sovereign – EVS, Year 1986
*** 582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். ***
583.Victory is not for the monarch who never knows through spies, what brews in his land– ANM+2
***
583.A prince, who does not secure effective intelligence through his network of spies,
Is not likely to be successful at all in warfare- SMD, Year 2000
***
583 By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king. There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.– GUP, Year 1886
***
583.Conquests are not for the monarch Who cares not for the Spy’s remark. – SB *** 583.It is the duty of a leader to know quickly (through spies) all that happens daily, amongst all men– EVS, Year 1986
*** 584.He is a spy who worms himself into the secrets of king’s officers, his relatives and enemies– ANM+2
***
584.All the king’s men, his kith and kin and those inimical to him, should all be covered,
By a network of effective intelligence – SMD, Year 2000
***
584 His officers, his friends, his enemies, All these who watch are trusty spies. He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies.– GUP, Year 1886
***
584.His officers, kinsmen and foes Who watch keenly are worthy spies. – SB ***
584.Able spies watch keenly the officers, kinsmen and the enemies and all for information– EVS, Year 1986
***
584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
***
585.A trusty spy has auspicious air about him, defies a searching glance and has his secrets locked up in his bosom– ANM+2
***
585.A good spy should not arouse any suspicion, by his own or disguised appearance;
Nor will he allow being disconnected or exposed in any context- SMD
***
585 Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies. A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man’s face, and who never reveals (his purpose).– GUP, Year 1886
*** 585.Fearless gaze, suspect less guise Guarding secrets mark the spies. – SB *** 585.He is a spy who can assume an unsuspecting disguise, be fearless of gaze, and capable of keeping a secret under all circumstances – EVS, Year 1986
586.The secret emissary goes about in the garb of an ascetic through the nooks and corners of king’s realm, pries into all secrets, and never throws of his mask even under the worst of tortures– ANM+2
***
586.Spies disguised as sanyasis and holy men, may easily secure access and information from unlikely sources,
And protect, guard their vital secrets even under extreme coercion- SMD
***
586 As monk or devotee, through every hindrance making way, A spy, whate’er men do, must watchful mind display. He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.– GUP, Year 1886
***
586.Guised as monks they gather secrets They betray them not under threats. – SB ***
586.Spies disguise themselves as ascetics to gather secrets; they do not betray secrets under any threat – EVS, Year 1986
587.Behold the man who can draw out hidden secrets and whose information is precise, clear and unconfused; he is a man born for the work of intelligence– ANM+2
***
587.Good spies develop inside sources for hidden information which they should verify,
And present fully confirmed, as unconfused intelligence – SMD, Year 2000
***
587 A spy must search each hidden matter out, And full report must render, free from doubt. A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.– GUP, Year 1886
*** 587.A spy draws out other’s secrets Beyond a doubt he clears his facts. – SB *** 587.He is a real spy who draws out secrets from others and clears his facts before reporting– EVS, Year 1986
588.To spy upon a spy is to get at the correct information– ANM+2
***
588.The information secured by one spy should be counter checked,
With intelligence procured by independently by another spy- SMD, Year 2000
***
588 Spying by spies, the things they tell To test by other spies is well. Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.– GUP, Year 1886
***
588.The reports given by one spy By another spy verify– SB ***
588.The reports given by one spy must be tested and verified through another spy– EVS, Year 1986
***
588. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். ***
589.Let not one spy know the other. Let the king receive it as truth if three men tell the same– ANM+2
***
589.Spies, where more than one is utilised, should not know one another,
Where three agents corroborate one another, the information is very likely true- SMD, Year 2000
***
589 One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know. Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.– GUP, Year 1886
***
589.Engage the spies alone, apart When three agree confirm report– SB
***
589.The spies must be sent one by one, apart. If three spies agree, the information shall be confirmed– EVS, Year 1986
590.Let no emissary be honoured in the open court, lest you should divulge your own secret– ANM+2
***
590.Open recognition of the good work done by a spy is out of order,
As that will expose the man and his methods- SMD, Year 2000
***
590 Reward not trusty spy in others’ sight, Or all the mystery will come to light. Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.– GUP, Year 1886
***
590.Give not the spy open reward It would divulge the secret heard! – SB
*** 590.The spy must not be rewarded publicly. That would divulge the secret organisation – EVS, Year 1986
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தப் பகுதியில் வரும் மூன்று முக்கிய விஷயங்கள் :
1.அனுமனை தென் திசையில் தேட அனுப்பியது;
2.சீதையின் 27 அங்க அடையாளங்கள்
3.அனுமனிடம் ராமன் மோதிரம்/கணையாழிகொடுத்தது
XXXXXXXX
picture of London Kamban Festival 2025.
321
தென்திசையில் சென்று சீதையைத் தேடுவாயாக என்று அனுமனுக்கு சுக்ரீவன் கட்டளையிட்டது ஏன்? பிற திசைகளுக்குச் சென்றவர்கள் யார்?
322
வேங்கட மலையில் வெங்கடாசலபதி கோவில் இருப்பதைக் கம்பன் பாடினானா ?
323
தமிழ்நாடு என்று பெயர்க்குறிப்பிட்டுக் கம்பன் என்ன பாடினான் ?
324
அகத்தியன் பற்றியும் தமிழ்ச் சங்கம் பற்றியும் கம்பன் செப்பியது என்ன ?
325
சீதையைத்தேடிக்கண்டுபிடிக்க சுக்ரீவன் விதித்த கெடு எவ்வளவு காலம் ?
326
அனுமனை தானியே அழைத்துச் சென்ற ராமன் சீதாதேவியின் எத்தனை அங்கங்களை வருணித்தான் ?
327
பிரம்மா உவமை சொல்ல முடியாத ஒன்றினைப் படைத்தான் என்கிறான் கம்பன் ;அது என்ன ?
328
சீதை சொன்ன விஷயங்களை அனுமனிடம் சொல்லி இதையெல்லாம் நீ கூறினால்,நீ ராம தூதன் என்று நம்புவாள்;இவ்வாறு எண்ணி அனுமனிடம் ராமன் சொன்ன ஒரு விஷயத்தைக் காண்போமா:
4518. ‘மல்லல் மா நகர் துறந்து
ஏகும் நாள்,மதி தொடும்
கல்லின் மா மதிள்
மணிக் கடை கடந்திடுதல்முன்,
”எல்லை தீர்வு அரிய வெங்
கானம் யாதோ?”எனச்
சொல்லினள்;அஃது எலாம்
உணர,நீ சொல்லுவாய்.’
329
RAMA SAID – ALL THE BEST AND BEST OF LUCK TO HANUMAN!
சீதையிடம் கொடுப்பதற்காக அனுமனிடம் ராமன் தனது மோதிரத்தைக் கொடுத்த முக்கியமான காட்சியை கம்பன் எப்படிச் சொல்கிறான்?
330
MONKEYS CRIED S O S , SO S, SOS!
SAVE OUR SOULS= SOS
திரைப்பட டைரக்டர் மிஸ்டர் கம்பன் குகையில் சிக்கிய வானரங்கள் பற்றி ஒரு சர்ப்ரைஸ் காட்சி தருகிறார்.அவர்கள் எஸ் ஓ எஸ் செய்தி அனுப்பவே அனுமன் தந்தரமாக அவர்களை சுரங்கத்திலிருந்து தப்பிக்க வைத்தது எப்படி ?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடைகள்
321.தென் திசையில் அனுமனும் ஏனைய திசையில் பிறரும் சீதாதேவியைத் தேடச் சென்றார்கள்……
4454. ‘வள்ளல் தேவியை
வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன்
செலக் கண்டது,
தெள்ளியோய்! ”அது தென்
திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு”
என உன்னுவாய்.
தெளிவான அறிவுள்ளவனே! சிறந்த கொடை வள்ளலான இராமனின் மனைவியாகிய சீதையை வஞ்சனையால் கவர்ந்து சென்ற கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்
தெற்குத் திக்க்கை நோக்கி சென்றதைக் கண்டது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது ; இதையும் மனத்தில் வைத்துக்கொள் என்றான் சுக்ரீவன்.
(சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக் கண்டது.)
ஏனைத் திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புதல்
4456. ‘குட திசைக்கண்,சுடேணன்;
குபேரன் வாழ்
வட திசைக்கண்,
சதவலி;வாசவன்
மிடல் திசைக்கண்,
வினதன்;விறல் தரு
படையொடு உற்றுப் படர்க’
எனப் பன்னினான்.
மேற்குத் திசையில் இடபனும்,குபேரன் வாழுகின்றவடக்குத் திசையில் சதவலி என்னும் தலைவ னும், இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில் வினதனும் பலத்த சேனையோடு செல்வாராக என்று கூறினான்.
****************
322.திருப்பதி பாலாஜி கோவிலைச் சொல்லாமல்,தொல்காப்பிய பாயிரத்தில் கண்டபடி,தமிழ் மொழி பேசுவோரின் வடக்கு எல்லை என்று மட்டும் சொல்லிவிட்டான் கம்பன்!
4472. ‘வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி,
நான் மறையும்,மற்றை நூலும்,
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்,
நல் அறிவுக்கு ஈறு ஆய்,வேறு
புடை சுற்றும் துணை இன்றி,புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ.
வட திசை மொழிகளுக்கும் தென்மொழியாகிய தமிழுக்கும் எல்லையாகியும் , நான்கு வேதங்களும் பிற சாத்திரங்களும்
தம்மிடம் குறித்துள்ள எல்லாப் பொருள்களுக்கும் முடிவான பொருளைத் தன்பாற் கொண்டுள்ளதாகியும் நுட்பமான ஞான அறிவுக்கெல்லாம் வரம்பாகியும் , பக்கத்தில் பொருந்திய உவமானப் பொருள் வேறொன்றும் புகழ் நிரம்பிய உடலைப் போல பொலிவுற்று
தேன்கூடுகளால் சுற்றிலும் நிரம்பப்பெற்ற குளிர்ந்த தாழ்வரைக ளையுடைய உயர்ந்துள்ள திருவேங்கட மலைக்குப் போங்கள்.
‘வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎம் (அகம். 211) என்ற சங்கப் பாடல் வேங்கடத்துக்கு அப்பால் வேறு மொழிகள் பேசப்பட்டதை உறுதி செய்கிறது; தொல்காப்பியமும் வேங்கடத்துக்கு அப்பால் தமிழ் பேசப்படவில்லை என்று சொல்கிறது.
*******
323.பாண்டியநாடுதான் தமிழ்நாடு!
‘துறக்கம் உற்றார் மனம் என்ன,துறை கெழு நீர்ச்
சோணாடு கடந்தால்,தொல்லை
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்;
அவ் வழி நீர் வல்லை ஏகி,
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும்
உணர்வினொடும் ஒதுங்கி,மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி,அகன்
தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ.
சொர்க்கத்தையடைந்தவர்களின் மனம் போல தெளிவான
நீரையுடைய (காவிரியைக் கொண்டுள்ள) சோழநாட்டைத் தாண்டிச் சென்றால் அந்த நாட்டின் அருகிலே பழவினைத் துன்பங்களை முற்றும் மறந்த முனிவர்கள் மறைந்து வாழ்வார்கள்; நீங்கள் அந்த
வழியிலே விரைவாகச் சென்று, தூங்கியவர் ஒரு பயனையும்
அடையமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு சற்று விலகிச் சென்று,
இரத்தின மலைகள் உள்ள மலை நாட்டில் சீதையைத் தேடி, (பிறகு) பரந்துள்ள செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டிற்குச் சென்று சேருங்கள்.
**************
324.அகத்தியன் பற்றியும் தமிழ்ச் சங்கம் பற்றியும் கம்பன் செப்பியது
4477. ‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடம் ஆம்;ஆதலினால்,
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய,நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும்,கடலும்,காண்டிர்.
தெற்குத் திசையில் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள பொதிய மலை எப்பொழுதும் அகத்திய முனிவன் வாழ்ந்துவரும் இடமாகும்;ஆதலால் அகத்திய முனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின் அந்தப் பொதிய மலையை வணங்கி அப்பாலே சென்று நீர் பெருகுகின்ற தாமிரபரணி என்னும் அழகிய ஆற்றினையும் கடந்து போங்கள்; பின்னர் குட்டி யானைகள் வாழும் பெரிய மகேந்திர மலையையும் தென் கடலையும் காண்பீர்கள்.
தமிழை வளர்த்த அகத்திய முனிவனுக்கு இருப்பிடமாதலால் பொதிய மலையை வணங்கிச் செல்லுமாறு சுக்கிரீவன் கட்டளையிட்டான்; அகத்திய முனிவன் வடதிசையிலிருந்து தமிழை வளர்க்கத் தென்திசை நோக்கி வந்தவனாதலால் அம் முனிவன் இருக்கும் இடத்தில் தமிழறிந்த புலவர் கூட்டம் நிரம்பியிருத்தல் இயல்பே.
அந்த இடத்தைத் தாண்டிச் அதற்கு அப்பாலும் இந்த இடங்களிலும் ஒரு திங்கள் முழுதும் அலைந்து (சீதையைத்) தேடி இங்கு வந்து சேருங்கள்; விரைவாக விடை பெற்றுச் செல்லுங்கள் என்று (சுக்கிரீவன்) வானரங்களுக்குக் கட்டளை யிட்டான்; அப்போது (திருவிக்கிரம அவதாரத்தில்) திருமாலாகப் பேருருவம் கொண்டவனான இராமனும் மாருதியை முழுக் கருணை யோடு பார்த்து நீதி நூல்களில் வல்லவனே! (சீதையைக்) காண்பாயானால் (இவள்தான் சீதையென்று தெளிவதற்காக) அவளுடைய அங்க அடையாளங்களை (நான் கூறக்) கேட்பாய் என்று (அவனைத்) தனியே அழைத்துச் சென்று சொல்லத் தொடங்கினான்.
********************
326கம்பன் சீதையின் 27உறுப்புகளின் வருணனையைக் சுமார் முப்பது பாடல்களில் நமக்கு அளிக்கிறான்;இவற்றை சிறந்த ஒரு பெண்ணின் சாமுத்ரிகா லட்சணமாகக் கொள்ளலாம்
ஒவ்வொரு அங்கத்தையும் வருணிக்க ஒவ்வொரு பாடலையும் சில அங்கங்களுக்கு இரண்டு பாடல்களையும் கம்பன் எழுதியுள்ளான் ; அவ்வளவையும் நான் எழுதினால் நீங்கள் பாதிப் பதிப்பதற்குள் தூங்கப் போய்விடுவீர்கள் ! கம்ப ராமாயண வெப்சைட்டுகளில் (ப்ராஜெக்ட் மதுரை Project Madurai, தமிழ் வர்சுவல்யூனிவர்சிட்டி TVU) காண்க.
அடியின் அமைப்பு, புறவடி, கணைக்கால், தொடை, அல்குல், இடை,
327.பிரம்மா உவமை சொல்ல முடியாத ஒன்றினைப் படைத்தான்
4508. ‘குழல் படைத்து,யாழைச் செய்து
குயிலொடு கிளியும் கூட்டி
மழலையும் பிறவும் தந்து,
வடித்ததை,மலரின் மேலான்,
இழை பொரும் இடையினாள்தன்
இன் சொற்கள் இயையச் செய்தான்;
பிழை இலது உவமை காட்டப்
பெற்றிலன்;பெறும்கொல் இன்னும்?
புல்லாங் குழலையுண்டாக்கியும், யாழ்க் கருவியை வகுத்தமைத்தும் குயிலையும் கிளியையும் படைத்தும் , மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை இயற்றியும் பழகித் தேர்ந்த பிரமன் சீதையின் இனிய சொற்களுக்குள் அவற்றினைப் பொருத்தினான். ஆனால் அச்சொற்களுக்கு உவமைப் பொருள் எதையும் உண்டாக்கவில்லை! இனிமேலாவது (அவன்) படைப்பானோ?யாம் அறியோம் (பிரம்மா, சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில் வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே அச்சீதையின் சொற்களைப் படைத்தான்; ஆகவே, அவற்றிற்கேற்ற உவமப் பொருள்களை இதுவரையிலும் பிரம்மா படைக்க வில்லை.)
******************
328.அயோத்தி நகர வாசலிலேயே காடு எங்கே இருக்கிறது?கேட்டாள் சீதை! ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண் சீதை !
அயோத்தி நீங்கி (காட்டுக்கு)ச் சென்ற காலத்தில் அழகிய வாயிலைக் கடப்பதற்கு முன்பே எல்லையில்லாத கொடிய கானம் எதுவோ என்று கேட்டாள்; அவையனைத்தையும் அவள் மனம் கொள்ளுமாறு உரைப்பாய்.!
புகார் நகரத்து எல்லையிலேயே ‘மதுரை மூதூர் யாது’ (சிலப்.நாடுகாண்.41) என்று கேட்ட கண்ணகி வினாவின் எதிரொலியே ‘யாண்டையது கான்’ என்ற சீதையின் வினா.
(இராமன்) அனுமனிடம் இவ்விதமாக அடையாளங்களைச் சொல்லி, இனிதாகச் செல்வாய் என்று கூறி, சிறந்த இரத்தினங்கள் பதித்துச்
செய்யப்பட்ட சிறந்த மோதிரத்தைக் கொடுத்து மேலும் கூறினான்;
“அறிவு மிக்கவனே, நீ மேற்கொண்ட செயல் முழுவதும் (இடை யூறில்லாமல்) இனிது முடிவதாகுக”- என்று விடைதந்து அனுப்பினான் ; நீண்ட வீரக் கழலைப் பூண்டவனான அனுமன் இராமனின் கருணையை மனதிற்கொண்டு துணிவோடு சென்றான்.
அடியார்கள் கடவுளின் அருளை முன்னிட்டுக் கொண்டு செய்தொழில் தொடங்குதல் இயல்பாதலின் ‘வார்கழலினான் அருளொடும் போயினான்’ என்று பொருள் கொள்ளலாம். அசோக வனத்துச் சோகத்தாளாகிய நங்கைக்கு நன்னம்பிக்கை தருவதற்கு உரியதாகலின் ‘நல்மோதிரம்’ என்று கூறப்பெற்றது.
****
330. DON’T WORRY; I AM ON MY WAY; I AM COMING TO HELP YOU – SAID HANUMAN
குகையில் கும்மிருட்டில் சிக்கிய வானரங்கள் அனுமனே காப்பாற்ற வா என்றவுடன் அனுமன் சென்று எல்லோரும் ஒருவர் ஒருவர் வாலினைப் பிடியுங்கள்; முதல் ஆள் என் வாலினைப் பிடியுங்கள் என்று ஐடியா சொல்லி குகையில் சிக்கிய வானரங்களை வெளியே கொண்டு வந்தான் ; இது அனுமனின் சமயோசித புத்தியைக் காட்டுகிறது.
4550. ‘உய்வுறுத்துவென்;மனம் உலையிர்;
ஊழின் வால்
மெய்யுறப் பற்றுதிர்;
விடுகிலீர்’என,
ஐயன்,அக் கணத்தினில்,
அகலும் நீள் நெறி
கையினில் தடவி,வெங்
காலின் ஏகினான்.
(மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க (வேண்டியன) செய்வேன்; வருந்த வேண்டா; முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று), (எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு – (அவ் வானரர்கள் தனது வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே; சிறந்தவனான அந்த அனுமன் செல்லவேண்டிய அந்தக் குகையின் வழியில் கையால் தடவிக் கொண்டு வேகமாக நடந்து முன்னே சென்றான்.
இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப் பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால் முன்னே நடந்து சென்றான் என்பது ஒரு விளக்கம் ; ஒருவர் வாளினை ஒருவர் பிடித்துக்கொண்டு தன்னுடன் வருமாறு சொன்னது மேலும் பொருத்தமாக உளது; பாடலும் அதற்கு இடம் தருகிறது.
இதில் மதுகடங்களையுடைய பொன்னாலான பனைமரங்களும், தோட்டங்களும், தோப்புகளும், மாளிகைகளும் உள்ளன. மேலும் அங்கே மரகதப் பச்சைக் கற்களால் கட்டப்பட்ட சியாமளா தேவியின் மாளிகையும், தண்ட நாயகியாகிய வாராஹீ தேவியின் மாளிகையும் உண்டு. பச்சைக் கற்களால் இழைக்கப்பட்ட அவ்வாராஹீ தேவியின் அரண்மனையில் நூறு தூண்கள் கொண்ட மண்டபத்துள் தங்கமயமான பீடத்தில் பொற்றாமரைப் புஷ்பம் ஒன்று உள்ளது. அப்புஷ்பத்தில் கர்ணிகையில் பிந்து, திரிகோணம், வட்டம், அறுகோணம், இரண்டு விருத்தம் (வட்டம்) இவைகளோடு 110 அக்ஷரங்களையுடைய சக்ரத்தில், வராஹ முகத்தையும், தாமரை இதழ் போன்ற கண்களையும், சந்திர கிரீடத்தையும், உருக்கி வார்த்த தங்கம் போன்ற ஒளியை உடைய சரீரத்தையும், அந்திச் சிவப்பையும், சிவந்த மலர் மாலைகளையும், கலப்பை, உலக்கை, சங்கம், சக்ரம், பாசம், அங்குசம், அபயம், வரதம் இவைகளால் சோபிக்கும் கைகளையும் உடைய மஹா வாராஹீயானவள், உன்மத்த, கபால, பீஷண, டமருபாஸ்கர, ரவிபக்ஷக, கால, சண்ட, மஹாமந்தானர்களென்னும் அஷ்ட பைரவர்கள் புடைசூழ, ஜம்பினி முதலிய சேனைகளோடு கூடி வீற்றிருப்பாள்.
17. பவழக் கோட்டை
இது பவழங்களால் செய்த அநேக கோபுரங்களும், பதுமைகளும், துவஜங்களும், கொண்டதாய் மிக்க ரமணீயமாய் இருக்கும். இதற்கும் பதினாறாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் உருக்கிச் சாய்த்த தங்கம் போல் பிரகாசிக்கும் அநேக ஸ்தானங்களும், உத்தியான வனங்களும் சிறந்து விளங்குவனவாயிருக்கும். அங்கே சிவப்பு நிறமுள்ள யோகினிக் கூட்டங்கள் வசிக்கும்.
18. நவரத்தினப் பிராகாரம்
இக்கோட்டையும் இதர கோட்டைகளைப் போன்று பல சிறப்புகளைக் கொண்டதாய் விளங்கும். இதற்கும் பதினேழாவது கோட்டைக்கும் இடையில் தனது காந்தியினால் பத்துத் திக்குகளையும் பிரகாசிக்கச் செய்யும் மாணிக்க மண்டபமுண்டு. அதில் நீலமேக நிறமும், செந்தாமரை மலரைப் போன்ற கண்களும், வைஜயந்தீ வனமாலைகளுக்கும், கௌஸ்துப மணிக்கும், மஹா லக்ஷ்மிக்கும் இருப்பிடமாகிய அகன்ற மார்பும், சங்கத்தை ஜெயிக்கும் கண்டமும் கொண்டதாய் கிரீடம் மகர குண்டலம் முதலிய பல ஆபரணங்கள் விளங்க, பீதாம்பரதாரியாய், சங்கம், சக்ரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து, கருட வாகனாரூடராய் பிரஹ்லாத, புண்டரீக, நாரதாதி பக்த ரக்ஷகராயும், துஷ்ட ராக்ஷஸ சிக்ஷகராயுமுள்ள மஹா விஷ்ணு, திரிபுரசுந்தரீ ஆராதனையில் தற்பரராய் வீற்றிருப்பார்.
19. நவரத்தினப் பிராகாரம்
இது சந்திரமண்டலத்தைத் தொடும்படியான மணிச் சிகரங்களையும், கோபுரங்களையும் மற்றுமுள்ள பல சிறப்புக்களையும் கொண்டதாய் விளங்கும்.
இதற்கும் பதினெட்டாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது ரத்தின மாளிகைகளாலும், உத்தியான வனங்களாலும் சூழப்பட்டிருக்கும். அன்றியும், இங்கே பொன்னால் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உண்டு. இதில் சந்திரசேகரனும், பவானீ சமேதனுமான ஈசானன், நந்தி, பிருங்கி முதலிய சிவ கணங்களும் , உருத்திர கணங்களும் புடைசூழ திரிபுரசுந்தரியை வணங்கிக் கொண்டு மஹா ஆனந்தத்தோடு வசிப்பான்.
அடுத்து மஹாபத்மாடவீ பிராகாரங்கள் எனப்படும் ஆறு பிராகாரங்களைப் பார்ப்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்பன் அளக்கும் கப்ஸா! உலக ஜனத்தொகையை மிஞ்சிவிட்டது! தானை காண் ( படைகளைக் காணும் ) படலத்தில் கோடி கோடி என்று பாட்டுக்குப் பாட்டு குரங்குப் படைகளின் எண்ணிக்கை யைக் கூட்டிக்கொண்டே போகிறான்!தானை காண் படலம் 4514 – 4552; சுமார் 40 பாடல்களில் எண்களை அள்ளி வீசுகிறான்!
கப்ஸா :—
தமிழ் அகராதியில் கப்சா (அல்லது கப்ஸா) என்ற சொல்லுக்கு இரண்டு முக்கியப் பொருள்கள் உள்ளன:
• பொய் / புளுகு: கற்பனையாகக் கட்டியமைத்து, உண்மை போலப் பொய்களைப் பேசுதல் அல்லது வதந்தி பரப்புதல் (பொய்வார்த்தை).
(What he said turned out to be a lie).
• எடுத்துக்காட்டு: “அவன் சொன்னது கப்சா என்று தெரிந்தது”
**********
311
என்னுடைய சிம்மாசனத்தில் அமருங்கள் என்று லெச்சுமணனிடம் சுக்ரீவன் கூறியபோது ஏன் தரையில் உட்கார்ந்தான் ?
312
சுக்ரீவன் தயாரித்த அறுசுவை விருந்து பற்றி இலக்குவன் கருத்து என்ன ?
313
கம்பனுக்கும்,புலவர்களுக்கும் கணக்கு,எண்கள்பற்றி ஒன்றும் தெரியாது என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
314
சுக்ரீவனைக் கட்டி அணைத்து ராமன் அன்பாக விசாரித்தது என்ன ?
315
ராமன் கேள்விக்குப் பதில் தந்த சுக்ரீவன் நான் ஒரு முட்டாளுங்க;நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க– என்று திரைப்படத்தில் சந்திரபாபு பாடியது போல என்ன சொன்னான் ?தனது தவற்றை எப்படி ஒப்புக்கொண்டான் ?
316
நீ மட்டும் பெரும் சேனையோடு வந்திருக்கிறாய் ;அனுமன் எங்கே என்று ராமன் வினவ,சுக்ரீவன் விடுத்த விடை என்ன?
317
கம்பன் சொல்லும் கற்பனை (கப்ஸா) எண்களுக்கு என்ன எடுத்துக் காட்டுகள் உள்ளன?
318
அனுமன் படையில் எத்தனை குரங்கு வீரர்கள் இருந்தனர் ?
319
படைகளை சிவனும் பிரம்மாவும் கூடக் காண முடியாது என்று கம்பன் செப்பியதற்கான காரணம் ?
320
சுக்ரீவன் வேண்டுகோளுக்கிணங்க மலைமேல் ஏறி வானர சேனையைக் கண்டவுடன் இலக்குவனிடம் ராமன் உதிர்த்த கீழ்கண்ட பொன்மொழிகளின் பொருள் புரிகிறதா ?
‘யாவது எவ் உலகத்தினின்,
இங்கு, இவர்க்கு இயற்றல்-
ஆவது ஆகுவது; அரியது ஒன்று
உளது எனல் ஆமே? –
தேவ! – தேவியைத் தேடுவது
என்பது சிறிதால்;
பாவம் தோற்றது,தருமமே
வென்றது,இப்படையால்.
4442. ‘ஈசன் மேனியை, ஈர் – ஐந்து
திசைகளை, ஈண்டுஇவ்
ஆசு இல் சேனையை,
ஐம்பெரும் பூதத்தை,அறிவை,
பேசும் பேச்சினை,சமயங்கள்
பிணக்குறும் பிணக்கை, –
வாச மாலையாய்! – யாவரே முடிவு
எண்ண வல்லார்?
அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு,
நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம்: இனி முடிவு
உள காணுமாறு உளதோ? –
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! –
மண்ணிடை மாக்கள்,
”கடல் கண்டோம்”என்பர்;யாவரே
முடிவு உறக் கண்டார்?
XXXXXXXXXX
விடைகள்
311
‘கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்
எல் அணை மணிமுடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக யான் பொன் செய் பூந்தொடர்
மெல் அணை வைகலும் வேண்டுமோ?’என்றான்.
• கல் அணை மனத்தினை உடைக் கைகேசியால்: கல்லைப் போன்ற கடினமான (இரக்கமற்ற) மனதை உடைய கைகேயியின் செயலால்,
• எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்: ஒளி பொருந்திய நவரத்தினங்கள் பதித்த மகுடத்தைத் துறந்த என் தலைவனாகிய இராமபிரான்,
• புல் அணை வைக: காட்டில் தர்பைப் புல்லையே படுக்கையாகக் கொண்டு உறங்கும்போது,
• யான் பொன் செய் பூத் தொடர் மெல் அணை வைகவும் வேண்டுமோ?: அவனது தம்பியாகிய நான் மட்டும் இங்கே பொன்னால் செய்யப்பட்டு, மலர்கள் தூவப்பட்ட மென்மையான படுக்கையில் தூங்கலாமா? நியாயமா?
என்று சொல்லிவிட்டு இலக்குவன் தரையில் உட்கார்ந்தான்.
****
312
4382. ‘பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறு நான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட
எச்சிலே அது; இதற்க ஐயம் இல்லையால்.’
‘பசிய இலைகளும் (கீரைகளும்), கிழங்குகளும் காய்களும் (ஆகிய இவற்றில் இராமன் அமுது செய்து எஞ்சியதையே நான்
உண்பேன் (அதைத் தவிர); வேறு எப்பொருளையும் விரும்ப மாட்டேன்; ஒருகால் விரும்பினேனானால் அது நாய் தின்று
போட்ட எச்சிலேயாகும் இதில் ஐயமே யில்லை.’என்றான் இலக்குவன்.
மெல்லணையில் அமராமல் கல் தரையில் இலக்குவன் அமர்ந்ததைக் கண்டபோது அவன்தன் அன்புநிலை கண்டு அவலம் உற்றனர். நல்லுணவேனும் கொள்ளக் கூடாதா எனற ஆதங்கத்தில் ‘நீ அமுது கொண்டால் நாங்கள் உய்ந்தோமாவோம் (4379) என்று சுக்கிரீவன் கூறினான் ; அப்போது இலக்குவன் இவ்வாறு சொன்னான்.
****
313
நான் போய்தான் ராமனின் உணவுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் ஒரு கணமும் தாமத்திக்க முடியாது என்று இலக்குவன் சொன்னான்; உடனே அனுமனைப் படைகளைத் திரட்டும்படி சொல்லிவிட்டு சுக்ரீவன் புறப்பட்டான் ; அப்போது போன குரங்குகளின் எண்ணிக்கை 9000 கோடி! இதே போல வள்ளுவன் ஒரு குறளில் 70 கோடி என்று பாடுகிறான்; ரிக்வேதப் புலவர்களும் இப்படித்தான் ; இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களின் எண்ணிக்கை எப்போதும் டெசிமல் சிஸ்டத்தில் 1000 அல்லது 10000 அல்லது லட்சம் என்று இருக்கும் ; கவிஞர்கள் மிகைப்படுத்திப் பேசுவதில் மன்னர்கள் ; சில நேரங்களில் எதுகை மோனைக்காகவும் கண்ட எண்களைப் புகல்வர்!
4388. ஒன்பதினாயிர கோடி யூகம், தன்
முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற,
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற,
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில்,
ஒன்பதினாயிரங் கோடிக் குரங்குகுச் சேனைகள் தனக்கு முன்னும் பின்னும் இருபக்கமும் நெருங்கி வரவும் , – மிகச் சிறந்த உறவினர்களாகிய வானரங்களும் அருகில் சூழ்ந்து வரவும் , மின்னல் போன்ற ஒளி விடுகின்ற அணிகளை அணிந்த சுக்கிரீவன் இராமன் இருக்கும் இடத்திற்குப் போனான்.
******
314
இராமபிரான், சுக்கிரீவனை அன்பினால் தழுவித் தன்னருகில் அமர்த்தி நலம் விசாரித்தான்
தீண்டலும் மார்பு இடைத் திருவும் நோவுற
நீண்ட பொன் தடக்கையால் நெடிது புல்லினான்.
4396. அயல் இனிது இருத்தி,
‘நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே?
இனிதின் வைகுமே,
புயல் பொரு தடக் கை
நீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே, குடை?’
என வினாயினான்.
(இராமன் சுக்கிரீவனை) அருகில் உட்கார வைத்து, உனது ஆட்சி ஒருவகை இடருமின்றி நடக்கிறதா? மேகம் போன்ற (கைம்மாறு கருதாமல் கொடுக்கவல்ல) உன்னால் காக்கப்படும் பல உயிர்களும் இன்பமாக வாழ்ந்து வருகின்றனவா? உனது வெற்றிக் குடை வெம்மை தராமல் இருக்கிறதா? என்று கேட்டான்.
இராமனது முதல் வினா சுக்கிரீவனது நன்மையையும், பிற வினாக்கள் குடிகளின் நன்மையையும் கருதி நிகழ்ந்தவை. மக்களுக்கு இனிமை தருவது இன்றியமையாததாதலால் ‘நீ புரக்கும் பல்லுயிர் இனிதின் வைகுமே’ என்றும் வினவினான்.
கலங்காத இராமனது மனம் கலங்கியிருக்க அதைத் தெளிவிக்கும் வல்லமை தனக்கு இருந்தும் அதற்கேற்ற வழிமுறையும் தேடாது இன்ப வாழ்வில் பொழுது போக்கியிருந்த தன் முட்டாள்தனத்தைச் சுக்கிரீவன் ஒப்புக்கொண்டான்.
4399. ‘பெருந் திசை அனைத்தையும்
பிசைந்து தேடினேன்
தரும் தகை அமைந்தும்,
அத் தன்மை செய்திலேன்;
திருந்திழை திறத்தினால்,
தெளிந்த சிந்தை நீ,
வருந்தினை இருக்க, யான்
வாழ்வின் வைகினேன்.
( இராமனை நோக்கிச் சுக்கிரீவன்);
பெரிய திக்குகள் எல்லாவற்றையும் துருவித் தேடிப் பார்த்து, சீதையைக் கொண்டுதரக் கூடிய திறமை (என்னிடம்) இருந்தும்
அவ்வாறு நான் செய்யவில்லை. அழகான நகைகளை அணிந்த சீதையை எண்ணி, கலக்கம் இல்லாமல் தெளிந்த மனமுடைய நீ வருந்தி இருக்கவும் (அதைச் சிறிதும் எண்ணாமல்) நான் இன்ப வாழ்க்கையில் காலங்கழித்தேன்.
****
316. இராமன் சுக்கிரீவனை நோக்கி ‘அநுமன் எங்குள்ளான் ‘என வினவ, அவன், நாளை சேனையோடு வருவான் ‘எனச் சுக்கிரீவன் விடை கூறுதல்: ஆயிரம் கோடி தூதர்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறான்!!!
4403. ‘கோடி ஒர் ஆயிரம் குறித்த கோது இல் தூது
ஓடின நெடு்ம் படை கொணர்தல் உற்றதால்;
நாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்.
ஓராயிரங் கோடியாக கணக்கிடப்பட்ட குற்றமற்ற தூதர்கள் பெரிய வானரசேனைகளை திரட்டிக் கொண்டு வரும் பொருட்டு(ச் செய்தி செல்ல) விரைந்து சென்றுள்ளார்கள்; (இது வரை வானரப் படைகள் வராததால் அவற்றைத் திரட்டி வருவதற்கு னுமன்காத்திருக்கிறான்); (அவ்வாறு) கொண்டு வருவதற்குக் குறித்த நாளும் வந்து விட்டதுஆதலால் இன்று அல்லது நாளை வலிமையுள்ள அந்த வானர சேனையுடன் அந்த அனுமனும் இங்கே வந்துவிடுவான் (என்றான்).
****
317. கம்பன் சொல்லும் கற்பனை (கப்ஸா) எண்களுக்கு எடுத்துக் காட்டுகள்- படைகளைக் காணும் படலத்தில் சில பாடல்கள் இதோ:
4.11 தானை காண் படலம் 4514 – 4552
சதவலி வானர சேனையுடன் வந்து சேர்தல்
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த
வானர அதிபர் ஆயிரர் உடன்வர வகுத்த
கூனல் மாக் குரங்கு ஐ இரண்டு ஆயிர கோடித்
தானையோடும் அச் சதவலி என்பவன் சார்ந்தான். 4.11.1
அச்சதவலி என்பவன் – அந்தச் சதவலி என்னும் வானர வீரன்;
ஆயிரம் ஆயிரத்து ஆனை – பத்து இலட்சம் யானைகளின்; எறுழ்வலி அமைந்த – மிக்க வன்மையோடு பொருந்திய;
கூனியுள்ள பெரிய; ஐ இரண்டு ஆயிர கோடி – பதினாயிரம் கோடி;
குரங்குத் தானையோடு – வானர சேனையோடு; சார்ந்தான் – சுக்கிரீவனிடம் வந்தான்.
சுருக்கமாகச் சொன்னால், கம்பநாடர் வானர வீரர்களின் அசாத்தியமான உடல் வலிமையையும் அவர்களின் பிரம்மாண்டமான கூட்டத்தையும் உவமிக்க இந்த வரிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
இது முதல் பாட்டு ; இது போல நாற்பது பாடல்களில் சேனைகளின் தொகையைக் கூறுகிறான் கம்பன்; கால்குலேட்டரில் எங்களைக் கூட்டுக (பொழுது போகவிட்டால்!)
சுடேணனன் வருகை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான் வந்து சுடேணனன் எனும் பெயர்த் தோன்றல். 4.11.2
உருமையின் தந்தை தாரன் வருகை
ஆறு எண் ஆயிர கோடியது உடன் வர, அமுதம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான். 4.11.3
கேசரி வருகை
ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த
மொய்ம்பு மால்வரை புரை நெடு வானரம் மொய்ப்ப
தூமிரன் வருகை
கண்கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, எறுழ்வலித் தூமிரன் இறுத்தான். 4.11.5
கவாட்சன் வருகை
இனிய மாக்குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன்வர ஆன்பெயர்க் கண்ணன் வந்து அடைந்தான். 4.11.6
318.அனுமனுக்கு கம்பன் முக்கிய இடம் தரவில்லை ; நூறோடு ஒன்று நூற்றியொன்று என்னும் பாணியில் இடையில்தான் அநுமானைக் கம்பன் வைத்தான் ; அவன் படையில்…..
அனுமன் வருகை
கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் காண
மெய் அஞ்சாதன மாதிரம் சிறிது என விரிந்த,
வையம் சார்வரத் திரிதரு வானர சேனை
ஐ அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான்.
கை அஞ்சு ஆயுதம் உடைய – கிரணங்களாகிய அஞ்சத்தக்க
ஆயுதங்களையுடைய; அக் கடவுளைக் கண்டும் – அந்தச் சூரியனைக்
கண்டுங்கூட; மெய் அஞ்சாதவன் – சிறிதும் நடுக்கம் கொள்ளாதவனான;அனுமன் – அனுமன்; மாதிரம் சிறிது என விரிந்த – திக்கெல்லை முழுவதும் அளவில் சிறிய என்று என்னுமாறு பரவியுள்ளதும்; வையம் சாய்வரத் திரிதரு – நிலவுலகம் ஒரு புறமாகச் சாயும்படி உலவுவதுமான; ஐ அஞ்சு ஆயிர கோடி வானர சேனை கொண்டு – இருபத் தையாயிரங்கோடி எண்ணுள்ள வானரப் படையை உடன்கொண்டு; வந்து அடைந்தான் – வந்து சேர்ந்தான்.
அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழமென்று கருதிச் சிறிதும் அஞ்சாது, அதைப் பிடிக்கப் பாய்ந்தவனாதலால அவனை ‘அக் கடவுளைக் கண்டு மெய் அஞ்சாதவன்’ என்றார். கை அஞ்சு ஆயுதம் உடைய – என்பதற்கு விஷ்ணு என்றும் பொருள் சொல்லலாம் .திருமால் (விஷ்ணு): பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம்) எனப்படும் ஐந்து முக்கிய ஆயுதங்களை உடையவர்.
பூமியின் எந்தப் பகுதியில் இவ் வானர சேனை செல்லுகின்றதோ அந்தப்பகுதி மிக்க பாரத்தால் சாய்ந்ததாம்!
***
319.படைகளைச் சிவனும் பிரம்மாவும் கூடக் காண முடியாத காரணம் :-
எண்ணின், நான்முகர்
எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்
பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்கறின், கண்ணுதலானுக்கும்
கதுவா, –
மண்ணின் மேல் வந்த
வானர சேனையின் வரம்பே!
பூமியின்மேல் திரண்டு வந்த வானரப் படையின் அளவை எண்ணத் தொடங்கினால் எழு பதினாயிரம் பிரம்மாக்களுக்கும் முடியாது; (இவ் வானர சேனைகள்) உண்ணத் தொடங்கினால் அண்டங்கள் யாவும் ஒவ்வொரு ஒவ்வொரு குரங்குக்கும் ஒரு பிடி கூடக் கிடைக்காது ; கண்ணால் பார்க்க வேண்டுமாயின் மூன்று கண்களை உடைய சிவபெருமானாலும் காண முடியாது
*****
320.கம்பனுடைய மேதாவிலாசம் இந்த மூன்று பாடல்களிலும் தெரிகிறது : சேனையைக் கண்டு ராம லட்சுமணர் உரையாடியது.
DHARMA WON ADHARMA FINITO!
தேவனே! இங்குள்ள வானர வீரர்களுக்கு எந்த உலகத்தில் எதைச் செய்து முடிக்கவேண்டியதிருந்தாலும் அச்செயல்கள் எளிதில் கைகூடிவிடும் (அவ்வாறாக இவர்களுக்குச் செய்வதற்கு) அரிய செயல் உள்ளது என்று சொல்வதற்கு இடமுண்டோ? சீதையைத்
தேடிக் கண்டு பிடிப்பதென்பது (இவர் களது பேராற்றலுக்கு) மிகவும் எளிதான செயலாகும்; இந்தச் சேனையால்; பாவம் தோற்றது- பாவம் தோல்வியடைந்தது;தருமமே வென்றது – தருமமே வெற்றி பெற்றது என்றான் இலக்குவன்.
NO END TO RELIGIOUS ARGUMENTS:
மணம் நிறைந்த மாலையை அணிந்த லெட்சுமணா! இறைவனின் திருமேனியையும்பத்துத் திக்குகளையும், ஐந்த பெரிய பூதங்களையும் நுட்பமான அறிவையும், பேசும் மொழிகளையும் தமக்குள் சமயங்கள் மாறுபடுகின்ற மாறுபாட்டையும் இங்கே திரண்டுள்ள குற்றமற்ற இவ்வானரப் படையையும் எவர்தாம் அவற்றின் முடிவைக் கணக்கிட வல்லவர்?
இறைவன் எங்குமுள்ளவனாதலால் அவனது திருமேனி அளவிட்டு அறிய முடியாதது; ஐம்பெரும் பூதங்கள் உலக முழுவதும் நிம்பியிருத்தலால் அவற்றிற்கும் ஓர் அளவு இல்லை; புதிது புதிதாகப் பொருள்களை அறியும் அறிவுக்கும் ஓர் எல்லையில்லை; ஒருவர் ஒன்று பேசும்போது அதனைத் தொடர்ந்து பேச இடம் உண்டாதலால் அதற்கும் ஓர் அளவில்லை. தன் தெய்வம் என் தெய்வம் என்று பேசிச் சழக்கிடும் சமய வாதங்களுக்கும் முடிவில்லை. இவற்றைப் போலவே வானரப் படையின் அளக்கமுடியாது.
NO ONE CAN SEE THE ENTIRE OCEAN!
கடல் கரைக்குப் போவோர் நான் கடலைக் கண்டேன் என்பர்; அவர்கள் கடல் முழுவதையுமா பார்த்தார்கள்? இல்லையே! ஒரு சிறிய பகுதியைத்தான் கண்டார்கள்; அதுபோலக் கடல் போலப் பரந்து கிடக்கிறது இந்த வானர சேனை ! நாமும் ஒரு ஓரத்தை மட்டுமே காண்கிறோம் லெட்சுமணா!
—SUBHAM—
TAGS கம்பனுக்கு கணக்குத் தெரியாது! ஒரே கப்சா! கம்ப ராமாயணத்தில் 320 கேள்விகள்! தானை காண் படலம், படைகளின் எண்ணிக்கை , ராம- லெட்சுமணர் உரையாடல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
அம்பாளின் தலைநகரம்! – 3
ச. நாகராஜன்
இரத்தினப் பிராகாரங்கள் மொத்தம் 11.
9. புஷ்பராகக் கோட்டை
இந்தக் கோட்டைக்கும் கோபுரங்களும், துவஜங்களும், மணிப் பதுமைகளும் உண்டு. இதற்கும் எட்டாவது கோட்டைக்கும் இடையில் உள்ள புஷ்பராக மணிமயமான பூமியின்கண் பல சித்த கணங்கள் இராஜ ராஜேஸ்வரியைத் தியானித்துக் கொண்டு வசிப்பார்கள்.
10. பத்மராக மணிக் கோட்டை
இக்கோட்டை தனது ஒளியால் பத்து திக்குகளையும் பிரகாசித்துக்கொண்டு மணிமயங்களான துவஜங்களையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும், தோரணங்களையும் கொண்டதாய் இருக்கும். இதற்கும் ஒன்பதாவது கோட்டைக்கும் இடையில் பதுமராக மணிமயமான பிரதேசமானது, பராசக்தியைப் பூஜிக்கும் சாரணர்களோடு கூடியிருக்கும்.
11. கோமேதக இரத்தினக் கோட்டை
இதுவும் பேரொளியோடும், கூட கோபுரங்களோடும், மாட மாளிகைகளோடும் விளங்குவதாகும். இதற்கும் பத்தாவது கோட்டைக்கும் இடையில் யோகினிக் கூட்டங்களோடு கூடி வடுக தேவக் கூட்டம் வசித்துக் கொண்டு திரிபுராம்பிகையை ஆராதித்துக் கொண்டு விளங்கும்.
12. வஜ்ஜிர ரத்தினக் கோட்டை
பல சிறப்புகளை உடைய இக்கோட்டைக்கும் பதினோராவ்து கோட்டைக்கும் நடுவில் பல உத்தியானங்கள், தடாகங்கள், வாவிகள், மணி மாளிகைகள் முதலியன பல உள்ளன. இப்பிரதேசத்தில் அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை முதலிய தேவதாசிகள் பராசக்தியாகிய காமேச்வரியை அர்ச்சித்துக் கொண்டு பரமானந்த பரிதர்களாய் வசிப்பர்.
13. வைடூரியக் கோட்டை
இதற்கும் பன்னிரண்டாவது கோட்டைக்கும் மத்தியில், சிருங்கார வனங்கள், மண்டபங்கள், மாளிகைகள் முதலியன சிறந்து விளங்கும். அங்கே பரதேவதையை உபாசிக்கும் அநந்தன், வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்னு அஷ்ட நாக (ஸர்ப்ப)ங்களும், பலிச் சக்கரவர்த்தி முதலிய அசுரர்களும் வாசம் செய்வர்.
14. இந்திர நீலக் கோட்டை
தனது காந்தியினால் ஆகாயத்தை நீல நிறமாகச் செய்யும் இந்திர நீல மணிகளிழைத்த பல உயர்ந்த கோபுரங்களையும் மற்றுமுள்ள பல சிறப்புகளையுடையும் உடையது இந்தக் கோட்டை. இதற்கும் பதிமூன்றாவதாகிய வைடூர்யக் கோட்டைக்கும் இடையில், நீலமணிப் படிகங்களமர்ந்த தடாகங்களும், நடை வாவிகளும், மாடங்களும், மண்டபங்களும் பல இருக்கின்றன. இங்கே மநு, மாந்தாதை, பகீரதன், கயன், சசிபிந்து, ப்ருது, பரதன் முதலிய சக்கரவர்த்திகள் பரதேவதையை நமஸ்கரித்துக் கொண்டு வசிப்பார்கள்.
15. முத்துக் கோட்டை
மற்ற கோட்டைகளுக்குள்ளது போலவே இதற்கும் கோபுரங்களும், துவஜங்களும், பொற்பதுமைகளும், தோரணங்களும், மாடங்களும் உள்ளன.
இதற்கும் பதினான்காவது கோட்டைக்கும் இடையே உள்ள
இடமானது பல தோட்டந்துறவுகளாலும், மாட மாளிகைகளாலும் சூழப்பெற்றுள்ளதாகும். இங்கே கிழக்குத் திக்கில் தேவேந்திரன் ஐராவதத்தில் ஆரோகணித்து வஜ்ஜிராயுதத்தைப் பூண்டு, சசீ தேவியுடன் கூடி ராஜராஜேஸ்வரியை ஆராதித்துக் கொண்டிருப்பான்.
தென்கிழக்கே அக்னி மூலையில் ஹவ்ய கவ்ய வாகனனாய், அக்னி தேவன் செம்மறி ஆட்டின் மேல் ஏறிக் கொண்டு, ஸ்ருக், ஸ்ருவம், விசிறி, அன்ன பாத்திரம், சக்தி ஆயுதம், துறட்டுக்கோல் முதலிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு ஸ்வாஹா, ஸ்வதா என்னும் மனைவிகளோடு கூடி திரிபுரசுந்தரியைத் தியானம் செய்து கொண்டிருப்பான்.
தென் திசையில் யமன் மகிஷ வாகனத்தின் மேலேறிக் கொண்டு தண்டாயுதத்தைப் பூண்டு சியாமளா தேவியோடு திரிபுராம்பாளைத் தியானித்துக் கொண்டு வசிப்பான்.
தென்மேற்கு மூலையில் நிருதி நரவாகனத்தின் மேலேறி, ஈட்டி, இரும்புத் தடி, கட்கம், கேடகம், முதலிய ஆயுதங்களைத் தரித்து, தீர்க்கா தேவி சமேதனாய் திரிபுரசுந்தரியை அர்ச்சித்துக் கொண்டு வாழ்வான்.
மேற்குத் திக்கில் வருணன், முதலையின் மேல் வீற்றிருந்து சிக்கக் கயிற்றைக் கையில் தாங்கி காளி என்னும் சக்தியோடு மஹா திரிபுர சுந்தரியைத் தியானித்துக் கொண்டிருப்பான்.
வடமேற்கு அதாவது வாயு மூலையில் வாயு பகவான் மான் வாகனத்தை ஆரோகணித்து துவஜமென்னும் ஆயுதத்தைப் பூண்டு, அஞ்சனா தேவி சமேதனாய் கோரக்கன் முதலிய பல சித்தர்கள் புடைசூழப் பராசக்தியைப் பூஜித்துக் கொண்டு விளங்குவான்.
வடக்குத் திக்கில் குபேரன் குதிரை வாகனத்தின் மேலேறிக் கத்தியைக் கையில் தாங்கி சித்திர ரேகை என்னும் மனைவியோடு சேர்ந்து மாணிபத்திரன் முதலிய யக்ஷர்கள் புடை சூழ மஹா திரிபுரசுந்தரி தியான தற்பரனாய் வீற்றிருப்பான்.
வடகிழக்கில் அதாவது ஈசான மூலையில் ருத்திரன் விருஷப வாகனத்தின் மேல் ஆரோகணித்து, திரிசூலம் முதலிய பல் திவ்ய ஆயுதங்களைப் பூண்டு பார்வதி தேவியோடு திரிபுரசுந்தரி சேவாபரனாய் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.
மேற்கூறிய அஷ்ட திக் பாலகர்கள் முத்துக் கோட்டைக்கும் இந்திர நீலமணிக் கோட்டைக்கும் இடையே வாசம் செய்து கொண்டிருப்பார்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to Ponder
Kural 580 is a great puzzle! It is about men of culture willingly drinking poison with a smile. Valluvar lived in the fifth century CE. Before that we know two people drinking poison; Lord Siva took poison to save Demons and Angels when it came out of the Milky Ocean churned by both the groups. But his wife Parvathy held Shiva’s neck and prevented it going down. This is in 2000- year old Tamil Sangam literature and earlier Sanskrit works.
The second person who willingly and smilingly took poison was the great Greek thinker, Socrates. He lived between 470 and 399 BCE; that is one thousand years before Valluvar, that too in the far way Greece. I wrote an article in the 1990s in Megham Tamil monthly issue in London about it saying that Valluvar referred to Socrates.
But I can be challenged on the basis of the same poison drinking matter found in early Narrinai poem 356. It was by an anonymous author; so, we can’t find the precise date, but believed to be 2000 year old. Now the gap is just 400 years between Socrates and that Sangam Age Narrinai poem; Did Tamils get news about Socrates drinking poison within that short time? It is impossible. So, we may conclude that Valluvar and Narrinai author referred to Lord Shiva only.
When the authorities in Athens gave poison to Socrates, his friend Creto told him to escape. But Socrates refused to escape saying that he as a loyal citizen should not violate the law of the land. In short, he took hemlock willingly. He even instructed his friend Creto to sacrifice a hen to the Goddess.
Another interesting point is that Bharatiyar also referred to the poison taking in his Achchamillai Song.
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar – SB
5.EVS Publishers, Singapore – EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 76; Chapter 58 in Tirukkural Book- கண்ணோட்டம் – Benign looks- Benignity- ON GRACIOUS COMPASSION-
571.The glory of the world lives in the mild and the magnificent look of a sovereign – A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
571.Gracious compassion is the uniquely great quality,
Because of which the world moves smoothly– S M Diaz, I G of Police- SMD, Year 2000
***
571 Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides. The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.-Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
571.Living in the world implies The bounteous dame of benign eyes. Suddhananda Bharathiyar – SB 571
***
571.The world has its beings because of the existence of the grand and beautiful virtue called graciousness- EVS Publishers, Singapore – EVS, Year 1986
***
571.The world goes smoothly on when graciousness,
That beauteous maid, resides in kingly souls- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
***
571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
572.All the graces and charms of life spring from a noble demeanour. But verily they are a burden unto the earth who are devoid of it– ANM+2
***
572.The world exists and functions, because of the gracious compassion of the king,
Where this quality is absent, he becomes a burden to good earth.- S M Diaz,
***
572 The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear. The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.– GUP ***
572.World lives by looks of lovely worth Who lack them are burdens of earth. – SB 572 ***
572.The world lives by benign looks of loving hearts. Who lacks them are burden on the earth – EVS Publishers
***
572. கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
573.Of what avail is the song that does not touch the hidden soul of harmony? of what avail is the eye that shines not with the tender light of grace? – ANM+2
***
573.Where the tunes, expression, and words of a song do not accord, there is no sense in it; so too,
It is meaningless to have eyes that do not possess compassionate graciousness.- S M Diaz,
***
573 Where not accordant with the song, what use of sounding chords? What gain of eye that no benignant light affords? Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.– GUP ***
573.Of tuneless song what is the use? Without gracious looks what are eyes? – SB 573 ***
573.Of what use is the song that cannot be sung? Of what use is the eye that is wanting in grace? – EVS Publishers
***
573.Of what use is a song that can’t be sung?
what use is an eye that hath no graciousness?- H A Popley
***
573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
574.Of what avail is the vacant look of a man whose eyes sparkle not with charming tenderness? – ANM+2
***
574.Eyes that do not express gracious compassion, albeit within expected bounds,
Only appear like eyes but serve no purpose.- S M Diaz,
***
574 The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright. Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?– GUP ***
574.Except that they are on the face What for are eyes sans measured grace. – SB 574 ***
574.Of what use is the eye that has no graciousness within measure except seeming to be in the face? – EVS Publishers
***
574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
575.The grace of the eyes lies in its tender looks. Void of it eyes are but mere sores– ANM+2
***
575.The eyes, that do not possess and exercise the quality of gracious compassion,
Are like a couple of sores on the face.- S M Diaz,
***
575 Benignity is eyes’ adorning grace; Without it eyes are wounds disfiguring face. Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.– GUP *** 575.Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore. – SB 575 ***
575.Kind looks are an ornament to the eyes; without them they will be considered to be merely two sores- EVS Publishers
***
575.The jewel of the eye is graciousness ;
If that be lacking, then it is but a sore– H A Popley
576.They are but stocks and stones whose eyes dance not with kindness– ANM+2
***
576.Men who have eyes that do not possess and exhibit gracious compassion,
Are like trees fixed on earth.- S M Diaz,
***
576 Whose eyes ‘neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they. They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).– GUP ***
576.Like trees on inert earth they grow Who don’t eye to eye kindness show. – SB 576 ***
576. Those who, though having eyes, never look kindly on others, are like the trees on earth – EVS Publishers
577.They are blind who look not with tenderness. – they have eyes who have a divine grace in their looks– ANM+2
***
577.People who do not possess gracious compassion, have really no eyes at all
Those, who have eyes in fact, will surely have compassionate graciousness.- S M Diaz,
***
577 Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who’ve eyes can never lack the light of grace benign. Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.– GUP ***
577.Ungracious men lack real eyes Men of real eyes show benign grace. – SB 577
***
577.They have no eyes whose looks have no graciousness; they that have eyes are not wanting in graciousness- EVS Publishers
578.He inherits the earth in whom justice and tenderness happily meet and mingle– ANM+2
***
578.The man, who can exercise gracious compassion without interference with duty,
Will certainly inherit the earth.- S M Diaz,
***
578 Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won. The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).– GUP ***
578.Who gracious are but dutiful Have right for this earth beautiful. – SB 578 ***
578.They have the right to rule this world who are gracious, kind and true to duty- EVS Publishers
***
578. கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
579.Forbear and show tenderness to those who have offended you. That is true nobility– ANM+2
***
579.Even towards a person, who deserves to be sternly dealt with for his offence,
Forbearance and correction are better methods to adopt.- S M Diaz,
***
579 To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace. Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.– GUP ***
579.To be benign and bear with foes Who vex us is true virtue’s phase. – SB 579 ***
579.To show forbearance and kindness even to those who cause unhappiness is the most excellent quality in a man- EVS Publishers
***
579.To show to those who vex us sore true graciousness,
And patiently to bear with them , is best of all good traits – H A Popley
580.It is the pink and pattern of courtesy to accept from your comrades even a poisoned bowl with a smiling grace – ANM+2
***
580.He is said to possess the very pink of courtesy and graciousness
Who can drink poison, even seeing it poured in his presence.- S M Diaz,
***
580 They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy. Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.– GUP ***
580.Men of graceful courtesy Take hemlock and look cheerfully. – SB 580
***
580.Men of refined courtesy accept even a cup of poison and look cheerfully calm – EVS Publishers
***
580. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.