அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம் -2 (Post.10,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,398

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் ஒரு புலவர் நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே எனக்கு  பலம் தருக என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியா னத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையு ம்  புலவர் குறிப்பிட்ட தன் காரணம்  என்ன என்பதைக் காண்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு –‘பலம்’

பட்டியல்  இதோ:

4.நெருப்பு

தீ (FIRE) என்பதை புகழ்ந்து வேதங்களில் ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் உள்ளன . பிராமணர்கள் வீட்டில் ஒரு காலத்தில் மூன்று யாக குண்டங்கள் இருந்தன என்று சங்கத் தமிழ் நூல்கள் சொல்லும் ; ‘முத்தீ அந்தணர்’ என்று சங்க நூல்கள் பிராமணர்களை புகழ்ந்து பாடும் . அதில் கார்ஹபத்யம் என்னும் அக்கினி அணையவே அணையாது. அதிலிருந்துதான் அவர்கள் யாக யக்ஞங்களுக்கு அக்கினி எடுப்பார்கள். ஒருவரின் இறுதிச் சடங்கின் போது அந்த அக்கினியால் சிதைக்கு தீ மூட்டுவர். அதற்கு முன்னர்  அவருடைய மகன், பேரக்குழந்தைகளுக்கு திருமணம் ஆகி இருந்தால் அதிலிருந்து அவர்களும் ஒரு சட்டிப்பானையில் ஒரு அக்கினி மூட்டி இருப்பர். இது அணையவே அணையாது. அதாவது பல நூறு தலைமுறைகளுக்கு வாழையடி வாழையாக அக்கினி தொடரும். மின்சார விளக்கும், தீப்பெட்டிகளும் இல்லாத காலத்தில் அடுப்பெரிக்கவும் இந்த அக்கினியே உதவியது. அது மட்டுமல்ல. பிராமணச்   சிறுவர்கள் தினமும் காலையில் அக்கினி மூட்டி ஸமிதாதானம் செய்கையில் எனக்கு ‘ஓஜஸ், தேஜஸ், வர்ச்சஸ் , மேதை போன்ற புத்தி’ தா என்று சொல்லி உடலில் பல இடங்களில் ஹோம சாம்பலை இட்டுக்கொண்டனர் . சுருக்கமாகச் சொல்லின் அக்கினி போல வாழ்வில் ஒளி நிரம்ப வேண்டினர்.

5.பிராமணன்

நெருப்புக்கு அடுத்தாற்போல் பிராமணனை வைத்திருப்பது சிறப்புடைத்து. ஏனெனில் பிராமணன், க்கும் சக்தி, அழிக்கும் சக்தி, இரண்டும் படைத்தவன் ; அகலாது அணுகாது தீக்காய்வார் போல அவர்களிடம் இருக்க வேண்டும். இதையே ஒரு தமிழ்ப் புலவர் ‘பழகினும் பார்ப்பாரை தீப்போல் ஒழுகு’ என்பார். எவரேனும் ஏதேனும் குற்றம் செய்தால் சபித்து விடுவார்கள்; அது பலித்துவிடும் ; நான் சொல்லுவது புத்தர் தம்ம பதத்தில் 26 ஆவது அதிகாரத்தில் சொல்லும் உண்மைப் பார்ப்பனரை ! பிராமணன் கொலை செய்தாலும் அரசனையே வீழ்த்தினாலும் அவனுக்கு தண்டனையை கிடையாது என்கிறார் புத்தர் தம்மபதத்தில்; இதையே மநுவும் செப்புவான். இது எல்லாம் ‘நடமாடும் தேவர்’= ‘பூசுரர்’ என்று ஸ்ம்ருதிகள் சொல்லும் உண்மைப் பார்ப்பனர் பற்றியது. சாணாக்கியன் போன்ற பலம் கொண்ட பார்ப்பனர் பற்றியது ; பிராமண விரோத நந்த வம்சத்தை வேரொடு பிடுங்கி எறியும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சாணக்கிய சபதம் செய்த பார்ப்பனனைப் போல பலம் தா! என்கிறார் புலவர்

(எச்சரிக்கை :– மது பான விடுதி , மாதர் கேளிக்கை விடுதி, மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடைக்குச் செல்லும் சென்னை பார்ப்பனர்களை ஒப்பிட்டு நொந்து போய் விடவேண்டாம்!)

6.சூரியன்

சூரியனைப் பற்றி அதிகம் எழுதத் தேவையே இல்லை ; அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் 12 முறை கீழே விழுந்து வணங்கி சூர்ய நமஸ்காரம் செய்ததால் கண் ஒளி கிடைத்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. மூன்று வருணத்தினர் பூணுல் அணிந்து, நாள் தோறும் 3 முறை சூரியனை வணங்கி காயத்ரீ மந்திரம் சொல்லி வணங் கினர் ; இதனால் எல்லோரும் மேதாவியாக இருந்தனர் . சூரியன் இருந்தால்தான் மழை பெய்யும்; தாவரங்கள் வளரும்; உணவு கிடைக்கும் ; கிருமிகள் அழியும் என்று வேத மந்திரங்களே விஞ்ஞான உண்மையையும் பேசுகின்றன .

7.யானை

யானையின் மகத்தான பலம் , நினைவு ஆற்றல் ஆகியன உலகப் பிரஸித்தம் . அது மட்டுமல்ல. “யானையால் யானையாத்தற்று” = ‘யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடி’ என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னதை வள்ளுவரும் குறளில் சொல்லுவதை காணலாம் .தமிழர்களின் ‘சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடி’ என்பதற்கு சமம் இது; கணபதியின் உருவத்தை யானையில் காண்பது இந்துக்களின் சிறப்பு

8.சிறுத்தை (Cheetah)

புலிக்கு உள்ள வீரம் சிறுத்தைக்கும் உண்டு. ஆயினும், புலியை விட சிறுத்தை ஒரு படி மேல்; இப்பொழுது ‘என்சைக்ளோபீடியா’, ‘கின்னஸ் புஸ்தக’த்தைத் திறந்து பார்த்தால் உலகிலேயே அதி வேகம் உடைய பிராணி சிறுத்தை என்பதை (Fastest Animal on Earth – Cheetah) அறிவோம். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர் இந்துக்கள். ஆகவே சிறுத்தை (Panther, leopard, Cheetah)  போல எனக்கு பலம் தா என்று அதிதி தேவியை வேண்டுகிறார் புலவர்/கவி/ ரிஷி/முனிவர்.

சிறுத்தைக்கு சீட்டா cheetah என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . இதுவே சம்ஸ்க்ருத, அல்லது தமிழ் சொல்லின் அடிப்படையில் பிறந்தது போலும் ; சித்ரக அல்லது சீறுவது என்ற இரண்டு வேர்ச் சொல்லுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

9.தங்கம்

தங்கம் என்ற உலோகம் இல்லாத பழைய கலாசாரம் உலகில் இல்லை. மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகங்களில் ஒன்று இது ;  தங்க பஸ்பம் சாப்பிட்டு 100 ஆண்டு வாழும் முறையையும் மனிதன் கண்டான். பெண்களும்  அதை அணிந்து மகிழ்ந்தனர்; மற்றவர்களை மகிழ்வித்தனர். சுடச் சுடரும் ஒளிரும் பொன் போல என்பதிலிருந்து இதன் சிறப்பு விளங்கும். ஞானிகளைப் பொறுத்தவரையில் காமினி ,காஞ்சனம் (பெண்ணும், பொன்னும் ) எதிரிகள் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் பல கதைகள் மூலம் விளக்குவார்; முனிவர்கள் ‘ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்று கீதையிலும் (6-8; 14-24)தாயுமானவர், சேக்கிழார் பாடல்களிலும் (பெரிய புராணம்) காண்கிறோம். ஆகவே தங்கமும் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. அது வீட்டில் இருந்தால் பலம் (asset)  என்பதை அறிந்தே அதை பெண்களின் உடலிலும் பூட்டினர்.

10.தண்ணீர்

உலகில் தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு. தண்ணீரைப்  பற்றியும் அதன் அற்புத குணங்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. தண்ணீரை ‘அமிர்தம்’ என்று வேதம் தொடர்ந்து புகழ்கிறது. அதை அப்படியே திருவள்ளுவரும் ‘அமிழ்தம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினால் பாடுகிறார். இந்துக்கள் பனி மூடிய இடங்களிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று சொல்லும் ஆட்களுக்கு ‘செமையடி, மிதியடி, தடாலடி’ கொடுக்கும் பாடல்கள் இவை. பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரே இனம் இந்துக்கள். நீரின்றி அமையாது உலகு என்ற வேதக் கொள்கையை அப்படியே வள்ளுவனும் சொன்னான். இன்றும் பிராமணர்கள், தினமும் மூன்று முறை தண்ணீரை வைத்து சந்தியாவந்தனம் செய்கின்றனர். வேதத்தில் உள்ள ஹோமியோபதி ஹைட்ரோதெரபி (Homeopathy and Hydrotherapy) பற்றி இதே ‘பிளாக்’கில் கட்டுரைகள் உள .

11. பசு

மனித இனத்துக்கு இந்துக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகள்:–

பசுமாடு, குதிரை, இரும்பு,  டெசிமல் சிஸ்டம் /தசாம்ச எண்கள் , யோகம், ஆயுர்வேதம்

இவை அனைத்துக்கும் சான்று உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் உளது. எகிப்திய, பாபிலோனிய,சீன, மாயா நாகரீகங்களில் அவை இல்லை. இருந்தாலும் போற்றும் அளவுக்கும் இல்லை; அவை போற்றப்படுவதும் இல்லை. கோ மாதாவும் பசும் பாலும் இந்துக்கள் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை

 12.ஆண்மகன்

ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையே இல்லை. ரிக் வேதம் முழுதும் எனக்கு ‘வீர மகன்’ பிறக்க வேண்டும் என்று பாடுகின்றனர். இன்றும் உலகில் மிகப்பெரிய தொழில் ராணுவம் ஏன் ? வீர மகன்கள் இருந்தால்தான் நல்லோர் வாழ முடியும். போர் புரிய மறுத்த அர்ஜுனனை உன் ஆண்மையை இழந்து பேடியாக மாறிவிட்டாயா? என்கிறார் கிருஷ்ணன். ஆக, புலவர் 22 டாபிக் topics குகளில் ஆண் மகன் (புருஷன் = பெர்சன் person is derived from purusha என்ற சொல்லின் மூலம்) என்பதையும் சேர்த்தத்தில் வியப்பில்லை

13.ரதத்தின் அச்சு

‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்று வள்ளுவன் சொன்ன வாக்கு இந்த வேத மந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதே; ‘அச்சு’ என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல். அதிலிருந்து பிறந்ததே ஆக்சிஸ் Axis என்னும் English  சொல். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற வாமன அவதாரக் கதையை விளக்குவதே ‘அச்சு’ உவமை. ‘தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே’; சிலர் அமைதியாக இருந்து பெரும்பணி ஆற்றுவார்கள் என்பதே இதன் பொருள். பெரிய தேருக்கு –திருவாரூர்த் தேருக்கு அச்சு கழன்றால் என்ன ஆகும்? ஆக. அச்சு போல என்னை ஆக்கு என்கிறார் புலவர். அச்சு போன்ற பலம்!

,14.எருது

சிந்து சமவெளியில் அதிகம் காணப்படும் முத்திரை எருது (BULL) . வேதம் முழுவதும் இந்திரனை எருது, காளை என்றே புலவர்கள் பாடுகின்றனர். காட்டு மிருகங்களில் சிங்கம் எப்படியோ ப்படி நாட்டு மிருகங்களில் எருது. இதனால்தான் கிருஷ்ணர் காளை அடக்கியதை சங்கத் தமிழ் நூலான கலித்தொகை பாடுகிறது ; மஞ்சு விரட்டு ,ஜல்லிக்கட்டு என்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இது பாகவத புராணத்தில் உளது; யாதவ குல மக்கள் இன்று வரை நமக்கு காத்து அளிக்கின்றனர். ‘காளை போல பலம் தா’ என்று புலவர் பாடுவதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

15.வாயு

வாயு வேகம், மனோ வேகம் என்பன  வேதம் முழுதும் வரும் உவமைகள். தமிழனும் இதே உவமையைக் கையாளுகிறான் புயற்காற்றைக் கண்டவர் களுக்கு இதன் பொருள் நன்கு புரியும் ; ஆக , காற்று போல பலம் தா என்பது ஒரு பொருள்; சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல (ஆக்சிஜன் ) நான் இருக்க வேண்டும் என்பது இன்னொரு பொருள்; ஏனெனில் பிராணாயாமம் என்னும் ஆயுளை அதிகரிக்கும் டெக்னீக்கைக் கண்டுபிடித்து நாம்தான்;  தினமும் அதை பிராமணர்களும் மூன்று வேளைகளில்  விதித்தது இந்து மதம்; அந்தக் காலத்தில் 3 வருணத்தாரும் செய்தது ‘சந்தியா வந்தனம்- பிராணாயாமம்’; இந்தக் காலத்தில் பிராமணர்களும் மறந்து வருவது கலியுகத்தின் தாக்கம். ‘மருத் தேவர்கள்’ பற்றிய பாடல்களில் மாருதியின் (காற்று தேவன்) புகழைக் காணலாம் .

16.மழை – .

மழையின் சிறப்பு, பலம், முக்கியத்துவத்தை வேதம், ‘பர்ஜன்யன்’, ‘மருத்’ பாடல்களில் வலியுறுத்துகிறது . வள்ளுவன், ‘வான் சிறப்பு’ என்ற பத்து குறள்களில் விளக்குகிறான். கபிலர் என்ற பிராமண புலவரோ அங்கதச் செய்யுளில்  .மழையை புகழ்கிறார் ; எல்லோரும் பாரி, பாரி என்று என் இப்படி பாரியையே பாடுகிறார்கள் ? உலகில் மாரியும் (மழை ) உளதே! என்பார்; ஆக, முனிவர் வேண்டுவது மழை போல சிறப்பு!

To be continued……………………………..

tags – அதர்வண வேதம், பிராணிகள் , பகுதி 2, பாடம்

இந்தியாவே, லெபனானிடமிருந்து பாடம் கற்பாயா? (Post.8813)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8813

Date uploaded in London – – 15 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தியாவே, லெபனானிடமிருந்து பாடம் கற்பாயா?

ச.நாகராஜன்

சேஷன் ஐயர் 21-1-2020 City Today News இல் எழுதியுள்ள கட்டுரை இது.

இந்தியாவைக் காப்பாற்ற Citizenship (Amendment) Act (CAA), 2019, National Register of Citizens (NRC)  – ஆகிய இந்த இரண்டும் தான் இந்தியாவின் கடைசிப் புகலிடம் என்பதை ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியரும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்! ஏன்? இதோ படியுங்கள்:

    லெபனான் – என்ன தப்பு நடக்கும் என்பதற்கு லெபனான் ஒரு சிறந்த உதாரணம்.

    1970களில் லெபனான், சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அதன் தலை நகரமான பெய்ரூட், ‘கிழக்கு திசையின் பாரிஸ்’ என்று அழைக்கப்பட்டது.

லெபனானில் உள்ள கிறிஸ்தவர்கள் உலகின் பழமையான கிறிஸ்தவர்கள். இவர்களுக்கு முந்தைய கிறிஸ்தவர்களாக நாம் சொல்லக் கூடியது ‘தி ஓரியண்டல் ஆர்தோடாக்ஸ் ஆல் ஆர்மீனியா’ அண்ட் ‘காப்ட்ஸ் ஆஃப் ஈஜிப்ட்’ ஆகியோர் மட்டுமே. (The Oriental Orthodox of Armenia and Copts of Egypt)

லெபனான் முற்போக்கு, பொறுத்துப் போகும் தன்மை பல்பண்பாட்டுச் சமூகம் கொண்ட நாடு – இன்றைய இந்தியாவைப் போல என்று சொல்லலாம்.

மத்திய கிழக்கில் உள்ள மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களைக் கொண்டது லெபனான். அங்கு தான் அராபியா முழுவதிலிருந்தும் குழந்தைகள் வந்து படிக்கின்றனர். பின்னர் அங்கேயே இருந்து வேலை பார்க்கின்றனர்.

லெபனானின் வங்கிகள் உலகின் சிறந்த வங்கி அமைப்புகளைச் சேர்ந்தது.

எண்ணெய் வளம் இல்லை என்றாலும் கூட நல்ல ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட நாடு லெபனான்.

   லெபனான் சமுதாயத்தின் முற்போக்குத்தன்மையை ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் வெளியான ஹிந்தி படமான ‘அன் ஈவினிங் இன் பாரிஸ்’ (An Evening in Paris)  என்ற படத்தை வைத்து அளக்க முடியும். இன்னொரு விஷயம், இந்தப் படமும் லெபனானில் தான் படமாக்கப்பட்டது!

        இப்போது ஒரு மோசமான கசப்பான உண்மையைப் பார்ப்போம்!

      லெபனானில் உள்ள இஸ்லாமியரின் ஜனத்தொகை படிப்படியாக உயர்ந்து வந்தது. கிறிஸ்தவ குடும்பங்களை விட இஸ்லாமிய குடும்பங்கள் ஏராளமான குழந்தைகளைப் பெற்றுத் தள்ளின.

      நல்ல கல்வி இல்லாமையால் அந்தக் குழந்தைகள் மெதுவாக பழமைவாதிகளாக ஆக்கப்பட்டனர்.

     ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஜோர்டானில் ஒரு அமைதியின்மை உருவானது; தாராள மனப்பான்மை உள்ள லெபனான் பாலஸ்தீனிய அகதிகளை உள்ளே வரச் செய்தது – இதற்கான காரணம அங்குள்ள முஸ்லீம் தலைவர்கள் ‘உண்மையான இரக்கத்தைக்’ காண்பிக்கச் சொன்னதால்!

      என்றபோதிலும் ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதில் லெபனானின் நிலைமை இன்றைய சிரியாவின் நிலைமைக்கு உள்ளானது.

     ‘அகதிகளாக’ உள்ளே நுழைந்த ஜிஹாதிகள் இனக் கலவரங்களைத் தூண்டி பழங்குடியினரான கிறிஸ்தவர்களைச் ‘சுத்தப்படுத்தும்’ வேலையில் இறங்கினர், எண்ணிக்கையில் அடங்காத சாவுகள் ஏற்பட்டன.

      இந்த வன்முறைக்கு ஆளானவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. லெபனானில் உள்ளவர்கள் அங்கிருந்து ஓடினர், ஓடினர், ஓடிக்கொண்டே இருந்தனர்!

    இப்படிப்பட்ட சாவுகளினாலும், வெளியேற்றத்தாலும் லெபனானில் இருந்த கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை 1970இல் 60%ஆக இருந்தது, முப்பதே வருடங்களில் 30 % ஆக ஆனது.

     இன்று, லெபனானிற்கு வெளியே வாழும் லெபனானியர்கள், சொந்த நாட்டிற்குத் திரும்ப உரிமை உள்ளவர்கள், முஸ்லீம் மெஜாரிட்டியினரால் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளனர்.

கதவுகள் இறுக்க மூடப்பட்டு விட்டன!

       இந்த துயரகரமான லெபனானின் கதை சமீப காலத்திய, முப்பதே வருடக் கதை தான்!

      இந்தியா லெபனானின் வரலாறிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.

ரோஹிங்யா மதவாதிகளிடமிருந்தும், பங்க்ளா தேச ஊடுருவிகளிடமிருந்தும் இந்தியாவின் உள்ளிருக்கும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

      இந்த (தீய) சக்திகளை எதிர்த்து அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவற்றை ஆதரிக்கும் கட்சிகள், நிறுவனங்கள், அமைப்புகள், மக்கள், நடிக, நடிகையர், ஊடகங்கள், செய்தித் தாள்கள் ஆகியவற்றை ஒதுக்கி உதற வேண்டும்.

 இந்த எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற Citizenship (Amendment) Act (CAA), 2019, National Register of Citizens (NRC)  – ஆகிய இந்த இரண்டும் தான் இந்தியாவின் கடைசிப் புகலிடம் என்பது இப்போது புரிகிறதா?

**

நன்றி : ட்ரூத் தொகுதி 88 இதழ் 8 28-8-2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

தமிழாக்கம் ச.நாகராஜன்

tags-  லெபனான், பாடம்

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்! (Post No 2653)

vivekananda saffron

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 22 March 2016

 

Post No. 2653

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

விவேகானந்தர் வழி

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும்  துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.

அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.

 

 

இதைத் தொடர்ந்து தனது அனுபவம் ஒன்றையும் அவர் கூறலானார்.

 

அவர் மேலை நாட்டுக்குச் செல்கையில் கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.

 

 

தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.

 

 

வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.

சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.

 

ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!

 

நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.

 

ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.இதைக் கூறி முடித்த ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.

 

அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.

 

ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.

 

 

ஸ்வாமிஜி கூறிய வழியில் நடக்க வேண்டியது நமது கடமை!

************

 

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-