மா ஆனந்தமயி! (Post No.15,783)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,783

Date uploaded in London – 25 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

30-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

மா ஆனந்தமயி! 

ச. நாகராஜன்

பாரதத்தின் சமீப கால வரலாற்றில் தோன்றிய பெரும் ஞானி மா ஆனந்தமயி.

 இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று சகல மதத்தினரைச் சார்ந்தவர்களும் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.

நிர்மலா சுந்தரி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட மா ஆனந்தமயி வங்காளத்தில் கேயோரா என்ற ஊரில் 1896ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று பிறந்தார்.

 இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட அவருக்கு அந்தக் கால வழக்கப்படி அவரது பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்விக்கப்பட்டது. கணவர் போலோநாத் அவரது ஆன்மீகச் சிறப்பை உணர்ந்து கொண்டார். அவரை மா என்றே அழைத்தார்.

1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி தினத்தன்று நள்ளிரவில் அவருக்கு பெரும் ஆன்மீக உணர்வு ஏற்பட்டது. அவர் உயரிய ஞான நிலையைத் தானே யாருடைய உபதேசமும் இன்றி அடைந்தார்.

 அடுத்த ஐந்து மாதங்களில் அவரது சாதனை உச்ச கட்டத்தை அடைந்தது.

1922 டிசம்பர் முதல் மூன்று ஆண்டுகள் அவர் மௌன விரதத்தை அனுஷ்டித்தார். உணவும் மிகச் சிறிய அளவே அவருக்கு ஊட்டி விடப்பட்டது.

 அவரது ஆன்மீக சக்தி வெளி உலகிற்குத் தெரிய வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் கூட்டம் அவரை நாடி வந்தது. வருபவர்களின் உடல் நோயை அவர் தீர்ப்பதைக் கண்ட மக்கள் வியந்தனர்.

 வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சித்தேஸ்வரி ஆசிரமம் என்று தனி ஆசிரமம் ஒன்றை அமைத்தார். பின்னர் ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.

 வாரணாசியில் 1928ம் ஆண்டில் பண்டிதர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றில் அவர் உபயோகித்த சம்ஸ்கிருத வார்த்தைகளும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

 அவரது முத்திரைகளும் ஆசனங்களும் அவரது உடலில் இயல்பாய்த் தோன்றின.

 சுமார் 30 ஆசிரமங்களை அவர் அமைத்தார்.  அவரது புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அரவிந்த மஹரிஷி, “இது சச்சிதானந்த சொரூபம்” என்றார். 

மகாத்மா காந்திஜி ஜமனாலால் பஜாஜை நேரடியாக ஆனந்தமயி மாவிடம் அனுப்பி தனது ஆசிரமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவரும் காந்திஜி ஆசிரமத்திற்கு வந்தார்.

அவரைச் சந்தித்த பரமஹம்ஸ யோகானந்தர் அவரை ஆனந்தமயமான அம்மா என்றார்.

கமலா நேரு அவரது சிறந்த பக்தையானார். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லப்படும் பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர் மீது மிகவும் மரியாதை கொண்டிருந்தார்.

பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவரது பக்தையாக ஆனார்.

1982ல் மா மறைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனது புதல்வர் ராஜீவ் காந்தி, மருமகள் சோனியா காந்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன் அவர் ஆசிரமம் சென்று அவரை தரிசித்தார்.

 தூரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆற்றலையும் பிறர் கேட்காமலேயே அவர்கள் மனதில் உள்ள சந்தேகங்களை அறிந்து பதில் சொல்வதும் அவருக்கு இயல்பான சித்தியாக இருந்தது.

வங்காளத்தில் உள்ளவர்கள் அவரை மானுஷ் காளி (வாழ்கின்ற காளி) என்று போற்றி வணங்கினர். மதுரைக்கு அவர் வந்த போது அனைவரும் அவரை மீனாக்ஷி தேவி என்று போற்றி வணங்கினர். பஞ்சாபில் புனிதமான கிரந்த சாஹிபிற்கு அளிக்கும் மரியாதையை அவருக்கு சீக்கியர்கள் அளித்தனர். நர்மதை நதிக்கு அவர் செல்கையில் இதோ நர்மதா தேவி என்று கூவி பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கிறிஸ்தவர்கள் அவரை தரிசித்து ஆசி பெற்றனர்.

 1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் நாளன்று நாராயண ஹரி என்று பலமுறை அவர் கூறியவாறே தனது உடலை உகுத்தார். கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஹரித்வார் அருகே உள்ள கன்கால் ஆசிரமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை இறுதியாக தரிசித்தனர். கன்காலில் அவரது மஹாசமாதி நிறுவப்பட்டது. பிரதம மந்திரி இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.

 அவரது உபதேச உரைகள் எளிமையான வார்த்தைகளில் ஆழமான அர்த்தத்துடன் அமைந்திருக்கும்.

“எப்போதும் உயரிய சிந்தனையைக் கொண்டிருங்கள். புகழையும், இகழையும், சகதியையும், சந்தனத்தையும் ஒன்றாகவே கருதுங்கள். இதயத்தின் உள்ளே இருப்பதைப் பாருங்கள்” என்பது அவரது உபதேசங்களில் ஒன்றாகும்.

***

 Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)- Last Part

Three Hare Krishna Chariots on London Roads

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to ……………………………………

Balabhadra, Subhadra, Jagannatha on Three Chariots/ Rathas

Ceremonial cleaning of the rodas for God’s Visit

Hinduja Foundation provide Prasad/ Food Every Year.

–Subham—

Tags- Last Part , London Rath Yatra, Rudra Yaga, Two Great Events, Mitra Seva, ISKCON

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)[- Part 3

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)-3

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026……………………………………

 to be continued……………………

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)[- Part 2

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to attend both and take pictures for you. I had to walk over three miles in central London to cover the Rath Yatra by the ISKCON (Hare Krishna Movement). Thousands of people participated in the Rath Yatra . Several thousand more tourists saw the Rath Yatra from cars and buses. At the end of the Rath Yatra several thousand had Tasty Prasad with six mouth watering items. When ISKCON organise an event there is no police seen on the roads. They are so organised and disciplined and there is no work for the police. On the other hand, 6000 police were on the roads last Saturday to maintain peace when Anti Refugee and Pro Palestinian marches were held in London. That is the big difference between the well-disciplined, peace- loving Hindu crowd and others. Men and women danced on the roads to the tune of loud music in spite of the scorching sun.

Maha Rudra Yaga

In the morning Mitra Seva UK organised their annual Maha Rudra Yaga. Every years Siva devotees from Scotland to Southampton participate in it. Over ten priests did the Rudra Homam from the morning till late afternoon. Prasad was distributed to everyone. A dedicated group of volunteers led by M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer and Mrs Meena Raj, Mr Balasubramanian and Mrs Padma Balasubramanian, Mr Subrahmanyam and Mrs Gayatri Subrahmanyam made the event a grand success.

Priests led by Madurai Chandrasekaran, Chennai Raja Skaran, Devarajan, Agastya Kurukkal conducted the Rudra Homam in the traditional way. Rudram and Chamakam were recited along with Tevaram and other Tamil hymns by them. This annual event is attended regularly by 150 to 200 devotees. Organisers got Nava Dhanya and Nava Samits in plenty which is very rare to see in London.

Please see the pictures which will give you more details.

–Subham—

Tags – Rath Yatra 2026, Maha Rudra 2026, May 24, London Events, Mitra Seva, ISKCON, Hare Krishna

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to attend both and take pictures for you. I had to walk over three miles in central London to cover the Rath Yatra by the ISKCON (Hare Krishna Movement). Thousands of people participated in the Rath Yatra . Several thousand more tourists saw the Rath Yatra from cars and buses. At the end of the Rath Yatra several thousand had Tasty Prasad with six mouth watering items. When ISKCON organise an event there is no police seen on the roads. They are so organised and disciplined and there is no work for the police. On the other hand, 6000 police were on the roads last Saturday to maintain peace when Anti Refugee and Pro Palestinian marches were held in London. That is the big difference between the well-disciplined, peace- loving Hindu crowd and others. Men and women danced on the roads to the tune of loud music in spite of the scorching sun.

Maha Rudra Yaga

In the morning Mitra Seva UK organised their annual Maha Rudra Yaga. Every years Siva devotees from Scotland to Southampton participate in it. Over ten priests did the Rudra Homam from the morning till late afternoon. Prasad was distributed to everyone. A dedicated group of volunteers led by M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer and Mrs Meena Raj, Mr Balasubramanian and Mrs Padma Balasubramanian, Mr Subrahmanyam and Mrs Gayatri Subrahmanyam made the event a grand success.

Priests led by Madurai Chandrasekaran, Chennai Raja Skaran, Devarajan, Agastya Kurukkal conducted the Rudra Homam in the traditional way. Rudram and Chamakam were recited along with Tevaram and other Tamil hymns by them. This annual event is attended regularly by 150 to 200 devotees. Organisers got Nava Dhanya and Nava Samits in plenty which is very rare to see in London.

Please see the pictures which will give you more details.

–Subham—

Tags – Rath Yatra 2026, Maha Rudra 2026, May 24, London Events, Mitra Seva, ISKCON, Hare Krishna, part 1

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-33; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,781)

Written by London Swaminathan

Post No. 15,781

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருவில்லிப்புத்தூர் (ஸ்ரீவில்லிப்புத்தூர்) மூலவர் – வடபத்ரசாயீ (ரங்கமன்னார்) ,புஜங்கசயனம்கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ஆண்டாள் (கோதா நாச்சியார்)

தீர்த்தம் – திருமுக்குளம்.

விமானம் – ஸம்சன விமானம்.

ப்ரத்யக்ஷம் – மண்டூகமணிபெரியாழ்வார்.

விசேஷங்கள் – ஆண்டாளும் பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்தலம்.

ஆண்டாள் ரெங்கநாதரை மணந்த ஸ்தலம். ரங்கமன்னாருக்கு வலதுபுறம் ஆண்டாளும் இடதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். பெருமாளுடன் கருடாழ்வார் நிற்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். பெருமாள் வடபத்ரசாயீயாயிருந்தாலும் ஆதிசேஷன் உண்டு. வழக்கம்போல் பெருமாளின் நாபீகமலத்திலுருந்து ப்ரஹ்மா ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களான வில்லிபுத்தன் என்ற இரு வேடுவ அரசர்களுடனும் உள்ளனர். இவ்வேடுவர்களால் இந்நகரைக் கட்டப்பட்டபடியால் வில்லிப்புத்தூர் என்று பெயர் வந்துள்ளது. பெரியாழ்வார் ஸந்நிதி ஒன்றும்ஆண்டாள் கண்டெடக்கப்பட்ட நந்தவனத்தில் துளசிசெடி பக்கத்தில் ஆண்டாள் ஸந்நிதி ஒன்றும் உள்ளன. ஸ்ரீரங்கத்திற்போல் இங்கும் “அரையர்ஸேவை” உண்டு.

பெரியாழ்வார் நந்தவன கைங்கர்யம் செய்து கொண்டுமாலை பெருமாளுக்கு ஸமர்ப்பித்து வருகையில்ஆண்டாள்ஆழ்வாருக்குத் தெரியாமல் பெருமாளுக்கு ஸமர்பபிக்கும் மாலையை தான் அணிந்து கொண்டு கணணாடியில் அழகு பார்க்கஇதனைக் கண்ட ஆழ்வார் ஆண்டாளை கோபிக்க, ‘ஆண்டாள்‘ சூடிக் கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என்று பெருமாள் கனவில் சொல்அது முதல் கோதை நாச்சியாருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் உண்டாயிற்று.

தென்காசி – விருதுநகர் ரயில்பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனிலிருந்த இப்பெரிய ஊர் 1 1/2 மைல் தூரத்திலுள்ளது. பலவிடங்களிலிருந்தும் பஸ்களும் உண்டு. அஹோபில மடம்சத்திரங்கள்ஹோட்டல்கள் வசதிகள் உண்டு. மலைமீது ஸ்ரீநிவாஸர் கோயில்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவ கோவில் ஆகும். வரலாறு இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. திருமலைநாயக்கர் மற்றும் இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்

தாயார் : ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)

மூலவர் : ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)

மங்களாசாஸனம் –

பெரியாழ்வார் – 133

ஆண்டாள் – 549

ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய பெரியாழ்வார் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும்.

இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பாசுரங்கள்

1. திருப்பாவை (ஆண்டாள் அருளியது):மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து, ஆண்டாள் தன் தோழியரை எழுப்பும் விதமாகப் பாடிய 30 பாசுரங்கள்.திருப்பாவை பாசுரங்களை தமிழ் வேதம் தளத்தில் முழுமையாக வாசிக்கலாம்.2. நாச்சியார் திருமொழி (ஆண்டாள் அருளியது):ஆண்டாள் தனது பாசுரங்கள் மூலம் பெருமாள் மீது கொண்ட தூய அன்பை வெளிப்படுத்தும் 143 பாடல்கள்.3. பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளியது):பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து, கண்ணனின் சிறு வயது லீலைகளைப் பாடிய 473 பாடல்கள்

மொத்தம் 2 பாசுரங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும் இது 11 அடுக்குகளைக் கொண்டது;  கோபுரத்தின் உயரம்  192 அடி

புராணம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேட்டுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு “ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

ஆண்டாள் எண்ணெய்க்காப்பு


திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் உள்ளது

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும்.

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே); ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர். 

இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்

பெரியாழ்வார் இயற்றிய “திருப்பல்லாண்டு”, ஆண்டாள் இயற்றிய “திருப்பாவை”, “நாச்சியார் திருமொழி” ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.

பால்கோவா தயாரிப்பு

இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.

முக்கிய ஆலயங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்

திருவண்ணாமலை கோயில்

பெரிய மாரியம்மன் கோயில்(mariamman kovil)

சந்தன மாரியம்மன் கோயில்

செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி

செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.. காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன.. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் ‘பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்’ மற்றும் வடமேற்குப் பகுதியில் ‘மேகமலை காப்புக்காடுகள்’ அமைந்துள்ளன.

இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora)

புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களில் கூட்டை கட்டும்.

. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான ‘இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்’ இங்கே காணப்படுகிறது.

தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.

மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது.

–SUBHAM—

TAGS-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-33; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ,ஆண்டாள் கோவில்

ஹனுமனின் வியப்பு !  துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம் –ஓர் ஆய்வு – 15(Post No.15,780)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,780

Date uploaded in London –   24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹனுமனின் வியப்பு துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்ஓர் ஆய்வு – 15

(ஆர், சேஷாத்ரிநாதன்)

ஹனுமன்  அவர்களுடன் பேசத் தொடங்குகிறார்.

की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥1

को तुम्ह स्यामल गौर सरीरा। छत्री रूप फिरहु बन बीरा ॥

कठिन भूमि कोमल पद गामी। कवन हेतु बिचरहु बन स्वामी॥4॥

பொருள்:

की तुम्ह तीनि देव महँ कोऊ। (கீ தும்ஹ தீனி தேவ மஹம் கோஊ)

பொருள்: நீங்கள் மூன்று முக்கிய தெய்வங்களில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருவரா? இந்த வரியில், கவிஞர் (துளசிதாஸ்) இராமரைப் பார்த்து, அவர் திருமூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருவராக இருக்கலாமா என்று வினவுகிறார். இது இராமரின் தெய்வீகத் தன்மையை உயர்த்திப் புகழும் ஒரு கேள்வியாக அமைகிறது.

नर नारायन की तुम्ह दोऊ॥ (நர நாராயண கீ தும்ஹ தோஊ)

பொருள்: அல்லது நீங்கள் இருவரும் (ராமர் மற்றும் இலக்ஷ்மணர் ) நர-நாராயணர்களா? இங்கு, ராமர் மற்றும் இலகஷ்மணர் ஆகியோர் நர-நாராயணர்களின் அவதாரங்களாகக் கருதப்படுகிறார்கள்.

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥ (கீ தும்ஹ அகில புவன பதி லீன்ஹ மனுஜ அவதார்)

 பொருள்: அல்லது நீங்கள் (ராமர்) முழுப் பிரபஞ்சத்தின் இறைவனாக இருந்து மனித அவதாரம் எடுத்தவரா? இந்த வரி இராமரை முழுப் பிரபஞ்சத்தின் அதிபதியாக (விஷ்ணு) குறிப்பிடுகிறது. அவர் தெய்வீக இறைவனாக இருந்தாலும், மனிதர்களுக்கு மத்தியில் மனித உருவில் (மனுஜ அவதாரம்) அவதரித்தவர் என்று புகழ்கிறது. இது ராமரின் மனித உருவில் உள்ள தெய்வீகத் தன்மையை வலியுறுத்துகிறது.

இந்த வரிகள் இராமனையும் இலக்ஷ்மணரையும் தெய்வீக அவதாரங்களாக உயர்த்திப் புகழ்கின்றன. துளசிதாஸ், இராமனைப் பற்றி பேசும்போது, அவர் மூவுலகங்களையும் ஆளும் விஷ்ணுவின் அவதாரமாகவும், இலக்ஷ்மணரையும் நர-நாராயணரின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடுகிறார். இராமன் மனித உருவில் அவதரித்தாலும், அவரது தெய்வீகத் தன்மை மறைந்துவிடவில்லை; அவர் முழு பிரபஞ்சத்தின் இறைவனாகவே இருக்கிறார். இந்த வரிகள் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வைத் தூண்டி, ராமரின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. 

ஹனுமனுக்கு ஒரு சந்தேகம். இராமாவதார நோக்கத்திற்காக பிரம்மா, தேவர்களில் ஒரு பகுதியினரை குரங்குகளாகவும் கரடிகளாகவும் பிறப்பெடுத்து பூமியில் அந்த முழுமுதற் கடவுளுக்காகக் காத்திருங்கள் அன்று சொன்னாரே அந்த முழுமுதற்கடவுள் இவர்கள்தானா? என்று வியந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

இராமனிடம் கேள்வி

இராம இலக்ஷ்மணர்களை வணங்கிவிட்டு ஹனுமன் “சுவாமி! மகாவீரர்களான  நரநாராயணர்களே! அழகில் அஸ்வினி குமாரர் போலிருப்பவர்களே! தாங்கள் யார்? கருமேகம் போல நிறமுடைய  தாங்கள் யார்? அதில் பொலிந்திருக்கும்  (லக்ஷ்மி தத்வமாகிற) மின்னல் போல நிறமுள்ள தாங்கள் யார்? ஆயுதங்களைத் தரித்த க்ஷத்ரிய வீரர்களைப் போலவும், ராஜகுமாரர்கள் போலவும்,  ஜடாதரர்களாவும் வனத்தில் சஞ்சாரம் செய்கின்றீர்களே! உங்களுடைய பாதங்கள் மெல்லிய மலராலான பூமியைச் ஸ்பர்சித்ததும் சிவந்து போய் விடுமே? அப்பேர்பட்ட மேன்மையுள்ள மலர்ப் பாதங்கள் கடினமான மலைப்ரதேசங்களில் ஸ்பரிசம் செய்வதைப் பொறுக்க மாட்டாதவையன்றோ?  (தாங்கள் அரண்மனையின் சுகபோகங்கள் அனைத்தையும்  அனுபவிக்கத்தகுந்த இராஜகுமாரர்களாக இருந்தும்) வனத்தில் எதையோ தேடிக்கொண்டு அலைந்து போகிறீர்களோ? தாங்கள் எதை என்ன காரணத்தினால் தேடி அலைகிறீர்கள்? உங்களுக்கு சம்மதமிருப்பின் சுவாமி தயவு செய்து எனக்கு விளக்க வேண்டும். என்றான்.

Hanuman in America

வால்மீகியும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார்

ममैवाभिमुखं स्थित्वा पृच्छ त्वं हरिपुङ्गव।

प्रयोजनं प्रवेशस्य वनस्यास्य धनुर्धरौ॥ २६॥

அதாவது சுக்ரீவன் ஹனுமனிடம் வீரர்கள் இருவரும் எந்தக் காரணத்திற்க்காக இந்த வனத்தில் நுழைந்திருக்கின்றனர் என்று கேட்டுத் தெரிந்துகொள் என்று சொல்கிறான். அங்கு தான் ஒரு தூதன் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடந்து கொள்கிறான் ஹனுமன். சந்தித்த உடனேயே நேரடியாக இந்த விஷயத்தைக் கேட்காமல் அவர்களைப் புகழ்ந்து பேசிவிட்டு தங்களுடைய மென்மையான பாதங்கள் இந்தக்  கடின மலைப் பிரதேசங்களில் நடப்பதற்கு ஏற்றவை அல்லவே. அதையும் மீறி நீங்கள் இங்கு நுழைந்துள்ளதால் தங்களுக்கு என்ன பயன்? என்று நளினமாகப் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறான் ஹனுமன்.

.(இங்கு துளசி தாஸர் போடும் பதங்களைக் கவனிக்க வேண்டும். को तुम्ह स्यामल गौर सरीरा  இருவரில் இராமன் பெரியவன் இலக்ஷ்மணன் இளையவன். காரணம் இராமன் முன் செல்கிறான். இலக்ஷ்மணன் இராமனைத் தொடர்கிறான். இராமனின் உடலில் அதிக தேஜஸ் தெரிகிறது. அதனால் முதலில் இராமனை ஸ்யாம (கரிய மின்னல்) இலக்ஷ்மணனை கோர் (பொன்னிறத்தான்) என்று கிரமமாக அழைத்தான். துளசி தாசர் சொன்ன கருத்துக்களைத் தான் வால்மீகியும் சொல்லி இருந்தார்.)

सिंह विप्रेक्षितौ वीरौ महाबल पराक्रमौ |

शक्र चाप निभे चापे गृहीत्वा शत्रु नाशनौ || ४-३-९

उभौ योग्यौ अहम् मन्ये रक्षितुम् पृथिवीम् इमाम् || ४-३-१५

स सागर वनाम् कृत्स्नाम् विन्ध्य मेरु विभूषिताम्

महा प्रमाणौ विपुलौ तप्त हाटक भूषणौ || ४-३-१८

खड्गौ एतौ विराजेते निर्मुक्त भुजगौ इव |

(சிங்கம் போன்ற கூரிய பார்வையைக் கொண்டவர்களாகவும், வீரர்களாகவும், மகா பலசாலிகளாகவும், பராக்கிரமசாலிகளாகவும், இந்திரனின் வில்லைப் போன்ற வில்லை சுமந்திருப்பவர்களாக்வும் தோற்றமளிக்கும் நீங்கள் இந்த தேசத்திற்கு ஏன் வந்தீர்கள்? நான் உங்கள் இருவரையும் மொத்த அகிலத்தையும் காக்கும் தகுதி உள்ளவர்கள் என அறிகிறேன். கடல்கள், வனங்கள், விந்தியம், மேரு {போன்ற மலைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமண்டலத்தையும் ரக்ஷிப்பதற்கு பூமியையும் தகுதியானவர்கள் என்று உங்கள் இருவரையும் நான் கருதுகிறேன். சித்திரமானவையும், வழுவழுப்பானவையும், அற்புதமாகப் பளபளப்பவையுமான இந்த விற்கள் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தைப் போலப் பிரகாசிக்கின்றன.)

(துளசி  தாசர் कठिन भूमि कोमल पद गामी என்ற பதத்தைப் பயன் படுத்தி உள்ளார்.  தங்களுடைய மெல்லிய பாதங்கள் கல்லும், முள்ளும் நிறைந்த இந்த மலைப் பிரதேசத்தில் நடக்க ஏற்றவை அல்ல. அவை மிகவும் நோகும். உரையாசிரியர்கள் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது இவ்வளவு கடினமான பகுதிகளில் நடந்த பிறகும் தங்களுடைய பாதங்கள் மெல்லியதாக அழகாக இருக்கின்றன. தங்களுடைய பாதங்கள் படும் பூமியும் மிருதுவாக ஆகிவிடுகின்றது.. உண்மையாகவே தாங்கள் யார்? என்று கேட்கிறார் ஹனுமன். அவர்களின் பாதங்களைப் பற்றி துளசிதாசர் அவரின் கீதாவலி என்ற நூலில் அயோத்யா காண்டத்தில் சொல்லி உள்ளார் )

पथिक पयादे जात पङ्कज-से पाय हैं |

मारग कठिन, कुस-कण्टक-निकाय हैं ||

सखी! भूखे-प्यासे, पै चलत चित चाय हैं |

इन्हके सुकृत सुर-सङ्कर सहाय हैं ||

பாதயாத்திரை செய்யும் பயணியின் கால்கள்

தாமரை இதழ் போல மென்மையானவை

ஆனால் பாதை மிகக் கடினமானது –

வெயில், முள்ளு, கல், காட்டு முட்கள் நிறைந்தது

சகியே! பசியோடும் தாகமோடும்

இருந்தாலும் அவர்களது மனம் சோர்ந்து போவதில்லை

ஏனெனில், அவர்களுடைய முற்பிறவி புண்ணியமும்

இறைவனின் (சங்கரனின்) அருளும் துணையாக இருக்கின்றன!

to be continued……………………………………. 

எல்லன் ஓச்சுவா – அதிசயப் பெண்மணி! (Post No.15,779)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,779

Date uploaded in London – 24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

13-5-26 மங்கையர்மலரில் வெளியான கட்டுரை

எல்லன் ஓச்சுவா – அதிசயப் பெண்மணி!

ச. நாகராஜன்

உலகின் அதிசயப் பெண்மணி என்றும், விண்வெளி வீராங்கனை என்றும் புகழப்படும் எல்லன் ஓச்சுவா உலகப் பெண்மணிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒளி நட்சத்திரம் அல்லது விண் நட்சத்திரம்!

லடினா கேர்ல் என்றும் ஹிஸ்பானிக் உமன் என்றும் அழைக்கப்படுகிறார் இவர். லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களின் வழி வந்தவர் என்பதால் இவர் லடினா பெண்மணி ஆகிறார். ஸ்பெயினை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் வழி வந்தவர் என்பதால் ஹிஸ்பானிக் பெண்மணி ஆகிறார் இவர்.

விண்வெளியில் பறக்க ஆசை கொண்ட இவர் பலமுறை நாஸாவிற்கு தனது விண்ணப்பதை அனுப்பினார். மூன்று முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விண்வெளிக்கு பெண்மணிகளை அனுப்பும் திட்டமே இல்லை என்றது நாஸா.

ஆனால் இவர் விடவில்லை. நான் ஒரு ஸ்டெம் கேர்ள் என்றார் இவர்.

ஸ்டெம் என்றால் – STEM – Science, Technology, Engineering, Math – –  ஸயின்ஸ், தொழில்நுட்பம், எஞ்ஜினியரிங், மேதமேடிக்ஸ் – பெண்மணி என்றார் இவர்.

1958ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பிறந்த இவர் 1990ம் ஆண்டு நாஸாவால் விண்வெளி செல்லும் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாண்டியாகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் ஒரு ஆராய்ச்சியாளர்.

1991ம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாக விண்வெளி சென்றார். கம்ப்யூட்டர் மென்பொருள், ரொபாடிக்ஸ் போன்றவற்றிற்கு விண்வெளிக்கான தொழில்நுட்பத்தில் இவர் பொறுப்பாளராக இருந்தார்.

நான்கு முறை வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்ற இவர் மலைக்க வைக்கும் ஆயிரம் மணி நேரங்களை விண்ணில் கழித்தார். மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று போற்றப்பட்டார்.

2007ல் பணி ஓய்வு பெற்ற ஓச்சுவா நாஸாவின் ஜான்ஸன் ஸ்பேஸ் சென்டரில் துணை இயக்குநராகப் பதவி பெற்றார்.  விண்வெளி செல்லும்  வீரர் குழுவினருக்கும் விண்வெளி பயண இயக்கத்திற்குமான பணியகத்தில் இவர் இயக்குநராகவும் ஆனார்.

பத்துக்கும் மேற்பட்ட உயரிய அமெரிக்க விருதுகளைப் பெற்ற பெண்மணி இவர்.

இவர், பெண்மணிகளுக்கு உத்வேகமூட்டும் விதத்தில் நட்சத்திரங்களை அடைய பயப்படாதீர்கள் என்ற பொன்மொழியை உதிர்த்தார்.

பெரிதாகக் கனவு காணுங்கள் என்ற அறைகூவலை விடுத்த இவர் அனைத்துப் பெண்மணிகளும் ஸ்டெம் கேர்ள் ஆக வேண்டும் என்றார்.

பெரிய குறிக்கோளை முன் வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள் என்று கூறும் இவர் பெண்களைப் பார்த்து, “உங்களால் முடியும்” என்று அடித்துச் சொல்கிறார்.

எதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள் என்பது தான் இவர் தரும் விசேஷ உத்தியாகும்.

இவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே போகிறது!

**

Harappa Mohenjo-Daro Artifacts in Pakistan Museums –Part 3 (Post No.15,778)


Not Siva Lingas, but board game coins!

Aryan skeletons; not Dravidian

No rice, But Wheat

Not Lingas but Game coins

Hindu Rishi or Guru

Written by London Swaminathan

Post No. 15,778

Date uploaded in London –23 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Following pictures of Indus- Saraswati Valley are taken from a book published in Pakistan

Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN

Author – DR F A KHAN

Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI

John Marshall, Mortimer Wheeler and Ernest Mackay made false statements about Harapa and Mohenjo Dara excavations and misled the entire world. Because of their wrong conclusions no one can decipher the Indus script until this day.

The massacred skeletons were of Punjabi stature; so not of Dravidians.

The Shiva lingas are not Shiva Lingas, they are chess coins.

The script is not Dravidian; because Tamils never knew Indus river; Sangam Tamils knew only Ganga river and Himalayas.

They never mentioned Indus in any of their old books. Even the Yavanas in Sangam books referred only to Romans and not Greeks. Romans came by ships to Indian ports.

The Pakistani museums labelled Shiva lingas as board game coins.

No on bothered to explain why an African black lady with only one chain is dancing? Hindu dancers wear many chains, waist bands, anklets, bracelets etc

Toys

weights 

–subham-

Tags- Indus valley, Treasures ,Part 3, Karachi museum

धर्मो रक्षति रक्षितः Tirukkural Encyclopaedia- Chapter 8 (Kural 76 to 80) Post.No.15,777

Written by London Swaminathan

Post No. 15,777

Date uploaded in London –23 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Only one comment in this section; Valluvar also believes in the popular Sanskrit saying Dharmo Rakshathi Rakshitaha.

Tiru Valluvar reflects it in Kural 77. Translators used Righteousness, Justice Virtue, God of Virtue in this couplet which is Dharma in Sanskrit.

Sanskrit maxim, “Dharmo Rakshati Rakshitah” (धर्मो रक्षति रक्षितः), which translates to “Dharma protects those who protect it”. Rooted in ancient Hindu scriptures like the Manusmriti and the Mahabharata, it means that upholding righteousness, ethics, and moral duty ensures you are protected by those same principles

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Part 16

Chapter 8 Love or  The Possession of Love

76.Ignorant are they who hold that love is an ally to virtue alone, for even against the evils of the world, it is our only shield and armour—1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

***

76.The ignorant say that affection is appropriate only to righteousness;

But it will also inspire heroism, to be rid of evil— S M Diaz, I G of Police- SMD Year 2000

***

76.
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.– Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***


76.”Love is virtue’s friend” say know-nots
It helps us against evil plots.   Suddhananda Bharathiyar- SB     

***

76.The ignorant say that love is an aid to virtue, but it is also an aid to the avoidance of evil- EVS Publishers, Singapore- EVS. Year 1986

***

76.The foolish say ‘Love helps the good alone’;

But surely it is a help against evil too– H A Popley – HAP (not full book) Year 1931

***

76. அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

77.Behold how the sun scorches the worms that yonder creep and crawl; even so the wrath of the God of righteousness comes down upon the unloving— ANM+2

***

77.Even as the scorching sun dries up the boneless worm,

Righteousness will scorch life without affection— SMD

***

77,
As sun’s fierce ray dries up the boneless things,
So loveless beings virtue’s power to nothing brings.
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms. – GUP.

***


  77.Justice burns the loveless form
Like solar blaze the boneless worm.  – SB         

***

77.Even as the sun scorches the boneless body, so does the god of virtue torture the loveless man—- EVS.

***

77.As the sun’s heat burns up all the boneless things

So doth virtue burn up all loveless things—HAP

***
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

78.And behold a loveless heart dreaming of the blessings of home, it is like the fond dream of a withered tree breaking into leaves on the dry sands of a desert— ANM+2

***

78.The dead tree on the desert rocks will not put forth leaves;

Even so, life without love cannot flourish— SMD

***


78.
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert. – GUP.

***

 78.Life bereft of love is gloom
Can sapless tree in desert bloom?   – SB     

***

78.The flourishing of a home life without love is as impossible as  the flourishing of a parched up tree in a desert—– EVS.

***

78.To live the home-life with a loveless heart

Is like withered tree flowering in barren sand— HAP

***

78. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

79.Of what avail is the rounded perfection of a stately form, if love be not enthroned in the heart— ANM+2

***

79.If a man’s heart is devoid of love,

Of what avail are  the externals?— SMD

***
79.
Though every outward part complete, the body’s fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member. – GUP.

***


79.Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove.       – SB     

***

79.Of what avail are all the external features to those who have no love in the depths of their heart– EVS.

***

79.To those who lack the inward means of love

What use is there in any outward means ?—HAP

***


79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

80.Life throbs only with the warmth of love; verily he is a bundle of bones clad with skin who has not drunk the springs of love– ANM+2

***

80.Love is the quintessence of life; without it

A manis but a frame of bones covered with skin— SMD

***
80.
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin. – GUP.

***

80.The seat of life is love alone;
Or beings are but skin and bone!  – SB        

***

80.Only the body which is actuated by love is a fit dwelling place for the soul. The body of one in whom there is no love is but bones covered over with skin–– EVS.

***

80.The living soul subsists in love;

The loveless are but skin and bone—HAP

***
80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

to be continued………………………

Tags- धर्मो रक्षति रक्षितः Tirukkural Encyclopaedia- Chapter 8 (Kural 76 to 80) ,Part 16