Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 11-52 am Post No. 7120
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப்
பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி
வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை
குன்றாத கட்டுரை ‘காட்டுராணி பூலான்
தேவி’ அதை மட்டும் பெரிது படுத்திக்
காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old
Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –
எனது
தினமணிக் கட்டுரைக்குப் பின்னர் பூலான் தேவி இரு முறை எம்.பி.ஆனார்.
அவரைப்
பற்றி நிறைய புஸ்தகங்கள் வெளியாகின. திரைப்படமும் வெளியானது.
2001ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரால் சுடப்பட்ட உயர் ஜாதி மக்களின்
ஆதரவாளர்கள் அவரைச் சுட்டுகொன்றனர்.
கர்ம
வினை எல்லோரையும் நிழல் போலத் தொடர்ந்து வந்து அடிக்கும் என்பதற்கு பூலான்
தேவியின் வாழ்க்கை ஒரு சான்று.
கொலைகளையும் கொள்ளைகளையும் நியாயப்படுத்தி காசு செய்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்களுக்கு விழுந்த மரண அடி இது.
written by s swaminathan from london
More from
Wikipedia
கைதும் விடுதலையும்
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய
முதல்_மந்திரி
அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி
அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார்
ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை
அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை
செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள்.
இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி
அரசு, பூலான்தேவிக்கு
எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள்
சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான்
தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும்
பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு
இருந்தனர்.
மக்களவை உறுப்பினர்
கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி
சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை
“எம்.பி” ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி
சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில்
போட்டியிட்டார்.
நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.)
எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி
அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில்
இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு
ஜுலை மாதம் 5_ந்தேதி
உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம்
உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை
தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில்
சேர்ந்தார். 1996_ம் ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி
கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை
கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது
இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்
அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
“நான் பூலான்தேவி” என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
“
கொலை
2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து
மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார்.
அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில்
ஏறித் தப்பிச் சென்றனர்.[1] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டாலும், அவர்
இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத்
தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[2] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி
உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை
செய்ததாக ராணா கூறினார்.[3]. இது தொடர்பான வழக்கில் ராணா
குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 14-8-2014ல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[4]
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-13 am Post No. 7119
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 19-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 3
ச.நாகராஜன்
சங்க காலம் முதல் கண்ணதாசன் வரை
தலைவன் தலைவியிடம் உன்னை விட்டு ஒருநாளும் பிரியமாட்டேன் என்று சொல்லும் ஒரு காட்சி.
அரக்கில் பதிந்த வைரத்தைப் போல உன்னை விட்டு ஒருநாளும் பிரிய மாட்டேன் என்கிறான் அவன்.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே இன்று பழனி என்று நாம் அழைக்கும் சங்க காலப் பொதினி நகரில் வைரத்தைப் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடை பெற்று வந்தது. இங்கு பட்டை தீட்டும் நிபுணருக்கு காரோடன் என்று பெயர். ஒரு குச்சியின் முனையில் அரக்கை வைத்து, அந்த அரக்கின் நுனியில் வைரத்தை வைத்துப் பட்டை தீட்டுவது வழக்கம். ஆக
“சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரிந்திலம்” என்ற சங்க இலக்கியத்தின் வரி நமக்குக் காதலின் ஆழத்தை விளக்குகிறது.
‘அரக்குடன் ஒட்டிய பிரிக்க முடியாத வைரத்தைப் போல உன்னுடன் ஒட்டி பிரிய மாட்டேன்’ என்கிறான் காதலன், காதலியிடம்.
அகநானூற்றில் களிற்றியானையில் வரும் முதல் பாடலில் மலரும் காட்சி இது.
இன்னொரு காட்சியை சிறுபாணாற்றுப்படை சித்தரிக்கிறது. பாணன் பார்க்கும் காட்சி இது.
‘இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த’ என்ற வரி சங்க காலத்தில் வைரமானது அன்றாடத் தமிழரின் வாழ்க்கையில் எத்தகைய சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.
‘தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்’ – கவியரசு கண்ணதாசன் பாசமலருக்காக வரைந்த வைர வரி இது.
வளம் வாய்ந்த வைர நாடாக தமிழகம் விளங்கியதை இது போன்ற நூற்றுக் கணக்கான அழகிய பாடல்கள் சித்தரிக்கின்றன.
மஹாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற இதிஹாஸங்கள் வைரம் பற்றிய சுவையான தகவல்களைத் தருகின்றன.
வைரத்தின் ஒளிச் சிதறலால் இரவே இல்லையாம் அயோத்தியிலும் இலங்கையிலும்! வைரங்கள் பதிக்கப்பட்ட மதில்களும் மாளிகைகளும் ஒளி வீசுவதை எண்ணிப் பார்த்து பிரமிக்கிறோம். அனைவரும் அணிந்திருக்கும் வைரங்களின் ஒளியால் சூரிய ஒளி மங்கி விடுகிறதாம்!
இது போல இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்கள் வைரத்தின் ஒரிஜினல் பூமியான இந்தியா பற்றி எத்தனை ஆயிரம் செய்திகளைத் தருகின்றன என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.
வைரத்தின் 12 குற்றங்கள்
வைரத்தின் குற்றங்களையும் குணங்களையும் தரும் தமிழ் நூல்களும் பல.
வைரத்தின் குற்றங்கள் 12.
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை,கரி, விந்து, காகபாதம்,இருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் ஆகிய பன்னிரெண்டும் குற்றங்கள். இவற்றில் மிக மோசமானவை 4.
காகபாதம் நாகம் கொல்லும். (காகபிந்து என்றால் கரும்புள்ளி என்று பொருள்)
விந்து பைத்தியம் பிடிக்க வைக்கும்.
மலம் பிரியாதது நிலந்தரு கிளை கெடும் (மலம், உறவினர் அனைவரையும் அழித்து விடும்)
கீற்று வரலினை ஏற்றவர் மாய்வர். (கீற்று உள்ள வைரத்தை அணிபவர் மரணம் அடைவர்)
ஐந்து நல்ல குணங்கள்
வைரத்தின் குணங்கள் 5.
பலகை எட்டு, கோணம் ஆறு, தாரை, சுத்தி, தராசம் என்பன குணங்கள்.
குற்றங்களையும் குணங்களையும் நிபுணர்கள் மட்டுமே அறிவர்.
சாமானியனுக்குப் புரியும் வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக் கூடாது.
அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்ல பட்டைகளின் ஒளிப் பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள். வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப் பயன்.
நல்ல பலன்கள்
நல்ல பலன்கள் என்பவை : அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும். மனம் எப்போதும் அலை பாயாது அமைதியுடன் இருக்கும். எதிலும் அதிர்ஷ்டம் வரும். கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும். செல்வம் சேரும். வளம் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர். செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.
கண்கள், தொண்டை, ஜனன உறுப்புகள், ஜீரண மண்டலம், சிறுநீரகக் கல் ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகள் நீங்கவும் வைரம் அணிதல் சிறந்தது. செய்வினை உள்ளிட்ட அதிமானுஷ்ய தீய சக்திகளால் பயம் ஏற்படாது.
கிரேக்க நாட்டின் பேரறிஞரான ப்ளினி வைரம் விஷத்தை முறிக்க வல்லது என்றும் சித்தபிரமையை நீக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். ஒயினிலோ அல்லது நீரிலோ வைரத்தை அமிழ்த்தி விட்டு அதை அருந்தினால் மூட்டு வலி, மஞ்சள் காமாலை, இரத்தக் கசிவு உள்ளிட்டவை நீங்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கெட்ட கனவுகளைப் போக்கும், பிசாசுகளை அண்ட விடாது தீய கண் திருஷ்டியை வைரம் போக்கும் என்றும் அவர் விவரமாகக் குறிப்பிடுகிறா
ரஸ ஜல நிதி தரும் உண்மைகள்
ரஸ ஜல நிதி வைரத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறது.
1) ஆண் (Masculine) 2) பெண் (Feminine) 3) நியூட்ரல் (Neutral)
ஆண் வைரம் என்பது ஆறு அல்லது எட்டு முகம் கொண்டது. வானவில் போன்ற வர்ணஜாலங்களைக் காண்பிப்பது. கோடுகள், புள்ளிகள் அற்றது.
பெண் வைரம் என்பது உருளை வடிவமானது. ஆறு கோணம் கொண்டது. ஆண், பெண் இரண்டுமற்ற நியூட்ரல், மூன்று கோணம் கொண்டது.மெலிதானது. நீளமானது.
முதல் இரண்டு ரகங்களும் அணியக் கூடியவை. மூன்றாவது ரகம் விலக்கப்பட வேண்டிய ஒன்று.
வைர வடிவங்களும் ஜொலிக்கும் பட்டைகளும்
உயர் ரக வைரம் இலேசாக இருக்கும்.
அதன் ஒப்பற்ற குணங்களில் ஒன்று, அதை எக்ஸ் ரே ஒளியில் பார்த்தோமெனில் அது ஒளியைக் கக்கும். (Flourescence). ஆகவே வைரத்தை ஏனைய கற்களிலிருந்து இனம் பிரிக்க எக்ஸ் ரே பயன்படுத்தப்படுகிறது.
வைரத்தில் 58 வெட்டுகள் இருக்கும். பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கும். (படத்தில் 58 வெட்டுகளைக் காணலாம். மேல் பகுதியில் 33ம் கீழ்ப் பகுதியில் 25ம் இருப்பது வழக்கம்)
ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் தான் உலகிலேயே மிகப் பெரிய பட்டை தீட்டும் இடம் ஆகும்.
வைரத்தினாலும் எண்ணெயினாலும் பூசப்பட்ட சுழலும் உலோக பிளேடு ஒன்றைக் கொண்டு வைரத்தை அறுப்பார்கள். இப்படி அறுக்க இரண்டு நாட்கள் ஆகும்.
வைரத்தின் முகங்களுக்குப் பல பெயர்கள் உண்டு.
Table,Star,Templet,Lozene,Quotin,Cross, Skew,Skilt என இப்படிப் பல பெயர்கள்!
வடிவங்களும் கூட இதயம் (Heart), பியர் (piar), ஓவல் (Oval), எமரால்ட் ( Emerald) என இப்படிப் பல பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
பேரமில்லாத வைர வியாபாரம்!
வைர வியாபாரத்தின் உலகத் தலைமையகம் டீ பீர்ஸ் நிறுவனம் தான். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டீ பீர்ஸ் கன்ஸாலிடேடட் மைன்ஸ் என்ற நிறுவனம் வைரங்களை லண்டனிலுள்ள மத்திய விற்பனை நிலையம் எனப்படும் Central Selling Organisation- CSO-க்கு அனுப்புகிறது.
சூரிய ஒளி நன்கு விழுகின்ற வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இங்குள்ள 600 தொழிலாளிகள் – அனைவரும் வைர நிபுணர்கள் – 5000 விதமாக வைரத்தைத் தரம் பிரிக்கிறார்கள்.
நகைகளுக்கு உகந்தது அல்ல எனப்படும் வைரங்கள் தொழிலகம் உள்ளிட்ட இதரப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிபுணர்கள் இயந்திரங்களைக் கையாளுவதில்லை. கைத்திறனையும் தங்கள் நிபுணத்துவத்தையும் கொண்டு தான் வைரத்தைப் பிரிக்கிறார்கள்.
வைரம் வாங்குவதில் பேரம் என்பதே கிடையாது. சொன்ன விலை சொன்னது தான்!
ஆண்டுக்கு பத்து முறை மட்டுமே லண்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வைர விற்பனை நடைபெறும். சுமார் முன்னூறு வியாபாரிகள் உலகெங்குமிலிருந்து வந்து வைரங்களை வாங்குகிறார்கள்.
வாங்க வருவோர் தங்கள் தேவை என்ன என்பதை முதலில் சொல்ல வேண்டும். பின்னர் வைரங்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் தரப்படும். அதை வியாபாரிகள் பார்வையிடுவர். பின்னர் வாங்குவர். வாங்கும் போது மொத்த அட்டைப் பெட்டியையும் வாங்க வேண்டும். பிடிக்கவில்லையெனில் அப்படியே திருப்பிக் கொடுத்து விடலாம்.
ஒரு வைரத்தை வாங்கும்போது நம் பார்க்க வேண்டிய இன்னும் ஒரு C உள்ளது. அது தான் Certificate. விற்பவர் தானே கொடுத்துக் கொள்ளும் லாபரட்டரி சர்டிபிகேட் அல்லது விற்கும் நிறுவனத்தின் சர்டிபிகேட் அல்ல இங்கு குறிப்பிடப்படுவது. GIA (ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா) போன்ற அதிகாரபூர்வ நிறுவனங்களின் சர்டிபிகேட் உள்ளதா என்பதையே பார்க்க வேண்டும்.
சுக்ரனுக்குரியது வைரம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்ரனுக்குரியது வைரம். சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.
கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.
மணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு. குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம்.
நகைகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களைத் தவிர இதர ரகங்கள் தொழிலகத்தில் பல்வேறு பயன்பாட்டுகளுக்காகவும், பல சாதனங்களின் தயாரிப்பிற்கும் உதவுகின்றன.
கண்ணிற்கான காண்டாக்ட் லென்ஸில் வைரம், விண்ணில் பறக்கும் விண்கல ஜன்னலில் வைரம் என ஆயிரக் கணக்கில் வைரங்களைப் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.
எம்.எஸ்., பத்மினி, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ
பாரத் ரத்னா இசையரசி எம்.எஸ்.ஸின் கச்சேரிக்குச் சென்றவர்கள், குறிப்பாகப் பெண்மணிகள், அவரது இசையை வானளாவப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் அவரது டால் அடிக்கும் வைர மூக்குத்தி பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.
தில்லானா மோகனாம்பாளில் பத்மினியின் ஜொலிக்கும் முக்குத்தியும் நகைகளும் நாட்டியப் பேரொளியின் நடனம் பேசப்பட்ட அளவு பெரிதும் பேசப்பட்டவை.
இன்னும் எலிஸபத் டெய்லரின் வைர மோதிரம், க்ரேஸ் கெல்லியின் வைர நகை ஆகியவை உலகினரின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பே இல்லை.
எலிஸபத் டெய்லர், “பெரிய பெண்மணிகளுக்கு பெரிய வைரங்கள் தேவை” (Big girls need big Diamonds) என்று ஒரு போடு போட்டார்.
பிரபல அமெரிக்க டி.வி.சீரியல் பிரபலமான நிகோல் ரிச்சி, “உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போல – பிரகாசமானவர்கள்.அழகானவர்கள்.மிக்க மதிப்புடையவர்கள், எப்போதும் ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் என்று சொன்ன பொன்மொழி வைர மொழியாக மதிக்கப்படுகிறது.
உலகை மயக்கிய பேரழகி மர்லின் மன்ரோ 1953ஆம் ஆண்டு,’ஒரு பெண்மணியின் உண்மைத் தோழி வைரமே’ என்று பிரகடனம் செய்தார்.
நாரீமணிகளின் உண்மைத் தோழி வைரங்கள் தானே?
எப்போதும் நிலைத்து நிற்பது வைரம் மட்டுமே!
இதற்கான ஆங்கில வாசகங்களான், ‘Diamond’s are girl’s best friend’, A Diamond is For Ever’ என்ற விளம்பர வாசகங்களை பற்பல கோடி ரூபாய்களைச் செலவழித்து டீ பீர்ஸ் நிறுவனம் உலகத்தில் மறக்க முடியாதபடி நிலை நிறுத்தி விட்டது.
Date: 20 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 20-38 Post No. 7118
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Sri Venkaiah Naidu , Vice President of India,
released a new postage stamp in May 2019 to commemorate the 750th
birth anniversary of Sri Vedanta Desika, the great Vaishnavite philosopher.
Vedanta Desikan wrote over 100
books. He was considered the incarnation of The Bell that Brahma used in the
worship of Lord Venkateswara in Tirumalai (Thiruppahi) Temple
‘Sri Vedanta Desikan is one of the most
prominent preceptors in the Srivaishnava tradition and one of the most
effulgent luminaries to have graced this land’, the Vice President said.
The Vice President termed Sri Vedanta Desikan’s scholarship as truly
outstanding and said that he had authored brilliant poems, prose, drama, epics,
commentaries, scientific texts and philosophical treatises in Sanskrit, Tamil,
Prakrit and Manipravalam.
Shri Naidu emphasized that Vedanta Desikan was much more than a spiritual teacher and said that he was a multi-faceted personality– a scientist, a logician, a mathematician, a literary genius, a linguist, a military strategist and much more.
THE STORY OF THE BELL
To commemorate the 700th birth
anniversary of the great saint a silver bell was made and sent to 60 towns to
spread the message of Sri Desikan.
Following interesting anecdotes are in the commemoration
Souvenir.
Why no bell is used inside the Balaji temple?
What happened to the Bell that Brahma used?
An old man’s contribution of heavier cup!
A man who won several cups in Tennis offered
all his cups to make the bell; and then what happened?
A poor woman who came with a broken silver
spoon.
Several interesting anecdotes like these are in
the souvenir. Please see the attachments.
I have already given the story of the Shoes of
Sringeri Shankaracharya that were sent to Benares Hindu University, Rama’s shoes
that ruled Kosala Kingdom for 14 years and the other shoes of great men in the
museums and Pujas in India and the Hindu Hymns on Shoes. Here is the Story of a
Bell:-
Date: 20 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 16-53 Post No. 7117
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-59 am
Post No. 7116
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
Date: 20 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 6-48 am Post No. 7115
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கட்டுரை எண் : 7108 வெளியான தேதி : 18-10-2019 – கீதையின் மூன்றாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை
கீதையின் நான்காவது கட்டளை!
ச.நாகராஜன்
ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை
ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.
ஏழு கட்டளைகளுள் நான்காவது கட்டளை
இது தான் :
Thou
Shalt Not Miss Thy Daily Appointment With God
நீ கடவுளுடனான உனது தினசரி சந்திப்பை நழுவ விடாதே
இதைப் பற்றி அவர் தரும் விளக்க
உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
கிறிஸ்தவ ஞானியான தாமஸ் மெர்டன்
(Thomas
Merton) ‘தி வாட்டர்ஸ்
ஆஃப் சைலன்ஸ்’ (‘The Waters of Silence) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் மௌனம் என்பது அழகிய, எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
ஜீவ நதி என்று வர்ணிக்கிறார். மௌனம் மனதைச் சுத்தமாக்கும். இதயத்தை உயர்த்தும். ஆழத்தில்
இருக்கும் ஆன்மாவைக் காட்டும்!
இந்த வேக யுகத்தில் ஏராளமான யுவதிகளும் இளைஞர்களும்
எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்கிறார்கள்.
தங்களது செல் போனை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் சார்ஜ் செய்வது அவசியம் என்கின்றனர்
அவர்கள்.
இதை நான் அன்றாடம் பார்க்கலாம்.
ஏராளமான செயல்களில் மனத்தையும் இதயத்தையும் ஈடுபடுத்தும்
மனிதனும் கூட தன்னை அடிக்கடி சார்ஜ் செய்து கொள்ள வேண்டும் – அனைத்து ஆற்றல்களுடன்
கூடிய கடவுளிடம்.
பெரியோர்களும் மஹரிஷிகளும் மூன்று விதமான ப்ராரப்தங்களைக்
கூறுகின்றனர்.
முதலாவது அனிச்ச ப்ராரப்தம் :- இறைவனின் செயல்கள்
அனிச்ச ப்ராரப்தம். சுனாமி, காத்ரீன் சூறாவளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச்
சொல்லலாம்.
இரண்டாவது பரேச்ச ப்ராரப்தம் : இவை கட்டாயத்தினால் நீங்கள் செய்யும் சில செயல்கள்.
எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளும் சிலரை மனிதர்கள் சபிக்கின்றனர்; பொருமுகின்றனர்.
இறைவனின் சக்தியே எங்கும் வியாபித்து அனைவரையும் செயல்பட வைக்கிறது என்று உணரும் போது
நாம் கிளர்ச்சியுறச் தேவையே இருக்காது.
மூன்றாவது ஸ்வேச்ச ப்ராரப்தம் : நமது சொந்த மதியினால்
நாம் ஆற்றும் செயல்கள் ஸ்வேச்ச ப்ராரப்தம் எனப்படும்.
இதை இப்படிச் செய்திருக்கலாம்… இது மட்டும் அப்படி
இருந்தால் என்று பல முறை நாம் வருந்திச் சொல்கிறோம்.
எல்லாமே இறைவனின் செயல்கள். அந்த தெய்வீக ஆற்றலுடன்
நமது சொந்த மதியை இணைக்க வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம்.
அந்த ஆற்றலிடம் உங்களை ஒப்படைத்து விட்டால் உங்கள்
பயணம் பாதுகாப்புள்ள ஒரு பயணமாக ஆகி விடும்.
கபீர் தாஸர் ஒரு முறை கங்கை நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சார்வாகப் பறவை ஒன்றைப் பார்த்தார்.
அந்தப் பறவை எப்போதும் எவ்வளவு தாகமாக இருந்த போதிலும்
சுத்தமான நீரை மட்டுமே பருகும். எவ்வளவு நீர் இருந்தாலும் அதை அது தொடாது. வானிலிருந்து
விழும் சுத்தமான மழைத் திவலைகளை மட்டுமே அது அருந்தும்.
அவர் பாடினார்:
நீரின்றி எப்படி மீனால் உயிர் வாழ முடியாதோ
சக்ரவாகப் பறவையின் தாகம் எப்படி ஒரு மழைத்துளியினால்
மட்டுமே தீர்க்கப்படுமோ
அதே தீவிரத் தன்மையுடன் மகான்கள் இறைவனுக்காக ஏங்குகிறார்கள்!
அவனது தரிசனம் ஒன்றே அவர்களின் தாகத்தைத் தணிக்கும்!
இங்கிலாந்தில் பழைய காலத்து வாத்தியம் ஒன்றைக் காண
முடியும். அதன் பெயர் ஏலியன் ஹார்ப் (Aeolian harp). அதை தோட்டத்திலோ அல்லது
திறந்த ஜன்னல்களின் முன்போ வைத்து விடுவார்கள்.
தவழ்ந்து செல்லும் காற்று அதன் மீது பட்டு தெய்வீக
இசை ஒன்றை எழுப்பும்.
நாமும் கூட இறைவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக்
கொள்ள தயாராக இருந்தால் ஏலியன் ஹார்ப் போல அவரும் நம் மீது அழகிய இசையை எழுப்புவார்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்- அது ஆழ்ந்த அமைதியில் மௌனத்தில் மட்டுமே
எழும்!
மொத்தத்தில் இறைவனுடன் நாம் ‘Tune
up’ செய்து கொண்டால் போதும்.
அவனுடனான தினசரி சந்திப்பை
ஏற்படுத்திக் கொள்ள முடியும்!
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 18-58 Post No. 7114
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அட, இந்த ஒன்பது தெரியாதவர் யார்? விலைதான் அதிகம்.
குறுக்கும் நெடுக்குமாகப் போங்கள்; கொஞ்சம் வளைந்தும், நெளிந்தும் பாருங்களேன்.
Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-39
Post No. 7113
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-50 am Post No. 7112
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
broken Murug/ SKANDAMURUGA/ SKANDA WITH HEAD IN 1903DANANAG MUSEUM IN VIETNAM
Date: 19 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 6-05 am Post No. 7111
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஹெல்த்கேர் (Health care Magazine) அக்டோபர் 2019 இதழில் வெளியான கட்டுரை
Program for Dynamic Health : (ப்ரோக்ராம் ஃபார் டைனமிக் ஹெல்த்) : எழுதியவர் :T.C.Fry
ச.நாகராஜன்
1
Natural Hygiene எனப்படும் இயற்கை சுகாதாரத்தை அறிமுகப்படுத்தியவர்
டி.சி. ஃப்ரை.
1926, ஜூலை மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில்
ஓக்லஹாமா, பென்னிங்டனில் பிறந்த அவருக்கு 1970இல் இயற்கை உணவு சார்ந்த
வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. அதை ஆராயத் தொடங்கினார். ஏராளமான புத்தகங்களை
எழுதினார். 1976இல் Health Sciences Institute
ஒன்றையும் நிறுவினார்.தனது 69ஆம் வயதில் காலமானார்.
அவர் எழுதிய
புத்தகங்களுள் ஒன்று “Program for Dynamic Health”.
118 பக்கமே உள்ள
இந்தச் சிறிய புத்தகம் ஆரோக்கியத்துடன் வாழ பல முக்கிய குறிப்புகளை அளிக்கிறது.
புத்தகத்தின் சில முக்கிய பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
2
ஒரு நல்ல வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத காரணிகள் 18.
அவையாவன : சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், சுத்தம், வெப்பம், தூக்கம்,
சத்துள்ள உணவு, உடல் பயிற்சி, ஓய்வும் இளைப்பாறுதலும்,சூரிய ஒளி, உணர்ச்சிகளில்
நிதானம், இன்பமான சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பான வாழ்வும் அதற்கான வழிமுறையும்,
தன்னான்மைத் திறம்,ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல், பயனுள்ள வேலையை உருவாக்கல்,உடைமை, இயற்கையான
உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்தல், கலை, அழகுணர்ச்சிகளில் ஈடுபாடு ஆகியவை.
உபவாசமிருத்தல் : நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திட்டமிட்ட கட்டுப்பாடான உபவாசம்
தேவை. குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பழ வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைக்கப்பட்ட உணவு வகைகளைக் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
உடல்பயிற்சியின் போது அனைத்து அங்கங்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும்.
எப்போதும் நிமிர்ந்து உட்காருதல் நல்லது. நடக்கும் போது நிமிர்ந்த தலையுடன்
நடத்தல் வேண்டும்.
களைத்துப் போயிருந்தால் சற்று ஓய்வெடுங்கள். ஓய்வெடுக்கும் போது
படிக்காதீர்கள். டி.வி.பார்க்காதீர்கள்.
சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள, அமைதியான, இருட்டு
அறையில் உகந்த சீதோஷ்ண நிலையில் தூங்குவது அவசியம்.
சந்தோஷமாக இருப்பதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்து கொண்டே இருங்கள்.
வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டு அதை அடைவதற்கான செயல்களில்
இறங்குங்கள். நல்ல பிடித்தமான ஹாபி ஒன்றில் ஈடுபடுங்கள்.
டிக்ஷனரி ஆஃப் மேன்’ஸ் ஃபுட்ஸ் – டாக்டர் வில்லியம்
எஸ்ஸர் (Dictionary of Man’s Foods by Dr William Esser) எழுதியதைப் படித்து சாப்பிடுவதற்குரிய உணவு வகைகளைப் பற்றித் தெரிந்து
கொள்ளுங்கள். (அதாவது Sweet Fruit, Sub Acid Fruit,
Acid Fruit, Melons, Proteins, Starches, Non Starchy Vegetables ஆகியவை எவை எவை என்பதைத் தெரிந்து கொண்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்)
அமிலம் மற்றும் ஸ்டார்ச் உணவு வகைகளைத் தனித் தனி நேரங்களில் (காலை, மதியம்,
இரவு சாப்பாடு போன்றவற்றில்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும்
சேர்ந்து சாப்பிட்டால் அஜீர்ணம் ஏற்படும்.
அதே போல புரோட்டீனையும் கார்போ ஹைட் ரேட்டையும் தனித் தனி நேரங்களில் உணவில்
சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இப்படி எதை எதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற பட்டியலின் படி சாப்பிட
வேண்டும்.
உணவில் 80 % ஆல்கலைன் உணவைச் சேர்க்க வேண்டும்.
Bread – ப்ரெட்- என்பது ஹெல்த்கேர் உணர்வுள்ள ஒருவரின் உணவில் வரவே கூடாது.
சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு இன்ஆர்கானிக்! அதைச் சேர்க்கவே கூடாது.
உடலில் அதிகமான திரவச் சேர்க்கை உப்பினாலேயே ஏற்படுகிறது. இது தவிர்க்கப்பட
வேண்டிய ஒன்று.
உங்களது நாடித்துடிப்பை சரிபார்க்கத் தவற வேண்டாம். மிகப் பெரும் விளையாட்டு
வீரர்களின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 30 முதல் 40 வரை தான் இருக்கிறது!
மருத்துவர்கள் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு சராசரியாக 72 இருக்கும் எனக் கூறுகிறார்கள். ஆனால் இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கான ஒன்று!
ஓய்வாக இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:
வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 40 முதல் 50 வரை
வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 46 முதல் 56 வரை
ஆண் குழந்தை : நிமிடத்திற்கு 50
முதல் 60 வரை
பெண் குழந்தை : நிமிடத்திற்கு 56
முதல் 66 வரை
தினசரி வேலைகள் 8 முதல் 12 வரை நாடித் துடிப்பை அதிகரிக்கலாம்.
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது
இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:
வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை
வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 56 முதல் 66 வரை
ஆண் குழந்தை : நிமிடத்திற்கு 60
முதல் 70 வரை
பெண் குழந்தை : நிமிடத்திற்கு 66
முதல் 76 வரை
காப்பி என்பது பழக்கத்திற்கு நம்மை அடிமையாக்க வைக்கும் ஒரு ஊக்கி. நிகோடின்
போலவே அதையும் விஷம் என்றே சொல்லலாம்.
ஜீனியில் ஊட்டச்சத்தே கிடையாது. அதில் கலோரி வேல்யூ தான் உண்டு. உடலில்
ஏற்கனவே இருக்கும் ஊட்டச்சத்துக்களை அது
‘கொள்ளையடிக்கிறது’.
டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் அனைவரும் தலைவலிக்காக எடுத்துக் கொள்ளும்
ஆஸ்பிரின் தனது கெமிக்கல் வினையால் நரம்புகளை செயலிழக்கச் செய்கிறது.
மருந்துகள் அனைத்துமே எந்த ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குவது இல்லை.
அவைகளுக்கு எந்தத் திசுவையும் உருவாக்கும் ‘அறிவு’ இல்லை.
இயற்கை சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு ஆரோக்கியம் மட்டும்
உறுதியாவதில்லை, ஏராளமான மருத்துவச் செலவுகளும் மிச்சமாகிறது.
இதை அனுபவித்து உணர்ந்து பாருங்கள்!
3
கட்டுரை ஆசிரியரின் குறிப்பு :
மேலே கண்ட நூலை முழுவதுமாகப் படிப்பதால் உணவுத் திட்டம், உணவு வகைகள்,
உடலுக்குத் தீங்கு பயக்கும் உணவுகள் ஆகியவை நமக்கு நன்கு தெரிகிறது; தெளிவடைகிறோம்.
ஆனால் சமைக்காத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், மருந்துகள் எதையும் எடுத்துக்
கொள்ளாதீர்கள் போன்ற ஆலோசனைகள் இந்தக் கால கட்டத்திற்கும் அவரவர் உடலமைப்பு,
வியாதி ஆகியவற்றிற்கும் பொருந்துமா என்பது விளங்கவில்லை.
இந்த நூலின் ஆசிரியரின் யோசனைகளுக்குக் கடுமையான விமரிசனங்கள் எழுந்தாலும் கூட
இந்த நூல் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளதை எண்ணினாலேயே இது கூர்ந்து
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது தெரியவரும்.
அன்பர்கள் இந்த நூலைப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைக்
கடைப்பிடிக்கலாம்; கடைப்பிடிக்கும் முன்பு தங்கள் குடும்ப மருத்துவரையும் நல்ல
ஆலோசனைக்காக நாடி உணவு பற்றிய ஆலோசனைகளையும் பெறலாம்.