Important Upanishad Mantras in English and Devanagari-Part 6 (Post.15,949)

 Written by London Swaminathan

Post No. 15,949

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

36

नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥

nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt |
etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||

4. This Atman cannot he attained by one devoid of strength or by excitement or by tapas devoid of linga. But of the knower who strives with these aids, the Atman enters into the Brahman. MUNDAKOPANISHAD : CHAPTER-3. SECTION-2. MANTRAM-4.

Or

“The  Self  is  not  gained  by  the  weak  ( in  body,  mind,  and  intellect  or  Spirit ),  nor  by  the  insincere,  nor  by  those  practicing  ( unintelligent )  austerities,  but  wise  men  who  strive  with  vigour,  attention  and  prosperity  attain  union  with  Brahmam.”  MUNDAKOPANISHAD : CHAPTER-3. SECTION-2. MANTRAM-4.

****

37

ॐ असतो मा सद्गमय

तमसो मा ज्योतिर्गमय

मृत्योर्मा अमृतं गमय

ॐ शान्तिः शान्तिः शान्तिः

Transliteration

oṃ asato mā sadgamaya

tamaso mā jyotirgamaya

mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad

om  Lead me from the unreal to the real,

Lead me from darkness to light,

Lead me from death to immortality- Brihadaranyaka Upanishad

Or

Asato mā sadgamaya: Lead me from the unreal (illusion) to the real (truth/being).

Tamaso mā jyotirgamaya: Lead me from darkness (ignorance) to light (spiritual knowledge).

Mrityormā’mṛtaṃ gamaya: Lead me from death to immortality (realization of the eternal soul).

****

38

sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃ /

viśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti // 4.14 // Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14),

सूक्ष्मातिसूक्ष्मं कलिलस्य मध्ये विश्वस्य स्रष्टारमनेकरुपम् ।विश्वस्यैकं परिवेष्टितारं ज्ञात्वा शिवं शान्तिमत्यन्तमेति ॥१४॥

Transliteration (IAST)sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃviśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti

Meaning

By realizing Him who is subtler than the subtlest who dwells in the midst of the chaos, who is the Creator of all things and is endowed with many forms, who is the  non-dual Pervader of the universe and all good – by realizing Him one attains the supreme peace. Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14).

****

39

द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥ १ ॥ Mundakopanishad 3-1

dvā suparṇā sayujā sakhāyā samānaṃ vṛkṣaṃ pariṣasvajāte |
tayoranyaḥ pippalaṃ svādvattyanaśnannanyo abhicākaśīti || 1 ||

Mundakopanishad 3-1

1. Two inseparable companions of fine plumage perch on the self-same tree. One of the two feeds on the delicious fruit. The other not tasting of it looks on.

Shankara’s Commentary:

It is here that the Atman, conditioned in the subtle body to which ignorance, desire, karma and their unmanifested tendencies cling, and Isvara are perched like birds. Of these two so perched, one, i.e., kshetrajna occupying the subtle body eats, i.e., tastes from ignorance the fruits of karma marked as happiness and misery, palatable in many and diversified modes; the other, i.e., tbe lord, eternal, pure, intelligent and free in his nature, omniscient and conditioned by maya does not eat; for, lie is the director of both the eater and the thing eaten, by the fact of Ids mere existence as the eternal witness (of all); not tasting, he merely looks on; for, his mere witnessing is direction, as in the case of a king. Mundakopanishad 3-1

Kanchi Paramacharya  (1894-1994) has pointed out that The Bible has taken this story from us.

Jeeve Atma = EVE in Old Testament

Param Atma = ADAM in Old Testament

Left rib = EVE = Ardhanaari (Left is Uma Right is Siva)

****

40

समाने वृक्षे पुरुषो निमग्नोऽनिशया शोचति मुह्यमानः।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥

मुण्डकोपनिषद्तृतीयो मुण्डकःप्रथमः खण्डःVerse २

Samane vrukshe purusho nimagno
Aneeshaya shochati muhyamanah
Jushtam yad pashyatyanyameesham
Asya mahimanamiti veetashokah

—Mundakopanishad 3-1 -2

On the same tree the bird which is involved with the tree on which it sitting is not in command of itself. It is affected by whatever is happening on the tree. It is affected by sorrows because it is caught in the trappings of maya. The bird which identifies with the Lord who transcends everything sees everything around him as his own manifestations and transcends all sorrows.

Or

The soul is the bird that sits immersed on the one common tree; but because he is not lord he is bewildered and has sorrow. But when he sees that other who is the Lord and beloved, he knows that all is His greatness and his sorrow passes away from him.

To be continued…………………..

Tags- Important, Upanishad mantras-6

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- Part 6 (Post.15,948)

Written by London Swaminathan

Post No. 15,948

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

36

நாயமாத்மா பலஹீனேன லேபியா ந ச

ப்ரமாதாத் தபஸோ வாப்யலிங்காத் 

ஏதைருபாயைர்யததே  யஸ்து வித்வான்ஸ்தஸ்யைஷ

ஆத்மா விசதே ப்ரஹ்மதாம    

–முண்டகோபநிஷத் 3-4

இந்த ஆத்மாவானது பலவீனனால் அடையப்படுவதன்று; கவனமின்மையாலும் அடைய முடியாது;  குறிக்கோள் இல்லாத தவத்தாலும் அடைய முடியாது; எந்த அறிவாளி  இதை சரியான வழிகளில் அடைய முயற்ச்சி செய்கிறானோ அவனுக்கு இந்த ஆத்மா கிட்டுகிறது .

नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥

nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt |
etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||

****

37

அஸதோ மா ஸத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

–ப்ருஹத் ஆரண்யக உபநிஷத் 1-3-28

பொய்மையிலிருந்து என்னை மெய்ப்பொருளுக்கு அழைத்துச் செல்; அஞ்ஞான இருளிலிருந்து    என்னை  என்னை ஞான ஒளிக்கு அழைத்துச் செல்; மரணத்தினின்று என்னை மரணமில்லாத நிலைக்கு அழைத்துச் செல்.

ॐ असतो मा सद्गमय

तमसो मा ज्योतिर्गमय

मृत्योर्मा अमृतं गमय

ॐ शान्तिः शान्तिः शान्तिः

Transliteration

oṃ asato mā sadgamaya

tamaso mā jyotirgamaya

mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad

****

38

ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மம் கலிலஸ்ய மத்யே

விச்வஸ்ய ஸ்ரஷ்டாரமநேகரூபம்

விச்வஸ்யையகம் பரிவேஷ்டிதாரம் ஞாத்வா

சிவம் சாந்தி மத்யந்தமேதி

— ஸ்வேதாச் வதத்ரோபநிஷதம் 4-14

சூக்ஷ்மத்திலும் அதி சூக்ஷ்மயிருப்பவனை — நுணுக்கரிய நுண்ணறிவு– பிரளயத்திலிருந்து உலகைப் படைத்தவனை , எண்ணற்ற வடிவங்களை எடுத்திருப்பவனை விஸ்வம் முழுதும் – பிரபஞ்சம் முழுதும்- நிறைந்திருக்கிறவனை , சிவனை, அனுபவத்தில் அறிகிறவன் எல்லையற்ற சாந்தியை அடைகிறான் – உலப்பிலா பேரின்பம் –  அடைகிறான்.

sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃ /

viśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti // 4.14 // Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14),

सूक्ष्मातिसूक्ष्मं कलिलस्य मध्ये विश्वस्य स्रष्टारमनेकरुपम् ।विश्वस्यैकं परिवेष्टितारं ज्ञात्वा शिवं शान्तिमत्यन्तमेति ॥१४॥

Transliteration (IAST)sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃviśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti

****

39

த்வா ஸுபர்ணா  ஸயுஜா ஸகாயாஸமானம்

வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே  

தயோரன்ய:  பிப்பலம் ஸ்வாத்வத்த்யனச்

னன்னன்யோ   அபிசாகசீ தி 

——முண்டகோபநிஷத் 3-1

द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥ १ ॥ Mundakopanishad 3-1

dvā suparṇā sayujā sakhāyā samānaṃ vṛkṣaṃ pariṣasvajāte |
tayoranyaḥ pippalaṃ svādvattyanaśnannanyo abhicākaśīti || 1 ||

Mundakopanishad 3-1

****

40

ஸமானே வ்ருக்ஷே  புருஷோ நிமக்னோ அநீசயா  

சோசதி முஹ்யமான :

ஜுஷ்டம் யதா பச்யத்யன்யமீசமஸ்ய

மஹிமானமிதி வீதசோக:

——முண்டகோபநிஷத் 3-2

அதே மரத்தில் கட்டுப்பட்டுக்கிடப்பவனும் தன்னுடைய மேன்மைமிக்க நிலையை மறந்துவிட்டு அஞ்ஞானத்தில்  மோகத்தில் சிக்கியிருப்பவனும் ஆனஜீவாத்மன்  துயரடைகிறான். பக்தர்களால் போற்றப்படுபவனும் மகிமை வாய்ந்தவனுமாகிய இஷானைப் பார்க்கும்போதெல்லாம் துன்பம் மறைகிறது .

समाने वृक्षे पुरुषो निमग्नोऽनिशया शोचति मुह्यमानः।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥

मुण्डकोपनिषद्तृतीयो मुण्डकःप्रथमः खण्डःVerse २

Samane vrukshe purusho nimagno
Aneeshaya shochati muhyamanah
Jushtam yad pashyatyanyameesham
Asya mahimanamiti veetashokah

—Mundakopanishad 3-1 -2

To be continued…………………..

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள்-6, part 6

ராமாயணத்தில் வரங்கள் (63 – 1) மேகநாதனுக்கு பிரம்மா வரங்களை அளித்தது! (Post.15,947)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,947

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (63 – 1) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கமாக அமைவது ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்றது’ என்ற ஸர்க்கமாகும்.

ராவணனது புத்திரனான மேகநாதனால் எல்லா தேவர்களும் அடிமைப்படுத்தப்பட்டனர். அனைத்து தேவர்களும் பிரம்மாவைச் சந்தித்து எங்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வேண்டினர்.

உடனே பிரம்மா ராவணனிடம் சென்று, “உனது புதல்வனது பராக்ரமத்தால் நான் சந்தோஷம் அடைகிறேன். அவன் இந்திரஜித்து என்று விளங்குவான்” என்றார்.

அயம் ச புத்ரோதிபலஸ்தவ ராவண வீர்யவான்|                       ஜகதீந்திரஜிதித்யேவ பரிக்யாதோ பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 9

ராவண – ராவண                                                       தவ – உனது                                                                    புத்ர: – புதல்வன்                                                            அதிபல: – ஒப்புயர்வில்லாத போர்வீரனாகவும்                                   வீர்யவான் – மகா சாமர்த்தியசாலியாகவும்                                     பரிக்யாத: – பிரசித்தி பெற்று விட்டான்                                 ஜகதி – உலகில்                                                      அயம் ச – இவன்                                                    இந்த்ரஜித் – இந்த்ரஜித் என்று விளங்குவான்

பிரம்மா இப்படிக் கூறி தேவர்களை சுதந்திரமாக விடக் கூறினார்.         உடனே, அங்கிருந்த மேகநாதன் என்னும் இந்த்ரஜித், அவரிடம் “அமரத்வமஹம் தேவ விருணே யத்யேஷ முச்யதே| – தேவ, – தேவ  இவர்கள் சுதந்திரம் பெற வேண்டியது என்கிற பட்சத்தில் என்றைக்கும் மரணமில்லாமை ஒன்றையே நான் வரமாக பிரார்த்திக்கிறேன் “ என்று விண்ணப்பம் செய்தான்.

உடனே பிரம்மா,

“நாஸ்தி சர்வாமரத்வம் இ கஸ்யசித்ப்ராணிநோ புவி |                     சதுஷ்பத: பக்ஷியஸ்ச பூதானாம் வா மஹௌஜஸாம்” என்றார்.

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13

புவி – பூமியில்                                                          சதுஷ்பத – நாற்கால் பிராணிகளுக்கும்                                      பக்ஷிஸ்ச – பறவைகளுக்கும்                                                ப்ராணின ச – மனிதனுக்கும்                                          மஹௌஜஸாம் – மஹா கீர்த்தி பெற்ற                                      பூதானாம் வா – அடியார்களுக்கும் கூட                                  கஸ்யசித் ஹி – ஏதொன்றுக்குமே                                           சர்வாமரத்வம் – எப்போதுமே மரணமின்மை என்பது                          ந அஸ்தி – கிடையாது                                                 

ச்ருத்வா பிதாமஹேனோக்தமிந்த்ரஜித்ப்ரமுணாவ்யயம் |                   அதாப்ரவீத்ச தத்ரஸ்தம் மேகநாதோ மஹாபல: ||

ஸ்ரூயதாம் வா பவேத்சித்தி: ஷதக்ரதுவிமொக்ஷணே ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 16

ச: – அந்த                                                                           மஹாபல: – மஹாபலிஷ்டனாகிய                                        இந்த்ரஜித் – இந்திரனை ஜெயித்த                                           மேகநாத: – மேகநாதன்                                                    ப்ரமுணா – ஸர்வேஸ்வரராகிய                                                   பிதாமஹ – பிரம்மதேவரால்                                                             உக்தம் – திருவாய்மலர்ந்து அருளியதை                                    ச்ருத்வா -கேட்டு                                                          தத்ரஸ்தம் – பிரத்யக்ஷமாயிருக்கின்ற                                   அவ்யயம் – அமோகங்களான வரங்களைத் தருபவராகிய அவரைப் பார்த்து அய – இப்பொழுது இப்படி                                            அப்ரவீத் – விண்ணப்பம் செய்தான்:                                         ஷதக்ருது விமோக்ஷணே – “இந்திரனை விட்டுவிடும் விஷயத்தில்          சித்தி: – காரியசித்தி                                                   பவேத் வா – விளைய வேண்டுமென்றால்                                  ஸ்ரூயதாம் – என் வேண்டுகோளுக்குத் திருச்செவி சாய்ப்பீராக

மமேஷ்டம் நித்யஷோ ஹவ்யைர்மந்த்ரை: சம்பூஜ்ய பாவகம் | சங்க்ராமமவதர்தும் ச சத்ருநிர்ஜயகாங்க்ஷிண: ||

அஸ்வயுக்தோ ரதோ மஹம்துமுத்திஷ்டேத்து விபாவஸோ: |  தத்ஸ்தஸ்யாமரதா ஸ்யான்மே ஏஷ மே நிஸ்சயோ வர: ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 17

சத்ரு நிர்ஜய – சத்துருக்களை வெல்ல வேண்டியவனாய்             சங்க்ராமே – போரை                                                      அவதர்தும் – ஆரம்பிப்பதற்காக                                               பாவகம் – அக்னிபகவானை                                            ஹவ்யை: – ஆஹுதிகளாலும்                                              மந்த்ரை: – மந்திரங்களாலும்                                              நித்யஷ: – இடையூறின்றி                                           சம்பூஜ்ய – ஆராதித்துச் செய்யும்                                           மம – எனது                                                                 இஷ்டம் – வேள்வியில்                                                     அஸ்வயுக்த: – குதிரைகள் பூட்டிய                                        ரத: – ஒரு ரதம்                                                          மஹ்யம் து – எனக்கென்றே                                               உத்திஷ்டேத் – ஆவிர்பவிக்க வேண்டும்                                         விபாவஸோ: – அக்னி பகவானுடையதாகிய                             தத்ஸ்தஸ்ய – அதில் வீற்றிருக்கின்ற                                        மே – எனக்கு                                                                 அமரதா – மரணமின்மை                                                     ஸ்யாத் – வேண்டும்                                                        ஏஷ ச: – இது தான்                                                              மே – என்னுடைய                                                                     நிஸ்சய: – தீர்க்காலோசனை செய்து பிரார்த்திக்கப்பட்டதாகிய              வர: – வரம்

தஸ்மின்யத்யஸமாப்தே ச ஜப்யஹோமே விபாவஸு |                          யுத்யேயம் தேவ சங்க்ராமே ததா மே ஸ்யாத்திநாஷனம் ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 18   

தேவ – தேவரே                                                      விபாவஸௌ – அக்னிபகவானது                                       தஸ்மின் – அந்த                                                       ஜப்யஹோமே ச அஸமாஸே – ஜபங்களும் ஆஹுதிகளும் அடங்கிய வேள்வி பரிபூர்ணமாகாதிருக்கையில்                                                 ததா – அந்த சந்தர்ப்பத்தில்                                            சங்க்ராமே – போரில்                                                   யுத்தேயம் – போர் புரியத் தொடங்குவேன்                                          யதி – ஆகில்                                                             மே – எனக்கு                                                           விநாஷனம் – விநாசம்                                                       ஸ்யாத் – உண்டாகட்டும்

சர்வோ ஹி தபஸா தேவ வ்ருணோத்யமரதாம் புமான் |                        விக்ரமேண மயா ததேதமரத்வம் ப்ரவர்திதம் ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 19

தேவ – தேவரே                                                          சர்வ: – ஒவ்வொரு                                                       புமான் – புருஷனும்                                                       தபஸா ஹி – தவ மஹிமையாலேயே                                            அமரதாம் – அமரனாகுதலை                                                            வ்ருணோதி – வரமாய் வேண்டுகின்றான்                                    மயா து – என்னாலோவென்றால்                                     விக்ரமேண – பராக்கிரம விசேஷத்தால்                                       ஏதத் – அப்படிப்பட்டதாகிய                                                  அமரத்வம் – மரணமின்மை                                                ப்ரவர்திதம் – விஞ்ஞாபனம் செய்யப்பட்டிருக்கிறது

இப்படி இந்திரஜித் பிரம்மாவிடம் வரம் வேண்ட அவரும், ‘ஏவம் அஸ்து’ – ‘அப்படியே ஆகுக’ – என்று வரத்தை அளித்தார்.

இப்படியாக அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு இந்திரஜித் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றதைக் கூறினார்.

யுத்த காண்டத்தில் இந்திரஜித் போரைப் பற்றி வால்மீகி என்ன சொல்கிறார் என்பதை இனி பார்ப்போம்.

**

London Swaminathan’s Article Index for June 2026; Index No.163 (Post No.15,946)

Written by London Swaminathan

Post No. 15,946

Date uploaded in London – 4 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Avvaiyar‘s Sanskrit words; Purananuru wonders-31, Tamil Encyclopedia-71 (Post No.15,833) 5/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 1 (Post.15,890)19/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 2 (Post No.15,895)20/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 3 (Post.15,902)22/6

Important Upanishad Mantras in English and Devanagari- Part 4  (Post.15,923)27/6

Bhagavad Gita and Tamil Statistics! Purananuru wonders 32 ;Tamil Encyclopaedia- 72(Post.15,854)10/6

Astronomy in Ancient Tamil Nadu! Purananuru wonders 33; Tamil Encyclopaedia- 73 (Post No.15,908)23/6

Stars, Planets, Comets, Drones!Purananuru wonders 34; Tamil Encyclopaedia- 74 (24/6)

Upanishad in Sangam Literature; Purananuru wonders 35; Tamil Encyclopaedia- 75 (Post No.15,924)27/6

Valmiki, Markandeya, Brahmachari in Purananuru! wonders-36, Tamil Encyclopedia-76 (Post 15,931)30/6

Ornaments in Kalidasa Works; Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 3 (Post.15,875) 15/6

Jewellery in Kamasutra: Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 4 (Post No.15,879)16/6

Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5

Humility and Sweet Speech: Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 91-95) Post.15,815 (1-6-2026)

Dravidians Exposed! Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 96-100) Post 15,826 (3-6-26)

Gratitude: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 101-105) Post.15,851 (9/6)

Manu, Valmiki Ramayana slokas and Seven Births: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 106-110) Post.15,855 (10/6)

Tirukkural Encyclopaedia- Chapter 12 (Kural 111-115) Post No.15,891)19/6

Part-24: Tirukkural Encyclopaedia- Chapter 12 (Kural 116-120) Post.15,896 (20/6)

Ancient Hindu Jewellery: You can get Ph.D.- part 1(Post No.15,867) 13/6

Brahmin Gotras on Tamil Inscriptions (Post.15,862) 12/6

Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5 (Post15,885)18/6

July 2026 Calendar with Golden Sayings from Kamba Ramayana (Post No.15,929) 29/6

Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom! (Post No.15,904) 22/6

London Swaminathan’s Article Index for May 2026; Index No.162 (Post No.15,839)6/6

Madurai Mystery: Can You Solve it? (Post No.15,820)2/6

Morning Prayer – Pratas Smaranam (Post.15,863)12/6

Names of 9 Planets, 27 Stars, 12 Zodiac Signs in English and Indian Languages (Post No.15,822)2/6

Oldest Skanda -Kartikeya- Murugan Coins! (Post No.15,900) 21/6

Tamil Wonder! Ancient Hindu Jewellery! You can get Ph.D.- part 2 (Post.15,871) 14/6

Were there Dravidians in India at any time? (Post No.15,847)8/6

You can also become an Elephant Man! (Post No.15,858) 11/6

********************

லண்டன் சுவாமிநாதனின் தமிழ்க் கட்டுரைகள்

மதுரையில் ஒரு மர்மப் பெண்ணின் சிலை! புதிரை விடுவிக்க வாருங்கள்! (Post.15,814) 1/6/26

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 1 (Post.15,899) 19/6

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 2 (Post.15,894)20/6

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 3 (Post No.15,903)22/6

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 4 (Post No.15,922)27/6

அந்தணர் என்பவர் பிராமணாள்தான்! சந்தேகமே வேண்டாம்!! -பூதன் சேந்தன் புத்திமதி (Post.15,832) 5/6

மிகப்பழைய முருகன்- கந்தன் -ஷண்முகன் நாணயம்! (Post.15,899) 21/6

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1 (Post.15,866) 13/6

கம்ப ராமாயண பொன்மொழிகள்- ஜூலை 2026 காலண்டர் 28/6

கர்நாடகத்தில் இசை பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! (Post.15,819) 2/6

கற்புக்கரசி இந்திராணியும் நஹுஷன் கதையும்! நம்ம ஊர்ப் பெண்களுக்கும் புத்திமதி! (Post .15,837) 6/6

சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரில் புஸ்தகம்! புஸ்தகப் பிரியர்கள் இரண்டு வகை! (Post.15,841) 7/6

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843) 7/6

நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடகக் கம்பெனிகளும், தமிழ் நாடகங்களும் (Post.15,838) 6/6

புறநானூறு புள்ளி விவரங்கள் ! -1(Post No.15,911) 24/6

தமிழ் அதிசயம்! சிலப்பதிகாரத்தில் ஆபரணங்கள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 2 (15,870)14/6

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 3 காளிதாசன் நூல்களில் ஆபரணங்கள்! (Post.15,874)15/6

சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள், நகைகள்!

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 4 (Post.15,877)16/6

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும் (Post.15,882)17/6

****

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-41; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post 15,813)

1/6/26- திருவித்துவக்கோடு 

2/6/26 திருவல்லா

3/6/26 திருவண்பரிசாரம் / திருப்பதிசாரம்

4/6/26 திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)

5/6/26 திருநாவாய்

6/6 திருவாறன்விளை, கேரளம்

7/6 part 47 அஹோபிலம்

8/6 திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

9/6 திருத்தண்கால் (திருத்தங்கல்)

10/6 ஸ்ரீரங்கம் திருவரங்கம்

11/6 மதுரை கூடல் அழகர் கோயில்

12/6 தஞ்சசையாளி நகர்

13/6 திருநாகை

14/ 6 திருவாலி 

15/6 சிறுபுலியூர்

16/ 6 காஞ்சீபுரம் திவ்ய தேசங்கள்

17/6 கோவிலடி

18/6 கண்டமெனும் கடிநகர் / தேவப்பிரயாகை

19/6 நைமிசாரண்யம்

20/6 அயோத்தி

21/6 பத்ரிநாத்

22/6 வட மதுரை (மதுரா)

23/6 கோகுலம்/  திருவாய்ப்பாடி

24/6 துவாரகா

25/6 ஜோஷிமத், திருப்பிரிதி

26/6 பரமபதம்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் முடிவுரை (Post.15,919)

****

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 67; இந்து மத கலைச்சொல் அகராதி-67 (Post No.15,814) 1/6/2026

Parts  68, 69, 70, 71, 72, 73, 74

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 75; இந்து மத கலைச்சொல் அகராதி- 75 (Post.15,928)29/6

–subham—

Tags- London Swaminathan’s Article Index for June 2026; Index No.163, லண்டன் சுவாமிநாதன், தமிழ்க் கட்டுரைகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 77; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 (Post.15,945)

Written by London Swaminathan

Post No. 15,945

Date uploaded in London – 4 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

WORDS BEGINNING WITH “P”

பைலர் – வேத வியாசரின் நான்கு சீடர்களில் ஒருவர் பைலர்; இவருக்கு ரிக்வேதத்தைக் கற்பித்து அதைப் பரப்பும் பொறுப்பினை வேத வியாசர் வழங்கினார் . ஏனைய மூன்று சீடர்கள் சுமந்து, ஜைமினி, வைஸம்பாயான ஆவர்.  பைலர்  (पैल) ரிக் வேதத்தை,  இந்திரப்ரமதி, பாஸ்கலயென்ற இருவருக்கு ஓதுவித்தார்;    யுதிஷ்த்திரர் நடத்திய ராஜ சூய யாகத்துக்குப் பைலர் வந்த செய்தியை மஹாபாரதம் நமக்குத் தெரிவிக்கிறது .

***

பாஞ்சாலம் – தற்போது பஞ்சாப்என்று  பெயர் ; பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் ஓடும் பிரதேசம் என்று பொருள் .

***

பாஞ்சாலி – திரௌபதியின் பெயர் ;  பாஞ்சாலத்தை ஆண்ட துருபதனின் புதல்வி என்பதால் திரௌபதி என்றும் அழைக்கப்பட்டாள் ; அவள் பேரழகி , ஆனால் கறுப்பி; அதனால் கிருஷ்ணா என்றும் பெயர் .

***

பஞ்சதந்திரம்  – விஷ்ணு சர்மா என்ற பிராமணன், சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நூல் பஞ்சதந்திரம் ஆகும் . பறவைகளையும் விலங்குகளையும் பயன்படுத்தி அரசிளங்குமாரர்களுக்கு நீதி நெறிகளையும், ஆட்சி செய்யும் முறையையும் விளக்கிய நூல் இது சுலோகத்துக்கு சுலோகம் ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் நிறைந்தது .2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நூலை பாரசீக மொழியில்1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்ததால் உலகம் முழுதும் பரவியது.

ஐந்து தந்திரங்கள் பெயர்களும் அர்த்தமும் :

1.மித்ர-பேதம்  – நண்பர்களுக்கு இடையே  சண்டையை உருவாக்குதல் ;

2.மித்ர-லாபம் – நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல்;

3.காகோலுகியம்– காகம் + உலூகம்= காகத்துக்கு ஆந்தைக்கும் இடையே வளர்ந்த பகைமை ;  

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது- 471 என்று வள்ளுவரும் இதை மொழிபெயர்த்துள்ளார்.

4.லப்தப்பிரநாசம் –  கிடைத்ததை இழத்தல்;

5.அபரீக்ஷிதாகாரகம் –  பதறாத காரியம் சிதறாது

பல குறள்கள், பஞ்ச தந்திரக் கதைகளின் எதிரொலி என்பதை எனது ஆராய்ச்சிக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

***

பாண்டவர்கள் : பாண்டுவின் ஐந்து (பஞ்ச) புதல்வர்கள் ; யுதிஷ்டிரன் , பீமன், அர்ஜுனன் என்ற முதல் மூவர் குந்தி மூலமும் நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர் மாத்ரி மூலமும் பிறந்தார்கள். 13 ஆண்டு வனவாசத்துக்குப் பின்னர் கெளரவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று ஹஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்தார்கள் ; இதை உலகப் புகழ்பெற்ற மஹாபாரதம் சம்ஸ்க்ருத மொழியில் ஒரு லட்சம் ஸ்லோகங்களில் வருணிக்கிறது.

***

பாண்டியர்:  தென் தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன் ஆளத்  துவங்கினார்கள். மதுரையை முஸ்லிம்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றியதோடு  பாண்டியர்கள் மறைந்தனர் ; பின்னர் விஜய நகரப்பேரரசர்கள் மதுரையைக் கைப்பற்றி இந்து ஆட்சியை நிறுவினார்கள் .  அகஸ்திய மஹரிஷியோடு தொடர்புபடுத்தி, காளிதாசன் குறிப்பிட்ட ஒரே தமிழ் மன்னர் பாண்டியர்தான்! இவர்களிலு    மிகப்  பழைய  மன்னரான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (மீனாட்சி சுந்தரேஸ்வரர் ) கோவிலை வலம் வந்ததை புறநானூறு பாடுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழை வளர்த்தார்கள். முத்துக்கள் மூலமும் தமிழ் மொழி மூலமும் உலகப் புகழ்பெற்றார்கள்.

***

பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் என்ற மன்னர் இறந்த பின்னர் அவருடைய மனைவி அம்பாலிகா மூலம் வியாஸருக்குப் பிள்ளையாகப் பிறந்தார் ; அந்தக்காலத்தில் ஆட்சி செய்ய முறையான அரச குமாரன் இல்லாவிடில் ஒரு ரிஷி மூலம்  குழந்தையைப் பெறும் முறை இருந்ததால் அம்பாலிகாவும் வியாசரும் இணைந்தனர் ; பிறக்கும் போதே பாண்டு ரோகத்துடன் பிறந்தார்; அவருடைய அண்ணன் திருத்த ராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால்  ஹஸ்தினாபுரத்தின் அரசுக் கட்டில் ஏறினார் ; குந்தி, மாத்ரி என்ற இரண்டு அரசிளங் குமரிகளை மணந்தார். 

ஒரு முறை பாண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்; இரண்டு மான்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டபோது அதன் மீது அம்புகளை எய்தார்; ஆனால் அவை மான்கள் அல்ல; மான் தோல் போர்த்திய கிண்டம ரிஷியும் அவருடைய மனைவியும் ஆவர்; சாகும்போது கிண்டம ரிஷி ஒரு சாபம் போட்டார்; நீ கலவி இன்பத்தில் ஈடுபட்டால் அன்றே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று சாபம்  கொடுத்தார் ; ஆண்டுகள் பல உருண்டோடின ; ஒரு வசந்த காலத்தில் காம உணர்வு மேம்படவே மாத்ரி யை நெருங்கினார் பாண்டு; மாரடைப்பில் இறந்தார்; தன்னால்தானே இந்த மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வு மேம்படவே மாத்ரி, தனது இரண்டு புதல்வர்களைக் குந்தி தேவியிடம் ஒப்படைத்துவிட்டுத் தீப்பாய்ந்து உயிர்விட்டார்  (இதே போல பூதப் பாண்டியன் தேவியும் தீப்பாய்ந்து கணவன் சிதையில் எரிந்த செய்தி புறநானுற்றில் உள்ளது.

***

பண்டிட்/ பண்டிதர்

சம்ஸ்க்ருத மொழி அல்லது அதிலுள்ள நூல்களைக் கற்ற சான்றோனுக்கு பண்டிட் என்று பொருள் ; காஷமீர் மாநிலத்தில் பிராமணர்களை பண்டிட் என்பார்கள் ; இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பண்டிட் வம்சத்தில் பிறந்தவர் ; ஆயினும் பிராமணராக வாழவில்லை .

***

பாணினி- உலகத்தின் முதல் இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதி அஷ்டாத்யாயி – எட்டு அத்தியாயங்கள் – என்று பெயர் சூட்டினார் ; உலகம் வியக்கும் வண்ணம், மிகச் சுருக்கமாக நாலாயிரம் சூத்திரங்களில் இலக்கணத்தைச் செப்பினார் ; இவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கோட்ஸ்டக்கர் என்ற அறிஞர் காரணங்களுடன் அற்புதமாக விளக்கினார் ; அவருடைய நூலில்  புத்த மதச் சுவடே இல்லை என்பதால் புத்தர் காலத்துக்கு முந்தியவர் என்பது தெளிவு ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திர முறை இவரால் பரவியது .தற்கால பாக்கிஸ்தானில்  உள்ள சாலத்துராவில் பிறந்தார் இவருக்குப் பல நூற்றாண்டு களுக்குப் பின்னர் வந்த பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்யம் என்ற விரிவுரை எழுதி – வியாக்கியானம் செய்து-  பாணினியின் புகழைப் பரப்பினார். ஒரு மொழியை விஞ்ஞான முறையில் அணுகிய முதல்வர் பாணினி . இவர்கள் இருவருக்குமிடையே வாழ்ந்த காத்யாயன வரருசி என்பவர் சில குறிப்புகளை எழுதியதால் மூவரையும் முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்று அறிஞர்கள் போற்றுவர்

வாக்யகாரம் வரருசிம், பாஷ்யகாரம் பதஞ்சலிம்

பாணிணீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மீ முனித்ரயம்

–என்று துதித்து சம்ஸ்க்ருத மாணவர்கள் பாடத்தைத் துவங்குவார்கள்;  பாணினி தனக்கு முன்னர் வாழ்ந்த பல இலக்கண கர்த்தாக்களைக் குறிப்பிடுகிறார்; அவர்களது நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ; இலக்கியமின்றேல் இலக்கணமில்லை என்பது தமிழ்ச் சான்றோர்களின் கண்டுபிடிப்பு; ஆகையால் பாணினிக்கு முன்னர் பிரமாண்டமான சம்ஸ்க்ருத இலக்கியம் இருந்திருக்க வேண்டும்! அத்தனையும் அழிந்து போயிற்று ; அவர் வேத கால இலக்கியத்துக்கும் தமது கால இலக்கியத்துக்கும் உள்ள வேறு பாடுகளையும் சுட்டிக்காட்டுவதால் புத்தரின் காலத்துக்கு முன்னர் மிகப்பெரிய சம்ஸ்க்ருத நூல்கள் இருந்தன என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

உபவர்ஷ, பராசர்ய, கரமாண்ட, சாகடயான, அபிதலி , சாகல்ய   முதலிய இலக்கண வித்தகர்களின் பெயர்களை பாணினி குறிப்பிடுவதால் அவருக்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்ததை அறிய முடிகிறது.

அஷ்டாத்யாயி நூலினை நன்றாகக் கற்ற ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பொற்காசுகளைத் தருவதாக காஷ்மீர் மன்னர் அறிவித்தைதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நமக்கு எடுத்துரைக்கிறது .

***

பராசரர்

(पराशर) முனிவர் பராசரர், சக்தி என்பவரின் புதல்வர்; வசிஷ்டர்-அருந்ததி ஆகியோரின் பேரர்;  பராசரரின் தாயாருக்கு அத்ருச்யந்தி, மத்ஸ்யவதி/ மீனவச்சி, , சத்யவதி என்று பல பெயர்கள் உள்ளன.

லட்சக் கணக்கான இந்துக்கள் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்கிறார்கள்; இந்துக்கள் ஜீனியாலஜி GENEOLOGY எனப்படும் வம்ச பரம்பரை இயலில் வல்லவர்கள் என்பதால் தினமும் வியாசரின் வம்ச பரம்பரையைச் சொல்வர் ; பராசரரின் புதல்வர் வியாசர் .

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம். ( வசிஷ்டரின் கொள்ளு பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புதல்வரும், சுகரின் தந்தையுமான வியாசரை வணங்குகிறேன்.)

***

பாரிஜாத மலர்

நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.

அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .

நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார்

நாரதர் சொன்னார்: ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம 

சத்யபாமா சொன்னார்: அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார். சத்யபாமா கோபமாக இருப்பதை அறிந்த கிருஷ்ணன், காரணத்தை விசாரித்து அறிந்தார். பாரிஜாத மரத்தைக்கொண்டு   வருவதாக வாக்கு கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்

இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.

கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார் இந்திரன்,   .

கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.

கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.

இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள  மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

****

பரீக்ஷித் மன்னர்

அபிமன்யு இறந்த பின்னர் அவருக்குப் பிறந்தவர் பரீக்ஷித் ; உத்தராவின் கர்ப்பத்தில் பரீக்ஷித் இருந்தபோது அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரம் என்னும் அணு ஆயுதத்தை ஏவினார்; இது உத்தராவின் கர்ப்பத்தைத் தாக்காமல் இருப்பதற்கு கிருஷ்ணர் ஏற்பாடு செய்தார் ; பின்னர் பிறந்த பரீட்சித் பாண்டவ வம்ச ஆட்சியை நீடித்தார்

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு

அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

***

இதற்கு முன் நடந்த சம்பவமே நாகர்- யாதவர் மோதலுக்கு காரணமாக அமைந்தது ; அந்தக் கதை பின் வருமாறு:

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

மய தானவன் தென் அமெரிக்காவுக்குள் குடியேறி மாயா நாகரீகத்தை ஸ்தாபித்தான்.

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 , பரீக்ஷித், பைலர், பஞ்சதந்திரம், பாணினி, பாரிஜாத மலர்

–subham—

புகழ் பெற்ற மருத்துவப் பொன்மொழிகள்! (Post.15,944)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,944

Date uploaded in London – 4 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

July 1 National Doctors’ day  மருத்துவர் தினம் 

1-7-2026 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள பொன்மொழிகள்! 

புகழ் பெற்ற மருத்துவப் பொன்மொழிகள்!

ச. நாகராஜன் 

மக்களிடம் டாக்டர்களின் முதல் கடமை எப்படி வியாதிக்கு உள்ளாகாமல் இருப்பது என்பதை போதிப்பது தான். டாக்டர் என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து பிறந்தது. இதன் அர்த்தம் போதிப்பவர் என்பது தான்!

–          பிரபல அமெரிக்க டாக்டரான ஆண்ட்ரூ வெய்ல்

 ஒரு மருத்துவராக ஒருவருடைய வேலை என்னவெனில் நல்ல உறுதிமொழியை அளிப்பது தான். அதை விட முக்கியம் தான் கொடுத்த உறுதிமொழியை அவர் காப்பாற்றுவது தான்.

–          ஐரிஷ் பெண்மணியான டாக்டர் பிக்ஸி மக்கென்னா. டி.வி.

நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். டாகுமெண்டரி தயாரிப்பாளர் 

 எவ்வளவு வயதாகியிருந்தாலும் சரி, எவ்வளவு எடையைக் கொண்டிருந்தாலும் சரி, இப்பொழுதும் கூட நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கட்டுப்படுத்தலாம்.

–          அமெரிக்க நியூரோ சர்ஜன் ஹார்வி குஷிங். மூளை அறுவை சிகிச்சையில் பெயர் பெற்றவர்.

 உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அறிவு சரியாக வெளிப்படாது, பலத்தால் சண்டை போட முடியாது, நுண்ணறிவைப் பயன்படுத்த முடியாது, கலை உருவாகாது, பணம் பயனற்ற ஒன்றாக இருக்கும்.

–          கிரேக்க மருத்துவரான ஹிரோபிலிஸ். பண்டைய நாட்களில் கிரேக்கத்தில் பிரபலமான மருத்துவர்.

 மருத்துவத்தில் இறுதி நிலையாக நாம் அடைய வேண்டியது மன நல மருத்துவம் தான். ஏராளமானோர் தனிமையில் வாடுகிறார்கள். ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆதரவின்றி இருக்கிறார்கள். மீள முடியாமல் சமாளிக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

–          பிரிட்டிஷ் டி.வி. டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸன் மனநல மருத்துவம் பற்றி எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் பெற்றவர்.

 வியாதியைப் பரிசோதிக்கும் போது நாம் உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிரியல் பற்றி நல்ல அறிவைப் பெறுகிறோம். நோயாளியைப் பரிசோதிக்கும் போது வாழ்க்கையைப் பற்றிய அறிவைப் பெறுகிறோம்.

                               – ஆலிவர் சாக்ஸ் நியூரோ சர்ஜன்

ஒரு டாக்டராகட்டும் அல்லது எந்த மனிதராகட்டும் அவரது முதல் குறிக்கோள் நோயாளியின் மரணத்தைத் தள்ளிப் போடுவதாக மட்டும் இருக்கக் கூடாது, ஆனால் அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

–          அமெரிக்க டாக்டரான பாட்ச் ஆடம்ஸ் (இவரது பெயரிலேயே இந்த வசனம் ராபின்ஸ் வில்லியம்ஸ் வாயிலாக திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது)

நல்ல டாக்டர் குறைந்த மருந்துகளையே அளிப்பார்.

                – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 

எங்கே மருத்துவம் விரும்பப்படுகிறதோ அங்கே மனித குலத்தின் மீதான அன்பும் இருக்கிறது.

                       – ஹிப்போக்ரேடஸ் 

ஒரு நல்ல மருத்துவர் வியாதியைக் குணப்படுத்துவார். ஆனால் ஆகப்பெரிய மருத்துவரோ வியாதியுள்ள நோயாளியைக் குணப்படுத்துவார்.

                         – வில்லியம் ஆஸ்லர் 

ஒருவர் உயிரைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு ஹீரோ. நூறு பேர்களைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு நர்ஸ்

                       – யாரோ 

மருத்துவ உலகின் இதயம் நர்ஸ்களே

                        – டோனா வில்க் கார்டில்லோ 

நன்கு உற்று கவனிப்பது, பகுத்தறிவால் ஆராய்வது, மனிதத்தன்மையைப் புரிந்து கொள்வது, தைரியம் – இவையே ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும்.

                          – மார்டின் ஹெச். பிஷர் 

மருத்துவத்தின் நோக்கம் வியாதியைக் குணப்படுத்தி நீடித்த வாழ்வைத் தருவது தான். ஆனால் மருத்துவத்தின் இறுதி லட்சியம் ஒரு மருத்துவரின் தேவையை இல்லாமல் செய்வது தான்!

                  –  வில்லியம் ஜே. மாயோ 

மருத்துவ உலகில் ஒரு டாக்டருக்குக் கிடைக்கும் சிறந்த பரிசு நோயாளியின் நன்றியும் அவரது புன்சிரிப்பும் தான் \

                         – யாரோ 

பச்யேம சரத சதம் – (சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம்)

ஜீவேம சரத சதம் – (நூறாண்டு வாழ்வோம்)

நந்தாம சரத சதம் – (நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்)

மோதாம சரத சதம் – (நூறாண்டு மகிழ்வோம்)

பவாம சரத சதம் – (நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம்)

ச்ருணவாம சரத சதம் – (நூறாண்டு இனியதைக் கேட்போம்)

ப்ரப்ரவாம சரத சதம் – (நூறாண்டு இனியதையே பேசுவோம்)

அஜீதாஸ்யாம சரத சதம் – (நூறாண்டும் தீமைகளால் ஜபிக்கப்படாதவர்களாகவே வாழ்வோம்)

ஜ்யோக்ஸ சூர்யம் த்ருசே – இப்படியாக நூறாண்டு காலம் சூரியனைப் பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.

–          தினந்தோறும் கூறப்படும் வேதத்தில் உள்ள சூரிய துதி

 ***

அய்யர்வாள் காலும் புனிதம்! பிள்ளைவாள்  கையும் புனிதம்! (Post No.15,943)

Written by London Swaminathan

Post No. 15,943

Date uploaded in London – 3 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செங்கல்வராய   பிள்ளை — உ வே சா சந்திப்பு 

தமிழ் அறிஞர் செங்கல்வராய பிள்ளை,  மிகப்பெரிய தமிழ் அறிஞர்  உ வே சாமிநாத ஐயரைச் சந்தித்தார் . முருகன் பற்றிய நூல்களைக் கொடுத்தார். அவைகளை வாங்கிக்கொண்ட அவர், பிள்ளைவாளின் கைகளைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார் ; ஒரு பிராமணன் இப்படிச் செய்கிறாரே என்று பிள்ளைவாளுக்கு ஒரே ஷாக் ! ஏது செய்வதென்று ஒரே திகைப்பு ; வெளியே போய்க்கொண்டே இருந்த போது, ஒரு ஐடியா பிளாஷ் ஆனது ; திரும்பி வந்தார்; உ வே சா வின் கால்களைத் தொட்டுக்கண்களில் ஒற்றிக்கொண்டார். இப்போது அய்யர்வாளுக்கு பெரிய ஷாக் ; அவர்களிடையே நடந்த சம்பாஷணையை தினமணியில் இரு முறை படித்த பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் paper cutting-ஐ  வெளியே எறியப்போகும் முன், அந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Please see the paper cutting

–subham—

Tags- அய்யர்வாள் காலும் புனிதம், பிள்ளைவாள்  கையும் புனிதம்,  செங்கல்வராய   பிள்ளை உ வே சா சந்திப்பு 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 21 (Post No.15,942)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,942

Date uploaded in London –   3 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 21

(ஆர், சேஷாத்ரிநாதன்)

இராமன் மேலும் சொல்கிறான் “எல்லோரும் என்னைப் பார பக்ஷம் பார்க்காதவன் என்று சொல்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்குக் காட்டாத பரிவு அடியார்களுக்குக் காட்டுகிறவன் நான்.இவ்விஷயத்தில் நான்  பாரபட்சம் பார்ப்பவன். ஏனென்றால் அடியார்கள் என்னையே சரணடைந்தவர்கள். மற்றவர்கள் உதவியை நாடாதவர்கள்.. ஆஞ்சநேயா! எவன் அண்ட சராசரங்களை ஆண்டவனாகவும்,  தன்னை அவைகளின் சேவனாகவும் கருதி நெறி பிறழாமல் தொண்டாற்றி வருகின்றானோ  அவனே என் சேவகன் என்பதைத் தெரிந்து கொள்”.

“நீயும் “நான் இராம சேவகன்.  அசையா அசையும் பொருட்கள் நிறைந்த இந்த உலகம் முழுவதும் பகவத் ஸ்வரூபத்துடன் எனது உருவமாக விளங்குகிறது என்று நினைக்கிறாய். என்னை அடைந்த பக்தர்களிடமும்  சராசர மயமான  இந்த உலகத்தில் நீ எல்லோருடனும் கருணையுடன் இருக்கிறாய். ஆகையால் ஆஞ்சநேயா! நீ  வானரனாக இருந்தபோதிலும்  என் ஸ்வரூபம்தான். அதனால் நான் உன்னை நிராகரித்துவிட முடியாது” என்று கூறினார்  பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆஞ்சநேயர்  பெரு மகிழ்ச்சி உற்றார். துக்கம் அவரை விட்டு விலகியது.

இராமன் தன்னை समदरसी என்று சொல்கிறார். அதாவது பாரபக்ஷம் பார்க்காதவன் என்று சொல்கிறான். இதற்கு சமமான சுலோகம் ஒன்று பகவத் கீதையில் உள்ளது.

समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय: |

ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् || 29

நான் எல்லா உயிர்களிடத்திலும் சமமாக இருக்கிறேன்.அனால் யாரிடமும் வெறுப்பைக் காட்டுவதில்லை. யாரிடமும் பாரபட்சமாக இருப்பதில்லை. ஆனால் என்னை அன்புடன் வழிபடும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள்.நான் அவர்களில் வசிக்கிறேன்.

கீதையின் கண்ணனின் கூற்று

समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय: |

ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् || 29||

நான் எல்லா உயிர்களிடமும் சமமானவன்.

எனக்கு யாரும் வெறுப்புக்குரியவர்களாகவோ,

யாரும் மிகவும் விருப்பமானவர்களாகவோ இல்லை.

ஆனால், யார் என்னை பக்தியுடன் வழிபடுகிறார்களோ,

அவர்கள் என்னுள் இருக்கிறார்கள்,

நானும் அவர்களுள் இருக்கிறேன்.

எல்லா உயிரும் எனக்கே சமம் –

எவரும் எனக்குப் பகை இல்லை!

யாரும் எனக்குப் பிரியம் இல்லை –

பக்தி கொண்டவனே எனக்குள் வாழ்கிறான்!

பக்தி எனும் தீபம் எரிந்தவுடன் –
பகவான் நெஞ்சத்தில் புகுந்துவிடுவான்!
பக்தன் உள்ளத்தில் பரந்தவுடன் –
பரமன் உள்ளத்தில் நிழலாகுவான்!

சமம் என்பது பார்வையின் நெறி –
பக்தி என்பது பாசத்தின் நெறி!
பகவான் எல்லோரிடமும் சமம் –
ஆனால் பக்தனிடம் பாசம்!

நீ என்னை நேசித்தால் –
நான் உன்னுள் வாழ்வேன்!
நீ என்னை உணர்ந்தால் –
நான் உன்னில் ஒளிர்வேன்!

பாகவதத்தில் இராமன் சொல்வதாவது

नाहमात्मानमाशासे मद्भक्तै: साधुभिर्विना ।

श्रियं चात्यन्तिकीं ब्रह्मन् येषां गतिरहं परा ॥ ६४ ॥

நான் என்னைத் தனியாக விரும்புவதில்லை,

என் பக்தர்களும் சத்புருஷர்களும் இல்லாமல்.

அவர்கள், யாருடைய இறுதி இலக்காக நான் இருக்கிறேனோ,

அவர்களுடன் மட்டுமே நான் பரம சிரியை (மிக உயர்ந்த செல்வம்) அனுபவிக்க விரும்புகிறேன்.

O best of the brāhmaṇas, without saintly persons for whom I am the only destination, I do not desire to enjoy My transcendental bliss and My supreme opulences.

The Supreme Personality of Godhead is self-sufficient, but to enjoy His transcendental bliss He requires the cooperation of His devotees. In Vṛndāvana, for example, although Lord Kṛṣṇa is full in Himself, He wants the cooperation of His devotees like the cowherd boys and the gopīs to increase His transcendental bliss. Such pure devotees, who can increase the pleasure potency of the Supreme Personality of Godhead, are certainly most dear to Him. Not only does the Supreme Personality of Godhead enjoy the company of His devotees, but because He is unlimited He wants to increase His devotees unlimitedly. Thus, He descends to the material world to induce the nondevotees and rebellious living entities to return home, back to Godhead. He requests them to surrender unto Him because, unlimited as He is, He wants to increase His devotees unlimitedly. The Kṛṣṇa consciousness movement is an attempt to increase the number of pure devotees of the Supreme Lord more and more. It is certain that a devotee who helps in this endeavor to satisfy the Supreme Personality of Godhead becomes indirectly a controller of the Supreme Lord. Although the Supreme Lord is full in six opulences, He does not feel transcendental bliss without His devotees. An example that may be cited in this regard is that if a very rich man does not have sons in a family he does not feel happiness. Indeed, sometimes a rich man adopts a son to complete his happiness. The science of transcendental bliss is known to the pure devotee. Therefore the pure devotee is always engaged in increasing the transcendental happiness of the Lord.

இதை இராம சரித மானசிலும்(சுந்தர காண்டம்) இராமன் சொல்லுவதாக துளசி தாசர் சொல்கிறார்

जननी जनक बंधु सुत दारा ।  तनु धनु भवन सुहृदु परिवारा।

सब कर ममता ताग बटोरी  ।     मम पद मनहिं बाँधि बर डोरी।

समदरसी इच्छा कछु नाहीं। हरष सोक भय नहिं मन माहीं॥3॥

अस सज्जन मम उर बस कैसें। लोभी हृदयँ बसइ धनु जैसें॥

तुम्ह सारिखे संत प्रिय मोरें। धरउँ देह नहिं आन निहोरें॥4॥

தாய் தந்தை, பிள்ளை, துணைவி –

தானும், வீடும், செல்வமும்!

உறவுகள் எல்லாம் விலக்கினேன் –

உன் பாதத்தில் மனம் பிணைத்தேன்!

சமம் எனும் பார்வை எனக்குள் –

சஞ்சலமில்லை, ஆசை இல்லை!

சோகம், சந்தோஷம், பயமில்லை –

சதாசிவம் எனும் நிலைதான்!

பக்தன் எனில் உன் உள்ளத்தில் –

பரமன் எனில் பக்தன் உள்ளத்தில்!

ஆசை கொண்டவன் செல்வத்தில் வாழ்வான் –

ஆசை இல்லாதவன் உன்னில் வாழ்வான்!

இராமன் தனது பக்தர்களுக்குச் சொல்லிகொள்வது  “நீ தாய் தந்தை மனைவி குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்து, மோகத்தை விட்டு உனது மனத்தை எனது பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடு. பேராசை கொண்டவனின் இதயத்தில் உள்ள செல்வப்பற்று போல  அத்தகைய பக்தர்கள் எனது இதயத்தில் தங்கிவிடுகின்றனர். அத்தகையவர்கள் மட்டுமே எனக்குப் பிரியமானவர்கள். நசன் எவருடைய தயவுக்கும் கட்டுப்பட்டு அவதரிப்பதில்லை”

                          **                             தொடரும்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 (Post.15,941)

Written by London Swaminathan

Post No. 15,941

Date uploaded in London – 3 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

WORDS BEGINNING WITH “P”

Paila- one of the four disciples of Veda Vyasa. The other three are Sumantu, Jaimini and Vaiśampāyana. Paila (पैल) was taught Ṛig Veda; Bahvṛca (Ṛig Veda). He taught it to Indrapramati and to Bāṣkala; Paila was invited for the Rājasūya of Yudhiṣṭhira.

***

Panchalam – paanchaalam-  Modern Punjab; Land of Five Rivers

Panchali -paanchaali- Draupadi; daughter of Drupada who ruled Punjab.

***

Panchatantra – 2000 year old animal stories/ fables of India written by Vishnusarma in Sanskrit . it has five principles taught to princes for a successful rule. It was translated into Persian and then spread throughout the world. It has thousands of quotations on ethics. The five principles are

Book 1 – Mitra-bheda (on causing dissention among friends)

Book 2 – Mitra-lābha ( The Winning of Friends)

Book 3 – Kākolūkīyam (Story of Crows and Owls)

Book 4 – Labdhapraṇāśam (On losing what you have gained)

Book 5 – Aparīkṣitakārakaṃ ( On hasty Actions)

The tales highlight themes of cleverness, the consequences of actions, and various life truths, making Panchatantra a significant influence on storytelling traditions, and serving as a source for adaptations in children’s literature.

Its adaptation is known as Stories of Bidpai. Fables of Bidpai is a collection of moral tales that use animal characters to convey important lessons. These stories are part of a tradition that includes the famous work Kalila wa-Dimna, emphasizing the timeless nature of storytelling in imparting wisdom.

***

Pandava – paandava –

The five sons of king Pandu of Hastinapura are called Pancha Pandavas. They are

Yudhisthira – in Tamil Dharman.

Bhima – in Tamil Veeman

Arjuna –

They were born to Kunti.

Nakula – twin brother ; born to Maadri.

Sahadeva -twin brother ; born to Maadri.

They fought with their cousins Kauravas after 13-year banishment to forest and won the kingdom. The full story is in the longest epic in the world called Mahabharata.

***

Pandya – paandya – Rulers of South Tamil Nadu from third century BCE. They were the patrons of Tamil language. There were three Tamil Sangams (Tamil Academies) during their rule. Their association with Agastya Rishi is mentioned by Kalidasa, the greatest poet of India. They ruled from Madurai until 13th century CE when the Muslims invaded Madurai. After Muslim’s capture of Madurai, Vijayanagara rulers invaded Madurai and dethroned them.

***

Pandu- paandu-

Father of five Pandavas. He was born to king Vichitravirya’s widow Ambalika through Vyasa. As his older brother Dhritarashtra was born blind, he ruled the kingdom from Hastinapura . He married Kunti and Madri ; once he went to the forest for hunting and saw two mating deer. He shot them with arrow; but they were not deer but Kindama rishi in deer hide; they were enjoying conjugal pleasure. Kindama rishi cursed Pandu before dying that Pandu would die if he enjoys conjugal pleasure. A few years later on an enchanting spring day he approached Madri ignoring Kindama rishi’s curse. He died immediately. Madri holding herself responsible for his death left her two children Nakula and Sahadeva to be cared by Kunti and died by entering the funeral pyre.

***

Pandit/ Pundit

A pandit (or pundit) is an honorary title given to a Hindu scholar, teacher, or wise man who is highly educated in Sanskrit, philosophy, religion, or law. In everyday use, it can also refer to a Hindu priest who performs rituals, or a highly skilled master of a traditional art, such as Indian classical music.

In Kashmir Brahmins are called Pandits. Original inhabitants. Jawaharlal Nehru, First Prime Minister of India was also a Pandit.

***

Panini-paanini– World’s first grammarian. He lived in 7th century BCE according to Goldstucker. He authored the Ashtadhyayi (Eight Chapters), an exhaustive text containing nearly 4,000 sutras (rules) that define the morphological and phonetic structure of classical Sanskrit. Scholars appreciate his work for his scientific approach and crispiness. Patanjali who came several hundred years after Panini, wrote a monumental commentary known as Mahabhashyam.  Together with Panini and Patanjali another grammarian Katyayana Vararuchi are praised as Three Great Munis (Rishis).

Vakyakaram Vararuchim, Bhashyakaram Patanjalim

Paninim Sutrakaram cha pranatosmi Munitrayam

He lived before Buddha and other great philosophers of sixth century BCE. Though he mentioned several great grammarians before his time, we don’t know anything about them

Panini mentioned the grammarians before his time: Upavarsha, Parasarya, Karmanda, Sakatayana, Apitali and Sakalya.

Western linguists wonder how a person can write a grammar in such a scientific way at that period. Most of the world was uncivilised at that time. But India had produced wealthy literature, quantitatively and qualitatively very high. Only when there is vast literature one can write a grammar.

In Kashmir, a king passed an order that everyone must learn Ashtadhyayi and those who passed in it were awarded 1000 gold coins each!

***

Parasara

Parāśara (पराशर) is the son of Śakti and grandson of Vasiṣṭha and Arundhatī, he was born to Śakti and Adṛśyantī./ Matsya/ Satyavati Their son was Vyasa.

Genealogy. Descending in order from Viṣṇu—Brahmā -Vasiṣṭha—Śakti—Parāśara.

Millions of Hindus recite Vishnu Sahsranamam everyday where the genealogy is given as follows:

vyāsaṃ vasiṣṭha naptāraṃ śaktēḥ pautramakalmaṣam ।
parāśarātmajaṃ vandē śukatātaṃ tapōnidhim

***

Parijata – paarijaata-

This mythical (Parijata) tree rose of the milk ocean when Devas and Asuras churned it to get Amrita. Indra took it and planted it in his garden. “Its bark was gold, and it was embellished with young sprouting leaves of a copper colour, and fruit stalks bearing numerous clusters of fragrant fruits.”

 Once Narada brought a flower of this tree to Dwaraka and presented it to his friend Krishna. He waited to see to which of his wives Krishna gave the flower. The flower was given to Rukmini, and Narada went straight to Satyabhama and made a show of sorrow. On her enquiring why he was not in good cheer, the sage told Satyabhama, that he had presented Krishna with a flower of the Parijata tree thinking that she was her favourite wife and he would present it to her, but was grieved to find that Krishna had given it to Rukmini. 

Satyabhama’s jealousy was roused and she asked Narada what could be done to spite Rukmini. The sage advised her to ask Krishna to bring the Parijata tree itself from heaven and plant it near her house. After giving this advice, he went back to the celestial region and told Indra to guard the Parijata tree carefully as thieves were about.

When Krishna saw Satyabhama in angry mood he asked her the reason. She told him, “You pretend that I am your favourite wife, but treat me as Rukmini’s handmaid she said, and asked him what made him present the Parijata flower to Rukmini. Then Krishna asked her what he could do in expiation. She wanted possession of the tree. Krishna immediately proceeded to Amaravati, Capital City of Indra’s Empire. Krishna stole into Indra’s grove and started uprooting the tree. The king of the gods came upon the scene and caught the thief red-handed but seeing who his despoiler was, he allowed him, after some show of resentment, to take the tree to Dwaraka, Capital city of Krishna’s empire. 

Botanical Information: Two different plants are known as Parijata one is Coral Jasmine (Pavala Mallikai in Tamil) and another is Baobab Tree in Uttar Pradesh.

***

Parikshit

Posthumous son of Abhimanyu. He was the only descendent of the Pandavas. When he was in the womb of Uttara, he was saved from the Brahmastra fired by Ashwattama.

Once when Parikshit went to forest for hunting. When he was thirsty, he went to the hermitage of Shamika rishi and asked for water. The rishi was in deep meditation and did not respond. Thinking that the Rishi was pretending, Parikshit placed a dead snake around the neck of the seer. When Shrungi, son of Shamika came to know this, he cursed that king Parikshit would die on the seventh day at the hands of Takshaka Naga. Despite heavy security in the palace , Takshaka hid himself in a fruit basket taken into the palace and killed him.

(Actually it was a long going fight between Krishna and tribal Nagas from the days of Kaliaya Mardhan and Khandava forest burning. It was settled and a peace agreement was signed during Janamejaya’s rule who massacred tribal nagas in the name of Sarpa Yajna. Two rishis Jaratkaru and Astika facilitated the peace agreement. Brahmins recite a mantra thrice a day referring to this peace agreement in Narmadaiyai Namah ……………………….. mantra facing North).

To be continued……………………..

Tags – HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 , Parasara, Paila, Parikshit

S Nagarajan Articles index for JUNE 2026 (Post.15,940)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,940

Date uploaded in London – 3 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 S Nagarajan Articles index JUNE 2026

1-6-26 15812 கொஞ்சம் போனை ஆஃப் செய்யுங்கள்! மூளைத் திறன்

                    கூடும்! (31-5-26 தினமணி கட்டுரை)

2-6-26 15817 S. Nagarajan Article Index for May 2026

3-6-26 15823 சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிக்க டட்சுஜோகு

                         (கல்கிஆன்லைன் கட்டுரை)                                                     4-6-26 15827 இறைவன் நாமத்தை உச்சரித்து நூறு ஆண்டுகள் வாழ்வீராக!

                            (31-5-26 தீபம் கட்டுரை)                                                               5-6-26 15380  ராமாயணத்தில் வரங்கள் 55 கும்பகர்ணனுக்கு பிரம்மா வரம்

                        அளித்தது!                                                                     6-6-26 15834 ராமாயணத்தில் வரங்கள் 56 ராவணனுக்கு பிரம்மா வரம்

                        அளித்தது!                                                                                                                                                                                    7-6-26 15840 ராமாயணத்தில் வரங்கள் 57 இந்திரன் மயிலுக்கு வரம்

            அளித்தது!

8-6-26 15844 ராமாயணத்தில் வரங்கள் 58 யமன் காக்கைக்கு வரம்

            அளித்தது!                                                                                                                                                    9-6-26 15848 ராமாயணத்தில் வரங்கள் (59) வருண பகவான் ஹம்ஸத்திற்கு

            வரம் அளித்தது!                                                                 10-6-26 15852 ராமாயணத்தில் வரங்கள் (60) – குபேரன் ஓணானுக்கு வரம்

             அளித்தது                                                                 11-6-26 15856 ராமாயணத்தில் வரங்கள் (61) பிரம்மா நிவாதகவசர்களுக்கு

             வரம் அளித்தது                                                           12-6-26 15859 ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம்

             அளித்தது                                                            13-6-26 15864 சோஷியல் மீடியாக்களில் பொய் சொல்லியே

              பிழைப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? (கல்கிஆன்லைன்

              கட்டுரை)                                                           14-6-26 15868 உருவ வழிபாடு தேவையா, இல்லையா? பாபா கொடுத்த

              குதிரை உதாரணம் (கல்கிஆன்லைன் கட்டுரை                                        15-6-26 15872 மனித மூளையில் ஒரு சென்ஸர். அது செய்யவிருக்கும்

              அதிசயங்கள்! (11-6-26 கல்கிஆன்லைன் கட்டுரை)                             16-6-26 15876 பூமியின் இருண்ட பாதாள உலகம்: ஆழமான குகைகள் (13-6-26

               கல்கிஆன்லைன் கட்டுரை)                                                       17-6-26 15880 வியாதி போக்கும் நாமங்கள் (சுபாஷிதம்)                       18-6-26 15883 கர்ம பூமி பாரதமே சிறந்தது! (சுபாஷிதம்)                       19-6-26 15886 சீதக்காதியின் பெருமை!                                          20-6-26 15892 நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்!            21-6-26 15897 பேராசையைத் தவிர்த்து வாழ்வது – சத்ய சாயிபாபா (14-6-26   

             தீபம் கட்டுரை)                                                     22-6-26 15901 என் புருஷன் தான் ஒசத்தி (சுபாஷிதம்)

23-6-26 15906 எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி! சுபாஷிதம்

24-6-26 15909 மரங்களைப் போல உதவுபவர்கள் சத்புருஷர்கள்! சுபாஷிதம்

25-6-26 15913 உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே மீனாக்ஷி 

             டிங்கிரி டிங்காலே!                                                26-6-26 15917 யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்!

27-6-26 15921 சலிப்பின்றி வேலை செய்ய… பொமொடோரோ நுட்பத்தை

            இன்றே தொடங்குங்கள் (23-6-26 கல்கிஆன்லைன் கட்டுரை)      28-6-26 15925 மாமனிதர் பாக்யராஜ் மறைந்தார்!                                29-6-26 15927 உங்கள் கே.பாக்யராஜின் பதில்கள்!                                 30-6-26 15930 எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும்,

                       மரியாதையும்! – 1

**