இந்தியாவே, லெபனானிடமிருந்து பாடம் கற்பாயா? (Post.8813)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8813

Date uploaded in London – – 15 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தியாவே, லெபனானிடமிருந்து பாடம் கற்பாயா?

ச.நாகராஜன்

சேஷன் ஐயர் 21-1-2020 City Today News இல் எழுதியுள்ள கட்டுரை இது.

இந்தியாவைக் காப்பாற்ற Citizenship (Amendment) Act (CAA), 2019, National Register of Citizens (NRC)  – ஆகிய இந்த இரண்டும் தான் இந்தியாவின் கடைசிப் புகலிடம் என்பதை ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியரும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்! ஏன்? இதோ படியுங்கள்:

    லெபனான் – என்ன தப்பு நடக்கும் என்பதற்கு லெபனான் ஒரு சிறந்த உதாரணம்.

    1970களில் லெபனான், சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அதன் தலை நகரமான பெய்ரூட், ‘கிழக்கு திசையின் பாரிஸ்’ என்று அழைக்கப்பட்டது.

லெபனானில் உள்ள கிறிஸ்தவர்கள் உலகின் பழமையான கிறிஸ்தவர்கள். இவர்களுக்கு முந்தைய கிறிஸ்தவர்களாக நாம் சொல்லக் கூடியது ‘தி ஓரியண்டல் ஆர்தோடாக்ஸ் ஆல் ஆர்மீனியா’ அண்ட் ‘காப்ட்ஸ் ஆஃப் ஈஜிப்ட்’ ஆகியோர் மட்டுமே. (The Oriental Orthodox of Armenia and Copts of Egypt)

லெபனான் முற்போக்கு, பொறுத்துப் போகும் தன்மை பல்பண்பாட்டுச் சமூகம் கொண்ட நாடு – இன்றைய இந்தியாவைப் போல என்று சொல்லலாம்.

மத்திய கிழக்கில் உள்ள மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களைக் கொண்டது லெபனான். அங்கு தான் அராபியா முழுவதிலிருந்தும் குழந்தைகள் வந்து படிக்கின்றனர். பின்னர் அங்கேயே இருந்து வேலை பார்க்கின்றனர்.

லெபனானின் வங்கிகள் உலகின் சிறந்த வங்கி அமைப்புகளைச் சேர்ந்தது.

எண்ணெய் வளம் இல்லை என்றாலும் கூட நல்ல ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட நாடு லெபனான்.

   லெபனான் சமுதாயத்தின் முற்போக்குத்தன்மையை ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் வெளியான ஹிந்தி படமான ‘அன் ஈவினிங் இன் பாரிஸ்’ (An Evening in Paris)  என்ற படத்தை வைத்து அளக்க முடியும். இன்னொரு விஷயம், இந்தப் படமும் லெபனானில் தான் படமாக்கப்பட்டது!

        இப்போது ஒரு மோசமான கசப்பான உண்மையைப் பார்ப்போம்!

      லெபனானில் உள்ள இஸ்லாமியரின் ஜனத்தொகை படிப்படியாக உயர்ந்து வந்தது. கிறிஸ்தவ குடும்பங்களை விட இஸ்லாமிய குடும்பங்கள் ஏராளமான குழந்தைகளைப் பெற்றுத் தள்ளின.

      நல்ல கல்வி இல்லாமையால் அந்தக் குழந்தைகள் மெதுவாக பழமைவாதிகளாக ஆக்கப்பட்டனர்.

     ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஜோர்டானில் ஒரு அமைதியின்மை உருவானது; தாராள மனப்பான்மை உள்ள லெபனான் பாலஸ்தீனிய அகதிகளை உள்ளே வரச் செய்தது – இதற்கான காரணம அங்குள்ள முஸ்லீம் தலைவர்கள் ‘உண்மையான இரக்கத்தைக்’ காண்பிக்கச் சொன்னதால்!

      என்றபோதிலும் ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதில் லெபனானின் நிலைமை இன்றைய சிரியாவின் நிலைமைக்கு உள்ளானது.

     ‘அகதிகளாக’ உள்ளே நுழைந்த ஜிஹாதிகள் இனக் கலவரங்களைத் தூண்டி பழங்குடியினரான கிறிஸ்தவர்களைச் ‘சுத்தப்படுத்தும்’ வேலையில் இறங்கினர், எண்ணிக்கையில் அடங்காத சாவுகள் ஏற்பட்டன.

      இந்த வன்முறைக்கு ஆளானவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. லெபனானில் உள்ளவர்கள் அங்கிருந்து ஓடினர், ஓடினர், ஓடிக்கொண்டே இருந்தனர்!

    இப்படிப்பட்ட சாவுகளினாலும், வெளியேற்றத்தாலும் லெபனானில் இருந்த கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை 1970இல் 60%ஆக இருந்தது, முப்பதே வருடங்களில் 30 % ஆக ஆனது.

     இன்று, லெபனானிற்கு வெளியே வாழும் லெபனானியர்கள், சொந்த நாட்டிற்குத் திரும்ப உரிமை உள்ளவர்கள், முஸ்லீம் மெஜாரிட்டியினரால் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளனர்.

கதவுகள் இறுக்க மூடப்பட்டு விட்டன!

       இந்த துயரகரமான லெபனானின் கதை சமீப காலத்திய, முப்பதே வருடக் கதை தான்!

      இந்தியா லெபனானின் வரலாறிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.

ரோஹிங்யா மதவாதிகளிடமிருந்தும், பங்க்ளா தேச ஊடுருவிகளிடமிருந்தும் இந்தியாவின் உள்ளிருக்கும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

      இந்த (தீய) சக்திகளை எதிர்த்து அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவற்றை ஆதரிக்கும் கட்சிகள், நிறுவனங்கள், அமைப்புகள், மக்கள், நடிக, நடிகையர், ஊடகங்கள், செய்தித் தாள்கள் ஆகியவற்றை ஒதுக்கி உதற வேண்டும்.

 இந்த எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற Citizenship (Amendment) Act (CAA), 2019, National Register of Citizens (NRC)  – ஆகிய இந்த இரண்டும் தான் இந்தியாவின் கடைசிப் புகலிடம் என்பது இப்போது புரிகிறதா?

**

நன்றி : ட்ரூத் தொகுதி 88 இதழ் 8 28-8-2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

தமிழாக்கம் ச.நாகராஜன்

tags-  லெபனான், பாடம்

INDEX 31 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post.8812)

MORE PICTURES FROM SIVA PURANA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8812

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8700 PLUS POSTS.

JUNE  2015 INDEX OF TAMIL ARTICLES

31 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் , 29 ஜூன், 2015, போஸ்ட் 1961

உயிர் மெய் எழுத்துக்களைக் கண்டுபிடித்தது தமிழனா? , 28/6; 1959

ஐந்து மக்கள்- பஞ்ச ஜனாஹா யார்? ; ரிக் வேதத்தில் மர்மம் நீடிக்கிறது, 1957; 27/6

ரிக்வேதத்தில் லஞ்ச ஊழல், 155; 26/6

ரிக் வேத சரமா கிரீஸ் நாட்டுக்குப் போனது எப்படி? 1953; 25/6

ஆங்கில கலெக்டருக்கும் முஸ்லீம் அரசருக்கும் ஸ்ரீ ராமர் தரிசனம், 1951, 24/6

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு; 1949; 22/6

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் யார்? , 22/6; 1947

ஹிட்லரும் சோ திடரும்;  புத்திசாலி சோதிடர்  , 1943; 20/6

மூளையில் ஆபரேஷன் ; புராதன இந்தியர் சாதனை , 1938; 18/6

வேதத்தின் மீது கை வைத்த 35 வெளிநாட்டு அறிஞர்கள்-2 , 1935; 16/6

வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு அறிஞர்கள்-1 , 1933; 15/6

லண்டனனைக் கலக்கிய அற்புதத் தேர்த் திருவிழா , 1932, 14/6

கீதை, வேதம் பற்றிய பழமொழிகள் , 1927, 12/ 6

துருக்கியை ஆண்ட ஹிட்டைட்ஸ்கள்  இந்துக்களா? , 1924, 11/6

நீ அவல் கொண்டு வா, நான் நான் உமி கொண்டுவருகிறேன் , 10/6; 1922

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள், 1920, 9/6

ரோம் கிரீஸில் வாஸ்து கடவுள் , 1918, 8/6

கணித மேதை, அழகி, உயிரிழந்த சோகக் கதை; 1916; 7/6

தமிழ்க் கவிதை வடிவில் ரிக்வேதம் , ஒரு அரி ய நூல் , 1912, 5/6

கம்போடிய மொழியில் தமிழ், சம்ஸ்க்ருதச் சொற்கள் , 1907, 3/6

ரிக்வேதத்தில் பத்து ராஜா யுத்தம், 1905, 2/6

இந்தப் பூவுலகில் யாராலும் வேதத்தின் காலத்தைச் சொல்ல முடியாது –

மாக்ஸ்முல்லர் ,1902, ஜூன் முதல் தேதி, 2015

Xxxxx

JUNE  2015 INDEX OF ENGLISH ARTICLES

Vishnu’s Simple Test to Narada, Post 1964;30 June 2015

S .Nagarajan articles already indexed here, Posts 1963,1945, 1941, 1937, 1929, 1926, 1911; 1914 , 1909; 1904;

Oldest Girls’ Names in the World and No. 8 Mystery , Post 1962,29/6

Swami Chinmayananda Quotations, 28/6;1960

Vowels = Life, Consonants = Body ; Hindu Concept of Alphabet from Vedic Days, Post 1958;27/6

One More Mystery in the Rig Veda: Who are the Pancha Janah ? Post 1956; 26/6

Oldest Bribery in the World! Rig Veda speaks of Bribes Post 1954;25/6

Vedic Sarama and Greek Hermes, 24/6; 1952

Seclusion of women in Hinduism, Post 1950;23/6

Four Stories: Gods Love for His Devotees, 1948;22/6

Indian Poet’s Favourite Topic: Instability of Riches ,Youth and Body, Post 1946;21/6

Plato used Hindu Microcosm and Macrocosm, Post 1944;20/6

Reward for beating Guru, Post 1942;19/6

Amazing Medical Information in Hindu Vedas,1940:18/6

Brain Surgery in Ancient India: Bhoja and Indus Valley,

Post 1938;17/6

Astrologer’s Prediction of Adolf Hitler, 16/6 , 1936

Easy way to become a Philosopher, Post 1934; 15/6

Wonderful Chariot Festival in London, Post 1931: 14/ 6

Prayer Anecdotes from America, post 1930; 13/6

More Proverbs, More Stories, Post 1928;12/6

Science and Religion in Upanishads, Post 1925; 11/6

Hittites Mystery: Were they Hindus? Post 1923: 10/6

Kalidasa’s Famous Quotations, Post 1921; 9/6

Dakshina Meru! 216 ft. Tall Brihadeeswarar Temple!! Post 1919;8/6

Hindu Vastu God in Rome and Greece, Post 1917; 7/6

Murder of a Beautiful Mathematician, Post 1916;6/6

Queen who bolted the door doubly against a Tamil Poet’s Song Post 1913; 5/6

Honey Therapy and Hot Water Therapy in Vedic period, Post 1910;4/6

Stories behind Five Tamil Proverbs, Post 1908; 3/6

Sanskrit and Tamil words in Cambodian language, Post 1906; 2/6

Battle of Ten Kings in Vedic Times, Post 1903, first June, 2015

To be continued……………………………….

tags – index 31, June 2015, swaminathan 

சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும் – PART 2 (Post .8811)

WORLD’S FIRST FLYING DOCTOR; HANUMAN WITH HIMALAYAN HERBS

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8811

Date uploaded in London – – 14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SECOND PART OF TALK BY KATTUKUTY SRINIVASAN AT FACEBOOK.COM/ GNANAMAYAM

வாதம் அதிகமானால் உடலில் தோன்றும் மாற்றங்கள்

உடல் இளைத்து கறுத்தல்

சூடான பொருள்களில் விருப்பம்

உடல் நடுக்கம்

உடல் உப்பல்

மலக்கட்டு

தூக்கம் கெடல், தலை சுற்றல்

வாய் பித்தம்

எதிலும் ஊக்கமின்மை

வாதம் குறைந்தால்

உடலில் நோய்

தாழ்ந்த குரல்

அறிவு மங்கல்

உடலில் வேகக் குறைவு.

மூர்ச்சை உண்டாகுதல்

பித்தம் அதிகமானால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்

கண், மலம், சிறு நீர், தோல், முதலியவற்றில் மஞ்சள் நிறம் காணுதல்

பசி, நீர் வேட்கை அதிகமாகுதல்

உடலில் எப்பொழுதும் ஒரு எரிச்சல்

குறைந்த தூக்கம்

பித்தம் குறைந்தால்

மந்தாக்கினி

உடலில் குளிர்ச்சி

நிறக்குறைவு

கபம் அதிகமானால் உடலில் தோன்றும் மாற்றங்கள்

அக்னி மந்தப் படல்

வாயில் நீர் ஊறுதல்

உடலில் ஊக்கம் குறைதல்

உடல் கனமாகத் தோன்றுதல்

உடல் வெண்ணிறமடைதல்

உடல் குளிர்ச்சியடைதல்

இரைப்பு,இருமல் உப்பிசம்

மிகு தூக்கம்

கபம் குறைந்தால்

தலை சுற்றல்

மூட்டுகளில் பசை நீங்கி வலி

நுரை ஈரலில் நீர் குறைதல்

மயிர்கால்களில் வியர்வை

நெஞ்சில் ஒரு படபடப்பு

இப்பொழுது நீங்கள் கண்டு பிடித்தருப்பீர்கள் நீங்கள் வாத சரீரமா,

பித்த சரீரமா, கப சரீரமா என்று. நீங்கள் என்னன்ன உணவுகள்

உட்கொள்ளலாம் , உடகொள்ளக் கூடாது என்பதை கீழ்கண்ட

அட்டவணை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தினால் உள்ள பயன்கள்

சித்த மருந்துகள் பெரும்பாலானவை தாவர வர்கத்திலுள்ள இலை,

தழை,மரம்,காய், கனி, பூ, வேர் முதலியவற்றால் ஆனது.

ஆகையினால் விலை மலிவு.

பொருள்கள் கிடைப்பது வெகு சுலபம்

மருந்து செய் முறையும் மிக சுலபம்

ஒரு மருந்தை பல வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம். அதற்கு பெயர் “அனு பானம்”

உதாரணமாக கடுக்காய் தூளை வெறம் தண்ணீருடன் சாப்பிட்டால்

ஒரு வியாதியும், மோருடன் சாப்பிட்டால் மற்றொரு வியாதியும்,தேனுடன் கலந்து

சாப்பிட்டால், வேறு வியாதியும் குணமாகும்.

சுலபமாகவும், குறுகிய காலத்திலும், மருந்துகளைத் தயாரிக்க முடியும்

மருந்துகளைத் தயாரிக்க ஆங்கில அறிவோ, இஞ்சினீயரிங், டெக்னாலஜியோ

தேவை இல்லை.

தயாரிக்க மின்சாரமோ, விலை அதிகமுள்ள கருவிகளோ தேவையில்லை.

தேவை- ஒரு அம்மி, ஒரு குழவி அல்லது ஒரு உரல், ஒரு உலக்கை

அவ்வளவுதான்!!!

மனிதர்களுக்கு வரக்கூடிய மொத்த வியாதிகளின் எண்ணிக்கை

4 4 4 8.!!!.இதற்கு மேல் கிடையாது. எல்லாவற்றிற்கும் மருந்து

உண்டு.வேறு எந்த மருத்துவமும் இப்படி ஆணித்தரமாக சொல்லவில்லை.

சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப் பட்ட மருந்துகள் பல ஆண்டுகள் கெடாது

சித்த மருத்துவ மருந்துகளுக்கு “புற விளைவுகள்” (SIDE EFFECTS) கிடையாது

அதிகமாக அறுவை சிகித்சைகள் கிடையாது.

மருந்து வாங்க டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தேவை இல்லை

இவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடிய, விலைகுறைந்த, சித்த மருத்துவப்

பொருள்களிருந்தும், சித்த மருத்துவம் ஏன் இன்னும் பிரபலமடையவில்லை????

காரணங்கள்

சித்த மருத்துவர்கள் தமக்குத் தெரிந்த சிறந்த மருத்துவ முறைகளை

மற்றவர்களுக்குக் கூறாமல் மறைத்து வருகின்றனர்.

சித்தர்களின் ஆராய்ச்சிகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் அருமை

தெரியாதவர்களிடம் சிக்கி சீரழிந்து சீந்துவாரின்றி கிடக்கிறது.

ஓலைச் சுவடிகள் சாதாரணமாக புரியக்கூடிய நடையில் எழுதப் படவில்லை.

மருத்தவ ரகசியம் தெரிந்தவர்கள் முன்வந்து விளக்கம் கூறாமல் இருக்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கின்றனர்.

நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தல்

கடுமையான பத்தியங்களை விதித்தல்

இவற்றையெல்லாம் கண்ட அரசாங்கம் சித்த மருத்துவர்களிடம்,

சித்த வைத்தியத்திலும் நம்பிக்கையில்லாமல்

இதை பரப்புவதில் ஊக்கமின்மையுடன் இருத்தல்.

பரம்பரை மருத்துவர்கள் தனக்குத் தெரிந்த மருதுவத்தை வெளிப்படுத்தாமல் இருத்தல்

வெளி நாட்டினர் நமது மருத்துவத்தின் சிறப்பையும், குணமாக்கும் தன்மை அறிந்து

அந்தப் பொருள்களை நமது அரசாங்கத்திடம் பணம் கொடுத்து உரிமை வாங்கி

நம்மை செய்யவிடாமல் தடுத்ததுடன், அதிக விலையில் நம்மிடமே. விற்கிறார்கள்.

நாம் நமது மருத்துவத்தின் பெருமையை உணர்ந்து, சித்த மருத்துவத்தின்

பொருள்களை வாங்கி, உடல் ஆரோக்கியத்துடன்

வாழ்ந்து,நம்தமிழ் நாட்டின் பெருமையை உலகிற்கு உணரச்செய்ய

எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

                               ***

TALK BY KATTUKUTY SRINIVASAN AT FACEBOOK.COM/ GNANAMAYAM

TAGS- சித்த மருத்துவம்- PART 2 

தமிழில் பகவத் கீதையை படிக்க எந்த நூல் சிறந்தது? (Post No.8810)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8810

Date uploaded in London – – 14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்களன்றும் லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சிக்கு (facebook.com/gnanamayam) அனைவரையும் அழைக்கிறோம். இதில் கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. 12-10-2020 திங்கள்கிழமையன்று நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் இங்கு தரப்படுகிறது.

பகவத் கீதையை தமிழில் படிக்க எந்த நூல் சிறந்தது?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பகவத் கீதையை தமிழில் படிக்க எந்த  நூல் சிறந்த நூல் என்பது கேள்வி.

தமிழில் பகவத்கீதையை விளக்க பல சிறந்த நூல்கள் உள்ளன.

மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் தோய்ந்தவர். அதன் முழு அர்த்தத்தையும் நன்கு கிரஹித்தவர்.

இதை அவரது பல பாடல்களிலும் காணலாம்.

பகவத் கீதையின் சாரத்தை அவர் இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்.

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.

மாம் அனுஸ்மர ; மாம் ஏகம் சரணம் வ்ரஜ

PICTURE OF S NAGARAJAN

என்னையே தொடர்ந்து நினை; என் ஒருவனையே சரணமாக அடை என்பது கீதையில் கண்ணன் வாக்கு.

கர்மண்யேவாதிகரஸ்தே மா ஃபலேஷு கதாசன – கர்மம் செய்வதிலே தான் உனக்கு அதிகாரம்; அதன் பயனில் ஒருபோதும் இல்லை என்பதும் கண்ணபிரானின் அருள்வாக்கு. இதையே மேலே கண்ட இரு வரிகளில் மஹாகவி தந்தார்.

அது மட்டுமல்ல.

செய்தல் உன் கடனே – அறம்

செய்தல் உன் கடனே – அதில்

எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே

என்று வேறு விளக்கமாக அவர் இன்னொரு பாடலில் எடுத்துரைத்திருக்கிறார்.

சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது என்ற நீண்ட பாடலில் பகவத்கீதையின் ஆரம்பத்தை அப்படியே இனிய சொற்களால் தரும் பாரதியார், “பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல்

ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக” என்ற கீதாசார்யனின் வரிகளை முன் வைக்கிறார். “க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த. உத்திஷ்ட பரந்தப” என்ற வார்த்தைகளை இப்படி மெய் சிலிர்க்கும் வண்ணம் தருகிறார் அவர்.

ஆக இப்படி பகவத் கீதையில் தோய்ந்த அவரது விளக்கவுரை படிக்கப் படிக்கத் திகட்டாதது. கீதைக்கு அவர் எழுதிய முன்னுரை அபாரமான, அற்புதமான முன்னுரை. ஆகவே பாரதியாரின் பகவத் கீதை நூலை முதலாவதாகப் படிக்கலாம்.

கீதா பிரஸ் கோரக்பூர் பகவத் கீதைக்கு ஆற்றி வரும் அரிய தொண்டு சொல்லில் விளக்க முடியாத ஒன்று.

பகவத் கீதை புத்தகத்தை பல லட்சம் பிரதிகள் அச்சடித்து விநியோகித்து அது ஆற்றி வரும் பணி மெய் சிலிர்க்க வைக்கும் அரும் பணி.

கீதா பிரஸை நிறுவிய ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா அவர்கள், பகவத்கீதைக்கு வழங்கியுள்ள சிறந்த ஆங்கில விளக்கவுரையின் சிறப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இவரது கீதை பற்றிய ஸ்ரீமத் பகவத் கீதை என்ற நூல் கீதை ஸ்லோகத்தின் மூலம், தமிழில் பதவுரை, பொழிப்புரை ஆகியவற்றுடன்   கீதா பிரஸ் வெளியீடாக கிடைக்கிறது. இதை உடனடியாக வாங்கிப் படிக்கலாம்.

அடுத்து காலத்திற்கேற்ப அற்புதமாக கீதையின் சாரத்தை மிக அழகாக விளக்கி சுவாமி சித்பவானந்தர் எழுதிய ஸ்ரீமத் பகவத் கீதை என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அருமையான விளக்கவுரை; எளிய அனைவருக்கும் புரியும்படியான தமிழ்.

திருச்சியை அடுத்துள்ள திருப்பராய்துறையில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடாக அமைந்துள்ள இந்த நூலை உடனடியாக வாங்கலாம்; ஏனெனில் இது ஒரு வாழ்க்கைத் துணைவன்.#

அடுத்து சென்னை ராமகிருஷ்ண மட வெளியீடாக அமைந்துள்ள அண்ணா அவர்களின் பகவத் கீதை புத்தகம் குறிப்பிடத் தகுந்தது. பாரம்பரியத்துடனான அர்த்தத்தை இதில் காணலாம். அண்ணா சுப்ரமண்ய ஐயர் அவர்களின் எந்த நூலும் நல்ல நூலே.

அடுத்து சென்னை லிப்கோ நிறுவனத்தார் வெளியிட்டுள்ள பகவத் கீதை நூலானது, மூல ஸ்லோகத்தையும அதன் கீழ் அர்த்தத்தையும் தரும் ஒரு நல்ல நூல். இதில் தமிழுரையைத் தருபவர் வித்வான் ஸ்ரீ உ.வே. கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள்.

பகவத் கீதை ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிப்பதால் ஏற்படும் பயன் என்ன என்பதை பத்ம புராணம் விளக்குகிறது. அதில் கூறப்படும் கதைகளும் இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.

    பகவத் கீதை பற்றி வினோபா பாவே அவர்களின் நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். 1932ஆம் ஆண்டு வினோபா பாவே மஹாராஷ்டிர மாநிலத்தில் தூலியா என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது சக அரசியல் கைதிகளுக்கு பகவத் கீதை என்ன சொல்கிறது என்பதை சொற்பொழிவுகள் மூலம் விளக்கி வந்தார். மராத்தி மொழியிலிருந்து இது தமிழாக்கம் செய்யப்பட்டு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த நூலில் அருமையான உதாரணங்களும், விளக்கங்களும் அடங்கியுள்ளன. இதுவும் படிக்க வேண்டிய ஒரு நல்ல நூலே.

   இன்னும் பல ஆசாரியர்கள் தம் தம் கோணத்தில் கீதையை விளக்க எழுதியுள்ள நூல்களும் பல உள்ளன.

 ஸ்ரீ சத்யசாயிபாபா, ஸ்வாமி விவேகானந்தர், மஹரிஷி அரவிந்தர், சுவாமி சின்மயாநந்தர், சுவாமி ஸ்ரீ பிரபுபாதா உள்ளிட்ட ஏராளமானோரின் உரைகளும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றையும் அவரவர் தம்தம் வசதிக்குத் தக வாங்கி கீதை பற்றிய நூலகத்தையே வீட்டில் அமைத்து கீதையில் ஆழ்ந்து மூழ்கலாம்.

ஜய பகவத் கீதே ஜய பகவத் கீதே என்று பாடி கீதையை ஆராதித்து கீதை காட்டும் பாதையில் கண்ணனையே சரணாகதியாக அடையலாம்.

நன்றி, வணக்கம்.

tags – பகவத் கீதை, தமிழில், தமிழ்

***

TWO NEW BOOKS ON ALVARS INTRODUCED (POST 8809-D)

‘HURTING NONE; BRINGING ALL HEARTS TOGETHER’- KANCHI SRI SHANKARACHARYA PRAISED THE SERVICE OF BHARATIYA VIDHYA BHAVAN IN STRENGTHENING UNITY

WRITTEN BY LONDON SWAMINATHAN (News Editor, Producer, Gnanamayam)

Post No. 8809 -D

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HIGHLIGHTS OF 12-10-2020 ‘GNANAMAYAM’ BROADCAST

ENGLISH NEWS BULLETIN, TAMIL NEWS BULLETIN AND BANGALORE NEWS BULLETIN ARE GIVEN AS

8809- A, B, C

DR NANDAKUMARA OF B V BHAVAN, LONDON FELICITATED

READERS CAN GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO NEWS AND TALKS.

OTHER HIGHLIGHTS OF 12TH OCTOBER 2020 BROADCAST ON FACEBOOK.COM/GNANAMAYAM:–

DR N KANNAN, PROFESSOR OF CHEMISTRY AND FOUNDER OF TAMIL HERITAGE FOUNDATION , INTRODUCED HIS TWO TAMIL BOOKS ON ALVARS

KANCHI SHANKARACHARYA SRI VIJAYA INDRA SARASWATI FELICITATED DR NANDAKUMARA OF BHARATIYA VIDHYA BHAVAN, LONDON

SATHYARTHI CHANDRASEKARAN, JAPANESE LANGUAGE EXPERT, READ LISTENERS LETTERS

SATHYARTHI

A.GOVINDN, OUR SPECIAL REPORTER FROM MADURAI, SENT A REPORT ON SRI MEENAKSHI SUNDARESWARAR TEMPLE

MAYURAKIRI SHARMA OF JAFFNA, SRI LANKA SPOKE ABOUT HIS  132 YEAR OLD TAMIL MAGAZINE HINDUSATHANAM

EARLIER JAYASHRI UMASANKAR RENDERED A PRAYER ON LORD GANAPATHY

HARROW SRIDHAR OPERATED THE STUDIO AND BROADCAST

PICTURE OF HARROW SRIDHAR, OUR STUDIO ENGINEER

PICTURE OF SRI KALYANA SUNDARA SIVACHARIYAR 
PICTURE OF LONDON SWAMINATHAN, PRODUCER, NEWS EDITOR

SRI KALYANA SUNDRA SIVACHARYAROF VEDAGAMA ACADEMY AND WORLD HINDU ORGANISATION ORGANISING THE GNANAMAYAM BROADCAST EVERY MONDAY.

LONDON SWAMINATHAN, NEWS EDITOR AND PRODUCER, COORDINATED THE PROGRAMMES.

QUESTION AND ANSWERS PRESENTED BY S SRINIVASAN AND S NAGARAJAN ARE BLOGGED SEPARATELY.

NEWS BULLETINS READ BY SUJATHA RENGANATHAN, VAISHNAVI ANAND AND BRIHANNAYAKAI SATHYANARAYANAN ARE BLOGGED SEPARATELY.

PICTURE OF JAYASHRI UMASANKAR 
DR N KANNAN, AUTHOR OF TWO BOOKS.

PLEASE MEET AND JOIN  US EVERY MONDAY.

IF YOU WANT TO JOIN OUR TEAM AND BECOME A BROADCASTER, PLEASE CONTACT US. WE ARE STARTING WORLD TAMIL BROADCASTING CORPORATION FOR ONE HOUR NEW TAMIL BROADCAST.

PICTURE OF MAYURAKIRISHARAMA, EDITOR OF THE MAGAZINE

ஞானமயம் வழங்கும் மதுரை செய்தி மடல்

வழங்குவது மதுரையிலிருந்து ஏ.கோவிந்தன்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் செப்டம்பர் முதல் தேதி முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

சில வழிகாட்டுதல் நெறிகள் தரப்பட்டுள்ளன.

பழம்பெரும் ஆலயமான மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் செப்டம்பர் முதல் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரானா தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஆலயம் இப்போது திறக்கப்பட்டிருப்பதையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அன்னை மீனாட்சி, அருள்மிகு சுந்தரேஸ்வரரை தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

காலை 6.30 மணி  முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலில் தரிசனம் செய்யலாம்.

இணையதளம் மூலமாகவும் நேரிலும் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்குவோர் தெற்கு கோபுரம் வாயில் வழியே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.

இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் கிழக்கு வாயில் அதாவது அம்மன் சந்நிதி வாயில் வழியே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.

பக்தர்கள் கிருமிநாசினியைப் பயன்படுத்தல் வேண்டும். அத்தோடு முக கவசம் அணிந்து ஆலயத்திற்குள் வர அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

காவல்துறையினர் பரிசோதனையும் உண்டு. சமூக இடைவெளியையும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

பத்து வயதுக்குக் கீழ்ப்பட்டோரும் முதியோர்களும் கர்ப்பிணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருதி ஆலயத்திற்கு வருகை புரிதலைத் தவிர்க்கலாம்.

அம்மனை தரிசித்து சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

சுவாமியை தரிசனம் செய்த பின்னர் அம்மன் சந்நிதி வழியே பக்தர்கள் வெளியே செல்லலாம்.

வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் சிறிது நேரத்தில் தரிசனம் செய்து பக்தர்கள் வெளியேறுகின்றனர்.

பொற்றாமரைக் குளத்தின் அருகே பக்தர்கள் அமர இப்போது அனுமதி இல்லை.

அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக இருப்பதால் பக்தர்கள் திருப்தியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

நன்றி வணக்கம்.

 XXXX

Listeners Letters 12-10-2020

நிறைய நேயர்கள் டெலிபோன் மூலமும், FACE BOOK பேஸ் புக் வழியாகவும் நமது நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளனர்  செய்தி அறிக்கை முதல் இறுதிவரை ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளையும்  பாராட்டி எழுதியும் உள்ளனர் எல்லாவற்றுக்கும் மேலாக வாரம் தூறும் வரும் 5000 HITS ஹிட்ஸ் நமக்குத் பெரிய பாராட்டு ஆகும். இதோ சில கடிதங்கள் அல்லது E MAILS இ மெயில்கள் :

வாசிப்பது சத்யார்த்தி சந்திரசேகரன்……………………………………..

XXXXXXXXX

இன்றைய ஞானமயம் கண்டேன்

சென்ற வாரம் சொன்னபடி இந்த நிகழ்ச்சி வாரா வாரம் நல்ல முன்னேற்றம் காண்கிறது.

தங்கள் கேள்வி பதில் அருமை

மந்திர உச்சரிப்பு தவறாக சொன்னால் பாதிப்பு உண்டா என்று பலருக்கும் இன்னும் ஐயப்பாடு உண்டு . தங்களின் விளக்கம் அந்த ஐயத்தை தீர்த்து வைத்தது.

அதுபோல கோவில் கோயில் இரண்டும் ஒன்று என்ற விளக்கம் அருமை

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கேள்விக்கு தங்களின் விஞ்ஞானபூர்வமான பதில் சிறப்பு.

அடுத்து முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களின் உரை மிக மிக நன்று. விஷ்ணு சித்தரின் பத்து கட்டளைகளுக்கு கொடுத்த விளக்கம்  இன்றைய மக்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று

ப்ரஹன்னாயகி யின் பெங்களூர் செய்தி மடல் அருமை. தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது

ஹரிணி ரகு மற்றும் ப்ரஹன் நாயகியின்  எஸ். பி பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி அருமை.

காணொளிகளின் ஒருங்கிணைப்பில் சற்று கவனம் தேவை. 

வாழ்த்துக்கள்

ஆர். சேஷாத்ரிநாதன் 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ருத்ராக்ஷம் பற்றி ய விளக்க உரை நன்றாக இருந்தது

ருத்ராக்ஷத்தை சோதனை செய்ய மற்றொரு முறையை நான் பார்த்திருக்கிறேன். ருத்ராக்ஷத்தை நூலில் கோர்த்து காய்கறிகளுக்கு சற்று மேலே தூக்கிப்பிடிக்கவேண்டும். தேங்காய், வாழைக்காய் ,வாழைத்தண்டு, அவரைக்காய்போன்ற [ பொதுவாக பிராமணர்கள் தெவசத்திற்குப் பயன்படுத்தும்] காய்களுக்குமேல் ருத்ராக்ஷம் வலமாகச் சுற்றும். பூண்டு, வெங்காயம், கத்திரிக்காய் போன்றவற்றின் மீது இடமாகச் சுற்றும்!. ( இதனால் சில யோகமுறைகளில் பூண்டு, வெங்காயம் போன்றவை நிராகரிக்கப் படுகின்றன- அவற்றில் பிராணசக்தி எதிர்மறையாகச் செயல்படுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.]
ஆனால் ஒரு விஷயம். சிலருக்கு உடலில் ஒருவித காந்த சக்தி இருக்கிறது. அதனால் அவர்கள் கையில் எதைப் பிடித்தாலும் ( உ.ம்: துளசிமாணி மாலை) அது சுற்றும்! அவர்கள் மூலம் இந்த ருத்ராக்ஷப் பரீக்ஷை சரிவராது!    —     R NANJAPPA

XXXXXXXXXXXXXX


இன்றைய ஞானமயம் நிகழ்ச்சி கண்டேன். வாராவாரம் நன்கு மெருகேறி வருகிறது. இதில் நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும். ஆரம்பத்தில் ஆங்கிலம் தமிழ் செய்திகள் வாசிக்கபடுகின்றன. இந்த செய்திகள் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களை எடுத்துக் கொள்கின்றன. இதில் நிறைய செய்திகள் செய்தி தாள்களில் வந்துவிட்டன. எனவே செய்திகளுக்கான நேரத்தை குறைத்துக்கொண்டு  அறிஞர்களின் பேச்சுகளுக்கும் கேள்வி பதில் விளக்கங்களுக்கும் அதிக நேரம் ஒதுக்கலாம் என்பதே எனது கருத்து. 

நன்றி 

ஆர்.சேஷாத்ரிநாதன் 

XXXXXXXXXXXXXXX

ஐயா தங்களுக்கு சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம் … உங்கள் மூலம் தமிழ் இலக்கியங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது . எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுக்கு அனந்த கோடி நன்றி . சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாகவும் , தெளிவானதாகவும் , தவறான கருத்தான திராவிட இயக்க சிந்தனைகளாகிய துர்வாடை கலக்காததாகவும் இருக்கும் ? அப்படிப்பட்ட இந்த நூல்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் ? தயவுசெய்து முகவரி சொல்லுங்கள் ஐயா?

RAMA KRISHNAN, MANNACHA NALLUR

–SUBHAM–

TAGS– TWO NEW BOOKS, ALVARS

12-10-20 ஞானமயம் – பங்களூர் செய்தி மடல்.(Post 8809-C)

UDUPI SRI KRISHNA TEMPLE

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8809-C

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-10-2020 திங்கள் கிழமையன்று லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் பங்களூர் செய்தி மடல் ஒளிபரப்பானது. ஒவ்வொரு திங்களன்றும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்.

12-10-2020 அன்று ஒலிபரப்பான செய்தி மடல் இதோ:

வணக்கம்.

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

தலைப்புச் செய்திகள்

பங்களூரில் உள்ள இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் அனைத்து ஆலயங்களும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன

புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்

இனி, விரிவான செய்திகள் :-

சுமார் ஆறு  மாத காலமாக மூடப்பட்டிருந்த இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 நோயினால் மூடப்பட்டிருந்த ஆலயமானது அரசின் வழிபாட்டுத் தலங்களுக்கான சமீபத்திய வழிகாட்டுதல் நெறிகளின் படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணி  முதல் இரவு 8 மணி முடிய ஆலய தரிசனம் செய்யலாம்.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்றும் ஆலயச் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. அத்துடன் பத்து வயதிற்கு கீழ்ப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருதி ஆலயத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வருகை புரிவோர் அனைவரும் தெர்மல் ஸ்கீரினிங் நடைமுறைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் ஆலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அறிவிக்கிறது.

அடுத்து அரசின் சமீபத்திய வழிபாட்டுத் தலங்கள் குறித்த நெறிகாட்டுதலின் படி படிப்படியாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து ஆலயங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி வருகின்ற நவராத்திரி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் பாரம்பரிய பழக்கத்தை விடாது கொண்டாடப்படும்.

என்ற போதிலும் கொரானா நோயின் தீவிரத் தாக்கம் குறித்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவித்தபடி மேற்கொள்ளுதல் வேண்டும்.

அடுத்து திவ்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்

உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில் த்வைதக் கொள்கையை நிறுவிய மத்வாசார்யரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும்.

விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட தெய்வச் சிலை துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மத்வாசாரியர் அந்தச் சிலையைக் கண்டெடுத்து அதை உடுப்பியில் ஸ்தாபித்தார்.

அத்துடன் எட்டு மடங்களையும் அவர் நிறுவினார். கிருஷ்ண பகவானின் வழிபாட்டை ஒவ்வொரு மடமும் இரு மாதங்கள் மேற்கொள்ளும்.

ஒரு ஜன்னல் வழியே கிருஷ்ணரின் அற்புதமான தெய்வீகத் திருவுருவத்தைக் கண்டு வணங்கும் பக்தர்கள் ஆனந்தப் பரவசம் அடைகின்றனர். மேற்கு பார்த்திருக்கும் இந்த கிருஷ்ணரை தரிசிப்பது விசேஷமாகும்.

இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்தது. கோவிலின் பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை அரசு வருடந்தோறும் வழங்கி வருகிறது. கோவிலின் அருகில் மத்வ புஷ்கரிணி என்னும் தீர்த்தம் உள்ளது.

உடுப்பி தலம் மிகப் பண்டைய கால புராண வரலாற்றைக் கொண்டதாகும்.

முன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரன் தன் ஒளியை இழந்தான்; அழகையும் இழந்தான். இதனால் வருந்திய சந்திரன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் இருந்தான். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபிரான் அவனுக்கு அருள் பாலித்தார்; சந்திரன் தன் ஒளியையும் அழகையும்ம் மீண்டும் பெற்றான். அப்போது சந்திரன் ஒரு குளத்தை நிர்மாணித்தான். அந்தத் திருக்குளமானது சந்திர புஷ்கரணி என்ற பெயரைப் பெற்றது.

உடுப்பி என்ற பெயர் உடு மற்றும் பா என்ற இரு சொற்களின் சேர்க்கையாகும்.

உடு என்றால் நட்சத்திரங்கள் எனப் பொருள் பா என்றால் அதிபதி என்று பொருள். நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் இது உடு பா என்ற பெயரைப் பெற்றது; காலப் போக்கில் பெயர் மருவி இப்போது உடுப்பி என அழைக்கப்படுகிறது.

உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலேயே சந்திர மௌலீஸ்வரர் கோவில் மற்றும் அனந்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளன.

காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

TAGS – ஞானமயம், பங்களூர் செய்தி மடல், 12-10-20

12-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post No.8809-B)

GURUVAYUR TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 8809 -B

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 12-ம் தேதி —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX 

நேற்று முன் தினம் கடைசி புரட்டாசி சனிக்கிழமையானதால் தென் மாநிலங்கள் அனைத்திலும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள்   கூட்டம் பெருகியது.

இதோ தமிழ்நாட்டுச் செய்திகள்…………..

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகாண்யம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகல்யாண  சீ னிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவமும் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் புரட்டாசி மாதம் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினா்.

அழகா்கோவில், திருமோகூா், யானைமலை பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தரிசனத்தின்போது பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக  இடைவெளியை பின்பற்றினா்.

திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயில் சுதா்ஸன சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்தது. யானைமலை யோக  நரசிம்மா் கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. பன்னீா், பழம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து செந்தூரக் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா், பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Xxxxxx

உத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அந்த அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

, பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் வந்துள்ளன. இதேபோல 200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில் ராமேஸ்வரத்தில் செப்டம்பர் 17ம் தேதி புறப்பட்ட ராம ரத யாத்திரை  அயோத்தி நகரை அடைந்துவிட்டது. 11 மாநிலங்கள் வழியாக 4500 கிலோமீட்டர் கடந்து சென்ற இந்த யாத்திரை ஸ்ரீ ராமபிரானின் கால்நடைப் பயணத்தை நினைவு கூர்ந்தது . அது மட்டுமல்ல. நான்கு அடி உயரமுள்ள, ஜெய் ஸ்ரீ ராம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, 613 கிலோ எடையுள்ள மணியையும் ரத யாத்திரைக்காரர்கள் கொண்டு சென்றனர் . அயோத்தி மாநகரத்தில் ராம பிரான் கோவிலில் கட்டப்படும் இந்தக் கோவிலின் மணி ஓசையை பத்து கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கலாம் என்று  ரதத்தை ஒட்டிச் சென்ற ராஜ லட்சுமி கூறினார்

xxxxxx

இனி கேரள மாநில செய்திகள்

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற  பத்மநாப  சுவாமி கோவில் இருக்கிறது. அங்கு கோவில் ஊழியர், அர்ச்சகர் பலருக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதால் கோவிலை சில நாட்களுக்கு மூட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி அக்டோபர் 15ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை . ஆயினும் கோவிலுக்குள்  வழக்கமான பூஜைகளை தந்திரிகள் நடத்தி வருகின்றனர்.

கேரளத்திலுள்ள மற்றோரு முக்கியக் கோவில் குருவாயூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆகும். அங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டபோதும் 500 பேர் மட்டுமே வருகின்றனர். வெளியூர் பக்தர்கள் வருகை தடைப்பட்டு விட்டது. பருவ மழையும், போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளும் இதற்கான காரணங்கள் என்று தேவஸ்வம் அதிகாரி மோகன்தாஸ் தெரிவித்தார். முகூர்த்த நாட்களில் ஒவ்வொரு நாளும் 100 கல்யாணங்கள் கோவிலுக்குள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.

xxxx

இனி ஆந்திர மாநிலச் செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை புறப்பட்டுள்ளது. விஜயவாடா அருகிலுள்ள கனக துர்கா கோவிலில் ஆண்டு தோறும் பவானி தீட்சையை முடிக்கும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள். இவ்வாண்டு நவராத்ரி நாட்களில் ஒவ்வொரு நாளும் 10,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் கிறிஸ்தவ முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியை கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது . இதற்கு முன்னர் திருப்பதி பாலாஜி கோவிலும் அவரை அழைத்தபோது மனைவி இல்லாமல் அவர் மட்டும் வந்ததை இந்து சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கண்டித்தனர். இந்த முறை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இது ஒருபுறமிருக்க அந்தப் புகழ்மிகு கனக துர்கா கோவிலுக்கு, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தலைவர் மோகன் பகவத் விஜயம் செய்தார் . அவர்க்கு கோவில் நிர்வாகம் தக்க மரியாதையை செய்தார்கள்

Xxx

பிரிட்டனிலும் இந்துக்களுக்கு மனக்கசப்பு தரும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. GCSC (ஜி.சி எஸ் சி) பாடத்திட்டத்தில் இந்து மதம் பற்றிய படிப்பும் உள்ளது. இதில் இந்துக்களை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தும் சில  வரிகளுக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “சில இந்துக்கள் பயங்கரவாதம் பக்கம் திரும்பியுள்ளனர்” என்ற வரி சிலபஸில் இருப்பது,

 ‘இல்லாத ஒன்றைக் காட்டுவதாகவும் இது ஏனைய மதத்தினருடன் ஒப்பிட்டு வாக்குவாதத்தை தூண்டுவதற்காகவும் பிற மத பயங்கரவாதிகளைப் பாதுகாக்க சேர்க்கப்பட்டதாகவும்  இந்துக்கள் குற்றம் சாட்டினர் . இந்த வரிகளை எதிர்த்து எல்லோரும் குரல் எழுப்பவேண்டும் என்றும் A Q A  (ஏ க்யூ ஏ ) அமைப்புக்கு ஈ  மெயில் அனுப்பவேண்டும் என்றும் வினய் சர்மா என்பவர் சமூக ஊடகம் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

A Q A  (ஏ க்யூ ஏ) என்பது அரசு சார்பற்ற கூ ட்டமைப்பு . இது பாட திட்டங்களையும் தகுதிச் சான்றிதழ்களையும் பள்ளிக்கூட மட்டத்தில் வழங்கி வருகிறது  . இதில் இந்துக்கள் யாரும் உறுப்பினர் இல்லை; அவர்களை இதுவரை அனுமதிக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர் என்று இந்து மத கல்வி தொடர்பானோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS – ஆகாச த்வனி’, உலக இந்து சமய செய்தி மடல், 12-10-20

12-10-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post No.8809-A)

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 8809 -A

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12TH OCTOBER 2020 Weekly World Hindu News Bulletin

Namaste , Namskaram to everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at 2 pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

 Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AaKaaSA DWANI’ Read by SUJATHA RENGANATHAN .

xxxx

First let me give you some good news from Uttar Pradesh,

Listeners may remember that Prime Minister, Shri Narendra Modi announced in parliament a trust to oversee the construction of a Ram Temple in Ayodhya, as ordered by the Supreme Court.

Now the trust  known as “Shri Ram Janmabhoomi Teerth Kshetra”,  has received donations exceeding rupees  one hundred crores. Apart from the cash donations, the trust has received silver vessels weighing 200 kilos.

In the mean time,


RAAMA RATHA YAATRAA HAS REACHED AYODHYA  from Rameswaram .

The yatra, organised by the Chennai-based Legal Rights Council, began on September 17 and covered a distance of 4,500 km across 11 states before reaching its destination.
on Wednesday  its participants handed over a large bell for installation at the Ram temple.

Talking to PTI, Rajlakshmi Manda, who drove the ratha, said the 4.1-foot-tall bell with ‘Jai Sri Ram’ embossed on it weighs 613 kg. Its sound can be heard within a radius of 10 km of the temple

Xxxx

Now some news coming from Kerala……

The expert committee constituted by the Kerala government to suggest measures for the safe conduct of  Sabarimala pilgrimage during Covid – 19 pandemic this season, has recommended that only 1000 devotees each should be allowed to climb up to the hill shrine on week days and two thousand each on Saturday and Sunday.

Pilgrims need Covid – 19 negative certificates  during the annual mandala-makaravilakku pilgrimage season . 

All testing and screening activities will be carried out at the Sabarimala base camp at Nilakkal

The mandala-Makaravilakku season will begin in November this year.

Devotees should carry reports to certify that they are not above 60 year of age and do not have any chronic ailments.

Xxxx

Shree Krishna temple in GURUVAAYUR is a famous temple in Kerala.

 Despite the government capping the daily number of  devotees allowed to enter the Guruvayur Sree Krishna Temple at 1,000, the  shrine now witnesses less than 50% of the permitted number of devotees. vertisement: 3:35

K B Mohandas, chairman,  Guruvayur Devaswom, told  newspapermen “Though 1,000 people are allowed to have darshan at the temple daily after booking their visit through the virtual queue system, hardly 50% of them turn up .

“Of the around 500 devotees who visit the temple daily, half of them are locals in the absence of devotees who have booked their visit.

The number of marriages held at the Guruvayur temple,  too has been drastically hit. Compared to the pre-Covid times when around 100 weddings used to take place daily at the divine abode, their number has come down to a handful now.

xxx

Another famous temple, is also affected due to virus attack.

The Sree Padmanabhaswamy Temple in Thiruvananthapuram has been closed for devotees till October 15, after at least 10 priests tested positive for COVID-19.

According to the temple authorities, daily poojas will be held by Tantris,  but devotees will not be allowed inside the temple till October 15.

xxxxxxxxxxxx

Another controversy is brewing in Andhra Pradesh

Chief Minister YS Jagan Mohan Reddy will present silk robes to Goddess Kanaka Durga atop Indrakeeladri on Moola Nakshatram day during Navaratri celebrations, according to Sri Durga temple Devasthanam

The temple trust board held a meeting on Wednesday to review arrangements for the nine-day Dasara festivities, which will be held from October 17 to 25.

The trust board passed as many as 37 resolutions regarding the arrangements for the annual temple festival and other development works. 

Addressing the media, temple Executive Officer MV Suresh Babu said the budget for the festivities is estimated at Rs 5 crore.

A few weeks ago Jagan mohan Reddy’s visit to the Balaji Temple at Tirupati created a controversy. He is a Christian and he came to the temple without his wife. Politicians and Hindu organisations criticised him for this.

In the mean time………………….

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat offered prayers at the Goddess Kanaka Durga Temple on Saturday.

Bhagwat reached Vijayawada a day earlier to participate in the three-day RSS annual meeting .

On his visit to the hill shrine, temple Executive Officer  MV Suresh Babu and priests accorded him a traditional welcome.

Xxxx

Hindus in Britain have criticised the A Q A for linking Hindus with terrorism in the school syllabus.

AQA,  the Assessment and Qualifications Alliance, is an awarding body in England, Wales and Northern Ireland. It compiles specifications and holds examinations in various subjects at GCSE, AS and A Level and offers vocational qualifications.

AQA is a registered charity and independent of the government

Vinay sharma , a Hindu from London has brought this issues on social media and asked all Hindus concerned to send an e mail to AQA.

Mr Sharma pointed out the line in the syllabus

On Page 4 and page 11 of the GCSC syllabus it says  “some Hindus have turned to terrorism to protect Hindu beliefs.”

Hindu organisations have no representative in the AQA.  They see it as a deliberate attempt to malign Hinduism. They also point out a mountain is made out of molehill.

According to Mr Sharma their email is eos@aqa.org.uk

Hindus should ask the exam body to change these lines and any such matters in their syllabus

so that the image of Hindus and Hinduism is not wrongly projected amongst the children of this

country.

xxxx

 THAT IS THE END OF ‘AKASA DWANI’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

…………………………………………………………..

TAGS – GNANAMAYAM, ENGLISH NEWS ,121020

SWAMI’S CROSSWORD 131020 (Post No.8808)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8808

Date uploaded in London – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1. – 6 letters—KAMSA’S CHIEF COMMANDER SENT TO KRISHNA AS MESSENGER

4. –-6– MASCULINE NAME, MEANS RED

7. –5—GRASS

8. – 6—FRMININE NAME; MEANS GENTLE, SOFT, MOONISH

9. – 5-  BLOOD

DOWN

1. – 8 letters– PLACE OF GOLDEN TEMPLE

2. – 4—DISEASE; SICKNESS IN SANSKRIT

3. – 6—MINISTER IN SANSKRIT

5.—4–LADY’S FINGER VEGETABLE; BINDI

6. – 5—NUMBER THREE

–subham–

வெந்தால் தெரியும் வெங்காய மணப்பு !(Post.8807)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8807

Date uploaded in London – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வெங்காயம் பற்றிய மேலும் 4 பழமொழிகளைக் கண்டுபிடி

ANSWERS :–

1.ஈர வெங்காயத்திற்கு இருபத்துநாலு புரை எடுக்கிறது

2.வெங்காயத்துக்கு எத்தனை வாசனை காட்டினாலும் துர்கந்தத்தையே வீசும்

3.வெங்காயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை

4.வெங்காயம் உரிக்க உரிக்க தோலாயிருப்பது போல

TAGS–   வெங்காயம்

—SUBHAM–